Tuesday, July 16, 2013

அதிஷாவும் தம்மும் பின் சங்கவியும்..


ஒருவாரத்துக்கு முன் முகநூலில் அண்ணன் பெருமாள் கருணாகரனின் ஸ்டேட்டஸ் பார்த்தேன் அதில் நண்பர் அதிஷா அவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு 100 நாள் ஆச்சு என்றும் அவருக்கு வாழ்த்துக்கள் என்றும் ஸ்டேட்ஸ் போட்டு இருந்தார். அதைப்படித்ததும் ரொம்ப மகிழ்ச்சி சிகரெட் ரெகுலராக குடித்துவிட்டு அதை திடீரென நிறுத்துவது ரொம்ப கடினம் அதுவும் எதாவது சிந்தனை, கோபம் போன்ற நேரங்களில் சிகரெட் குடிப்பவர்கள் எல்லாம் உடனே மறப்பது என்பது நிச்சயம் எளிதான காரியம் அல்ல.

அதிஷாவைப் பொறுத்தவரை புகைபிடித்து கொண்டு இருந்து விட்டு அதை மறக்க நினைத்தது பெரியவிசயம் அதைவிட 100 நாட்கள் கிட்டத்தட்ட 3 மாதங்கள் புகைபிடிக்கவில்லை என்றும் அதை  இனி குடிப்பதில்லை என்ற  உறுதி மிக பாரட்டத்தக்கது.

புகைபிடிக்கும் பழக்கத்தை பொறுத்த வரை அதன் பின்விளைவுகள், அதனால் ஏற்படும் புதிய நோய்களை பற்றி எல்லாம் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவருக்கும்  தெரியும் இருந்தும் ஏன் குடிக்கிறார்கள் என்றால் நமக்கு எதுவும் வராதுப்பா என்ற குருட்டு நம்பிக்கையே காரணம். சிகரெட் குடிக்காமல் விடுபவர்களை நிச்சயம் நாம் வரவேற்க வேண்டும் அதனால் ஏற்படும் பல கஷ்டங்களை நம் அதிஷா நிச்சயம் கடந்த 3 மாதங்களாக அனுபவித்து இருப்பார் அதையும் தாண்டி குடிக்கவில்லை என்பது அவரது மனஉறுதியை வெளிப்படுத்துகிறது.


சிகரெட் குடிக்காமா விட்ட அதிஷாவை பாராட்டி பதிவு எழுதுறானே, இதுல உள்குத்து இருக்குமா? என்று நிறைய உள்குத்தாளர்கள் நினைக்கலாம் அவர்களுக்கு நான் சொல்ல நினைப்பது மற்றும் விரும்புவது சிகரெட் குடிப்பதை நான் விட்ட போது பட்ட அவஸ்தைகள் நிறைய.

எனக்க சிகரெட் குடிக்க உடல்நிலை இடம் கொடுக்கவில்லை என்பதை விட என் உதடுகள் இடம் கொடுக்கவில்லை அதனால் தான் நான் சிகரெட் குடிப்பதை மறக்க முடிந்தது . நிச்சயம் அதிஷா போல் வாய்ப்பிருந்தும் குடிக்க கூடாது என்ற மனநிலையை ஒரு மாதம் கொண்டு வரலாம் இரண்டாவது மாதத்தில் நிச்சயம் மனசு தடுமாறும். ஏற்கனவே பல முறை இனி சிகரெட் குடிப்பதில்லை என்று சத்தியம் மேல் சத்தியம் செய்தும் தோற்றுத்தான் போய் இருக்கேன் நான்.

புது வருடம் பிறந்தால் நம் நண்பர்கள் நான் இந்த வருடத்தில் இருந்து புகைப்பதில்லை என்று சத்தியம் செய்வார்கள் ஆனால் அடுத்த 15 நாட்களில் பொங்கல் பண்டிகையில் காணமல் போய்விடும் அந்த சத்தியம் உண்மையை சொன்னால் சத்தியம் எல்லாம் நமக்கு சர்க்கரை பொங்கல் தான்.

சிகரெட் மேல் எனக்கு நிறைய காதல் இருந்ததது அதை குடிக்கும் போது ரசிச்சு ரசிச்சு குடிப்பேன் ஒரு தம்மை உள்ளே இழுத்து ஒரு சிப் டீ குடித்துவிட்டு பின் அந்த புகையை வெளியே விடும் அனுபவமே தனி தான் அந்தளவிற்கு எனக்கு பிடிக்கும் சிகரெட் ஒரு காலத்தில்.

இப்படி நான் ரசித்ததை போல் அதிஷாவும் ரசித்து ரசித்து குடித்திருக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு அதன் மேலான காதலை அவ்வளவு சீக்கிரமாக கழட்டி விடுவது மிக கடினம் உண்மையான காதலை பிரிந்தது போல் இருக்கும் அந்த வலி மிகுந்தநாட்கள். இருந்தாலும் மன உறுதியுடன் சிகரெட் பழக்கத்தை விட்டருக்கு நம் வாழ்த்துக்கள்.

நான் சிகரெட் விட்டு கிட்டத்தட்ட 9 வருடங்கள் ஆகிவிட்டது இந்த ஒன்பது வருடத்தில் சிகரெட்டை ஒரு முறை மட்டுமே வாயில் வைத்திருக்கிறேன் அதுவும் நண்பன் குடித்தாகவேண்டும் என்ற அன்பு கட்டளைக்காக ஆனாலும் புகையை இழுக்கமாட்டேன் என்ற கன்டிசனில் தான் வாயில் வைத்தேன் அது நடந்து 5 வருடம் ஆகிவிட்டது.

நான் முதன் முதலாக புகைபிடித்தது ஆறாம் வகுப்பு படிக்கும் போது தான். எங்கள் ஊர் திருவிழாவிற்கு  வருடா வருடம்   நடக்கும் நாடகம் உள்ளுர் அண்ணன்கள் எல்லாம் நடிப்பார்கள் அந்த வருடம் நீந்த தெரியாத மீன்கள் என்ற நாடகத்தில் சின்ன பசங்களான எங்களையும் நடிக்கவைத்தனர் அந்த நாடகத்தில் நாங்கள் திருட்டு தம் அடிப்பது போல காட்சி அமைப்பு இருந்தது அப்பவே எனக்கு அந்த புகை பிடித்துவிட்டது 10 நெம்பர் பீடி அப்பத்தான் எனக்கு அறிமுகம் ஆகியது. நாடகம் முடிந்த பின் அதை மறந்து விட்டேன்.

9 வது படிக்கும் போது சாதா கோல்டு சிகரெட் நண்பன் சங்கர் புண்ணியத்தில் குடித்து பழகினேன் 6ம் வகுப்பில் பிடித்த அதே சுவை அதன் மீதும் எனோ காதல் வந்தது ( ஒரு வேளை காதலி கிடைக்காததால் சிகரெட் மேல் காதல் வந்திருக்கலாம்) அந்த சிகரெட் காதலை தொடர்ந்தேன் ஊரில் இருந்து விடுதிக்கு வந்தது நான் மட்டுமல்லாமல் இன்னும் 4 நண்பர்களையும் புகைக்க பழக்கினேன் அதுவும் கொஞ்ச நாளில் எங்கள் விடுதி வார்டனுக்கு தெரிய வர மிதி மிதி என மிதித்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினார் அப்புறம் அது மறந்து விட்டது.

அப்புறம் மேல படிப்பு படிக்கும் போது தான் முதன் முதலாக அறிமுகமாகியது வில்ஸ் பில்டர் அப்பதான் நன்றாக புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். இப்போது சிகரெட் மீதான காதல் அதிகமாகியது வீட்டு பாத்ரூமில் தம் அடிப்பது. ஆத்துக்குப் போய் தம் அடிப்பது, ஊருக்குள்ள இருட்டில் ஒண்டி அடிப்பது என திருட்டு தம் அடிப்பதை வழக்கமாக்கினேன் ஆயிரம் சொல்லுங்க திருட்டு தம் அடிக்கும் சுகமே தனிதான் புகையை சுருள் சுருளாக விட்டதெல்லாம் அப்ப தான்.

ஈரோட்டில் உள்ள பத்திரிக்கையில் வேலை செய்யும் போது தான் நான் எதிர்பார்க்காத அந்த நிகழ்வு ஏற்பட்டது ஆம் கிட்டத்தட்ட 10 வருடமாக நான் காதலித்த என் சிகரெட் காதலை விடுவேன் என நினைக்கவில்லை ஆனாலும் விட்டுவிட்டேன்.

ஒரு நாள் பல்வலி வந்தது பல் மருத்துவரிடம் சென்று வாயைக்காட்டினான் அவர் புதிதாக கடவாய்ப் பல் முளைக்கிறது என்றார் புதிதாக எக்ரே வந்துள்ளது என்றும் எடுத்து பார்க்கலாம் என்றார் எடுத்து பார்த்தால் அது திரும்பி முளைத்துவிட்டது இதை பிடுங்கித்தான் ஆக வேண்டும் என்றார் அவர் புதிய மருத்துவர் என்பதை நான் அறியவில்லை சரி பிடுங்குங்க என்றேன் அவரும் ஊசி போட்டு அந்த இடத்தை கிழித்து கொரடு போட்டு ஒரு இரண்டு மணி நேரம் போரடினார் பல் பிடுங்க... ரொம்ப போரடி அவர் நண்பருக்கு எல்லாம் போன் செய்து பேசி அப்புறமாக பிடுங்கிட்டார் அப்புறம் சொன்னார் நான் மருத்துவ தொழில் ஆரம்பித்து  இதுதான் நான் பிடுங்கும் முதல் கடவாய் பல் என்று. (உனக்கு நாந்தானா கிடைச்சேன் என்று கடவுளை வேண்டினேன்)

பல் பிடுங்கியதால் ஒரு வாரத்திற்கு புனல் வைத்து தான் சாப்பாடு சாப்பிட்டேன் ரசம் சாதமும், தயிர் சாதமும் தினமும் புனல் வைத்து ஊற்றப்பட்டது ஒரு பத்து நாள் ஆனபின்பு தான் ஆகா சிகரெட் பிடிச்சு 10 நாள் ஆச்சு என்று திருட்டு தம் அடிக்க மொட்டை மாடி சென்று பத்த வைத்து இழுத்தேன் குமட்டலாக வந்தது சரி வேண்டாம் என்று தூக்கி விசிவிட்டேன் அடுத்த நாள் முதல் அலுவலகம் சென்று வந்தேன். ருசியாக சாப்பிட்டு 15 நாள் ஆச்சி என்று எதிரே இருந்த பாஸ்ட்புட் சென்று சில்லிசிக்கன் சாப்பிட்டு ருசி கண்டேன்(அடுத்த நடக்கும் விபரீதம் தெரியாமல்)

2 நாள் கழித்து மீண்டும் பல்வழி என்ன வென்று மருத்துவரிடம் ஓடினால் பல் புடுங்கிய இடத்தில் இருக்கும் ஓட்டையில் ஒரு சிக்கன் எழும்பு அதை எடுத்து மறுபடியும் தையல் போட்டு மீண்டும் புனல் சாப்பாடுதான். அப்படியாக ஒரு நாற்பது நாள் போய்விட்டது. நிலமை சரியாகி எதிரே இருக்கும் பெட்டி கடையில் எவ்வளவு அக்கவுண்ட் அமவுண்ட் என்றதும் 20 ரூபாய் என்றார்கள். அப்ப தான் தம் அடிச்சு 40 நாள் ஆச்சு என்று நினைப்பு வந்தது.

எனக்கு என் சிகரெட் மீதான் காதலை மறக்க பல் வலி வந்ததால் அதை மறந்தேன் இல்லை எனில் நிச்சயம் அதை மறக்க வாய்ப்பில்லை அந்த போதை அப்படித்தான் மறக்க இயலாது இன்றும் பலர் என்னால் விட முடியவில்லை என்று ஏங்குபவர்கள் நிறைய இருக்கின்றனர் நம் நண்பர்களாக. நிச்சயம் அவர்களாளும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.. 100 பேர் சிகரெட் குடித்துக்கொண்டு இருந்தால் அவரின் 80 பேர் இன்னும் குடித்துக்கொண்டு தான் இருப்பர். 20 பேரில் பதினைந்து பேர் என்னைப்போல் உடல் நிலை சரியில்லாததால் குடிக்காமல் இருந்திருப்பர் ஆனால் 5 பேர் தான் மனஉறுதியால் சிகரெட் புகைக்காமல் விட்டு இருப்பார்கள்..


மன உறுதியால் சிகரெட் குடிப்பதை நிறுத்துபவர்களை நிச்சயம் நாம் பாரட்டித்தான் ஆகவேண்டும் அந்த வகையில் அதிஷாவை நிச்சயம் அனைவரும் பாராட்டியே ஆகவேண்டும். எதிர்காலத்தில் இந்த மாதிரி இன்னும் நிறைய நண்பர்கள் சிகரெட் புகைப்பதை விடுவார்கள் என்று நம்புவோம்... புகைப்பதை விடும் நண்பர்களுக்க நம் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

25 comments:

  1. எந்த ஒரு (கெட்ட) பழக்கமும் 21 நாட்கள் தவிர்த்தால் முழுவதும் தவிர்த்து விடலாம் என்று ஒரு ஆய்வு சொல்கிறது...! மன உறுதி பொறுத்து மாறுபடலாம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அது நாற்பத்தியெட்டு நாட்கள் இல்லையா?

      Delete
    2. ஓ.. இப்படி வேற ஒன்று இருக்கா... 21 நாட்கள் பத்தியம் இருந்தால் போதுமா....

      Delete
  2. அதிஷாவுக்கு வாழ்த்துகள். உங்க சிகரெட் வீட்டுக்கு தெரியுமா?!அப்பா பொளந்து கட்டுனாரா?!

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்கும் தெரியுமுங்க... பொழந்து கட்டி குத்து வாங்கியதெல்லாம் தனிக்கதை...

      Delete
  3. அதிஷாவுக்கு வாழ்த்துகள்.. சிகரெட்டை நீங்கள் எவ்வளவு நேசித்தீர்கள் என்று இந்த பதிவின் நீளத்திலிருந்தே தெரிகிறது... உங்களுக்கும் வாழ்த்துகள்.. சிகரரெட்டை விட்டதற்காக..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... சிகரெட் அது தனி போதைதான்..

      Delete
  4. முளையிலே விளைந்த பயிரா நீங்க?

    ReplyDelete
    Replies
    1. பிஞ்சுலேயே பழுத்தாச்சு... பின் காயடிச்சு காயாகிட்டேனுங்க...

      Delete
  5. அதிஷாவை நிச்சயம் அனைவரும் பாராட்டியே ஆகவேண்டும்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  6. புகை ..நாற்றம் வீசும் ஒரு கொடிய விஷச் செடி! அதை முளைக்கும் போதே..கிள்ளி வீசி விட வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  7. புகைப்பதை விட்ட அனைத்து நண்பர்களூக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா....

      Delete
  8. பிந்தொடர்வதற்காக

    ReplyDelete
  9. புகை நிச்சயம் கூடாத, ஆபாத்தான பழக்கம். நல்ல வேளை பல் டாக்டர் தயவில் புகையை விட்டீர்கள், அதிசாவுக்கும் வாழ்த்துக்கள். என் அப்பா சதா புகைப்பவர் அதனால் என்னவோ புகையின் மீது துளி விருப்பமும் எனக்கு வந்ததில்லை. இன்று அவரும் விட்டு விட்டார், புகைப் பழக்கத்தை விடுவது இன்று ஒரு பேசனாக ஆகியும் போனது நல்ல விடயமே..

    ReplyDelete
    Replies
    1. இந்த பேசன் தொடர்ந்தால் இன்னும் மகிழ்ச்சியே...

      Delete
  10. நானும் மனவுறுதியால் சிகரெட்டை விட்டவன். அந்தக்கதையை பின்பொருநாள் சொல்கிறேன்.

    ReplyDelete
  11. இன்னுமும்...தவிக்கும் பாவி நான்....

    ReplyDelete
  12. சிகரெட் நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் படுகுழி! விட்டு வந்த தங்களுக்கும் அதிஷாவிற்கும் வாழ்த்துக்கள்! புகைபிடிப்பவர்களைவிட உடன் இருப்பவர்களை அதிகம் பாதிக்கும் இந்த பழக்கத்தை விட்டொழித்தால் அனைவருக்கும் நல்லது! நன்றி!

    ReplyDelete
  13. எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா ஆறாவது படிக்கும்போதே தம் அடிச்சது கொஞ்சம் ஓவர்தான் இல்லே?...
    புகைப்பழக்கத்தை கைவிடுவதை பற்றி நான் கேள்விப்பட்ட இன்னுமொரு கூடுதல் தகவல் அந்தப்பழக்கத்தை நிறுத்துபவர் ஐந்து வருடங்கள் ஒரு இழுப்பு கூட இல்லாமல் புகைப்பதை நிறுத்தினால் மட்டுமே அவர் முழுவதுமாய் புகைப்பழக்கத்தை விட்டதாய் அர்த்தம்... அதுவரையில் அவரது உடம்பில் நிக்கோடினின் பாதிப்பு இருந்து கொண்டே இருக்குமாம்...

    ReplyDelete
  14. அவரை எல்லாரும் வாழ்த்துவோம் வாருங்கள்....!

    சிகரெட் நிறுத்துவது லேசான காரியமில்லை.

    ReplyDelete
  15. தினம் ராத்திரி சாப்பிட்டதும் கொஞ்ச தூரம் நடக்கப்போவோம். தெருமுனை பெட்டிக்கடையில் இருந்து ஒரு சிகெரெட் வாங்கி ஸ்டையிலா பத்த வச்சுக்குவார். அதன்பின் வீடு திரும்பும்வரை சண்டைதான்.

    இப்படியே ஏழு வருசம் போச்சு. அப்புறம் வெளிநாடு வந்துட்டோம். தெருமுனை பெட்டிக்கடை அங்கெ ஃபிஜியில் ஏது? ஒரு பாக்கெட் வாங்கி அதைப் பத்து நாள் வச்சுக்கறேன்னு சொல்லி அது ரெண்டே நாளா ஆனதும் வீட்டிலே மும்முரமான சண்டை. இப்படி ஒரு எட்டு மாசம்.

    இதுக்கிடையில் வருசாவருசம் புதுவருசத் தீர்மானம் சிகெரெட்டை விட்டுடப்போறேன். மூணு நாள் தாக்குப்பிடிக்கும் அநேகமாக.

    இப்படி இருந்த ஒரு புதுவருசம் 1983 சிகெரெட்டை விட்டுட்டேன்னு சொன்னார். நானும் ஒரு காதுலே வாங்கி மறுகாதில் விட்டேன். ஆனால்....மனுசர் சொன்ன சொல்லைக் காப்பாத்திட்டார்!!! ஆச்சு 30 வருசமும் ஆறுமாசமும் முடிஞ்சு ஏழாம் மாசம் நடக்குது!

    என்ன ஒன்னு சிகெரெட்டை விட்டதும் ஒல்லிக்குச்சி உடம்பு போய் மனுச உடம்பு வந்துருக்கு:-)))))

    அதிஷாவுக்கு இனிய பாராட்டுகள்!

    ReplyDelete
  16. பாராட்டுகள்.... மன உறுதி இருந்தால் எந்த கெட்ட பழக்கத்தினையும் விட்டுவிடலாம் சங்கவி......

    ReplyDelete