Tuesday, November 24, 2009

எனது எதிரிகள்

நமது சமுதாயத்தில் தினமும் நாம் பல முகங்களை பார்க்கிறோம், பழகுகிறறோம் நமக்கு அனைவரும் பிடிப்பதில்லை வெகு சிலரே நம்மை கவருகின்றனர் மீண்டும் அவர்களை சந்திக்க வாய்ப்புகிடைத்தால் நண்பர்கள் ஆகிவிடுகிறோம். இதில் நண்பர்கள் குறைவு, பிடிக்காதவர்கள் (எதிரிகள்) அதிகம். ஏன் அவர்கள்  பிடிக்கவில்லை இதுவே எனது எதிரிகள்.....


பொது இடத்தில்
புகை பிடிப்பவர்கள்.......

எச்சில் துப்புபவர்கள்.....

தண்ணி அடித்து விட்டு
வாகனம் ஓட்டுபவர்கள்...
பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்.....

பேசுகிறேன் என்று சொல்லி
மொக்கை போடுபவர்கள்......

நான் சொல்வது தான் சரி
என்பவர்கள்.......

தனது தவறை
ஓத்துக்கொள்ளாதவர்கள்......

மனைவியை அடிப்பவர்கள்.......

முககவசம் அணியாமல்
வாகனம் ஓட்டுபவர்கள்.......

ஏழை மக்களை வயிற்றில்
அடிப்பவர்கள்.......

வேலை வாங்கித்தருகிறேன் என்று
அப்பாவிகளை ஏமாற்றுபவர்கள்.......

கூடவே இருந்து குழி
பறிப்பவர்கள்........

என்னிடம் பணம் இருக்கிறது
என்னால் எல்லாம் செய்யமுடியும்
என்று அகந்தையில் இருப்பவர்கள்........

மக்களுக்கு சேவை செய்கிறேன்
என்று சுருட்டும் ஓட்டுப்பொறுக்கிகள்.......

இவை அனைத்தையும் விட
நம் வீட்டில் பழகி நமது நண்பன் / தோழி
என்னும் பெயரில் நம்பிக்கைத் துரோகம் செய்யும்
துரோகிகள்.......

இன்னும் நிறைய இருக்கு.........
என்ன செய்வது இதுதான் நமது சமுதாயம்.......

Thursday, November 19, 2009

பால்ய காலம் - 6 முதல் 10 வயது வரை

இது வரை எனது வலைப் பூவில் நான் படித்த எனக்குப்பிடித்த பதிவுகளை மட்டுமே சேர்த்து இருந்தேன்.
இனி எனது அனுபவம், எனது இளமைக்காலம், என் பார்வைியல் அரசியல், என் பார்வைியல் சினிமா, எனது சமூகம், எனது நண்பர்கைள்ப பற்றி இனி
கிறுக்கப்போகிறேன்........

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோடு மாவட்டம், பவானி அருகே சிற்றாறும், காவிரியும் சங்கமிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இனிய கிராமத்து மண்வாசனையுடன் உள்ள குக்கிராமத்தில் பிறந்தேன். நான் 1 முதல் 5வது வரை படித்தது எமது ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்
நான் நிறைய குரும்பு செய்வேன் அதனால் தினமும் எனக்கு எனது முதல் ஆசான்களிடம் பூசை (அடி) பின்னி எடுத்துவிடுவார்கள் இன்றும் என் பால்ய நண்பர்கள் என்னிடம் கிண்டலடிப்பார்கள். நான் படிக்கும் போது அடித்த லூட்டிகள் நிறைய ஞாபகங்கள் இருக்குகின்றது. இங்கு முக்கியமாக எனது நண்பர்கள் விஜயகுமார், செந்தில், அருள்(இவன்கூட தினமும் சண்டை போடுவேன்), வேலுச்சாமி, வேல்முருகன், பரந்தாமன் (இன்று இவன் என் கூட இல்லை), சக்தி (கம்பு சுற்றுவதில் வீரன்), முருகானந்தம் இன்னும் பலர் இவர்கள் அனைவருடன் இன்றும் தொடர்பில் உள்ளேன். பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்லும் வழியில் சிற்றாறு உள்ளது இங்கு தண்ணீர் வந்தர்ல மீன் பிடிக்கச் செல்வோம் இப்படி செல்லும் போது ஒரு நாள் தண்ணீர் அதிகமாக வரும்போது நான் அடித்து செல்லப்பட்டேன் நடு ஆற்றில் சிக்கிக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல்(அப்போது எனக்கு நீச்சல் தெரியாது,
நான் நீச்சல் கற்றது தனிக்கதை) எனது அண்ணன் கிருஷ்ணமூர்த்தி பாலத்தின் மேல் சென்று கொண்டு இருந்தவன் வந்து என்னைக்காப்பாற்றி எனது வீட்டில் கொண்டு சேர்த்தான் அம்மாவிடம் அன்று செம்ம பூசை அது பத்தாது என்று அடுத்தநாள் அம்மா எனது ஆசானிடம் பள்ளி வந்து கூறிவிட்டாள் அன்று விழுந்த அடி வாழ்க்கையில் இன்று வரை நினைவிருக்கிறது.

இந்த வயதில் ஊார்திருவிழா வந்தா குஷி தான் அதுவும் எங்க ஊர்பண்டிகை மே மாதாம் தான் வரும் இங்க அடிக்கும் கூத்து அன்று முதல் இன்று வரை கம்பத்து ஆட்டம் ஆடுவேன் இதைப்பற்றி தனியா எழுதுறன்.

ஊரில் சின்ன வயதில் விளையாடும் விளையாட்டு இன்னும் நினைத்தால் சந்தோசம் தான் நொங்கு வண்டி ஓட்டுவது, டயர் வண்டி ஓட்டுவது, தெல்லு (சோடா பாட்டில் மூடியை வைத்து கல்லால் அடித்து வியைாடுவது), குண்டு, பம்பரம், கண்ணாமூச்சு, இடு பந்து, கொழை கொழையா முந்திரிக்கா,
கில்லி (இதில் பல வகை பில்லுக்குச்சி, கஞ்சி காச்சுதால்) சனி ஞாயிறுகளில் கூட்டாஞ்சோறு, மீன் பிடித்து சுட்டு தின்பது இவ்விளையாட்டுக் கெல்லாம் எங்கள் தலைவர் விஜயகுமார் தான். இப்படி எல்லாம் விளையாடி, அடிவாங்கி ஒரு வலியாக 5ம் வகுப்பு பாஸ் செய்து 6 வது படிக்க பொரிய ஸ்கூல்க்கு அனுப்பினாங்க..... அங்க வாங்கின கொடுத்த அடி, உதை, குத்து, சந்தோஷம், முதல் காதல், திருட்டு தம் இன்னும் நிறைய இருக்கு....
அநேகமா நியைற மொக்ககை போட்டுட்டன்னு நினைக்கிறேன் (நினைக்கிறது என்ன பெரிய மொக்கைன்னு உங்க மனது சொல்லுது சின்னப்பையன விட்டுறுங்க....................)

Wednesday, November 18, 2009

கவிதையை ரசிப்பவரா நீங்க.......

நீ

ஏதேதோ பேசத்தோன்றியது
உன்னிடம்
உன் புதிய தோழி
உன் புதிய நண்பன்
உன் புதிய நம்பிக்கை
உன் புதிய வாழ்க்கை
நீ விட்டுச்சென்ற இடத்திலேயே
உட்கார்ந்து இருந்தேன் நான்.......
உன் உதடுகள் என்பெயரை உச்சரிக்குமா?
உன் மனதில் என் நினைவுகள் இருக்குமா?
காத்துக்கிடக்கிறேன் நான்.....
உன்னுடைய நேற்று நான்
எனக்கு எப்போதும் நீ................

****************************************************************************

நீ சம்மதித்தால்........

கால் வலிக்கும் வரை.......

உன் விரல் பிடித்து நடக்க வேண்டும்.........

உன் இரண்டு வயது குழந்தையாக............

****************************************************************************

நினைவுகள்.......

சத்தியமாய் சொல்கிறேன்

என்னிடம் உன் நினைகள் இல்லை......

உன் நினைவுகளிடம் தான் நான் இருக்கிறேன்

அ முதல் ஃ வரை

ம்மா இங்கே வா! வா!
சை முத்தம் தா! தா!
லையில் சோறு போட்டு
யைத் தூர ஓட்டு!
ன்னைப் போன்ற நல்லார்
ரில் யாரும் இல்லார்!
ன்னால் உனக்குத் தொல்லை
தும் இங்கே இல்லை!
யம் இன்றி சொல்வேன்!
ற்றுமை என்றும் பலமாம்!
தும் செயலே நலமாம்
வை சொன்ன மொழியாம்
தே நமக்கு வழியாம்.

நன்றி : http://thamizsangam.blogspot.com/

பிரிவு...... (உன்னிடம் இருந்து தான்)

பிரிவுகள்தான்
அன்பின் ஆழத்தை
அளக்கும் கருவியாமே…?

பார்த்தாயா
சின்னப் பிரிவிற்குள்
நீ சிதைந்து போனதை…?

இது
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் சேர்த்துத்தான்
சொல்கின்றேன்.

ம்…
இப்போது புரிகிறதா
என்மீது நீ கொண்ட நேசமும்
உன்மீது நான் கொண்ட நேசமும்
எவ்வளவு ஆழமானதென்று…?

சுட்டது . . .

Monday, November 2, 2009

இவ்வலைத்தளம் பற்றி

இத்தளம் முழுக்க முழுக்க என்னைப் பாதித்த, கவர்ந்த, நான் அவ்வப்போது எழுதிய க(வி)தைகள், நான் ரசித்த சில விசயங்கள் மற்றும் எனது விமர்சனங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நான் உருவாக்கிய வலைப் பூ

இது யாரையும் புண்படுத்தவோ இல்லை அவமதிக்கவோ ஏற்படுத்தவில்லை…

நிறைய பேர் என்னிடம் கேட்பது இதை தான் (நிறையா forwards, வேற யாரோ எழுதினது, பாடல் வரிகள் தான் இருக்கு… புதுசா அவ்வளவு இல்லையே என்பது தான்..) அவர்களுக்கு என் முதல் வரி பொருந்தும்… எனக்கு பிடித்தவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வது எனக்கு பிடிக்கும்)..

அப்படி ஆரம்பித்தது தான் இந்த தளம்.....

வாருங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் ( இல்ல திட்டுங்க )

Sunday, November 1, 2009

என்னைப்பற்றி

எனது பெயர் : சங்கவி ( நான் வச்ச பெயர் தான் )

படிப்பு : டிகிரி

தொழில் : வரை கலை வடிவமைப்பாளர்

பொழுதுப்போக்கு :

* கொஞ்ச நேரம் கிடைத்தாலும் படிக்க ஆரம்பித்துவிடுவேன். ஒரு வகையில் நல்ல பழக்கம் தான். ஆனால் படிக்க ஆரம்பித்தால் படித்து முடிக்கும் வரையில் தூக்கம் வராது....

* பாட்டுகள் கேட்பது

* நல்ல படங்களைப் பார்ப்பது

* நண்பர்களுடன் சண்டைப் போடுவது (சும்மா தான் ) , அக்காக்களுடன் சண்டைப் போடுவது

* நண்பர்களுடன் ஊர்சுற்றுவது

இன்று எப்படியோ நாளை நமதே...