Thursday, March 31, 2011

அஞ்சறைப்பெட்டி 31.03.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
உலககோப்பையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு நுழைந்தது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்திய வீரர்களின் நிறையவான ஆட்டத்தால் பாகிஸ்தானை வென்றது 100 கோடி ரசிகர்களின் தாகம் தீர்ந்தது.

இந்திய அணி பந்து வீச்சை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும். நமது வீரர்களின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தால் அடுத்த உலக கோப்பையும் நமக்கே...

பங்காளி பாகிஸ்தானை வென்றது மகிழ்ச்சி என்றால் தமிழனின் எதிரி சிங்கள காடையர்களை வெல்வது தான் தமிழர்களுக்கெல்லாம் உலககோப்பை...

ஒரு வேளை இறுதிப்போட்டியை காண கொடுங்கோலன் ராசபக்சேவையும் அழைக்க வாய்பிருக்கிறது. வரட்டும் வந்து அவர்கள் தோல்வியை பார்த்துவிட்டு செல்லட்டும்.
...............................................................................................


விஜயகாந்த் தனது வேட்பாளரை அடித்தது தான் இன்று நம் ஊரில் மிக முக்கியமான செய்தி.  மற்ற தலைவர்கள் எல்லாம் வீட்டுக்குள் கூட்டி சென்று உதைக்கின்றனர் இவர் மக்கள் முன் உதைக்கிறார்.  அவர் ஒரு பேட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும் என் வேட்பாளர் தப்பு செய்தால் அதை என் முன் கொண்டு வந்தால் இன்று போல் அப்போது தாக்குவேன் என்றால் நிச்சயம் விஜயகாந்தின் அடி உதையை வரவேற்கிறேன்.

ஆனால் விஜயகாந்த் பிரச்சாரத்தின் போது பேசுவது தாகசாந்தி அருந்தி விட்டு பேசுவது போல் உள்ளது. ஒரு வேளை வடிவேல் சொன்னது உண்மையா இருக்குமோ????

...............................................................................................

தமிழகமெங்கும் குஷ்புவைக்காண கூட்டம் அலை மோதுகிறது ஆனால் குஷ்புவின் பேச்சில் அனல் இல்லை. இன்னும் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் அவர் மக்கள் முன் பேச...
........................................................................................................

திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு இலவச அறிவிப்புகள் அறிவித்தாலும் இலவசங்கள் தவிர்த்து இரு தேர்தல் அறிக்கையும் படித்தோமானால் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நிறைய தேவையான, அடிப்படையான திட்டங்கள் உள்ளன.

இதில் அனைவரையும் கவர்ந்தது கேபிளுக்கு மானிய விலை, மானிய விலையில் சூரிய சக்தி மின்சாரம் மிக வரவேற்கக்கூடியது மற்றும் கழிவில் இருந்து மின்சாரம் தயாரித்தல் போன்ற திட்டங்கள்.

........................................................................................................

தேர்தல் கமிஷன் நீதி மன்றத்தில் முறையிடும் போது போலீசார் வாகனத்தில் பணத்தை கொண்டு செல்கின்றனர் இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்று கூறி உள்ளனர்.
தேர்தல் ஆனையர் அந்த போலீசார் யார் என்று பொதுமக்களிடம் காட்டி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
நாட்டு நடப்பு
தமிழகத்தில் தேர்தல் சூடுபிடிக்கும் அதே வேளையில் தேர்தல் கமிஷனின் நடவடிக்கையும் சூடு பிடிக்கிறது. ஊரில் உள்ள சுவர்கள் எல்லாம் பளிச், ஒரு கொடி இல்லை, ப்ளக்ஸ் பேனர் இல்லை, போஸ்டர் இல்லை என தேர்தல் கமிஷன் தன் அதிரடியால் மக்களிடம் மிக நல்ல பெயர் கிடைத்துள்ளது.

தேர்தல் கமிஷனின் நடவடிக்ககையின் பாதிப்பை தினமும் கலைஞரின் பேச்சில் தருகிறது. தினம் ஒரு நடவடிக்கை எடுத்து அனைவரும் சபாஷ் போடும் நிலையில் இருக்கிறது அவர்களின் நடவடிக்கை.
தகவல்

இங்கிலாந்தில் உள்ள பார்க் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை விரிவாக்கம் செய்ய அங்கு மண்ணை தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித உடலின் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. மண்டை ஓட்டின் மேற்புறத்தில் உள்ள மிருதுவான சதைப் பகுதிகள் அனைத்தும் மக்கி மண்ணாகி இருந்தன.

ஆனால் மூளை மட்டும் அப்படியே இருந்தது. மஞ்சள் நிறத்தில் சுருங்கி கிடந்தது. இந்த மூளை கடந்த 2500 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மனித உடலுக்குறியது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதே வேளையில், இவ்வளவு மிக நீண்ட காலமாக மூளை எவ்வாறு கெட்டுப்போகாமல் இருந்தது என விஞ்ஞானிகள் குழம்பி போய் உள்ளனர். அது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி யின் வாழ்க்கை வரலாறு, அவரின் புகைப்படங்கள், பேச்சுக்கள், அவர் புத்தகங்கள் என சிலம்புச்செல்வரை பற்றி அனைத்து தகவலையும் வருங்கால சந்ததியினருக்கு அறியும் வண்ணம் இந்த வலைப்பதிவு உருவாக்கப்ட்டுள்ளது. மபொசி பற்றி தகவல் அறிய இத்தளம் மிகவும் பயன்படும். மபொசி என்னும் மா மனிதரை அனைவரும் அறிய வேண்டும். இவ் வலைப்பதிவை உருவாக்கியர் மபொசியின் பேத்தியும் முனைவருமான பரமேஸ்வரி ஆவார்.
http://maposi.blogspot.com/

தத்துவம்
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.

Tuesday, March 29, 2011

சாப்ட்வேர் இன்ஜினியர் மேனேஜரிடம் கேட்க விரும்பும் 10 கேள்விகள்..


1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க… ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது…?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க… ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..? 

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க… அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா…

6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க…?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க…?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க…?

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க…?

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct,gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don’t use company resources for your personal workனு சொல்றீங்க…?

ஏன் சார் ஏன்….
இத்த தான்…
திருக்குறள்ள
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்…
ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.

இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.....


நன்றி : இதை என் மெயிலுக்கு பார்வேடு செய்த நண்பர்களுக்கு..........

Friday, March 25, 2011

சாப்ட்வேர் இன்ஜினியரை விட அதிக வருமானம் யாருக்கு?


தமிழகத்தின் அதிக கூட்டமும், அதிக வருமானம் உள்ள கடை எது என்றால் டாஸ்மார்க் என்பது அனைவரும் அறிந்ததே. டாஸ்மார்க் பற்றி நிறைய செய்திகள்  வருகின்றன வருமானம் அதிகம் இருந்தால் அதைப்பற்றியான கிசுகிசுக்கள் வருவது என்பது இயற்கையே. டாஸ்மார்க்கால் அரசுக்கு மட்டுமே அதிக இலாபம் என்று இருந்தால் அது தவறு என்பதை அனுபவத்தால் உணர்ந்தேன்.

இன்றைய இணைய உலகில் படித்து முடித்ததும் உடனே வேலைக்கு சென்று அதிக சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலில் சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு உண்டு. சாப்ட்வேர் என்றாலே அனைவரும் மெச்சுவர் அந்த அளவிற்கு ஐடி சம்பளத்தை கொடுக்கிறது என்றால் அது மிகையாகது. இவர்களை மிஞ்சும் அளவிற்கு சம்பாரிப்பவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் யார் என்று பார்ப்போம்....

நேற்று டாஸ்மார்க் சென்றேன் ஒரு பீர் வாங்கினேன் பீரின் விலை 75 தான் பாட்டிலில் குறிப்பிட்டு இருந்தது ஆனால் பணியாளர் 80 ரூபாய் வாங்கினார். 75 தானே இங்கே குறிப்பிட்டு இருக்கிறது என்றேன் கரண்ட் சார்ஜ் கட்டனும் பிரிட்ஜ் வாங்கினதுக்கு பணம் கட்டனும் இது தான் விலை இஷ்டமா இருந்தா வாங்கு சார் இல்லைனா விடுங்க சார் என்றார். சரி கொடுங்க சார் என்று நின்றேன்.

அப்போது அருகில் ஒருவர் எம்.சி 4 குவாட்டர் கொடு என்றார். சார் எம்சி இல்ல ஹனிபி தான் இருக்குது வாங்கிக்கு என்றார். சார் 4 குவாட்டர் இங்க குடிக்கறீங்களா இல்ல பார்சலா ? பார்சலுக்கு அனுமதி இல்ல சார் என்றதும் அவர் இங்க தாம்ப்ப குடிக்கிறேன். பார்சலுக்கு அனுமதி இல்லை என்று விதிமுறை எல்லாம் அழகா சொல்ற தம்பி சரக்கு வாங்கினா பில் போட்டு கொடுக்கனும் என்று ஒரு விதிமுறை போட்டாங்களே ஏன் அதை ஏம்பா செயல்படுத்துதில்லை நானே பதில் சொல்றேன் ஏன் என்றல் குவாட்டருக்கு 1 அல்லது 2 ரூபாய் அதிகம் வைத்து விக்கறீங்க அதனால தான் பில் தருவதில்லை என்றதும் விற்பனையாளர் வாயடைத்து நின்றார்.

அதற்குப்பின் தான் சாப்பிடும் போது அங்க பணியாற்றும் சிறுவனை கூப்பிட்டு ஏத் தம்பி இங்க ஒரு நாளைக்கு எத்தனை பீர் விற்கும் ?

1000க்கும் மேல விற்கும் சார் !!

குவாட்டர் ?

எப்படியும் 2000க்கும் பக்கமா விற்குமுங்க !!

அப்படியா சரிப்பா என்று யோசித்தேன் அதிர்ந்தேன்...

ஒரு பீருக்கு 5 ரூபாய் அதிகம் என்றால் 1000க்கு 5000 ரூபாய் ஆச்சு

ஒரு குவாட்டருக்கு 2 ரூபாய் என்றால் 4000 ரூபாய் ஆச்சு

ஒரு நாளைக்கு 9000 ரூபாயா கரண்ட் பில் வரும், ஆக பணியாளர்களுக்கு ஒரு நாள் வருமானம் 9000 ரூபாய்.

டாஸ்மார்க் கடைகளில் தினம் பணிபுரிவது ஒரு விற்பனையாளர், ஒரு சூப்பர்வைசர் என இரண்டு பேர் எப்படி இந்த பணத்த பிரிச்சுக்குவாங்க என்று டாஸ்மார்க் நண்பரிடம் விசாரித்தேன் இருவரும் பாதிக்கு பாதி பிரித்து கொள்வார்கள் ஆனால் நீ சொல்லும் அளவிற்கு எல்லா கடைகளிலும் விற்காது குறைந்தபட்சம் ஒருவருக்கு தினம் 2000 கிடைக்கும் என்றார்.

குறைந்த பட்சம் 2000 என்றால் சூப்பர் வைசர் தினம் வரவேண்டும் அவர் வருமானம் மாதம் 60000, 15 நாள் வரும் விற்பனையாளர் வருமானம் 30000 ஆயிரம்.

இப்ப சொல்லுங்க சாப்ட்வேர்ரா ? டாஸ்மார்க்கா ?

சில கேள்விகள்
டாஸ்மார்க் பணியாளர் எல்லாம் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அனைவரும் வேலைக்கு செல்லமாட்டோம் என போராட்டம் நடத்தினார்கள் அரசு வேலைக்கு வரவில்லை என்றால் வேலையை விட்டு தூக்கிவிடுவோம் என்றதும் 95 சதவீத பணியாளர்கள் வேலைக்கு சென்று விட்டார்கள் இப்பதான புரியுது ஏன்? என்று???

பாட்டிலுக்கு 2 அதிகமா விற்கும் போதே இவ்வளவு வருமானம் இது போலி மதுப்பாட்டில், பாட்டில் மூடிய கழட்டி சரக்க மாத்திவிடுகிறார்கள் என்று நிறைய செய்திகள் வேறு வருது அப்ப அதுல எவ்வளவு இலாபம்???

ஒரு புல் பாட்டிலை எடுத்து கட்டிங் ஊற்றுகின்றனர் இது சரியான அளவில் இல்லை என்று ஆரம்பத்தில் இருந்து பிரச்சனை இருந்து வருகிறது... இதுல வரும் வருமானம் எவ்வளவு??

டாஸ்மார்க்கு அரசை மட்டும் வாழவைக்கவில்லை அங்கு இருக்கும் சுக போகமாக வாழ வைக்குது....

Thursday, March 24, 2011

உங்க வேட்பாளரின் பின்னனியை தெரிஞ்சிக்கலாம் வாங்க...


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் பொது மக்கள் பெற தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன், தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள், சொத்து விவரம் ஆகியவற்றைத் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில், தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ஜனநாயக மாற்றங்களுக்கான சங்கத்தினர் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டனர்.
இதன்படி, 2006 -ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 77  பேர் மீது மொத்தம் 176 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இதில் கட்சி வாரியாக உறுப்பினர்கள் விவரம்: 
திமுக: 39, 
 பாமக: 15, 
 காங்கிரஸ்: 9, 
 அதிமுக: 8,  
மதிமுக: 2, 
 இந்திய கம்யூனிஸ்ட்: 2.

2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 57 பேர் கோடீஸ்வரர்கள்.

 

சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான மார்ச் 30-ம் தேதியில் இருந்தே வாக்காளர்கள், தங்கள் பகுதி வேட்பாளர்களின் பின்னணி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர்கள் தங்களது செல்போனில் இருந்து தங்கள் பகுதி அஞ்சல் பின் கோடு எண் (உதாரணமாக தியாகராய நகர் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களாக இருந்தால் 600017) எனக் குறிப்பிட்டு 56070 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
 
இவ்வாறு அனுப்பினால், அந்தத் தொகுதி வேட்பாளர்களின் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் விவரம், அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்கள் அவரவர் செல்போன்களுக்கே அனுப்பப்படும் என ""ஜனநாயக மாற்றங்களுக்கான சங்க'' நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர்.
http://adiraiexpress.blogspot.com/2011/03/blog-post_11.html

அஞ்சறைப்பெட்டி 24.03.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கூட்டணி முடிவாகி இனி அனைத்து கட்சியினரும் வேட்பு மனு தாக்கல் பிரச்சாரம் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் வருவார்கள் இன்று பார்த்தால் தான் உண்டு அப்புறம் இனி அவர்களை அடுத்த 5 வருடத்துக்கு பார்க்க முடியாது அதனால் வருபவர்களை காபிதண்ணி கொடுத்து கவனியுங்கள்...

...............................................................................................

திமுக, அதிமுக இரண்டு அணிகளும் எண்ணற்ற இலவசங்களை அள்ளித் தெளித்துள்னர்.. பார்த்து மக்களே கொஞ்சம் சூதனமாக நடந்துக்குங்க....

...............................................................................................

இணைத்தளங்களில் உள்ள ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து செல்போன்களில் எம்.எம்.எஸ். ஆக அனுப்பும் அநாகரீகம் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. திரைமறைவு செக்ஸ் காட்சிகளை வக்ரபுத்தி கொண்ட பலர் பெண்களுக்கு அனுப்பி தொல்லை கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

ஆபாச எம்.எம்.எஸ். அனுப்பி முதல் தடவை சிக்குபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வேண்டும். அதே நபர் மீண்டும் ஆபாச எம்.எம்.எஸ். அனுப்பினால் ரூ.5 லட்சம் வரை அபராதமும், அதிகபட்சமாக 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

........................................................................................................

பழம்பெரும் ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. எலிசபெத் கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார்.

2 மாதங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று திடீரென்று உடல் நிலை மோசமானது. சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அவருடைய 4 குழந்தைகளும் அருகில் இருந்தனர்.

நாட்டு நடப்பு
நாட்டு மக்கள் அனைவரும் யாருக்கு வாக்களிக்கலாம் என்று இரு கழகங்களின் தேர்தல் அறிக்கையை விவாதித்தபடி உள்ளனர். யாருக்கு வாக்களிப்பாங்களே மே 13 அன்னிக்குத்தான் தெரியும்...


எல்லா ஊர்களிலும் இனி பிரச்சாரம் எப்படி இருக்கிறது யார் என்ன பேசப்போகிறார்கள் என்ன புது இலவசம் தரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எண்ணம் அதிகமாகியுள்ளது.
தகவல்


ஜப்பானில் உள்ள இயோடோ பல்கலைக் கழகத்தில் உள்ள ஷிகா குழந்தைகள் மற்றும் மருத்துவ மையத்தை சேர்ந்த குழந்தைகள் சிகிச்சை நிபுணர் தகாஷி குசுனோகி தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.
7 வயது முதல் 15 வயது வரையிலான 13 ஆயிரம் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. அவர்களில் ஒரு பெற்றோருக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு அடுத்தபடியாக பிறக்கும் குழந்தைகளை விட அதிக அளவில் அலர்ஜி நோய் பாதிக்கும் என தெரியவந்தது.
இவர்களுக்கு ஆஸ்துமா, கண் வலி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் உணவு பொருட்களால் ஏற்படும் அலர்ஜி நோய்கள் உண்டாகும் என்றும் கூறியுள்ளனர். இது அமெரிக்க அலர்ஜி அகாடமியில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் அன்பு செய்வோம் என்று பெயரிட்டு கோவையைச் சேர்ந்த ஜீவன்சிவம் என்பவர் எழுதி வருகிறார். தேர்தலைப்பற்றி அதிரடியாக பல பதிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார். ரசிக்க கூடிய யோசிக்கக்கூடிய வரிகள்...

http://nanbansuresh.blogspot.com/

தத்துவம்
”காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்பதோடு சரி....

நேற்றைய பொழுதும் நிஜமில்லை
நாளைய பொழுதும் நிச்சயமில்லை
இன்றைக்கு மட்டுமே நம் கையில்

........................................................................................................

டிஸ்கி  இனி தேர்தல் முடியும் வரை கும்தலக்கா என்று எல்லாரையும் போட்டுத்தாக்கி எழுதலாம் என்று உள்ளேன்..

இந்த வார அலுவல் வேலை பளு காரணமாக அஞ்சறைப்பெட்டியில் தகவல்கள் குறைவாக இருக்கும் வரும் வாரங்களில் தகவல்களை அதிகரிக்க முயலுகிறேன்...

அதிமுக தேர்தல் அறிக்கை


திருச்சியின் இன்று அதிமுகவின் பொதுச்செயலார் ஜெயலலிதா அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் விவரம்


1. அனைவருக்கும் மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

2. பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும்

3. கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும்.

4. சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும்.

5. அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும்.

6. 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

7. கேபிள் டி.வி., அரசுடைமையாக ஆக்கப்படும். இத்தொழிலில் இருக்கும் ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் இலவச கேபிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும்.

8. இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன இலவசமாக வழங்கப்படும்.

9. நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும்.

10. ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும்.

11. மகளிருக்கு பேறுகால உதவித்தொகை‌யாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும்

12. அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு ஆறு மாத காலமாக நீட்டிக்கப்படும்.

13. 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்.

14.திருமண உதவித் தொகை ரூ. 25,000 வழங்கப்படும்.

15. 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.

16. கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2500 ஆக உயர்த்தப்படுகிறது

17. வீடு, தொழில், விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும்.

18. மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும்.

19. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.

20. 6 கிராமங்களில் 60 ஆயிரம் பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.

மேலும்....

- கிராமப்புற தெரு விளக்களுக்கு சூரிய மின்சாரம்

- மீனவர் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.

- மீனவர்கள் நலனுக்காக கப்பல் பூங்கா அமைக்கப்படும்.

- மீனவர் குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.

- தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படும். அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும்.

- சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். 25 சதவீதம் மானியமாக அளிக்கப்படும்.

- இலங்கை அகதிகள் அனைவரும் தமிழகத்திலேயே கெளரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.

- இளநிலை அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ. 50,000 உதவித்தொகை

- தமிழக நதிகளை நீர்வழிச்சாலைகள் மூலம் இணைக்க நடவடிக்கை

- 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் இயங்கும் தொலை மருத்துவ மையங்கள்

- அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்

- மின் திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்ட படை அமைக்கப்படும்.

- விவசாயிகளைப் பங்குதாரர்களைக் கொண்ட விவசாய நிறுவனங்கள் தொடங்கப்படும்.

- அனைத்து விவசாயிகளுக்கும் இலவச சொட்டு நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும்.

- திரைப்படத் துறையில் உள்ள பிரச்சினைகள் ஆராய்ந்து சரி செய்யப்படும்.

- கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் நலன்கள் காக்கப்படும்.

Wednesday, March 23, 2011

காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு


தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று அறிவித்தனர் அவர்கள் விவரம் வருமாறு...


1. திருத்தணி - சதாசிவலிங்கம்
2. ஆவடி - தாமோதரன்
3. திரு.வி.க.நகர் - டாக்டர் நடேசன்
4. ராயபுரம் - ஆர்.மனோ
5. தி.நகர் - டாக்டர் செல்லக்குமார்
6. அண்ணா நகர்- அறிவழகன்
7. மயிலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு
8. ஸ்ரீபெரும்புதூர் - டி.யசோதா
9. மதுராந்தகம் ஜெயக்குமார்
10. ஆலந்தூர் - டாக்டர் காயத்ரி தேவி
11. வேலூர் - ஞானசேகரன்
12. சோளிங்கர் - அருள் அன்பரசு
13. ஆம்பூர் - விஜய் இளஞ்செழியன்
14. ஓசூர் - கோபிநாத்
15. கிருஷ்ணகிரி - ஹசீனா சயத்
16. செங்கம் - செல்வம் என்கிற செல்வப்பெருந்தகை
17. கலசப்பாக்கம் - விஜயக்குமார்
18. செய்யார் - விஷ்ணுபிரசாத்
19. ரிஷிவந்தியம் - சிவராஜ்
20. ஆத்தூர் - அர்த்தநாரி
21. சேலம் வடக்கு - ஜெயப்பிரகாஷ்
22. திருச்செங்கோடு - எம்.ஆர்.சுந்தரம்
23. ஈரோடு மேற்கு - யுவராஜா
24. மொடக்குறிச்சி - பழனிசசாமி
25. காங்கேயம் - விடியல் சேகர்
26. உதகை - கணேஷ்
27. அவினாசி - நடராஜன்
28. தொண்டாமுத்தூர் - கந்தசாமி
29. சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார்
30. வால்பாறை - கோவை தங்கம்
31. நிலக்கோட்டை - ராஜாங்கம்
32. வேடசந்தூர் - தண்டபாணி
33. கரூர் - ஜோதிமணி
34. மணப்பாறை - டாக்டர் சோமு
35. முசிறி - எம்.ராஜசேகரன்
36. அரியலூர் - பாளை அமரமூர்த்தி
37. விருத்தாச்சலம் - நீதிராஜன்
38. மயிலாடுதுறை - ராஜ்குமார்
39. திருத்துறைப்பூண்டி - செல்லத்துரை
40. பாபாபநாசம் - ராம்குமார்
41. பட்டுக்கோட்டை -ரங்கராஜன்
42. திருமயம் - ராம சுப்புராம்
43. பேராவூரணி - மகேந்திரன்
44. அறந்தாங்கி - திருநாவுக்கரசர்
45. கராரைக்குடி - கே.ஆர். ராமசாமி
46. சிவகங்கை - ராஜசேகரன்
47. மதுரை வடக்கு - ராஜேந்திரன்
48. மதுரை தெற்கு - வரதாஜன்
49. திருப்பரங்குன்றம் - சுந்தரராஜன்
50. விருதநகர் - நவீன் ஆம்ஸிடரா்ங்
51. பரமக்குடி - கேவி.ஆர். பிரபு
52. விளாகத்திகுளம் - பெருமாள் சாமி
53. வாசுதேவநால்லூர் - கணேசன்
54. கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்
55. நாங்குநேரி - வசந்தகுமார்
56. ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
57. ராதாபுரம் - வேல்துரை
58. குளச்சல் - ராபர்ட் புரூஸ்
59. விளவங்கோடு - விஜயதரணி
60. கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்

Tuesday, March 22, 2011

இப்படித்தான் இருக்கவேனும் தேர்தல் அறிக்கை...


மேற்கு வங்கத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் அறிக்கை நேற்று வெளியிட்டு உள்ளார் அவரின் தேர்தல் அறிக்கை அந்த மாநில மக்களின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சியும் எப்படி அடுத்த 5 ஆண்டுகளில் இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.

மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசம், கவர்ச்சி அறிவிப்புகள் எதுவும் அறிக்கையில் இடம் பெறவில்லை.

மம்தா தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்
1.மாநிலத்தில் பசுமை புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும், தொழில் துறையையும், விவசாயத் துறையையும் இரட்டை சகோதரிகளாக கருதி, அவற்றின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2.ஆட்சிக்கு வந்த முதல் நூறு நாட்களில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவது, அடுத்த 1,000 நாட்களில் என்ன திட்டங்களை நிறைவேற்றுவது என்பது குறித்து, விளக்கமாக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3.தொழில் துறையை மேம்படுத்தி, அதன் மூலம், வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

4. மாநிலத்தில் உள்ள தொழில் துறை பயிற்சி மையங்களின் எண்ணிக்கையை, தற்போதுள்ள 51ல் இருந்து 300 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

5.ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் மையம் அமைக்கப்படும். மூடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை, மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

6.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதிய விமான நிலையங்கள் கட்டப்படும்.

7.தொழில் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆசிரியர்களின் பயிற்சி தரம் உயர்த்தப்படும்.

8. மாநிலத்தில் மேலும் 10 புதிய மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்.

9.தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர். பள்ளிகளின் கட்டமைப்பு வசதி உயர்த்தப்படும்.

10.மாநிலம் முழுவதும், சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

11.ஒவ்வொரு நகரத்திலும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

 12.விவசாயத் துறையின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். விவசாயத்துக்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும்.

13.மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளையும் இணைப்பதற்கான "மாஸ்டர் பிளான்' செயல்படுத்தப்படும்.

14.மாநிலத்தின் நிர்வாக பணிகளில் அரசியல் ஆதிக்கம் அகற்றப்படும்.

15.பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்துக்காக திட்டங்கள் தீட்டப்படும்.

மேற்கு வங்கமும் இந்தியாவில் தான் இருக்கிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை விட பின்தங்கிய மாநிலம், இருந்தும் இலவச கவர்ச்சி அறிவிப்புகள் ஏதும் இல்லாமல் மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட இதை வரவேற்போம்.

நம்ம ஊருக்கு எப்ப இப்படி ஒரு தேர்தல் அறிக்கை வருமோ?

உங்கள் பொன்னான வாக்குகளை கேக்க வருகிறார்கள்...

 
திமுக, அதிமுகவில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு காங்கிரஸ் தவிர தேர்தலில் நிற்கும் மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். ஏறக்குறைய பாதி தொகுதிக்கு யார் யாரை எதிர்த்து போட்டியிடுகிறார்கள் என்ற விபரம் மக்களிடம் அறிமுகமாகிவிட்டது.

இனி அடுத்து பிரச்சாரம் தான் ஒவ்வொரு கட்சியும் எங்கு யார் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பட்டியல் இப்பொழுதுதான் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. தேர்தல் கமிஷனின் விதிமுறைகளால் இத்தேர்தலில் ப்ளக்ஸ் பேனர், போஸ்டர் கட்சிக் கொடிகள் எதுவுமில்லாமல் ஊரேல்லாம் பளிச் என்று இருக்கிறது.

இனி தான் தேர்தல் சூடுபிடிக்கும் காலகட்டம் கொளுத்தும் வெய்யிலையும் பொருட் படுத்தாமல் இது வரை தொகுதிக்கு வந்த வாராத தலைவர்கள் எல்லாம் இந்த 20 நாளில் பொதுமக்களை சந்திக்க  பிரச்சார பீரங்கிகளாக வலம் வருவார்கள்.

ஒவ்வொரு கட்சியிலும் நட்சத்திர பேச்சாளர்கள் நிறைந்த கட்சியாக இருக்கின்றது. வழக்கமாக தேர்தல் என்றாலே வைகோவின் பேச்சும் அவர் மானசீக தொண்டன் நாஞ்சில் சம்பத் பேச்சும் அனல் பறக்கும். இத்தேர்தலில் அவர்கள் மிஸ்ஸிங்.

 
திமுகவைப் பொறுத்த வரை பிரச்சாரத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக அணிவகுக்கும் என்று சொல்லலாம் கலைஞர் பேச்சுக்கு என்று வரும் கூட்டம் தமிழகம் எங்கும் பரவி இருக்கிறது. பிரச்சாரத்தில் அதிக கூட்டங்களை அள்ளுபவர்களில் மிக முக்கியமானவர் கலைஞர் தான். அடுத்து ஸ்டாலின் இவரும் தமிழகம் எங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்வார் இவருடைய பேச்சும் அனைவரால் கவனிக்கப்படும்.


திமுகவில் இருந்து இந்த முறை வரும் பேச்சாளர்களில் மக்கள் மனம் மட்டுமல்லாமல் அனைவரது கவனத்தையும் பெற்றவர் குஷ்பு தான். தலைவர்களுக்கு அடுத்த படியாக அதிக கூட்டம் இவருக்கு கூடும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. திமுகவில் அடுத்து அன்பழகன், அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி, நெப்போலியன், பாக்கியராஜ், தியாகு, குமரிமுத்து என்று அதிக பிரச்சார நட்சத்திரங்கள் இருக்கின்றனர். இவர்களுடன் புது வரவாக நடிகர் வடிவேலுவும் இணைந்துஉள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள பாமகவில் இராமதாஸ், அன்புமணி, விடுதலைச்சிறுத்தைகள் திருமாவளவன், காங்கிரசில் சிதம்பரம், ஈவிகேஸ் இளங்கோவன் போன்ற தலைவர்களை உள்ளடக்கிய பெரும் படைகள் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் மேற்கொண்டு தமிழகத்தை வலம் வர இருக்கிறார்கள். இவர்களுடன் சோனியா, ராகுல் வரவும் வாய்ப்பு உண்டு.

அதிமுகவில்  மிகப்பெரிய அதிக கூட்டங்களை கூட்டும் நட்சத்திர பேச்சாளர் ஜெ மட்டுமே. ஜெவைத் தவிர கட்சியில் உள்ள சினிமா நட்சத்திரங்கள் செந்தில், குண்டு கல்யாணம், உதயகுமார், சி.ஆர் சரஸ்வதி, ராதாரவி, ராமராஜன் உள்ளிட்டோர் பிரச்சாரதில் ஈடுபடுவர்.


அதிமுக கூட்டணியில் அடுத்து விஜயகாந்த் இவர் செல்லும் இடங்களிலும், இவர் பேச்சும் மக்களால் அதிகம் ஈர்க்கப்படுகிறது. இதே கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் தா.பாண்டியன், இராமகிருஷ்ணன் மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் வலம் வருவார்கள்..

இதுவரை அமைதியாக இருந்த தேர்தல் களம் இனிதான் சூடுபிடிக்கப்போகிறது அதிக நட்சத்திர பேச்சாளர் கொண்ட திமுக கூட்டணியும், சில முக்கிய தலைவர்களை நட்சத்திர பேச்சாளர்களாக கொண்ட அதிமுக கூட்டணியும் பிரச்சார பீரங்கிகளாக வலம் வர இருக்கின்றனர். குறைந்த நாட்களில் அதிக இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் அதுவும் இல்லாமல் தலைவர்கள் போட்டியிடும் தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு மேல்  தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் சரியான அளவில் நடை முறைப்படுத்தப்பட்டு வருவதால் அரசியல் கட்சிகள் கொஞ்சம் கலக்கத்துடனே பிரச்சாரம் செய்வர்...

5 வருடங்களுக்கு அப்புறம் வரும் நட்சத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழகமக்களே பொறுங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் உங்கள் பொன்னான வாக்குகளுக்காக...

Monday, March 21, 2011

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்


 தே.மு.தி.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளின் பட்டியல்

1. விருத்தாச்சலம்,
2. திருக்கோயிலூர்,
3. ரிஷிவந்தியம்,
4. திருச்செங்கோடு,
5. ஆரணி,
6. செங்கம் (தனி),
7. பட்டுக்கோட்டை,
8. கும்மிடிப்பூண்டி,
9. திருத்தணி,
10. சோளிங்கர்,
11. தரும்புரி,
12. கங்கவல்லி (தனி),
13. மதுரை மத்தி,
14. கூடலூர்,
15. திட்டக்குடி (தனி),
16. திருவாடானை,
17. குன்னம்,
18. மயிலாடுதுறை,
19. திருவெறும்பூர்,
20. சேலம் (வடக்கு),
21, ராதாபரம்,
22. சூலூர்,
23. விருகம்பாக்கம்,
24. ஓசூர்,
25. லால்குடி,
26. பேராவூரணி,
27. செங்கலபட்டு,
28. எழும்பூர் (தனி),
29. செஞ்சி,
30. ஈரோடு கிழக்கு,
31, கம்பம்,
32. சேந்தமங்கலம் (தனி),
33. திருப்பரங்குன்றம்,
34. விருதுநகர்,
35. ஆத்தூர்,
36. பண்ருட்டி,
37. அணைக்கட்டு,
38. பத்மநாபபுரம்,
39. வேப்பனஹள்ளி,
40. மேட்டூர்,
41. ஆலந்தூர்.

தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் பத்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.

வேட்பாளர்கள் விவரம்:

1. மதுரை மத்தி - சுந்தர்ராசன்
2. ஈரோடு கிழக்கு - சந்திரகுமார்
3. கம்பம் - முருகசேன்
4. விருதுகர் - மாபா பாண்டியராஜன்
5. பட்டுக்கோட்டை - செந்தில்குமார்
6. ராதாபுரம் - மைக்கேல் ராயப்பன்
7. சேலம் வடக்கு - மோகன்ராஜ்
8. திருக்கோவிலூர் - வெங்கடேசன்
9. ஆத்தூர் - பாலு
10. சேந்தமங்கலம் - சாந்தி ராஜமாணிக்கம்

அதிமுக புதிய வேட்பாளர் பட்டியல்


அதிமுகவின் புதிய வேட்பாளர் பட்டியலை பொது செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

  1. ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா
  2. பொன்னேரி தனி - பொன். ராஜா
  3. திருவள்ளூர் - பி.வி. ரமணா
  4. பூந்தமல்லி - மணிமாறன்
  5. ஆவடி - அப்துல் ரஹீம்
  6. அம்பத்தூர் - வேதாச்சலம்
  7. மாதவரம் - வி.மூர்த்தி
  8. திருவொற்றியூர் - குப்பன்
  9. ஆர்கே நகர் - வெற்றிவேல்
  10. கொளத்தூர் சைதை துரைசாமி
  11. வில்லிவாக்கம் - ஜேசிடி பிரபாகர்
  12. திரு.வி.க.நகர் தனி - வ.நீலகண்டன்
  13. ராயபுரம் - ஜெயக்குமார்
  14. துறைமுகம் - பழ. கருப்பையா
  15. ஆயிரம் விளக்கு - பா. வளர்மதி
  16. அண்ணா நகர் - கோகுல இந்திரா
  17. சைதாப்பேட்டை - செந்தமிழன்
  18. தியாகராய நகர் - வி.பி.கலைராஜன்
  19. மயிலாப்பூர் - ராஜலட்சுமி
  20. வேளச்சேரி எம்.கே. அசோக்
  21. சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
  22. ஸ்ரீபெரும்புதூர் - மொளச்சூர் பெருமாள்
  23. பல்லாவரம் - தன்சிங்
  24. தாம்பரம் - .டிகே.எம்.சின்னையா
  25. திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்
  26. செய்யூர் தனி - வி.எஸ்.ராஜி
  27. மதுராந்தகம் தனி - கணிதா சம்பத்
  28. உத்திரமேரூர்- வாலாஜாபாத் பா.கணேசன்
  29. காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்
  30. அரக்கோணம் தனி - சு.ரவி
  31. காட்பாடி - அப்பு என்கிற ராதாகிருஷ்ணன்
  32. ராணிப்பேட்டை - முஹம்மத்ஜான்
  33. ஆற்காடு - ஆர்.சீனிவாசன்
  34. வேலூர் - டாக்டர் வி.எஸ். விஜய்
  35. வாணியம்பாடி - கோவி. சம்பத்குமார்
  36. ஜோலார்ப்பேட்டை - கே.சி.வீரமணி
  37. திருப்பத்தூர் - கே.ஜி.ரமேஷ்
  38. ஊத்தங்கரை தனி மனோரஞ்சிதம் நாகராஜ்
  39. பர்கூர் - கிருஷ்ணமூர்த்தி
  40. கிருஷ்ணகிரி - கேபி முனுசாமி
  41. பாலக்கோடு - கே.பி. அன்பழகன்
  42. பாப்பிரெட்டிப்பட்டி - பி.பழனியப்பன்
  43. திருவண்ணாமலை - எஸ்.ராமச்சந்திரன்
  44. கீழ்ப்பெண்ணாத்தூர் - அரங்கநாதன்
  45. கலசப்பாக்கம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
  46. போளூர் - ஜெயசுதா ளட்சுமிகாந்தன்
  47. செய்யார் - முக்கூர் சுப்பிரமணியன்
  48. வந்தவாசி தனி - செய்யாமூர் குணசீலன்
  49. மைலம் - கே.பி.நாகராஜன்
  50. திண்டிவனம் தனி - டாக்டர் அரிதாஸ்
  51. வானூர் தனி - ஜானகிராமன்
  52. விழுப்புரம் - சி.வி.சண்முகம்
  53. உளுந்தூர்ப்பேட்டை - குமரகுரு
  54. சங்கராபுரம் - ப.மோகன்
  55. கள்ளக்குறிச்சி தனி - பா.அழகுவேல்
  56. ஆத்தூர் தனி - எஸ்.மாதேஸ்வரன்
  57. ஏற்காடு - செ.பெருமாள்
  58. ஓமலூர் - பல்பாக்கி கிருஷ்ணன்
  59. எடப்பாடி - கே.பழனிச்சாமி
  60. சங்ககிரி - விஜயலட்சுமி
  61. சேலம் மேற்கு - ஜி.வெங்கடாஜலம்
  62. சேலம் - தெற்கு செல்வராஜ்
  63. வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
  64. ராசிபுரம் தனி - தனபால்
  65. நாமக்கல் - கேபிபி பாஸ்கர்
  66. குமாரபாளையம் - பி.தங்கமணி
  67. ஈரோடு மேற்கு கே.வி.ராமலிங்கம்
  68. மொடக்குறிச்சி - ஆர்.என். கிட்டுச்சாமி
  69. தாராபுரம் தனி - கே.பொன்னுச்சாமி
  70. காங்கேயம் - எஸ்எஸ்என் நடராஜ்
  71. பெருந்துறை - தோப்பு வெங்கடாச்சலம்
  72. பவானி - பி.ஜி.நாராயணன்
  73. அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணீதரன்
  74. கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
  75. உதகமண்டலம் - புத்தி சந்திரன்
  76. மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்னராஜ்
  77. அவினாசி தனி - ஏ.ஏ கருப்பசாமி
  78. திருப்பூர் வடக்கு - எம்.எஸ்.எம். ஆனந்தன்
  79. பல்லடம் - பல்லடம் கே.பி. பரமசிவம்
  80. கவுண்டம்பாளையம் - ஆறுக்குட்டி
  81. கோவை வடக்கு - தா.மலரவன்
  82. தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி
  83. கோவை தெற்கு - சேலஞ்சர் துரை
  84. சிங்காநல்லூர் - ஆர். சின்னச்சாமி
  85. கிணத்துக்கடவு - செ.தாமோதரன்
  86. பொள்ளாச்சி - முத்துக்கருப்பண்ணசாமி
  87. உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி ஜெயராமன்
  88. மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
  89. பழனி - கே.எஸ்.என். வேணுகோபாலு
  90. ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்பிரமணி
  91. நத்தம் - இரா.விசுவநாதன்
  92. வேடசந்தூர் - ச.பழனிச்சாமி
  93. அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்
  94. கரூர் - வி.செந்தில்பாலாஜி
  95. கிருஷ்ணராயபுரம் தனி - எஸ்.காமராஜ்
  96. குளித்தலை -பாப்பா சுந்தரம்
  97. மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்
  98. திருச்சி மேற்கு - மரியம்பிச்சை
  99. திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்
  100. மணச்சநல்லூர் - டி.பி.பூனாட்சி
  101. முசிறி - என்.ஆர்.சிவபதி
  102. துறையூர் தனி - டி. இந்திரா காந்தி
  103. பெரம்பலூர் தனி - இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
  104. அரியலூர் - துரை மணிவேல்
  105. ஜெயங்கொண்டம் - பா. இளவழகன்
  106. நெய்வேலி - எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன்
  107. கடலூர் - மு.சி. சம்பத்
  108. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் இராஜேந்திரன்
  109. புவனகிரி - செல்வி ராமஜெயம்
  110. காட்டுமன்னார் கோவில் தனி- என்.முருகுமாறன்
  111. சீர்காழி தனி - ம. சக்தி
  112. பூம்புகார் - பவுன்ராஜ்
  113. நாகப்பட்டினம் - கே.ஏ.ஜெயபால்
  114. வேதாரண்யம்- என்.வி.காமராஜ்
  115. மன்னார்குடி - சிவா. ராஜமாணிக்கம்
  116. திருவாரூர் - குடவாசல் ராஜேந்திரன்
  117. நன்னிலம் - ஆர்.காமராஜ்
  118. திருவிடைமருதூர் தனி - பாண்டியராஜன்
  119. கும்பகோணம் - இராம. ராமநாதன்
  120. பாபநாசம் - துரைக்கண்ணு
  121. திருவையாறு - ரத்தினசாமி
  122. தஞ்சாவூர் - ரங்கசாமி
  123. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்
  124. கந்தர்வக்கோட்டை தனி - ந.சுப்பிரமணியன்
  125. விராலிமலை - சி. விஜயபாஸ்கர்
  126. திருமயம் - பி.கே.வைரமுத்து
  127. ஆலங்குடி - கு.ப.கிருஷ்ணன்
  128. அறந்தாங்கி - மு.ராஜநாயகம்
  129. காரைக்குடி - சோழன் சித.பழனிச்சாமி
  130. திருப்பத்தூர் - ஆர். எஸ். ராஜகண்ணப்பன்
  131. மானாமதுரை தனி - ம.குணசேகரன்
  132. மேலூர் - ஆர்.சாமி
  133. மதுரை கிழக்கு - கே.தமிழரசன்
  134. சோழவந்தான் தனி -எம்.வி. கருப்பையா
  135. மதுரை வடக்கு - ஏ.கே.போஸ்
  136. மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜு
  137. திருமங்கலம் - ம.முத்துராமலிங்கம்
  138. ஆண்டிப்பட்டி - தங்க தமிழ்செல்வன்
  139. போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
  140. ராஜபாளையம் - கே.கோபால்சாமி
  141. சாத்தூர் - ஆர்.பி.உதயக்குமார்
  142. சிவகாசி - கே.டி. ராஜேந்திர பாலாஜி
  143. அருப்புக்கோட்டை - வைகைச் செல்வன்
  144. பரமக்குடி தனி - எஸ்.சுந்தர்ராஜ்
  145. முதுகுளத்தூர் - மு.முருகன்
  146. விளாத்திகுளம் - ஜி.வி மார்க்கண்டேயன்
  147. தூத்துக்குடி - ஏ.பால்
  148. திருச்செந்தூர் - பி.ஆர்.மனோகரன்
  149. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்
  150. கோவில்பட்டி - கடம்பூர் செ.ராஜு
  151. சங்கரன்கோவில் தனி - சொ.கருப்பசாமி
  152. வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் எஸ். துரையப்பா
  153. கடையநல்லூர் - பி.செந்தூர்பாண்டியன்
  154. ஆலங்குளம் - பி.ஜி.ராஜேந்திரன்
  155. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
  156. அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா
  157. கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்
  158. நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்
  159. குளச்சல் - பி.லாரன்ஸ்
  160. கிள்ளியூர் - ஆர்.ஜார்ஜ்

Sunday, March 20, 2011

தன்மானமுள்ள வைகோவிற்கு பகிரங்கமான 10 கேள்விகள்...


தி.மு.க.,வில் போர்ப்படை தளபதி என்றழைக்கப்பட்ட வைகோ, கருத்து வேறுபாடுகளால் வெளியேறி ம.தி.மு.க.,வை துவக்கினார். 1996ல் தனித்து போட்டியிட்ட ம.தி.மு.க., 5.78 சதவீத ஓட்டுகளை பெற்றது. 2001 தேர்தலில் 211 இடங்களில் தனித்து போட்டியிட்டு 4.65 சதவீத ஓட்டுகள் பெற்றது.பின், 2006 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தொகுதி பிரச்னையால், கடைசி நேரத்தில் விலகி, அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், ஆறு இடங்களில் வெற்றி பெற்று 5.98 சதவீத ஓட்டுகளை பெற்றது.

திருமங்கலம் தொகுதி ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்ற போதும், அதில் அ.தி.மு.க.,வே போட்டியிட்டது. ம.தி.மு.க.,வுக்குரிய கம்பம், தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது அப்போதாவது வைகோ சுதாரித்திருக்க வேண்டும். கடைசியாக நடந்த லோக்சபா தேர்தலில் 4 இடங்களை மட்டுமே ஜெவிடம் வாங்க முடிந்தது ஆனால் கடைசியாக வந்து சேர்ந்த பாமக 7 இடங்களை வாங்கியது தனிக்கதை. இதற்கெல்லாம் காரணம் தன்னுடன் ஆரம்பத்தில் இருந்த தலைவர்கள் தற்போது இல்லை என்பதை வைகோ உணரவேண்டும்.

வைகோவிற்கு சில பகிரங்கமான கேள்விகள்...

1. இன்று தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாக போற்றும் கட்சி மதிமுக என்றால் அன்று  கருணாநிதியுடனும் கூட்டணி வைத்தது ஏன்? அப்போது எங்க போச்சு உங்க சுயமரியாதை?

2. அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டி போடுவது என்பது தார்மீக கடமை.இப்போது ம தி மு க எடுத்து உள்ள முடிவு ஏன்?தேர்தல் முறை சரி இல்லை என்பதாலா? அல்லது அவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கபடுகின்றது என்பதாலா? கூட்டணி கட்சியில் பிரச்சனை என்றால் ஏன் பேசி தீர்க்க முயலவில்லை?

3. நீங்கள் கட்சி ஆரம்பிக்கும் போது உங்களுடன் வந்த தலைவர்கள் எல்லாரும் அப்போது திமுகவின் ஜம்புவான்கள் அவர்கள் திரும்பி மாற்று கட்சிக்கு செல்லம் போது ஏன் அவர்களை தடுக்க முயற்சிக்கவில்லை? உங்கள் கட்சியை விட்டு ஒரு சில தலைவர்கள் வெளியேறிய போதும் மற்றவர்களை வெளியேற விடாமல் ஏன் அரவணைக்கவில்லை?

4. தேர்தலைப் புறக்கணித்து விட்டு வீட்டில் உட்கார்வதற்காகவோ, தனித்துப் போட்டியிட்டு "டெபாசிட்' இழப்பதற்காகத்தான் நீங்கள் ஒரு அரசியல் கட்சியை இவ்வளவு நாள் நடத்துனீங்களா?

5. ஈழ ஆதரவு கட்சிகளை ஒன்றினைத்து ஏன் 3 ம் அணி துவங்க முயற்சிக்கவில்லை (நிச்சயம் ஈழ ஆதரவு கட்சிகளை ஒன்றினைத்து கடந்த லோக்சபா தேர்தலில் போட்சியிட்டு இருந்தால் கணிசமாக வெற்றி பெற்று இருக்கலாம்)

6. அரசியலில் உணர்ச்சிக்கு இடம் இல்லை, தந்திரமே வெல்கிறது என்பதை இப்போதாவது உணர்தீர்களா? ஏன் கிளை, கிளையாக, ஊர் ஊராக சென்று உங்கள் கட்சியை வளர்க்க முயற்சிக்கவில்லை?

7. மனதை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் இந்த முடிவை அறிவித்ததும் உங்கள் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் சந்தோசமாக ஏற்றுக்கொண்டார்களா? இன்று உங்கள் தொண்டர்களின் மனநிலைமையை நினைத்து பார்த்தீர்களா?  ஏன் உங்கள் முடிவை மறுபரீசீலனை செய்யக்கூடாது?

8. இது வரை யாருக்கும் பயபடாமல், யாருக்கும் இறங்கி வராமல் இருந்த ஜெ அவர்கள் இறங்கி வந்து தொகுதிகளை உயர்த்தி 13 தொகுதிகளை தருகிறேன், ஒரு MP தருகிறேன் என்று கூறிய பின்பும், நீங்கள் தன்மானம், சுயமரியாதை என்று சொல்லி உங்கள் கட்சி தொண்டர்களையும், கிடைக்கப்போகும் சில எம்எல்ஏக்களையும் முக்கியமாக எம்பி பதவியையும் ஏன் விட வேண்டும்?

9. 12 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம்?

10. இதுவரை உங்களுடன் இருந்து வெளியேறியவர்களை விடுங்கள் தற்போது உங்களுடன் இருப்பவர்கள் உங்கள் மேல் உள்ள அன்பால் இருப்பவர்கள் அவர்களுக்காக ஏன் தேர்தலில் போட்டியிடக்கூடாது?

Saturday, March 19, 2011

கதாநாயகியின் இலவச கவர்ச்சி....

தி.மு.க. தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்று வர்ணித்தார் கலைஞர். அவர் கூறியது கதாநாயகியின் கவர்ச்சி நிறைய...
 
*1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும்.
 
*ரேஷன் கார்டுகளுக்கு மானிய விலையில் அயோடின் கலந்து உப்பு.
 
* குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னூரிமை வழங்கப்படும்.
 
*வீடுதோறும் பெண்களுக்கு இலவசமாக கிரைண்டர் வழங்கப்படும். ஏற்கனவே கிரைண்டர் உள்ள வீடுகளுக்கு இலவசமாக மிக்ஸி வழங்கப்படும்.
 
*பரம ஏழைகளுக்கு மாதம் தோறும் இலவசமாக 35 கிலோ அரிசி வழங்கப்படும்.
 
*அரசு பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுமுறை மூன்று மாதத்திலிருந்து 4 மாதம் ஆக உயர்தப்படும்.
 
* சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை. 
 
*அரசு கல்லூரியில்  பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிடர் மாணவர்களுக்கு லேப்டாப்
 
*அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையம்
 
*எல்லா மாவடட்டங்களுக்கும் அரசு செவிலியர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும்.
 
*60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை.
 
*முதியோர் உதவித்தொகை ரூ 450 லிருந்து ரூ.750 ஆக உயர்த்தப்படும்.
 
* கோவை  மதுரை நகரில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல் படுத்தப்படம்.
 
*விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்கப்படுவது தடுக்கப்படும்.
 
 *சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை அதிரிக்க  நடவடிக்கை எடுக்கப்படும்.
 
*அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்
 
*மீனவர்களுக்கு நிதி தர புது காப்பீடு திட்டம் செயல் படுத்தப்படும்.
 
*திருச்சி,மதுரையில் மனநல மருத்துவமனை அமைக்கப்படும்.
 
 *உழவர் சந்தை போன்று நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தை அழைக்கப்படும்.
 
*அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மூன்று சீருடை வழங்கப்படும்.
 
*சென்னையில் தாம்பரம் போல் மதுரையில் காசநோய் மருத்துவமனை அமைக்கப்படும்.
 
*மாதம் ஒரு நாள் அரசு மருத்துவர்கள் வீடு தேடி சென்று முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
 
*தரமான கல்வி பெற 2006 முதல் 2009 வரை பெறப்பட்ட கல்விக்கடனை அரசு செலுத்தும்.
 
*சாயக்கழிவுகளை இயற்கை முறையில் ஆவியாக்க நடவடிக்கை
 
*பொங்கல் தோறும் கிராமங்களில் அரசு சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்
 
*திருநங்கைகளுக்கு சுய உதவிக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
*தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.  
 
*சொட்டு நீர் பாசனம் செய்ய விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
 
*மகளிர் சுய உதவிகளுக்கு தரப்படும் கடன் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும்.
 
*நெல் கரும்பு உள்ளிட்டவற்றிற்கு நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
 
* மாவட்ட மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயிர் சிகிச்சை அமைக்க நடவடிக்கை
 
*சென்னையிலிருந்து கோவைக்கு  புல்லட் ரெயில் அமைக்க நடவடிக்கை.
 
*தரமான கல்வி வழங்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். 
 
நம் தமிழநாட்டு மக்கள் இந்த கவர்ச்சியை எந்த அளவிற்கு வரவேற்கிறார்கள் என்று பார்ப்போம்....

இதய நோயை தடுக்கும் கடுகு...


நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே சாப்பிட்டு வந்தார்கள். அந்த உணவோடு மருந்துகளையும் உண்டு நோயின்றி நூறாண்டு வாழ்ந்தனர். ஒவ்வொருவீட்டிலும் சமையல் அறையிலுள்ள அஞ்சறைப் பெட்டியில் அற்புத மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.

உணவோடு சேர்ந்து நம் உடலைக் காக்கும் அற்புத கூட்டணிதான் இந்த அஞ்சறைப் பெட்டி பொக்கிஷங்கள். 

இந்த அஞ்சறை பெட்டியில் உள்ள அற்புதமான அரு மருந்து மற்றும் உணவுப் பொருட்களில் நாம் அதிகம் பயன்படுத்துவது கடுகு. கடுகை மூன்று வகைகளாக கூறுவர். நாய்கடுகு, மலைக்கடுகு, சிறு கடுகு என்று.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. கடுகு அந்தளவிற்கு முன்னோர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இதன் பயன்களும் ஏராளம்.

நீரழிவு நோயை கட்டுப்படுத்த... 

கடுகு, ஆவாரை ‌விதை, மரம‌ஞ்ச‌ள், கருவேல‌ம் ‌பி‌சி‌ன் ஆ‌கியவ‌ற்றை எடு‌த்து சு‌த்த‌ப்படு‌த்‌தி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
வீ‌‌ட்டி‌ல் அ‌ம்‌‌மி இரு‌ந்தா‌ல் அ‌தி‌ல் இவ‌ற்றை வை‌த்து இடி‌த்து பொடியா‌க்க வே‌ண்டு‌ம்.
இதனை ‌நீ‌ர்‌வி‌ட்டு ‌‌பிசை‌ந்து சூரணமா‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
நீ‌‌ரி‌ழிவு நோ‌ய் உ‌ள்ளவ‌ர்க‌ள் இ‌ந்த ‌சூரண‌த்தை 1-2 ‌கிரா‌ம் உ‌ள்ளு‌க்கு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ‌‌நீ‌ரி‌ழிவு நோ‌ய் க‌ட்டு‌ப்படு‌ம்.

சிறுநீர் பெருக்கி

கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

கடுகு எண்ணெய்

கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும்.

விக்கல் நீங்க

வெந்நீர் - 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் - 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.

மேலும் பல பயன்கள்

விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கு, 2 கிராம் கடுகு நீர் விட்டு அைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுக்க விஷம் வெளியேறும்... 

தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாக்கும்.

கடுகை தூள் செய்து வெந்நீரீல் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கலை குணப்படுத்தும்

கடுகை அரைத்து பற்றிட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும்

கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும் உடனடியாக விரைப்பு சீராகும்.

கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்... 

Thursday, March 17, 2011

2011 தேர்தல்: ராஜதந்திரி யார்? ஜெ., வா? கலைஞரா?


நேற்று முன் தினம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் போது அம்மா அனைத்து 160 தொகுதிகளுக்கு வேட்பாளரை தேர்வு  செய்து வெளியிட்டது திடீரென அரசியல் களத்தில் அனைவரையும் பரபரப்பாக்கியது . கலைஞர் 16ம் தேதி அறிவிக்கின்றேன் என்றார் ஆனால் அது தள்ளி 17க்கு சென்று விட்டது.

இதற்காக காத்திருந்தது போல் ஜெ தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்தது கூட்டணி கட்சி அல்ல திமுக தான் எந்த தொகுதிக்கு எந்த வேட்பாளர் அவரை எதிர்க்கும் நம் வேட்பாளர் சவால் விடும் வகையில் இருக்குமா என்று திமுக முதலில் சீட் மறுத்தவர்களுக்கு கூட மறுபடியும் சீட் கொடுத்திருக்கிறது. (ஒரு பத்திரிக்கையில் சிலருக்கு சீட் இருக்காது என்று சொல்லி இருந்தது அவர்கள் எல்லாம் நேற்று வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்)

வலுவான கூட்டணி இருந்தால் வெற்றி சுலபமாகும் என்பதோ, தொகுதிகளைப் பறித்துக்கொண்டால், கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடையும் என்பதோ ஜெயலலிதா அறியாதது அல்ல. முதலில் அறிவித்து விட்டு அந்த அறிக்கையை வாபஸ் வாங்குவது அவருக்கு புதிதல்ல. அவருடைய திட்டம் எல்லாம் இப்ப ஒரு வேட்பாளைரை அறிவித்து விட்டு திமுக வேட்பாளரை அறிவித்ததும் கூட்டணி கட்சிகளுக்கு வேண்டியதை கொடுத்து விட்டு திமுக வேட்பாளருக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதாக இருக்கலாம்.

நேற்று நடந்த சம்பவங்களை பார்க்கும் போது தா.பாண்டியன் கூறியதை பார்த்தால் 3 அணி அமைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை எங்களின் நோக்கம் எல்லாம் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறக்கூடாது அதற்காகத்தான் நாங்கள் பாடுபடுகிறோம் என்றார்.
விஜயகாந்த் கூறும் போது 3 வது அணி பற்றி முடிவு செய்யவில்லை எதுவாக இருந்தாலும் நாளை உங்களை அழைத்து கூறுகிறேன் என்றார்.

வைகோ எதுவும் பேசவில்லை, அதிமுக தரப்பும் எதுவும் பேசாமல் ஜெ தனது பிரச்சார பயணத்தை தள்ளிவைத்து விட்டு நேற்று மாலைக்கு மேல் அதிமுக தரப்பு கூட்டணி கட்சிகளிடம் பேச ஆரம்பித்து விட்டது இதன் மூலம் 3 வது அணி நிச்சயம் இல்லை என்று கூறலாம்.

இன்று காலை பத்திரிக்கை செய்தியில்  படி தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூ., கேட்கும் தொகுதிகளை தருவதற்கு, அ.தி.மு.க., சம்மதித்தது. ம.தி.மு.க.,வுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்தும், பேச்சு வார்த்தை துவங்கியது. ம.தி.மு.க.,வுக்கு 13 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதற்கும் பேச்சு வார்த்தை நடந்தது. புதிய தமிழகம் கேட்ட, ஒட்டப்பிடாரம், வால்பாறை ஆகிய தொகுதிகளை தரவும், அ.தி.மு.க., தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. சரத்குமார் கேட்ட, தென்காசி, நான்குநேரி தொகுதிகளை ஒதுக்கவும், சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், வெற்றி பெற்ற தொகுதிகளை தருவதற்கும், தே.மு.தி.க.,வுக்கு அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகளை ஒதுக்கவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

ஜெ வின் கணக்குப்படி கூட்டணி கட்சிகள் யாரும் வெளியேறவும் கூடாது அதே சமயம் திமுக வேட்பாளருக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும், கூட்டணி கட்சிகளும் எனக்கு அத்தனை தொகுதி வேண்டும், நாங்கள் இங்கே தான் நிற்போம் என்று எதிர் பதில் சொல்லாமல் அவர்கள் கேட்டது இரண்டு கேட்காதது இரண்டு என்று கூட்டணிக்கு தொகுதி பிரிக்கப்படலாம்.

நேற்று காலை முதல் மாலை வரை ஊரேங்கும் இதே பேச்சு 3 வது அணி அமையுமா? அமையாதா? இதை அனைத்திக்கும் முற்றுப்புள்ளி வைத்து இன்று மாலை அல்லது நாளைக்குள் கூட்டணிக்கு தொகுதிகள் அறிவிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்...

இப்ப சொல்லுங்க சிறந்த ராஜதந்திரி ஜெ., வா? கலைஞரா?

திமுக வேட்பாளர் பட்டியல்

திமுக போட்டியிடும் 119 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அறிவித்தது...


1. ஆயிரம் விளக்கு - அசன் முகமது ஜின்னா
2. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - ஜெ.அன்பழகன்
3. விருகம்பாக்கம் - க.தனசேகரன்
4. சைதாப்பேட்டை - மகேஷ்குமார்
5. ஆர்.கே.நகர் - சேகர்பாபு
6. கொளத்தூர் - ஸ்டாலின்
7. வில்லிவாக்கம் - க.அன்பழகன்
8. எழும்பூர்(தனி) - பரிதி இளம்வழுதி
9. பொன்னேரி(தனி) - மணிமேகலை
10. திருவள்ளூர் - இ.ஏ.பி.சிவாஜி
11. அம்பத்தூர் - ரங்கநாதன்
12. மாதவரம் - டாக்டர் கனிமொழி
13. திருவொற்றியூர் - கே.பி.பி.சாமி
14. பல்லாவரம் - தா.மோ.அன்பரசன்
15. தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா
16. உத்திரமேரூர் - பொன்குமார்
17. காட்பாடி - துரைமுருகன்
18. ராணிப்பேட்டை - காந்தி
19. கே.வி.குப்பம் - சீத்தாராமன்
20. குடியாத்தம்(தனி) - ராஜமார்த்தாண்டன்
21. திருப்பத்தூர் - ராஜேந்திரன்
22. திருவண்ணாமலை - எ.வ.வேலு
23. கீழ்பெண்ணாத்தூர் - கு.பிச்சாண்டி
24. ஆரணி - சிவானந்தம்
25. வந்தவாசி(தனி) - கமலக்கண்ணன்
26. வானூர் (தனி) - புஷ்பராஜ்
27. விழுப்புரம் - பொன்முடி
28. விக்கிரவாண்டி - ராதாமணி
29. திருக்கோவிலூர் - தங்கம்
30. சங்கராபுரம் - உதயசூரியன்
31. பண்ருட்டி - சபா ராஜேந்திரன்
32. கடலூர் - இள.புகழேந்தி
33. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
34. திருவிடைமருதூர்(தனி) - கோவி.செழியன்
35. கும்பகோணம் - க.அன்பழகன்
36. திருவையாறு - செல்லக்கண்ணு
37. தஞ்சாவூர் - உபயதுல்லா
38. ஒரத்தநாடு - மகேஷ் கிருஷ்ணசாமி
39. கீழ்வேளூர்(தனி) - மதிவாணன்
40. மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா
41. திருவாரூர் - மு.கருணாநிதி
42. நன்னிலம் - இளங்கோவன்
43. ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த்
44. திருச்சி மேற்கு - கே.என்.நேரு
45. திருச்சி கிழக்கு - அன்பில் பெரியசாமி
46. திருவெறும்பூர் - கே.என்.சேகரன்
47. லால்குடி - சவுந்திரபாண்டியன்
48. மண்ணச்சநல்லூர் - என்.செல்வராஜ்
49. துறையூர்(தனி) - பரிமளாதேவி
50. பெரம்பலூர்(தனி) - பிரபாகரன்
51. குன்னம் - சிவசங்கர்
52. அரவக்குறிச்சி - கே.சி.பழனிச்சாமி
53. கிருஷ்ணராயபுரம்(தனி) - காமராஜ்
54. குளித்தலை - மாணிக்கம்
55. கந்தர்வக்கோட்டை(தனி) - கவிதைப்பித்தன்
56. விராலிமலை - ரகுபதி
57. புதுக்கோட்டை - பெரியண்ணன் அரசு
58. கெங்கவல்லி(தனி) - சின்னதுரை
59. ஏற்காடு(எஸ்.டி.,) - தமிழ்ச்செல்வன்
60. சங்ககிரி - வீரபாண்டி ஆறுமுகம்
61. சேலம் தெற்கு - எஸ்.ஆர்.சிவலிங்கம்
62. வீரபாண்டி - ஆ. ராஜேந்திரன்
63. சேலம் மேற்கு - ஆர்.ராஜேந்திரன்
64. ராசிபுரம்(தனி) - வி.பி.துரைசாமி
65. சேந்தமங்கலம்(எஸ்.டி.,) - கே.பொன்னுசாமி
66. குமாரபாளையம் - செல்வராஜ்
67. பென்னாகரம் - இன்பசேகரன்
68. பாப்பிரெட்டிபட்டி - முல்லைவேந்தன்
69. வேப்பனஹள்ளி - செங்குட்டுவன்
70. தளி - ஒய்.பிரகாஷ்
71. மேட்டுப்பாளையம் - அருண்குமார்
72. கவுண்டம்பாளையம் - சுப்ரமணியம்
73. கோவை வடக்கு - வீரகோபால்
74. கோவை தெற்கு - பொங்கலூர் பழனிச்சாமி
75. கிணத்துக்கடவு - கண்ணப்பன்
76. தாராபுரம்(தனி) - ஜெயந்தி
77. திருப்பூர் வடக்கு - கோவிந்தசாமி
78. மடத்துக்குளம் - மு.பெ.சாமிநாதன்
79. ஈரோடு கிழக்கு - முத்துசாமி
80. அந்தியூர் - என்.கே.கே.பி.ராஜா
81. பவானிசாகர்(தனி) - லோகேஸ்வரி
82. கூடலூர்(தனி) - திராவிடமணி
83. குன்னூர் - க.ராமச்சந்திரன்
84. மேலூர் - ராணி ராஜமாணிக்கம்
85. மதுரை கிழக்கு - மூர்த்தி
86. திருமங்கலம் - மணிமாறன்
87. உசிலம்பட்டி - ராமசாமி
88. மதுரை மத்தி - கவுஸ் பாஷா
89. மதுரை மேற்கு - தளபதி
90. பழனி - செந்தில்குமார்
91. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி
92. ஆத்தூர் - இ.பெரியசாமி
93. நத்தம் - விஜயன்
94. ஆண்டிபட்டி - எல்.மூக்கையா
95. பெரியகுளம்(தனி) - வீ.அன்பழகன்
96. போடிநாயக்கனூர் - லட்சுமணன்
97. கம்பம் - ராமகிருஷ்ணன்
98. திருவாடானை - சுப.தங்கவேலன்
99. முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி
100. திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்
101. மானாமதுரை(தனி) - தமிழரசி
102. ராஜபாளையம் - தங்கபாண்டியன்
103. ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) - துரை
104. சாத்தூர் - கடற்கரை ராஜ்
105. சிவகாசி - வனராஜா
106. அருப்புக்கோட்டை - சாத்தூர் ராமச்சந்திரன்
107. திருச்சுழி - தங்கம் தென்னரசு
108. சங்கரன்கோவில்(தனி) - உமாமகேஸ்வரி
109. தென்காசி - கருப்பசாமி பாண்டியன்
110. ஆலங்குளம் - பூங்கோதை
111. திருநெல்வேலி - ஏ.எல்.எஸ்.லட்சுமணன்
112. அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்
113. பாளையங்கோட்டை - மைதீன்கான்
114. தூத்துக்குடி - கீதா ஜீவன்
115. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
116. ஒட்டப்பிடாரம்(தனி) - ராஜா
117. கன்னியாகுமரி - சுரேஷ்ராஜன்
118. நாகர்கோவில் - மகேஷ்
119. பத்மநாபபுரம் - புஷ்பலீலா ஆல்பன்.

வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் பெண் வேட்பாளர்கள் 11 பேர். புதிய வேட்பாளர்கள் 53 பேர்.

அஞ்சறைப்பெட்டி +கும்தலக்கா 16.03.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

குட்டி நாடாக இருந்தாலும் உலக பொருளாதராத்தில் தனக்கு என்று தனி இடம் உள்ள ஜப்பான் சுனாமியால் உருக்குழைந்து உள்ளது. அதன் முழு இழப்பு என்ன என்று இன்னும் அறிவிக்க வில்லை.

ஜப்பானியர்கள் நிச்சயம் மீண்டு வருவார்கள் என்பதில் ஐயமில்லை.. உழைக்கும் திறமை இருக்கும் வரை முன்னேற்றம் தானாக வரும். ஜப்பான் மக்கள் மீண்டும் பழைய நிலையை அடைய பிராத்திப்போம்...

...............................................................................................

ஒரு வழியாக திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் பங்கீடு முடிந்தது. காங்கிரஸ் கலைஞரை அழுத்தி 63 தொகுதியை வாங்கிக்கொண்டது.

63 சீட் வேண்டும் என்ற எண்ணிக்கையில் இருந்த கவனம் 63 இடம் வாங்கும் போது இல்லாமல் போய்விட்டது. சென்னையில் மட்டும் 5 இடம் வாங்கி உள்ளார்கள்.

சென்னை போடா வெண்ணை என்று சொல்லும் காலம் பக்கத்தில் இருக்கிறது.


...............................................................................................

தேர்தல் கமிஷன் இது வரை இல்லாத பல நெருக்கடிகளை அரசியல் கட்சிக்கு கொடுத்து கிலியை ஏற்படுத்தி உள்ளனர்.

சாலைகளில் சோதனை என்ற பெயரில் சிக்கும் பணம் கொஞ்சம் நஞ்சமல்ல இது வரை கோடிக்கணக்கில் சிக்கி உள்ளது.

தேர்தல் வரை இந்த அதிரடி தொடந்தால் வாக்காளருக்கு பணம் அளிப்பது நிறைய குறைய வாய்ப்பிருக்கிறது


........................................................................................................

அம்மா அதிரடியாக வேட்பாளர் பட்டியலிட்டு கூட்டணி கட்சிகளிடம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் அம்மாவின் தைரியம் பாராட்டத்தக்கது.

கூட்டணி கட்சிகள் தினமும் சென்று பேசி பிரச்சனையை தீர்த்திருக்க வேண்டும்.  போக வேண்டியது பேச வேண்டியது எங்கள் பொதுக்குழுவை கூட்டி யோசித்து சொல்கிறேன் என சொல்வது இப்படி சொல்லிக்கொண்டே இருந்ததால் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்து விட்டார் ஜெ.

இதனால் ஜெவுக்க லாபமும் உண்டு. நஷ்டமும் உண்டு.

........................................................................................................

ஸ்பெக்டரம் வழக்கில் மார்ச் 31ம் தேதி சிபிஜ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறதாம். இத்தகவல் வெளியான சில மணி நேரத்தில் ராசாவின் நண்பரும், இவ்வழக்கில் சிபிஐயால் விசாரிக்கப்பட்டவருமான சாதிக்பாட்ஷா தற்கொலை செய்து கொண்டார் என்ற அதிர்ச்சி செய்தி.

தேர்தல் நேரத்தில் இது மாதிரி நடப்பதால் வாக்குகள் பாதிக்கும் வாய்ப்பு உண்டு.

........................................................................................................

இஸ்ரேலை சேர்ந்த மாடல் அழகி ஒரிட் பாக்ஸ். இவர் டெல்அவில் நகரில் நடந்த ஒரு விளம்பர படத்தில் நடித்தார். அவருடன் ஒரு நாக பாம்பும் நடித்தது. அவர் பழங்காலத்தில், பெண்கள் அணியும் கவர்ச்சி உடையுடன் நடித்தார். படஷீட்டிங்கின் போது அவர் அந்த நாக பாம்பை பிடித்த படி கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்தார்.

அப்போது திடீரென அந்த பாம்பு அவரது உடலை சுற்றிக் கொண்டது. இதனால் பயந்த அவர் அதன் கழுத்தில் இருந்து பிடியை விட்டார். உடனே அந்த பாம்பு அவர் இடது புறத்தில் பொருத்தியிருந்த சிலிகான் மார்பகத்தில் கடித்தது. சிறிது நேரத்தில் சிலிகான் விஷம் ஏறி அந்த பாம்பு செத்து விழுந்தது.

இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, மாடல் அழகி ஒரிட் பாக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

நாட்டு நடப்பு

திமுகவும், அதிமுகவும் கூட்டணி முடிவானாலும் கூட்டணி கட்சிகளிடையே இருக்கும் கலக்கம் இன்னும் போகவில்லை.
காங்கிரசுக்கு 63 தொகுதி கொடுத்த திமுக தேர்தலில் அவர்கள் வெற்றிக்கு பாடு படுவார்களா என்றால் கொஞ்சம் கஷ்டம் தான். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் சீமான் போன்ற தமிழ் ஆர்வலர்கள் நிச்சயம் எதிர் பிரச்சாரம் செய்வதால் 63 தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது என்பது கனவாகத்தான் இருக்கும்..

தகவல்

உயிர்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்று நோய் திகழ்கிறது. அந்த நோய் கடந்த 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது என தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நேஷனல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் மண்ணுக்குள் புதைந்து கிடந்த ஒரு விலங்கின் எலும்பு கூடுகளை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

அவற்றில் புற்று நோய் கட்டிகளை உருவாக்க கூடிய “செல்”கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் புதையுண்டு கிடந்த விலங்கின் எலும்பு கூட்டை சோதனை செய்ததில் அது 60 கோடி ஆண்டு பழமையானது எனவும் கண்டறியப்பட்டது.

உலகின் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செல் உயிரினம் தோன்றியதாக கூறப்படுகிறது. அதில் இருந்து பல செல் உயிரினங்கள் உருவாகி பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது. இந்த உயிரினத்தில் தான் 60 கோடி ஆண்டுக்கு முன்பு புற்று நோய் இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் நிலவு என்ற பெயரில் எழுதி வருகிறார். "எழுதிப் பழகவும், எழுத முடியாதவற்றை இதயத்தில் வைத்து அழவும் பிறந்தவன்" என்று இவரைப்பற்றி வர்ணிக்கிறார்.  அணு உலைகளை பாதுகாக்க மறுத்த ஜப்பான் முதலாளித்துவம் என்ற ஓர் அற்புதமான கட்டுரை எழுதி உள்ளார்.

 
 
தத்துவம்

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.

எவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.



கும்தலக்கா

நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் சுயமரியாதையுடன் அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று அறிக்கை கொடுத்து விலகி உள்ளார்.

40 இடங்களில் போட்டி போடுகிறேன் என்று அறிவித்துள்ளார் சென்னையில் மட்டும் 3இடங்களில் போட்டி இடுகிறாராம். ஏன் இந்த வேண்டாத வேலை...

டெபாசிட் காலி.....


........................................................................................................

வைகோ இன்று கோபப்பட்டு என்ன பிரயோசனம் தன்னிடம் இருந்து ஒவ்வொரு முக்கிய தலைவர்களும் வெளியே போகும் போது தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அன்று உதாசினப்படுத்தினார் இன்று அனுபவிக்கிறார். இனியும் காலம் இருக்கிறது வைகோவைப் பொறுத்த வரை பொது எதிரி காங்கிரஸ் தான் காங்கிரஸ் நிற்கும் 63 தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தி 63 தொகுதிக்கும் சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தால் நிச்சயம் ஓட்டு வாங்கும் வாய்பிருக்கிறது.

அம்மாவுடன் கூட்டணியை பத்திரமாக பார்த்துக்கொண்ட வைகோ கூட இருந்தவர்களை பத்திரமாக பார்த்துக்க முடியலையே...


7 வருடமாக வைகோ அம்மாவுடன் கூட்டணியில் இருந்தார் ஆனால் 7 வருடத்துக்கு முன் வைகோவுடன் இருந்தவர்கள் இன்று இல்லையே.. 


........................................................................................................

அநேகமாக 20ம் தேதிக்குள் அனைத்து கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்துக்கு தயாராவார்கள் என்று எதிர்பார்க்கலாம் இம்முறை அதிக ஊர்களுக்கு சென்று ஜெவும், ஸ்டாலினும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். பிரச்சாரத்தின் போது தலைவர்களின் பேச்சு அனல் கக்கும், அதை விவாதிக்க ஒரு கூட்டம் அலைமோதும், தேர்தலினால் அனைத்து ஊடகங்களும் பரபரப்பாக காணப்படும், இணையதள வாசகர்களான நாமும் பரபரப்பாக இருப்போம்...
........................................................................................................
ஜெ வேட்பாளர் பட்டியலை அறிவித்ததை அடுத்து அவரின் கூட்டணிக் கட்சிகள்  அனைத்தும் கடும் கோபத்தில் தற்போது அலோசனை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் முக்கியமாக கம்யூனிஸ்டுகளும், தேமுதிகவும் கூட்டணியில் இருக்கலாமா இல்லை வெளியேறி 3 வது அணி அமைக்கலாமா என்று அலோசனையில் உள்ளனர்.

3 வது அணி அமைக்கலாம் என்றால் இவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வார்கள் கிருஷ்ணசாமி 50 தொகுதி கேட்பார். கூட்டணியை விட்டு வெளியேறினாலும் நட்டம், கூட்டணியில் இருந்தாலும் அவமானம் பொறுத்திருப்போம் என்ன செய்வார்கள் என்று...