Thursday, March 17, 2011

2011 தேர்தல்: ராஜதந்திரி யார்? ஜெ., வா? கலைஞரா?


நேற்று முன் தினம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் போது அம்மா அனைத்து 160 தொகுதிகளுக்கு வேட்பாளரை தேர்வு  செய்து வெளியிட்டது திடீரென அரசியல் களத்தில் அனைவரையும் பரபரப்பாக்கியது . கலைஞர் 16ம் தேதி அறிவிக்கின்றேன் என்றார் ஆனால் அது தள்ளி 17க்கு சென்று விட்டது.

இதற்காக காத்திருந்தது போல் ஜெ தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்தது கூட்டணி கட்சி அல்ல திமுக தான் எந்த தொகுதிக்கு எந்த வேட்பாளர் அவரை எதிர்க்கும் நம் வேட்பாளர் சவால் விடும் வகையில் இருக்குமா என்று திமுக முதலில் சீட் மறுத்தவர்களுக்கு கூட மறுபடியும் சீட் கொடுத்திருக்கிறது. (ஒரு பத்திரிக்கையில் சிலருக்கு சீட் இருக்காது என்று சொல்லி இருந்தது அவர்கள் எல்லாம் நேற்று வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்)

வலுவான கூட்டணி இருந்தால் வெற்றி சுலபமாகும் என்பதோ, தொகுதிகளைப் பறித்துக்கொண்டால், கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடையும் என்பதோ ஜெயலலிதா அறியாதது அல்ல. முதலில் அறிவித்து விட்டு அந்த அறிக்கையை வாபஸ் வாங்குவது அவருக்கு புதிதல்ல. அவருடைய திட்டம் எல்லாம் இப்ப ஒரு வேட்பாளைரை அறிவித்து விட்டு திமுக வேட்பாளரை அறிவித்ததும் கூட்டணி கட்சிகளுக்கு வேண்டியதை கொடுத்து விட்டு திமுக வேட்பாளருக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதாக இருக்கலாம்.

நேற்று நடந்த சம்பவங்களை பார்க்கும் போது தா.பாண்டியன் கூறியதை பார்த்தால் 3 அணி அமைக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை எங்களின் நோக்கம் எல்லாம் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறக்கூடாது அதற்காகத்தான் நாங்கள் பாடுபடுகிறோம் என்றார்.
விஜயகாந்த் கூறும் போது 3 வது அணி பற்றி முடிவு செய்யவில்லை எதுவாக இருந்தாலும் நாளை உங்களை அழைத்து கூறுகிறேன் என்றார்.

வைகோ எதுவும் பேசவில்லை, அதிமுக தரப்பும் எதுவும் பேசாமல் ஜெ தனது பிரச்சார பயணத்தை தள்ளிவைத்து விட்டு நேற்று மாலைக்கு மேல் அதிமுக தரப்பு கூட்டணி கட்சிகளிடம் பேச ஆரம்பித்து விட்டது இதன் மூலம் 3 வது அணி நிச்சயம் இல்லை என்று கூறலாம்.

இன்று காலை பத்திரிக்கை செய்தியில்  படி தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூ., கேட்கும் தொகுதிகளை தருவதற்கு, அ.தி.மு.க., சம்மதித்தது. ம.தி.மு.க.,வுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்தும், பேச்சு வார்த்தை துவங்கியது. ம.தி.மு.க.,வுக்கு 13 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதற்கும் பேச்சு வார்த்தை நடந்தது. புதிய தமிழகம் கேட்ட, ஒட்டப்பிடாரம், வால்பாறை ஆகிய தொகுதிகளை தரவும், அ.தி.மு.க., தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. சரத்குமார் கேட்ட, தென்காசி, நான்குநேரி தொகுதிகளை ஒதுக்கவும், சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், வெற்றி பெற்ற தொகுதிகளை தருவதற்கும், தே.மு.தி.க.,வுக்கு அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகளை ஒதுக்கவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

ஜெ வின் கணக்குப்படி கூட்டணி கட்சிகள் யாரும் வெளியேறவும் கூடாது அதே சமயம் திமுக வேட்பாளருக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும், கூட்டணி கட்சிகளும் எனக்கு அத்தனை தொகுதி வேண்டும், நாங்கள் இங்கே தான் நிற்போம் என்று எதிர் பதில் சொல்லாமல் அவர்கள் கேட்டது இரண்டு கேட்காதது இரண்டு என்று கூட்டணிக்கு தொகுதி பிரிக்கப்படலாம்.

நேற்று காலை முதல் மாலை வரை ஊரேங்கும் இதே பேச்சு 3 வது அணி அமையுமா? அமையாதா? இதை அனைத்திக்கும் முற்றுப்புள்ளி வைத்து இன்று மாலை அல்லது நாளைக்குள் கூட்டணிக்கு தொகுதிகள் அறிவிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்...

இப்ப சொல்லுங்க சிறந்த ராஜதந்திரி ஜெ., வா? கலைஞரா?

33 comments:

  1. இப்பவே கண்ணை சுத்துதே....
    நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு
    ரூம் போட்டு யோசிப்பாங்யளோ...
    இப்படித்தான் நாம புலம்ப முடியும்

    ReplyDelete
  2. யார் சிறந்த ராஜத்தந்திரி என்பது தெரியவில்லை ஆனால் சிறந்த ஏமாளிகள் மக்கள் மட்டும்தான் என்பது மட்டும் சரியாக தெரியும்

    ReplyDelete
  3. HOW YOU PEOPLE CAN TWIST EVERYTHING TO PRAISE JAYA? THE DAMAGE HAS ALREADY DONE YESTERDAY IN FRONT OF THE WHOLE WORLD.WHY ARE YOU TRYING TO HIDE THE TRUTH? IF YOU ARE A HUMANBEING , YOU WOULD BOLDLY ACCEPT JAYA'S REAL FACE. DONT TWIST THE REAL FACTS AND SCRIBBLE LIKE A MENTAL.

    ReplyDelete
  4. ஹி ஹி ஹி அவங்களை விட நீங்க ரொம்ப யோசிக்குறீங்க

    ReplyDelete
  5. I like to go with the exact comment given by THOPPITHOPPI. Lets see who will win the rat race!

    ReplyDelete
  6. மூன்றாவது அணி அமைந்தால் அடுத்த தேர்தலுக்கு இந்த இரண்டோடு அந்த மூன்றாவது பேரையும் பட்டியலில் சேர்க்க வேண்டியதுதான். ஆக மொத்தம், நிலைமை மாறப்போவதில்லை.

    ReplyDelete
  7. ஆளுக்கு முன்னாடி பட்டியல வெளியிட்டுட்டு ராஜதந்திரமாம்.வெங்காயம்.பேசாம கதை எழுத போங்க சார்,நல்ல எதிர்காலம் உங்களுக்கு இருக்கு.

    ReplyDelete
  8. பார்க்களாம் உங்கள் கருத்து சரியா என்று...

    ReplyDelete
  9. ungalukku thericha ithu.
    kalaignar theriyamala irrukkum??

    இப்ப சொல்லுங்க சிறந்த ராஜதந்திரி ஜெ., வா? கலைஞரா?

    ReplyDelete
  10. எல்லா கட்சிக்கும் சீட்டுகளை வாரி வாரி வழங்கும் எப்படியாவது கூட்டணி ஆட்சியாவது அமைத்து விடமூடியுமா என நடுங்கி கிடக்கும் கலைஞரா ராஜதந்திரி.?.பயந்தாங்கொள்ளி

    ReplyDelete
  11. enna oru raja thanthiram. but yemaarapovathu makkalthaan intha electionilum.

    ReplyDelete
  12. சங்கவி சார்: உங்கள் ராஜதந்திரி யார்? ரொம்ப நல்ல கற்பனை, நீங்கள் உங்களைப்பற்றி என்று எழுதியிருக்கும் " நேர்மையாக வாழத்துடிக்கும் " என்பதற்கு பக்கத்தில் சின்னதாக " ஜெ விற்கு " என்பதையும் சேர்த்துபோட்டல் , ரொம்ப நல்ல இருக்கும். ஆனாலும் ஒன்னு புரியலே இந்த அம்மாவை கிண்டல் பண்ணுகிறீர்கள இல்ல ஜால்ரா வான்னு. பயந்து போய், எல்லா நிகழ்ச்சியையும் கேன்சல், பண்ணிட்டு ஓடி போய் கூட்டணி கட்சி காலில் விழும் சத்தம் இங்கே கேட்குது, நீங்க வேற போய் வேற வேலைய பார்போம, இத வேற ரூம் போட்டு யோசிசிகிட்டு, போங்க சார். முருகவேல் ச - ஆழ்வார்பேட்டை, சென்னை 18

    ReplyDelete
  13. //goma said...

    இப்பவே கண்ணை சுத்துதே....
    நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு
    ரூம் போட்டு யோசிப்பாங்யளோ...
    இப்படித்தான் நாம புலம்ப முடியும்//

    நேத்து எல்லாரும் இப்படித்தான் புலம்பி இருப்பாங்க..

    ReplyDelete
  14. ..THOPPITHOPPI said...

    யார் சிறந்த ராஜத்தந்திரி என்பது தெரியவில்லை ஆனால் சிறந்த ஏமாளிகள் மக்கள் மட்டும்தான் என்பது மட்டும் சரியாக தெரியும்..

    அது இன்று மட்டுமல்ல ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே ஏமாளிகள் மக்கள் தான...

    ReplyDelete
  15. சௌந்தர் said...

    ஹி ஹி ஹி அவங்களை விட நீங்க ரொம்ப யோசிக்குறீங்க...

    ஏதோ அப்படியே கொஞ்சம் யோசிச்சு பார்த்தேன்...

    ReplyDelete
  16. ..இந்திரா said...

    மூன்றாவது அணி அமைந்தால் அடுத்த தேர்தலுக்கு இந்த இரண்டோடு அந்த மூன்றாவது பேரையும் பட்டியலில் சேர்க்க வேண்டியதுதான். ஆக மொத்தம், நிலைமை மாறப்போவதில்லை....

    அது என்றைக்கும் மாறாது...

    ReplyDelete
  17. ...வேடந்தாங்கல் - கருன் *! said...

    பார்க்களாம் உங்கள் கருத்து சரியா என்று......


    பொறுத்திருப்போம்...

    ReplyDelete
  18. ...B.MURUGAN said...

    ஆளுக்கு முன்னாடி பட்டியல வெளியிட்டுட்டு ராஜதந்திரமாம்.வெங்காயம்.பேசாம கதை எழுத போங்க சார்,நல்ல எதிர்காலம் உங்களுக்கு இருக்கு....

    மே 13க்கு அப்புறம் யார் கதை எழுதப்போறாங்க என்று நிச்சயம் தெரியும்...

    ReplyDelete
  19. ..ஆர்.கே.சதீஷ்குமார் said...

    எல்லா கட்சிக்கும் சீட்டுகளை வாரி வாரி வழங்கும் எப்படியாவது கூட்டணி ஆட்சியாவது அமைத்து விடமூடியுமா என நடுங்கி கிடக்கும் கலைஞரா ராஜதந்திரி.?.பயந்தாங்கொள்ளி...

    ம்....

    ReplyDelete
  20. ..Murugavel S said...

    சங்கவி சார்: உங்கள் ராஜதந்திரி யார்? ரொம்ப நல்ல கற்பனை, நீங்கள் உங்களைப்பற்றி என்று எழுதியிருக்கும் " நேர்மையாக வாழத்துடிக்கும் " என்பதற்கு பக்கத்தில் சின்னதாக " ஜெ விற்கு " என்பதையும் சேர்த்துபோட்டல் , ரொம்ப நல்ல இருக்கும். ஆனாலும் ஒன்னு புரியலே இந்த அம்மாவை கிண்டல் பண்ணுகிறீர்கள இல்ல ஜால்ரா வான்னு. பயந்து போய், எல்லா நிகழ்ச்சியையும் கேன்சல், பண்ணிட்டு ஓடி போய் கூட்டணி கட்சி காலில் விழும் சத்தம் இங்கே கேட்குது, நீங்க வேற போய் வேற வேலைய பார்போம, இத வேற ரூம் போட்டு யோசிசிகிட்டு, போங்க சார். முருகவேல் ச - ஆழ்வார்பேட்டை, சென்னை 18..

    நன்றி... போட்டுட்டாப்போகுது... முதல்ல விஜயகாந்தோ அல்லது கம்யூனிஸ்டுகளோ மூன்றாம் அணி அமைக்கிறோம் என்று எப்பவாவது சொன்னாங்களா... அப்புறம் ஏன் நாங்க பயந்து அவுங்க கால்ல விழனும்...

    ReplyDelete
  21. நிச்சயமாக ஜெ தான் ..அனைவரையும் இந்த கூட்டணி தான் ஸ்ட்ராங் என்று அனைவருக்கும் தெரியும் படி செய்தது ..

    ReplyDelete
  22. nalla karpanai valam..

    Jaya Effigyy burnt seruppadi by DMDK, MDMK ... idhelam endha kanakula varum? ennvagum?

    ReplyDelete
  23. இப்படியொரு சாத்தியகூறு இருப்பது இப்பத்தான் தெரிகிறது.
    அரசியல் சானக்கியனையா நீர்

    ReplyDelete
  24. இப்படியொரு சாத்தியகூறு இருப்பது இப்பத்தான் தெரிகிறது.
    அரசியல் சானக்கியனையா நீர்

    ReplyDelete
  25. இரண்டுமே காலை வாரி விடும் கழிசடைகள் .இதற்கு ராஜதந்திரம் என்று ஒரு பெயர்? நேர்மை இல்லாமல் இருபதுதான் ராஜதந்திரம் என்றால் ரெண்டுமே சமம்தான்.

    ReplyDelete
  26. நன்றி சங்கவி! மூன்றாவது அணி அமைக்க மாட்டோம்னு சொல்லலையே, நாளைக்கு (இன்று (18 -03 -2011 ) கூடி பேசி முடிவெடுப்பதாக தான் சொன்னங்க. எங்க அமைசிட்டபோரங்கலோன்னு பயந்து தானே எல்லா ப்ரோக்ராம்மையும் கேன்சல் பண்ணிட்டு, சென்னையிலேயே ஒக்காந்துட்டங்க. . இந்த விசயத்தில் கருணாநிதிக்கும் ஜெ க்கும் வித்தியாசமே இல்லைங்க. அவருக்கு காங்கிரஸ் எவருக்கு அவரை தவிர, மொத்தத்தில் ரெண்டு பேருக்கும் பொது " சரணாகதி" அத தாங்க சொல்ல வர்றோம். நாட்டுக்கு நல்லு நடந்தால் நல்லது. முருகவேல் ச - ஆழ்வார்பேட்டை, சென்னை 18

    ReplyDelete
  27. பொருத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு...

    ReplyDelete
  28. இப்ப தான் ஹசாலி வீட்டுப்பக்கம் போய் வந்தான்...
    அங்கயும் அரசியல்...இங்கயும் அரசியலா...
    ஒழிக தமிழக அரசியல்...ஹிஹி

    தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!
    http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_18.html

    ReplyDelete
  29. தொண்டர்களை மனதளவில் தளர வைப்பதும், கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் ஒத்துழைப்பை இழப்பதும் தான் ராஜ தந்திரமா..

    ReplyDelete
  30. கூட்டணி பற்றிய விஷயத்தில் இருவரும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிட்டதாகவே தோன்றுகிறது.
    இதில் நிச்சயம் சுயலாபம் மட்டுமே இருப்பதால் நிச்சயம் தொண்டர்கள் குழப்பமடைவார்கள். களப்பணியாற்றுவதில் ஒற்றுமை இருக்காது.
    இருவர் நடத்திய நாடகமும் வெட்டி வேலையே..

    ReplyDelete
  31. ///சிறந்த ராஜதந்திரி ஜெ., வா? கலைஞரா?/////

    அண்ணே! நீங்க தான் சிறந்த ராஜதந்திரி. சும்மா வச்சுக்கங்க....


    எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

    ReplyDelete
  32. இவங்க ரெண்டு பேரையும் நல்லா சீர்தூக்கி பார்த்து ஓட்டு போட்டா நாம தான் தீர்க்கதரிசி...

    ReplyDelete