Sunday, June 30, 2013

எங்கள் மண்ணில் பிறந்த இந்தியாவின் தலைமை நீதியரசருக்கு வாழ்த்துக்கள்..



இந்தியாவைச் சார்ந்த ஒருவருக்கு ஓர் உயர் பதவி கிடைத்தால் இந்தியாவில் உள்ள அனைவரும் மிக மகிழ்ச்சி அதே போல் ஒரு மாநிலத்தில் உள்ளவருக்கு உயர் பதவி கிடைக்கும் போது அந்த மாநில மக்களுக்கு மிக மகிழ்ச்சியான ஒன்று.. நம்ம ஊர்க்காரர் ஒருவர் இந்தியாவின் உயர் பதவியில் அமரும் போது அவரின் ஊரே மிக மகிழ்ச்சியாக இருக்கும் அந்த மகிழ்ச்சியை இன்று கொண்டாடி வருகின்றனர் ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் காடப்பநல்லூர் கிராமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களான சித்தார், மாணிக்கம்பாளையம், குரும்பபாளையம், கேசரிமங்கலம், சிங்கம்பேட்டை ஊர் மக்கள்..

இந்த கிராம மக்கள் இவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான தலைமை நீதியரசர் என்ற பதவியை பெற்றுள்ள எங்கள் மண்ணின் பிறந்து எங்கள் மண்ணிற்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் நீதியரசர். திரு.சதாசிவம் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் காடப்பநல்லூர் என்ற கிராமத்தில் தான்... இதனால் இன்று இந்த கிராமங்கள் எல்லாம் மகிழ்ச்சி கடலில் மூழ்கிஉள்ளது.

எங்கள் பகுதியில் டீக்கடை, பெட்டிக்கடை என்று எங்கு பார்த்தாலும் இது தான் பேச்சு அவர் கல்லூரி படிக்கும் போது இங்கு தான் பேருந்து ஏறுவார், இவர்கடையில் தான் தேநீர் அருந்துவார் அவருடன் ஒன்றாவது முதல் நான் படித்தேன் என எங்கும் இவரின் பேச்சுதான்.. அவருடன் படித்தவர்கள் எல்லாம் சந்தோசமிகுதியில் இருக்கின்றனர்.

எங்கள் பகுதி அவ்வளவு ஒன்றும் வளர்ந்த பகுதியல்ல அன்று.. மேட்டூர் அணை கட்டியதால் ஆங்கிலேயர் புண்ணியத்தில் சிற்றாறு ஒன்று போய்க்கொண்டு இருந்தது அத்ன் மீது பாலம் கட்டியபோது சிற்றாறு பாலம் மருவி சித்தார் பாலம் ஆகி இன்று சித்தார் என்ற ஊராக வளர்ந்து நிற்கிறது எங்கள் கிராமம்.. இங்குள்ள தொடக்க பள்ளியில் கல்வி பயன்ற அவர் 6ம் வகுப்பு படிக்க சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்த அவர் பின் சிஎன்சி கல்லூரியில் படித்துள்ளார்.. இன்று எல்லா பேருந்துகளும் எங்கள் ஊரில் நின்று செல்லும் அன்று அப்படி அல்ல மிக குக்கிரமான இந்த கிராமத்தில் இருந்து இன்று உயர்பதவியை பெற்ற அவருக்கு வாழ்த்துக்கள்...

நீதியரசருக்கு இந்தியாவில் வாழ்த்து சொல்லாதவர்களே இருக்க வாய்ப்பில்லை அப்படி இருக்கும் போது எங்கள் ஊரில் பிறந்து எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்த நீதியரசருக்கு வலைப்பதிவின் மூலம் வாழ்த்து சொல்வதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு.. அவர் பிறந்த மண்ணில் நாங்கள் பிறந்ததற்கு மகிழ்ச்சி.. நீதியரசர் இந்த பதவியில் அமர்ந்து இந்திய வரலாற்றில் இடம் பிடித்ததால் எங்கள் கிராமத்துக்கு பெருமையே....

Wednesday, June 19, 2013

அஞ்சறைப்பெட்டி 20.06.2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் 6 வது வேட்பாளர் என்ற பேச்சு தான் இன்று பரபரப்பு பேச்சு அரசியலில். யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி குதிரி பேரம் நடக்குமா என்று ஒவ்வொலு டீக்கடையின் முன்பும் இதுதான் இன்றறைய சூடான விவாதம்.
யார் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் தூர நின்று வேடிக்கைபார்ப்பது நாம் தான் அன்று கூட்டணியே வேண்டாம் என்றவர்கள் எல்லாம் சந்தித்துக்கொள்கின்றனர் ஆனால் முடிவு எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  ................................................................
 
 
வடமாநிலங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.. தென் மாநிலங்களில் இந்த முறையுஙம பருவமழை பொய்த்து விட்டது போல.. தினமும் வாசல் மட்டுமே நனைகிறது... என்னைக்கு கொட்டு விவசாயம் செய்வது என்பது புதிராகவே உள்ளது...

நதிகளை இணைத்தால் பல பயன்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் எந்த அரசியல் கட்சிகளும் அதை நினைப்பது வட இல்லை தேர்தல் வரும் போது மட்டுமே அனைவருக்கம் ஞாபகம் வருகின்றது... இந்த நதி நீர் இணைப்பு...
 
  ................................................................
 



கடந்த வாரம் மிக சோகமான செய்தி நம் இயக்குநர் மணிவண்ணனின் இறப்பு தான்.. அவரை 2002ம் ஆண்டு சென்னையில் எல்லீஸ் சாலையில் நாங்கள் தங்கி இருந்த அறை அருகே தான் கீழைக்காற்று பதிப்பகம் இருந்தது அங்கு புத்தகம் வாங்க வந்த இவரை இரண்டு, மூன்று முறை பாத்திருக்கிறேன்.. ஒரு முறை காரில் இருந்து இறங்கியவரிடம் கை கொடுக்க முற்பட்டபோது இருகை கூப்பி வணக்கம் சொன்னவாறே பதிப்பக்த்திற்குள் நுழைந்தார் அப்போது தான் பதிப்பகம் பற்றியும் அங்குள்ள புத்தகங்கள் பற்றியும் அந்த தெருவில் எங்கள் வீட்டு உரிமையாளர் பாய் எங்களுக்கு விளக்கமாக சொன்னதால் அறிய முடிந்தது...
திரைப்படத்தில் அவரின் நக்கலும், நையாண்டியும் கலந்த பேச்சும், அவர் சத்தம் போட்டு ஏற்ற இறக்கமாக பேசும் போதெல்லாம் மிக ரசிக்கதோண்றும்... தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை நம் கண்முன்னே கொண்டுவருவதில் அவருக்கு ஈடு இணை அவரே...
அதுவும் விஜய் மணி மணி என்று அழைக்கும் காட்சி எல்லாம் இன்றும் கண்ணுக்குள் நிலவாக இருக்கிறது...
We Miss u Mani sir.....
..............................................................................................

 
 
கர்ப்ப பையில் வளரும் குழந்தை தாயின் பேச்சை கவனிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மகாபாரத கதையில் அர்ஜூனன் தனது கர்ப்பிணி மனைவியிடம் போரின் ஒரு பகுதியான “சக்கரவியூகம்” குறித்து தெரிவித்த தகவலை அவளது வயிற்றில் வளரும் குழந்தை அபிமன்யு கேட்டு தெரிந்து கொண்டதாக புராணம் கூறுகிறது.

அது உண்மை என தற்போது விஞ்ஞான பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 74 கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். 36 வாரம் குழந்தை வளர்ச்சியுடைய கர்ப்பிணிகளிடம் ஒரு கதை புத்தகத்தை கொடுத்து படிக்க செய்தனர். அவர்கள் அக்கதையை சத்தம் போட்டு படித்தனர். அந்த நேரம் வயிற்றில் கர்ப்பபையில் வளரும் குழந்தைகளின் செயல்பாடுகள் பரிசோதிக்கப்பட்டன.

அப்போது, வயிற்றில் வளரும் குழந்தையின் இதய துடிப்பின் வேகம் சிறிதளவு குறைந்து இருந்தது. மேலும் அவற்றின் அசைவும் அடங்கி இருந்தது. அதன் மூலம் தாயின் பேச்சு மற்றும் செயல்பாடுகளை கர்ப்ப பையில் வளரும் குழந்தை கவனிப்பது தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தகவல்
 
 
 
சந்திரன் குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சந்திரனின் மேற்பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பு தென்படுவது தெரிந்தது. அதே நேரத்தில் கண்ணுக்கு தெரியாமல் 280 எரிமலைகள் அங்கு மறைந்து கிடப்பது கண்
டுபிடிக்கப்பட்டது.

அவை சந்திரனின் மேற்பரப்பில் ஈரமற்ற நிலையில் இறுகி கிடக்கின்றன. இந்த தகவலை ஆய்வு மேற் கொண்டுள்ள பேராசிரியர் வில்பெதர்ஸ்டோன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்வெளிக்கு செல்ல 8 வீரர்களை தேர்வு செய்துள்ளது. இவர்களில் 4 பேர் பெண்கள். செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களுக்கு ஆட்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்காக தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தீவிர பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

தத்துவம்
 
உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.

துன்பங்களைக் கண்டு அஞ்சாதே, உறுதியாய் எதிர்த்து நில் வெற்றி உனக்கே...

"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்று மில்லை."

Wednesday, June 12, 2013

அஞ்சறைப்பெட்டி 13/06/2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பது போல் தோன்றினாலும் அதன் உட்கட்சி பூசலால் ஆட்சியை பிடிப்பது கஷ்டமே என்று தோன்றுகிறது.. நரேந்திர மோடியை ஆதரித்தால் எங்கே அவர் பிரதமர் ஆகிவிடுவாரோ என்ற நம்பிக்கையில் பலர் அவரை எதிர்க்கின்றனர்.. குஜராத்தில் அவரின் ஆட்சி பத்திரிக்கைகள் பாராட்டும் அளவில் இருக்கிறது.. இது உண்மை என்றும் இல்லை என்றும் பலர் பல கருத்துக்களை சொல்கின்றனர்...

நரேந்திமோடி பிரதர் ஆவதை எதிர்க்க எதிர்க்க பாஜகமேல் இருக்கும் நம்பிக்கை குறைந்து வருகிறது... 3 வது முறை காங்கிரஸ் ஆட்சியை தக்வைத்துக்கொண்டால் ஆச்சர்யப்படுவதற்கில்லை... எதிரி இல்லாதவன் எளிதாக வெல்வது போலத்தான் இப்போதும்....
  ................................................................

தமிழகத்தில் இருந்து மேல்சபை உறுப்பினர் தேர்வுக்கு எப்போதும் போ இந்த முறையிம் அதிமுக வேட்பாளர்களை முதலில் அறிவித்து அனைவரும் அறிந்த விசயமே... மீதமுள்ள ஒரு இடம் நிச்சயம் கூட்டணி பலமாக அமையா விட்டால் அப்புறம் அந்த இடம் இல்லாமலே போய்விடும்... இத்தேர்தலால் புதிய கூட்டணி உருவாகுமா என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் காத்து கிடக்கின்றனர் அரசியல் விமர்ச்சகர்கள்...

..........................................................................................


காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வருவது காணல் நீராகவே போய்விடும் போல.. கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதல் அறிவிப்பே தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான்... இந்த முறை  பருவமலை நன்றாக இல்லை அதனால்  எங்களுக்கே தண்ணீர் இல்லை என்ற பாட்டைத்தான் திரும்ப திரும்ப பாடுகின்றனர்...

அங்கு மட்டுமா பருவமழை இல்லை இங்கும் தான் இல்லை... வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளிக்கிறது ஆனால் மழை பெய்த பாட்டைத்தான் காணம்... குடிக்க தண்ணீர் வேண்டும் என்றால் வாசல் தெளிக்கத்தான் தண்ணீர் தருகிறார் வருணபகவான்...

................................................................................................


கோவை உக்கடம் ஏரியை சிறுதுளி அமைப்பினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் என 390 ஏக்கர் ஏரியை சுத்தப்படுத்தி அதில் பறவைகள் வந்தால் இருப்பதற்கு இடையில் மண் மேடு ஏற்படுத்தி வியக்க வைத்துள்ளனர்.. அது நிரம்பும் அளவிற்கு இன்னும் கோவையில் மழை இல்லை என்பது தான் வருத்தமான விசயம்...

...............................................................................................

 தேமுதிகவில் இருந்து மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் முதல்வருக்கு ஆதரவாக வெளியே வந்துள்ளார். முதலில் ஒருவர் வந்த உடன் மற்ற உறுப்பினர்களை அழைத்து என்ன பிரச்சனை என்ன ஏது வென்று அலசி ஆராய்ந்திருந்தால் எதோ ஒருத்தர் போவதையாவது நிறுத்தி இருக்கலாம் இனி இன்னும் எத்தனை பேர் க்யூவில் இருக்கின்றனரோ...
...............................................................................................


இப்போதைய தினசரி செய்திகளில் நிச்சயம் யாணைக்கு இடம் உண்டு.. யாணை இருக்கும் இடத்தில் வீட்டைகட்டி குடிபெயர்ந்துவிட்டு யாணை ஊருக்குள் வருகிறது என்று கூக்குரல் இடுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை...
...............................................................................................


சமீபத்தில் கோவைகுற்றாலம் சென்றிருந்தேன் உலகில் இரண்டாவது சுவையான நீர் என்று பெயர் எடுத்த சிறுவாணி நீரில் குளிக்க சென்றிருந்தோம்... மழையில் இருந்து கொட்டும் நீர் சில் என்று சிலிர்க்க வைக்கும் அளவில் இருந்தது யாரும் குளிக்காத இடமாக பார்த்து கொஞ்சம் மேலே சென்று குடிக்க தண்ணீர் பிடித்து வந்தேன்... என்ன சுவை என்ன சுவை.. அந்த மூலிகை நீரை குடித்து விட்டு, அந்த நீரில் குளித்ததும் உடலுக்கும் மனதுக்கும் என்ன ஒரு புத்துணர்வு... நிச்சயம் அனுபவிக்க வேண்டிய ஒன்று...

கோவை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் நிச்சயம் போக வேண்டிய இடம்... அதுவும் தற்போது ஆர்பறிக்கும் நீரில் குளிக்கும் போது உடல் சூட்டை நிச்சயம் தணித்து புத்துணர்வு பெறுவோம்....



தகவல்


11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் தூங்கிக்கொண்டிருக்கும் கருங்குழி கண்டுபிடிப்பு

அண்டத்தில் 11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள சிற்ப விண்மீன் கூட்டத்திற்குள் ஒரு கரும் பள்ளம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கரும்பள்ளம் அண்டவெளியில் சுற்றிவரும் குப்பைகளை விழுங்கி அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கிருந்து மிக அதிவேகத்தில் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பால் வீதியில் கரும்பள்ளத்தின் செயல்பாடுகளும், நட்சத்திர உற்பத்தியும் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பது வானியல் ஆராய்ச்சியாளர்களை பெரிதும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

சிற்ப விண்மீன் திரளுக்குள் இருக்கும் இந்த கருங்குழியின் அளவானது நமது சூரியனை விட 5 மில்லியன் மடங்கு பெரிது என்று கூறப்படுகிறது. சந்திரா மற்றும் நஸ்டர் விண்கல ஆய்வகத்தில் பாதிவாகியுள்ள இந்த கருங்குழி மீண்டும் இன்னும் சில வருடங்களில் காணப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
 
தத்துவம்

சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு

மனம் விட்டு பேசுங்கள்... அன்பு பெருகும்....

உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது.. அது செயலில் வெளிப்படவேண்டும்...

முதலில் சிந்தனை செய்; பிறகு பேசு.

Wednesday, June 5, 2013

அஞ்சறைப்பெட்டி 06/06/2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

ஐபிஎல் சூதாட்டம் தான் இன்றைய பட்டி தொட்டி எல்லாம் பேச்சு. வேலைக்குப் போயும் போகமலும், அலுவலகத்தில் பிட்டை போட்டு விட்டு மேட்ச் பார்த்தவர்கள் எல்லாம் பரிதாபமாக பார்க்கின்றனர். அலுவலகத்தில் எக்ஸ்ட்ரா வேலையில் இருப்பவர் எல்லாம் ஆன்லைனில் ஸ்கோர் பார்த்தவர்கள் எல்லாம் இன்று தலையில் அடித்துக்கொள்கின்றனர்...  இனியாவது புரிஞ்சுக்குங்க மக்களே நம்மை மூலதனமாக கொண்டு அவர்கள் விளையாட்டு என்ற பெயரில் கோடி கோடியாக சம்பாரிக்கின்றனர் என்பது தான் நிதர்சனம்...
  ................................................................

பெண்கள் பள்ளிக்கு பெண்களே ஆசிரியர்கள் என்று ஒரு புது சட்டம் இயற்றி உள்ளனர் இது என்னைப்பொறுத்தவரை தேவை என்றும் சொல்லலாம், தேவை இல்லை என்றும் சொல்லலாம்.. இருபாலரும் படிக்கும் பள்ளியில் நான் படிக்காததால் நிறைய கசப்பான சம்பவங்கள் வாழ்வில் நடந்துள்ளது.. இதற்கு ஆரம்பத்தில் இருந்தே இருபாலரும் படிக்கும் பள்ளியில் செக்ஸ் கல்வி முறையை மேலை நாடுகள் போல் தெளிவு படுத்தலாம் அவ்வாறு தெளிவு படுத்தும் போது இருபாலரிடமும் ஒரு முறையான அறிதல் இருக்க வாய்ப்பு அதிகம்...

..........................................................................................
 
இந்த வருடம் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மணிகளுக்கு வாழ்த்துக்கள்...

இந்த வருடமும் தனியார் பள்ளிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வந்துள்ளனர். தனியார் பள்ளியில் படித்து 489 மதிப்பெண் பெற்ற பக்கத்து வீட்டு பெண்ணிடம் கேட்கும் போது 2 வருசமா இதைத்தான் அங்கிள் படிக்கிறோம் ஒரே போர்.. எதைக்கேட்டாலும் நுனியில் உள்ளது என்கிறாள்.. பின்ன எப்படி 11 மார்க் போச்சு என்றதும் கையெழுத்து நல்ல இல்லை என்று கூட எதாவது குறைச்சிருப்பாங்க அங்கிள் நான் எதிர்பார்த்தது 495 என்கிறாள்...

இரண்டு வருடம் படித்து 489 மதிப்பெண் பெருவதை விட அரசுப்பள்ளியில் ஒரு வருடம் படித்து 465 எடுப்பவன் தான் முதல் மாணவன் என்பது என் கருத்து..

................................................................................................
 
பருவ மழை தொடங்கியது இந்த வருடம் பொத்துகிட்டு ஊத்தும் என்ற செய்திகளை எல்லாம் பார்த்து மனம் மகிழ்ந்து இருந்தேன் ஒரே நாள் தான் ஊற்றியது அது வெய்யிலில் வறண்ட மண்ணிற்கே சரியாகிவிட்டது.. தினமும் மழை பெய்யும் என்று ரெய்ன் கோட் எல்லாம் கொண்டு வருகிறேன் ஆனால் மழை பெய்த பாட்டைத்தான் காணம்... வருண பகவானே இந்த வருடம் பார்த்து கருணை காட்டப்பா... இப்பவே தண்ணி எல்லாம் ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விக்கறாங்க...

...............................................................................................
 
வெங்காயம் விலை ஏற்றத்தால் வீட்டில் குழம்பில் வெங்காயத்தை தேடவேண்டி இருக்கு.. உற்பத்தி அதிகம் இல்லாததாலும், மழை பொய்த்ததாலும் வெங்காய விலை இன்று 100 ரூபாய்க்கு விற்கின்றது. இது குறைய வாய்ப்பிருந்தாலும் விற்பவர்கள் மனது வைக்கவேண்டும்...
 
வெங்காயம் கடையில் 100க்கு விற்கிறது ஆனால் உற்பத்தியாளர்களிடம் 40 முதல் 50 ரூபாய்க்குத்தான் வாங்குகின்றனர் என்று விவசாயிகளின் குரலும் கேட்கத்தான் செய்கிறது....
...............................................................................................

பாதாள சாக்கடை என்ற பெயரில் சாலையை வெட்டி குழாய் பதிக்கின்றனர் குழாய் பதித்த பின் அதற்கு மேல் தார் சாலை போட்டால் வாகனங்கள் செல்ல எதுவாக இருக்கும்.. நம்மாளுக எப்பவும் முழுவதுமாக வெட்டி பின் அதில் மண்ணை மூடி அதில் பாதி பேர் விழுந்து கை, கால் முறிந்த பின்தான் ஒரு 6 மாதங்கள் கழித்த பின் தான் சாலையை செப்பனிடுவார்கள் போல... மக்களின் தேவையை அறிந்து விரைந்து செயல்ஆற்றினால் தான் அனைவருக்கும் பயன் என்பதை எப்போது அறிவார்களோ....
 
...............................................................................................
 

ஆணாதிக்க வாதிகளின் கரங்கள் ஓங்கியிருக்கும் சவுதி அரேபியாவில் மனைவியை கன்னத்தில் அறைந்த கணவனுக்கு 30 சவுக்கடிகளும் 10 நாள் சிறை வாசமும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் மீது அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை பின்பற்றி நடக்கும் வளைகுடா நாடுகளில் ஒன்று, சவுதி அரேபியா. இங்கு வாழும் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்லும் பெண்கள் ஆண் துணையுடன்தான் போக வேண்டும்.

பொது இடங்களில் உடல் உறுப்புகள் வெளியே தெரியாதபடி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மூடியபடி தான் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவின் கதிப் மாவட்டத்தில் உள்ள சஃப்வா நகரில் வசிக்கும் ஒரு பெண், தனது கணவர் கன்னத்தில் அறைந்து காயப்படுத்தி விட்டதாக போலீசிசல் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட கணவர், 'எனது பெற்றோரிடம் மரியாதை குறைவாக நடந்துக் கொண்டதால் அவளை கன்னத்தில் அறைந்தேன்' என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கணவனுக்கு 30 சவுக்கடிகளும் 10 நாள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்படும் இடத்தில் மனைவி பார்வையிட விரும்பினால் அதற்கு தடை விதிக்க கூடாது என்றும் நீதிபதி அனுமதி அளித்தார்.

தகவல்

 
 
சீனாவில் உள்ள சீஜியாங் என்ற இடத்தில் பொது கழிவறை குழாயில் பிறந்த குழந்தை ஒன்று சிக்கி கிடந்தது. அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. திருமணம் ஆகாத பெண் ஒருவர் இந்த குழந்தையை பெற்றெடுத்து கழிவறை குழாய்க்குள் வீசி இருந்தது தெரிய வந்தது.

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அங்கு திருமணம் ஆகாமலே குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது. கழிவறை குழாய்க்குள் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து திருமணம் ஆகாமல் குழந்தை பிறப்பதை தடுக்க சீன அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அங்குள்ள வாஹூன் பிராந்தியத்தில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்க மாகாண அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தத்துவம்

தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும் அவற்றைத் திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழிகள்.
 
"துயரத்துக்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்."
 
 எதையும்  சாதிக்க  நிதானம், அற்புதமான  ஆயுதம்.

ATM மும் நான் பட்ட அவஸ்தையும்...


ATM இன்றைய மனிதனின் அத்தியாவிசயத் தேவை... ATM இல்லை என்றால் இது கூட இல்லையா என்று ஏளனம் பேசுபவர்கள் தான் இன்று அதிகம். இந்த ATM மெஷினின் நன்மைகள் என்று பார்த்தால் அனைவரும் அறிந்ததே. இதனால் பல தரப்பட்ட மக்கள் பல வகையில் பயன்பெற்று இருக்கிறார்கள் இதில் நானும் விதிவிலக்கல்ல.

முதன் முதலில் சென்னையில் இருக்கும் போது 2002ல் ஐசிஐசியை வங்கியில் கணக்கு துவங்கி முதல் ATM கார்டை அப்போது தான் பெற்றேன். அதன் பின் வேலை மாறும் இடங்கள் எல்லாம் ஒரு வங்கியில் கணக்கதை துவங்கி அதில் சம்பளம் கொடுப்பதால் கிட்டத்தட்ட நிறைய வங்கியின் ATM கார்டு மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன் படுத்தி வருகிறேன். அதில் செய்யும் பரிவர்த்தனைகள் அனைத்தும் எனக்கு அத்துப்பிடி. யாணைக்கும் அடிசறுக்கும் என்பது போல நானும் சிக்கினேன்.

எப்போதும் மே மாதம் வந்தால் பட்ஜெட் கையை கடிக்கும் சராசரி பொதுசனங்களில் நானும் ஒருவன். ஊர்த்திருவிழா, சீட்டு, சுற்றுலா என ஏகப்பட்ட செலவுகள் நண்பனிடம் கை மாத்து கொடுடா என்று வாங்கும் அளவிற்கு...

எல்லா செலவுகளும் முடிஞ்சு சம்பளம் உள்வந்ததும் நண்பனுக்கு கைமாத்து வாங்கியதை கொடுக்க ATM சென்று பணத்தை எடுத்தேன் எனது வங்கி கணக்கு கனரா வங்கியில் அருகில் அந்த ATM இல்லாததால் லஷ்மி விலாஸ் பேங்க் சென்று பணத்தை எடுக்கும் போது என் அக்கவுண்டில் கிரிடிட் ஆகிவிட்டது மெஷின் பணத்தை எண்ணுகிறது திடீரென யூபிஎஸ் புட்டுக்க பணத்தை எண்ணிய மிஷின் ஆப் ஆகி என்னை ஆப் ஆக்கியது வெளியே நண்பன் பணத்துக்காக நிற்கிறான் என்னத்தை சொல்வது என்று புரியாமல் அங்கிருந்து அந்த கிளை அலுலகத்துக்கு போனை போட்டால் ஒன்னும் பிரச்சனையில்லை உங்க வங்கிக்கு சென்று எழுதிக்கொடுங்க ஒரு பத்து பதினைந்து நாளில் உங்க பணம் உங்களுக்கு வந்து விடும் என்றனர்.

அடப்பாவிகளா பத்து பதினைந்து நாளா என்று நண்பனிடம் விளக்கம் சொல்லி வேறு ஒருவரிடம் கைமாத்து வாங்கி நண்பனுக்கு பாதியை கொடுத்தேன். ( இனி கைமாத்து கேட்டா கை குத்து தான் கிடைக்கும்) வங்கியில் சென்று கிளை மேலாளரிடம் தகவல் சொன்னதும் எழுதி கொடுங்க என்றார் எழுதி கொடுத்தேன் ஒரு வாரம் பணம் வரவில்லை போய் விசாரித்தேன் 10 நாள் ஆகும் என்றனர் 11 வது நாள் போய்கேட்டேன் 15 நாள் ஆகும் என்றனர் 15ம் நாள் போய்க்கேட்டேன் ஆகிடும் என்றனர் 22 வது நாள் போய்க்கேட்டேன் இன்னிக்குத்தான் மெயில் வந்து இருக்கு இன்று மாலை பணம் வந்து விடும் என்றனர்..

ஆக ATM ல் பணம் எடுக்கும் போது இந்த மாதிரி கூத்து நடந்தால் 22 நாள் ஆகுமா சார் என்று கேட்டேன் தனியார் வங்கியாக இருந்தால் அடுத்த நாள் 10 மணிக்கு Server Restart ஆகும் போது கிடைத்து விடுமாம்.. நமக்கு கணக்கு உள்ள வங்கியாக இருந்தாலும் இதே போல் அடுத்த நாள் கிடைத்து விடுமாம். மற்றபடி நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் போய் எப்படி பாடு பட்டு ஒரு கேள்விக்கு பதில் வாங்குகிறோமோ அதே போல் தான் வரும் ஆனா வராது என்பது போல் தான் மினிமம் 15 நாட்களுக்கு அப்புறம் தான் வருமாம்...

இனி ATM சென்று பணம் எடுக்கும் நண்பர்கள் அந்த மெஷின் UPS இல் வேலை செய்தால் கொஞ்சம் நிதானமாக யோசிச்சு எடுங்கள். முடிந்தவரை நமக்கு கணக்கு உள்ள வங்கியில் எடுக்கும் போது நமக்கு அவஸ்தைகள் மிச்சமாகும்.. 

கைமாத்து வாங்கி 20 நாள் நண்பனை போக்கு காட்டி திருப்பி கொடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது...