உள்ளுரில் இருந்து உலகம் வரை........
அனைவரும் பொங்கலை சிறப்பாக கொண்டாடி விட்டு இப்பதான் அலுவலகத்திற்கு வந்தாச்சு. பொங்கல் நினைவுகளை அசைபோடுவதே ஒரு தனி அழகுதான்...
............................................................ .............................. .....
மீண்டும் பெட்ரோல் விலை ஏற்றம் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை வளரும் நாடுகளில் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை குறைவுதான். அத்தியாவிசயப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் பெட்ரோல் விலை ஏற்றம் தான். ஒரு காலத்தில் எதிர்கட்சிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பெட்ரோல் விலை ஏற்றம் என்றால் அவர்கள் நடத்து ஆர்ப்பாட்டம் நாடு தழுவிய பந்த் போன்ற எதிர்ப்புகளுக்கு ஆளும்கட்சியினர் இறங்கிவந்து கொஞ்சம் குறைப்பார்கள் ஆனால் இப்போது போராட்டத்தையும் காணவில்லை, விலை குறைப்பும் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தடுத்த எதிர்கட்சியினர் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
............................................................ .............................. ..............
சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கா னது. புற்றுநோய் ஏற்படும் என பிரசாரங்கள் செய்யப் படுகின்றன. அதே நேரத்தில் சிகரெட் பிடித்த 15 நிமிடத்திற்குள் புற்றுநோய் தூண்டப்படுகின்றது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சிகரெட் புகைத்தவுடன் புகையிலையில் உள்ள பாலி சைக்ளிக் அரோமேடிக் நைட்ரோ கார்பன் என்ற நச்சுப் பொருள் ரத்தத்தில் கலக்கிறது. அது மரபணு வில் பாதிப்பை ஏற்படுத் துகிறது. இதை தொடர்ந்து சிகரெட் பிடித்த 15 முதல் 30 நிமிடங்களில் புற்றுநோய் தூண்டப்படுகிறது.
இதன்மூலம் நுரையீரலில் புற்றுநோய் உண்டாகிறது. நுரையீரல் புற்று நோயி னால் உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேர் உயிரிழக் கின்றனர். இதுதவிர 18 வகையான புற்றுநோய் ஏற்படவும் சிகரெட் காரணமாக உள்ளது. எனவே சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.
............................................................ .............................. ................
உலகம் முழுவதும் அரசியல் வாதிகளும், மற்றவர்களும் தாங்கள் சட்ட விரோதமாக சம்பாதித்த பணங்களை சுவிட்சர்லாந்து பாங்கியில் போட்டு வைத்துள்ளனர். இந்த பாங்கிகளில் பணம் போட்டு வைத்து இருப்பவர்கள் பற்றிய தகவலை வெளியிடுவது இல்லை.
எனவே தான் இந்த பாங்கிகளிலேயே பணத்தை போட்டு வைக்கின்றனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும், தொழில் அதி பர்களும் தங்கள் கறுப்பு பணத்தை சுவிஸ் பாங்கிகளில் டெபாசிட் செய் துள்ளனர்.
இந்த வகையில் இந்தியர்களின் ரூ.72 ஆயிரம் லட்சம் கோடி பணம் சுவிட்சர்லாந்து பாங்கிகளில் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இந்தியர்கள் அதிகம் டெபாசிட் செய்துள்ள பாங்கிகளில் “ஜுலியஸ் போ” என்ற பாங்கியும் ஒன்று.
இந்த பாங்கியின் முன்னாள் ஊழியர் ருடால்எல்மர். அவர் “ஜுலியல் போ” பாங்கியில் ரகசிய கணக்கு வைத்து இருந்த 2 ஆயிரம் பேர் பட்டியலை உலக ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கி லீக் இணையதளத்துக்கு வழங்கி உள்ளனர். அதில் ஏராளமான இந்திய அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.

................................................................................................
தமிழகம் முழுவதும் வருகிற 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது இம் முகாமில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச சொட்டு மருந்து அரசு வழங்குகிறது. அனைவரும் இம்முகாமை பயன்படுத்துங்கள் போலியோ இல்லாத உலகத்தை உருவாக்குவோம்.
..................................................................................................
விலைவாசி உயர்வு அப்படியேதான் உள்ளது இன்னும் அத்தியாவிசயப் பொருட்களின் விலை குறைந்தபாடில்லை. விலைவாசி உயர்வுக்கு அரசும் பல கூட்டம் போட்டு இன்னும் ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் குறைந்த பாடில்லை..
..................................................................................................
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி அறிவித்து விட்டார்கள் இந்த முறை கோப்பை நமக்கே என்று தான் 100 கோடி மக்களும் விரும்புகிறோம். வீரர்கள் 100 கோடிக்கு ஆசைப்படாமல் 100 கோடி மக்களின் ஆசையை நிறைவேற்றுவார்கள் என நம்புவோம்..
நாட்டு நடப்பு
வரும் தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணிக்கு என தனி முக்கியத்துவம் உண்டு பட்டி தொட்டி எல்லாம் இன்றும் பேச்சும் இதுதான். கலைஞர் டெல்லி சென்று சோனியாவை சந்தித்த பின் தான் முழுமையாக தெரியும் திமுக காங்கிரஸ் கூட்டணி பற்றி.
திமுக காங்கிரசுடன் இணைந்தால் திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைசிறுத்தைகள் என்று இருக்கும்.
அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் சேரும் வாய்ப்பு மிக அதிகம். விஜயகாந்த் சேரும் பட்சத்தில் அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்டுகள், மதிமுக மற்றும் இதர கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியாக அமையும்.
இக்கூட்டணி தான் இறுதி கூட்டணியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பிப்ரவரி முதல் வாரத்தில் நிச்சயம் தெரிந்துவிடும்.

தகவல்
விண்ணில் செக்ஸ் சாத்தியமா? விண்வெளி பயணத்தின்போதே செக்ஸ் தொடங்கி குழந்தையை அங்கேயே பெற்றெடுக்க வாய்ப்புள்ளதா? இதுதொடர்பான ஆராய்ச்சிகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கலிபோர்னியா மூளை ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இணைந்து பேராசிரியர் ரான் ஜோசப் தலைமையில் சமீபத்தில் இதுபற்றி ஆராய்ச்சி நடத்தினர்.
அதில் தெரியவந்த தகவல்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கருத்துகள் ஆகியவை ‘செக்ஸ் ஆன் மார்ஸ்’ என்ற தலைப்பில் வானியல் இதழில் கட்டுரையாக வெளிவந்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: மனிதர்களுக்கு செக்ஸ் உணர்வு இயல்பானது. பூமியில் அதற்கு சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது. மேலும் இதற்கு முக்கியத்துவம் தருவது தனி நபர் சம்பந்தப்பட்ட விஷயம். பூமியில் செக்சில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் விண்வெளிக்கு சென்றதும் இந்த ஆர்வம் குறையக்கூடும் என்று தெரிகிறது. இதேபோல கருத்தரிப்பதும்கூட விண்வெளியில் குறைந்த அளவே சாத்தியம்.
விண்ணில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் வீரர்கள் செக்ஸ் உணர்வுகளால் உந்தப்படுவது வாடிக்கை. ஆனால் விண்வெளிப்பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி குறித்த விழிப்புணர்வு, பயணத்துக்கு முன்பு பயிற்சியாக அளிக்கப்படுவதால் அத்தகைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் மனநிலை அவர்களிடம் இயல்பாகவே இருக்கும். எளிதில் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். மேலும், ஆராய்ச்சி என்ற இலக்கை நோக்கியே அவர்களது செயல்பாடுகள் இருக்கும்.
‘விண்வெளியில் செக்ஸ்’ என்பதையே ஒரு ஆராய்ச்சியாக நடத்தி, இதற்காக ஒரு ஜோடியை விண்வெளிக்கு அனுப்பி செக்ஸ் வைத்துக் கொள்ளச் செய்தால் மட்டுமே இதுபற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். மேலும், விண்ணிலேயே கருத்தரித்து அங்கேயே குழந்தை பெற்றால் அது ‘பூமி குழந்தையிடம்’ இருந்து வித்தியாசப்படுகிறதா, அதற்கென சிறப்பு குணங்கள் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள முடியும். பல தலைமுறையாக இத்தகைய ஆராய்ச்சிகளை தொடர்ந்தால் புதிய மனித இனம் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மொக்கை ஜோக்
டைரக்டர் : “ம்ம்ம்..உங்க கதையை சொல்லுங்க” கதாசிரியர் : “சார், நான் ரொம்ப ஏழை. என்ன நம்பி வீட்லே ஆறு ஜீவன் இருக்கு. எப்படியாவது எனக்கு நீங்க…..”
டைரக்டர் : “”அடச்சீ, நீங்க கொண்டு வந்த கதையை சொல்லுங்கன்னேன்..”
ஒரு நாய் கோபுரதிட்கு கிழே நின்னுகிட்டு மேல பார்க்குது.அப்புறம் கீழ பார்க்குது. ஏன்?
ஏன்ன ஒரே நேரத்தில இரண்டு இடத்தயும் அதனால ஒன்ன பார்க்க முடியாதே.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுக பதிவர் ஜெ.ஜெ ரசனையுடன் ஒரு சாதரண ரசிகை என்று தன்னை அறிமுகப்படுத்தி எழுதி வருகிறார். பல அற்புதமான கவிதைக்கு சொந்தக்காரர். சிறிய கவிதையாக எழுதி அதில் பல கனவுகளையும், காதலையும், காதல் தருணங்களையும் எழுதி வருகிறார். நீங்களும் ரசியுங்களேன்....
http://kirukkalgal-jj.blogspot.com/
http://kirukkalgal-jj.
தத்துவம்
உனக்கு ஒரே நண்பன் நீயே, ஒரே பகைவனும் நீயே, உன்னைத் தவிர பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை.
மற்றவர்களின் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையாதவனால் நற்செயல்களை செய்ய இயலாது.
குறுஞ்செய்தி
"மச்சான்..டேய்..நீ சிரிச்சா ரஜினி!...பேசினா வைரமுத்து!!...ஆடுனா பிரபுதேவா!!!...பாடுனா ஜேசுதாஸ்!!!!..படுத்தா உசிலைமணி வெயிட்டைக் குறைடா மாப்ளே "
"நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"
"நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"
நம்மதான் முதல் ஆளா?
ReplyDeleteஎன்னை அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி....
ReplyDeleteநல்ல கலவை!!
ReplyDelete--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
அஞ்சறைப்பெட்டி அசத்தல் சார்
ReplyDeleteதகவல்கள் அருமை...
வடை போச்சே
ReplyDeleteஅருமையான தொகுப்பு....
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா... :-)
அசத்தல் பெட்டி..
ReplyDeleteசிகரெட்டைப்பத்தி என்ன எடுத்துச்சொன்னாலும் நம்மூர் புகைபோக்கிகளுக்கு புரியுமா என்ன!!
இடையில லீவு விட்டாலும் அஞ்சறைப் பெட்டி மறுபடியும் பழைய புத்துணர்ச்சியுடன் இருக்கு அண்ணா .. தகவல்களும் நல்ல இருக்கு .
ReplyDeleteஅதே மாதிரி புதிய மனித இனம் , பெட்ரோல் விலை , சிகரெட் போன்ற எல்லாத்தையும் ஒரே இடத்துல சொல்லிட்டீங்க . கலக்கல் அண்ணா
அசத்தல் அஞ்சறைப்பெட்டி.
ReplyDeleteஜோக்கும், தத்துவமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன! ம்... உண்மைதான் அடுத்தவங்க நல்லது பண்ணும் போது நாம மகிழ்ச்சி அடையணும். இல்லன்னா நமக்கு ஏது மகிழ்ச்சி? அருமை!
ReplyDeleteஅருமையான தொகுப்பு....
ReplyDeleteதல...
ReplyDeleteபிரபுதேவா மாதிரி ஆடறவர் எப்படி உசிலைமணி மாதிரி இருக்கார்?
ரைட் ...ரைட் ...
ReplyDeleteகலவை செய்திகள் கலக்கல்
ReplyDeleteசிகரெட்டைப்பத்தி என்ன எடுத்துச்சொன்னாலும்அப்படியே திருந்திடுவானுங்க..
ReplyDeleteவிழிப்புணர்வு பதிவிற்கு நன்றி..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_20.html
அஞ்சறைப்பெட்டி அருமை
ReplyDeleteநல்லா இருக்குங்க அஞ்சறை பெட்டி
ReplyDeleteபெட்ரோல் விலை உயர்வு மட்டுமில்லை, எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து விட்ட நிலையில், மக்களின் விரக்தியும் எல்லை கடந்து விட்டது, என்ன போராட்டம் பண்ணி என்ன பண்றது என்ற நிலையில் இப்போது மக்கள்..
ReplyDeleteஜோக்ஸ் நல்லா இருக்குங்க.
நட்பு பற்றிய தத்துவம் - எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை.
ஒரு வேளை அது தான் தத்துவமோ?
அஞ்சறைப் பெட்டியில் நல்ல வாசம்.
ReplyDeleteநன்று.
அது ஏன் பாங்கி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளீர்கள். வங்கி இன்னும் நன்றாகத் தானே இருக்கிறது?
தகவல்கள் அதனையும் அருமை
ReplyDeleteபடங்கள் சேர்த்தால பற்பதட்க்கும் வாசிப்பதட்க்கும் நல்லா இருக்கும்.
sangkavi..அஞ்சறைப்பெட்டின்னாலே ஹிட்டுத்தான் ம் ம் கலக்குங்க..
ReplyDeleteவிண்வெளி மேட்டரை தனி பதிவா போட்டு ஹிட்ட் ஆக்கி இருக்கலாம்
தத்துவம் !
ReplyDeleteஅஞ்சறை பெட்டி விஷயங்கள் ரொம்ப அழகா இருக்கு
ReplyDeleteநல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteவெங்கட் நாகராஜ்
http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_20.html
hai sangavi .. wat a long gap?
ReplyDeletevery nice... :-)
ReplyDelete