Tuesday, November 4, 2014

பெ.கருணாகரனின்... காகிதப் படகில் சாகசப் பயணம்



இது தன்னம்பிக்கை புத்தகம் என்று சொல்வதை விட வாழ்வில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு வரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். விருத்தாச்சலத்தில் நூலகத்தில் ஆரம்பித்து இன்று புதிய தலைமுறை அலுவலகம் வரை அண்ணணோடு பயணித்த அனுபவம் இந்த புத்தகத்தில் படிக்க படிக்க கூடவே நானும் பயணித்த அனுபவம் எனக்கு..

வெள்ளிக்கிழமை மாலை என் கையில் புத்தகம் கிடைத்தது, இந்த வார இறுதி அண்ணணோடு பயணம் என்று ஸ்டேட்டஸ் எல்லாம் போட்டு எப்படியும் ஞாயிறு இரவு முடித்துவிடவேண்டும் என்று தான் எண்ணினேன். ஆனால் இரவு 9மணிக்கு ஆரம்பிச்சு சில பக்கங்களை திரும்ப படித்து, சில இடங்களில் சிரித்து, பல இடங்களில் அடே போட வைத்தது அண்ணனின் எழுத்து.
முதலில் தன்னுடன் பணியாற்றிய தன்னை அறிந்த தோழியை அணிந்துரை எழுத சொல்லி அதை அவர்கள் சுவைபட எழுதியது மிக மகிழ்ச்சிக்குரியது.

ஒரு தெய்வம் தந்த பூவே இந்த பக்கத்தை படித்து கண்ணீரில் நீர் வரவில்லை என்று இந்த புத்தகத்தை படிப்பவர்கள் சொல்வது மிக குறைவாகத்தான் இருக்கும். விருத்தியை படிக்க படிக்க மருத்துவமனையில் அவர் மனைவி குழந்தையை அனைத்து முத்திட்ட அந்த வரிகள் கண் முன்னே இருக்கின்றது இன்னும்.

சிலநாட்களாக எனது வேலையில் சில குளறுபடிகளால் நிரம்பி இருந்தது அன்று அண்ணனுக்கு சுதாங்கன் கூறிய அறிவுரை இன்று எனக்கும் பொருந்தியதில் மிக்க மகிழ்சியாக இருந்தது. அந்த அறிவுரையை அடிக்கோடிட்டு இதுவரை 20 முறை படித்தாயிற்று.

ஒவ்வொன்றிலும் ஓர் அனுபவம் அண்ணனுக்கு ஆனால் என்னைப்போல தம்பிகளுக்கு எல்லாம் இது ஒரு நல்ல பாடம், அறிவுரை இன்னும் என்ன என்ன இருக்குதோ சொல்லிகிட்டே போகலாம்..

தனது சகாக்களை மறக்காமல் குறிப்பிட்டு அவர்களையும் தன்னுடன் இணைத்தது மிக மிக சந்தோசமானது. நாம் அவரது சகாவாக இல்லாமல் போய்விட்டோமே என்று மனசு வருத்தப்பட்டது..

அவர் எழுதி உள்ள அனைத்து தலைப்புகளையும் பற்றி எழுதிக்கொண்டே போகலாம், அதை கருத்தாக நான் எழுதுவதை விட அந்த புத்தகத்தோடு பயணித்து பாருங்கள், புத்துணர்வை பெறுவீர்கள்..

புத்தகத்தை அனுப்பிய அண்ணனுக்கு மிக்க நன்றி...

நிறைய எழுதனும் என்று புத்தத்தில் அடிக்கோடிட்டு இருந்தேன் எழுத இருந்தேன். தவிர்க்க இயலாத காரணத்தால் சொந்த ஊருக்கு வந்ததால் எழுத முடியவில்லை....
 

என்றும் உங்களின் அன்பு தம்பி
சதீஸ் சங்கவி..
புத்தகம் வாங்க விரும்புபவர்களுக்கு...
நூல்: காகிதப் படகில் சாகசப் பயணம்
ஆசிரியர்: பெ. கருணாகரன்
விலை: ரூ 150
வெளியீடு: குன்றம் பதிப்பகம்
73/31, பிருந்தாவனம் தெரு, 
மேற்கு மாம்பலம்,
சென்னை – 600 033.
மெயில் முகவரி: kagithapadagu@gmail.com

Friday, October 17, 2014

இராத்திரி நேரத்து பூஜையில்...


"இராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில்" என்ற இந்த பாடல் தான் இந்த தலைப்பை படித்ததும் நிச்சயம் எல்லோருக்கும் நினைவு வரும், அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பட்டைய கிளப்பிய பாடல் இது. இன்றும் கிராமப்புறங்களில் திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சி நடந்தால் 12 மணிக்கு மேல் இந்த பாடல் இடம் பெறாத நடன நிகழ்ச்சியே இருக்காது எனலாம். நடன நிகழ்வு அங்கு நடக்கும் ஆட்டம் பாட்டத்தை பற்றி சொன்னால் சொல்லிகிட்டே போகலாம். இந்த கதையில் நாம் பார்க்கபோகும் இராத்திரி நேரத்து பூஜையே வேறு..

கோவையின் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் தான் நம் ஹீரோ வேலை செய்கிறார். என்ன தான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து விதவிதமாக ஜீன்ஸ், டாப்சை எல்லாம் போட்ட பொண்ணுங்களை சைட் அடிச்சிகிட்டு இருந்தாலும் மனுசன் திங்கறதுல பலே ஆளு.. ஞாயிற்றுக் கிழமையான அவுங்க குக்கிராமத்தில் மீசைக்காரர் கறிக்கடையில் ( அது என்னங்க எல்லா ஊர்லியும் கறி போடுறவுங்க மட்டும் மீசையை முறுக்கி விட்டுகிட்டு இருக்காங்க) முன் தொடையில் இருக்கும் ஒத்தை எழும்பையும் எடுத்து விட்டு சதக்கறியாத்திங்கும் சாப்ட்டான ஆள்தாங்க நம்ம சாப்ட்வேர் ஆள்..

ஊருக்கு ஆள் வாரம் வாரம் வந்தாலும் வரும் போது மாரியப்பனிடம் விசாரிப்பான் நம்ம என்னடா பக்கத்து ஊர்ல டேன்ஸ் கீது போட்டங்களா போட்டா சொல்லு, அதுவும் எடப்பாடி பாபி சவுண்ட் சிஸ்டம் அழைத்து வருவாங்களே சேலத்து ரம்பா சங்கீதா வந்தா மறக்காம சொல்லுடா என்று மாரியப்பன் மட்டுமில்லாமல், பரந்தாமன், செந்தில், விஜி என எல்லாரிடம் பிட்டை ஓட்டி வைத்து விடுவான்.

எத்தனை நாளைக்குத்தான் சப்புன்னு போறது பக்கத்து ஊரான சுள்ளிமேட்டில் எடப்பாடி பாபி டேன்ஸ் நடக்குது அதுவும் வெசாழக்கிழமை ராத்திரி என்று கோயமுத்தூருக்கு போன போட்டதும், நம்ம ஹீரோ ஊருல அப்பன்னுக்கு உடம்பு சரியில்லைன்னு பிட்ட போட்டுட்டு பைபாஸ் ரைடரை பிடிச்சி லஷ்மி நகரில் இறங்கி, மேட்டூர் போற பஸ்ல ஏரி வீடு வந்து சேர்ந்துட்டான். எப்பவும் போல மெத்தையில் படுக்கிறேங்கற பேர்வழியில் சொம்பு தண்ணியும், தலைகணியும், பெட்சீட்டும் எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு வந்து பசங்க எப்ப போன் செய்வாங்கன்னு ஒரு தம்மை பத்த வெச்சி இழுத்து கிட்டே பராக்கு பார்க்க 4 வீடு தள்ளி மொட்டை மாடியில் மேட்டர் நடக்க பையனுக்கு கிளு கிளுன்னு ஆகிடுச்சு..

கிளு கிளுன்னு இருந்தாத்தான் நண்பர்களுக்கு பிடிக்காதே, அவனுக போன் செய்ய இவன் கட் செய்துவிட்டு சுவர் ஓரமாக, சுவரோடு சேர்ந்து நின்னு நிழலைப்பார்க்க, எல்லா கதையியிலும் வர்ற மாதிரி மொட்டை, மாடி நிலா வெளிச்சம், பக்கத்தில் தவளை சத்தம், அடிக்கம் காற்றுக்கும் தென்னை மரம் சிலு சிலுவென்ற காற்று வீசும் இப்படி எல்லாம் இருக்கும் என்று நினைச்சீங்கன்னா, நொம்பத் தப்புங்கோ.. அன்னிக்குன்னு பார்த்து அம்மாவாசை முடிஞ்சு மூனா நாளோ, நாலம் நாளோ, வெளிச்சமே இல்ல கும்மிருட்டு, மலையாளத்தான் டீக்கடை வெளிச்சம் மட்டும் தான் தெரியுது, அதுவும் மலையாளத்தான் வயித்த நீட்டிக்கிட்டு டீ ஆத்துர ஆத்துல அவங்கிட்ட டீ குடிக்க வந்தவன் எல்லாம் பேசாம ஒசூர் போயே குடிச்சிக்கலாம் என்ற எண்ணம் வரும் வரை ஆத்துவான்...

நம்ம ஹீரோவுக்கோ டவுட்டு இங்க இருக்கற சோடி மலையாளத்தான் பொஞ்சாதியா இருக்குமோன்னு, ஆனாலும் ஒன்னும் தெரியல 2 உருவம் மட்டும் விளையாடுவது தெரிகிறது. அந்த கும்மிருட்டும் வேளையிலும் ஒற்றை சுவரில் அடுத்தவன் என்ன செய்யறான்னு பார்க்கற வேலையை நம்ம ஊரு ஆட்களைத்தவிர எவனும் செய்யமாட்டான்.. என்று மனதில் திட்டிகிட்டே வந்து வானத்தை பார்த்து மல்லாக்க படுத்தவன், கால் மேல காலப்போட்டு ஊர்ல இருக்கற பாதி பேரை நினைச்சிட்டான், இது யாரா இருக்கும் என்று.. அவன் பார்க்க கூடாது என்றாலும் அவன் மனசு மறுபடியும் அந்த ஒற்றை கைப்பிடிச்சுவருக்கு அழைத்து சென்று விட்டது.

ஒற்றைச்சுவரை நன்றாக பிடித்துக்கொண்டு தலையை முழுவதுமாக வெளியே நீட்டி, கண்களை பட்டையை தீட்டி வைரத்தை அறுப்பது போல் தீட்டிக்கொண்டு பார்த்தான். இப்போது உருவம் உருண்டு புரண்டது, பின் எழுந்து நின்றது போல இருந்தது கரண்ட் போய்விட்டது. ஆமாங்க இந்த கிராமத்தில் எல்லாம் பத்து மணிக்கு கரண்ட பிடுங்கி 3 பீஸ் கரண்ட் கொடுப்பாங்க அதனால ஒரு நிமிடம் கரண்ட் போய் வரும். சரி என்று கரண்ட் வந்ததும் பார்க்கலாம் என்ற இவன் பராக்கு பார்த்து நிற்க கரண்ட் வந்ததும் அங்கு எந்த அசைவுகளையும் காணம். 

மறுபடியும் நின்றவனை பாஸ்கர் பாத்துவிட்டு டேய் எத்தனை தடவை போன் பன்றது இங்க என்னடா பன்றன்னு கேக்க, இல்லடா அங்க யாரோ 2 பேர் இருந்தாங்கடா உருண்டுகிட்டு, ஆனா யார்ன்னு தெரியல என இவன் பட படன்னு உளற, டேய் ரிலாக்ஸ் இத விட அங்க சேலத்து ரம்பா ஆட வந்தாச்சாம். 10 மணிக்கு ஆரம்பிச்சு 12 மணிக்கு முடிச்சிடுவாங்க.. 11 மணிக்கு மேல தான் கிளு கிளுன்னு இருக்கும். உனக்கு அது முக்கியமா இல்ல இங்கயாருன்ன கண்டுபிடிக்கறது முக்கியாமான்னு முடிவு செய் என சொல்ல, ஐய்யய்யோ இது யாரா இருந்தா எனக்கென்ன நாம் போகலாம் என்று அய்யப்பனின் டிவிஸ் சூப்பரில் 4 பேரும், மாரியப்பன் ஸ்ப்ளண்டரில் 3 பேரும், என ஆள்ஆளுக்கு கிடைச்ச வண்டியில் ஏரி சுடுகாட்டில் வந்து ஒன்னு சேர்ந்து தம் அடிச்சுக்கொண்டு இருந்தனர்...

நம்ம ஹீரோ தான் படபடப்பா சீக்கிரம் குடிங்கடா ராத்திரி நேரத்து பூஜை பாட்டுக்கு சேலத்து ரம்பா சங்கீதா ஆட்டத்தை பார்க்க முடியாது என்று பர பரன்னு பரந்து கொண்டு இருந்த போது.. பாஸ்கர் இவன் ஒற்றைச்சுவரில் எட்டிப்பார்த்த கதையை சொல்ல எல்லாரும் கலாய் கலாய் என்று கலாய்த்துக்கொண்டு இருந்தனர், இடையில் வேகமாக வந்த மோகன் டேய் டேன்ஸ்க்கு அனுமதி இல்லைன்னு சொல்லி கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி இருக்காங்களாம்.. சீக்கிரம் வாங்கடா நாலு ஆட்டத்தை நறுக் என்று பார்த்து விடலாம் என எல்லோரும் இராத்திரி நேரத்து பூஜையை ரசிக்க கிளம்பினர்...

(தொடரும், இராத்திரி நேரத்து பூஜைகள்...)

ஹா ஹா என்ன மக்களே கிளு கிளுன்னு சொல்லி கடைசியில் தொடரும்ன்னு போட்டுட்டானேன்னு யோசிக்கறீங்களா, நன்றாக யோசியுங்க சேலம் சங்கீதா ஆட்டம் எப்படி இருந்துச்சுன்னு நாளைக்கு பார்ப்போம், அதற்கு பின் தான் இருக்கு க்ளைமேக்ஸ்)

Monday, October 6, 2014

"குடி குடியை கெடுக்கும்" இதுயாருடைய தவறு???


குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் வீட்டை கெடுக்கும் என பல வகையான புதுமொழிகளை கேட்டு இருந்தாலும் நம்ம ஊரில் சரக்கு விற்பனை குறைவதில்லை. குடிப்பவர்களுக்கு எல்லாம் நிச்சயம் தெரியும் குடல் வெந்து, கல்லீரல் வெந்து சாகப்போகிறோம் என்று ஆனாலும் குடிக்கத்தான் செய்கின்றனர்.

இப்போது எல்லாம் கம்பெனி மீட்டிங்கில் மட்டும் சரக்கு சாப்பிடுகிறேன் என்று சொல்பவர்கள் தான் இங்கு ஏராளம். அப்புறம் பொஞ்சாதி ஊருக்கு சென்று விட்டால் நண்பர்களோடு கூத்தடிப்பவர்களும் இங்கு அதிகம் தான். கொஞ்சம் தான் குடிச்சேன், அட பீர் தாம்பா குடிச்சேன் அதனால பிரச்சனை இல்லை என்று சொல்பவர்களும் தாராளமாக உள்ளனர்.

குடியைப்பற்றி இவ்வளவு பேசுகிறாயே நீ யோக்கியனா என்று நீங்கள் கேட்கலாம், மேலே சொன்ன வகைகளில் நானும் ஒருவன் தான், எனக்கு பேர் குடிகாரன் இல்லை ஏதோ அப்பப்ப குடிப்பவன், எனக்கு செல்ப் கன்ரோல் இருக்கிறது என்று வியாக்கானம் பேசும் பலபேர்களில் சத்தியமாக நானும் ஒருவனே.

குடியால் நிறைய குடும்பங்கள் அழிந்துள்ளன, அழிந்து கொண்டு இருக்கின்றன, அழியப்போகிறது என பல கருத்துக்கள் சொல்லலாம். இப்படித்தான் சொன்னான் பிரபு, அவன் யார் என்கிறீர்களா இன்றைய குடியைப்பற்றியான என் எழுத்துக்கு அவன் தான் ஹீரோ.

பிரபு சராசரியை விட நல்ல உயரம் அரசு போக்குவரத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறான், மனைவி மகள், மகன் என சந்தோசமான குடும்பத்துக்கு சொந்தக்காரன். வழக்கம் போல மீசையை முறுக்கிக்கொண்டு வண்டியை ஓட்டும் அவன் லாவகம் அனைவருக்கும் பிடித்தமானதே. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவனுக்கு பணி. பணி முடிந்து இறங்கி வரும் போது உடல் சூட்டுக்காக அவ்வப்போது பீர் குடிக்க ஆரம்பித்தவன், பின் பீர் பித்தன் ஆனான்.

பிரவுவை எல்லோருக்கும் பிடிக்கும் அதனாலயே அவனுக்கு உண்டான நட்பு வட்டம் பெருகியது, நட்பு வட்டம் பெருக பெருக குடியும் பெருகிவிட்டது. அதற்கேற்றாற் போல் தினமும் கர்நாடக சென்று வரும் பணி கொடுத்ததால் தமிழ்நாடடு சரக்கு போர் அடிக்கவே தினமும் கர்நாடகாவில் இருந்து விதவிதமான புல்லால் மனுசன் புல்லாகிப்போனார். என்ன தான் கட்டுமஸ்தான உடல், வட்டசாட்டமான உடலாக இருந்தாலும் சாப்பாட்டிற்கு பதில் சரக்கை குடித்தால் எத்தனை நாளைக்குத்தான் தாங்கும் அந்த குடல். ஆனால் நம்ம பிரபு எம்புட்டு குடிச்சாலும் தினமும் சாப்பாட்டில் எருமைத்தயிர் சாப்பிடுவதை குறைக்கவில்லை.

எருமைத்தயிரைப்பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம் அதற்கு அம்புட்டு கொழுப்பு இருக்கு. கம்மஞ்சோத்தையும் தயிரையும் குடிச்சு வளர்ந்த உடலை எல்லாம் பார்த்தீங்கன்னா சும்ம தள தளன்னு இருக்கும். அழகான பொண்ணுகளை கிராமத்து பக்கம் பார்த்தோம் என்றால் நிச்சயம் தயிர் அந்த அழகிற்கு முக்கிய பங்காற்றி இருக்கும்... எதப்பத்தி பேசினாலும் இந்த அழகான பொண்ணுங்க வருவதை தவிர்க்க முடியவில்லை நட்புக்களே..

கிட்டத்தட்ட 20 வருடமாக குடி குடி என்று இருக்கும் சரக்கை எல்லாம் ஒரு கை பார்த்த பிரபு வயது ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக கிறங்கித்தான் போனான். 40 வயதுதான் ஆகிறது இப்போது முதலில் அவனுக்கு வந்தது மஞ்சள் காமாலை அப்போது பரிசோதனையில் தான் தெரிந்தது ஈரல் அழகிப்போகிவிட்டது என்று. கோவை அழைத்து வந்து 2 இலட்சம் செலவு செய்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். பட் 20 நாள் சரக்கு சாப்பிடாமல் இருந்த நாக்கு சும்மா இருக்குமா மீண்டும் ஒரு கட்டிங்விட உடல் எல்லாம வீங்க, உச்சா வராமல் அப்படியே பெரிதாகிக்கொண்டு போனது.

இப்போது நாள் குறித்து விட்டார்களாம் இன்னும் ஒரு வாரம் தாங்குவதே அதிகம் என்று. எதோ பிரவுவின் தாத்தா சம்பாரித்த தோட்டம் அவனின் புள்ளைகளை காப்பாற்றி விடும், ஆனால் இந்த மாதிரி பிரபுக்கள் ஊருக்கு நாலஞ்சு பேராவது நிச்சயம் இருப்பாங்க, அவர்களின் குழந்தையை எல்லாம் யார் காப்பாற்றுவது. பிரவுவை கடைசியாக மருத்துவமனைக்கு எனது காரில் தான் ராத்திரி தூக்கிப்போட்டுக்கொண்டு போய் சேர்த்தோம், அப்போது மனிதன் பேசினார் என் புள்ளைங்கள படிக்க வெக்காம போறேனே என்று மனிதன் அழுதார். இப்போது வந்த வியாக்கனம் குடிக்கும் போது வந்துருக்கனும் அண்ணே என்றேன்.

உண்மை தான் என்று தன் குழந்தைகளை பார்த்து அழுது கொண்டே சென்றார், இன்னும் சில நாட்கள் எல்லோரையும் நிச்சயம் அழவைப்பார். மனைவி ஸ்டடியாக நின்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். இது தான் இனி அந்த குடும்பத்தின் நிலை.

இது யாருடைய தவறு...

இந்த பிரபு குடிகாரன் ஆனாதற்கு யார் காரணம்..

பிரபு படித்தவன் பட்டம் வாங்கியவன் அவருக்கு தெரியாதா குடித்தால் உடல்நலத்திற்கு கேடு என அப்புறம் ஏன் குடித்தார்??? 

அரசாங்கமே மது விற்றதால் குடித்தார் என்று சொல்ல முடியுமா ??

குடும்ப பிரச்சனைக்காக குடித்திருப்பாரா ???

ஒட்டுநர் பணியில் இருப்பதால் குடித்தால் தான் உடல் குளிர்ச்சி ஆகும் என குடிச்சிருப்பாரா??

இப்படி ஆயிரம் கேள்விகள் கேட்கலாம், என்னைப்பொறுத்த வரை திருடனாய் பார்த்து திருந்தினால் தான் உண்டு அது போலத்தான் குடிகாரனும் அவர்களாக பார்த்து நிறுத்தினால் தான் உண்டு. யாரும் ஊற்றிக்கொடுப்பதில்லை அவர்களாகவே அவர்களுக்கு ஊற்றி குடித்து தன் உயிரையும் மாய்த்துக்கொள்கின்றனர். 

ஒவ்வொரு பெக் அடிக்கும் போதும் தன் குழந்தை குடும்பம், மனைவி அப்பா அம்மா என்று ஒவ்வொருவரிடம் எவனக்கு பயம் இருக்குதோ அவன் குடியை விட குடும்பத்தின் நலனிலேயே அக்கரையாக இருப்பான்..

யாரையும் மதிக்காமல் அப்பா, அம்மா, மனைவி என குடிக்காகாது கொடுக்காதவர்களை தாக்கும் மனிதர்களும் நம்ம ஊரில் நிறைய.

இவர்களாக பார்த்து திருந்தினால் தான் உண்டு....

பிரபுவின் நிலை நமக்க வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் போதுதான் குடிகாரர்களின் எண்ணிக்கை குறையும்... அதுவரை பல பிரபுக்கள் உருவாகிக்கொண்டு தான் இருப்பார்கள்...


Wednesday, September 10, 2014

மெல்லிய கருத்த தேவதை..



தினமும் மனைவியை அவர்கள் கல்லூரி வாகனத்தில் ஏறுவதற்கு இறக்கிவிட்டு விட்டு எதிர் முனையில் நானும் மகனும் டாடா காட்டுகிறோம் என்று நிற்போம்... மகன் டாடா காட்டுவதில் மும்மரமாக இருப்பான்.. காலை நேரம் அனைத்து கல்லூரி பேருந்துகளும் நின்று செல்லும் இடம் அந்த இடத்தில் நிற்க எனக்கு என்ன கசக்குமா, 3 நிமடம் தான் நிற்பேன் என்றாலும் மனசு இருக்கும் எந்த டென்ஷனும் அமைதியாக அமுக்கும் நேரம் அது.. குளு குளுன்னு இருக்குன்னு சொல்வாங்களே அதே தருணம் தான். கடவுள் கண்ணை படிச்சதற்காக தினமும் நன்றி சொல்லவேண்டும். அந்த இடத்தில் இருந்து நகரும் போது, வானில் இருந்து நட்சத்திரங்கள் கீழே விழும் அதே எபெக்ட்டு.

இப்படியாக கடந்த நான்கு மாதமாக போய்க்கொண்டு இருந்த வாழ்வில் எதேச்சையாக இரு தினங்களுக்கு முன் தினமும் பார்க்கும் ஒரு தேவதை கடந்து சென்றது. தேவதை என்றதும் வெள்ளி நிற சுடிதார் அணிந்திருக்கும் என்று நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது. இந்த தேவதை காட்டன் புடவையில் உடலோடு ஒட்டு நிற்கும், மெல்லிய கருத்த முகத்தில் ( மாநிறம்ன்னு சொல்வாங்ளே அது தான்) சிறிய பொட்டும் அதே அளவில் மூக்குத்தியுடன் கடந்து போகும், ஒரு 25 செகன்டு தான் என்னை கடந்து சென்றாலும், உடல், பொருள், ஆவி அனைத்தும் அடங்கி எண் கண்கள் மட்டும் விழித்திருக்கும் நேரம் அது.

எப்பவும் போல அந்த தேவதை போய் இருந்தால் பரவாயில்லை,  எப்பவும் வடப்பக்கம் செல்லும் தேவதை, இன்று இடப்பக்கம் எனது சிங்கத்தருகில் வந்து வாட்டர் பால்ஸ் ஓவரா ஓடுது என்று அவள் தோழியிடம் வேகமாக, எனக்கு கேட்கும் அளவில் சொல்லி விட்டு சென்றாள்.. தோழி என்றால் சுமார்ன்னு நினைச்சுக்காதீங்க பாஸ் அதுவும் தேவதைதான், பட் எல்லாருக்கும் எல்லா தேவதையும் பிடிக்காதல்லவா, அது போலத்தான் இதுவும்...

எனக்கு முதல்ல வாட்டர் பால்ஸ் என்றதும் புரியல, நானும் என் மண்டைய குழப்பு குழப்பு பார்த்தேன், கவுட்டி கவுட்டியா யோசிச்சு பார்த்தேன்.. ம்கும் ஒன்னும் விளங்கள.. சரின்னு பொஞ்சாதிகிட்ட பேச்சு கொடுத்துட்டே ஒரு பொண்ணு இப்படிச்சொல்லுச்சு என்றேன்.. அவள் சிரி சிரின்னு சிரிச்சிட்டு ஓவரா ஜொள்ளு ஊத்தறீன்னு சிம்பிளா உன்ன கவுத்துட்டு போய்ட்டாங்க....
( ஏய் டண்டனக்க டணுக்குனக்கான்னு அவளுக்கு சந்தோசம்)... அடப்பாவமேன்னு அப்புராணி பையன இப்படி சொல்லிட்டாங்களேன்னு வருத்தம் தான் ஆனால் அடுத்த நாள் காலையில் இருந்து டாடா காண்பிக்க எதிரே நிற்பதில்லை, பொஞ்சாதியை பக்கத்திலேயே நின்னு பஸ் ஏற்றி விட்டு விட்டு வந்துடுறேன்...

ஆனாலும் அந்த மெல்லிய கருத்த தேவதை தூரத்தில் போய் திரும்பி பார்த்து சிரிக்க தவறுவதில்லை, அடுத்த நாலு ஸ்டெப்பில் தோழி தேவதையும் இப்பெல்லாம் பார்த்து சிரிக்குதுபாஸ்....

Friday, September 5, 2014

ரயில் பயணங்களில் தமிழன் மட்டும் தான் இளிச்சவான் போல...

ரயில்களில் நமக்கான உரிமை தமிழக எல்லையை தாண்டியதும் மறுக்கப்படுகிறது என்பது மறுக்க இயலா உண்மை. சேலத்தை கோட்டாமாக மாற்றுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நாம் பட்ட பாடு நன்றாக தெரியும். ரயில் பயணங்களில் நியாமாக நடந்து கொள்பவர்கள் இந்தியாவில் நம் தமிழர்கள் தான் என சத்தியம் செய்து சொல்லாம். ஆனால் நிறைய உரிமைகள் நமக்கு மறுக்கப்படுகின்றன என்பது தான் நிதர்சனம்.

தினமும் சென்னையில் இருந்து கேரளாவிற்கு நிறைய சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படுகின்றன ஆனால் அதில் பாதி ரயில்கள் கோவைக்குள் வராது. கோவைக்கு வெளியே உள்ள போத்தனூர் வழியாக சென்று விடுகின்றன. அதே போல் இந்த சூப்பர் பாஸ்ட் ரயில்கள் தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே நிற்கும். ஆனால் கேரளாவில் எல்லா இடங்களிலும் நின்று செல்லும் நம்ம ஊர் டவுன் பஸ் போல.

சூப்பர் பாஸ்ட் ரயில்களில் நம்ம ஊரிற்கு ஒதுக்கப்படும் டிக்கெட்டுகள் மிக குறைவாகவே இருக்கும், ஆனால் பக்கத்தில் உள்ள பாலக்காட்டுக்கு இன்னும் கூடுதல் டிக்கெட்டுகளை ஒதுக்குவார்கள், இதனால் கோவையில் பலர் பாலக்காட்டில் இருந்து டிக்கெட் புக் செய்து விட்டு கோவையில் இருந்து ஏறிச்செல்கின்றனர் பலர்.

இது நமக்கும், நமக்கு மிக பக்கமாக உள்ள கேரளாவிற்கும் உள்ள வேறு பாடு தான், இன்னும் வட மாநிலங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் நம்மை இளிச்சவாயர்கள் என்று தான் சொல்வார்கள். பார்க்கப்போனால் நம்ம ஊரில் வித் அவுட்டில் அதுதாங்க டிக்கெட் இல்லாமல் செல்லும் நபர்களின் எண்ணிக்கை மிக குறைவு.

சில வருடங்களுக்கு முன்பு பீகாரில் இருந்து இராமேஸ்வரம் சுற்றுலா வந்த பலர் வித் அவுட்டில் வந்தனர். திரும் செல்லுகையில் பிரச்சனை ஆகி கடைசியில் என்ன ஆனது, அவர்கள் டிக்கெட் எடுக்காமலே சென்றனர் என்பது தான் ஹைலைட். நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வடநாட்டில் இந்த மாதிரி பிரச்சனை செய்ய இயலுமா, அல்லது அந்த அளவிற்கு செல்ல நம் ஆட்கள் தான் இடம் கொடுத்துவிடுவார்களா??.

இன்னும் வடமாநிலங்களில் பயணித்தவர்களின் இரயில் பயண அனுபவங்களை கேட்டால் தலைசுத்துகிறது. என் நண்பரின் அந்த இம்சையான அனுபவம் பற்றி கூறியதாவது. எதிர்  சீட்டில் உட்கார்ந்திருப்பவர் மேலே கூட கால் போட்டுவிட்டு  கவலைப்படாமல் இருக்கும் பிரயாணிகளை நிறையவே பார்த்திருக்கிறேன். இது சம்பந்தமாக  பயணிகளுக்கு இடையில்  வாக்குவாதமோ சண்டையோ வந்தால் பக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் கூட நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடுவார்கள். தொடரும் சண்டை சில சமயம் ஊர் போய்ச் சேரும் வரை கூட நீடிப்பதுண்டு. வடநாட்டு பகுதிகளில் ரயில் சண்டை இன்னும் உக்கிரமாக இருக்கும். அசந்தால் சாமான்களைக் கூட  ஆட்கள் மேல் அடுக்கிவிடும் வேடிக்கை நடப்பதுண்டு.

     இரண்டாம் வகுப்பு பயணத்தைப் பொறுத்தவரை வடநாட்டு பகுதிகளில்  ரிசர்வேஷன் பெட்டிகளுக்கும் ரிசர்வேஷன் இல்லாத பொதுப் பெட்டிகளுக்கும் (ஜெனரல் கம்பார்ட்மென்ட்) இடையில் அதிக வித்தியாசம் இருக்காது. ரிசர்வ் செய்தவர்களும் ரயிலில் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்யலாம். அவ்வளவுதான். முதல் வகுப்பு பயணம் இன்னும் அந்த அளவுக்கு மோசமாகி விடவில்லை.

        ரயில்வேயில் பணி செய்தவனாகையால் நிறைய ரயில்பயணம் செய்யும் அனுபவமும் அந்த பயணங்களில் வகை வகையான மனிதர்களைப் பார்த்து வேதனைப் பட்ட அனுபவமும் எனக்கு உண்டு. இன்னும் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் என முடித்தார்.


நேற்று என் அலுவலக நண்பரிடம் இதைப்பற்றி பேசும் போது அவர் கண்ணீர் விடாத குறையாக கூறினார்.  குர்லாவில் இருந்து கோவை வரும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரசில் சில நாட்களுக்கு முன் பயணித்துள்ளார். அப்போது இரயிலில் நடைபெற்ற சம்பவங்களால் வடமாநிலங்களுக்கு இரயிலில் செல்வதை இனி யோசிக்கவேண்டி இருக்கு இல்லை எனில் ஏசி கோச்சில் தான் செல்லவேண்டும் என முடிவு செய்து அப்பாவிடமும் சொல்லிட்டேன் என்றார். அப்படி என்ன நடந்தது என்று கேக்கும் போது அவர் கூறியதாவது...

இந்த முறை அவசரமாக குடும்பம் முழுதும் சென்றால் ஏசி கோச்சில் டிக்கெட் கிடைக்காமல், பர்த்தில் டிக்கெட் கிடைத்தால் புக் செய்து ரிட்டன் வந்துள்ளனர். ரயில் ஏறியதில் இருந்து டிடிஆர் என்னும் நபர் வரவே இல்லையாம்.


3 பேர் அமரும் இடத்தில் ஆறு பேர் அமர்ந்துள்ளனர். எட்டு பேர் படுக்கும் அளவில் உள்ள அந்த இடத்தில் 30 பேர் இருந்துள்ளனர். பாத்ரூம் செல்ல வேண்டும் என்று சென்றால் கழிவறையில் 3 பேர் நின்று கொண்டு பயணிக்கின்றனராம். நண்பருக்கு இந்தி தெரியும் ஆனால் பேசியும் பயணில்லை. எதவாது சொன்னால் அனைவரும் மிரட்டும் தோணியில் பேசுகின்றனராம்.

குழந்தைக்கு பால் கலக்குவதற்குள் பாடாத பாடு பட்டுள்ளனர். அருகே உள்ள ஏசி கோச்சில் உள்ள டிடிஆரைப்பாத்து சொன்னால் பதிலே சொல்லாமல் கதவை சாத்துவதிலேயே குறியாக இருந்திருக்கிறார். அங்கு இருந்த பணியாளரிடம் பேசி இருக்கிறார், அவர் தலைவிதி சாரே நாம ஒன்னும் பண்ண இயலாது இவர்களை எல்லாம். பேசாம காசு போன போகுதுன்னு ஏசில போன தப்பிச்சிகிட்டோம் என்றாராம்.

இவருடன் பயணித்த இன்னொரு தமிழ் குடும்பம் அபாயச் சங்கிலியை இழுத்துள்ளனர். ஆனால் ரயில் நின்றும் நிக்காமலும் வேகம் எடுத்துள்ளது. யாரும் இதைப்பற்றி கேக்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை. பகலில் தான் இந்த பிரச்சனை என்றால் இரவில் அதற்கு மேலாம், அங்கேயே படுத்து உறங்கி உள்ளனர். பெண்கள் கழிப்பறைக்கு செல்வதற்கு படும் பாடு பட்டு உள்னர். அன்று இரவு முழுவதும் இவர்கள் தூங்கவே இல்லையாம். பெட்டி படுக்கையையும், இவர்களையும் பார்த்துக்கொண்டே இருந்துள்ளனர்.

ஆனால் டிக்கெட் எடுக்காமல் வித்அவுட்டில் வந்த அவர்கள் பேப்பரை விரித்து நன்கு குறட்டை இட்டு நடக்கமுடியாத அளவில் படுத்து தூங்கி உள்ளனர். பெங்களூருக்கு முன் தான் டிடிஆர் வந்துள்ளார் அவரிடம் முறையாடியதற்கு நான் என்ன செய்ய இதெல்லாம் இங்க சகஜமுங்க, எங்க புகார் செய்தாலும் இதைத்தான் செய்வாங்க, டிக்கெட் எடுக்காமல் வித்தவுட்டில் தான் வருகின்றனர், நாம் தான் விலகிப்போய்க்கனும் என அட்வைஸ் மழை பொழிந்தாராம்.

இதே தமிழ்நாட்டில் ஒருவர் டிக்கெட் இல்லாமல் வந்தால் இந்த டிடிஆர்கள் படுத்தும் பாடு இருக்கே, சொன்னால் கதை கதையாக சொல்லலாம்.

ஆக இந்த ரயில்வேக்கு தமிழன் மட்டும் தான் இழிச்சவாயன் போல...

Wednesday, September 3, 2014

அஞ்சறைப்பெட்டி 04/09/2014



  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........

வணக்கம் வலையுக நண்பர்களே...

எனது உறவினர் ஒருவர் தீவிரமாக திராவிடத்தைப்பற்றி பேசுபவர். அரசியல்வாதியும் கூட.. எனது வேலை, மனைவியின் வேலை, மகனின் படிப்பு, உலக நடப்பு என பலவற்றை பேசினோம். பள்ளியில் மகனுக்கு இரண்டாவது மொழியாக இந்தியை தேர்ந்தெடுத்துள்ளேன் என்றேன், எதாச்சையாக மனுசன் பொங்கி வழிந்து விட்டார். இல்லைங்க தமிழும் படிக்கிறான், கூடுதலாக இந்தியும் படிக்கட்டும் என்று தான் சேர்த்தேன் என்றேன். மனிதன் கொஞ்சம் சூடாகி இது தப்பு என பேச ஆரம்பிச்சிட்டார். உடனே நான் சரி உங்களுக்கு இந்தி தெரியுமா என்றேன், தெரியாது என்றார்.

உங்க கட்சியில் உங்களுக்கு எம்பி பதவி கொடுத்திட்டால் என்ன செய்வீர்கள் என்றேன். அதற்கு வாய்ப்பே இல்லை என்றார். ஒரு பேச்சுக்கு சொல்லுங்க என்றதும், டெல்லி போவேன் என்றார், அங்க போய் தமிழில்லா பேசுவீங்க, அப்ப இந்தி தெரியாம கஷ்டப்படுவீங்க தானே என்றேன்.. உடனே குறுக்க பேசிய அவர் அப்ப நாளைக்கு உன் மகன் எம்பி ஆகிடுவாங்கிறாயா என்றார்..

யாருக்கு தெரியும் அவன் என்னவா வேண்டுமானாலும் ஆகலாம், ஆனால் என்னைப்பொறுத்த வரை அது ஒரு மொழி அதைக்கற்றுக்கொள்வதில் தவறில்லை.. உங்க கொள்கையில் தான் தவறு என்றேன்.. மனுசன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து யோசிக்க ஆரம்பிச்சிட்டார்....

------------------------------------------

தினமும் பார்த்து பழகுபவர் அப்புறம் தினமும் கட்டாயம் பேசும் அளவிற்கு வந்துவிட்டோம், ஒரு நாள் அவரின் நண்பரிடம் எனது நண்பன் என்று அறிமுகப்படுத்தினார். சில நாட்களுக்கு முன் எனக்கு நாளை நிச்சயம் வாங்க துணி எடுக்க போகிறேன், கூட வார்றீங்களா என்றார், சரி என்று வீட்டில் சொல்லிவிட்டு சென்றேன்.பின் நன்றி என்று புறப்பட்டு விட்டார்.

அடுத்த நாள் சந்திக்கும் போது நேற்று எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை மட்டும் அழைத்திருந்தேன். திருமணத்துக்கும் இதே போலத்தான் சிம்பிளாக சாரதாம்பாள் கோயிலில் வைத்துக்கொள்ளலாம் என்று இருக்கேன் என்றார்... என் மனைவியிடம் சொன்னேன். இப்படி ஒரு நண்பன் கிடைத்தற்கு நீங்க கொடுத்து வெச்சிருக்கனும் என்கிறாள்...
-------------------------------------------



தினமும் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்காக செல்லும் போது ஒருவர் தன் நாயுடன் தான் தினமும் வருவார். நாயுடன் வருவது கெத்தா அல்லது அவருக்கு பாதுகாப்பா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அந்த நாய் அவருக்கு எதிரில் மற்றும் பின் வருபவர்களை எல்லாம் மிக பயப்படுத்தக்கூடிய வகையில் பயங்கரமாக இருக்கும். அதைக்கண்டு யாராவது பயந்து ஓடினால் அதை அழைத்து வரும் நபர் சிரிப்பாருபாருங்க, அது செம்ம கெத்தா இருக்கும்.

இன்று ஒரு குறுகலான சந்தில் இருந்து ஜாக்கிங் என்ற பெயரில் மெதுவாக அசைந்து அசைந்து வந்து கொண்டு இருந்தேன். அந்த சந்து மெயின் ரோட்டில் வந்து சேரும், அந்த இடத்தில், சில பசும் கிளிகள் நடந்து சென்றதால் எனது ஜாக்கிங்கை கொஞ்சம் வேகப்படுத்தி அந்த இடத்தில் திரும்பினேன்.. எனது ஜாக்கிங்கில் மதி மயங்கிய அந்த நாய் எதிர் புறத்தில் இருந்து வவ் வவ் என்று தாவியது... எனக்கு பிபி எகிறி இன்னிக்கு நம்ம தொடை அவுட்டுடா என்று ஓஓஓஓ என கத்தினேன். அதற்குள் அந்த நாயின் ஓனர் ஒரு குச்சியை வீசி நாயை கட்டுப்படுத்தினார். ஆனால் நான் டர்ர்ர்ர் ஆனது ஆனது தான்..

எப்பவும் நாயை இழுத்து வருபன் இன்று கயிரை லுசாக பிடிச்சிருப்பான் போல, எத்தனை நாள் கோபமோ இன்னிக்கு என் தொடைக்கறியை சாப்பிட எத்தனித்தது, எப்படியோ தப்பிச்சிட்டேன்...

நாயின் ஓனர் அப்படியே கெத்தா சிரிச்சிகிட்டு போகிறார், அந்த பசுங்கிளிகள் தலை தப்பிரான் புண்ணியம் என ஓடிவிட்டார்கள். நான் பெப்பே என்று வீடு நோக்கி பொறுப்பா நடந்து போனேன்...
--------------------------------
மோடியின் 100 நாய் ஆட்சியைப்பற்றி ஆள் ஆளுக்கு பேசினாலும், 100 நாட்களில் எதுவும் மாற்ற இயலாது என்பதுதான் நிதர்சன உண்மை. இது ஊரில் உள்ள எல்லாருக்கம் தெரியும், ஆனா தெரியாத மாதிரியே காட்டிக்குவாங்க.. நமக்கு தெரிய பெட்ரோல் விலை குறைந்துள்ளது, மற்றபடி விலைவாசிகள் எல்லாம் அப்படியேத்தான் இருக்கின்றன. நதிநீர் இணைப்பு மற்றும் பங்கீடுகளில் இன்னும் தெளிவு இல்லை என்று தான் சொல்லனும். விவசாய உற்பத்தியை அதிகப்படுத்த என்ன செய்யப்போறாங்கன்னு தெரியல.. இதை எல்லாம் ஓராண்டுக்கு பின் தான் என்ன செய்யப்போறாங்கன்னு பார்த்து நமது மதிப்புரைகளை சொல்லலாம்.
---------------------------------------
பாகிஸ்தான் உள்நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் எல்லை தாண்டிய தீவரவாத்தில் இருந்து பின்வாங்காமல் இருக்கின்றனர். நம் எல்லைப்பகுதியில் நடந்து வரும் சண்டை நமக்கு முழுவதுமாக தெரியவில்லை, தெரியும் போது தான் நம் வீரர்கள் படும் கஷ்டம் புரியும்.
--------------------------------
30 வருடமாக ப்யூனாவே இருப்பவர் மாத சம்பளம் மாதம் 20 ஆயிரம் ஆனால் 6 பங்களாக்கள், 2 சொகுசு கார்கள், நிறைய பணம் மற்றும் நகைகள் வைத்துள்ளார் எப்படி என்று ஒருத்தருக்கும் தெரியல.. என்னைப்பொறுத்தவரை இவர் ஒருவர் மாட்டி உள்ளார் ஆனால் மாட்டாமல் சுற்றுபவர்கள் இன்னும் நிறைய இருப்பார்கள்.. ப்யூனுக்கு இம்புட்டு என்றால் இன்னும் பெரிய பெரிய அதிகாரிக்கு எல்லாம்.. சொல்ல வேண்டியதில்லை, ரெய்டு போனாத்தான் தெரியும்...

---------------------------------

விபச்சார வழக்கில் நடிகை கைது என்று செய்தி வந்து விட்டால் போதும் நம்ம நேர்மையான பத்திரிக்கைக்காரங்க எல்லாம் அந்த நடிகை போட்டோவ எடுத்து வாழ்க்கை வரலாற்றை எடுத்து, எல்லாத்தையும் கலந்து மசாலா படம் மாதிரி பெரிய செய்தியாக போட்டு அன்றைய விற்பனையை உயர்த்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள் இந்த நேர்மயாளர்கள். 

உடம்பை விற்று அந்த காசில் தன் வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்ற மனசாட்சியே இல்லாமல் செய்தியை போடும் இவர்களை எல்லாம் என்னத்த சொல்ல.

---------------------------------
 
 வீட்டில் பொஞ்சாதி மற்றும் மச்சினிச்சிகளோடு பேசும் போது,  வெளியே போக நேரிடும் போது எங்க போறீங்க என்பார்கள், நான் கிண்டலாக சரக்கடிக்க போகிறேன் என்பேன், ஒரு நாள் சாராயம் குடிக்கப்போகிறேன் என்பேன், அவர்களும் அதற்கு நக்கல் பதில் விட்டு சென்று விடுவர்.

சமீபத்தில் உறவினர்கள், குடும்பத்தில் பெரியவர்கள் சிலர் பத்திரிக்கை கொடுப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளனர். என்னையு விசாரிச்சு விட்டு எனது மகனிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின் எங்கடா உங்க அப்பா என்று மகனிடம் கேட்க அவன் எங்கப்பா சாராயம் குடிக்க போய்ட்டார் என்று ஒரே போட போட்டுத்தள்ளிட்டான். பேசாமல் இருந்த அவர்கள் புறப்படும் போது நான் வர, வந்திருந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக என்னிடம் பேசி தாளிச்சு எடுத்துவிட்டனர். 

பையன் பெரிசாகிட்டான் இப்பபோய் இப்படி குடிக்கலாமா என்றும், வாரத்தில் ஒரு நாள் மட்டும் குடி என்று இன்னொருவரும் ஆக மொத்தம் எனக்கு தினமும் குடிக்கும் குடிகாரன் என்ற பட்டம் மட்டும் தரவில்லை.

பையன் முன்னாடி பேசக்கூடாது, அப்படியே பேசினாலும் தப்பா பேசினோம் இப்படி பன்னு வாங்கி அலையவேண்டியது தான்...

Sunday, August 24, 2014

ஜிகர்தண்டா ( இது சினிமா விமர்ச்சனம் அல்ல)



இன்று மாலை படம் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து, எந்த படத்துக்கு செல்வது என்று எங்க வீட்டில் பொதுக்குழு போட்டு முடிவெடுக்கும் போது,  அஞ்சான் தான் போக வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர் எங்க வீட்டு பொதுக்குழு தலைவி. நான் படம் பார்த்தது வீட்டுக்கு தெரியாது, சோ அமுக்கி அமர்ந்து வேடிக்கை பார்த்தேன், படத்தை பற்றியான அறிக்கையும், இணையதள விமர்ச்சனமும் சொல்ல மனது துடிக்குது ஆனாலும் சொல்ல முடியல, சரி டிக்கெட் வாங்கி வரேன் என்று சென்றேன். 

இன்னொரு முறை இதை பார்க்கவேண்டுமா என என்னி செந்தில் தியேட்டரில் டிக்கெட் வாங்காமல் பக்கத்து குமரன் தியேட்டரில் ஜிகர்தண்டாவுக்கு டிக்கெட் வாங்கி வந்துட்டேன். வீட்டின் பொதுக்குழுவின் முடிவை எதிர்த்த நடந்து கொண்டதால் எப்படி எதிர் கொள்வது என்று தடுமாறி நிற்கிறேன்.. இன்றைக்கு எனக்க இருக்கு....

இந்த மன நிலையிலேயே அஞ்சான் தான் பார்ப்பேன் என அடம்பிடிச்ச என் தங்கமணியிடம், ஜிகர்தண்டா பற்றி சொல்லாமல் தியேட்டருக்கு அழைத்து சென்றேன். அங்கே போன பின்பு தான் டிக்கெட்டை பார்த்த என் தங்கமணி செம்ம காண்டு, கார் ஓட்ட தெரியும் என்பதால் சாவியை கையில் எடுத்து என்னை முறைக்க, அட வாங்க வாங்க நேரம் ஆச்சு என்று நான் புக் செய்திருந்த Queen circle க்கு அழைத்துச்சென்றேன்.

உள்ளே போனதும் படம் போட்டதால் அக்னிப்பார்வையில் இருந்து தப்பித்தேன், சோப செட்டில் உட்கார்ந்து படம் பார்த்தும் திரும்பி ஒரு சிரி சிரிக்க முடியல. தங்கமணியின் ஆஸ்தான நாயகன் படத்துக்கு கூட்டிச்செல்லாததால் என் மேலே செம்ம கோபமாம். ஜிகர்தண்டாவை பார்த்த தங்கமணி கொஞ்சம் கொஞ்சமாக சிரிக்க, எனக்கும் படம் செம்ம இன்ட்ரஸ்டிங்காக சென்றது. இடைவேளையில் எனக்கு ஒரு ஐஸ்க்ரீம் மட்டும் போதும் என சொல்ல, அப்பவும் கோபத்தை குறைச்சிக்கல.

இடைவேளைக்கு பின் ஜிகர்தண்டாவுக்கு தியேட்டரில் செம்ம க்ளாப்ஸ். ஒரே சிரிப்பலை தான். வில்லன் செய்யும் அட்டகாசங்களும் அவன் ஆடும் ஆட்டங்களும் செம்ம.. இடையே என் பழைய சைட்டு அதுதாங்க படத்தின் ஹீரோயின் லஷ்மி மேனன் சும்மா வந்துட்டு வந்துட்டு போகுது. பட் நான் இந்த தடவை ரொம்ப சைட் அடிக்கல.. எனக்கு இந்த படத்தில் நொம்ப பிடிச்சது வில்லன் தான், அசால்ட்டா பட்டையக்கிளப்பி இருக்கறாது மனுசன். பிடம் ரீலிசுக்கு அவர் செய்த அலப்பறையும், படத்துக்கு அவர் வரும் அலப்பறையும் செம்ம க்ளாப்ஸ்..

படம் வெளியாகும் அன்று தியேட்டரில் டைரக்டர் மக்களின் கைதட்டலுக்கு காத்திருக்கும் அந்த இடம் மனதை வருடியது. இப்படித்தானே புதிதாக படம் எடுக்கும் டைரக்டர் எல்லாம் தனது படத்திற்கு மக்களின் விமர்ச்சனம் என்னவாக இருக்கும் என்று முதல் நாள் முதல் ஷோவிற்காக காத்துக்கிடப்பர். அந்த முதல் காட்சியில் வைத்த டிவிஸ்ட் செம்ம. அங்க தான் நம் மனதில் மிக இடம் பிடிச்சுட்டார் டைரக்டர்.

இந்த சந்தோசத்தில் என் மேலே கோபமாக இருந்த என் தங்கமணி பக்கம் திரும்பி பார்த்தேன் அம்மிணிக்கு செம்ம சந்தோசம். நான் தங்கமணியை பார்ப்பதை கவனித்த அவள் ஓவரா வலியாத, அங்க  உன் சைட்டு லஷ்மி மேனன் வந்திருக்கா அவளையே பாரு என ஒரு பிதுக்கு பிதுக்கினாள். இது என் பழைய சைட்டு இப்ப என் சைட்டு நயன்தாரா என்று சொல்லி ஒரு இடி வாங்கியது தான் மிச்சம்...

படத்தில் சண்டைக்காட்களே இல்லை, முக்கியமாக பாதி உடை அணிந்த குத்தாட்டம் இல்லை, ஒவ்வொரு காட்சி அமைப்பும் செம்ம, அந்த வில்லனின் பாடி லேங்வேஜ், காமெடி நடிகரின் கலக்கல் காமெடி என படம் பட்டையக்கிளப்புது. புது முக இயக்குநருக்கு ஒரு க்ளாப்ஸ் பாஸ்...

படம் முடிஞ்சு வெளியே வரும் போது தங்கமணி பக்கத்து தியேட்டரில் போஸ்டரை பார்த்துட்டு உம் என்று வந்தவள் ( சூரியாவ பார்க்க முடியலின்னு கோவம் போல) காரில் ஏரியதும் படம் நல்லா இருக்குல. அதுக்குள்ள முடிஞ்சிடுச்சு, ஒரு காட்டுக்கத்தல் இல்ல, பாரீன் டூயட் இல்ல, பத்து பஞ்ச் டயலாக் இல்லாம, முழுமனதாக படம் பார்த்த திருப்திப்பா... சோ... நொம்ப நன்றி... இந்த படத்துக்கு அழைத்து வந்ததற்குப்பா....
சுபம்.....

Tuesday, August 19, 2014

பம்பாய் மிட்டாய்... ( ஜவ்வு மிட்டாய்)

 
ஒரு பெரிய மூங்கில் குச்சியில் ஓர் அழகான பெண் பொம்மை, கைதட்டும் அது கை தட்டும் போதெல்லாம் மணி அடித்து நம் கவனத்தை ஈர்க்கும் இந்த பம்பாய் மிட்டாய் வண்டி. பெரும் பாலும் கைகளில் தூக்கிக்கொண்டு வருவர். சிலர் சைக்கிளில் பம்பாய் மிட்டாயை கொண்டு வருவார்கள்.
இவர்களின் சத்தத்தை கேட்டதுமே இவர்கள் பின்னால் ஓடும் சிறு பிள்ளைகளின் கூட்டம். அம்மா நாலனா கொடும்மா ஒரு வாட்ச் வாங்கிக்கிறேன் ஜவ்வு மிட்டாய்க்காரர் வந்து இருக்கார் எனவும் அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி நாலணா வாங்குவதற்குள் அழுது புரள வேண்டும்.
பெரும்பாலும் இந்த ஜவ்வு மிட்டாய்கள் இரு வண்ணங்கள், அல்லது 3 வண்ணங்களில் இருக்கும். சிகப்பு வெள்ளை, சிகப்பு பச்சை வெள்ளை என்ற வண்ணங்கள் தான் அதிகம் இருக்கும்.

அம்மாவிடம் நாம் காசு வாங்குவதற்குள் பக்கத்து வீட்டுக்கார நண்பனுக எல்லாம் கையில் வாட்ச் கட்டிக்கொண்டு எனக்கு கொக்கானிக்கா காட்டிக்கொண்டு நிற்பர். சில பெண்குழந்தைகளோ கழுத்துக்கு நெக்லசும், சில வாண்டுகள் கார், ஜீப் என செய்து வாங்கி இருப்பர் ஆனால் அனேகம் பேருக்கு வாட்ச் தான் மிக பிடிக்கும்.
இப்போது எல்லாம் இந்த பம்பாய் மிட்டாய்க்காரை பார்ப்பது மிக அரிதாகிவிட்டது, அப்படியே அவர்கள் வந்தாலும் அவர்களை சுற்றி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக குறைவு தான்.
சமீபத்தில் தேர்கடையில் பம்பாய் மிட்டாயை பார்த்ததும் என் குழந்தைகளிடமும், அக்கா குழந்தைகளிடமும் இந்த மிட்டாய் பேர் பம்பாய் மிட்டாய் எனவும் ஜவ்வு மிட்டாய் எனவும் அழைப்போம் என்று கதை சொல்லி வாங்கிக்கொடுத்தோம். எங்க வாண்டுகள் எல்லாம் ஆளுக்கு ஒன்றாக வாங்கி இரண்டு முறை ருசி பார்த்து விட்டு அப்பா இது five start மாதிரி இல்ல எனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டனர்.

ஒரு காலத்தில் உங்க அப்பன் இந்த மிட்டாய் சாப்பிடுவதற்கு அழைந்தது ரொம்ப, என்று சொன்னதும் அது உன் தலைஎழுத்து மாமா என்று பன்னு கொடுத்து என்னை ஆப் செய்து விட்டனர்..

ஆனாலும் என் நினைவுகள் இந்த ஜவ்வு மிட்டாயை கையில் மிட்டாயை ஒட்டி கொண்டு மிட்டாயின் இனிப்பு சுவையோடு கையில் வெய்யிலின் வேர்வையும் கலந்து உப்பு சுவை யோடு, மணிகணக்கில் அந்த ஜவ்வு மிட்டாயாய் சுவைப்பதே தனி ருசிதான்...
அநோகமாக படிக்கும் நீங்களும் இந்த ருசியை நிச்சயம் ருசிச்சு இருக்குங்க தானே நண்பர்களே...


Tuesday, August 12, 2014

வரலாற்று புகழ் மிக்க குதிரை சந்தை தொடங்கியது...


ஆடி மாதம் என்றாலே என் மனதில் நினைவிற்கு வருவது குதிரை சந்தை தான். எங்கு வேலை செய்தாலும் எப்ப இந்த திருவிழா வரும் 3 நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என்ற ஏக்கம் தான் இதற்கு காரணம். பதிவுலகில் இந்த சந்தையை 5வது முறையாக பதிகிறேன். வருடா வருடம் இந்த குதிரை சந்தை பற்றியான பதிவுகளை பதிவிடுவதற்கு காரணம், நிச்சயம் நாம் அனைவரும் காண வேண்டிய ஒன்று. இந்த பதிவை பார்த்து சந்தைக்கு மக்கள் வருவார்கள் என்பதற்காக பதிவிடுவதில்லை. வர இயலாதவர்கள் இதைப்பாத்து திருப்தி அடையவேண்டும் என்பதற்காக இந்த பதிவு. கடந்த வருடம் 8 இலட்சம் மக்கள் இந்த நான்கு நாள் திருவிழாவில் கலந்து கொண்டதாக அறிவித்திருந்தனர். இந்த வருடம் ஆகஸ்ட் 15ம் நாள் திருவிழாவையோட்டியே வருவதால் இந்த வருடம் நிச்சயம் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்..

குதிரைசந்தை

அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபு குதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 8 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இப்போதைய சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதால் வீட்டு உபயோகப் பொருட்கள், சோளக்கருது, பேரிக்கா, மைசூர் பருப்பி, அல்வா ம்ற்றும் புதிதாக வந்துள்ள விவசாயப்பொருட்கள், பொழுது போக்கிற்காக பல வகையான இராட்டினங்கள் என்று களை கட்டும் அந்தியூரும் அதன் சுற்று வட்டாரமும்.

இத்தளத்தின் வரலாறு

சிதம்பரத்தை அடுத்த பிச்சாபுரம் வனப்பகுதியில் 600 ஆண்டுகளுக்கு முன் குட்டியாண்டவருக்கு கோயில் கட்டி, மூன்று குழவிக்கற்களை மட்டும் நட்டு வழிபட்டனர். இந்த கோயில் பூஜாரி வீட்டுப் பெண்ணை, ஆற்காடு நவாப் திருணம் செய்ய விருப்பம் தெரிவித்து பெண் கேட்டுள்ளார். உறவினர்களிடம் கலந்து பின் சம்மதம் தெரிவிப்பதாக நவாபின் ஜவானிடம் பூஜாரி கூறினார். உறவினர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவதாக நவாப் மிரட்டியுள்ளார். அப்போது உறவினர் ஒருவருக்கு அருள்வந்து, நீங்கள் வணங்கி வரும் இம்மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு, இரவோடு இரவாக சென்றுவிடுங்கள், என்று கூறினார். பூஜாரியாரின் உறவினர்கள் ஒரு கூடையில் மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு சென்றனர். அடுத்த நாள் நவாப்பின் ஆட்கள் அங்கு சென்று பார்த்த போது யாரும் இல்லை. 
 
கோயில் கோபுரம், குதிரை மற்றும் யானைகள் கட்டும் இடங்களை சேதப்படுத்தினர். கற்களுடன் சென்றவர்கள் பல ஊர் கடந்து பசியாலும், பட்டினியாலும் வாடி வதங்கினர். தங்களையே பாதுகாக்க இயலாத நிலையில், தம்முடன் கொண்டு வந்த மூன்று கற்களையும் அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு, வேறு ஊருக்குச் செல்ல முடிவு செய்து ஓரிடத்தில் படுத்தனர். அடுத்தநாள் அனைவரும் புறப்பட்ட போது, தங்களுடைய கூடையில் மூன்று கல் சிலைகளும் இருந்ததைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டனர். அவற்றைத் தங்கள் குலதெய்வமாக வழிபட முடிவெடுத்தனர். அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் என்ற இடத்திலுள்ள கல்மண்டபத்தை அடைந்தனர். பாண்டிய மன்னரிடம் அனுமதி பெற்று மூன்று கற்களையும் வழிபாடு செய்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒரு குறுநிலமன்னன் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார்.
 
கோயில் சுற்றுப் பிரகார நடுப்பகுதியில் 11 அடி நீளம், 11 அடி அகலம், 11 அடி உயரம் கொண்ட குலுக்கை என்னும் பெட்டகம் உள்ளது. அதனுள் பூஜை பொருட்களை வைத்து வந்தனர். ஆடி மாதத் திருவிழாவில், விழாவிற்கு முந்திய நாள் குலுக்கையைத் திறந்து பூஜைப் பொருட்கள் எடுப்பது வழக்கம். இக்குலுக்கைக்கு நான்குபுறமும் வாசற்படிகள் இல்லை. மேல்பகுதி வழியாக ஆள் புகுந்து வரும் நுழைவாயில் உள்ளது. கீழே துவாரம் காற்றோட்ட வசதிக்கு அமைத்து அத்துவாரத்தில் பாதுகாப்புக்காகப் பாம்புகளை விட்டு வைத்தனர். ஆகம விதிப்படி விரதம் இருந்து வரும் பூசாரிகளில் ஒருவர் மட்டும் திறப்பார். மற்றவர்கள் அந்த பெட்டகத்தில் நுழைய முயற்சித்தால் பாம்பால் கடியுண்டு இறப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. பக்தர்கள் தங்கள் தோட்டங்களில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்களால், தங்களுக்கு ஆபத்து நேராமல் இருக்க, குலுக்கைக்கு பூக்கள் இட்டு வணங்குகின்றனர். இந்த குலுக்கை பார்ப்பதற்கு புற்று போல உள்ளது.
 
இங்குள்ள காமாட்சியம்மன் தவமிருக்க அந்தியூர் வனத்துக்குச் சென்றாள். மாய மந்திரத்தில் பிரசித்தி பெற்ற உத்தண்ட முனிராயன் என்பவர் அம்பாளுக்கு வனப்பகுதியை விட மறுத்தார். அவனை குருநாத சுவாமியின் சீடரான, அகோர வீரபத்திரர் சண்டையிட்டு அழித்தார். அவன் அழியும் முன், “என் அகந்தையை அழித்த குருநாதா! உன் கையால் அழிவதால், என் பூர்வ ஜன்ம சாபம் நீங்கப் பெற்றேன். இவ்வனத்தில் தாய் காமாட்சி அம்மன் தவம் மேற்கொள்ளட்டும். இந்த வனம் இன்றிலிருந்து ஸ்ரீகுருநாதர் வனமாக இருக்கும். நான், அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்க, நீ இங்கேயே அருள்புரிவாய்” என்று வரம் கேட்டான். அந்த வரத்தை குருநாத சுவாமி கொடுத்தார். இதனடிப்படையில், அசுரகுணம் கொண்டவர்களுக்கு கூட குருநாத சுவாமி பூர்வ ஜன்ம சாபத்தையும், பாவத்தையும் தீர்ப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்தக் கோயிலில் சிறிய கல் உருவம் ஒன்றை வீரபத்திரரும், உத்தண்ட முனியும் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். அந்தக் கல் குன்றாக வளர்ந்துள்ளது. மக்களும், “குருநாதா. உன் குன்று வளர்வதைப் போல் என் குடும்பத்தையும் வாழ வையப்பா” என வேண்டுகின்றனர். காமாட்சி அம்மன் தவநிலையில் இருக்கிறாள். அருகில் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன், நவநாயகிகள், ஏழு கன்னிமார்கள் உள்ளனர். பாட்டன், பாட்டி, நாகதேவதை, தண்டகாருண்யர், தர்ப்பை அம்மன், அண்ணன்மார் என்னும் முன்னுடையார், 18 சித்தர்கள் உள்ளனர். அகோர வீரபத்திரர் எதிரில் உத்தண்ட முனிராய துரையும், அன்னப்பாறையும் உள்ளது.
 
----------------------- 

இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த திருவிழாவை கான வருபவர்களுக்கு ஈரோடு, கோபி, சத்தியமங்ளத்தில் இருந்து நிறைய சிறப்பு பேருந்துகள் உண்டு...


 படங்கள் எல்லாம் பழைய படங்கள், இந்த வருட படங்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து உங்களை தேடி வரும் இணையத்தில்....

Tuesday, August 5, 2014

இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு...



கோவை சேலம் ஹைவே ரோட்டில் சித்தோடு என்ற ஊரிற்குள் செல்லும் வழியில் அந்த ஊர் எல்லையில் உங்களை வரவேற்கும் இந்தியன் பஞ்சாபி தபா.

12 வருடங்களுக்கு மேல் இருக்கிறது இந்த தாபா. ஈரோடு சுற்றி உள்ள ஊர்களில் தாபா ரொம்ப பிரபலம். ஈரோடு பெருந்துறை ரோட்டில் நிறைய தாபா இருக்கின்றனது அதைப்பற்றி பிறகு பார்ப்போம். இன்று ஈரோடு பவானி சாலையில் உள்ள இந்தியன் பஞ்சாபியை பற்றி பார்ப்போம்.

பெரிய சாலை போட்டு அதில் கயித்து கட்டில் போட்டு வைத்து இருப்பார்கள், கட்டில் நடுவே ஒரு பலகை இருக்கும். கட்டிலில் இரண்டு பக்கமும் இருவர் அமர்ந்து கொண்டு சாப்பிடும் படி அமைந்திருக்கும். இந்த கட்டிலில் அமர்ந்ததும் நமக்கு சின்ன வயதில் தாத்தா வீட்டு கயித்து கட்டிலில் ஆட்டம் போட்டது ஞாபகம் வரும்.

நாங்கள் நான்கு பேர் சென்ற இருந்ததால் இரண்டு கட்டிலை ஆக்கரமித்திருந்தோம். உட்கார்ந்ததும் பெல்லாரி வெங்காயத்தை ரவுண்டாக வெட்டி, அதன் கூட எழுமிச்சை ஊர்காய் வைத்து தட்டிலில் கொடுத்தனர். வெங்காயத்தை எடுத்து ஊர்காயில் தொட்டு ஒரு கடி கடித்தால் வெங்காய காரமும் எழுமிச்சையின் காரம் மற்றும் புளிப்பு இணைந்து நாக்கில் படும் போது மீண்டும் சாப்பிடத்தூண்டும் சுவை.

எல்லா இடங்களிலும் இடம் பெறும் வழக்கமான மெனுக்கள் தான் என்றாலும் சுவையில் தான் அதன் தரம் இருக்கின்றது. ஓரு ஹோட்டல் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க வேண்டும் எனில் நிச்சயம் அங்கு எதாவது சுவையாக இருக்கும் அதற்காகவே அந்த ஓட்டல் நன்றாக இயங்கும்.

இங்கும் அதுபோலத்தான் ரொட்டி, டால், நான் என வகை வகையாக கொடுத்தாலும் இங்கு கிடைக்கும் ப்ரைடு ரைஸ் நன்றாக இருக்கும். மிக சன்னமான அதே சமயம் உதிரி உதிரியாக உள்ள சாப்பாட்டில், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் மற்றும் முட்டை சம விகிதத்தில் கலந்து சாப்பாட்டோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். அந்த சாப்பாட்டை ஒரு கை வாயில் துணிக்கும் போது தான் அதன் சுவையும் தரமும் மனதில் நிற்கும்.

தயிர்சாதம் பஞ்சாபி தாபாக்களில் தயிர்சாதம் அருமையாக இருக்கும் என்று கேள்விபட்டு இருப்பீர்கள், இங்கு காணலாம் அந்த சுவையை. நன்கு குழைந்த சாப்பாட்டில் கெட்டி தயிர் ஊற்றி, அளவான உப்பு கலந்து கொடுக்கும் இந்த தயிர்சாதம் ஒரு கப் எல்லாம் நமக்கு பத்தாது, அவ்வளவு அருமையான சுவை.
இந்த பஞ்சாபியில் முக்கியமாக சாப்பிடவேண்டிய ஒன்று பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் இரண்டும் கிடைக்கும். நான் எப்போதும் ஆர்டர் செய்வது நாட்டுக்கோழி பள்ளிபாளயம் தான். இங்கு கிடைக்கும் நாட்டுக்கோழி பள்ளிபாளையத்தில் வெங்காயமும், தேங்காயும் நிறைய கலந்து இருக்கும் சிக்கன், வெங்காயம் மற்றும் தேங்காய் என ஒவ்வொன்றும் சாப்பிட சாப்பிட அதன் காரமும், தேங்காயின் இனிப்பும் நாவை பதம் பார்க்கும். இந்த பள்ளிபாளையம் சிக்கனுக்கு ஈரோட்டு மக்கள் ரசிகர்கள். எல்லா கடையிலும் கிடைக்கும் பட் இந்த சுவை கிடைக்காது.

கடைசியில் பாயாசம் சில் என்று இருக்கும் பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும் மிதக்கும் இதுவும் ஒரு கப் பத்தாது. நன்கு காரம் சாரமாக சாப்பிட்டு முடித்ததும் இந்த பாயசம் ஒரு தேவார்மிதம். நிச்சயம் தாபாவில் ஒரு நாள் சாப்பிடுங்க, சாப்பிடும் போது பள்ளிபாளையம் சிக்கன், பிரைடு ரைஸ், தயிர்சாதம் மற்றும் பாயாசத்தை மறந்திடாதீங்க...

பரபரப்பான நேரத்திலே...

அவிநாசி ரோட்டில் உள்ள நாட்டுடமையாக்கப்ட்ட வங்கிக்கு அரக்க பறக்க சென்றேன். பத்து நிமிட பர்மிஷனில் வேலையை முடிச்சிட்டு ஓடனும் என்ற வேகமும், சொன்ன நேரத்துக்கு அலுவலகத்துக்கு போகவேண்டும் என்ற மனஓட்டமும் எண்ண ஓட்டமாக மாறி இருந்தது.

பரபரப்பாக இருந்த அந்த வங்கியில் தானியங்கி டோக்கன் வாங்கும் போது என்னுடைய டோக்கன் எண் 73, வரிசையில் 55வது டோக்கன் போய்க்கொண்டு இருந்தது. அப்படியே அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்த வாரே எனது படிவத்தை பூர்த்தி செய்தேன். ஒரு குழந்தை தன் தாயின் மடியில் தவழ்ந்து கொண்டு இருந்தது, ரிட்டேர் ஆன மூத்தவர்கள் எல்லாம் தங்கள் வரிசையை எதிர் நோக்கி காத்திருந்தனர். எங்கு சென்றாலும் அங்கு யாரையாவது தேடி அவர்களை நோக்குவது நம் பழக்கமாக இருந்ததால் சுற்றி சுற்றி பராக்கு பார்த்தேன்... ம்கும் இன்னிக்கு கண்ணுக்கு குளிர்ச்சி இல்லை என்று ஆண்டவன் சொல்லிட்டான்ன போல, பசுமையே இல்லாமல் வறண்டு இருந்தது அந்த இடம்.

அவ்வப்போது கவுண்டரில் யார் பேரையாவது அழைத்து பேசிக்கொண்டு இருந்தனர். செக்புக், பாஸ்புக் என மிக பரபரப்பாக இருந்த வேளையில் தான் நம்ம ஹீரோ உள்ளே வந்தார். ஆள் நன்கு வாட்டசாட்டமாக எல்லாம் இல்லை பட் தோல் வெள்ளை, இவரைப்பற்றி விளக்க வேண்டும் என்றால், நம்ம ஊருக்கு பீகாரிங்க பெட்சீட் விற்க வருவாங்கதானே அவுங்களைப்போல இருந்தான். பட் அவனது உயர்தர ஆடையும், உயர்தர சென்டும் கலக்கியது.
டோக்கனை எடுத்து என் அருகில் அமர்ந்தவன் உங்க டோக்கன் எண் என்ன சார் என்றான் 73 என்றேன், ஓஓ.. என்னுது 80 இன்னும் 20 நிமிடம் ஆகும் போல என்று பேசிக்கொண்டே அவனது ஆப்பிளில் மூஞ்சி புத்தகத்தை நோண்ட ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் ஒரு கெட்ட வாடை அடித்தது, பக்கத்தில் இருப்பவர்கள் என்னைப்பார்க்க, நான் திரு திரு வென விழித்தேன். பெரிதுங்க எல்லாம் மேலேயும் கீழேயும் பார்த்து விழித்தனர். வாடை அதிகமாக அதிமாக என்னால் உட்கார இயலவில்லை. எங்கிருந்து வருகிறது என பார்க்க. நம்ம ஹீரோ 3500 ரூபாய் வுட்லேண்ட் சூவில் இருந்து காலை வெளியே எடுத்து கால் மேல் கால் போட்டு இருந்தார். நாங்க எல்லாம் மூக்கு மேல் இரண்டு கையையும் பொத்தி இருந்தோம்.

இவ்வளவு காசு போட்டு வாங்குறவன்,  10ரூபாய்க்கு தண்ணி வாங்கி அதை துவைக்கமாட்டான் என யோசிக்கும்போது டோக்கன் 65 தான் போய் இருந்தது.
கப்பு முடியாமல் வெளியேற எத்தனிக்கும் போது அந்த பெட்சீட் விற்பவனை பார்த்தேன் மனுசன் அம்புட்டு கப்புலியும் ஒன்னுமே இல்லாதது போல உட்கார்ந்திருந்த அவன் நேர்மையை என்னவென்று சொல்வது...

Thursday, July 24, 2014

மனம் நிறைந்து சினிமா பார்க்கலாம் இங்கு.

செந்தில், குமரன் தியேட்டர், கோவை

நீண்ட நாட்களுக்கு பிறகு வார நாட்களில் படம் பார்க்க நேற்று வாய்ப்பு கிடைத்தது. வீட்டுக்கு அருகில் இருக்கும் தியேட்டருக்கே போகலாம் என யோசித்த போது நண்பர் பாலாஜி குப்தா செந்தில் தியேட்டருக்கு போங்க பெஸ்ட் ஆக இருக்கும் என்றார். 

வேலையில்ல பட்டதாரி படத்துக்குத்தான் செல்லவேண்டும் என்று என் இன்ஜினியர் மனைவி சொன்னதால் சரி என்றேன். ஊருக்குள்ள இந்த மால்கள் வந்த பின் எப்பவாவது பார்க்கும் ஒரு படத்தையும் மால்களில் தான் பார்ப்போம், டிக்கட்டுக்கு 450, பாப்கார்ன், பப்ஸ், பெப்சி என்று 500, பார்க்கிங்கிற்கு 50 என 3 பேருக்கு 1000 செலவாகிடும். இதற்காகவே எப்போதாவது ஒரு படம் பார்ப்போம்.

நேற்று செந்தில் தியேட்டருக்கு 2 மணி காட்சிக்கு டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்று தான் சென்றேன். Queen circle 85, King circle 80. first class 50 என்று விலைப்பட்டியல் இருந்தது. கவுண்டர் சென்றால் கிங் சர்க்கில் தான் இருக்கிறது என்றனர் அதுவும் 2 டிக்கெட்தான் என்றதும் சரி என்று படத்திற்கு சென்றேன். தியேட்டர் சுத்தமாகவும், அழகாகவும் இருந்தது. படம் போடுவதற்கு முன் திரை அப்படியே மேலே செல்லும், அதை ஈரோடு அபிராமி தியேட்டரில் நீண்ட நாட்களுக்கு முன் பார்த்த ஞாபகம். 

தியேட்டரின் சுத்தம் தான் எப்போதும் முக்கியம், அந்த சுத்தத்தை அந்த தியேட்டரில் பார்த்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. முக்கியமாக கழிப்பறை மாலைகளில் உள்ள கழிப்பறைகளை விட மிக சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுவதில் மகிழ்ச்சி. தியேட்டருக்குள் உச்சா வந்தால் அந்த கப்பிற்காகவே உச்சாவை அடக்கி வந்து காலமெல்லாம் எங்க ஊர் தியேட்டரில் படம் பார்க்கும் போது நிகழ்ந்தது உண்டு.

மிக முக்கியமாக  திண்பண்டங்கள், நிச்சயம் நிறைய பேர் மால்கள் மற்றும் பிற சினிமா தியேட்டருக்கு சென்று, திண்பண்ங்களை வாங்கும் போது மனசு நிறைஞ்சு பணம் கொடுத்திருக்கமாட்டோம், நான் மட்டுமல்ல இங்கு நிறைய பேர் கொடுத்திருக்க மாட்டீங்க, ஒரு பெப்சி 60 ரூபாய், ஒரு பாப்கான் 125 சொல்கிறான் என்று மனதார திட்டிகிட்டுத்தான் வாங்கி இருப்போம், அதில் படத்துக்கு செல்லும் போதோ நம்ம பைய அவர்கள் வாங்கி சல்லடை போட்டு தேடும் படலம் எல்லாம் நடக்கும். இதை எல்லாம் சகிச்சிகிட்டு தான் நாம் படம் பார்க்கிறோம் இல்லை என்று யாரும் மறுக்க இயலாது.

ஆனால் இந்த தியேட்டரில் பாப்கான் 15, ஐஸ்கிரீம் 15, பப்ஸ் 12, காபி 10 என அனைத்து பொருட்களும் 15 ரூபாய்க்கு மேல இல்லீங்க இது தான் ஆச்சயர்மான உண்மையும் கூட. எதோ ஒரு தியேட்டரில் பப்ஸ் 50 ரூபாய்க்கு வாங்கி திட்டிகிட்டே திண்ணு அனுபவம் உண்டு. ஆனால் நேற்று பாராட்டிகிட்டே சாப்பிட்டேன். படம் முடிந்த பின் அந்த ஸ்கிரீனை கீழே இறக்கியது அந்தநாள் ஞாபகத்திற்கு கொண்டு போய்விட்டது..

சுத்தமாகவும், சுகாதராமாகவும், தரமாகவும், விலைகுறைவாகவும் நிம்மதியாக படம் பார்க்கவேண்டும் என்றால் நம்பி செல்லலாம் இந்த தியேட்டருக்கு...

எல்லா தியேட்டரும் இப்படியே இருந்தா நிச்சயம் மக்கள் விசிடியை தேடாமல் தியேட்டரை நோக்கி படை எடுப்பார்கள்...



Friday, July 18, 2014

எடுறா இரண்டாயிரம் ரூபாயை...

அலுவலக இடைவேளை நேரத்தில் செல்போனை கையில் பிடிச்சு செவுத்தில் சாய்ந்து, கிடைக்கும் 5 நிமிடத்தையும் உச்சா கூட போகாம நேரத்தை பயன் படுத்துகின்றனர் நம் ஆட்கள். அவர்கள் பேசுவது அவர்களின தனிப்பட்ட உரிமை தான் இதை நீங்களும் நானும் கேட்டா, போட கேனப்பையான்னு திட்டத்தான் செய்வானுக.

இப்படி அடிக்கடி அலுவலகத்தில் ஓதுங்கி பேசும் ஒருவனைப் பார்ப்பேன், அவன் பக்கத்து அலுவலகம் தான், ஆனாலும் அவ்வப்போது அவன் கொஞ்சி, அழுது பேசுவதை நான் கொஞ்சம் ரசிச்சு பார்த்து, சின்ன ஸ்மைலியோட சென்று விடுவேன்.

6 மணிக்கு அலுவலகத்தை விட்டு ஓடும் ஆட்களில் நான் முதல் ஆள். வண்டிய எடுத்து தலைக்கவசத்தை அணியும் போது, அந்த பையன் போனை எடுத்து, தலைக்கவசத்தின் உள் வைத்து பேசிகிட்டே சென்றான். ஏந்தம்பி பேசிகிட்டே வண்டிய ஓட்டுகிறாய் என்று யார் கேட்கமுடியும், கேட்டா போட வெண்ணெய் என்பான்.

2 நிமிடத்திற்கு பின் எப்பவும் போல என் வீட்டுக்கு செல்ல ஆயுத்தம் ஆனேன். சில நாட்களாக சாரல் மழையாக இருந்த கோவையில் நேற்று தான் சூரியன் எட்டிப்பார்த்தது. அப்படியே அலுவலக கேட்டிற்கு என் யமாஹாவைக் கிளப்பி வந்து நின்றேன். பக்கத்தில் இருந்த பள்ளி மாணவிகள் எல்லாம் அவர்களுக்கு பிடிச்ச தோழிகளோடு சிரித்து சிரித்து கூடவே தலைக்கவசத்துடன் இருந்த என்னையும் நமட்டு சிரிப்பு சிரிக்க வைத்தனர்.

சிங்கத்தை சிலிப்பி வண்டியை முறுக்கினேன், எங்கிருந்தோ சைக்கிளில் வந்த ஒருவன் அந்த பெண்களை கடக்கும் போது கையை நீட்டினான் அந்த பெண் லபக் என்று வாங்கி பள்ளி பாட மூட்டையில் திணித்தாள்.. ஆஹா 2014லிலும் காதல் கடுதாசி கொடுத்து காதலிக்கிறானே என்று மிக ஆச்சர்யம். அந்த காதலை வாழ்த்த வேண்டும் போலத்தான் இருந்தது. இந்த காதல் கடிதத்தை நானும் நிறைய எழுதி, நிறைய பேர்க்கு கொடுத்திருந்தாலும் ஒருத்தியும் என்னை காதலிக்கவில்லை என்பது தனிக்கதை. இந்த பேஸ்புக், டிவிட்டர், செல்போன் கலாச்சாரத்தில் காதல் கடிதம் என்பது நிறைய மகிழ்ச்சியை தந்தது. வாழ்க அந்த கடிதக்காதல்.

மீண்டும் சிங்கத்தை சிலிப்பி எஸ்என்ஆர் காலேஜ் தாண்டி பாப்பாநாயக்கன் பாளையத்திற்கு வண்டியை திருப்பினேன், மகன் வந்திருப்பான் அவன வீட்டு பாடம் எழுத வைக்க இன்னிக்கு என்ன பொய் சொல்லாம் என்று யோசிச்சிகிட்டே வந்தேன். சில முக்கிய முடிவுகள் இப்படித்தான் எடுக்க முடிகிறது. தனியோ யோசிச்சுகிட்டு போற ஒரே இடம் பயணம் தான். கவனத்தை சிதறவிடாதே, அப்புறம் நீ சிதறிவிடுவாய் என நீங்க நினைக்கறது புரியுது, எப்பவும் 40க்கு மேலே எண் சிங்கம் சீராது, சீரவும் விடமாட்டேன் அப்படி ஒரு கட்டுப்பாடு.

சிங்கம் திரும்பியதும் வேகத்தடைக்கு பக்கத்தில் நிறைய கூட்டம், நமக்குத்தான் ஊராம் வீட்டு விசயம் என்றால் மூக்க தூக்கிட்டு போய் அது என்ன நாத்தம் என்று பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராதே. வண்டியை நிறுத்தி இறங்காமல் வேடிக்கை பார்த்தேன், ஓர் அழகான ஆண்டி வந்து என் முன் நின்றது, அதன் முடி முட்டியை தாண்டி நின்றதால் ஒரு நிமிடம் சண்டையை விட்டு விட்டு ஆண்டடிய பார்க்க ஆரம்பித்தேன். தலைக்கவசத்தை கழட்டி ஆண்டடியிடம் பேசி விட வேண்டும் என்று கழட்டும் போதே அந்த ஆண்ட்டி அந்த குழந்தை மேல தான் தப்பு, இவுங்க விடாம சண்டை போடுறாங்க பாருங்க என்றதும், ஆஹா இது தான் சாக்கு என்று அப்படீங்களா என்று கதை கேட்ட ஆரம்பித்தேன், ஆண்டியின் நீள முடியை ரசிச்சபடியே..

இருசக்கர வாகனத்தில் மெதுவாகத்தான் வந்திருக்கிறான், வேகத்தடை இருந்ததால் மெதுவாகத்தான் வரமுடியும், வேகமாக வர வாய்ப்பு இல்லை, ஒளிஞ்சு விளையாட்டு விளையாடிய பாப்பா ஓடி வந்து வண்டிக்குள் விழுந்து விட்டது இது தான் மேட்டர். அந்த பெண்ணுக்கு கையில் சிராய்ப்புடன் கூடிய காயம் மட்டுமே பட் 2000 கொடு இல்லை என்றால் வா ஆஸ்பத்திரிக்கு போகலாம் அந்த ஸ்கேன், இந்த ஸ்கேன் என்று இவர்கள் போட்ட பிட்டில் பையன் திரு திரு என்று விழித்து நின்றான்.

நான் வண்டிய விட்டு இறங்கிய அவன் மேல தப்பு இல்லை என்று சொல்லனும் என்று என் மனசு துடிச்சது, கூட ஆண்டடி வேற இருக்கிறாங்க என் தைரியத்தை காட்டவேண்டும் என்று வேகமாக இறங்கினேன், ஆண்டி வேண்டாம் தம்பி நமக்கேன் வம்பு, அவுங்கள பார்த்தா பணம் வாங்காம விட மாட்டாங்க போல, நாம பொழப்ப பார்ப்போம் என்றது, எனக்கும் அது தான் சரி என பட்டது. நாம நியாயம் கேட்க போய், அவர்கள் நிறைய இருந்தாங்க, நம்மள ரெண்டு வீசினால் நாம் அடிவாங்கி ஓட வேண்டும் என்று  நம்ம ஊர் சராசரி மனது நினைத்தது, வா வீட்டுக்கு போகலாம் என்றும் சொன்னது மனசு, ஆண்டியிம் கிளம்பி விட்டது.. நானும் கிளம்பிட்டேன்..

அப்போது கூட்டத்தில் சத்தமாக கேட்டது உனக்கு வேண்டாம் எனக்கும் வேண்டாம் எடுறா 2000 ரூபாயை....

Monday, July 14, 2014

சோத்துக்கடை - வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை


தேடி தேடி உண்ணும் உணவகத்தில் இந்த கடையும் ஒன்று. நண்பர் ஒரு வர் இங்க போய் சாப்பிடுங்க நிச்சயம் பிடிக்கும் என்றார். சரி என்று சனிக்கிழமை இரவு சாப்பிட சென்றேன். ரேஸ்கோர்ஸ் காஸ்மாபாலிடன் க்ளபை ஒட்டு உள்ள சாலையில் சென்றபோது இடது பக்கம் வளர்மதி மெஸ், கொங்கு நாட்டு சமையல் முறைப்படி என்று எழுதி இருந்தது. காரை கடையின் எதிரில் பார்க் செய்து விட்டு குடும்பத்தோடு உள்ளே சென்றேன். ஒரு 30 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏர்கண்டிசனோடு அமைந்திருந்தது இந்த உணவகம்.
சாப்பிட உட்கார்ந்ததும் மெனு கார்டு கொடுங்க என்றேன், மெனு கார்டு இல்ல சார் எங்க ஸ்பெசல் என்று பிரியாணி, புரோட்டா, முட்டை புரோட்டா, சிக்கன் கறி தோசை, மட்டன் கறி தோசை, பிச்சு போட்ட சிக்கன் பெப்பர் வறுவல், மீன், நெத்திலி மீன் என்று வரிசையாக சொன்னார்.
நான் புரோட்டா, சிக்கன் கறி தோசை, பிச்சு போட்ட சிக்கன் வறுவல், நெத்திலி மீன், ஒரு ரோஸ்ட் என்று ஆர்டர் செய்து காத்திருந்தோன். இரண்டு சின்ன ஜக்கில் சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு என்று வைத்தனர். தலைவாழை இலை போட்டு, தண்ணீர் தெளித்து காத்திருந்தேன் சாப்பிடுவதற்கு.

ஆர்டர் சொன்னவைகள் வர சிறிது நேரம் ஆகும் என்பதால் சிக்கன் குழம்பை கொஞ்சம் ஊற்றி, தொட்டு நக்கி பார்த்தேன். மசாலா கையில் அரைச்சிருப்பாங்க போல குழம்பு அதிகம் காரம் இல்லாமல், சரியான விகிதத்தில் உப்பு கலந்து, மசாலா மனம் இல்லாமல் குழம்பு மனத்தில் இருந்தது. ஊர்ப்பக்கத்தில் கையில் அரைச்சி குழம்பி வைக்கும் போது தான் இந்த பக்குவம் வரும், ஆஹா ஒரு கரண்டி குழம்பு உள்ளே போய்விட்டது.
மட்டன் குழம்பும் இது போலவே இருந்தது. உள்ளே ஒரு பீஸ் இருந்ததால் அதையும் சாப்பிட்டு பார்த்தேன், மசாலாவோடு நன்கு வெந்திருந்தது. மசாலாவும் கறியும் நல்ல சுவையில் இருந்தது.
சிக்கன் கறி தோசையும், பிச்சுப்போட்ட சிக்கன் வறுவலும் வந்தது. தோசையின் மேல் முட்டை மற்றும் வெங்காயம், சிறு பச்சை மிளகாய், கொத்தமல்லி தலையோடு சிக்கன் பீசை போட்டு நன்றாக முன்னும் பின்னும் சரியான பக்குவத்தில் சுட்டு கொடுத்திருந்தனர். கொஞ்சம் கூட தீயாமல் இருந்தது. அந்த தோசையை பிச்சு சிக்கன் கிரேவியில் தடவி அப்படியோ நாவில் கொண்டு போய் தோசையை வைக்கும் போது தான் தெரிந்தது அதன் உச்சபட்ச சுவை. நன்றாக ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டதில் 2 நிமிடத்தில் காணமல் சென்று விட்டது சிக்கன் கறி தோசை.
அடுத்து பிச்சு போட்ட சிக்கன் பிரை இதில் நன்கு வேகவைக்கப்பட்ட சிக்கனில் வெங்காயம், பச்சை மிளாகய், கறிவேப்பில்லை கூடவே பெப்பரும் போட்டு நன்றாக பிரட்டி கொடுத்திருந்தனர். தோசையின் நடுவே இந்த சிக்கனை வைத்து அப்படியே குழம்பில் துவட்டி துவட்டி சாப்பிடுவதில் தான் எவ்வளவு சுவை. இதற்காகவே மீண்டும் அங்கே போகனும் போல இருக்குங்க..
நெத்திலி மீன் வறுவல் கொடுத்தனர், மீனை முதலில் சாப்பிட்ட என் மனைவி மீன் வாசமே இல்லை நன்றாக ப்ரை செய்து இருக்காங்க, காரமும் குறைவு என்றதும் மகனுக்கும் கொடுத்தேன் அவனும் சாப்பிட்டு எனக்கு இன்னொன்று என்றான். அடுத்த நான் நெத்திலியை எடுத்து கடிக்கும் போது தான் தெரிந்தது அது புது நெத்திலிமீன் என்றும், மீன் வாடை துளியும் இல்லாமல் சுவையாக சமைத்திருந்தது பிடிச்சிருந்தது.
புரோட்டாவும் நன்றாகவே இருந்தது. மொத்தத்தில் மனசு நிறைய கொங்கு சமையலை சாப்பிட வளர்மதி மெஸ்க்கு போகலாம். மதிய உணவு இன்னும் சாப்பிட்டு பார்க்கவில்லை விரைவி போய் சாப்பிடனும். விலை மற்ற ஏசி உணவகங்களின் விலை போலத்தான் சுவைக்காக தைரியமாக கொடுக்கலாம். நாங்க 3 பேர் சாப்பிட்டதற்கு 425 ரூபாய் ஆச்சு இரவு உணவிற்கு...
அமைவிடம்: ரேஸ்கோர்ஸ் காஸ்மா பாலிடன் க்ளப் பக்கத்து ரோடு மற்றும் போட்டோ சென்டருக்கும் எதிர்ரோட்டில் அமைந்துள்ளது.

Sunday, July 13, 2014

கிளுகிளுப்பான கதை சொல்லி "சொக்கன் தாத்தா"

ஒவ்வொரு ஊரிலும் பல பெரிசுங்கள் ஆலமரத்தடியிலே, வேப்பமரத்தடியிலோ உட்கார்ந்து, ஊர் நாயம், உலக நாயம் பேசும் வழக்கம் எல்லா கிராமங்களிலும்  இருப்பார்கள். இவர்கள் மரத்தடி இருப்பார்கள், பாட்டிகளோ திண்ணையிலும், கிணற்றடியிலும் வெற்றிலை மடித்து வைத்து உரலில் இடிச்சிகிட்டே ஊர் நாயமும், உள்ளுர் கிசு கிசுக்களையும் பேசியே காலத்தை போக்குவார்கள்.

இவர்கள் பேசும் பேச்சில் பல அனுபவங்களும், நிறைய கருத்துக்களும் அடங்கி இருக்கும், என்ன பேசும் போது கொச்சை வார்த்தைகளை நிறைய பயன்படுத்துவார்கள். இப்போது நமக்கு கொச்சை வார்த்தையாக பட்டாலும் அப்போதெல்லாம் அந்த வார்த்தைகளின் மேல் ஈர்ப்பு இருந்ததை மறக்க இயலாது.

அறிவியல் மாற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சி, தொலை தொடர்பு வளர்ச்சி எல்லாம் அதிகரித்து அனைவருக்கும் பாலியியல் கல்வி களைப்பற்றி நிறைய அறிந்து கொள்ள இப்போது ஏதுவாக இருக்கிறது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்னர் ஒருத்தருக்கும் ஒன்னும் தெரியாது, இந்த மாதிரி பெருசுங்கள் எல்லாம் தங்களின் அனுபவங்களை கதையாக சொல்லி சொல்லித்தான் வளர்த்தார்கள் தங்கள் சந்ததியினரை. இவர்கள் சொல்லும் கதைகள் எல்லாம் இன்று நாம் கேட்கும் போது, அட இதுவா என்று தான் கேட்கத் தோணும், ஆனால் அன்று கதை கேட்க பெருசுங்களை துரத்தி துரத்தி இளைஞர்கள் படையெடுத்த காலம் அது.

இப்படி கதை சொல்வதில் எங்கள் ஊரில் பேர் பெற்றவர் சொக்கன் தாத்தா இவரைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும், இருவருக்கு எங்கள் சிறுவயதில் நாங்கள் வைத்த பெயர் கெட்டவார்த்தை தாத்தா. இந்த தாத்தா எங்களை பார்க்கும் போது வாடாக் குஞ்சு மணி, உள் டவுசர் கீது ஒன்னும் போடாமா அப்படியே ஆட்டிக்கிட்டு வர்றாம்பாரு என்று சத்தமாக அவர் பேசும் போது வெட்கமாக அந்த இடத்தை விட்டு ஓடிடுவோம்.

புதுசா கண்ணாலம் ஆன சேகர் அண்ணன் எப்ப பாரு தாத்தாவையே சுற்றி வருவார், நாங்களும் அப்படி என்னடா சொல்லுது இந்த கெட்டவார்த்தை தாத்தா என்று ஒட்டு கேக்க திணறுவோம். ஒரு நாள் கிணற்றுமேட்டில் அவர்கள் உட்கார்ந்து பேச பஞ்சாயத்து திண்ணைக்கு அடியில் படுத்து கதை கேட்கும் போது சொக்கன் தாத்தா பார்த்து விட்டார். உங்களுக்கு எல்லாம் இன்னும் வயசாகனுமடா குஞ்சாண்டிகளே என்று அவர் கத்த, நாங்க எஸ்கேப்.

வயது ஆக ஆக எங்களுக்கும் பெண்கள் மேல் ஈர்ப்பு இருக்கும் ஆனால் சைட் அடிக்க பயந்து தலைய குணிந்து மாட்டை ஓட்டிகிட்டு போய்டுவோம், ஆனால் தாத்தாவோ பெண்களை கண்டால் என்ன கொமுரி சமைஞ்சுட்டா போல, வெட்கத்தை பாரு என்று சத்தமாகவே கிண்டல் செய்வார். இதற்கு பின் தான் சொக்கத்தாத்தாவை நண்பராக்கி அவரிடம் கதை கேட்க ஆரம்பித்தோம்.

மங்குனி, கிங்குனியில் ஆரம்பித்து ராஜா ராணி கதைகள் என பல பாலியியல் கதைகளை சொல்வார். ஒவ்வொரு கதையின் முடிவில் வெட்கம் இருந்தாலும் அதில் பின்னப்பட்ட விசயங்கள் நிறைய இருக்கும். 

புருசன் பொஞ்சாதி, மாமனார், மாமியார், அத்தை  என ஒவ்வொரு உறவுக்கும் ஒரு கதை சொல்வார். புருசன் பொஞ்சாதி பிரச்சனைகளையும், அவர்கள் தப்பு செய்த போது எப்படி சமாளித்தார்கள் என்று பாலியில் கலந்து அவர் சொல்லும் கதைகள் நிறைய மணதில் ஓடுகின்றன. ராஜா ராணி கதைகள் தான் எப்போதும் செம்ம சூடா இருக்கும். அண்ணன் தம்பி கதைளில் சொத்துக்காக அவர்கள் செய்யும் திருட்டுத்தனத்தை நிறைய சொல்வார், அவர் சொன்னதில் "மங்குனிக்கு மங்குனியும் கெட்டு, கிங்குனிக்கு கிங்குனியும் கெட்டு, போதக்குறைக்கு வாயும் கெட்டு" என அவர் சொல்லும் போது எங்கள் சிரிப்புச்சத்தம் பக்கத்து ஊருக்கு கேக்கும்.
ஒரு நாள் கோயிலுக்கு போய்ட்டு வந்தேன் தாத்தா திருநீறு எடுத்துக்கோ என்றேன், எந்த கோயிலுக்கு என்றவரிடம் பவானி கூடுதுறைக்கு என்றேன். அங்கு இருக்கும் சிற்பங்களை எல்லாம் பாத்திருக்கிறாயா என்றார், எங்க தாத்தா எங்கப்பனும், ஆத்தாலும் தலையில் தண்ணிய தெளிச்சிகிட்டு, அந்த அர்ச்சனை, இந்த அர்ச்சனை என்று கோயிலில் என்னை கைய எடுத்து கும்பிடச்சொல்லி நச்சு நச்சுன்னு நச்சுங்கறாங்க...

அட போடா போக்கத்தவனே, அங்க நிறைய கண்ணாலம் ஆன புது புது சோடிகள் எல்லாம் வருவாங்களே, ஆமாம் தாத்தா நிறைய இருந்தாங்க என்றதும், அட அவுங்க எல்லாம் சாமி கும்பிட்டுட்டு அப்படியே, அங்க இருக்கும் சிற்பத்தை பார்க்கவந்தவங்க என்றும், அடுத்த முறை போய் ஒவ்வொரு சிற்பமாக பாருடா எங்குஞ்சாமணி, ஒவ்வொன்றும் ஓர் கதை சொல்லும் என்பார்.

தனியா போனா எப்படி என்று கூட்டாளிகளோடு கோயிலுக்கு சென்று அங்குள்ள சிலைகளை பார்த்து எங்களுக்கு தெரிஞ்ச விளக்கத்தை அப்போதைக்கு விளக்கி கொண்டோம். நாங்கள் ஒவ்வொருத்தனும் படிச்சு வெளியூரு வேலைக்கு போனாலும் சொக்கன் தாத்தாவை நினைச்சாலே மனசு செம்மையாக சிரிக்கும். நண்பர்கள் திருவிழா சமையத்தில் சரக்கடிக்க ஒன்னு சேரும் போது சொக்கன் தாத்தாவின் பேரனை கலாய்ப்பது வழக்கம்.

கண்ணாலம் ஆன புதிதில் சொக்கன் தாத்தா வீட்டுக்கு சென்றபோது என் பொஞ்சாதிய இருக்கும் போது சிலை சிலையா பார்த்தபையன் என்று கலாய்த்து அனுப்பினார். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் சொக்கன் தாத்தாவின் பேரன் போன் செய்தான், தாத்தா  94 வயதில் சாமிகிட்ட போய்ட்டாருடா, ரெண்டு நாள் ஆச்சு இன்னிக்குத்தான் காரியம்டா, தகவல் சொல்லாம்ன்னு கூப்பிட்டேன், உங்க அப்பாவும், அம்மாவும் வந்திருந்தாங்கடா அப்படியே நம்ம பசங்களுக்கு சொல்லிடுடா என்று போனை துண்டித்தான்.

இரண்டு நாட்களாக அவர் நினைவுதான். கிராமத்தை பொறுத்த வரை எல்லா தாத்தாவும் நம் தாத்தாக்கள் தான் சொந்த தாத்தாவை விட மற்றவர்கள் தான் மிக கிண்டலும் கேலியுமாக இருப்பார்கள். இந்த சொக்கன் தாத்தா அவர் மட்டுமா போனார், அவரின் நினைவுகள், பல பாலான கதைகள், அந்த கிராமத்தின் மண்ணை அறிந்த அந்த மகராசன் போனபோதே, அவரின் நினைவுகளையும், கதைகளையும் கொண்டு போய்ட்டார். இன்னும் இருப்பதோ சில தாத்தாக்கள் தான் அவர்களிடம் உள்ள கதைகளும் சீக்கிரம் அவர்களுடனே போய்விடும்....

Sunday, June 29, 2014

பரபரப்புக்கு பஞ்சமில்லை நம்ம ஊரில்...

தினமும் ஊடகங்களின் பரபரப்புக்கு தீனி கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது. இன்று ஒரு பிரச்சனை அதைப்பற்றியான நேரடி ஒளிபரப்புக்கள், யார் மீது குற்றம், இதற்கு என்ன தேர்வு என அந்நாள் முழுவதும் நம்மை கட்டிப்போடுகின்றனர். அடுத்த நாள் வேறு ஒரு பிரச்சனை வந்ததும் நம்மை அந்த பிரச்சனைக்கு அழைத்துப்போகின்றனர், முந்தியநாள் பிரச்சனைக்க தீர்வு கிடைச்சுதா இல்லை கிடைக்குமா என்ற பாலே அப் செய்திகளை காணுவது அரிது. அப்படியே பாலே அப் வந்தாலும் இரண்டு நாட்களுக்குத்தான் அதற்கான தீர்வு நிச்சயம் கிடைத்தபாடில்லை என்று தான் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக நம்மை கட்டிப்போட்ட விசயம் 11 மாடி குடியிருப்பு கட்டப்படும் போதே தரைமட்டம் ஆனது. இதற்கு யாரை குற்றம் சொல்ல, அந்த இடத்தை அப்ரூவல் செய்தவரையா, கட்டிடம் கட்டுபவரையா, அதற்கு அனுமதி கொடுத்தவரையா என்று ஒரு பக்கத்துக்கு கேட்டுகிட்டே போகலாம், ஆனால் இதற்கு முடிவு நிச்சயம் கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

இதற்கிடையே டிவி பேட்டியில் பொதுமக்கள் அப்படியே விழுந்தது என்கின்றனர், இடையில் புகுந்த சில பேர் இடி விழுந்ததால் கட்டிடம் நொறுங்கியது என்கின்றனர். இந்த கட்டிடம் கட்டிய மேலாளர் ஒருவர் இடி விழுந்ததற்கு நான் எப்படி சார் பொறுப்பாக முடியும் என்று அந்த பருப்பு வாய் கூசாமல் சொல்கிறது. அதுவும் அந்த இடத்தில் பலத்த மழை இல்லை என்ற தகவல் தான் அனைத்து மீடியாக்களும் சொல்கின்றனர். சொத்தை மழைக்கே பில்டிங்க இடியும் போது புயல் மழை பெய்தால் நிலமை மோசமாகி இருக்கும்.

இப்போது எல்லாம் பூமி பூஜை போடும் போதே வீட்டை விற்கின்றனர். இப்படித்தான் கோவையில் நிறைய விளம்பரங்கள் கொடுத்து, வீடு 30 இலட்சம் என்று இருந்தது, குறைந்த வீடுகளே உள்ளன, புக்கிங் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று மிக கவர்ச்சியான விளம்பரங்கள், விளம்பரங்கள் அனைத்தும் அழகாக வடிவமைக்கப்பட்டு பார்த்த உடனே வாங்கனும் போல இருந்தது. பாழப்போன நடுத்தர வர்க்கத்து மனசு சும்மா இருக்குமா உடனே எப்படியாவது வாங்கிடலாம் என்று நானும் குடும்பத்தில் இருக்கும் எல்லாத்தையும் அழைத்து போகலாம்ன்னு முடிவு செய்திட்டேன்.

அந்த சீட்டை எடுத்த இம்புட்டு பணம் வரும் மீதிக்கு நகைய அடகு வெச்சிக்கலாம் மீதி பாதிக்கு லோன் போட்டுக்கலாம் என்ற டாக்குமெண்ட் எல்லாம் தயார் செய்துவிட்டு எல்லாரும் வீடு பார்க்க போறத அக்கம் பக்கம் வீட்டுக்கும், ஊரில் இருப்பவர்களுக்கு எல்லாம் போனை போட்டு சொல்லிட்டேன் அம்புட்டு சந்தோசம், ஜிம், நீச்சல்குளத்தோடு வீடுன்னு பெருமை பீத்திக்கிறதில் அடிச்சுக்கு முடியுமா. அந்த அளவிக்கு பீத்திட்டு அடுத்த நாள் காலை எல்லாரையும் கூட்டிகிட்டு, வீடு வாங்குற இடத்துக்கு போனோம், அவன் சொன்னதில் இருந்து 2 கிலோ மீட்டர் அதிகம் போனதுக்கு பின் அந்த இடம் வந்தது, எங்களைப்போலவே நிறைய கார்கள் இருந்தன. இறங்கியதும் நறுக்குன்னு நாலு அரேபியன் குதிரை மாதிரி பிகருங்க வாங்க வாங்க என்றதும் என்க்கு ஜிவ்வின்னு ஆகிவிட்டது.

அப்புறம் ஒரு இருட்டு அறைக்கு கூட்டிட்டு போனாங்க ( வேறு மாதிரி கற்பனை வேண்டாம் பாஸ்) அங்க போய் வீடு எப்படி இருக்கும் என்று டேமோ காட்டினாங்கா. அரேபியன் குதிரை வந்து வீடு பிடிச்சிருக்கா சார் என்றது. ம்ம்ம் என்று மண்டைய ஆட்டிகிட்டே நின்னேன். உங்களுக்கு எந்த தளம் பிடிச்சு இருக்கு என்றதும். 2 வது த்ளம் என்றேன் வாங்க பார்க்கலாம் என்று கூட்டிட்டுப்போனாங்க. நானும் வீட்டை பார்க்கற ஆசையில் குதிரை கூடவே சென்றேன். ஒரு வெட்ட வெளி புல் தரையில் நின்று இது தான் நீச்சல் குளம், நீச்சல் குளத்துக்கு மேலே உங்க வீடு இருக்கும். அப்படியே அன்னாந்து பாருங்கன்னு சொன்னாங்க. எனக்கு அன்னார்ந்து பார்த்தால் வானம் தான் தெரிஞ்சுது. தரையில் இருந்து 20 அடியில் உங்க வீடு என்று வெட்ட வெளியையும், வானத்தையும் காண்பித்து நாம் கனவு காண்பது போல பிட்டா இறக்கிட்டு போய்ருச்சு அந்த அழகு பதுமை..

10 நிமிடம் எனக்க கையும் ஓடல, காலும் ஓடல அட படுபாவிகளே சும்மா இருந்த என்ன இப்படி கேனப்பயல் ஆக்கிட்டிங்களேன்னு கடுப்புல வந்தேன், குறுக்கே வந்த மற்றொரு அரபியன் குதிரை, சார் மதிய உணவு ஏற்பாடு செய்திருக்கிறோம் மறக்காம சாப்பிடுங்க என்றனர், ஆள விட்ட போதும் என்று காரை நோக்கி வரும் போது மீண்டும் வந்தது அரேபியன் குதிரை, சார் எப்ப புக் பன்றீங்க. உங்க பேரை நோட் செய்துகொள்கிறேன் என் கேட்டதும், முதல்ல அடுக்குமாடிய கட்டுங்க, அப்புறம் வந்து வாங்கிக்கிறேன் என்று பின்னங்கால் பிடறி அடிக்க ஓடியாந்தேன்.

இப்போது இடிந்த கட்டிடத்தை எத்தனை பேர் வாங்கினார்களோ, அப்படி வாங்கியவர்கள் இனி கீழே நின்று, அதோ பாருங்க இங்கிருந்து 20 அடி உயரத்தில் மேலே எங்க வீட்டு சமையல் அறை இருந்தது, பெட்ரூம் இருந்தது என்று கற்பனை செய்து பார்த்துக்கொள்ளவேண்டியது தான்.

நாளை வேறு ஒரு பிரச்சனை வரும் அப்போது அனைவரும் இந்த பிரச்சனையை மறந்து விட்டு நம் வேலையை பார்க்க போக வேண்டியது தான்..

Thursday, June 19, 2014

புலம்பல்களுடன் வாழும் மனசு

தினமும் காலை எழுந்தோமா ! வேலைகளை முடிச்சோமா ! மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு, குழந்தையை பள்ளியில் விட்டு, நாம் அலுவலகத்துக்கு வந்தோமா!! என்று தான் பயணிக்கிறது நமது வாழ்க்கை. ஆனால் நம் மனசு அப்படி பயணிப்பதில்லை, பேருந்தில் புட் போர்டு அடிச்சு செல்பவனை முதலில் திட்ட நினைக்கிறது, நாம் போலீஸ்காரனாக இருந்தால் அவன் பட்டக்சில் நாலு சாத்து சாத்தி இருப்பேன் என்கிறது மனசு. யாராலும் அவ்வளவு சுலபமாக அடக்க இயலாதது மனசு.

ஒரு மனிதன் இரண்டு வாழ்க்கை தான் வாழ்கிறான், நானும் அப்படித்தான் வாழ்கிறேன், நிறைய தவறுகளை தட்டிக்கேட்டவேண்டும் என்ற மனம் இருந்தாலும் காலமும், சூழ்நிலையும், அடுத்த வேளை சோறும் தான் கண் முன்னே உள்ளது.

தினமும் சாலையில் பயணிக்கும் போது அடுத்தவன் எப்படி போனல் நமக்கு என்ன நாம் சாலை விதிகளை பயன்படுத்துவோம் என்று முடிவெடுத்தாலம், பச்சை லைட் முடிஞ்சு, மஞ்சள் லைட் வரும் போது நாமும் வேகமாக வண்டியை இயக்கி சிக்னலை கடக்கத்தான் செய்கிறோம் இது தவறு என நம் மனதிற்கு 100 சதவீதம் தெரியும் ஆனாலும் லேட்டாக சென்றால் பாதி நாள் சம்பளத்தை கட் செய்திடுவாங்க என்ற பயத்தால் ஓடுகிறோம்.

இன்றைய சமூகத்தில் நடக்கும் அத்தனை சமூக குற்றங்களும் நமக்க தெரியும், அதற்கான தண்டனைகளும் தெரியும், அதற்கான போராட்டங்களும் தெரியும், ஆனால் செயல்படுத்த முடியாது நம்மால் காரணம் நாளைய தேவையும், நமக்கு ஏன் வம்பு என்ற படிப்பனையும்.

சாலையில் நடக்கும் விபத்துக்களை பல ஆயிரம் பேர் பார்த்தாலும், அவர்களுக்கு உதவி செய்ய நிச்சயம் அனைவருக்கும் மனது இருக்கும், ஆனால் உதவுபவர்கள் ஒரு சிலராகத்தான் இருப்பர். உதவாமல் போனவர்களுக்கு மனசு இல்லை என்று நாம் நினைத்தால் நிச்சயம் அது நம் தவறு, அவனின் காலங்களும், அப்போதைய சிந்தனையும் நமக்கு தெரியாது, ஆனால் அவனுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும், இவை அத்தனையும் கடந்து அவன் சாலை விபத்தை நினைக்கும் போது, உதவமுடியவில்லையே என்று அவன் மனம் அன்று அழுதிருக்கும்.

எத்தனையோ ஊழல்களை தினமும் தினசரியில் படிக்கின்றோம், அதைப்பற்றி தீவிரமாக பேசுகிறோம், அதற்கான தீர்வையும், அடுத்து இதில் என்ன நடக்கும் என்பதைப்பற்றி எல்லாம் பேசும் நாம் அதற்கான நமது பங்களிப்பை முயற்சியை எடுப்பதில்லை.

ரேசன் கார்டு வாங்க போகிறோம் போகும் போது லஞ்சம் கொடுக்காம வாங்கிவிட வேண்டும் என்று எண்ணத்தோடு தான் போகிறோம், இன்று போய் நாளை வா, என இரண்டு நாளைக்கு நம்மை அழைக்களிக்கும் போது, பேசாமல் காசை கொடுத்து காரியம் சாதிப்பவர்கள் தான் நாம். கொள்கைப்படி வாழ முடியாது என்பதால் கொள்கையில் சில சமரசங்களை செய்து கொள்கிறோம், நம் கொள்கை தானே, நம்மை யார் கேட்கப்போகிறார்கள் என்ற தைரியம் தான் காரணம். பட் மனசு கொள்கையை மீறிவிட்டோம் என்று ஓரிரு முறை உணர்த்தும் அப்புறம் அதுவும் மறந்து விடும்.

சமரசமே நமது வாழ்க்கையாகிவிட்டது, கொள்கைகள் எல்லாம் தூக்கி குப்பையில் எறியப்பட்டது தான் நம் வாழ்க்கை, இப்படித்தான் நான் நேர்மையாகவும், அனைத்து சட்ட திட்டங்களை அறிந்திருந்தும் அதன் படி வாழ நினைப்பவன் போகும் இடம் குப்பைத்தொட்டியாகத்தான் இருக்கனும். பிழைக்க தெரியாதவனாக இருக்கிறான் என்ற இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டாலும் நம் மனதை சமரசம் செய்து தான் நாம் வாழவேண்டி இருக்கு. மனசாட்சியோடும் அதன்படியும் வாழ்வது நம் சமூகத்திற்கு ஏற்றதல்ல. எப்போதும் புலம்பல்களோடு தான் வாழ்கிறது நம் மனசு...



Wednesday, June 18, 2014

நம்ம ஊரு வண்டி

மாட்டு வண்டி நான் சென்ற முதல் வாகனம் இதுதான். எங்கள் ஊரில் இருந்து பக்கத்து ஊர் திருவிழாவிற்கு முதன் முதலாக 4 மாத குழந்தையாக இருக்கும் போது சென்றேன் பின்னாளில் எனது அம்மா சொன்னதாக ஞாபகம். எனக்கு மட்டுமல்ல 25 ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் வாகனம் மாட்டு வண்டியாகத்தான் இருக்கும். இன்றும் மாட்டு வண்டிகள் அழியவில்லை ஆனால் குறைந்து இருக்கின்றது.
கிராமங்களில் விடாப்பிடியாக இன்னும் சில பேர் மாட்டு வண்டி வைத்து கொண்டு விவசாயம் பார்த்து கொண்டுதான் இருகிறார்கள் .மாட்டு வண்டி ஓட்டுவது ஒரு கலை மாட்டின் சுபாவத்திற்கு ஏற்ப அதை அதட்டி ஓட்டுவார்கள்.
 
எனக்கு சிறுவயதில் இருந்து அதிகம் மாட்டுவண்டியுடன் புழக்கம் உள்ளது. இவ்வண்டியை நெல் சுமக்க, அரைக்க, சந்தைக்கு செல்ல என அனைத்து பொருட்களையும் தூக்கி செல்ல மாட்டு வண்டியைத்தான் பயன்படுத்தினர் ஒரு காலத்தில். இப்போது இதை பயன்படுத்துவது குறைந்தாலும் கிராமத்தில் இதற்கான வரவேற்பு இன்றும் உண்டு.

பழைய திரைப்படங்களில் மாட்டு வண்டியைப்பற்றிய பாடல்களும், மாட்டு வண்டிகளும் அதிகம் இடம் பெற்று இருக்கும் கிராமத்து படம் என்றால் மாட்டு வண்டிக்கு நிச்சயம் இடம் உண்டு. மாட்டு வண்டியைப்பற்றி புகழ் பெற்ற பாடல்கள் நிறைய இருக்கின்றன.

முன்காலத்தில் சரக்கு வாகனமாக மக்கள் பய்னபடுத்தியது மாட்டு வண்டியைத்தான் இவ்வண்டியைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பனின் தாத்தா கூறிய தகவல் இன்னும் நன்றாக இருந்தது. அவர் காலத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் அதிகம் நடக்குமாம் ஊர் ஊராக சென்று மாட்டு வண்டி ஓட்த்தில் நிறைய பரிசுகள் பெற்று இருக்கின்றாராம். மாட்டு வண்டி பந்தயத்திற்கு சென்ற இடத்தில் தான் பந்தயத்தை பார்க்க வந்த அவர் மனைவியையும் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். வண்டிக்கு பெயிண்ட் அடித்து அழகாக பராமரித்து வருகிறாராம் இப்ப பட்டணத்துக்கு குடி வந்தாதால் அதெல்லாம் நினைவுகளோடு சரி என்கிறார்.
இன்றும் பல ஊர்களில் ரேக்ளா ரேஸ் என்ற பெயரில் மாட்டு வண்டி பந்தயங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.
 
அந்த காலத்தில் சுற்றுலா என்றால்  பழனிதான் அதிகம் செல்வார்கள் பழனி செல்லும்போது வீட்டில் உள்ள மாட்டு வண்டியின் மேல் சாக்கு கட்டி விட்டு அதுதான் நிழல் போகும் போது கட்டுச்சோறு செய்து கொண்டு போவோம். வரும் போது விறகு பொறுக்கி சில இடங்களில் கல் வைத்து சாப்பாடு செய்து கொள்வோம். பழனி சென்று வர ஐந்து நாட்கள் ஆகும் இவர் திருப்பதிக்கும், ராமேஸ்வரத்துக்கும் மாட்டு வண்டியிலேயே குடும்பத்துடன் சென்று வந்த காலங்கள் இன்று இல்லை...
 
15 வருடத்திற்கு முன்பு திருமணம் என்றால் எல்லாரும் வண்டி கட்டிக்கொண்டு தான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்வார்கள் அதானால் தான் அக்காலங்களில் 3 நாட்களுக்க திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இப்போது 3 மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது திருமண நிகழ்வுகள்..

மாட்டு வண்டியில் கரும்பு ஏற்றிக்கொண்டு செல்வார்கள் பின்னால் சென்று கரும்பை சத்தம் வராமல் உடைத்து வந்து சாப்பிடுவோம். மாட்டு வண்டியில் இரு மாடுகளை பூட்டி அதை லவகமாக கையில் பிடித்து சின்ன சாட்டையை வைத்து அடித்து மேதுவாக நகரும் போது ஆடி ஆடி செல்லும.பொருட்கள் ஆட்கள் என எல்லோரையும் இழுக்கும் வண்டி நம்ம ஊரு மாட்டுவண்டி..
மாட்டுவண்டியை ஒவ்வொருவரும் அவர்களது வசதிக்கேற்ப வண்டியை அழகு படுத்தி வைத்திருப்பர்.  சிலர் அழகாக கூண்டு அடித்து அதற்கு பெயின் அடித்து வைத்திருப்பர். இன்னும் சிலர் கட்டை வண்டியாகவே வைத்திருப்பர். வைக்கோள் போட்டு அதன் மேல் பெட்சீட் போட்டு மெத்தை போல வடிவமைத்து வைத்துருப்பர் இதை எல்லாம் நின்று பொறுமையாக ரசிக்கத்தோணும்.
இவ்வண்டிகளைப் பொறுத்த வரை ஹய் ஹய் என்று கத்தி சாட்டையில் மெதுவாக ரெண்டு போட்டால் வேகமாக செல்லும். ஹோ ஹோ என்று சத்தமிட்டு கயிரை இறுக்கப்பிடித்தால் அப்படியே நிற்கும். இதற்கு இதுதான் எக்ஸ்லேட்டர், பிரேக் எல்லாம். வண்டி ஓட்டுபவரின் குரல் தான் இதற்கு மிகப்பெரிய பலம் அவரின் குரலுக்கேற்ப நகரும்..
இவை இரண்டும் மாட்டு வண்டிக்கு முக்கிய தேவைகள்...
அச்சாணி: இரவு நேரங்களில் பயனம் முடிந்ததும் வண்டியை லாக் செய்வது போல் மாட்டு வண்டிக்கு வண்டி சக்கரம் கழண்டு விடாமல் தடுக்கும் இரும்பு பட்டை.

நோத்தடி: மாடு வண்டியில் பூட்டபடும் கம்பு. வண்டி சும்மாக இருக்கு பொழுது சீசா மாதிரி விளாயாடலாம்.

இன்றும் ஊருக்கு சென்றால் மாட்டு வண்டியில் செல்ல மனம் அடித்து கொள்ளும். சமீபத்தில் வண்டியில் இருந்து இறங்கி ஒரு 5 நிமிடம் மாட்டு வண்டியில் சென்றேன் ஆடி ஆடி குழியில் இறங்கி செல்லும் போது பின்புறம், முதுகு, கை எல்லாம் வலி எடுத்தது. அந்த வலியும் ஒரு சுகமான கிராமத்து நினைவுகள் தான்....