Monday, January 31, 2011

உங்கள் ஓட்டு யாருக்கு?


வருகிற மே மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிறது இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் எந்த கட்சியிலும் கூட்டணி இறுதியாகவில்லை காலம் மாறுவது போல் கூட்டணியும் மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது. யார் கூட்டணி சேர்ந்தாலும் அவர்களை வெற்றி பெற செய்வது பொதுமக்களாகிய நம் கையில் தான் உள்ளது.

அனைவரும் ஓட்டு போட வேண்டும்

முதலில் நாம் செய்வது நமது ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும் வாக்குச்சவாடிக்கு சென்று அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கு எந்த கவலை இல்லை என்று நினைக்காமல் ஓட்டளிக்க வேண்டும். நம் நாட்டில் எவ்வளவு பெரிய தலைவனாக இருந்தாலும் அவன் பயப்படுது நம்முடைய ஓட்டுக்காகத்தான். நம் அரசியமைப்புபடி நமக்கு நிறைய உரிமைகள் கொடுத்து இருந்தாலும் நாம் சுயமாக சிந்தித்து யாரையும் சாரமல், எதற்கும் பயப்படாமல் செய்யும் ஓர் உரிமை ஓட்டுப்போடுவது தான். நிறைய ஓட்டுக்கள் விழ விழத்தான் அரசியல்வாதிகளுக்கு பயம் வரும். இதுவரை நடந்த தேர்தலில் 60 சதவீதம் தான் அதிகபட்ச ஓட்டுக்கள் விழுந்து இருக்கின்றன என்று 90 சதவீதத்தை எட்டுகிறதோ அன்று தான் உண்மையான ஜனநாயக ஆட்சி நம் நாட்டில் நடக்கும்.

யாருக்கு உங்கள் ஓட்டு

நமது ஓட்டை நாம் தான் முடிவு செய்கிறோம் என்னதான் பணம், பிரியாணி கொடுத்தாலும் ஓட்டுச்சவாடிக்கு சென்று இறுதியாக வாக்களிப்பது நாம் தான். நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது. ஓட்டுப்போடும் முன் மனதை கேட்க வேண்டிய சில கேள்விகள்.

1. இத்தேர்தலில் நிற்கும் முதல்வர் வேட்பாளர்களிடம் என்ன குறை? நிறை? இவர்கள் இருவரும் இதற்கு முன் எதவாது நல்லது செய்திருக்கிறார்களா?

2. இந்த 5 ஆண்டுகளில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன?

3. விலைவாசி உயர்வு எப்படி இருந்தது அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்

4. இயற்கை சீற்றத்தின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி எப்படி கிடைத்தது முழுவதும் கிடைத்ததா

5. கல்விக்காக என்ன செய்தார்கள்? அவர்கள் சொன்னதை நிறைவேற்றினார்களா?

6. வேலை வாய்ப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் புதிய வேலைகளை அறிமுகப்படுத்தினார்களா

7. மின்சார தடைக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் அடுத்த வரும் ஆண்டுகளுக்கு தடை இல்லா மின்சாரம் கொடுக்க முடியுமா

8. இரயில் போக்குவரத்து தூரத்தை அதிகப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? புதிதாக இரயில் நிலையம் அமைக்கப்பட்டதா?

9. ஏற்றுமதிக்கு என்ன உதவி இதுவரை செய்துள்ளார்கள்?

10. பேருந்து, மின்சாரம், இரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதா? பேருந்து வசதி சரியாக உள்ளதா?

11. அரசாங்க ஊழியர்களுக்கு என்ன செய்தார்கள் அந்த அளவிற்கு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதா?

12. மருத்துவத்துறையில் என்ன மாற்றம்? மாற்றம் செய்யப்பட்ட மருத்துவம் ஏழை, எளிய மக்களுக்கு உதவுகிறதா?

13. எதுஎதுக்கொல்லாம் இலவசம் கொடுத்தார்கள்?  இலவச பொருட்கள் அனைத்தும் தரமானதா? அந்த இலவசம் தேவையா?

14. சாலை போக்குவரத்து எந்த அளவிற்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது?

15. கலாச்சாரம், மொழிக்கு எந்த அளிவிற்கு முன்னுரிமை அளித்தார்கள்?

16, அதிக ஊழல் செய்தவர்கள் யார்? பொதுமக்களுக்கு திட்டம் என்னும் பெயரில் ஊழல் செய்தார்களா? ஊழல் எந்த நிலையில் உள்ளது?

இதற்கு மேலும் நிறைய கேள்விகள் உள்ளன இந்த கேள்விகளை எல்லாம் உங்கள் மனதில் கேட்டு இரு முதல்வர் வேட்பாளர்களும் தங்களது தேர்தல் அறிக்கையில் என்ன கூறிஉள்ளனர் இதற்கு முன் தேர்தல் அறிக்கையை சரியாக நிறைவேற்றியது யார் என்று சிந்தித்து உங்களது வாக்கை சரியான முறையில் வாக்களித்து ஜனநாயத்தை நிலை நிறுத்துங்கள்..

23 comments:

  1. Imputtu kelviyum keattaalum naama kasukkuthaaney ottup poduvom...

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
  3. சரியான நேரத்தில் ஒரு சரியான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாக்களிப்பது ஜனநாயக கடமை தான்... ஆனால் வாக்களித்த குற்றத்திற்காக அந்த ஜனங்களே இல்லமால் போய்க்கொண்டிருக்கிறார்கள் இப்போது..

    எல்லாரும் ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க, எவனை நம்புறது..

    ReplyDelete
  5. நல்ல பதிவு வழங்கிய உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  6. கண்டிப்பா சார்...
    ஒட்டு ஜனநாயகக் கடமை ,நீங்கள் சொல்வதை கடைபிடிக்களாம்.

    ReplyDelete
  7. சரியான நேரத்தில் உங்கள் பங்களிப்பை செய்தமைக்கு நன்றி நண்பரே

    முடிந்தால் உங்களின் நண்பர்களிடமும் சொல்லி ட்விட்டரில் தொடர்ந்து குரல் கொடுங்கள் தீர்வு கிடைக்கும் வரை....

    தொடர்ந்து போராடுவோம்.....

    ReplyDelete
  8. கேள்வியெல்லாம் நல்லா இருக்கு

    யாருக்கு ஒட்டுப்போடுவதுனுதான் தெரியல

    ReplyDelete
  9. யாரு கடந்த ஐந்துவருட தவறுகளை மறைக்க நிறைய பணத்தை கொடுக்கிறார்களோ ......
    யார் டி.வி.டி. பிளேயர், லேப்டாப் கொடுக்கிறாங்களோ அவங்களுக்குத்தான் எங்க ஓட்டு. வாழ்க ஜனநாயகம்

    ReplyDelete
  10. எல்லாத்தையும் படித்து முடிந்தவுடனும் மனமும் உங்கள் தலையங்கமும் ஒன்றாகத்தான் இருக்கு

    ReplyDelete
  11. //தங்களது தேர்தல் அறிக்கையில் என்ன கூறிஉள்ளனர் இதற்கு முன் தேர்தல் அறிக்கையை சரியாக நிறைவேற்றியது யார் என்று சிந்தித்து...//

    இப்படியெல்லாம் யோசிச்சி மண்டைய முட்டிக்கணுமோ??!!

    ReplyDelete
  12. கண்டிப்பாக சங்கவி

    ReplyDelete
  13. நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் பார்த்தால் ஆளும் கட்சிக்கு ஒட்டு போடா கூடாதுன்னு சொல்ல வரீங்க ........ஹ ....ஹா ..........

    ReplyDelete
  14. again for dmk only. they loot lot, gave lot too. but admk..? i wont believe that lady.

    ReplyDelete
  15. ஓட்டெல்லாம் போட்டுகிட்டு தான் இருக்கோம்..
    நீங்க சொன்ன அத்தனையும் பண்ணி யார் நல்லவர், யார் செய்யகூடியவர்னு பாத்து தான் நாங்க ஓட்டு போட்டோம்..
    ஆனா இந்த தடவ தான் ஒரு நிர்ணயத்தோட இருக்கன்.. மீனவ ப்ரச்சனைக்கு நிரந்தர தீர்வு வர வரைக்கும் எங்க குழு பலம் வாய்ந்த எந்த கட்சிக்கும் ஓட்டுபோடாது.. முதல்ல தேர்தல புரக்கணிக்க முடிவு செஞ்சோம்.. ஆனா அதனால கள்ள ஓட்டு ப்ராப்ளம் இருக்குல்ல.. அதான் யோசிக்கிறோம்..

    ReplyDelete
  16. இந்த கேள்விகள் ஓட்டுபோடும் பெரும்பான்மை மக்களை சேரவேண்டும்!

    ReplyDelete
  17. யாருக்கும் ஒட்டு போடமுடியாது

    ReplyDelete
  18. நல்ல சமயத்தில் தேவையான ஒரு பகிர்வு. நன்றி.

    நட்புடன்

    வெங்கட் நாகராஜ்
    http://venkatnagaraj.blogspot.com/2011/01/g.html

    ReplyDelete
  19. நல்ல பதிவு..
    சரியான நேரத்தில் சரியாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.. நன்றி.

    ReplyDelete
  20. நல்ல பதிவு. எதுவும் சரிப்படலேன்னா 49-ஓ?

    ReplyDelete
  21. என்னதான் எடுத்துச்சொன்னாலும் பணம் எவ்வளவு குடுக்கிறார்கள் என்று தான் பார்க்கிறார்கள். இந்தக் கேவலம் முதலில் மாற வேண்டும்.

    ReplyDelete
  22. good post.. We need ask many more questions...

    ReplyDelete