Wednesday, July 24, 2013

அஞ்சறைப்பெட்டி 25.07.2013



  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........




நரேந்திரமோடி அமெரிக்க செல்லக்கூடாது என்பதில் அமெரிக்கரை விட இந்தியர்களே அதிக ஆர்வத்தில் உள்ளனர். எம்பிக்கள் கையெழுத்து போட்டு அனுப்பியதில் பொய் கையெழுத்தும் உள்ளது என்கின்றனர். ஒரு மாநில முதல்வர் அயல் நாட்டிற்கு போவதில் என்ன தவறு அவரு என்ன அந்த நாட்டு அதிபருக்கு போட்டியாகவே போகிறார். அவரை பல நாடுகள் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. 

அமெரிக்க அவர் செல்லக்கூடாது என்று சொல்லி அவரை அமெரிக்காவிலும் பிரபலப்படுத்துகின்றனர் என்பது தான் நிதர்சனம்..

.......................................


பல நாட்களுக்கு முன் எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சு மின்சாரம் பற்றாக்குறை பற்றி தான் ஆனால் இன்று தமிழகத்தில் உள்ள நீர் மின் நிலையங்கள் எல்லாம் மீண்டும் மின்சாரம் தயாரிக்க தொடங்கிவிட்டன. போதக்குறைக்கு காற்றாழை மின்சாரங்கள் கை கொடுத்து அதனால் மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்கின்றது இன்று தமிழக மக்களுக்கு. இன்னும் மழை பெய்ய வேண்டும் அணைத்து அனைகளும் நிரம்ப வேண்டும், மின்சாரம் பற்றாக்குறையற்ற மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும் என்பது எல்லா தமிழனைப் போல் எனக்கும் ஆவல்..

தடையின் போது பல ஸ்டேட்டஸ்கள் விட்டவர்கள் எல்லாம் இப்போது எதுவும் சொல்லாதாது அவர்களின் பின்னடைவை காட்டுகிறது. மின்சாரப் பிரச்சனை தீர்க்கப்பட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை அதிமுக பெறும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.

 .......................................


இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி இளவரசி கேத்திற்கு இரு தினங்களுக்கு முன் லண்டன் ஆஸ்பத்திரியில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் அவர் குழந்தையுடன் கென்சிங்டன் அரண்மனைக்கு திரும்பினார்.

அந்த ஆண் குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என்று நேற்று பெயர் சூட்டப்பட்டது.

.......................................

பாதாள சாக்கடை திட்டத்தால் பாதாளத்தில் இருந்த சாலைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக செப்பனிடப்படுகிறது. இதற்கு புது சாலைகள் என்று வருமோ என எதிர்பார்த்து இருக்கிறோம் கோவை வாசிகள். என்று முடியும் இந்த திட்டம் என தினமும் இருசக்கர வாகனத்தில் போகும் போதெல்லாம் மனம் கேட்கத்தவறாத கேள்வி இது தான்..

.......................................

 

ஆட்டோக்களில் பயணம் செய்வதற்கு நடந்து போய்விடலாம் போல அந்த அளவிற்க இருக்கிறது ஆட்டோ கட்டணம் ஏனப்பா இவ்வளவு கட்டணம் என்றால் பெட்ரோல் விலை உயர்வை சொன்னால் கூட பரவாயில்லை அங்க பாருங்க எவ்வளவு ட்ராபிக் என்று இதில் எப்படி வண்டி ஓட்டுவது இதில் வண்டி ஓட்டுவது என்றால் இவ்வளவு தான் விலை என்கின்றர் கூடவே இஷ்டம் என்றால் ஏறுங்க இல்லை என்றால் விடுங்க என்ற பதில் தான் வருகிறது.

இந்த ஆட்டோ வேண்டாம் வேறு ஆட்டோவில் செல்லாம் என்று சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்து எவ்வளவு என்று கேட்டால் நிற்கும் ஆட்டோ கேட்ட தொகையை விட பாதி தான் கேட்கிறார்... யாரைக்குற்றம் சொல்ல? அரசு தலையிட்டு ஆட்டோ கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு இது தான் என்றால் ஆட்டோ ஓட்டுநர்கள் எல்லாம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தான் வாங்குவார்கள் என்று நம்பி இருந்தால் நிச்சயம் நாம் ஏமாறத்தான் போகிறோம்...  சென்னை போல நம்ம ஆட்டோ கோவைக்கும் வராதா என்ற ஏக்கத்தில் இருக்கோம் விரைவில் வரும் என்று நம்புவோம்...

....................................... 



மனிதர்கள் உணவு பழக்கத்தால் ஏற்படும் நன்மை – தீமை பற்றி சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது உலகம் முழுவதும் பெரும்பாலானவர்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை என்று தெரிய வந்தது.

மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்கள், அதிக நேரம் உழைப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், போதிய உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் காலை உணவை சாப்பிடாமல் உள்ளனர் என்றும் தெரிந்தது. காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு மற்றவர்களை விட திடீர் மாரடைப்பு ஏற்பட 27 சதவீதம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துக் கணிப்பு மற்றும் மருத்துவ ஆய்வை ஒப்பிட்டு எச்சரித்துள்ளனர்.

அது போல இரவு நேர உணவை 10 மணிக்கு பிறகே சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. இது இதய நோய்களை கொண்டு வந்து விடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து விட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன், உயர்ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆபத்து ஆகிய பிரச்சினைகளும் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

..............................



ஜாக்கி சேகரின் படங்களில் ஒன்று.
 
தி ஹிந்து நாளிதழும், லண்டன் பிர்க்பெக் பல்கலைக்கழகமும் இணைந்து தேசிய அளவிலான புகைப்பட போட்டிகளை நடத்தி வருகின்றன. தற்போது நடந்து வரும் போட்டியின் தலைப்பு  - உழைக்கும் முதியவர்கள். இந்த போட்டியில் தமிழ்ப்பதிவர்களில் பிரபல பதிவரான ஜாக்கி சேகரும் பங்கேற்கிறார்.
 
மேலும் தகவல்களை அறிய: http://www.thehindushutterbug.com/
ஜாக்கி சேகர் எழுதிய பதிவினைப்படிக்க:
 http://www.jackiesekar.com/2013/07/blog-post_22.html#more 
 
நமது ஜாக்கி சேகர் எடுத்த புகைப்படத்திற்கு வாக்களித்து வெற்றிக்கு வழிவகுக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். 
வாக்களிக்க இறுதி நாள்: 28/07/2013 இரவு 11 வரை.  31 ஜூலை அன்று வெற்றி பெற்றவர்கள் பட்டியல் http://www.thehindushutterbug.com/ தளத்தில் வெளியாகிறது. 
 

தகவல்



டால்பின் மீன்கள் பொதுவாக புத்திசாலித்தனம் நிறைந்த விலங்குகளாகக் கருதப்படுபவை. ஸ்காட்லாந்து நாட்டின் தொன்மையான செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் டால்பின் மீன்கள், ஒவ்வொரு மீனுக்கும் ஒரு குறிப்பிட்ட சத்தம் வரக்கூடிய விசில் ஒலியினை எழுப்பி அழைக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியே பெயர் இருப்பதுபோல் டால்பின்களுக்கும் தனித்தனியான விசில் சமிக்ஞைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஸ்காட்லாந்து கடல்பகுதிகளில் வாழும் டால்பின் மீன்களிடையே கடல் உயிரியல் ஆராய்ச்சியாளர்களான ஸ்டெபானி கிங்கும், வின்சென்ட் ஜானிக்கும் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

அவர்கள் ஒலி பின்னணி பரிசோதனைகளை டால்பின்களிடம் மேற்கொண்டனர். டால்பின்களின் விசில் ஒலியை பிரதியெடுத்து திரும்ப ஒலிக்கும்போது அவை அந்த ஒலிக்கு செயல்படுகின்றனவா? என்பதை ஆராய்ந்தார்கள்.

இந்த விஞ்ஞானிகள் குறிப்பிட்ட டால்பின்களை பின்தொடர்ந்து, அவற்றின் விசில் ஒலிகளைப் பதிவு செய்து அவற்றுக்கு மற்றொரு பிரதி எடுத்தனர். அதேபோல் மற்றொரு பிரிவினைச் சேர்ந்த விலங்குகளின் அறிமுகமில்லாத விசில் ஒலிகளையும் பிரதி எடுத்தனர்.

இதுபோல் கலந்து எடுத்த ஒலிகளைக் குறிப்பிட்ட மீன்களிடையே மறுபடி ஒலிக்கச் செய்தபோது அவை தம்முடைய குறிப்பிட்ட விசில் ஒலிக்கு மட்டுமே செவி அசைத்ததையும், அதைத் தவிர மற்ற ஒலிகள் அந்த டால்பின்களிடம் எந்த விளைவையையும் எற்படுத்தாதையும் அவர்கள் கண்டறிந்தனர். இதன்மூலம், டால்பின்கள் தனிப்பட்ட ஒலிகளுக்கு செயல்படுவதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.


தத்துவம்

ஆண்டவன் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான், நாம் அதைக் கண்டுகொள்ளாமல், திறமையற்றவர்களாகத் திரிகிறோம்.

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது.

தன்னம்பிக்கை, துணிவு, பயம் இந்த மூன்றையும் கற்றுக்கொண்டல் எந்த வேலையையும் செய்து முடிக்கலாம்

35 comments:

  1. பயனுள்ள மற்றும்
    அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய
    தகவல்களுடன் கூடிய அஞ்சறைப்பெட்டி
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்...

      Delete
  2. அரசியல்
    குழந்தை பிறப்பு
    ஆட்டோ கட்டணம்
    ஆரோக்கியம்
    புகைப்பட போட்டி
    டால்பினையும் விட்டு வைக்காம சொல்லி அதனோடு ஒரு தத்துவமும்..உண்மையில் அஞ்சறைப்பெட்டியில் கூட இவ்வளவு விடயங்கள் இருக்காதுங்க.. அசத்துறிங்க.

    ReplyDelete
    Replies
    1. எல்லாத்தையும் கலவையா கொடுக்கனும் என்ற அசையில் வந்தது தாங்க அஞ்சறைப்பெட்டி

      Delete
  3. மிக்க நன்றி... சங்கவி...

    தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.. எனக்கு வெற்றி தோல்வி முக்கியமில்லை... அது பலரை சென்று அடைய வேண்டும்.

    மீண்டும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அண்ணே வாழ்த்துக்கள்... என் ஒட்டை போட்டாச்சு...

      Delete
  4. ஜாக்கிக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கருண்...

      Delete
  5. அன்பின் சங்கவி - அனைத்தையும் விளக்கமாக அஞ்சறைப் பெட்ட்யில் தந்தமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா...

      Delete
  6. பின் தொடர்வதற்காக

    ReplyDelete
  7. நல்ல தகவல் பகிர்வு! தத்துவங்கள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே....

      Delete
  8. குஜராத்தில் ஆரம்பித்து தமிழ்நாடு வந்து இங்கிலாந்து போய் டால்பினில் முடிக்கிறீங்களே...... பாஸ் நீங்கதான் உலகம் சுற்றும் வாலிபர் !

    நல்ல நியூஸ் எல்லாம் ஒரே பதிவில், அமர்க்களம் போங்க !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே....

      Delete
  9. அசத்தல் அஞ்சறைப்பெட்டி...

    ஜாக்கி சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே....

      Delete
  10. எபோதும் சங்கவியில் அஞ்சறப்பெட்டி வாசனைதான்.எனக்கு மிகப்பிடித்தது எப்போதுமே தத்துவம்தான் !

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஹேமா ரொம்ப நாள் ஆச்சு... இந்த பக்கம் பார்த்து...

      Delete
  11. தகவலுக்கு நன்றி தல

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே....

      Delete
  12. இம்முறை அஞ்சல் பெட்டி மிக அருமை! நல்ல நல்ல விடயங்கள்!
    இறுதியில் தத்துவங்கள் மிகச்சிறப்பு!

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி இளமதி...

      Delete
  13. அஞ்சறைப்பெட்டி... மிகப்பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருக்கிறீர்கள்... மிக அருமையான தொகுப்பு...

    ReplyDelete
  14. அஞ்சறைப்பெட்டி அசத்தலா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேனகா...

      Delete
  15. காலை உணவு, டால்பின், மோடி, மின்சாரம்ன்னு அஞ்சறை பெட்டி வாசம் தூக்குது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா...

      Delete
  16. எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளின் தொகுப்பில் அஞ்சறைப் பெட்டி மணக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே....

      Delete
  17. அஞ்சறைப்பெட்டி பயனுள்ள பதிவுகளின் திறவுகோல்....நன்றி....!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மக்கா....

      Delete
  18. பாஸ் , It's pronounced as லூயி :)

    டால்பின் பதிவு அருமை .. டால்பின்களை பற்றி இன்னொரு சூப்பர் நியூஸ் http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/7291501.stm

    ReplyDelete
  19. நல்ல தகவல்கள்.....

    நன்றி சங்கவி.

    ReplyDelete