Tuesday, January 18, 2011

மொபைல் நெட்வொர்க்கை மாற்ற எளிய வழி


இதோ இன்று வருகிறது நாளை வருகிறது என்று எதிர்பார்த்த மொபைல் எண் மாறாமல் நிறுவனத்தை மாற்றும் முறை நாளை முதல் அமுல்படுத்தப்படுகிறது.

இதுவரை இந்த மொபைல் நிறுவனங்களிடம் நாம் மாட்டிக்கொண்டு பட்ட பாடும் நாம் தண்டமாக நிறைய பணத்தை இழுந்து உள்ளோம். இனி நமக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் நெட்வொர்க் சேவை பிடிக்கவில்லையா 19ரூபாய் செலவில் அடுத்த நெட்வொர்க்கிற்கு மாறும் ஒரு நல்ல பொதுமக்களுக்கு தேவையான சேவை நாளை முதல் அமுல்படுத்தப்படுகிறது.

ஒரு சில நெட்வொர்க்கில் பல வருடங்களாக இருப்பவர்கள் தமது எண்ணை இழக்க விரும்பாமல் அதே நெட்வொர்க்கில் தேவையில்லாமல் பல தொகைகளை இழுந்து இருப்போம். அதுவும் இந்த நெட்வொர்க்குகள் நம்மிடம் எப்படி எல்லாம் பணம் பிடுங்கலாம் என்று யோசித்து பல வழிகளில் பணம் பிடுங்குவார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர். அவர்கள் முகத்தில் எல்லாம் இனி கொஞ்சம் சந்தோசத்தை எதிர்பார்க்கலாம்.

இந்த முறையினால் பொதுமக்களுக்குத்தான் அதிக இலாபம் பல நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாரை தக்க வைத்துக்கொள்ளவும் புதிய வாடிக்கையாளரை கவரவும் இதுவரை தாங்கள் வைத்திருந்த பல பணம் பிடுங்கும் திட்டங்களை விட்டுவிட்டு போட்டி போட்டுக்கொண்டு குறைந்த பணத்தில் அதிக நேரம் பேசலாம் வாங்க வாங்க என்று நிச்சயம் பொதுமக்களை வரவேற்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை..

பல வெளிநாடுகளில் இம்முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்ட்டு வெற்றிகரமாக செயல் பட்டுவருகிறது. வளரும் நாடுகளில் முக்கிய இடம் இந்தியாவிற்கு உண்டு ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சி மக்களை அடைவது நம் நாட்டில் தாமதமாகத்தான் கிடைக்கின்றது. எது எப்படியோ இப்பவாது இந்த சேவை மக்களுக்கு கிடைத்தது என்பதில் மகிழ்ச்சியே...

மொபைலில் இருந்து இச்சேவைக்கு மாறும் எளிய வழி கீழே படத்துடன்..


அனைவரும் இனி நல்ல நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்து குறைந்த பணம் கொடுத்து நிறைய சேவைகளை அனுபவிப்போம்...

33 comments:

  1. விளக்கம் அளித்ததற்கு நன்றி... அந்த 19 ரூபாயை யாரிடம் எப்படி செலுத்த வேண்டும் என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்...
    --
    மதுரை பாண்டி
    http://maduraipandi1984.blogspot.com

    ReplyDelete
  2. தினசரியில் செய்தி வந்ததும் , அதனை பற்றிய விவரங்களை பதிவிட்டதுக்கும், எளிய வழிகளை தெரிவித்ததுக்கும் நன்றி சதீஷ்.

    எந்த நெட்வொர்க் பெஸ்ட்னு நாம தான் இனி முடிவு பண்ணிக்கணும்...

    ReplyDelete
  3. நன்றி போட்டோ சூப்பர்

    ReplyDelete
  4. Good one! ஏற்கனவே ஐயியா-காரர்கள் நிறைய விளம்பரம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் - மாறச் சொல்லி! :) பார்க்கலாம் இந்த வசதி மக்களுக்கு எத்தனை உபயோகமாக இருக்கிறது என!

    நட்புடன்

    வெங்கட்.

    ReplyDelete
  5. நல்ல தகவல், பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. இனிமேலாவது மொபைல் நிறுவனங்கள் கஸ்டமர்களை மதிப்பார்களான்னு பார்க்கலாம். கொஞ்சம் பயத்துலதான் இருப்பாங்க

    விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

    ReplyDelete
  7. நல்ல விஷயம், நிறைய பேர் எதிர்பார்த்திருந்தது. ஆனால் எந்த நெட்வோர்க் சிறந்தது என்பதை முடிவு செய்த பின் மாற்றுவது தான் நமக்கு நல்லதாக இருக்கும்..

    ReplyDelete
  8. வாவ்! மிக்க நன்றி. நானும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்..!

    ReplyDelete
  9. தல...

    உங்க அக்கவுண்டுக்கு ரூ.19/- அனுப்பிடவா?

    ReplyDelete
  10. அப்பாடா.....அதை ஆக்டிவேட் பண்ணியிருக்கீங்க....இத ஆக்டிவேட் பண்ணியிருக்கீங்கன்னு தேவையில்லாமல் காசு பிடுங்கும் நாதாரிங்க தொல்லை இனி இல்லைன்னு நினைக்கிறேன். பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி தல....

    ReplyDelete
  11. தோழரே, உங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா? என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. @ரமேஷ்

    //GOOD IDEA SANGAVI //

    Good idea இல்லைடா லூசு... Good Information.

    @Shangavi

    Thanks for sharing the info... :))

    ReplyDelete
  13. பயனுள்ள தகவல் நன்றி ...........

    ReplyDelete
  14. i got your number sangavi., i call u in evening time...tomrow

    ReplyDelete
  15. இலகுவான வழி விரிவான விளக்கம் இனி தொல்லை இல்லை

    ReplyDelete
  16. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  17. மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே..! படங்கள் சுட்டிக்காட்டி விளக்கிய விதம் அருமை...!!

    ReplyDelete
  18. தெளிவாக, எளிமையாக, மிக முக்கியமாக கோர்வையாக பல தகவல்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. நல்ல தகவல் சங்கவி..
    இதில் ஏர்டெல் மற்றும் ஏர்செல் தான் பலமாக அடிவாங்கும் என்று தெரிகிறது..

    ReplyDelete
  20. கூடுதல் தகவல் BSNL க்கு மாறுவதுக்கு 19 ருபாய்யும் தேவையில்லை நண்பர்களே

    ReplyDelete
  21. நமக்கிது இப்போ தேவைப்படாது... ஊருக்கு வந்தா தான்...

    ReplyDelete
  22. எச்சூச்மி... போன் பில் கட்டாம நெட்வொர்க் மாத்த முடியுமா???
    (ஹிஹிஹி)

    ReplyDelete
  23. உங்கள் வலைப்பூவை எனது அஞ்சறைப்பெட்டியில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.. நாளை எனது அஞ்சறைப்பெட்டியை பாருங்கள்.../////

    can u giv me d link pls??

    ReplyDelete
  24. நல்ல தகவல் நண்பரே

    ReplyDelete