Wednesday, July 31, 2013

முகநூலில் 1000 ஷேர்களை தாண்டிய என் கட்டுரை....


இந்த கட்டுரை வலைப்பதிவில் எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது அப்புறம் முகநூலில் ஒரு ரவுண்டு வந்தது இக்கட்டுரையால் நிறைய நண்பர்களின் நட்பு கிடைத்தது இந்த கட்டுரையால் என் வீட்டு ஞாபகம் வந்தது என ஏகப்பட்ட மெயில், சாட், போன் என நிறைய பேச்சு இதைப்பற்றி என்னிடம் பகிர்ந்தார்கள் இன்று காலை அலுலலக தோழி முகநூலில் ஆசிரியர் பக்கம் என்று ஒன்று இருக்கு பாருங்க என்றார். ஏன் என்றேன் அது நீங்களும் உங்க மகனும் இருக்கும் படம் தானே என்றார் ஆம் என்றேன்.

அதன் பின் தான் அந்த கட்டுரையை பார்த்தேன் இது நம் கட்டுரையாச்சே என்று படிக்கும் போது கீழே என் பெயரை போட்டு இருந்தார்கள். அப்படியே ஷேர் செய்த எண்ணிக்கையை பார்க்கும் போது 880 என்று இருந்தது ஆச்சர்யம் அப்புறம் மதியம் பார்த்தேன் ஆயிரம் ஷேர்கள் என்றால் மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யும் கட்டுரை மற்றும் நானும் என் மகனும் இருக்கும் புகைப்படம் நிறைய பேரை சென்றடையும் போது...  இது தாங்க அந்த கட்டுரையும் புகைப்படமும்....




அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "

உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான்.

எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை.

உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.

தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..

தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.

தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.

சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?

உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.

ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை...

நண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து இன்று அவர்கள் மரமாக நிற்கின்றனர் அவர்களுக்கு விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை பட நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு கட்டுரையாக எழுதி விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த தாய்மானுக்கு முன்னின்று 60ம் கால்யாணம் செய்து வைக்க அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர் சொல்லும்போது அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம் தெரிந்தது.

நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம் நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம் தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம் அது போல் நம் குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும் என்பது என் ஆவா. 


https://www.facebook.com/Aasiriyarpakkam?hc_location=timeline


43 comments:

  1. அன்பின் சங்கவி 1000 பதிவர்கள் பகிர்ந்தனரா ? பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா...

      Delete
  2. நண்பரே... அங்கே பகிர்ந்தவன் நான்தான். அழகான அர்த்தமுள்ள படைப்புகள் என்றுமே வரவேற்கப்படும் என்பதில் உங்கள் கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்க உங்கள் எழுத்துப் பணி. அந்தப் படமும் மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி... ராஜேந்திரன் தமிழ்அரசு சார்...

      Delete
  3. மிகவும் சந்தோசம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்...

      Delete
  4. வாழ்த்துகள் சங்கவி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி....

      Delete
  5. தாய் மாமனை பற்றி அழகாக சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்! அனைத்தும் உண்மையானது சிறப்பானது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சுரேஷ்...

      Delete
  6. சூப்பர்.வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க...

      Delete
  7. வாழ்த்துக்கள் முகநுாலின் கவிதையே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே..

      Delete
  8. நிறைவான கட்டுரை, மகிழ்ச்சியான செய்தி.. வாழ்த்துகள் தலைவரே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல...

      Delete
  9. உண்மையில் நல்லதொரு படைப்பு. தாய் மாமன் உறவு என்பது தாய் வழி சமூகத்தின் மிச்சங்கள். தாய் வழி சமூகத்தில் குடும்ப நிர்வாகங்களின் பொறுப்பு தாய் மாமனிடம் இருந்தது. சொல்லப் போனால் மாமன் என்ற சொல்லே அம்மாவன், அம்மான் என்ற சொல்லின் திரிபு. அம்மாவின் சகோதரனே, பிள்ளைகளையும் பொறுப்போடு கண்காணித்தான். இது இன்றைக குடும்ப கட்டுமானம் உருவாக முன் எழுந்தவை. தாய்மாமனை மணக்கும் முறையில் எனக்கு உடன்பாடு இல்லை என்ற போதும், அதுவும் பண்டைய சமூகத்தின் நீட்சியே. அதனால் தான் மாமன், மாமன் மகன் உறவுகள் முக்கியமானது. அது மட்டுமில்லை இன்று தாய் மாமன்கள் இல்லாத சூழல் வந்த பின்னர், பிறரை மாமா என்று அழைத்துக் கொண்டிருப்பதும் கூட இதன் பழம் நினைவின் தாக்கமோ என்னவோ.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  10. Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

      Delete
  11. ஆயிரம் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
    தாய் மாமா என்பது ஆனந்தமான ஒரு உறவு. அந்த உறவைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சுவையாக, மனதுக்கு நிறைவாக இருக்கிறது. நானும் என் மாமாவைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
    நேரம் இருக்கும்போது படித்துப் பாருங்கள்.

    http://wp.me/p244Wx-q8

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரஞ்சனி மேடம்...

      நிச்சயம் படிக்கிறேன்...

      Delete
  12. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மணி சார்...

      Delete
  13. Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட் சார்..

      Delete
  14. தங்கள் எழுத்துப் பணி மேலும் மேலும் சிறப்பைக் கொணர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கமல் சார்..

      Delete
  15. ஏற்கெனவே படித்திருக்கிறேன்...என் தாய்மாமாக்களிடம் எந்த தொடர்பும் இல்லையெனினும் என் மகனின் தாய்மாமாக்களிடம் அவன் பெறும் உரிமையையும்,உறவையும் நினைவுபடுத்துகிறது உங்கள் பதிவு...வாழ்த்துக்கள் ஆயிரம் பதிவுகளுக்கு...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க எழில்..

      Delete
  16. அண்ணே பையன் செம்ம அழகு சூப்பர் படம்

    ReplyDelete
  17. சந்தோஷம்...

    தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தொடர்ந்து எழுதுவது தானே பொழுது போக்கு...

      Delete
  18. உண்மை..உண்மை.. அருமை.. அருமை..

    ஒரு தாய்மாமன் ;)

    ReplyDelete
  19. தாயிக்கு பிறகு குழந்தைகள் அதிகம் விரும்புவது தாய்மாமனைதான், எனது அனுபவத்தில் உணர்ந்தது இது, சிறப்பாக சொல்லிட்டீங்க மக்கா மற்றும் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  20. உறவுகளின் முக்கியத்துவம் மங்கி வரும் இந்த காலத்தில் மறந்துபோன தாய்மாமன் உறவைப் பற்றி எழுதி அதை ஆயிரம் முறை பகிர செய்தது உங்களுடைய எழுத்தின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். கூட்டுக்குடும்பம் என்ற வாழ்க்கை முறை மாறினாலும் ஒருசில உறவுகள் காலம் முழுவதும் நிலைத்து நிற்கும் என்பது உண்மைதான். அதில் ஒரு உறவுதான் இந்த தாய் மாமன் உறவு.

    ReplyDelete
  21. தாய்மாமன்களின் பாசத்தை நன்கு அறிந்தவள் என்பதால் உங்கள் கட்டுரை மனத்தை ஈர்த்தது. ஒற்றை வாரிசு போதும் என்று முடிவெடுத்து வளர்க்கப்படும் இன்றைய தலைமுறையின் வாரிசுகளுக்கு இதுபோன்ற உறவுகள் எல்லாம் அறியவராமலேயே போய்விடும். சிறப்பான கட்டுரைக்கும் அது பலரைச் சென்றடைந்த சிறப்புக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  22. 1000 தலை (face book ) வணங்கிய அபூர்வ சிந்தாமணி

    ReplyDelete
  23. 1000 தலை (face book ) வணங்கிய அபூர்வ சிந்தாமணி

    ReplyDelete
  24. எனக்கு 4 மாமாக்கள்.இருவர் இப்போ இல்லை.ஞாபகப்படுத்திவிட்டீர்கள் சங்கவி.அருமையான கட்டுரை.பாராட்டுக்கள் !

    ReplyDelete