Showing posts with label இளமை. Show all posts
Showing posts with label இளமை. Show all posts

Sunday, July 13, 2014

கிளுகிளுப்பான கதை சொல்லி "சொக்கன் தாத்தா"

ஒவ்வொரு ஊரிலும் பல பெரிசுங்கள் ஆலமரத்தடியிலே, வேப்பமரத்தடியிலோ உட்கார்ந்து, ஊர் நாயம், உலக நாயம் பேசும் வழக்கம் எல்லா கிராமங்களிலும்  இருப்பார்கள். இவர்கள் மரத்தடி இருப்பார்கள், பாட்டிகளோ திண்ணையிலும், கிணற்றடியிலும் வெற்றிலை மடித்து வைத்து உரலில் இடிச்சிகிட்டே ஊர் நாயமும், உள்ளுர் கிசு கிசுக்களையும் பேசியே காலத்தை போக்குவார்கள்.

இவர்கள் பேசும் பேச்சில் பல அனுபவங்களும், நிறைய கருத்துக்களும் அடங்கி இருக்கும், என்ன பேசும் போது கொச்சை வார்த்தைகளை நிறைய பயன்படுத்துவார்கள். இப்போது நமக்கு கொச்சை வார்த்தையாக பட்டாலும் அப்போதெல்லாம் அந்த வார்த்தைகளின் மேல் ஈர்ப்பு இருந்ததை மறக்க இயலாது.

அறிவியல் மாற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சி, தொலை தொடர்பு வளர்ச்சி எல்லாம் அதிகரித்து அனைவருக்கும் பாலியியல் கல்வி களைப்பற்றி நிறைய அறிந்து கொள்ள இப்போது ஏதுவாக இருக்கிறது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்னர் ஒருத்தருக்கும் ஒன்னும் தெரியாது, இந்த மாதிரி பெருசுங்கள் எல்லாம் தங்களின் அனுபவங்களை கதையாக சொல்லி சொல்லித்தான் வளர்த்தார்கள் தங்கள் சந்ததியினரை. இவர்கள் சொல்லும் கதைகள் எல்லாம் இன்று நாம் கேட்கும் போது, அட இதுவா என்று தான் கேட்கத் தோணும், ஆனால் அன்று கதை கேட்க பெருசுங்களை துரத்தி துரத்தி இளைஞர்கள் படையெடுத்த காலம் அது.

இப்படி கதை சொல்வதில் எங்கள் ஊரில் பேர் பெற்றவர் சொக்கன் தாத்தா இவரைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும், இருவருக்கு எங்கள் சிறுவயதில் நாங்கள் வைத்த பெயர் கெட்டவார்த்தை தாத்தா. இந்த தாத்தா எங்களை பார்க்கும் போது வாடாக் குஞ்சு மணி, உள் டவுசர் கீது ஒன்னும் போடாமா அப்படியே ஆட்டிக்கிட்டு வர்றாம்பாரு என்று சத்தமாக அவர் பேசும் போது வெட்கமாக அந்த இடத்தை விட்டு ஓடிடுவோம்.

புதுசா கண்ணாலம் ஆன சேகர் அண்ணன் எப்ப பாரு தாத்தாவையே சுற்றி வருவார், நாங்களும் அப்படி என்னடா சொல்லுது இந்த கெட்டவார்த்தை தாத்தா என்று ஒட்டு கேக்க திணறுவோம். ஒரு நாள் கிணற்றுமேட்டில் அவர்கள் உட்கார்ந்து பேச பஞ்சாயத்து திண்ணைக்கு அடியில் படுத்து கதை கேட்கும் போது சொக்கன் தாத்தா பார்த்து விட்டார். உங்களுக்கு எல்லாம் இன்னும் வயசாகனுமடா குஞ்சாண்டிகளே என்று அவர் கத்த, நாங்க எஸ்கேப்.

வயது ஆக ஆக எங்களுக்கும் பெண்கள் மேல் ஈர்ப்பு இருக்கும் ஆனால் சைட் அடிக்க பயந்து தலைய குணிந்து மாட்டை ஓட்டிகிட்டு போய்டுவோம், ஆனால் தாத்தாவோ பெண்களை கண்டால் என்ன கொமுரி சமைஞ்சுட்டா போல, வெட்கத்தை பாரு என்று சத்தமாகவே கிண்டல் செய்வார். இதற்கு பின் தான் சொக்கத்தாத்தாவை நண்பராக்கி அவரிடம் கதை கேட்க ஆரம்பித்தோம்.

மங்குனி, கிங்குனியில் ஆரம்பித்து ராஜா ராணி கதைகள் என பல பாலியியல் கதைகளை சொல்வார். ஒவ்வொரு கதையின் முடிவில் வெட்கம் இருந்தாலும் அதில் பின்னப்பட்ட விசயங்கள் நிறைய இருக்கும். 

புருசன் பொஞ்சாதி, மாமனார், மாமியார், அத்தை  என ஒவ்வொரு உறவுக்கும் ஒரு கதை சொல்வார். புருசன் பொஞ்சாதி பிரச்சனைகளையும், அவர்கள் தப்பு செய்த போது எப்படி சமாளித்தார்கள் என்று பாலியில் கலந்து அவர் சொல்லும் கதைகள் நிறைய மணதில் ஓடுகின்றன. ராஜா ராணி கதைகள் தான் எப்போதும் செம்ம சூடா இருக்கும். அண்ணன் தம்பி கதைளில் சொத்துக்காக அவர்கள் செய்யும் திருட்டுத்தனத்தை நிறைய சொல்வார், அவர் சொன்னதில் "மங்குனிக்கு மங்குனியும் கெட்டு, கிங்குனிக்கு கிங்குனியும் கெட்டு, போதக்குறைக்கு வாயும் கெட்டு" என அவர் சொல்லும் போது எங்கள் சிரிப்புச்சத்தம் பக்கத்து ஊருக்கு கேக்கும்.
ஒரு நாள் கோயிலுக்கு போய்ட்டு வந்தேன் தாத்தா திருநீறு எடுத்துக்கோ என்றேன், எந்த கோயிலுக்கு என்றவரிடம் பவானி கூடுதுறைக்கு என்றேன். அங்கு இருக்கும் சிற்பங்களை எல்லாம் பாத்திருக்கிறாயா என்றார், எங்க தாத்தா எங்கப்பனும், ஆத்தாலும் தலையில் தண்ணிய தெளிச்சிகிட்டு, அந்த அர்ச்சனை, இந்த அர்ச்சனை என்று கோயிலில் என்னை கைய எடுத்து கும்பிடச்சொல்லி நச்சு நச்சுன்னு நச்சுங்கறாங்க...

அட போடா போக்கத்தவனே, அங்க நிறைய கண்ணாலம் ஆன புது புது சோடிகள் எல்லாம் வருவாங்களே, ஆமாம் தாத்தா நிறைய இருந்தாங்க என்றதும், அட அவுங்க எல்லாம் சாமி கும்பிட்டுட்டு அப்படியே, அங்க இருக்கும் சிற்பத்தை பார்க்கவந்தவங்க என்றும், அடுத்த முறை போய் ஒவ்வொரு சிற்பமாக பாருடா எங்குஞ்சாமணி, ஒவ்வொன்றும் ஓர் கதை சொல்லும் என்பார்.

தனியா போனா எப்படி என்று கூட்டாளிகளோடு கோயிலுக்கு சென்று அங்குள்ள சிலைகளை பார்த்து எங்களுக்கு தெரிஞ்ச விளக்கத்தை அப்போதைக்கு விளக்கி கொண்டோம். நாங்கள் ஒவ்வொருத்தனும் படிச்சு வெளியூரு வேலைக்கு போனாலும் சொக்கன் தாத்தாவை நினைச்சாலே மனசு செம்மையாக சிரிக்கும். நண்பர்கள் திருவிழா சமையத்தில் சரக்கடிக்க ஒன்னு சேரும் போது சொக்கன் தாத்தாவின் பேரனை கலாய்ப்பது வழக்கம்.

கண்ணாலம் ஆன புதிதில் சொக்கன் தாத்தா வீட்டுக்கு சென்றபோது என் பொஞ்சாதிய இருக்கும் போது சிலை சிலையா பார்த்தபையன் என்று கலாய்த்து அனுப்பினார். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் சொக்கன் தாத்தாவின் பேரன் போன் செய்தான், தாத்தா  94 வயதில் சாமிகிட்ட போய்ட்டாருடா, ரெண்டு நாள் ஆச்சு இன்னிக்குத்தான் காரியம்டா, தகவல் சொல்லாம்ன்னு கூப்பிட்டேன், உங்க அப்பாவும், அம்மாவும் வந்திருந்தாங்கடா அப்படியே நம்ம பசங்களுக்கு சொல்லிடுடா என்று போனை துண்டித்தான்.

இரண்டு நாட்களாக அவர் நினைவுதான். கிராமத்தை பொறுத்த வரை எல்லா தாத்தாவும் நம் தாத்தாக்கள் தான் சொந்த தாத்தாவை விட மற்றவர்கள் தான் மிக கிண்டலும் கேலியுமாக இருப்பார்கள். இந்த சொக்கன் தாத்தா அவர் மட்டுமா போனார், அவரின் நினைவுகள், பல பாலான கதைகள், அந்த கிராமத்தின் மண்ணை அறிந்த அந்த மகராசன் போனபோதே, அவரின் நினைவுகளையும், கதைகளையும் கொண்டு போய்ட்டார். இன்னும் இருப்பதோ சில தாத்தாக்கள் தான் அவர்களிடம் உள்ள கதைகளும் சீக்கிரம் அவர்களுடனே போய்விடும்....

Tuesday, July 16, 2013

அதிஷாவும் தம்மும் பின் சங்கவியும்..


ஒருவாரத்துக்கு முன் முகநூலில் அண்ணன் பெருமாள் கருணாகரனின் ஸ்டேட்டஸ் பார்த்தேன் அதில் நண்பர் அதிஷா அவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு 100 நாள் ஆச்சு என்றும் அவருக்கு வாழ்த்துக்கள் என்றும் ஸ்டேட்ஸ் போட்டு இருந்தார். அதைப்படித்ததும் ரொம்ப மகிழ்ச்சி சிகரெட் ரெகுலராக குடித்துவிட்டு அதை திடீரென நிறுத்துவது ரொம்ப கடினம் அதுவும் எதாவது சிந்தனை, கோபம் போன்ற நேரங்களில் சிகரெட் குடிப்பவர்கள் எல்லாம் உடனே மறப்பது என்பது நிச்சயம் எளிதான காரியம் அல்ல.

அதிஷாவைப் பொறுத்தவரை புகைபிடித்து கொண்டு இருந்து விட்டு அதை மறக்க நினைத்தது பெரியவிசயம் அதைவிட 100 நாட்கள் கிட்டத்தட்ட 3 மாதங்கள் புகைபிடிக்கவில்லை என்றும் அதை  இனி குடிப்பதில்லை என்ற  உறுதி மிக பாரட்டத்தக்கது.

புகைபிடிக்கும் பழக்கத்தை பொறுத்த வரை அதன் பின்விளைவுகள், அதனால் ஏற்படும் புதிய நோய்களை பற்றி எல்லாம் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவருக்கும்  தெரியும் இருந்தும் ஏன் குடிக்கிறார்கள் என்றால் நமக்கு எதுவும் வராதுப்பா என்ற குருட்டு நம்பிக்கையே காரணம். சிகரெட் குடிக்காமல் விடுபவர்களை நிச்சயம் நாம் வரவேற்க வேண்டும் அதனால் ஏற்படும் பல கஷ்டங்களை நம் அதிஷா நிச்சயம் கடந்த 3 மாதங்களாக அனுபவித்து இருப்பார் அதையும் தாண்டி குடிக்கவில்லை என்பது அவரது மனஉறுதியை வெளிப்படுத்துகிறது.


சிகரெட் குடிக்காமா விட்ட அதிஷாவை பாராட்டி பதிவு எழுதுறானே, இதுல உள்குத்து இருக்குமா? என்று நிறைய உள்குத்தாளர்கள் நினைக்கலாம் அவர்களுக்கு நான் சொல்ல நினைப்பது மற்றும் விரும்புவது சிகரெட் குடிப்பதை நான் விட்ட போது பட்ட அவஸ்தைகள் நிறைய.

எனக்க சிகரெட் குடிக்க உடல்நிலை இடம் கொடுக்கவில்லை என்பதை விட என் உதடுகள் இடம் கொடுக்கவில்லை அதனால் தான் நான் சிகரெட் குடிப்பதை மறக்க முடிந்தது . நிச்சயம் அதிஷா போல் வாய்ப்பிருந்தும் குடிக்க கூடாது என்ற மனநிலையை ஒரு மாதம் கொண்டு வரலாம் இரண்டாவது மாதத்தில் நிச்சயம் மனசு தடுமாறும். ஏற்கனவே பல முறை இனி சிகரெட் குடிப்பதில்லை என்று சத்தியம் மேல் சத்தியம் செய்தும் தோற்றுத்தான் போய் இருக்கேன் நான்.

புது வருடம் பிறந்தால் நம் நண்பர்கள் நான் இந்த வருடத்தில் இருந்து புகைப்பதில்லை என்று சத்தியம் செய்வார்கள் ஆனால் அடுத்த 15 நாட்களில் பொங்கல் பண்டிகையில் காணமல் போய்விடும் அந்த சத்தியம் உண்மையை சொன்னால் சத்தியம் எல்லாம் நமக்கு சர்க்கரை பொங்கல் தான்.

சிகரெட் மேல் எனக்கு நிறைய காதல் இருந்ததது அதை குடிக்கும் போது ரசிச்சு ரசிச்சு குடிப்பேன் ஒரு தம்மை உள்ளே இழுத்து ஒரு சிப் டீ குடித்துவிட்டு பின் அந்த புகையை வெளியே விடும் அனுபவமே தனி தான் அந்தளவிற்கு எனக்கு பிடிக்கும் சிகரெட் ஒரு காலத்தில்.

இப்படி நான் ரசித்ததை போல் அதிஷாவும் ரசித்து ரசித்து குடித்திருக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு அதன் மேலான காதலை அவ்வளவு சீக்கிரமாக கழட்டி விடுவது மிக கடினம் உண்மையான காதலை பிரிந்தது போல் இருக்கும் அந்த வலி மிகுந்தநாட்கள். இருந்தாலும் மன உறுதியுடன் சிகரெட் பழக்கத்தை விட்டருக்கு நம் வாழ்த்துக்கள்.

நான் சிகரெட் விட்டு கிட்டத்தட்ட 9 வருடங்கள் ஆகிவிட்டது இந்த ஒன்பது வருடத்தில் சிகரெட்டை ஒரு முறை மட்டுமே வாயில் வைத்திருக்கிறேன் அதுவும் நண்பன் குடித்தாகவேண்டும் என்ற அன்பு கட்டளைக்காக ஆனாலும் புகையை இழுக்கமாட்டேன் என்ற கன்டிசனில் தான் வாயில் வைத்தேன் அது நடந்து 5 வருடம் ஆகிவிட்டது.

நான் முதன் முதலாக புகைபிடித்தது ஆறாம் வகுப்பு படிக்கும் போது தான். எங்கள் ஊர் திருவிழாவிற்கு  வருடா வருடம்   நடக்கும் நாடகம் உள்ளுர் அண்ணன்கள் எல்லாம் நடிப்பார்கள் அந்த வருடம் நீந்த தெரியாத மீன்கள் என்ற நாடகத்தில் சின்ன பசங்களான எங்களையும் நடிக்கவைத்தனர் அந்த நாடகத்தில் நாங்கள் திருட்டு தம் அடிப்பது போல காட்சி அமைப்பு இருந்தது அப்பவே எனக்கு அந்த புகை பிடித்துவிட்டது 10 நெம்பர் பீடி அப்பத்தான் எனக்கு அறிமுகம் ஆகியது. நாடகம் முடிந்த பின் அதை மறந்து விட்டேன்.

9 வது படிக்கும் போது சாதா கோல்டு சிகரெட் நண்பன் சங்கர் புண்ணியத்தில் குடித்து பழகினேன் 6ம் வகுப்பில் பிடித்த அதே சுவை அதன் மீதும் எனோ காதல் வந்தது ( ஒரு வேளை காதலி கிடைக்காததால் சிகரெட் மேல் காதல் வந்திருக்கலாம்) அந்த சிகரெட் காதலை தொடர்ந்தேன் ஊரில் இருந்து விடுதிக்கு வந்தது நான் மட்டுமல்லாமல் இன்னும் 4 நண்பர்களையும் புகைக்க பழக்கினேன் அதுவும் கொஞ்ச நாளில் எங்கள் விடுதி வார்டனுக்கு தெரிய வர மிதி மிதி என மிதித்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினார் அப்புறம் அது மறந்து விட்டது.

அப்புறம் மேல படிப்பு படிக்கும் போது தான் முதன் முதலாக அறிமுகமாகியது வில்ஸ் பில்டர் அப்பதான் நன்றாக புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். இப்போது சிகரெட் மீதான காதல் அதிகமாகியது வீட்டு பாத்ரூமில் தம் அடிப்பது. ஆத்துக்குப் போய் தம் அடிப்பது, ஊருக்குள்ள இருட்டில் ஒண்டி அடிப்பது என திருட்டு தம் அடிப்பதை வழக்கமாக்கினேன் ஆயிரம் சொல்லுங்க திருட்டு தம் அடிக்கும் சுகமே தனிதான் புகையை சுருள் சுருளாக விட்டதெல்லாம் அப்ப தான்.

ஈரோட்டில் உள்ள பத்திரிக்கையில் வேலை செய்யும் போது தான் நான் எதிர்பார்க்காத அந்த நிகழ்வு ஏற்பட்டது ஆம் கிட்டத்தட்ட 10 வருடமாக நான் காதலித்த என் சிகரெட் காதலை விடுவேன் என நினைக்கவில்லை ஆனாலும் விட்டுவிட்டேன்.

ஒரு நாள் பல்வலி வந்தது பல் மருத்துவரிடம் சென்று வாயைக்காட்டினான் அவர் புதிதாக கடவாய்ப் பல் முளைக்கிறது என்றார் புதிதாக எக்ரே வந்துள்ளது என்றும் எடுத்து பார்க்கலாம் என்றார் எடுத்து பார்த்தால் அது திரும்பி முளைத்துவிட்டது இதை பிடுங்கித்தான் ஆக வேண்டும் என்றார் அவர் புதிய மருத்துவர் என்பதை நான் அறியவில்லை சரி பிடுங்குங்க என்றேன் அவரும் ஊசி போட்டு அந்த இடத்தை கிழித்து கொரடு போட்டு ஒரு இரண்டு மணி நேரம் போரடினார் பல் பிடுங்க... ரொம்ப போரடி அவர் நண்பருக்கு எல்லாம் போன் செய்து பேசி அப்புறமாக பிடுங்கிட்டார் அப்புறம் சொன்னார் நான் மருத்துவ தொழில் ஆரம்பித்து  இதுதான் நான் பிடுங்கும் முதல் கடவாய் பல் என்று. (உனக்கு நாந்தானா கிடைச்சேன் என்று கடவுளை வேண்டினேன்)

பல் பிடுங்கியதால் ஒரு வாரத்திற்கு புனல் வைத்து தான் சாப்பாடு சாப்பிட்டேன் ரசம் சாதமும், தயிர் சாதமும் தினமும் புனல் வைத்து ஊற்றப்பட்டது ஒரு பத்து நாள் ஆனபின்பு தான் ஆகா சிகரெட் பிடிச்சு 10 நாள் ஆச்சு என்று திருட்டு தம் அடிக்க மொட்டை மாடி சென்று பத்த வைத்து இழுத்தேன் குமட்டலாக வந்தது சரி வேண்டாம் என்று தூக்கி விசிவிட்டேன் அடுத்த நாள் முதல் அலுவலகம் சென்று வந்தேன். ருசியாக சாப்பிட்டு 15 நாள் ஆச்சி என்று எதிரே இருந்த பாஸ்ட்புட் சென்று சில்லிசிக்கன் சாப்பிட்டு ருசி கண்டேன்(அடுத்த நடக்கும் விபரீதம் தெரியாமல்)

2 நாள் கழித்து மீண்டும் பல்வழி என்ன வென்று மருத்துவரிடம் ஓடினால் பல் புடுங்கிய இடத்தில் இருக்கும் ஓட்டையில் ஒரு சிக்கன் எழும்பு அதை எடுத்து மறுபடியும் தையல் போட்டு மீண்டும் புனல் சாப்பாடுதான். அப்படியாக ஒரு நாற்பது நாள் போய்விட்டது. நிலமை சரியாகி எதிரே இருக்கும் பெட்டி கடையில் எவ்வளவு அக்கவுண்ட் அமவுண்ட் என்றதும் 20 ரூபாய் என்றார்கள். அப்ப தான் தம் அடிச்சு 40 நாள் ஆச்சு என்று நினைப்பு வந்தது.

எனக்கு என் சிகரெட் மீதான் காதலை மறக்க பல் வலி வந்ததால் அதை மறந்தேன் இல்லை எனில் நிச்சயம் அதை மறக்க வாய்ப்பில்லை அந்த போதை அப்படித்தான் மறக்க இயலாது இன்றும் பலர் என்னால் விட முடியவில்லை என்று ஏங்குபவர்கள் நிறைய இருக்கின்றனர் நம் நண்பர்களாக. நிச்சயம் அவர்களாளும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.. 100 பேர் சிகரெட் குடித்துக்கொண்டு இருந்தால் அவரின் 80 பேர் இன்னும் குடித்துக்கொண்டு தான் இருப்பர். 20 பேரில் பதினைந்து பேர் என்னைப்போல் உடல் நிலை சரியில்லாததால் குடிக்காமல் இருந்திருப்பர் ஆனால் 5 பேர் தான் மனஉறுதியால் சிகரெட் புகைக்காமல் விட்டு இருப்பார்கள்..


மன உறுதியால் சிகரெட் குடிப்பதை நிறுத்துபவர்களை நிச்சயம் நாம் பாரட்டித்தான் ஆகவேண்டும் அந்த வகையில் அதிஷாவை நிச்சயம் அனைவரும் பாராட்டியே ஆகவேண்டும். எதிர்காலத்தில் இந்த மாதிரி இன்னும் நிறைய நண்பர்கள் சிகரெட் புகைப்பதை விடுவார்கள் என்று நம்புவோம்... புகைப்பதை விடும் நண்பர்களுக்க நம் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

Friday, July 8, 2011

என்றென்றும் பதினாறாக இருக்க சில யோசனைகள்


செக்ஸ் உணர்வை அதிகரிக்க நிறைய மருந்துகள் இருக்கின்றன. எள்ளுருண்டை, உளுந்து வடை, பால், நெய், கோதுமை, பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு, குங்குமப்பூ, வெங்காயம், முருங்கைக்காய், பனங்கற்கண்டு, போன்றவை மிகவும் சிறந்ததாகும். அமுக்கிராப் பொடி, ச்யவனப்பிராச லேகியம் போன்றவற்றையும் இதனுடன் சாப்பிடலாம். பேரீச்சம் பழமும் மிகவும் நல்லது. ஒரு அவுன்ஸ் தண்ணீரில் இரண்டு பேரீச்சம் பழத்தை நறுக்கிப் போட்டு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்துக் கொள்ளவும். நான்கு பாதாம் பருப்பை பொடித்து 1 சிட்டிகை குங்குமப்பூ 1 ஸ்பூன் முருங்கைப் பூ கலக்கவும். இது மிகவும் சிறந்த பலனை அளிக்கிறது.

செக்ஸ் எண்ணத்தைக் குறைப்பதற்கு கடுக்காய் கலந்த கஷாயத்தைப் பயன்படுத்தலாம். தூக்கத்தில் விந்து வெளியாகும் ஆண்களுக்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மிகவும் சிறந்ததாகும். மனதை மகிழ்ச்சியாக வைப்பது ஆரோக்கியமான தாம்பத்தய வாழ்விற்கு வழிவகுக்கும்.

நாட்டு அமுக்கிரா, சீமை அமுக்கிரா என்ற கிழங்குகள் மருந்துக் கடையில் கிடைக்கும். அவைகளில் ஒன்றை வாங்கிப் பெருந்தூளாக இடித்து வைத்துக் கொள்ளவும். 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேளைக்கு 3 – 4 கிராம் எடுத்து 50 மி.லி. தண்ணீரும் 100 மி.லி. பசுவின் பாலும் சேர்த்துக் கொதிக்க வைத்து தண்ணீர் சுண்டிவிட்ட நிலையில் இறக்கி வடிகட்டிச் சர்க்கரை சேர்த்து சாப்பிடவும். காலை 6 மணி, இரவு படுக்கும் முன் இந்த பாலைச் சாப்பிட ஏற்ற வேளை.

மற்றொரு முறை அரை கிலோ அமுக்கிராக் கிழங்கை இட்லி வேக வைக்கும் பானையின் மேல் தட்டில் வைத்து, கீழே ஜலம் விடும் பகுதியில் 100 மி.லி. ஜலமும் 200 மி.லி. பசுவின் பாலும் விட்டு மூடி, இட்லி வேக வைப்பது போல் வேக வைக்கவும். ஆவியில் கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி கிழங்கு களை மைய இடித்து வெயிலில் உலர்த்தவும். உலர்ந்ததை நன்கு தூளாக்கிச் சம அளவு ஜீனி சேர்த்து 5 கிராம் வீதம் காலை, இரவு உணவிற்கு பிறகு பாலுடன் சேர்த்து உட்கொள்ள என்றென்றும் 16 வயதாகவே திகழலாம்.