Monday, December 12, 2011

ஈரோடு சங்கமத்தில் முட்டையில் பூரி ( உணவு ஸ்பெஷல்)


ஈரோடு மாவட்டம் எப்பவும் விருந்தினர்களை கவனிப்பதிலும், வரவேற்பதிலும் காலம் காலமாக பேர் பெற்றது. வரும் விருந்தினர்களுக்கு விருந்து வைத்து அசத்தி அனுப்புவதில் ஈரோட்டு மக்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

கடந்த 2009  சங்கமத்தில் வந்திருந்த விருந்தினர்களை இரவு உணவில் அசத்தியிருந்தோம். இதைப்பற்றி கடந்த முறை வந்திருந்த அனைத்து பதிவர்களும் அவர்களது பதிவில் குறிப்பிட்டு இருந்தனர். இம்முறை அதை விட அசத்த வேண்டும் என முடிவு செய்தோம். 

எங்கள் ஊரில் கிடா விருந்துக்கு என்று தனி அடையாளம் உண்டு. கிடா விருந்து போல மதிய உணவை ஏற்பாடு செய்து அசத்தி விடலாம் என சொல்லவும் உடனே தாமோதர் அண்ணன் வீட்டு விசேஷங்களுக்கு சமைக்கும் பரமு என்ற சமையல்காரரை அறிமுகம் செய்து ஏற்பாடும் செய்தார்.

முதலில் இரவில் வரும் பதிவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தோம் இரவு வந்த பதிவர்களில் என் பங்காளி பிரபாகர், கார்த்திகை பாண்டியன், ஸ்ரீ, கும்க்கி, எழில் மற்றும் ஈரோடு குழும உறுப்பினர்கள் தான் இருந்தோம் நான் கடைசியாகத்தான் வந்தேன் உள்ளே வரும் போதே அரூரன் ஒரு தட்டு நிறைய ஆம்லெட் உடன் வந்தார். தாமோதர் சந்துரு அண்ணாவிடம் என்ன சிறப்பு உணவு இரவுக்கு என்றேன் இரவு முட்டை என்றார். 

முட்டை தோசை, ஆம்லெட், கலக்கி, ஆப்பாயில் என்று வரிசையாக வந்தது.  இரவு உணவிற்கு இட்லிக்கு சிக்கென் குழம்பு வைத்திருந்தார் பாருங்க சட்டினியுடன் சேர்த்து சாப்பிட்டாலும் அதன் சுவை தனி (இரவு வராத பதிவர்கள் ரொம்ப மிஸ் பன்னீட்டீங்க).
 
 
தாமோதர் அண்ணனிடம் என் பங்காளி பிரபாகர் அண்ணா காலை என்ன சிறப்பு என கேட்க முட்டை பூரி என்றார் என்னது முட்டை பூரியா என்று எல்லோரும் வாயைப் பிழந்தோம். காலைல மட்டுமல்ல மதியம் வந்து சாப்பிட்டு பாருங்க அப்புறம் பேசுவோம் என்றார்.

இரவு நானும், பங்காளியும் அதைப்பற்றி  ஒரு சிறு விவாதமே நடத்தினோம். காலை எங்க அடுத்த பங்காளி அண்ணன் ஜாக்கி வந்தார். நான் பிரபாகர், ஜாக்கி, கார்த்திகை பாண்டியன், ஆர்.கே சரவணன் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் இரவு உணவைப்பற்றியும், முட்டை பூரியைப்பற்றியும் சொன்னேன் கார்த்திகை பாண்டியன் நீங்க சொல்றத பார்த்தா இப்பவே பசிக்குதுங்க என்றார். ஜாக்கியோ என்னடா சொல்ற முட்டைல பூரியா வந்து பார்க்கிறேன் என்றார்.

காலை உணவு இட்லி, தோசை, பூரி, முட்டை பூரி அதற்கு தக்காளி குருமா,  தேங்காய் சட்னி, உருளைக்கிழங்கு மசால் என அசத்தினர். பூரில முட்டைய பார்த்ததும் எனக்கு எப்படி சாப்பிடவது என்று தெரியவில்லை. வழக்கமாக ஆப்பாயில் சாப்பிடற மாதிரி சாப்பிட்டு அசிங்கப்பட்டேன் ஆனால் எம் பங்காளி பிரபாகர் தாமோதர் அண்ணனை கூப்பிட்டு எப்படி அண்ணா சாப்பிடுவது என கேட்க சூப்பரா சொன்னார் பூரி, முட்டை மேல மசால் ஊற்றி மூன்று சுவையையும் ஒன்றாக சாப்பிடு என்றார். பிரபா சாப்பிட்டு விட்டு அருமையான சுவை என்றார். 

ஜாக்கி காலைல அடிச்ச கமெண்ட் பாசக்காற பயலுக காலைல சாப்பாடே அசத்திட்டீங்க மதியம் எதிர் பார்க்கிறேன் என்றார்.
 
 
மதியம் ஈரோட்டு மண்ணிற்கே உரித்தான தலைவாழை இலையுடன் கிடா விருந்து சாப்பாடு.   மட்டன் வறுவல் கொஞ்சம் கிரேவியுடன், ஒரு கால்கிலோ வைத்தார், அடுத்து பள்ளிபாயைம் சிக்கன் ஒரு கால்கிலோ, தக்காளி முட்டை , தலைக்கறியும் குடலும் வைத்தனர் கடைசியாக கொஞ்சம் சாப்பாடு, சாப்பாட்டுக்கு கறியும் கிரேவியும் கலந்த குழம்பு, எழும்புக் குழம்பு, ரசம், தயிர் எந்த ஓட்டலிலும் கிடைக்காத ஓர் திருப்தியான சாப்பாடு. சாப்பிட்டதும் ஜாக்கி டேய் வாழ்க்கையில் மறக்க முடியாத சாப்பாடு அசத்தீட்டீங்க என்றார்.
இந்த அற்புதமான உணவிக்கு பின் நிறைய நண்பர்களின் உழைப்பு இருக்கிறது காலை 4 மணிக்கே சென்று ஜாபரும், கார்த்தியும் கறி எடுத்து வந்தனர். அண்ணன் தாமோதர் சந்துரு வெங்காயத்தை தூக்கிட்டு அங்கே இங்கே என்று பறக்கிறார் ஆருரன் ஒவ்வொருவராக உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டு கேட்டு பறிமாறுகிறார். கதிர் கறியை இரத்தம் சொட்ட சொட்ட இரண்டாவது மாடிக்கு தூக்கி செல்கிறார். இவர்களின் உழைப்பே இன்று அனைவரும் பாராட்டு வகையில் உணவு அமைந்ததற்கு முக்கிய காரணம்..

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் எதை மறந்தாலும் நிச்சயம் சாப்பாட்டை மறக்க முடியாது என்று கூறினால் மிகையாகது..
 
இது ஒரு மீள் பதிவு.... 
 
இந்த நிகழ்ச்சி நடந்தது 2010 ல், இந்த வருடம் நிச்சயமா சூப்பரான மதிய விருந்து அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் நிச்சயம் வாழ்வில் ஈரோடு சங்கமம் மறக்க முடியாத வகையில் விருந்து இருக்கும்..

கடந்தமுறை வரமுடியாதவர்கள் எல்லாம் இந்த முறை வாங்க வாங்க நிறைய ஸ்பெசல் காத்திருக்கு....
 
ஈரோடு சங்கமம் 2011
 
 

நாள்:  18.12.2011 ஞாயிறு

இடம் : ரோட்டரி சி.டி ஹால், பழையபாளையம், ஈரோடு.
 
சங்கமத்திற்கு வரும் நண்பர்கள் மிக முக்கியமாக தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். தாங்கள் பெயர் பதிவு செய்வதன் மூலம் உணவு மற்றும் விழா ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும் மறக்காமல் முன்பதிவு செய்யுங்கள்.... முன்பதிவு செய்யுங்கள்...

நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 
தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.

மேலும் விபரங்களுக்கு
தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி   (செயலர்) 90037-05598,
கார்த்திக்
  (பொருளர்)  97881-33555,
ஆரூரன்
- 98947-17185 ,
கதிர்
– 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர்
- 98658-39393,
ராஜாஜெய்சிங்
- 95785-88925,
சங்கவி – 9843060707


13 comments:

  1. adada arumayana padhivu thozha indha padhiva padichadhuku apram sappatta mis pandromo illaya nammoda nanbargala mis pandromonu thonudhu mudindhal nichayam nanum varuven.......

    ReplyDelete
  2. படத்தையெல்லாம் போட்டு அசத்திடீங்க. சாதம் பரிமாறும் அண்ணனின் சேவைக்கு ஒரு எல்லையே இல்லையா?

    ReplyDelete
  3. ஈரோட்டுக்கு இன்னொரு பெருமையும் உண்டு... அது புரட்சி... சீக்கிரம் பதிவர்களுக்கான சங்கம் ஆரம்பிக்க ஏதாவது முன்முயற்சி எடுங்கள் என்று கோரிக்கையாக வைக்கிறேன்

    ReplyDelete
  4. பழைய பதிவையும் படங்களையும் போட்டு பசி, ஆர்வத்தை கிளப்பி விட்டு விட்டீர்கள்....!

    ReplyDelete
  5. முட்டை பூரி படம் என்னோடது. என்னைக் கேக்காம உங்க பதிவில போட்டதால எனக்கு 10 முட்டை பூரி வரும் பதிவர் சந்திப்பில் கொடுத்துவிடவேண்டும்.

    ReplyDelete
  6. நல்ல விருந்தோம்பலுக்கு இன்னொரு முறை கட்டியம் கூற போகிறீர்கள்..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இந்த முறை இன்னும் கலக்கிடலாம் சங்கவி. சும்மா அதிரனும்ல.

    ReplyDelete
  8. Koottam sirappaga nadaipera manamaarntha vaalthukkal.

    TM 4.

    ReplyDelete
  9. இன்னும் ஜாஸ்தியா எதிர்பார்க்கிறோம்..

    ReplyDelete