Tuesday, February 26, 2013

பெருகிவரும் கள்ளக்காதல்


இப்போதெல்லாம் செய்தித்தாள்களை புரட்டினால், கள்ளக்காதல் சம்பந்தமான செய்தி இடம்பெறாத நாட்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு தினம்தோறும் அத்தகைய செய்திகளை பார்க்கிறோம். காதலுக்கு கண் இல்லை என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த கள்ளக்காதலுக்கு இதயமும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்துகொண்டு கட்டிய கணவனைகொன்ற மனைவி கைது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளை கொன்ற தாய் கைது. கள்ளக்காதல் விஷயம் மனைவிக்கு தெரிந்து விட்டதால் மனைவியை கொலைசெய்துவிட்டு ஸ்டவ் வெடித்து இறந்ததாக நாடகமாடிய கணவன் கைது.இப்படி பல்வேறு பரிமாணங்களில் கள்ளக்காதல் சந்திசிரிக்கிறது. இந்த கள்ளக்காதல் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு முழு முதல் காரணம் சினிமாவாகும்.

தம்பிமனைவியை அடைவது எப்படி, அண்ணியை கவர்வது எப்படி, அக்கா கணவரை மச்சினி மயக்குவது எப்படி, கொழுந்தனை அண்ணி எப்படி வளைத்து போடலாம், அண்ணன் மகனை அத்தை வளைப்பது எப்படி, பள்ளிக்கூட டீச்சரை எப்படி காதலிப்பது, வாத்தியாரை மாணவி எப்படி காதலிப்பது, என்று இன்னும் கள்ளக்காதலில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனை விசயத்திற்கும் சினிமா தெளிவாக பாடம் நடத்தியது. இதுபோக நம்முடைய சமூக அமைப்பு, அதாவது ''அண்ணன் பொண்டாட்டி அரை  பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தாம் பொண்டாட்டி'' என்று அந்த காலத்திலேயே பழமொழி சொல்லப்போக, அதை தவறாக விளங்கிய தவறானவர்கள் அண்ணைக்கு  அடுத்து இன்னொரு அண்ணையாக  மதிக்க வேண்டிய அண்ணியை வேறு பார்வை பார்க்கிறது. தன் மகளைப்போல் நினைக்க வேண்டிய மச்சினியை 'மயக்கப்'பார்வை பார்க்கிறார்கள்.

மச்சான்,கொழுந்தன்,அண்ணி,மச்சினிச்சி,என்று கேலி பேச்சும் கும்மாளமும் சிலரை சிலநேரங்களில் வழிதவற செய்கிறது. மேலும், கணவன் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி கண்ணியமாக வாழ்வதை விடுத்து சோசலிசம் என்றபெயரால் 'நானும் சம்பாதிப்பேன்'என்று செல்லும் பெண்களில் சிலர் தம்மோடு பணியற்றும் ஊழியர்கள்,அதிகாரிகளில் தவறானவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து தானும் கெட்டு தனது குடும்பத்தையும் நடுத்தெருவுக்கு கொண்டுவருகின்றனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்களில் சிலர் அதை அடையும் நோக்கில் வசதிபடைத்த சிலரின் கள்ளக்காதல் வலையில் விழுகின்றனர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறான பெருகி வரும் கள்ளக்காதலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற சில சாக்கடைகள் முயல்வதை சமீபத்திய செய்தி நமக்கு சொல்கிறது.

திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும்- பெண்ணும் விரும்பி உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற கருத்து கலாச்சார சீரழிவை உண்டாக்காதா? முறை தவறிய உறவில் ஈடுபடும் ஒரு ஜோடியை கைது செய்யும் போது, 'நாங்கள் வயது வந்தவர்கள்- நாங்கள் விரும்பியே செய்கிறோம். இதற்கு சட்டத்திலும் எந்த தடையுமில்லை என்று கூறினால், அந்த ஜோடி மீது காவல்துறை கை வைக்க முடியுமா? எனவே திருமணத்தின் முன்பும் சரி-பின்பும் சரி முறையற்ற உறவை மேற்கொள்ளும் ஆணாகிலும் பெண்ணாகிலும் அவர்கள் தண்டிக்கப்படும் வகையில் ஒரு சீரிய சட்டம் உடனடியாக கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 

சமீபத்தில் படிச்சது....

அவள்....



விட்டு பிடித்து
தள்ளி அணைக்கும்
கள்ளியடி நீ....

••••••••••••••••••••••••••••••••••


தத்தி தாவும் மனதில்
காதல் கொண்டு...
ஊஞ்சல் ஆடுகிறது
என் மனது

எத்தனை வேலி
இருந்தாலும் உன்னை
அடைவேன் என்கிறது
உன்மேலான காதல்....

••••••••••••••••••••••••••••••••••


இச் என்ற
சத்தத்தில்
நச் என்று
பொசுங்கியது
மனசு!!!


••••••••••••••••••••••••••••••••••

அவள் பார்வையில்
விபத்துக்குள்ளானது
என் இதழ்கள்
முத்தத்தால் முதலுதவி
செய்வாள்
என்ற நம்பிக்கையில்...

••••••••••••••••••••••••••••••••••


எதையும் இல்லை
என்று சொல்லாதவள்
முத்தத்தில் மட்டும்
கருமியாக இருக்கிறாள்...

போடி கருவாச்சி
என்றேன்...
மார்பில் முகம் பதித்து
இன்னொருமுறை
காதோடு சொல்
என்கிறாள்....

••••••••••••••••••••••••••••••••••

அவளின் இதழ்
அசையும் போதெல்லாம்
என் பெயரையே
உச்சரிப்பது போல்
பிரமை....
 
 
 
 
 

Sunday, February 24, 2013

இதற்கு பெயர் தான் வியாபார தந்திரம்....


 

வணிக நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுததவும், வியாபாரத்தை அதிகப்படுத்துவும் சில கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுத்து மக்களை ஈர்த்துவருகின்றனர். அதன் பின்னனியில் அவர்களின் வியாபார தந்திரம் ஓரளவு இருக்கும் இது ஒரு 8 வருடங்களுக்கு முன் என்று சொல்லலாம். வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பதில் அதில் நமக்கு கழிவு அழிப்பதில் நாம் குறை சொல்லமுடியாது அவ்வாறு சொன்னால் பிரும்பம் இருந்தால் வந்து வாங்கு இல்லை என்றால் வரதே என்று தான் சொல்வார்கள்...

வணிக நிறுவனங்களின் இலக்கு மிடில்கிளாஸ் மக்களும் அப்பர் மிடில் கிளாஸ் மக்களும் தான். இவர்கள் தான் அங்க ஆப்பர் போட்டு இருக்காங்க இங்க ஆபர் போட்டு இருக்காங்க என்றுதான் ஏமந்தது மற்றும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரரையும் ஏமாற போங்க என்பது தான் இவர்களின் இலக்கு...

நாம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம் இது பகல்கொள்ளை தான் என்பது என் வாதம்... 

துணிக்கடைகளில் நாம் வாங்கும் துணிக்கு முதலில் 3 சதவீத கழிவு கொடுத்தார்கள் அப்புறம் அவர்களே ஒரு கார்டை கொடுத்து இதில் உங்க பாய்ண்டை தேர்வு செய்து கொள்ளுங்கள் அடுத்த முறை வரும் போது கழித்துக்கொள்ளலாம் என்பது அவர்களின் வியாபார தந்திரம்.. அவர்கள் தரும் 3 சதவீதத்துக்காக நாம் மீண்டும் அங்க தான் செல்லவேண்டி இருக்கும். நாம் அவர்கள் கொடுக்கும் கார்டை கொண்டு செல்லவில்லை என்றாலும் பராவாயில்லை மொபைல் நம்பரை சொல்லுங்க உங்க அக்கவுண்டில் உங்களுக்கான கழிவு வந்துவிடும் என்றார்கள்.

சமீபத்தில் எனது மொபைலுக்கு ஒரு பிரபல துணிக்கடையில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது நீங்கள் இதுவரை எடுத்த துணிக்கு உங்களுக்கு கொடுத்த கழிவு 450ரூபாய் என்றும் நீங்கள் வந்து துணி எடுத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பி இருந்தது. அந்த பக்கம் செல்ல வேண்டிய வேலை வந்ததும் அந்த கடைக்கு சென்று துணியை 2300 ரூபாய்க்கு வாங்கிவிட்டு பில் போடும் போது கழிவு இருக்கு என்று மெசேஜ் வந்ததுங்க பாருங்க என்றார் கார்டு ஊர்ல இருக்குங்க என்றதும் ஒன்னும் பிரச்சனையில்லை இன்னொரு கார்டு வாங்கிக்குங்க இதையும் அதில் ஏற்றி தருகிறோம் இன்னும் 1 முறை வந்து எடுத்ததற்கு பின் 2 வது முறை டிஸ்க்கவுண்ட் செய்து கொள்ளாம் என்றார். பில் போடும் போது மொபைல் எண் கொடுத்தால் போதும் என்கிறீர்கள் கழிவு என்றதும் கண்டிப்பாக கார்டு வேணும் என்கிறீர்கள் என்றதும்.. எங்களுக்கு வந்த ரூல்ஸ் இது தான் அதை நாங்க சரியாக செய்கிறோம் என்றனர்.. அங்கு இருந்த மேனேஜரிடமும் கேட்டேன் அவர் சிரித்துக்கொண்டே அழகாக முன்னர் சொன்னதையே சொல்கிறார்... ( அவர்களுக்கு இது வியாபார தந்திரம் ஆனால் ஏமாந்தது அங்கு நான் தான்... 450க்கு ஆசைப்பட்டு 2300 போய்யிருச்சு...)

காதலர் தினத்திற்கு மனைவிக்கு ஒரு புடவை எடுக்கலாம் என்று அவளுக்கு தெரியாமல் ஒரு பிரபல துணிக்கடைக்கு சென்றேன் உள்ளே சென்றதும் சார் நாங்க புதுசா சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்திருக்கிறோம் நீங்கள் இங்கு வாங்கும் பொருளுக்கு கழிவு கொடுப்பார்கள் அதை  உங்களுக்கு தேவையான வீட்டு சமையல் பொருட்களை அங்கு வாங்கிக்கலாம் என்றார்.. நானும் மனைவிக்கு புடவை, மகனுக்கு எனக்கு என்று  3500 ரூபாயக்கு வாங்கினேன் ஒவ்வொரு இடத்திலும் கேட்டேன் எவ்வளவு சார் கழிவு என்று ஒருத்தர் கூட தெரியல சார் கீழ போய்க்கேலுங்க என்று அற்புமான பதிலைத்தான் சொன்னார்கள். கீழே சென்று பில்லைக்கொடுத்ததும் 70 ரூபாய் கழிவு சார் போய் வாங்கிக்க என்றனர். அங்க போய் 4 பொருட்கள் வாங்கினேன் மொத்தம் 270 ரூபாய் பில் என்றனர்.. 70 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 200 ரூபாய் ஆப்பு...

ஆக வியாபார தந்திரம் என்ற பெயரில் இவர்கள் செய்வதற்கு கரண்ட் கொடுப்பது போல் கொடுத்து பிசை பிடுங்குவார்கள் என்று ஒரு பழமொழி உண்டு அது தான் ஞாபகத்திற்கு வருகிறது...

10 ரூபாய் கத்திரிக்காய் வாங்குவதற்கு அத்தனை பேரம் நடத்தும் நாம் ஏசி அறையில் அழகான லைட்டிங், லிப்ட் வசதியோடு அன்பான உபசரிப்பில் ஏமாறுகிறோம் என்பது தான் எதார்த்த உண்மை....