Monday, July 1, 2013

கணவன் மனைவியும் இப்படியும் அடிச்சிக்கலாம்...


மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?

கணவன்: சப்பாத்தி


மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.


கணவன்: அப்படின்னா கோதுமை தோசை.


மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.


கணவன்: முட்டைப் பொரியல்?


மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.


கணவன்: பூரி?


மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.


கணவன்: மாமி கடையில புரோட்டா வாங்கி வரவா?


மனைவி: காலையிலதானே வயிறு சரி இல்லீன்னு சொன்னீங்க?


கணவன்: மோர் குழம்பு?


மனைவி: இராத்திரியில், தயிர் மோர் எல்லாம் சாப்பிடக்கூடாது


கணவன்: இட்லி சாம்பார்?


மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.


கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. 2 நிமிடத்தில் செய்திடலாம்


மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.


கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?


மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.


கணவன்: சுடு தண்ணீர் ஒரு குண்டா வை...


மனைவி: ம்ம்... சரிங்க... தண்ணீய என்ன பன்றதுங்க...

கணவன்:  நான் உள்ள வந்ததும் எம்மேலே ஊத்து... 
உனக்கு சாப்பிட்ட மாதிரியே இருக்கும்.... 

34 comments:

  1. கொய்யால
    ஏன் உங்க வீட்டு ரகசியத்த வெளியிடுறீங்க

    ReplyDelete
    Replies
    1. யோவ்... உனக்கு கல்யாணம் ஆகட்டும்முடி அப்புறம் இருக்கு உனக்கு உங்க வீட்ல கும்மாங்குத்து...

      Delete
  2. பேசாம ஹோட்டலுக்குப் போயிடலாமே. என்ன வேணும்ன்னாலும் கிடைக்கும் :-)))

    ReplyDelete
    Replies
    1. பொண்டாட்டி கையால குத்து வாங்குவது வீட்ல மட்டுத் தானே கிடைக்கும் அமைதிச்சாரல்...

      Delete
    2. இதை ஈஸியா தீர்த்துடலாம். போகும்போது அவங்களையும் கூட்டிட்டுப்போங்க. நீங்க ஒரு அயிட்டம் ஆர்டர் பண்ண, அவங்க இன்னொண்ணுதான் ஆர்டர் செய்யணும்ன்னு சொல்ல.. ஆஹா..ஆஹா..

      மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப் :-)))

      Delete
  3. ஹா ஹா ஹா :-) தினமும் இப்படித் தானா ? இல்ல இப்படித் தான் தினமுமா

    ReplyDelete
    Replies
    1. சீனு... உங்களுக்கு கண்ணாலம் ஆனதும் நிச்சயம் தினமும் இப்படித் தானா ? இல்ல இப்படித் தான் தினமுமா என்பது புரியுங்க....

      Delete
  4. ஹா ஹா ஹா.....நீங்க என்ன சொல்றீங்களோ அது அப்படின்னு சொல்லி சொல்லியே நம்மளை மெண்டல் ஆக்கிடறாங்க, சரி அது என்ன மாமி கடை பரோட்டா ?! இதுக்கே உங்களை மொத்தலாமே.....

    ReplyDelete
    Replies
    1. ஆமா பாஸ்... கொஞ்சம் சூதனமா இல்லீன்னா மெண்டல் ஆக்கிடுவாங்க.... இந்த மாமி 60 வயதிலும் தன் சுயமுயற்சியால் ஓட்டல் நடத்தறாங்க... இங்க புரோட்டாவும், சால்னாவும் அருமையா இருக்கும்...

      Delete
  5. தினமும் எல்லோருடைய வீட்டிலும்
    நடக்கிற கூத்தை அருமையாகப்
    பதிவு செய்துள்ளீர்கள்
    ரசித்து மகிழ்ந்தோம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க சார் இந்த மாதிரி சின்ன சின்ன சண்டைகள் இல்லை என்றால் குடும்பம் குடும்பமா இருக்காது எந்திரமாக இருக்கும்...

      Delete
  6. Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் ஓட்டுக்கும் நன்றி சார்...

      Delete
  7. இந்த பிரச்சனைக்கு தான் நம்மளே சமைக்கனும்ன்னு சொல்றது ..

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நாமலே சமைச்சாலும் அதில் உப்பு இல்லை காரம் இல்லை என நாம் சொன்ன நொட்டை எல்லாம் ஞாபகம் வைத்து மறுபடியும் சொல்வாங்க...

      Delete
  8. இந்த பிரச்சனைக்கு தான் நம்மளே சமைக்கனும்ன்னு சொல்றது ..

    ReplyDelete
  9. எல்லா வீட்டுலயும் இதானா?!

    ReplyDelete
    Replies
    1. எல்லா வீட்டிலேயும் முக்கிய பிரச்சனையே ராத்திரி சோறுதாங்கோ...

      Delete
  10. முதல்ல நகைச்சுவைன்னு நெனச்சிட்டேன்...லேபில்ல அனுபவம்னு இருக்கு. டவுட் கிளியர் ஆகிடுச்சு.

    ReplyDelete
    Replies
    1. க்ளியர் ஆகிடுச்சா., க்ளியர் ஆகிடுச்சா.,... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

      Delete
  11. ஆஹா..இது தான் இது தான் எங்கூட்டுலேயும் ஒரு ஸ்டவ்வால நடந்துட்டு இருக்கு.இப்ப தான் ஒரு பதிவு போட்டுட்டு இங்கே வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லா வீட்லியும் இதே கதை தாங்க... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

      Delete
  12. வீட்டுக்கு வீடு வாசற்படி...! ...ம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா...

      Delete
  13. Replies
    1. வாங்க மாதேவி... நலமா...

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  14. குண்டாங் தண்ணியில குளிச்சீங்களா...?
    வயிறு யாருக்கு ரொம்பியது...?
    அதையும் எழுதி இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அதை அடுத்த பதிவா தேத்திடாமுங்க...

      Delete
  15. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..

      Delete
  16. அட...அட... என்னே அனுபவம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பா உங்களுக்கு இப்படி ஒரு அனுபவம் இல்லையா... அல்ல இதற்கு மேலும் இருக்கா டவுட்டு

      Delete
  17. ஹஹா...அது உங்கவீட்ல மட்டும் இல்ல சகோ சங்கவி..எல்லார் வீட்லயும் அப்படித்தான்..என்ன வெளில எதும் சொல்லிக்கறதில்லை..அதிகம்..:)

    ReplyDelete