Thursday, July 11, 2013

அஞ்சறைப்பெட்டி 11.07.2013

 


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........



தமிழகத்தின் மிக முக்கிய நீர் சேமிப்பு அணைகளான மேட்டூரும், பவானி சாகர் இரண்டின் நீர் மட்டம் உயர்ந்து வருவது மிக மகிழ்ச்சிக்குரியதாகும். பவானிசாகர் நீர் மட்டம் உயர உயர தட்டப்பள்ளி, அரக்கன்கோட்டை கால்வாய்களில் நீர் விடுவதால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மிக மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னும் நீர் உயர்ந்து டெல்டா மாவட்டங்களுங்கு விரைவில் நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் 2 வருடம் நீர் இல்லாமல் இருந்த விளைநிலங்கள் மீண்டும் பயிரிடப்படுவதை விரைவில் எதிர்பார்க்கலாம்..

வருண பகவான் இன்னும் மனது வைத்து அனைத்து ஏரி, குளம், குட்டைகளும் நிரம்பவேண்டும் என்பது அனைவரின் ஆவா.

.......................................

கோவையில் பாதாள சாக்கடை பணியால் போக்குவரத்து மிக பாதிப்படைந்துள்ளதை மறுக்க இயலாது. குழாய்கள் பதித்த இடங்களில் சீக்கிரம் சாலையை செப்பனிட்டால் போக்குவரத்து நெறிசல் மிக குறையும் வாய்ப்பு அதிகம் அதை செய்வார்கள் என்று மிக எதிர்பார்ப்பில் பாதாள சாக்கடை வேலை நடைபெறும் இடங்களில் எல்லாம் மக்கள் மிக எதிர்பார்க்கின்றனர்.

 .......................................

கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்படும், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளைப் பறிக்க, சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களை பாதுகாக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவை, சுப்ரீம் கோர்ட், நேற்று அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

இந்த செய்தியை மிக வரவேற்கிறேன் பதவியில் இருப்பவர்கள் தப்பு செய்ய கொஞ்சம் அஞ்சுவர்.

இதே போல் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு எதிராக ஒரு வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும் மற்றும் கல்வி தரம் உயர்த்த நல்ல சட்டங்களை கொண்டு வந்தால் நீதித்துறையை மக்கள் பெரிதும் போற்றுவர்..
.......................................

இளவரசன் மரணத்தை பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும் அவர் கொலை செய்யப்பட்டு இருந்தால் நிச்சயம் கொலைசெய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆவார்கள். அவர் மரணம் தற்கொலை என்றால் நிச்சயம் அது தவறான முடிவு. இன்னும் நல்ல நிலைமைக்கு உயர்ந்து பல நாட்கள் காத்திருந்து பொறுத்திருந்து மீண்டும் திவ்யாவை கைப்பிடிக்க போராடி இருக்க வேண்டும்.  எங்கேயோ தவறு நடந்திருக்கிறது அது மீண்டும் பத்திரிக்கை தலைப்பு செய்தி ஆகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை..
....................................... 

என்எல்சி போரட்டம் நடைபெற்றாலும் இப்போது அதிக அளவில் மின்தட்டுப்பாடு இல்லை போலும் மின்சாரம் சீராகவே இருக்குற்து மின்தடை நேரம் மிக குறைந்து காணப்படுகிறது. இதே போல் நீடித்தால் நன்றாக இருக்கும் தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும்.. 

....................................... 

 
உலக நாடுகளுக்கு எல்லாம் மனித உரிமை பற்றி போதித்து வரும் அமெரிக்க சிறையில், பெண்களுக்கு பலவந்தமாக கருத்தடை அறுவை சிசிச்சை செய்யப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கலிபோர்னியா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 148 பெண் கைதிகளை சிறை மருத்துவர்கள் வற்புறுத்தி கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக புலனாய்வு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

2006-2010க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மட்டும் சவுசில்லாவில் உள்ள 'வேல்லி பெண்கள் சிறையில் இருந்த கைதிகளுக்கும் கரோனாவில் உள்ள சிறை கைதிகளுக்கும் இந்த கட்டாய கருத்தடை செய்யப்பட்டதாக அந்த அறிக்கை ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறது.

இந்த ஆபரேஷன்களை செய்வதற்காக மாநில அரசிடம் இருந்து சிறை துறையினர் எந்த முன் அனுமதியையும் பெறவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தண்டனைக்காக சிறைக்கு வந்த பெண்களில் கர்ப்பிணியாக இருந்த பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

மீண்டும் அவர்கள் குற்றம் செய்துவிட்டு சிறைக்கு வரக்கூடும் என்பதால் சந்தேகத்துக்குரிய சில பெண்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டதாக சிறைத்துறை வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


தகவல்


உலகளாவிய அளவில் நடந்த 'ஊழல் அளவுக்கோல் 2013' சர்வேயில் முதல் இடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

'டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனர்' என்ற அமைப்பு உலகில் உள்ள 107 நாடுகளில் வசிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 270 பேரிடம் இந்த சர்வேயை நடத்தியது.

இந்த சர்வேயில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பன்மடங்கு பெருகி விட்டதாக 70 சதவீதம் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஊழலை ஒழிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு எவ்வித முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை என இவர்களில் 68 சதவீதம் பேர் கருதுகின்றனர்.

'86 கதவீதம் பேர் இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் கறை படிந்தவை என்று கூறுகின்றனர்.

ஆசிய அளவில் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் ஊழலை எதிர்க்கும் நடவடிக்கையிலும் மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்க இந்தியா தவறி விட்டது.

உலகின் தனிப்பெரும் சக்தியாக மாற நினைக்கும் இந்தியா ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளைல் உள்நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற தவறி விட்டதாக எங்கள் சர்வே முடிவுகளில் தெரிய வந்துள்ளது' என டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல் அமைப்புக்கான ஆசிய பிராந்திய பிரதிநிதி ருக்ஷானா நனயக்கரா தெரிவித்துள்ளார்.

உலகளாவிய அளவில் தங்களது காரியத்தை குறுக்கு வழியில் சாதிக்க 27 சதவீதம் பேர் கடந்த 12 மாத காலத்தில் யாருக்காவது லஞ்சம் தந்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில் மட்டும் 54 சதவீதம் பேர் லஞ்சம் தந்து காரியம் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஊழலை அடுத்து லஞ்சத்திலும் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் போலீஸ் துறையில் 62 சதவீதம், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவீதம், கல்வி துறையில் 48 சதவீதம், நில அளவை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறையில் 38 சதவீதம், நீதித்துறையில் 36 சதவீதம் லஞ்சம் நடமாடுவதாக மேற்கண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இப்படி பெருகிவரும் லஞ்சம் ஜனநாயகம் மற்றும் சட்டப்படியான நடைமுறை ஆகியவற்றின் மீதான மக்களின் அடிப்படை நம்பிக்கையையே தகர்ந்து விடுகிறது.

லஞ்சம் பெறுவது என்பது குறுக்கு வழியில் ஆதாயம் பெற நினைக்கும் தனி நபருக்கு மட்டும் அதிக செலவை ஏற்படுத்தவில்லை.

எதிர்வினையாக, மற்றவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய முன்னுரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும், ஒட்டுமொத்தமாக சமுதாய ஒருமைப்பாட்டையும் அர்த்தமற்றதாக்கி விடுகிறது என அந்த சர்வே அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.


தத்துவம்

பேசத் தெரிந்தவனுக்கு எல்லா இடங்களும் சொந்த இடம்  போன்றவை.

பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.

பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.

15 comments:

  1. இந்த செய்தியை மிக வரவேற்கிறேன்

    //

    இது நடந்தா அம்மாவும் பதவியைவிட்டு இறங்க வேண்டி இருக்கும். பரவாயில்லையா? :)

    ReplyDelete
    Replies
    1. அண்ணே அம்மா மட்டும் தான் இறங்க வேண்டி இருக்குமா ??? டவுட்டு

      Delete
  2. இந்த செய்தியை மிக வரவேற்கிறேன்
    >>
    ஐயோ! யாருமே மிஞ்ச மாட்டாங்களே!

    ReplyDelete
  3. லஞ்சம் இப்போலாம் யார் மனசையும் உறுத்துறதில்லை. சகஜமாய்ட்டுது. சில சமயம் கௌரவத்தோட அடையாளமாவும் ஆகிட்டு லஞ்சம்,உதாரணம் 70 லடசம் குடுத்து என் பையனை டாக்டருக்கு படிக்க வைக்குறேன், 8 லட்சம் குடுத்து கவர்ன்மெண்ட் வேலை வாங்கினேன் என்பது போல வெட்ககேடான விசய்த்தை கூட சொரணையில்லாம ஏத்துக்கிட்டோம்

    ReplyDelete
    Replies
    1. பெருமை பீத்தக்களையனுக இருக்கும் வரை ஒன்னும் செய்ய இயலாது...

      Delete
  4. வெகு நாட்களுக்கு பிறகு.. அழகிய அனுபவங்களோடு ஒரு அசத்தல் பதிவு...

    ReplyDelete
    Replies
    1. ஆம் சௌந்தர்... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

      Delete
  5. தத்துவங்களுக்கும் நன்றி...

    ReplyDelete
  6. அருமையான தகவல்கள்.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. கட்டாய கருத்தடை அமெரிக்கா சிறை பெண்களுக்கு என்ன கொடுமை விலங்கினங்கள் என்று நினைத்தார்களா??

    ReplyDelete
  8. ஈரோடு வழியாக ரயிலில் வரும்போது காவிரி நதியை பார்ப்பதற்காக ரயில் வாசலில் வந்து நிற்பதுண்டு....ஆனால் இப்போ அந்த பக்கமே போயி பாக்குறதே இல்லை, ஈரோட்டின் மொத்த சாக்கடையும் காவிரி நதியில்தான் விடுகிறார்கள் போல அம்புட்டு நாற்றம் த்தூ.....!

    இப்போ கோயம்புத்தூரும் நாற ஆரம்பிச்சிடுச்சோ....!

    ReplyDelete
  9. பல தகவல்களுடன் அஞ்சறைப்பெட்டி நிறைந்து நிற்கிறது.

    ReplyDelete