Monday, July 15, 2013

வாடகை வீடும் நான் பட்ட அவஸ்தையும்...



வாடகைக்கு வீடு கேக்க போனா வீட்டுக்கு வாடகையை சொல்லாமல் வீட்டிற்கே விலையை சொல்கின்றனர்.. இந்த தொகைக்கு ஒரு வங்கியில் கடன் வாங்க தவணையாக கட்டிவிடலாம் என்று வங்கிக்கு அடிமையாகின்றனர் இங்கு பலர். வீட்டு உரிமையாளருக்கு அடிமையாக இருப்பதை விட வங்கிக்கு அடிமையாக இருக்கலாம் போல...

நமது இந்திய திருநாட்டில் கிராமத்தில் இருந்து இன்று பட்டணத்திற்கு சென்று வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்து தான் உள்ளது அதுவும் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைய வந்த பிறகு அந்த நிறுவனங்கள் வளர்ந்ததோ இல்லையோ இங்கு வீட்டு வாடகை வளர்ந்து விட்டது. சென்னையை பொறுத்த வரை மாநகராட்சியில் வீடு வாடகைக்கு பிடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்.. இன்றும் சென்னையில் பலர் தினமும் 2 மணி நேர பயணத்திற்கு பின் அலுவலகம் வந்து செல்வோரின் எண்ணிக்கை மிக அதிகமாகத்தான் இருக்கும்.

வீட்டு வாடைகை பணத்தை கேட்கும் போது நிச்சயம் கொஞ்சம் தலை சுத்தத்தான் வேண்டும். ஒரு படுக்கையறை, இரு படுக்கையறை என்று குருவி கூடு போல வீட்டை கட்டி வைத்து விட்டு வாடகையை மட்டும் சிங்கத்தின் கூண்டு போல கேட்கின்றனர். தமிழகத்தை பொறுத்த மட்டில் சென்னைக்கு அடுத்த படியாக என்று சொல்வதை விட கிட்டத்தட்ட சென்னைக்கு நிகரான வாடகை தான் நிர்ணயிக்கின்றனர் கோவையின் வீட்டு உரிமையாளர்கள்.

ஒரு வேலைக்கு தனித்தேர்வுக்கு செல்பவனை விட வீட்டு உரிமையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் உச்சாவே வந்துவிடும். சமீபத்தில் வீடு வாடகைக்கு பிடிக்கவேண்டும் என்று ஊரைச்சுத்தி தேடாமல் அலுவலகப் பக்கத்திலேயே தேடினேன்.. ஒரு படுக்கையறை வசதி கொண்ட வீடு 7000 மும், 2 படுக்கையறை கொண்ட வீடு 10000 என்றனர் அது ஒரு வீதிக்கு மட்டும் அடுத்த வீதிக்கு சென்றால் இன்னும் அதிகமாக இருக்கிறது.

நிறைய நாட்கள் வீடு தேடி நிறைய அட்வான்ஸ கொடுத்து வீட்டுக்கு குடி வந்தால் தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒருநாள் தான் வருமாம்.. தண்ணீருக்குத்தான் முதல் அடி அடித்துக்கொள்வர். அடுத்து கரண்ட் பில் 5 வீடு வாடகைக்கு விட்டு இருப்பர் 5க்கும் ஒரே கனெஷன் கொடுத்து இருப்பர் அது பில் மட்டும் ஒரு குடும்த்துக்கு தலா 2000க்கு மேல் வரும். உறவினர்கள் வந்தால் அன்று மாலையே கிளம்பிடவேண்டும் முக்கியமாக குளிக்ககூடாது என்று ரூல்ஸ் சொல்கின்றனர்.

இன்னொரு இடத்தில் போக்கியத்திற்கு வீடு என்றனர் சரி எவ்வளவுங்க என்றேன் 7 இலட்சம் என்கின்றனர் சரி வீட்டை காட்டுங்க என்றதும் நீங்க உறுதியாக வருவதாக இருந்தால் காட்டுகிறேன் என்றார்... போற போக்க பாத்தா 7 இலட்சத்தையும் காட்டு அப்புறம் கதவை திறப்பீங்க போல என்றேன்.. திரு திரு வென விழித்தார் சந்தோசமாக வீட்டை வெச்குக்குங்க என்றேன் கேட்டை வேகமாக சாத்தும் சத்தம் கேட்டது.

இரவு பத்து மணிக்குள் வீட்டிற்குள் வந்துவிடவேண்டும். இரண்டாவது ஆட்டம் சினிமா எல்லாம் பார்க்க செல்லக்கூடாது. நான் 10 மணி 5 நிமிடத்திற்கு வீட்டை பூட்டிவிடுவேன் என்றார்.. இதை விடக்கொடுமை அவரு வெளியே வந்தாம் நாம் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று சொன்னார் பாருங்க துண்டக்காணம் துணியக்காணம் என்று ஓடிவந்தேன்.

வீட்டு உரிமையாளர்கள் இவ்வளவு சட்டம் பேசுவதற்கு நிச்சயம் அவர்கள் காரணம் இல்லை நாம் தான் காரணம் வாடகைக்கு வீடு கேட்டு செல்லும் போது எவ்வளவுனாலும் தருகிறேன் என்று அப்ப மிடில் மக்கள் சொல்ல ஆரம்பித்ததில் இருந்து தான் இவர்கள் வீட்டு வாடகையை உயர்த்த ஆரம்பித்தனர். அடுத்து புரோக்கர்கள் இவர்கள் சார் ஐடியில வேலைசெய்கிறார் கைநிறைய சம்பளம் வீட்டுக்கு அவர் 7000 தருகிறேன் என்கிறார் நீங்க 5000 போதும் என்கிறீர் என்று அவர்களின் கமிஷனுக்காக உசுப்பேத்தி உசுப்பேத்தி வாடகையையும் உசத்திவிடுகின்றனர்..

சரி வீட்டில் தான் பிரச்சனை அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரித்தால் இரு படுக்கையறை 15 ஆயிரம் முதல் தொடங்குகிறது அதுமட்டுமில்லாமல் சர்வீஸ் சார்ஜ் என்று அது மாதத்திற்கு 2500 புடுங்கிகொள்கின்றனர். எதிர்த்து கேட்டால் இங்க இப்படித்தான் சால் இஸ்டம் இருந்தா இருங்க இல்லை வேற வீடு பாருங்க என்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்பை பொறுத்த வரை வாடகை அதிகம் ஆனால் வீட்டு உரிமையாளர் தொந்தரவு இருக்காது அல்லது குறைவாக இருக்கும். வீட்டுக்கு உறவினர்கள் வந்தாலும் பிரச்சனை இருக்காது...

வீடு வாடக்கு என்று செல்லும் போது அவர்கள் கேட்கும் முக்கிய கேள்வி நீங்க எங்க வேலையில் இருக்கீங்க உங்க மனைவி எங்க இருக்காங்க வீட்டில் எத்தனை பேர் என்ற கேள்வியில் நம்முடைய சம்பள விகிதத்தை கணக்கிட்டு வாடகையை ஏற்றும் அதிபுத்திசாலிகளும் உள்ளனர். இரண்டு பேரும் வேலைக்கு போய்டுவீங்க குழந்தை பள்ளிக்கு போய்விடும் அப்ப பிரச்சனையில்லை இவர்கள் வீட்டை அசுத்தம் செய்யமாட்டார்கள் என்று அப்போது தான் அவர்களுக்கு எல்லாம் மூளை கவுட்டி கவுட்டியாக வேலை செய்யும்... என்ன செய்ய வெளியூருக்கு வேலைக்கு வந்தால் நம் தலை எழுத்து இதுதான்.. இங்கு மட்டுமல்ல எல்லா ஊர்களிலும்...

வாடகைக்கு குடி இருப்பவர்களின் அக்கப்போரும் நிறைய இருக்கு என்று அவர்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைப்பர் வீட்டு உரிமையாளர்கள் அதை நாம் மறுக்க இயலாது ஆனால் இதில் அதிக தொந்தரவு எங்கே என்று பார்த்தால் உரிமையாளர்கள் தான் என்று பல தரப்பும் உண்மையை உரக்க சொல்லும்....

51 comments:

  1. எனக்கும் இந்த அனுபவம் இருக்கு...

    ஒரு வீட்டுல வாடகைக்கு இருக்க எங்களுக்கு குவாலிபிகேசன் இல்லையாம்.... ஏன்னா, நானும் மனைவியும் வேலைக்கு போயிட்டா வீடு பூட்டியே இருக்குமாம்... சேப்டி குறைவாம்... ஒரு பெரியவங்க எப்பவும் வீட்டுல இருக்கணுமாம்....

    ReplyDelete
    Replies
    1. ஆஹா இது புது கதையா இருக்கே... என்னமோ போ மச்சி இவனுக தாவு தாங்கல...

      Delete
  2. //இரவு பத்து மணிக்குள் வீட்டிற்குள் வந்துவிடவேண்டும். இரண்டாவது ஆட்டம் சினிமா எல்லாம் பார்க்க செல்லக்கூடாது. நான் 10 மணி 5 நிமிடத்திற்கு வீட்டை பூட்டிவிடுவேன் என்றார்.. இதை விடக்கொடுமை அவரு வெளியே வந்தாம் நாம் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும்//

    இதென்ன கொடுமை. வீடா இல்லை ஜெயிலா!!

    ReplyDelete
    Replies
    1. இது தான் இன்றைய வாடகை வீட்டின் நிலமை...

      Delete
    2. நான் உதய்பூரில் அப்பிடிதான் சொன்னாங்க .....சரின்னு சொல்லிட்டு கேட் தாண்டி குதித்து போனேன்....அடுத்தநாளில் இருந்து கேட் திறந்து விட்டார்.....தாமதமாக வந்தாலும் .....என்ன செய்ய..

      Delete
  3. என்னக் கொடுமை சார் இது.. சத்தியமாவா? ஏகப்பட்ட விதிமுறைகளுடன் ஏகப்பட்ட செலவு செய்து நீரில்லை, காற்றில்லை, மின்சாரமில்லை, சுதந்திரமில்லு. வாடகைக்கு வீடு பிடிப்பதை விட சத்திரம் சாவடியில் வாழ்ந்திடலாம் போலிருக்கே. எங்கே போய் விடியுமோ?! செவ்வாய்க்கு போக ஆள் வேணுமாம் பேசாமல் போய்விடலாமோ? :/

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நிரஞ்சன் அது தான் சரி போல தோணுது...

      Delete
  4. எல்லாம் “கார்பொரேட்” கம்பெனிகளின் கொடையே சங்கவி.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நம் தலைவிதியும் கூட

      Delete
  5. 2500 சர்வீஸ் சார்ஜா...? சாமீ...!

    சென்னையில் கூட கிடைத்து விடும்... கோவையும் பெங்களூரும் மிக மிக சிரமம் தான்... (எனது அனுபவத்தில்)

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தனபாலன் அங்கு கூட வாங்கிடலாம் போல இங்க கழுத்தறுக்கிறானுக...

      Delete
  6. ரொம்ப கஷ்டம்தான்! இவங்க போடுற கண்டிசனுக்கு சொந்த வீடே கட்டிடலாம் போல! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க என்ன பன்றது இன்னும் பணம் தேத்தனும்...

      Delete
  7. சீக்கிரம் புது வீடு கட்ட வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அக்கா வாய் முகூர்த்தம் பலிச்சா சந்தோந்தானே...

      Delete
  8. ஆளை முழுங்குதுங்கோ....... சிரமம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க என்ன செய்ய நம் தலைவிதி...

      Delete
  9. வீட்டு ஓனர் கூடவே இருக்கும் வீட்டில் குடிபோக வேண்டாம்! பக்கத்து ஊர்ல கூட இருந்துக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க வீட்டு ஓனரால் பலர் அவஸ்தை பட்டு இருப்பர் அதைப்பற்றி சொன்னால் ஒரு புத்தகமே போடலாம் அந்த அளவிற்கு கதை கேட்டு இருக்கேன்...

      Delete
  10. நிஜமான தாக்கம் ..அதுவும் பேச்சுலர்ஸ்க்கு சொல்லவே வேண்டாம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... இருந்தாலும் பேச்சுலர்ஸ்க்கு வீடு உடனே விடுறாங்க காரணம் அதிக வாடகை...

      Delete
  11. எப்பவும் மிடில் க்ளாஸ் குடும்பத்திற்கு கோவை காஸ்ட் ஆஃப் லிவிங் காஸ்ட்லி என்று சொல்லுவார்கள்.

    இங்கே தாம்பரத்தில் தெற்கில் இருந்து இங்கே வந்து ஓனர் ஆனவர்கள் ரொம்ப கண்டிஷன்கள் போட மாட்டார்கள்.ஆனாலும்,ஓனர் மாடியிலோ,கீழ் வீட்டிலோ இருக்கும் வீட்டிற்கு நாங்கள் குடி போனதே இல்லை. பசங்க இரண்டும் விளையாடும் போது பிரச்சனை வரும்.

    கரண்ட் பில்லிற்கு யூனிட் இவ்வளவு என்று அதிகம் வசூலிக்கும் வீடுகள் வட சென்னையில் அதிகம்.பிராமணர்கள் வெஜிடேரியன் ஒன்லி என்று சொல்லி விடுவார்கள். நிறைய பேர் அவர்கள் குழந்தைகளுக்கு ஹோட்டலில் வாங்கி தருவார்கள். ஆனால் நம்மிடம் சீன் போடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. காஸ்ட் ஆப் லிவிங் காஸ்ட்லி தாங்க நாம வாடகை தர தயாராக இருக்கிறோம் ஆனால் அவர்கள் செய்யும் அலும்பல் தான் தாங்கலிங்க...

      Delete
  12. நாங்க இருந்த வீட்ல ஹவுஸ் ஒவ்நேர் தான் மோட்டார் போட்டு விடுவார். அதும் ஒரு மணி நேரம் தான். தண்ணீர் தீர்ந்து போச்சுனு சொன்னா எவ்வளவு துணி துவசுருகீங்கன்னு மாடி ஏறி வந்து எண்ணி பார்த்துட்டு போவார். வண்டிய ஓரமா தான் நிறுத்தனும், காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் வண்டிய எடுத்து வெளிய வைக்கணும். கொடுமை. மோட்டார் போட்டுவிடம வீட்ட பூட்டிட்டு போய்டுவான்.
    காலிபன்னும்போது சண்டை வந்து கட்டை எடுத்துட்டு அடிக்க வந்துட்டார், என் கணவரின் நண்பர் போலீஸ் அவரை அழைத்து வந்து பேசினோம். அப்புறம் தான் ஆள் சைலென்ட் ஆனார்.

    ReplyDelete
    Replies
    1. உங்க ஹவுஸ் ஓனர் செய்த ரகளைய பார்க்கும் போது அதுக்கு தனியா நாலு பதிவே எழுதலாம் போல.. எழுதி அவருக்கே அனுப்பனும் நீ செய்ய அக்குரமத்தை பாரய்யா என்று...

      Delete
  13. ponka login pannama niraya eluthiten ippo login pannunu solliduchu. vaadaki veedu kodumai thanunko

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப கொடுமை தான் என்ன செய்ய மிடில்க்ளாசின் சாபங்க அது...

      Delete
  14. நிறைய பேர் சொந்த வீடு கட்டத் துவங்குவதே
    இது மாதிரியான அடாவடி வீட்டு உரிமையாளர்களால்தான்
    அது ஒன்றுதான் இந்தக் கொடுமையில் உள்ள
    ஒரே ஒரு நன்மை என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சார் அதனால தான் பேங்க்காரனுக எல்லாம் ரொம்ப வாழ்கிறார்கள்... நம்ம தல விதி இதுதான்னு பல பேர் கிடக்கிறோம்...

      Delete
  15. Replies
    1. ரொம்ப கஷ்டம் மாம்ஸ்....

      Delete
  16. வாடகை வீட்டில் இருக்கும் அனைவரும் அனுபவிக்கும் சிரமங்கள். சுவரில் ஆணி அடிக்கக் கூடாது என்பார்கள். (ஒருவகையில் நியாயம்தான். விட்டால் வாடகைக்கு இருப்பவர்கள் வீடு முழுவதும் ஆணி அடித்து போட்டோ மாட்டி விடுவார்கள்!) உரிமையாளர் பக்கத்திலேயே இருக்கும் வீடுகளுக்கு வாடகைக்குப் போவது உசிதமில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க குடியிருப்பவர்களும் சில தறுகளை செய்கின்றனர் அதை மறுக்க இயலாது.. ஆனாலும் ஓனர்கள் அலம்பல் கொஞ்சம் ஓவர் தான்..

      Delete
  17. போற போக்க பாத்தா 7 இலட்சத்தையும் காட்டு அப்புறம் கதவை திறப்பீங்க போல//உண்மையான நிலவரம்தான்

    ReplyDelete
  18. சொன்னால் நம்ப மாட்டீங்க.....வீட்டுஓனர் மெச்சிய குடித்தனக்காரர்ன்னு நாங்க பேர் வாங்கி இருக்கோம். எல்லாம் நம்ம சிங்காரச் சென்னையில்தான்.

    சென்னையை விட்டு பின் சண்டிகர் போயிட்டோம். திரும்ப சென்னைக்கு வர ஒரு சான்ஸ் கிடைப்பதுபோல் இருந்தப்ப, வீடு தேடணுமேன்னு பழைய ஹவுஸ் ஓனருக்கு மெயில் அனுப்புனா,நீங்க வாங்க உங்களுக்கு வீட்டை வாடகைக்குத் தர்றோமுன்னு சொன்னார். அவரேஅந்த இடத்துக்கு வந்துட்டாராம். ஆனாலும் நமக்காக காலி செஞ்சு இன்னொரு வீடு இருக்கு அங்கே போயிடுவாராம்.

    நீங்க சொல்றதைப்பார்த்தால்..... எல்லாம் அடாவடியால்லெ இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. அப்ப நீங்க கொடுத்து வெச்சவங்களாக்கும்..

      Delete
  19. மரியாதையைக் கேட்டானா ? ராஸ்கல் அங்கேயே செருப்பை கழட்டி நாலு சாத்து சாத்தப்டாதா மக்கா கொய்யால...!

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது நம் தலைவிதி மக்கா...

      Delete
  20. இதில் அதிக தொந்தரவு எங்கே என்று பார்த்தால் உரிமையாளர்கள் தான் // உண்மை

    ReplyDelete
  21. //இதை விடக்கொடுமை அவரு வெளியே வந்தாம் நாம் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று சொன்னார் பாருங்க //

    pervert!

    ReplyDelete
  22. பலருக்கும் நிகழ்வது. ஆனால் இவ்வளவு நிபந்தனைகளா?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய இருக்கங்க.. இதை எழுதினால் பக்கங்கள் போதாது...

      Delete
  23. வீட்டு ஓனர்கள் குறைவாகச் சொன்னாலும் சில புரோக்கர்கள் தங்களுக்கான கமிஷனுக்காக நாங்க ஆளுங்களை கூட்டிட்டு வ்ர்ரோம்னு சொல்லி வாடகையையும் அட்வான்ஸையும் ஏத்திவிடுகிறார்கள்...நாங்களும் வீட்டு ஓனருக்கு பயந்து பேங்க் லோனுக்கு போனவர்கள் தான்...மாடி படிக்கட்டு சைட் கம்பிகள் இடையே அழுக்கு இருக்கக் கூடாது...அரசே தடை செய்த சாணி பவுடரை வாசலுக்கு கண்டிப்பாக போட வேண்டும் என்பதான பல ரூல்ஸ்...சீக்கிரம் புதுமனை புகுவிழாவிற்கு கூப்பிடுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் சீக்கிரம் அழைக்கிறேங்க..

      Delete
  24. சொன்னா நம்பமாட்டீங்க. என்னோட முப்பது வருச சர்வீஸ்ல சுமார் அம்பது வீடுங்கள்ல குடியிருந்துருப்பேன். நல்ல வேளையா எல்லாமே அப்பார்ட்மென்ட் டைப்புங்களா இருந்ததால வீட்டு ஓனர் தொல்லைய அனுபவிச்சதில்ல. தஞ்சையில வீடு கிடைக்காம நா பட்ட கஷ்டத்த என்னுடைய பழைய பதிவுகள்ல சொல்லியிருக்கேன். இன்னமும் சென்னையில தனி வீடு வேணும்னா இந்த தொல்லைகள் இருக்கத்தான் செய்யுது. வீட்டுக்காரனுக்கு ஒரு வீடுன்னா வாடகைக்காரனுக்கு ஆயிரம் வீடுன்னு சும்மாவா சொன்னாங்க. புடிக்கலையா காலி பண்ணிற வேண்டியதுதான். இப்போ ரிட்டயர் ஆனதுக்கப்புறம் சொந்த வீட்டுலதான் இருக்கேன்... ஆனாலும் பக்கத்து வீடுகள்ல இருக்கறவங்க தொல்லையும் இருக்கத்தானே செய்யிது? வாடகை வீடுன்னா காலி பண்ணிறலாம்.... ஆக எல்லாமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க இக்கரைக்கு அக்கறைக்கு பச்சை தாங்க...

      Delete
  25. 1990-களிலேயே இந்த நிபந்தனைகள் தில்லியில் உண்டு சங்கவி. இரவு பத்து மணிக்கு மேலே வந்தால் கதவு திறக்க மாட்டேன் எனச் சொல்வார்கள். ஒரு முறை, அறை நண்பருக்கு மோசமான அனுபவம் இருக்கிறது இந்த விஷயத்தில். நல்ல குளிர் சமயத்தில் அலுவலகத்தில் வேலை அதிகம் இருந்ததால், 10.30 மணிக்கு வந்த போது கதவை திறக்கவேயில்லையே அந்த வீட்டு ஓனர்..... நடுங்கும் குளிரில் பார்க்கில் சென்று படுத்திருந்து காலையில் வந்தார். அன்றே அந்த வீட்டைக் காலியும் செய்து வேறு வீட்டுக்குச் சென்று விட்டார் அந்த நண்பர்....

    ReplyDelete