Saturday, July 27, 2013

இதழ்களின் வரிகள்... ( அவளுக்காக)





கூட்டுக்குடும்பத்தில்
அனைவரும் இருக்கையில்
அவளை கண்ணால்
கொல்லைப்பக்கம்
அழைப்பதில் இருக்கிறது
காதலின் " கிக் "

------------------------------------------

கண்ணை மூடினால்
கனவில் அவள்
வருவதில்லை
ஏன் என்றேன்
மனைவியாய் வருகிறேன்
என்கிறாள் !!

------------------------------------------

அவள் என்னிடம்
சண்டையிடும்
போதெல்லாம்
முத்தம் தான்
என் சமாதானப்பறவை...

ஆதாலால் தினமும்
எதிர்பார்க்கிறேன்
அவள் சண்டையை....

------------------------------------------



நான் மட்டுமல்ல
இந்த அகிலமே
மயங்கும் மங்கையின்
தேசம் அவளின் " இடுப்பு "

------------------------------------------

இரும்பு மனம்
கொண்டவனையும்
இளகிய மனம் ஆக்கும்
லெக்கின்ஸ் உடையில்
அவள் செம்ம ஹாட்டு
மச்சி...
 
  

------------------------------------------



உன் உதட்டு
சுழிப்புக்கு கவிதை
எழுத இயலாமல்
தவிக்கிறது என்
விரல்கள்....
 
 

29 comments:

  1. படிக்கும் போதே
    கிறங்கிப் போகிறது
    மனசு..!
    பத்து வருடங்கள்
    இறங்கிப் போகிறது
    வயசு..!
    படித்தப்பிறகு
    பாராட்ட
    வார்த்தை
    தெரியாமல்
    தவிக்கிறது
    என் மனசு...!

    ReplyDelete
    Replies
    1. வாவ்,,, இந்தக்கவிதையும் சூப்பரா இருக்கு... நன்றி நண்பரே...

      Delete
  2. ஆகா ஆகா - அன்பின் சங்கவி - காதல் ரசம் சொட்டுகிறது - அலைப்பதில் என்பது அழைப்பதில் என இருக்க வேண்டுமோ - தட்டச்சுப் பிழை. க்ண், கனவு, முத்தம், சண்டை, இடுப்பு, லெக்கின்ஸ் உடை, உதடு என அனைத்தையும் கருவாக வைத்து குறுங்கவிதை எழுதியது நன்று - அனைததையும் இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. பிழையை சரி செய்துவிட்டேன் தங்கள் ரசிப்புக்கு மிக்க நன்றி சினா ஐயா....

      Delete
  3. செம்ம ஹாட்டு...! வாழ்த்துக்கள்...

    கோவையிலும் தானோ...? ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. வார இறுதி என்றாலே ஹாட்தானே தனபாலன்...

      Delete
  4. என்ன Bro... நீங்க கவிதைகூட எழுதுவீங்களா?...
    அவள் என்னிடம்
    சண்டையிடும்
    போதெல்லாம்
    முத்தம் தான்
    என் சமாதானப்பறவை...

    ஆதாலால் தினமும்
    எதிர்பார்க்கிறேன்
    அவள் சண்டையை...

    செம கலக்கல்... தொடர்ந்து பல கவிப்பாக்களை இயற்றுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம்... விரைவில் புத்தகம் வெளியிட இருக்கேன் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்....

      Delete
  5. கொல்லைப்பக்கம்
    அலை(ழை)ப்பதில் இருக்கிறது
    காதலின் " கிக் "

    ReplyDelete
    Replies
    1. மாற்றி விட்டேன் நண்பரே...

      Delete
  6. சனிக்கிழமை ஒரு மாதிரித்தான் இருக்கு சங்கவி.எல்லாமே ‘கிக்’ !

    ReplyDelete
    Replies
    1. வார இறுதி என்றாலே கிக்குத்தாங்க...

      Delete
  7. உன் உதட்டு
    சுழிப்புக்கு கவிதை
    எழுத இயலாமல்
    தவிக்கிறது என்
    விரல்கள்...
    >>
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா! நாங்கலாம் தப்பிச்சோம்டா சாமி!!

    ReplyDelete
  8. கண்ணை மூடினால்
    கனவில் அவள்
    வருவதில்லை
    ஏன் என்றேன்
    மனைவியாய் வருகிறேன்
    என்கிறாள் !!
    >>
    ச்சே இந்த பொண்ணுங்களே மோசம். சரிதானே சங்கவி!?

    ReplyDelete
  9. 'சிக்'கென அமைந்த அருமையான
    'கிக்' காதல் கவிதைகள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்...

      Delete
  10. காதல் வழியும் கவிதைகள்...
    அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்...

      Delete
  11. விரைவில் புத்தகம்......

    வாழ்த்துகள் சங்கவி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சென்னையில் தான் வெளியீடு...

      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்...

      Delete
  12. குறுங்கவிதைகள் கிறங்க வைத்தன! சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்...

      Delete
  13. தித்திக்க விக்கித்து நிக்கவைக்கும்
    அத்தனை(யும்) கிக் குக் கவிகள்!

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ...

      Delete
  14. காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதைகள்..... சதீஷ் நீங்க பெண்ணின் அழகு மட்டும் இல்லாமல், அவர்களின் குணங்களை பற்றியும் எழுதுங்களேன் ! நீங்கள் உருகி எழுதும் இந்த கவிதைகள் எத்தனை பெண்களை காதலிக்க வைக்க போகிறதோ ?! தொடரட்டும் உங்கள் சேவை.....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சுரேஷ்.. முயற்சி செய்கிறேன்..

      Delete
  15. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்
    http://blogintamil.blogspot.com/2013/09/5.html?showComment=1379718612357#c7139904404420736012
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete