Tuesday, March 22, 2011

உங்கள் பொன்னான வாக்குகளை கேக்க வருகிறார்கள்...

 
திமுக, அதிமுகவில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு காங்கிரஸ் தவிர தேர்தலில் நிற்கும் மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். ஏறக்குறைய பாதி தொகுதிக்கு யார் யாரை எதிர்த்து போட்டியிடுகிறார்கள் என்ற விபரம் மக்களிடம் அறிமுகமாகிவிட்டது.

இனி அடுத்து பிரச்சாரம் தான் ஒவ்வொரு கட்சியும் எங்கு யார் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பட்டியல் இப்பொழுதுதான் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. தேர்தல் கமிஷனின் விதிமுறைகளால் இத்தேர்தலில் ப்ளக்ஸ் பேனர், போஸ்டர் கட்சிக் கொடிகள் எதுவுமில்லாமல் ஊரேல்லாம் பளிச் என்று இருக்கிறது.

இனி தான் தேர்தல் சூடுபிடிக்கும் காலகட்டம் கொளுத்தும் வெய்யிலையும் பொருட் படுத்தாமல் இது வரை தொகுதிக்கு வந்த வாராத தலைவர்கள் எல்லாம் இந்த 20 நாளில் பொதுமக்களை சந்திக்க  பிரச்சார பீரங்கிகளாக வலம் வருவார்கள்.

ஒவ்வொரு கட்சியிலும் நட்சத்திர பேச்சாளர்கள் நிறைந்த கட்சியாக இருக்கின்றது. வழக்கமாக தேர்தல் என்றாலே வைகோவின் பேச்சும் அவர் மானசீக தொண்டன் நாஞ்சில் சம்பத் பேச்சும் அனல் பறக்கும். இத்தேர்தலில் அவர்கள் மிஸ்ஸிங்.

 
திமுகவைப் பொறுத்த வரை பிரச்சாரத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக அணிவகுக்கும் என்று சொல்லலாம் கலைஞர் பேச்சுக்கு என்று வரும் கூட்டம் தமிழகம் எங்கும் பரவி இருக்கிறது. பிரச்சாரத்தில் அதிக கூட்டங்களை அள்ளுபவர்களில் மிக முக்கியமானவர் கலைஞர் தான். அடுத்து ஸ்டாலின் இவரும் தமிழகம் எங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்வார் இவருடைய பேச்சும் அனைவரால் கவனிக்கப்படும்.


திமுகவில் இருந்து இந்த முறை வரும் பேச்சாளர்களில் மக்கள் மனம் மட்டுமல்லாமல் அனைவரது கவனத்தையும் பெற்றவர் குஷ்பு தான். தலைவர்களுக்கு அடுத்த படியாக அதிக கூட்டம் இவருக்கு கூடும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. திமுகவில் அடுத்து அன்பழகன், அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி, நெப்போலியன், பாக்கியராஜ், தியாகு, குமரிமுத்து என்று அதிக பிரச்சார நட்சத்திரங்கள் இருக்கின்றனர். இவர்களுடன் புது வரவாக நடிகர் வடிவேலுவும் இணைந்துஉள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள பாமகவில் இராமதாஸ், அன்புமணி, விடுதலைச்சிறுத்தைகள் திருமாவளவன், காங்கிரசில் சிதம்பரம், ஈவிகேஸ் இளங்கோவன் போன்ற தலைவர்களை உள்ளடக்கிய பெரும் படைகள் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் மேற்கொண்டு தமிழகத்தை வலம் வர இருக்கிறார்கள். இவர்களுடன் சோனியா, ராகுல் வரவும் வாய்ப்பு உண்டு.

அதிமுகவில்  மிகப்பெரிய அதிக கூட்டங்களை கூட்டும் நட்சத்திர பேச்சாளர் ஜெ மட்டுமே. ஜெவைத் தவிர கட்சியில் உள்ள சினிமா நட்சத்திரங்கள் செந்தில், குண்டு கல்யாணம், உதயகுமார், சி.ஆர் சரஸ்வதி, ராதாரவி, ராமராஜன் உள்ளிட்டோர் பிரச்சாரதில் ஈடுபடுவர்.


அதிமுக கூட்டணியில் அடுத்து விஜயகாந்த் இவர் செல்லும் இடங்களிலும், இவர் பேச்சும் மக்களால் அதிகம் ஈர்க்கப்படுகிறது. இதே கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் தா.பாண்டியன், இராமகிருஷ்ணன் மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் வலம் வருவார்கள்..

இதுவரை அமைதியாக இருந்த தேர்தல் களம் இனிதான் சூடுபிடிக்கப்போகிறது அதிக நட்சத்திர பேச்சாளர் கொண்ட திமுக கூட்டணியும், சில முக்கிய தலைவர்களை நட்சத்திர பேச்சாளர்களாக கொண்ட அதிமுக கூட்டணியும் பிரச்சார பீரங்கிகளாக வலம் வர இருக்கின்றனர். குறைந்த நாட்களில் அதிக இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் அதுவும் இல்லாமல் தலைவர்கள் போட்டியிடும் தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு மேல்  தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் சரியான அளவில் நடை முறைப்படுத்தப்பட்டு வருவதால் அரசியல் கட்சிகள் கொஞ்சம் கலக்கத்துடனே பிரச்சாரம் செய்வர்...

5 வருடங்களுக்கு அப்புறம் வரும் நட்சத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழகமக்களே பொறுங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் உங்கள் பொன்னான வாக்குகளுக்காக...

22 comments:

  1. மக்கள் மனம் மட்டுமல்லாமல் அனைவரது கவனத்தையும் பெற்றவர் குஷ்பு தான். தலைவர்களுக்கு அடுத்த படியாக அதிக கூட்டம் இவருக்கு கூடும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை///

    இது உண்மையா?

    ReplyDelete
  2. வைகை said...

    மக்கள் மனம் மட்டுமல்லாமல் அனைவரது கவனத்தையும் பெற்றவர் குஷ்பு தான். தலைவர்களுக்கு அடுத்த படியாக அதிக கூட்டம் இவருக்கு கூடும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை///

    இது உண்மையா?

    கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறி விட்டால் மக்களிடம் விழிப்புணர்வு கூடி விட்டது என்று பொருள்.. சும்மா பாக்க வருவாங்க...

    ReplyDelete
  3. தொலைக்காட்சி சேனல்களிலும் இந்த தாக்கம் இருக்கும், சீரியல்/சினிமா க்களை தடைசெய்து முழுநேர பிரச்சாரம் இருக்கும்

    ReplyDelete
  4. நிச்சயம் இவர்களை பார்ப்பதற்காவது அதிக கூட்டம் கூடும்.
    பார்க்க வரும் கூட்டத்தை அப்படியே வாக்குகளாக மாற்றும் திறமை எல்லோருக்கும் வருவதில்லையே?

    ReplyDelete
  5. வாக்கு கேட்டுவரும் அத்துணை புண்ணியவான்களும் வெய்யிலில் வறுப்பட போகிறார்கள் #கோடைக்கால
    ஏப்ரல் வெயில்

    ReplyDelete
  6. //5 வருடங்களுக்கு அப்புறம் வரும் நட்சத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழகமக்களே பொறுங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் உங்கள் பொன்னான வாக்குகளுக்காக...//

    ஆமா வாக்குப் பொறுக்கிகள் வருகிறார்கள்...

    சென்ற முறை சென்றவர்கள் இந்த முறை வருகிறார்கள்... மீண்டும் அடுத்த முறை வருவோம் என்ற நம்பிக்கையோடு...

    ReplyDelete
  7. டும்டும்...டும்டும்...
    மேளம் கொட்டி வரவேற்போம்...

    ReplyDelete
  8. //வழக்கமாக தேர்தல் என்றாலே வைகோவின் பேச்சும் அவர் மானசீக தொண்டன் நாஞ்சில் சம்பத் பேச்சும் அனல் பறக்கும். இத்தேர்தலில் அவர்கள் மிஸ்ஸிங்.//

    உண்மை. வை.கோவின் பேச்சுத்திறமையை அரசியல் மாறுபாடுகளைக் கடந்தும் ரசிக்கலாம்.

    ReplyDelete
  9. //திமுகவில் இருந்து இந்த முறை வரும் பேச்சாளர்களில் மக்கள் மனம் மட்டுமல்லாமல் அனைவரது கவனத்தையும் பெற்றவர் குஷ்பு தான். //

    சிரிக்கவா அழவா புரியவில்லை!

    ReplyDelete
  10. //இவர்களுடன் புது வரவாக நடிகர் வடிவேலுவும் இணைந்துஉள்ளார்.//

    The circle is complete

    ReplyDelete
  11. //அதிமுக கூட்டணியில் அடுத்து விஜயகாந்த் இவர் செல்லும் இடங்களிலும், இவர் பேச்சும் மக்களால் அதிகம் ஈர்க்கப்படுகிறது//

    இப்போதைய இவரது அரசியல் நிலைப்பாட்டில் எப்படிப் பேசுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

    வரட்டும்..வரட்டும்!

    ReplyDelete
  12. தேனாறும் பாலாரும் இவங்க வாயில இருந்து கொட்ட போகுது எல்லாம் தயாரா இருங்க ...............

    ReplyDelete
  13. It happens during every elections this would continue until we make sure of ourself to not to sell self for freebies

    ReplyDelete
  14. // சி.பி.செந்தில்குமார் said...

    இது உண்மையா?

    கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறி விட்டால் மக்களிடம் விழிப்புணர்வு கூடி விட்டது என்று பொருள்.. சும்மா பாக்க வருவாங்க...//


    சும்மா எத பாக்க வருவாங்க. தல நீங்க கம்மென்ட் போட்ட கூட டபிள் மீனிங் தானா?

    ReplyDelete
  15. வரட்டும் வரட்டும் அடிக்கற வெயிலுக்கு கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா கட்டுங்கப்பா..

    ReplyDelete
  16. நலமா
    வேலைவிசயமாக வெளியூரில் இருப்பதால் உங்கள் பக்கம் வரமுடியவில்லை
    நம்ம பதிவு

    பிரலபல பதிவரும் அவரின் ஃபலோயர்களும்
    http://speedsays.blogspot.com/2011/03/blog-post_22.html
    ///////

    ReplyDelete
  17. பிரச்சனையில்லா பிரச்சாரம் தேவை.வாழ்க...

    ReplyDelete
  18. அய்....குஷ்பூ படம்...அதுக்கே ஓட்டு போடலாமே!(நான் சொன்னது தமிழ்மனம் ஓட்டு)

    ReplyDelete
  19. யார் யார் தேர்தல் பிரச்சாரம் பண்ணினாலும், இந்த முறை செந்தில், வடிவேல் இவிய்ங்க ரெண்டு பேரும் தான் அட்டகாசம் பண்ண போறாய்ங்க..

    அ.தி.மு.க.. இந்த முறை எஸ்.எஸ்.சந்திரன் அவர்களை மிகவும் மிஸ் செய்கிறது...

    சவுண்ட் விட முடியாத இன்னொரு “பிரபலம்” டி.ராஜேந்தர்...

    ReplyDelete
  20. //திமுகவில் இருந்து இந்த முறை வரும் பேச்சாளர்களில் மக்கள் மனம் மட்டுமல்லாமல் அனைவரது கவனத்தையும் பெற்றவர் குஷ்பு தான். தலைவர்களுக்கு அடுத்த படியாக அதிக கூட்டம் இவருக்கு கூடும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.//


    அப்படியா???
    ஏதோ சொல்றீங்க.. சரி சரி.
    கூட்டத்துல முதல் ஆளா நீங்க தான் நிப்பீங்களாமே.. உண்மையா?

    ReplyDelete