Wednesday, July 24, 2013

முதல் கணிணி அனுபவம்... தொடர்பதிவு...


 தொடர்பதிவு 3 வருடங்களுக்கு முன்னால் தொடர் பதிவு என்பது செம்மையா களை கட்டும்.. இப்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது இது வரவேற்க வேண்டிய விசயம்.. முதலில் சீனு காதல் கடிதம் எழுத வைத்தார் அனைவரையும் அடுத்து எங்க ராஜியக்கா கணிணி பற்றி தொடர் பதிவ ஆரம்பிச்சு வெச்சுதும் படிச்சும் வேலைகிடைக்காம இருந்த பட்டதாரி போல இருந்த பதிவகம் வேலை கிடைச்சு வேலைக்கு போவது போல கல கலன்னு இருக்கு இந்த தொடர்பதிவால்.. ஆரம்பிச்சது அக்காவாக இருந்தாலும் என்னை அழைச்சது எங்க அண்ணன் பாலகனேஷ் அவர்கள் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு ஆரம்பிக்கின்றேன் என் ஆனந்த தொல்லையை...

+1 படிக்கும் போது பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் வந்து விட்டது அந்த க்ருப்பில் படிக்கும் மாணவர்களை எல்லாம் பெரிய ஆளுங்க மாதிரி சுத்தி சுத்தி வரும் சில கூட்டங்கள்.. கம்ப்யூட்ர் என்றால் என்ன அது எப்படி இருக்கும் என்ற பல கேள்விகள் எங்கள் மனதில் ஆனால் அதை பார்ர்கக கூட கொடுத்து வைக்கல என்பது தான் வருத்தம்.

அதுவும் இந்த க்ருப்பில் படிக்கும் மாணவர்கள் கம்ப்யூட்டர் லேப்போடு க்ளாஸ் ரூம்மும் அமைந்திருக்கும் புல் ஏசி அறை இவனுக பன்ற அலப்பறைக்காகவே வேண்டும் என்றே கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களிடம் வம்புக்கு போவோம் அந்த அளவுக்க அவனுக மேல காண்டு. ப்ளாபி டிஸ்க் கருப்பு கலரில் இருக்கும் அதை கையில வெச்சிகிட்டு இவனுக பன்ற அலப்பறை தாங்க முடியாது...

அது வேலை செய்யுமா செய்யாதா என்று எங்களுக்கு தெரியாது கையில் தொடுவதற்கு கூட விடமாட்டானுக.. இதனால் அவனுக கையில் கொண்டு வரும் போது வேண்டும் என்றே மேலே மோதி ப்ளாப்பியை கீழே தள்ளிவிட்டு ஏளனம் செய்வது எங்களது கடமைகளில் ஒன்று. சரி இப்படியே இருந்தா எப்படி கம்ப்யூட்டரை பார்க்கனுமே எனும் போது என் நண்பன் சசி அந்த க்ருப்தான் படிச்சான் அதனால அவனோட அந்த அறைக்கு போவது என்று முடிவு செய்து காத்திருந்தேன்.

கம்யூட்டர் க்ருப் மாணவர்களை கிண்டல் அடிக்கும் போது டேய் நீங்க எல்லாம் வரலாறு நாங்க தான் இன்றைய லேட்டஸ்ட் யூகம் உங்களுக்கு புத்தகமே கதி ஆனா நாங்க அப்படி இல்ல என்று கிண்டல் செய்ததோடு,

கோபால் தெரியுமா? - என்றான்

ம்ம்ம் தெரியுமே எங்க பக்கத்து வீடு என்றேன்...!!

சிரி சிரி என்று சிரித்தனர் !!

டாஸ் தெரியுமா ?

தெரியாதுப்பா? தாஸ் தான் தெரியும்!

வேர்ட் ஸ்டார் தெரியுமா? லோட்டஸ் 123 தெரியுமா? என்று கலங்கடித்தனர்..



அப்புறம் இதெல்லாம் என்ன வென்று சசியிடம் கேட்டு தெரிந்த போது தான் கம்ப்யூட்டர் மேல் காதல் வந்தது. இதை எப்படியாவது கத்துக்கனும் என்ன செய்யனும் என்ற போது கோபியில் கம்ப்யூட்டர் சென்டர் அப்ப இல்ல ஈரோட்டில் தான் இருந்தது. அதை அப்புறம் பார்க்கலாம் முதலில் கம்ப்யூட்டரையே பார்த்தது இல்லை என்று கூட இருப்பவர்கள் எல்லாம் உசுப்பேத்த சரி இன்று கம்ப்யூட்டர் லேப்புக்குள் போகலாம் என்று முடிவெடுத்தோம்.

நான், குணா மற்றும் அம்பேத் 3 பேரும் மதியம் கம்ப்யூட்டர் ரூமிற்குள் போவது என்றும் போய் அதை பார்த்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தோடு சசியை அணுகினால் டேய் சார் திட்டுவார் அவர் இல்லாத போது தான் பார்க்கவேண்டும் என்றான்.. இது சரிபட்டு வராது என்று அப்வே முடிவெடுத்து தனியாக சென்று பார்க்கவேண்டும் என முடிவு செய்தேன். தனியாக சென்று காதலியை முதலில் எப்படி பார்ப்போமோ அது போல பல ப்ளான்கள் போட்டு சந்திக்க முயன்றேன்..

ஒருநாள் ரொம்ப ரோசம் பொத்துகிட்டு வந்து நேரடியாக கம்ப்யூட்டர் அறைக்கு செல்ல முடிவெடுத்து மதிய உணவு இடைவேளையில் சென்றேன் நேராக சென்று கம்ப்யூட்டர் ஆசிரியரை பார்த்தேன் என்ன வேணும் என்றார் எனக்கு கம்யூட்டரை பார்க்கனும் இதில் கோபால் எல்லாம் இருக்குதாம் அப்படின்ன என்னசார் நான் வரலாறு க்ருப்பில் இருப்பதால் இதை எல்லாம் அறிய முடியாதா என்றேன்.. அவருடன் இருந்த மாணவர்கள் எல்லாம் அதற்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ருப் எடுத்திருக்கனும் இப்ப யோசிச்சு என்ன பன்றது என்றனர்..

அவர் சிரித்துக்கொண்டே மாலை 5 மணிக்கு மேல்வா இப்ப எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்றார் அவர் பெயர் ராதாகிருஷ்ணன். மாலை போனதும் அந்த கால அதாவது 1995 ம்ஆண்டு கம்யூட்டரான் கருப்பு வெள்ளை மானிட்டர் அதன் கீழ் சிபியு இருந்தது. இது தான் கம்ப்யூட்டர் உட்காரு என உட்கார வைத்தவர் வேகமாக டைப் அடித்தார். அப்புறம் கொஞ்ச நேரம் அதைப்பற்றி சொன்னவர் கவலைப்படாதே.. கம்ப்யூட்டர் க்ளாஸ் சென்று இதை எல்லாம் நீ கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லி வாழ்த்தி அனுப்பினார்.. அப்போது அந்த அறையை விட்டு வர மனம் இல்லாமல் 10ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தான் இப்படி ஒரு நிலை என்று மனதை தேத்திக்கொண்டு வெளியே வந்தேன் குப் என்று வியர்த்தது ஏசி அறையில் இருந்து வெளியே வந்தால் அப்படித்தானே இருக்கும்...

அப்புறம் கம்ப்யூட்டர் சென்டருக்கு ஈரோடு வந்து LCC & Silicon என்ற இடங்களில் படித்து Graphic Designer, Layout Artist, Artist, Printing Team Lead, Print Tech-lead , Layout Specialist என்ற பல வேலைகளை இன்றும் செய்து கொண்டு இருக்கேன்..

இந்த தொடர் பதிவிற்கு யாரை அழைக்கலாம் என்று யோசிக்கும் போது கிட்டத்தட்ட இன்று தினம் பதிவெழுதும் நண்பர்களை எல்லாம் அழைச்சிட்டாங்க போல எல்லோரும் எழுதி தள்ளுகின்றனர்.. அனைவரும் வாழ்த்துக்கள்... என்னை எழுத அழைத்த அண்ணன் பாலகணேஷ்க்கு நன்றி...

26 comments:

  1. என்ன மச்சி... சிம்பிளா முடிச்சிடிட்ட.....

    ReplyDelete
    Replies
    1. கதை எழுதினால் ரொம்ப போகும் மச்சி... அதை தனி பதிவா தேத்திடலாம் மச்சி...

      Delete
    2. என்ன மச்சி... சிம்பிளா முடிச்சிடிட்ட....//

      எலேய் இது முதல் இரவு அனுபவம் இல்லை, கணினி கணினி அனுபவம் ஹி ஹி....

      Delete
  2. //இந்த தொடர் பதிவிற்கு யாரை அழைக்கலாம் என்று யோசிக்கும் போது // அவ்வளவு பஞ்சமா சரி விடுங்க நீங்க கெஞ்சி கேக்குறதால நானே எழுதுறேன் ...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் எழுதுங்க மச்சி வரவேற்கிறேன்...

      Delete
  3. // கோபால் தெரியுமா...? டாஸ் தெரியுமா...? //

    அந்தக் காலத்தில் அலப்பறை ஜாஸ்தி தான்... நகைச்சுவையுடன் அனுபவம் கலக்கல்...

    மாட்டுவதற்கு ஆள் இல்லை...? - உண்மை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன்...

      Delete
  4. அனுபவம் பலவிதம்... படிக்க இன்ரஸ்டிங்கா இருந்தது மாப்ள..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

      Delete
  5. நீங்களும் வேர்ட்ஸ்டார் கோபால் லோட்டஸ் கேஸ் தானா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... பாஸ் நீங்களுமா...

      Delete
    2. கோபால் லோட்டஸ் பேசிக் படித்த அந்த கால ஆள் நான் மட்டும்தான் என்று நினைத்த போது நீங்க மட்டுமல்ல நாங்களும் தான் என்று வரிசையாய் ஆடு வந்து மாட்டுவது போல பல பேர் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்

      Delete
  6. கூப்பிட ஆள் இல்லை என்பதே உண்மை...

    ReplyDelete
  7. என் அழைப்பை ஏற்று அனுபவங்களை அழகா பகிர்ந்ததுக்கு நன்றி தம்பீ. இந்த விசயத்துல நமக்குள்ள பல ஒற்றுமைகள் இருக்கறதக் கண்டு மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. சுவையாக சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. கோபால் பத்தி சொன்னது சூப்பர் . ஆமா கோபால்னா என்ன?

    ReplyDelete
  10. முதல் அனுபவம் சூப்பர்....!

    ReplyDelete
  11. ஆமா முன்னலாம் ஏ சி ரூம்ல தான் கம்புயூட்டர் வைக்கணும்னு சொல்லுவாங்க நானும் பார்த்து இருக்கேன்

    நான் சென்டர்ல முதன் முதலா சேர்ச் பண்ணி பார்த்த தளம் ஜெசி பாபா. காம் தான் ஹி ஹி

    அன்றைக்கே ஏன் அண்ணனிடம் மாட்டி கொண்டேன்

    ReplyDelete
  12. அனுபவம் சுவையாக இருந்தது.

    ReplyDelete
  13. //இந்த தொடர் பதிவிற்கு யாரை அழைக்கலாம் என்று யோசிக்கும் போது கிட்டத்தட்ட இன்று தினம் பதிவெழுதும் நண்பர்களை எல்லாம் அழைச்சிட்டாங்க போல எல்லோரும் எழுதி தள்ளுகின்றனர்.. // அதையே தான் நானும் நினைக்கிறன்... எந்நாளும் யாரையும் அழைக்க முடியாது போல :-)

    //கீழ் சிபியு இருந்தது// இதனை நான் சி.பி என்று படித்துவிட்டேன், அவர் ஏன் அங்கு பொய் உக்காந்தார் என்று ஒரு நிமிடம் குழம்பி விட்டேன் ஹா ஹா ஹா

    ReplyDelete
  14. அன்பின் சங்கவி - தொடர் பதிவு அருமை - நன்றாக இருந்தது - கோபால் டாஸ் காலத்து மாணவனா ? அது சரி - நானும் கோபால் டாஸ் காலம் தான் - ஆனால் நீ பார்த்திராத ஒன்று நான் பார்த்திருந்தேன் - ஃப்ளாப்பி எத்தனை இஞ்சு தெரியுமா - மூணரை / அஞ்சு ? அதுக்கும் மேலே - 8 இஞ்சு - தோசக்க்கல்லாட்டம் இருக்கும் ..... ஹார்ட் டிஸ்க் இல்லாத காலம் / வங்கியிலேயே - கணிணிகள் அறிமுகப் படுத்திய காலம் - எண்பதுகளின் பிற்காலம் - ரெண்டு அஞ்சு இஞ்சு ஃப்லாப்பிய வச்சு ஓட்ன காலம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. பின் தொடர்வதற்காக

    ReplyDelete
  16. எனக்கு என்னமோ இந்த “கோபால், டாஸ்“ எல்லாம் புரியலைப்பா...
    இருந்தாலும் பதிவு சுவையாக இருந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. கோபால் தெரியுமா...?
    >>
    அது சரோஜா தேவி அம்மாக்குதானே தெரியும்!!

    ReplyDelete
  18. ஒருவேளை கம்ப்யூட்டர் அறிமுகமான காலகட்டத்தில் இணையமும், பேஸ்புக் போன்ற சமாச்சாரங்களும் சேர்ந்தே அறிமுகமாகியிருந்தால் நாமும் சுலபாக கற்றுக் கொண்டிருக்கலாம் போல... கருப்பு ஸ்கரீன வச்சி பயமுடித்தி விடாணுக...

    சுகமான நினைவுகள் அருமையாக இருந்தது பாஸ்.

    ReplyDelete
  19. இனிய நினைவுகள்.....

    ரசித்தேன்.

    ReplyDelete