Thursday, September 6, 2012

மழையும் அவளும்...


மழை நீர் பட்ட
உன்னை அள்ளி
அணைக்கையில்
துள்ளிச்சிரிக்கிறது
மழைச்சாரல்...

000000000000000


உன் கெண்டைக்காலில்
பட்டுச் செல்லும்
மழைநீர் எங்கும்
செல்லாமல் சொக்கி
நிற்கிறது...

000000000000000


நீ மழையில்
நனையும்
போது
வியர்க்கிறது
எனக்கு...

000000000000000

என்னவளின்
முகத்தில்
மழைத்துளி
பட்டு
ஒட்டாத வரை....

மழையை
எனக்கு
ரொம்ப
பிடிக்கும்...

000000000000000




000000000000000

நாளை பார்க்கலாம்
என்கிறான் பால்ய நண்பன்

பிறகு பேசலாம்
என்கிறாள் தோழி

கடித போக்குவரத்தில்
யாரும் இப்ப இல்லை

கோயிலில் பார்த்தால்
கும்பிட்டு போய்டுறான்
நண்பன்

யார் மீதும்
வருத்தம் வைக்க
விரும்பவில்லை

குவிந்து கிடக்கின்றன
மனதில் நட்பும் வரிகளும்

இப்போதைக்கு
நமக்கு நட்பு 
இணையத்தில் மட்டுமே....

12 comments:

  1. குறுஙகவிதைகள் மனதை அள்ளுகின்றன. சிறப்பு.

    ReplyDelete


  2. நறுந் தொகைக்கவிதை நல்ல

    குறுந்தொகை கவிதை

    அருமை!

    ReplyDelete
  3. //யார் மீதும்
    வருத்தம் வைக்க
    விரும்பவில்லை

    குவிந்து கிடக்கின்றன
    மனதில் நட்பும் வரிகளும்

    இப்போதைக்கு
    நமக்கு நட்பு
    இணையத்தில் மட்டுமே.... //


    யதார்த்தம்

    ReplyDelete
  4. காதல் சாரல் அருமை.இன்றைய நட்பையும் அழகாகச் சொன்னீர்கள் சங்கவி !

    ReplyDelete
  5. அருமை அருமை
    நானும் இப்படி அழகாய் எழுதப் பழகவேணும்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சூப்பரு தல... வர வர கவிதையிலயும் கலக்கறீங்க... ம்ம் ரைட்டு..!!

    ReplyDelete
  7. கண்டேன் இன்னொரு அருட்பெருங்கோ! :)

    ReplyDelete
  8. மழைக்கவிதைகள் மழையில் நனைந்தேன்! சிறப்பு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    காசியும் ராமேஸ்வரமும்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
    உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

    ReplyDelete