Tuesday, September 4, 2012

சங்கவியும் சில்க்சுமிதாவும்...


ஒவ்வொருவருக்கும் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒருத்தரை நிச்சயம் பிடித்திருக்கும் அதற்கு திரைநட்சத்திரம் விதிவிலக்கல்ல எனக்கு பிடிச்ச நடிகர், நடிகை என ஒவ்வொருவரும் ஒரு அடையாளப்படுத்துவோம் அப்படி அடையாளப்படுத்தாமல் ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் வெளியே சொல்லாமல் ( சில பேர் சொல்லி இருப்பாங்க) அனைத்து தரப்பினரும் ரசித்த நடிகை சில்க் சுமிதா என்றால் அது மிகையல்ல.

சில்க்சுமிதா என்னுள்ளும் ஒரு காலத்தில் இருந்தார் என்பதை வெளிப்படையாக யாரும் அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த கேள்வியை அவர்களிடம் கேட்டால் அழகான சிரிப்பு தான் பதில் வரும் இது தான் நிதர்சன உண்மையும் கூட..

விஜயலட்சுமி என்ற இயற்பெயரில் அழகிய கண்களும், கட்டுக்குழையாத உடல்வாகும், பார்த்ததும் சுண்டி இழுக்கும் நடையும், போதையான பேச்சுக்கும் சொந்தக்காரி. முதல் படமான வண்டிச்சக்கரத்தில் நடிக்கும் போது சில்க்சுமிதா என்ற பெயரில் அறிமுகமானார். பார்க்க பார்க்க பிடிக்கும் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் பார்த்ததும் பிடித்த நடிகை ஆனார்.

முதல் படத்திற்கு பின் பல படங்கள் கோழிகூவுது, அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம் பிறை, மூன்று முகம், கைதி போன்ற படங்கள் இன்றும் சில்க்கை ஒரு நிமிடம் நின்று பார்க்க வைக்கம் படங்கள்...

இந்த படங்கள் எல்லாம் வரும் போது நான் பிறக்கவில்லை 1990 களின் ஆரம்பத்தில் நான் 8ம் வகுப்பு படிக்கையில் சில்க்கை பற்றி கேள்விப்பட்டு இருக்கேன் ஆனால் படங்களில் பார்த்ததில்லை எங்க ஊர் திரையரங்குகளில் மட்டும் தான் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும், பவானியோ குமராபாளையமோ சென்று ரிலீஸ் படம் பார்க்கும் வாய்ப்பு இல்லை.

தினத்தந்தி வெள்ளி மலரில் வரும் சில்க்கின் படத்தை யாருக்கும் தெரியாமல் கட் செய்து புத்தகத்தில் அட்டை போட்டு இருப்போம் அந்த அட்டைக்குள் படத்தை மறைத்து வைத்து டியூசனில் யாருக்கும் தெரியாமல் குமபலாக உட்கார்ந்து சில்க்கின் போட்டோவை பார்த்தது எத்தனை காலம் ஆனாலும் மறக்காது.

எங்க ஊரு ஓபன் தியேட்டரில் வாரம் வாரம் படம் மாற்றுவார்கள் காலை எழுந்து போஸ்டரை பார்க்கும் போது சில்க்கின் படம் இருந்தால் எப்படியும் அன்று இரவு படத்துக்கு செல்ல வேண்டும் என நண்பர்கள் எல்லாம் முடிவு செய்து வீட்டில் பொய் சொல்லி படத்தை பார்த்துவிடுவோம் எங்கள் ஊர் தியேட்டர் ஒபன் தியேட்டர் மாலை 6 மணி, இரவு 10 மணி என இரண்டு காட்சிகள் தான் இந்த இரண்டில் எப்படியாவது படத்தை பார்த்து அடுத்த நாள் பள்ளி செல்லும்போது பேருந்து நிலையத்திலும், பேருந்திலும் சில்க்கின் புராணமாகத்தான் இருக்கும்..

ஊரில் எங்கள் அண்ணன்கள் எல்லாம் சில்க்கை பற்றி பேசும் போது அப்போது அந்த குறிப்பை எடுத்துக்கொண்டு நண்பர்களிடம் பேசும் போது அப்படியாம், இப்படியாம் என தகவல்களை அள்ளி விடுவோம். எங்களுக்கு சில்க் அறிமுகமாவதற்கு முன்னே எங்க ஊர் அண்ணன்கள் எல்லாம் அவள் பேரைச்சொல்லி கிளுகிளுப்பாக பேசுவதை எல்லாம் கேட்டு இருக்கிறோம் அந்த அளவிற்கு தனது கண்களாலும், பேச்சாலும் கட்டிப்போட்டவள்..

14 வயதில் இருந்து 80 வயது உள்ள வயதானவர்கள் கூட சில்க் படத்தையும், பாட்டையும் ரசித்த காலம் அது ரேடியாவில் சில்க் ஆடும் பாடல்களை போட்டலே அனைவரும் கூடி நின்ற பாட்டு முடிந்த பத்தி நிமிடத்துக்கு சில்க்கின் புராணத்தை பாடுவர்.

இன்றும் திரைப்பட நடன நாட்டிய நிகழ்வில் சகலகலா வல்லவனில் இடம் பெற்ற நேத்து இராத்திரி யம்மா பாடலுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும், மூன்றாம் பிறையில் பொண்மேனி உருகுதே என்ற பாடலும் அப்போது எல்லாம் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் போது இடம் பெறும் அப்போது பெண்கள் முகம் சுளித்தாலும் அந்த சில்க்கின் ஆட்டத்தை ரசிக்கத்தான் செய்தனர் கேட்டால் இல்லை என்பார்கள். ஏன் ஆண்களே ஒத்துக்க மாட்டார்கள்.. அந்த அளவிற்கு அனைவருக்கும் தேவதையாக இருந்தவள் சில்க்.

சில்க்கின் நடிப்பு, நடனம், பேசும் வார்த்தை என ஒவ்வொன்றும் ஒரு ரகம் சிறந்த நடிப்பு என்று சொல்ல முடியாது, நல்ல நளினமான நடனம் என்று சொல்லலாம். அந்த நடனத்தில் கவிழ்ந்தவர்கள் உலகம் எங்கும் என்றும் சொல்லலாம். ஒவ்வொரு படத்திலும் ஒரு நளினமான நடனம்.

அப்போது எல்லாம் நடிகர்களுக்கு கடிதம் போட்டால் அவர்களின் கையொப்பமிட்ட போட்டோவை அனுப்பி வைப்பார்கள். நாங்கள் நண்பர்கள் 5 பேர் சேர்ந்து கடிதம் எழுதினோம் 2 பக்கத்துக்கு போட்டோ வந்தால் ஆளுக்கு ஒரு நாள்வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்துடன் கடிதம் அனுப்பினோம் பதில் இல்லை, இரண்டு மூன்று முறை எழுதியும் அனுமதி இல்லை என்பது தான் அப்போதைய வருத்தம்..

இப்படியாக சில்க்கின் மீதான காதல் அனைவருக்கும் அதிகமான போது எனக்கும் அதிகமானது என்பது தான் எதார்த்தம். சில்க்கின் ஒவ்வொரு படத்தையும் அந்த படத்திற்காக பார்த்தோமோ இல்லையோ சில்க்கிற்காக பார்த்தோம் என்று உண்மையை சொல்ல கடைமைப்பட்டு இருக்கேன்..

1996வாக்கில் 12ம் வகுப்பு படிக்கம் போது காலை செய்திதாளை படிக்கும் போது தான் சில்க் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வந்தது அதுவரை எந்த நடிகைக்கும் கிடைக்காத போட்டோக்களுடன் பத்திரிக்கையில் அந்த மோகப்புன்னகையில் சிரித்துக்கொண்டு இருந்தாள். இறந்தாள் என்ற செய்தியை விட அன்றும் கவர்ச்சி படத்தை வெளியிட்டார்கள் என்பது தான் மறுக்க இயலாத உண்மை.

ஆனால் அன்று நான் மட்டுமல்ல எனது விடுதி அறையில் இருந்த நாங்க யாருமே தூங்கவில்லை, அன்று முழுவதும் மட்டுமல்ல அந்தவாரம் முழுகூதும் சில்க் அப்டேட் செய்திதாளில் மட்டுமல்ல எங்களிடமும் தான்.

அப்போது தான் உணர்ந்தேன் நாம் விரும்பியவர்கள் நம்மை விட்டுச்சென்றால் எப்படி இருக்கும் என்பதை..

சில்க் சுமிதா இருந்திருந்தால் நம்மிடம் இத்தனை இடம் பிடித்து இருப்பாளா என்றால் நிச்சயம் பதில் கூற இயலாது.. இறந்ததால் தான் இன்றளவும் பேசப்படுகிறாள்...

சில்க் இறந்த போது மு.மேத்தா எழுதிய கவிதைகளை படித்த பின்தான் எனக்கு இந்த பதிவு எழுதும் நோக்கமே வந்தது...


அவளுக்கு ஓர் ஆடை 
வாலிப வசந்தங்களின்
திருவிழாத் தேவதையே!
செப்பனிடப் படாத சொப்பனமே!
 
மர்மம் சூழ்ந்த உன்
மரண வாசலில்
என் கவிதை
உனக்கு
மலர் தூவுகிறது!

வறுமையின் கோரப் பிடியிலும்
ஒழுங்காக உன்னால்
உடுத்திக் கொள்ள முடியவில்லை!
வசதியின் வாழ்க்கை படியிலும் ஒழுங்காக உன்னால்
உடுத்திகொள்ள முடியவில்லை!

அணிந்து மகிழ்வதற்காகவே ஆடைகள்..
உன் ஆடைகளின் கதையோ
சோகமானது..
அவை அவிழ்பதற்காகவே…
அணிவிக்கப்பட்டவை..
நடிகை என்று உன்னை
நாடு அழைத்தது!

எங்கள் முன்

ஒரு கேள்வியை
எரிந்தது உன் வாழ்க்கை!
‘ நடிக்காதவர் யார்?’

நீ தாலி கட்டாமல்
வாழ்ந்தது கூடத்
தவறில்லை-ஒரு
வேலி கட்டி
வாழ்ந்திருக்கக் கூடாதா?

யார் யாருக்கோ
அட்சய பாத்திரமாய் இருந்தாய்!
உன்னையே நீ ஏன்
பிச்சைப் பாத்திரமாய்
உணர்ந்தாய்?

கனவுத்தொழிற்சாலையே உன் கைக்குள் இருந்தது!
நீ ஏன் இன்னொருவர் கைக்குள்
இறுகிக் கிடந்தாய்?

நீ
விசிறிகளை நேசித்தாய்..
அதனால் தானாஉன் மரணத்தையும் ஒரு விசிறியிடம்
யாசித்தாய்?

உன் மரணத்துக்காக
என் கவிதை இப்போதுகண்ணீர் சிந்தவில்லை..
பெருமூச்சு விடுகிறது!

இனி
தூக்கத்தில் யாரும் உன்னைத்
தொல்லை செய்ய மாட்டார்கள்…
உன் படுக்கையில்
நெருப்பை யாரும்
பற்ற வைக்க மாட்டார்கள்…

இனி உனக்குகூரிய நகங்களால் கீறும்
இரவுகளும் இல்லை!
கொள்ளிக் கட்டைகளாய்ச் சீறும் பகல்களும் இல்லை!

14 comments:

  1. சில்க் சுமிதா படம் பார்த்ததும் படித்தும் கேள்விபட்டதும் மிகக் குறைவு தான்.... மு மேத்தா வரிகள் அருமை

    ReplyDelete
  2. சில்க் இருந்தபோதும் சரி.. இறந்தபோதும் சரி.. இந்தளவுக்கு அவர் பற்றிய பேச்சுக்கள் வரவில்லை.
    “டர்ட்டி பிக்சர்“ படம் உருவானபிறகு தான் சில்க் பற்றிய இமேஜ் உயர்ந்துள்ளதோ என்று ஒரு டவுட்டு இருக்கு.

    எது எப்டியோ.. பேச்சுக்கள் தரமானதாக இருக்கும்பட்சத்தில் தாராளமாகப் பாராட்டலாம்.

    அனுபவப் பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    (இறந்தும்) வாழ்க சில்க்!!
    வளர்க அவர் ரசிகர்கள்..!!
    :-)

    ReplyDelete
  3. +2 படிக்கும் பொழுது சில்க் நடித்த 'போலிஸ் போலிஸ்' பார்க்கப் போய் இருக்கிறேன், அப்போதெல்லாம் சில்க் மீதான ஆர்வம் கூடுதலாக இருக்கும். நல்ல நடிகை.

    ReplyDelete
  4. சில்க் - இன்னும் அவருடைய கலையுலக இடத்தை எந்த நடிகையாலும் நிரப்பமுடியவில்லை. கவர்ச்சி என்கிற வட்டத்தையும் மீறி அவர் ஒரு சிறந்த குணசித்திர நடிகையும் கூட.. எனக்கும் விரும்பமான நடிகை அவர், அவருக்காக சில்க் சில்க் சில்க் - NOT A DIRTY PICTURE என்ற பதிவை சில மாதங்கள் முன்பு என் வலையில் எழுதியுள்ளேன்.

    நல்ல படைப்பு தோழரே...

    ReplyDelete
  5. சிறந்த பகிர்வு.

    ReplyDelete
  6. //எங்கள் ஊர் தியேட்டர் ஒபன் தியேட்டர் //

    அதென்ன ஓபன் தியேட்டர்?டெண்டு கொட்டகைன்னு சொல்லுங்க!நானும் டெண்டு கொட்டகைக்காரன் தான்:)

    சில்க்கின் நளின நடனம் என்பதை விட நளின உடல் என்பதே சரியாக இருக்கும்.இன்று கவர்ச்சி காட்டும் கதாநாயகிகளுக்கும் கூட அமையாத உடல்வாகு அது!

    இந்திரா சொன்னது போல் டயர்ட்டி பிக்ஸர் டயர்ட்டி பெண்ணைப் பற்றியெல்லாம் பேச வைக்கிறதோ:)

    ReplyDelete
  7. என்னைக் கவர்ந்த நடிகைகளில் இவரும் ஒருவர்! இறந்தபோது அதிர்ச்சியாக இருந்தது! நல்ல பகிர்வு! மேத்தாவின் கவிதை மிகச் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    இன்று என் தளத்தில்
    பழஞ்சோறு! அழகான கிழவி!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

    ReplyDelete
  8. நிஜம்தான் சங்கவி....காலேஜ் நாட்களில் வந்த 'நேத்து ராத்திரி' பாடலுக்கு சில்கிடம் அப்படி ஒரு craze, நாங்கள் பெண்களாக இருந்தபோதிலும் ....
    இறந்த போது நிறைய யோசித்திருக்கிறேன். இப்போது உங்களின் பதிவும் மு மேத்தாவின் கவிதையும் வருத்தப்பட வைத்துவிட்டது....

    ReplyDelete
  9. நல்ல நடிகை.
    வேதனையான முடிவு.

    ReplyDelete
  10. //வெளியே சொல்லாமல் ( சில பேர் சொல்லி இருப்பாங்க) அனைத்து தரப்பினரும் ரசித்த நடிகை சில்க் சுமிதா என்றால் அது மிகையல்ல.//

    சொன்ன சில பேரில் அடியேனும் ஒருவன்! ‘சில்க் ஸ்மிதா’ பற்றி குழுமங்களில் நிறைய எழுதியிருக்கிறேன். ‘ஐயே...சிலுக்கா...?’ என்று முகம் சுளித்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல்...! :-)))

    சில்க் கடித்த ஆப்பிளை ஏலம் போட்ட சங்கதியெல்லாம் நடந்திருக்கு! பிடித்ததோ பிடிக்கலையோ, சில்க் ஸ்மிதா ஒரு Trend Setter என்பதை மறுப்பதற்கில்லை. ( பின்னாளில் நானும் எழுதினாலும் எழுதலாம் சில்க் பற்றி!)

    ReplyDelete
  11. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும்...சில்க்...மர்லின் மன்றோ!

    ReplyDelete
  12. மூன்றாம் பிறை "பொன்மேனி உருகுதே" இன்றும் என் பிடித்தபாடல், சில்க்குக்காக. அலைகள் ஓய்வதில்லை
    சில்கையும் பிடித்து, ஆனால் அவர்மேல் பெரிய ஆர்வம் இருக்கவில்லை.
    அவர் மரணம் வருத்தத்தைத் தந்தது.

    ReplyDelete