Thursday, July 4, 2013

"லட்டு" நாகராஜ்

 


நம்முடன் படித்தது முதல் வேலை செய்யும் இடம் வரை ஒவ்வொரு இடத்திலும் ஒரு சுவாரஸ்யமான நண்பர்கள் உடன் இருப்பர் அல்லது சந்தித்திருப்போம் அப்படி ஒரு நண்பன் தான் லட்டு நாகராஜ்..

9ம் வகுப்பு படிக்க கோபியில் அப்போது தான் சேர்த்தார்கள் பக்கத்திலேயே வெள்ளாளர் மாணவர் விடுதியில் அறை எண் 42 இது தான் அந்த விடுதியில் நான் முதலில் கால் வைத்த இடம் அந்த அறையில் என்னுடன் இருந்தவர்கள் 6 பேர். ஒவ்வொருவரும் ஒரு டைப். அங்கிருந்தவர்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இருந்தோம்.

மாலை பள்ளி முடிந்ததும் அனைவரும் விடுதிக்கு வந்து டீ சாப்பிட்டு விட்டு விடுதி விளையாட்டு திடலில் ஒரு பக்கம் கிரிக்கெட் இன்னொரு பக்கம் கால்பந்து, கைபந்து என களை கட்டும் மாலை நேர ஆட்டம். நான் விடுதிக்கு சென்ற புதிதானதால் ஆரம்பத்தில் நண்பர்கள் கூட்டம் குறைவு தான் ஒரு மாதத்திற்கு பின் நண்பர்கள் கூட்டம் சேர சேர கால்பந்து, கிரிக்கெட் என விளையாட ஆரம்பித்து ஆட்டம் போடுவது தான் பொழுதுபோக்கு.

இப்படி விளையாடிக்கொண்டு இருக்கும் போது தான் நாகராஜ் அறிமுகம் ஆனான் சரியான கபில்தேவ் ரசிகன்.. எப்ப பார்த்தாலும் கபிலைப்பற்றித்தான் படித்துக்கொண்டு இருப்பான் கபில்தேவ்ன் ஸ்டில்ஸ் எல்லாம் கட் செய்து பெட்டி அவனது செல்ப் என அனைத்து இடத்திலும் ஒட்டி வைத்திருப்பான் அவனை கபில் நாகராஜ் என்றால் தான் பொருத்தமாக இருக்கும்.

விடுதி விளையாட்டு மைதானத்தில் ஒரு ஞாயிறு மாலை அனைவரும் விளையாடிக்கொண்டு இருந்தோம் நாகராஜ் மட்டும் ஒரு பந்தை வைத்துக்கொண்டு மேலே வீசுவதும் பின் பிடிப்பமாக இருந்தான் யாரிடமும் பந்தை தரவில்லை அவன் பந்தை யாருக்கும் தர மாட்டேன் என்று தத்துவம் வேறு பேசுவான். நாங்கள் விளையாட அழைத்த போது பந்தை பாக்கெட்டில் வைத்துக்கொள்வான். ஒரு வாரம் தொடர்ந்து இதையே செய்து கொண்டு இருந்ததால் எல்லாருக்கும் அவன் மேலே டவுட்டு இன்று அந்த பந்தில் என்ன இருக்கிறது என்று பார்த்து விட வேண்டும் என்று அவனிடம் வம்படியாக பந்தை பிடுங்கினாள் பந்தில் ஒன்றும் இல்லை தூக்கிப்போட்டு நாங்களும் கேட்ச் பிடித்தோம் சிரித்துக்கொண்டே இப்ப விளையாடுங்க ஒன்னும் பிரச்சனை இல்லை என்றான்..

அப்புறம் பந்தை அவன் கொண்டு வரவில்லை மீண்டும் அடுத்த வாரம் ஊருக்கு சென்றதும் பந்தை எடுத்துக்கொண்டு வந்து விளையாட ஆரம்பித்தான் இந்த சமயத்தில் சம்பத் அவனை கவனித்து இருக்கிறான் அவன் வாய் அசைந்து கொண்டு இருக்கிறது என எங்களை கூப்பிட்டுக்காட்ட மீண்டும் அவனிடம் சென்று பந்தை கேட்டால் தர மறுக்கிறான் அப்புறம் அவனை எல்லோரும் பிடிச்சு பந்தை வாங்கி பார்த்தால் எப்பவும் போல உள்ளது ஒரு கீறல் இருக்கிறது உடைந்தது போன்று இருந்தது.

என்ன ஏது என்று கேட்டால் சிரிக்கிறான் ஒன்றும் இல்லை நீங்க என்னை சந்தேகப்படுகிறீர்கள் என்றான் சம்பத் பந்தை வாங்கி அமுத்தி அந்த உடைந்த கீறலின் உள்ளே பார்க்கும் போது உள்ளே லட்டு இருக்கிறது. யாருக்கும் தராமல் லட்டை ஒளித்து வைத்து திண்பதற்கு பந்தை பயன்படுத்தி உள்ளான். அன்று முதல் அவன் பெயர் லட்டு நாகராஜ்.

அவன் மட்டுமல்ல எங்க விடுதியில் யார் நாகராஜ் என்ற பெயரில் வந்தாலும் அவர்களை லட்டு என்று தான் அழைப்போம் இவனை விட வயது மூத்தவர்களாக இருந்தால் அண்ணன் லட்டு குறைவாக இருந்தால் தம்பி லட்டு இந்நிலையில் நாகராஜ் என்ற பெயரிலேயே ஒரு வார்டன் வர அவரையும் லட்டு என்று தான் அழைப்போம். லட்டு சார் வராரு என்று தான் சொல்வோம் அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டு லட்டை பற்றி பேசுவாங்க அப்பவும் அவருக்கு அவர் பேர் தெரியாது. அவருக்கு அந்த பேர் தெரியவந்த பின் ஏன் எனக்க லட்டு என்று வைத்து மிக குழம்பியதாக பசங்க சொல்வாங்க.. அவர் விடுதியை விட்டு வெளியேறும் போது எனக்கு ஏன் அந்த பெயர் வைத்தீர்கள் என்று பசங்களிடம் கேட்டதற்கு யாருக்கும் பதில் தெரியாததால் தனக்கு லட்டு என்ற பெயர் வந்த காரணத்தை அறியாமலே விலகினார் அங்கிருந்து... அன்றில் இருந்து நாகராஜ் என்று எந்த நண்பர் கிடைத்தாலும் அவருக்கு லட்டு கதையை நிச்சயம் சொல்வேன் இப்ப ஒருத்தர் கிடைச்சிருக்கார் அவர் படிப்பதற்காக படைத்தது இந்த படையல்..

எங்கள் பழைய லட்டு நாகராஜ் சென்னிமலை ஊத்துக்குளி பக்கம் அவனது வீடு என்று நினைக்கிறேன் பள்ளி பருவத்திற்கு பின். அவரை இதுவரை சந்திக்கவில்லை எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்ற தகவலும் இல்லை அவர் எங்கிருந்தாலும் லட்டு தின்பதை மறவாமல் இருந்தா சரிதான்... இதை படித்து மீண்டும் நண்பர் வட்டத்திற்குள் வந்தால் மிக மகிழ்ச்சியே...

36 comments:

  1. கபில் நாகராஜ் - லட்டு நாகராஜ் ஆனது சுவாரஸ்யம்... அவரும் படித்தால் சந்தோசப்படுவார்...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

      Delete
    2. சகோ. தங்கள் நம்பிக்கை ... உறுதியாய் இருங்கள்
      நிச்சயம் கிடைப்பார்....நான் நிறைய என் சொந்த பந்தங்களை என் நம்பிக்கையின் மூலம் திரும்பப் பெற்றேன்..

      Delete
    3. Great !! I still remember him..... myself and Saravan discussed about him just a day back.

      Delete
  2. மிகவும் சுவையான ஓர்மைப் படுத்தல் பதிவு. லட்டு நாகராஜ், செம செம. பாவம் அந்த வார்டன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

      Delete
  3. oru chiina tirutham,.. nagaraj lattu sapidathu 7th std..

    2 days before i was chatting with one of my friend about this,...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா... இருங்க N.P. Saravanan கிட்ட கன்பார்ம் செய்துக்கிறேன்.. சரி நீங்க...

      Delete
  4. அன்பின் சங்கவி - மலரும் நினைவுகள் - அசை போட்டு மகிழ்ந்தது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீனா ஐயா...

      Delete
  5. அதிர்ச்சி மற்றும் அதிசியம் ,.. ரொம்ப சந்தோசம் ,...

    நேற்று தான் ஒரு நண்பன்கிட்ட இதை பற்றி ரொம்ப நேரம் பேசினோம்

    I think satesh u know JP (jayaprakesh)

    - NP.Saravanan

    ReplyDelete
  6. லட்டு நாகராஜ் - சுவாரஸ்யம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்...

      Delete
  7. உங்களுக்கு என்ன பேருன்னு சொன்னா இன்னும் சுவாரசியமா இருக்குமே!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நிறைய இருக்கு.. எதை சொல்ல... அடுத்த பதிவக்கு ஐடியாவுக்கு நன்றிங்கோ...

      Delete
  8. அருமை.
    பள்ளிக் குறும்புகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

      Delete
  9. ஆமா உங்க பேரு காலேஜ் படிக்கும் பொது என்ன தல

    ReplyDelete
    Replies
    1. வாங்க சக்கரகட்டி...

      என் பட்டப்பெயரை பற்றி ஒரு பதிவே போட்டு இருக்கேன்... பார்க்க முயலவும்... நிறைய இருக்கு... சுகமாகவும் இருக்கு...

      Delete
  10. லட்டு தின்ன ஆசையா என்பதற்கு புது விளக்கம்.. பந்துக்குள் எப்படி அடைத்தார் எப்படி எடுத்தார் என்பது வியப்பு!

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கும் வியப்புதாங்க சார்... அது நாகராஜ்க்கே வெளிச்சம்....

      Delete
  11. மலரும் நினைவு. ரசித்தோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி...

      Delete
  12. எம் பள்ளி நினைவுகளையும் தட்டி எழுப்பி விட்டீர்.

    ReplyDelete
  13. சுவையான பள்ளி நாட்கள்தான். நண்பனை விரைவில் வாழ்த்துக்கள் சந்திக்க

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளிதரன் சார்...

      Delete

  14. வணக்கம்!

    பள்ளி நினைவுகளை இங்களித்தீா்! நான்படித்துத்
    துள்ளிக் குதித்தேன் தொடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  15. நீங்க அந்த பந்துக்குப் பதிலா அவரோட பெட்டியை சோதனை பண்ணி இருந்தா மொத்த லட்டையும் ஆட்டையப் போட்டு இருக்கலாமுல்ல!!!

    ReplyDelete
  16. லட்டு-பெயர்க்காரணம் கூறு!!!! அந்த வார்டனோட கேள்வி இது வாகத்தான் இருந்திருக்கும்.

    ReplyDelete
  17. லட்டு லட்டாய் மலரும் நினைவுகள்...!

    ReplyDelete
  18. ஒவ்வொரு பட்ட பெயருக்கும் பின்னால் ஒரு சுகமான கதை உண்டு..... என்னுடைய பட்ட பெயரை இன்று உங்கள் பதிவால் நினைத்து பார்த்தேன் ! நன்றி !

    ReplyDelete
  19. அடடா.... அப்பவே அவருக்கு லட்டு தின்ன ஆசையா இருந்துருக்கே!!!

    ReplyDelete