Thursday, December 22, 2011

ஈரோடு சங்கமம் சாப்பாடு ஸ்பெஷல் ( குஷ்பு இட்லியும், முட்டை பணியாரமும்)


ஈரோடு மாவட்டம் எப்பவும் விருந்தினர்களை கவனிப்பதிலும், வரவேற்பதிலும் காலம் காலமாக பேர் பெற்றது. வரும் விருந்தினர்களுக்கு விருந்து வைத்து அசத்தி அனுப்புவதில் ஈரோட்டு மக்களுக்கு நிகர் தேடித்தான் பிடிக்கனும். ஈரோட்டை நினைத்தாலே எங்கள் விருந்தும் வரவேற்பும் என்றும் ஞாபகத்திற்கு வரும்.
 இலக்கியவாதி கோபி..

ஒவ்வொரு முறை சங்கமத்திலும் இரவு உணவு அசத்தலாகவே இருக்கும் இந்த முறை இன்னும் அசத்திடவேண்டும் என்று எங்கள் அண்ணன் தாமோதர் சந்துரு அவர்கள் உணவு ஏற்பாட்டில் தனிக்கவனம் எடுத்து அனைத்து அவர் மேற்பார்வையில் நடத்தி அசத்தி விட்டார்...

வீடு திரும்பல் மோகன்குமார்
 கேர்ஆர்பி
ஆரூர் முனா செந்தில்

நான் இந்த முறை நேரத்தில் செல்ல வேண்டும் அங்கு நமக்கு கொடுக்கும் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று எண்ணி 1 மணிக்கெல்லாம் ஈரோடு சென்று விட்டேன் இடையில் மாமாகிட்ட மாட்டி இரவு 8.30 மணிக்குத்தான் மண்டபம் சென்றேன். செல்லும் வழியில் ஜாக்கி போன் எங்கடா இருக்கற நாங்க ஊரைச்சுத்திகிட்டு இருக்கோம் சரியா வழி சொல்லு என்று சொன்னவுடன் அவருக்கு வழிகாட்டி கலெக்டர் ஆபிஸ் பக்கத்தில் வரும் வரை நின்று கொண்டு இருந்தேன் திடீரென ஹேய்ய் என்று சத்தம் காரில் பார்த்தால் மணிஜியும், ஜாக்கியும் அவர்களை அழைத்து கொண்டு மண்டபம் சென்று எல்லாரையும் பார்த்துவிட்டு சாப்பிடச் சென்றோம்...
காவேரி கணேஷ், உண்மைத்தமிழன், அன்பழகன்
 பிரபல பதிவர் நாய் நக்ஸ் நக்கீரன்
 இரவு உணவு குஷ்பு இட்லி, தோசை, ரோஸ்ட், முட்டை தோசை, ஆம்லெட், ஆபாயில், கலக்கி, ஒன்சைடு ஆம்லெட் இதற்கு தேங்காய் சட்னியும், குருமாவும் என்று அசத்தினர் அசத்தி. இரவு உணவின்போதே காலை என்ன உணவு வகை இருக்கும் என்று அனைவரையும் எதிர்பார்க்கவைத்தது..

இரவு உணவு முடிந்து இரவில் வந்தவர்களுக்கு குழுமத்தின் மூலம் தங்கும் வசதி ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டு இருந்தது. அனைவரும் தங்கி காலை நிகழ்ச்சிக்கு புறப்படும் போது என்னைப்பார்த்து கேட்டது என்னய்ய முட்டைல பூரி உண்டா என்றனர் இந்த வருடம் அந்த வேற ஸ்பெசல் என்றேன்.. 

கோகுலத்தில் சூரியன் வெங்கட், கோமாளி செல்வா
 அரவிந்தன், யுவகிருஷ்ணா

 அகநாழிகை வாசுதேவன்
காலை உணவு குஷ்பு இட்லி, வெண்பொங்கல், பூரி, தோசை, முட்டை தோசை, ஆம்லெட், கலக்கி, தேங்காய் சட்னி, சாம்பார், உருளைக்கிழங்கு மசால் என்று ஒரு ரவுண்டிற்கே வயிறில் இடம் இல்லாமல் சாப்பிட்டோம்.. விருந்தினர்களை சாப்பிட வைத்தோம்..

நிகழ்வுகள் நடக்கும் போது மதியம் சாப்பாடு ரெடியாகி இருந்தது நிகழ்ச்சி நடக்கும் போது அனைவருக்கும் பழரசம் கொடுத்து விட்டு மதிய உணவிற்காக தயாராக்கி வைத்தோம்...
மதிய உணவு சைவம், அசைவம் என்று பிரிக்கப்பட்டு உணவு பரிமாறினர். சைவத்தில் தலைவாழை இலை போட்டு வாழக்காய் பஜ்ஜி, முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் பொறியல், காளிபிளவர் சில்லி, சாப்பாடு, சாம்பார், புளிக்குழம்பு, ரசம், தயிர், பாயசம் சாப்பிட்ட முடித்தவுடன் வெற்றிலை பாக்கு..

அசைவ உணவில் விருந்து என்றால் அனைத்து இடங்களிலும் பிரியாணி போடுவார்கள் ஆனால் எங்கள் ஊர் கிடாவிருந்து போல் பிரியாணி இல்லாமல் ஆனால் மறக்க இயலாத ஒரு கிடா விருந்தாக இருந்தது அதன் உணவு வகைகள்..

ஜாக்கி சேகர்
 மணிஜி
தலைவாழை இலையில் வறுத்த மட்டன், சிக்கன் பள்ளிபாளையம், தலைகுடல்கறி, சாதம், சாதத்திற்கு மட்டன் கிரேவி குழம்பு, எழும்புக்குழம்பு, புளிரசம், தயிர், பாயசம் மற்றும் முட்டை பணியாரம்... என அமர்க்களமான விருந்து அனைவரையும் வயிரார சாப்பிடும் வகையில் கலக்கி இருந்தார் அண்ணன் தாமோதர் சந்துரு அவர்கள்..

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நான் பேசிய வார்த்தைகளில் நிச்சயம் இந்த வார்த்தை இடம் பெற்றிருக்கும் அது சாப்டாச்சா அண்ணே... இந்த பதிவை படிக்கும் போது கேக்கிறேன் சாப்ட்டீங்களா அண்ணே...

கடந்த முறை போல் இந்த முறையும் விருந்திலும், நண்பர்களை அழைத்து வந்து வெற்றி விழாவாக இந்த விழாவை சிறப்பாக நடத்திய பெருமை கதிர், ஆருரன், தாமோதர் சந்துரு, பாலாசி, பாஸ்கார்த்தி, லவ்டேல் மேடி, ஜாபர் இவர்களையேச் சாரும் நண்பர்களுக்கு மிக்க நன்றி...

எங்க குழுமத்தில் உள்ள மற்ற நண்பர்கள் என்னையும் சேர்த்து வெளியூரில் இருப்பதால் இவர்கள் உழைப்பில் எங்கள் பங்கு குறைவே...

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் வந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.. 

மீண்டும் அடுத்த முறை சந்திப்போம் இன்னொரு சந்தர்ப்பத்தில். 

அடுத்த நிகழ்வை இன்னும் சிறப்பாக செய்வோம் அதற்கும் அனைவரும் வருக...வருக...

இத்தோடு 2011 ஈரோடு சங்கமம் பதிவுகள் ஓவர்....

இனி அடுத்த  வருசந்தானுங்கோ...

26 comments:

  1. //இனி அடுத்த வருசந்தானுங்கோ//

    ஓ... அடுத்த வருசமும் சங்கமம் நடத்துறமா!!!??? :)))

    ReplyDelete
  2. ம்ம்ம்ம் இப்ப பசிக்குதே..

    ReplyDelete
  3. செம விருந்து :))

    ReplyDelete
  4. விருந்து பதிவு யோவ் பசிக்குதுய்யா!

    ReplyDelete
  5. பாசக்கார புள்ளைங்களின் கவனிப்பை நெகிழ்ச்சியாக பார்க்கின்றேன்.. நன்றி சங்கவி..

    ReplyDelete
  6. நெகிழ்ச்சியான [[பசிக்குதுய்யா]] தொகுப்பு வாழ்த்துக்கள் மக்கா...!!!

    ReplyDelete
  7. இது ஒரு குடும்பத்தின் கல்யாண விருந்து போல கலக்கல் மக்கா...!!!

    ReplyDelete
  8. இந்த ஆண்டு கலந்து கொள்ள இயலவில்லை. அடுத்த வருடம் நிச்சயம் பங்களிப்பு இருக்கும்.

    ReplyDelete
  9. கலக்கல்....அசத்திட்டீங்க....

    ReplyDelete
  10. அருமையான விருந்தோம்பல்,அதென்ன காலை உணவில் கலக்கி, அந்த ரெசிப்பி மட்டும் புரியலை..பகிர்வுக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  11. மிஸ் பண்ணிட்டேனே மாப்ள..
    அடுத்த வருஷம் எப்போ வரும்?

    ReplyDelete
  12. என்ன ஒரு அருமையான விருந்து பொறுங்க கிபோட் நனைந்து விட்டதா எனப் பார்க்கின்றேன்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

    ReplyDelete
  13. திருவள்ளுருக்கு இரண்டு பார்சல்...

    ReplyDelete
  14. @ Asiya Omar.,

    // அதென்ன காலை உணவில் கலக்கி, அந்த ரெசிப்பி மட்டும் புரியலை.. //

    ஆம்லெட் + ஆபாயில் = கலக்கி

    :)

    ReplyDelete
  15. உண்மையிலேயே அருமையான விருந்து, நன்றி சங்கவி

    ReplyDelete
  16. எல்லாமே அருமையான டிஷ்.... சங்கம குழுவுக்கு நன்றி...

    ReplyDelete
  17. [[[{ ஈரோடு கதிர் } at: December 22, 2011 10:08 PM said...

    //இனி அடுத்த வருசந்தானுங்கோ//

    ஓ... அடுத்த வருசமும் சங்கமம் நடத்துறமா!!!??? :)))]]]

    கவலை வேண்டாம் கதிர். அடுத்த வருடம் தமிழகத்தின் அனைத்து பதிவர் குழுமங்களும் இணைந்து ஒரு ஒன்றுகூடலை நடத்துவோம்..!

    அதற்கான வழிகாட்டி நீங்கள்தான். இந்த நிகழ்ச்சிதான்..! நன்றிகள் கோடி..!

    ReplyDelete
  18. இந்த வருசம் மிஸ் பண்ணிட்டேன்.அ அடுத்த வருசம் கண்டிபாய் வருவேன்

    ReplyDelete
  19. Nanri.....
    Sangavi....
    Thangal....
    Anbukku....

    Nanri...nanri
    nanri.....nanri....

    Thangal kuzhvinar anaivarukkum..........

    ReplyDelete
  20. ஜாக்கி அண்ணனுக்கு அருகில் அமர்ந்து ரவுண்டு கட்டுவது உங்கள் சேலம் தேவா என்பதை பெருமையுடன் கூறிக் கொல்கிறேன். :)

    ReplyDelete
  21. ஹப்பா.... இந்த பதிவுக்காகதான் காத்திருந்தேன். உங்க கடமைய சரியா செஞ்சு இந்த வருஷமும் எல்லாருக்கும் பதிவு போட்டு பசிக்க வெச்சுட்டீங்க. வெரி குட்.

    ReplyDelete
  22. இத்தோடு 2011 ஈரோடு சங்கமம் பதிவுகள் ஓவர்....///

    ரொம்ப சந்தோசம் ஹிஹி:)

    ReplyDelete
  23. இனிமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  24. இனிய கிறிஸ்துமஸ் மற்றும்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  25. அருமை....யான...சாப்பாடு...அன்பான உபசரிப்பு..மிக்க நன்றிங்க சங்கவி...உங்களின் நட்புக்கு தலைவணங்குகிறேன்..அடுத்த வருடம் எங்களையும் இணைப்பீர்கள்தானே...

    ReplyDelete