Monday, September 3, 2012

இப்படித்தான் இருக்கவேண்டும் பிரபல ( பிராபல) பதிவர்கள்????


சமீபத்தில் மட்டுமல்ல பதிவுகில் அனைவருக்கும் உள்ள மனக்குமறல் இது தான் யார் பிரபல பதிவன்... நான் இரண்டு வருடமாக பதிவு எழுதுகிறேன் அப்ப நான் பிரபல பதிவனா இல்லையா என்று ஒவ்வொருவருக்கும் ஒரு மனக்குமறல் நிச்சயம் இருக்கத்தானே செய்யும். எல்லோரும் பிரபலம் ஆக வேண்டும் என்பது வெளியே சொல்ல வில்லை என்றாலும் மனதிற்குள் ஆசை நிச்சயமாக இருக்கும் இதுவும் ஒரு போதை என்றே சொல்லலாம். 

பதிவுலகில் பிரபல பதிவர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் அவரிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை எனக்கு தெரிந்த நண்பர்களை அவர்கள் பிரபல பதிவரா என்பது தெரியல அவர்களிடம் விளக்கம் கேட்போம்...

சிபி செந்தில் குமார்...

பிரபல பதிவர் என்பவர் யார் ?

பிரபல பதிவர் என்றால் அவர் தமது பதிவை தவிர வேறு பதிவிற்கு பின்னூட்டமிடாதாவராக இருக்கவேண்டும்
யாரையும் பாராட்ட மாட்டார், அவரின் எழுத்துக்ளுக்கு அனைவரும் ஓட்டு போட வேண்டும்.. படிக்க வேண்டும் என நினைப்பவர், பதிவர் சந்திப்பு என்று வந்தால் அவரைக் கேட்டுத்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று பலர் இப்படி நினைத்துக்கொண்டு இருப்பார்கள் ஆனால் அது பொய்யான தோற்றம் என்று அறியாமல்...

நீங்கள் பிரபல பதிவரா?

ஹி ஹி அப்படி எல்லாம் இல்லை... நான் பதிவர் என்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி...

கோவை நேரம் ஜீவா


பிரபல பதிவன் என்பவன் யார்?

அப்படின்னா என்னா ?..ரெண்டு கொம்பு முளைச்சு இருக்குமா...?ஹி ஹி ஹி ... பின்னு விக்கிறவன் புண்ணாக்கு விக்கிறவன் லாம் தொழில் அதிபர்னா அப்புறம் என்ன பண்றது..?


 நீங்கள் பிரபல பதிவரா?

சத்தியமா இல்லீங்க சாமியோவ்...ஆனா .நம்ம நண்பர்கள் எங்காவது கூப்பிட்டா ஒடோடி வருவேன்.ஏதாவது பேசி ரொம்ப மகிழ்ச்சியா இருப்போம்.எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் பழகுவோம்.நட்பை எதிர்பார்த்து காத்து இருப்பேன் ..

வீடு திரும்பல் மோகன்


பிரபல பதிவன் என்பவன் யார்? 

பிரபல பதிவர் என்பவர் நிறைய மக்களால் விரும்பி வாசிக்க படுபவர். ஒவ்வொரு காலத்திலும் சிலர் பிரபலங்களாக இருக்கலாம். ஒரு காலத்தில் எஸ். பாலபாரதி போன்றோர். பின் உண்மை தமிழன் முதலிய பதிவர்கள். இப்போது கேபிள் போன்ற சிலர் இவர்களெல்லாம் பிரபல பதிவர்கள் என நினைக்கிறேன். ஆனால் பிரபல பதிவர் என்றால் தொடர்ந்து வலையுலகில் இயங்க வேண்டும். இப்போது எழுதாமல் எப்போதோ எழுதியவர்கள் முன்னாள் பிரபல பதிவர்கள் என்று மட்டுமே கொள்ளலாம். 


நீங்கள் பிரபல பதிவரா...?
 
நான் பிரபல பதிவரா என்று நீங்கள் கேட்டால் சொல்ல தெரியலை. மற்றவர்கள் தான் சொல்லணும். சமீபமாய் நிறைய விமர்சிக்க, எதிர்க்கப்படுவதால் ஒரு வேளை கொஞ்சம் அப்படி ஆகி வருகிறோமோ என்று சந்தேகம் வருகிறது.

நாய் நக்ஸ் நக்கீரன்...

பிரபல பதிவன் என்பவன் யார்?
 
பதிவுலகில் அனைவரின் நண்பராக ஏற்றுக்கொண்டு எதிரிகளே இல்லாமல் அனைவருடனும் சுமுகமாக பழகுவரே பிரபல பதிவர்.. பதிவுலகில் அனைவராலும் விரும்பப்படுபவரே... பதிவுலகில் கருத்து வேறுபாடு இருந்தாலும் தனிப்பட்ட வகையில் அனைவராலும் விரும்பப்படுபவேரே பிரபல பதிவர்.

நீங்கள் பிரபல பதிவரா?

ஆம்.. நிச்சயமாக.. நான் பதிவே போடாவிட்டாலும் அனைவராலும் விரும்பப்படுபவன் என்ற கருத்தில் நான் பிரபல பதிவனே...

அஞ்சா சிங்கம்

பிரபல பதிவன் என்பவன் யார்?


என்னங்க இவ்ளோ கஷ்டமான கேள்வியை எல்.கே.ஜி. பையன்கிட்ட போயி கேட்டுடீங்க . எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன் .
 
அடிக்கடி அவதானிப்பு , பின்நவீனத்துவ போன்ற வார்த்தைகளை உபயோகிக்கவேண்டும் . பதிவை போட்டுவிட்டு அப்படியே காணாமல் போய்விடவேண்டும் . யாராவது பின்னூட்டத்தில் கேள்வி கேட்டால் ஒருவருக்கும் பதில் சொல்லகூடாது கமுக்கமா இருக்கணும் . 

என்னைத்தவிர வேறு யாராவது பதிவு எழுதுகிறார்களா .? தெரிந்தால் சொல்லவும் என்று அப்பாவித்தனமாக ஸ்டேட்டஸ் போடவேண்டும் .வேறு யாருடைய பதிவிற்கும் சென்று பின்னூட்டம் போட கூடாது . அப்படியே போட்டாலும் இரண்டு வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்து கொள்ளவேண்டும் .
 
(உ .தா). கிரேட் நேரஷன் . ...............அருமை தோழரே ........................மொக்கை சிரிப்புவரவில்லை ....இத்யாகி இத்யாகி .....  (Tm 2012)

முக்கியமான பாய்ன்ட்:- கொட்டை பாக்கும் கொழுந்து வெத்திலையும் வைத்து கூப்பிடாத எந்த நிகழ்ச்சியையும் புறக்கணிக்க  வேண்டும் . விதிவிலக்காக விருது ஏதும் தந்தால் கலந்து கொள்ளலாம் .

நீங்கள் பிரபல பதிவரா?
 
ஏன் சாமி நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா .? 
 
இப்போ எல்லாம் ராத்திரி படுத்தா உடனே தூக்கம் வருது . நான் பிரபல பதிவர் ஆகிவிட்டால் என் நிலைமை என்ன ஆவது . இதற்க்கு சிகிச்சை வேறு கிடையாது என்று சொல்கிறார்கள்  

வீடு சுரேஷ்

பிரபல பதிவன் என்பவன் யார்?

தலையில் இரண்டு மாய கொம்புகள் முளைத்திருக்க வேண்டும், இலக்கியமாக எளிய நடையில் இல்லாமல் புரியாமல் எழுத வேண்டும். அது மாதிரி எழுதுகின்ற நண்பர்களுடன் மட்டுமே பழக வேண்டும், முக்கியமாக புதிய பதிவர்களை புழுவைப் பார்ப்பது போல் பார்க்க வேண்டும். எதாவது பத்திரிக்கையில் குப்பை கொட்ட வேண்டும்.

நீங்கள் பிரபல பதிவரா?

எல்லாருக்கும் பிடித்த பதிவர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்...! (சண்டை போட்டாலும் நான் நட்பு விரும்பி)ஆனால் நான் பிரபல பதிவர் கிடையாது...! அதற்கான தகுதி எள்ளவும் கிடையாது..! ஆனாலும் கார்ட்டுனிஸ்ட் பாலாவின் கருத்தை இங்கே பதிகின்றேன்....

"பத்திரிகைகளில் குப்பைக் கொட்டும் அப்பாட்டக்கர்களை விட ஃபேஸ்புக்கிலும், ப்ளாக்குகளிலும் எழுதும் பலர் பிரமாதமாக எழுதுகிறார்கள்.. :)"...
இவர்கள் கருத்தில் எனக்கு என்ன புரிகிறது என்றால் பிரபல பதிவர் என்பது அவர் நடந்து கொள்ளும் விதத்தையும் மற்றவர்களை வழிநடத்துவதிலும் இருக்கிறது... ஒரு இடத்தில் உட்கார்ந்து கட்டுரை எழுதினால் போதாது தன்னை மதிப்பவர்களை மதிக்க தெரிய வேண்டும் என்பது உணர்கிறது...

70 comments:

  1. வணக்கம் சார்,
    என்ன ஒரு அக்கப் போர் பதிவு.
    இதைப் படிச்சாவது அந்த சென்மங்கள் திருந்துமா?
    திருந்தினால் சந்தோசமே..
    இல்லேன்னா பின்னாடி போட்டுத் தாக்குவோம்.

    ReplyDelete
  2. சார் ஒரு டவுட்டு, நான் பிரபல பதிவர் ஆகனும் என்று ஆசைப்படுறேன்,
    என்னா பண்ணலாம்?
    நண்பர் வீடு சுரேஷிடம் கேட்டேன்,
    நிரூ நீ டுவிட்டரில முழு நேரமா படுத்துக்கிடந்திட்டு, பதிவுலகில் ஏதாவது நிகழ்ந்தா உடனே புறப்பட்டு வந்து ஒரு பதிவைப் போட்டு கண்டம் தெரிவின்னு சொல்றார்.
    இப்படி நான் பண்ணலமா?
    இதனால் நான் பிரபலமாவேனா?

    பிரபல பதிவர் எனும் வாக்கியம் என்னைப் பார்த்து நானே கூறிக் கொள்ளும் வாக்கியமா?

    ReplyDelete
  3. இது தான் சார்,,
    ஏலவே ஒரு சந்திப்பு நிகழ்ந்த போது, பதிவர் சந்திப்பிற்கு தாம்பூலத் தட்டம் கொடுக்கலைன்னா வரமாட்டோம் அப்படீன்னு பலர் அடம்பிடிச்சாங்க. அவங்களுக்கு ஒரு பதிவு போட்டேன். எல்லோரும் குழம்பிட்டாங்க.
    இப்போ உலக வாழ் தமிழ்ப் பதிவர்களே அறியும் வண்ணம் சந்திப்பு நடத்தியிருக்காங்க.
    தாம ஏதோ அப்பா டக்கர் ரேஞ்சில இருபப்தாகவும், தமக்கு அழைப்பு விடுக்கலைன்னும் சொல்லிக்கிறாங்க.

    சொல்லாமல் கொள்ளாமல் வைச்சுக்க இது என்ன ஷகீலா படம் காட்டும் மேட்டரா?
    பதிவர் சந்திப்பு!!

    ReplyDelete
  4. என்ன சார், நீங்களும் பிரபல பதிவர் ஆகிட்டீங்க போல
    நான் கமெண்ட் போடுறேன்.
    பதிலைக் காணலை;-)))

    ReplyDelete
  5. நல்ல விளக்கம்...

    இன்னும் இது தீரவில்லையா...?

    ReplyDelete
  6. சங்கவி: சாதாரணமா தான் நம்ம கிட்டே கேள்வி கேட்டீங்க. இது பெரிய உள்குத்து பதிவா இருக்கே. நான் எல்லாரையும் எங்கு பார்த்தாலும் பேசணும் என நினைப்பவன். நம்மளை சிலர் தப்பா நினைச்சுட போறாங்கப்பா !

    ReplyDelete
  7. Ha...ha....
    Kizhinchathu...
    Tawosar......

    Ethhaavathu...
    Micham irukkuma....?????

    ReplyDelete
  8. ஆகா...கிளம்பிட்டாங்க....எதுக்கோ கேள்வின்னு நினைச்சேன்...ஓகே..ஓகே...இட்ஸ் ஆல் கேம்...

    ReplyDelete
  9. வாங்க நிரூபன்,,

    இன்னும் பிரபலம் ஆகுல அதனால தான் கமெண்ட்போடம இருந்தேன்...

    இப்ப வந்துட்டேன் சொல்லுங்க தல...

    ReplyDelete
  10. ...நிரூபன் said...

    சார் ஒரு டவுட்டு, நான் பிரபல பதிவர் ஆகனும் என்று ஆசைப்படுறேன்,
    என்னா பண்ணலாம்?
    நண்பர் வீடு சுரேஷிடம் கேட்டேன்,
    நிரூ நீ டுவிட்டரில முழு நேரமா படுத்துக்கிடந்திட்டு, பதிவுலகில் ஏதாவது நிகழ்ந்தா உடனே புறப்பட்டு வந்து ஒரு பதிவைப் போட்டு கண்டம் தெரிவின்னு சொல்றார்.
    இப்படி நான் பண்ணலமா?
    இதனால் நான் பிரபலமாவேனா?

    பிரபல பதிவர் எனும் வாக்கியம் என்னைப் பார்த்து நானே கூறிக் கொள்ளும் வாக்கியமா?...

    நிருபன் நம்மை அடுத்தவர்கள் சொல்வதை விட நாமே சொல்வது தான் பெருமை... இல்லீனா சொல்பவனுக்கு டீ வாங்கித்தரனும் இது தேவையா

    ReplyDelete
  11. ஹய்யா..கமெண்ட் போட வந்துட்டாரு...பிரபல பதிவர் சங்கவி....வாழ்க..

    ReplyDelete
  12. ...திண்டுக்கல் தனபாலன் said...

    நல்ல விளக்கம்...

    இன்னும் இது தீரவில்லையா...?
    ...

    எப்படி தீரும் பிரபல பதிவர் ஆகுவேண்டா தனபாலன்...

    ReplyDelete
  13. //இல்லீனா சொல்பவனுக்கு டீ வாங்கித்தரனும் இது தேவையா//

    எனக்கொரு டீ பார்சல்....

    ReplyDelete
  14. ///{ மோகன் குமார் } at: September 3, 2012 10:45 PM said...

    சங்கவி: சாதாரணமா தான் நம்ம கிட்டே கேள்வி கேட்டீங்க. இது பெரிய உள்குத்து பதிவா இருக்கே. நான் எல்லாரையும் எங்கு பார்த்தாலும் பேசணும் என நினைப்பவன். நம்மளை சிலர் தப்பா நினைச்சுட போறாங்கப்பா !
    ///

    அண்ணே என்னிடம் உள்குத்து வெளிக்குத்து எல்லாம் இல்லை எதையும் எப்போதும் எங்கும் நேரடியாக சொல்வேன்... அது போலத்தான் இப்பதிவும்... யாரும் தப்பா நினைக்கமாட்டாங்கன்னா...

    ReplyDelete
  15. ///{ நாய் நக்ஸ் } at: September 3, 2012 10:49 PM said...

    Ha...ha....
    Kizhinchathu...
    Tawosar......

    Ethhaavathu...
    Micham irukkuma....?????
    //

    மாம்ஸ் இன்னும் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  16. ..கோவை நேரம் said...

    ஆகா...கிளம்பிட்டாங்க....எதுக்கோ கேள்வின்னு நினைச்சேன்...ஓகே..ஓகே...இட்ஸ் ஆல் கேம்.....

    மச்சி எல்லாம் நன்மைக்கே...

    ReplyDelete
  17. தல, எனக்கு தெரியும் அதான் பதில வேற மாதிரி கொடுத்தேன் ஹா ஹா ஹா...

    ReplyDelete
  18. இந்த பஞ்சாயத்து எப்போ தான் தீருமோ

    ReplyDelete
  19. சரி வுடுங்க,... அல்லாரும் பிராப்ள பதிவர்கள தான்...ஷ் யப்பா முடியலடா.

    ReplyDelete
  20. //சரி வுடுங்க,... அல்லாரும் பிராப்ள பதிவர்கள தான்...ஷ் யப்பா முடியலடா.//

    மாம்ஸ் அப்ப யாரு பிரபல பதிவர்...

    ReplyDelete
  21. எல்லாரும் நல்லா பதில் சொல்லியிருக்கின்றார்கள்....நீங்க ஏன் திண்டுக்கல் தனபாலனை கேள்வி கேட்கவேயில்லை...அப்படியானால் அவரை புறங்கணிக்கின்றீர்களா...?அவரு எம்மாம் பெரிய பிரபல பதிவர்....!புதிய பதிவர்களை ஊக்கபடுத்தும் தன்னலமற்ற வெள்ளை உள்ளத்தின் சொந்தக்காரர்! அவரை எனக்கு தெரியாது என்று சொன்னால் அப்ப நீங்க பிரபல பதிவர்!

    ReplyDelete
  22. //வீடு சுரேஸ்குமார் } at: September 3, 2012 11:23 PM said...

    எல்லாரும் நல்லா பதில் சொல்லியிருக்கின்றார்கள்....நீங்க ஏன் திண்டுக்கல் தனபாலனை கேள்வி கேட்கவேயில்லை...அப்படியானால் அவரை புறங்கணிக்கின்றீர்களா...?அவரு எம்மாம் பெரிய பிரபல பதிவர்....!புதிய பதிவர்களை ஊக்கபடுத்தும் தன்னலமற்ற வெள்ளை உள்ளத்தின் சொந்தக்காரர்! அவரை எனக்கு தெரியாது என்று சொன்னால் அப்ப நீங்க பிரபல பதிவர்!
    //

    சரி அடுத்த பேட்டி அவரிடம் தான்...

    ReplyDelete
  23. வீடு சுரேஸ்குமார் said...எல்லாரும் நல்லா பதில் சொல்லியிருக்கின்றார்கள்....நீங்க ஏன் திண்டுக்கல் தனபாலனை கேள்வி கேட்கவேயில்லை...////////////////////////

    அது சரி அவரு பதில் ரொம்ப பெருசாக இருக்கும் அதனால் பதிவின் நீளம் கருதி அவரிடம் கேட்கவில்லை என்று நினைக்கிறேன் .....

    ReplyDelete
  24. //அஞ்சா சிங்கம் } at: September 3, 2012 11:31 PM said...

    வீடு சுரேஸ்குமார் said...எல்லாரும் நல்லா பதில் சொல்லியிருக்கின்றார்கள்....நீங்க ஏன் திண்டுக்கல் தனபாலனை கேள்வி கேட்கவேயில்லை...////////////////////////

    அது சரி அவரு பதில் ரொம்ப பெருசாக இருக்கும் அதனால் பதிவின் நீளம் கருதி அவரிடம் கேட்கவில்லை என்று நினைக்கிறேன் .....
    //

    அடுத்த பேட்டி அவரிடம் தான் கவலைய விடுங்க மச்சி...

    பேட்டி எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லை...

    ReplyDelete
  25. அஞ்சா சிங்கம் ரொம்ப ஓபனா சொல்லிருக்கிறார்..அப்புரம் பிரபல பதிவருக்கு தூக்கம் போய் மன வியாதி வேற தொத்திக்கும் என்கிற ஒரு கருத்தை முன் வைக்கிறார்..இதை படிக்கும் போது பிரபல பதிவர் ஆகுறது எவ்வளவு கஷ்டம் என்று புரிகிறது.

    ReplyDelete
  26. பிரபல பதிவர் சங்கவி வாழ்க..

    சரி நீங்க இந்த ரெண்டு கேள்விக்கும் பதில் சொல்லுங்க தல..

    ReplyDelete
  27. நல்ல வேளை நான் பிரபல பதிவர் இல்லை
    சுவாரஸ்யமான பதிவு
    (இதைப்படித்த யாரும் அனேகமாக பிரபல பதிவர் எனச்
    சொல்லிக் கொள்ள யோசிக்கத்தான் செய்வார்கள் )

    ReplyDelete
  28. அஞ்சா சிங்கம் பதில் டாப்பூ..
    :-)

    ReplyDelete
  29. //கலாகுமரன் } at: September 3, 2012 11:36 PM said...

    அஞ்சா சிங்கம் ரொம்ப ஓபனா சொல்லிருக்கிறார்..அப்புரம் பிரபல பதிவருக்கு தூக்கம் போய் மன வியாதி வேற தொத்திக்கும் என்கிற ஒரு கருத்தை முன் வைக்கிறார்..இதை படிக்கும் போது பிரபல பதிவர் ஆகுறது எவ்வளவு கஷ்டம் என்று புரிகிறது.
    //

    உண்மைதான் ரொம்ப கஷ்டம்....

    ReplyDelete
  30. //{ இந்திரா } at: September 3, 2012 11:39 PM said...

    பிரபல பதிவர் சங்கவி வாழ்க..

    சரி நீங்க இந்த ரெண்டு கேள்விக்கும் பதில் சொல்லுங்க தல..
    //

    இந்திரா பிரபல பதிவர் என்றால் பதில் சொல்ல கூடாது...

    ReplyDelete
  31. //{ Ramani } at: September 3, 2012 11:40 PM said...

    நல்ல வேளை நான் பிரபல பதிவர் இல்லை
    சுவாரஸ்யமான பதிவு
    (இதைப்படித்த யாரும் அனேகமாக பிரபல பதிவர் எனச்
    சொல்லிக் கொள்ள யோசிக்கத்தான் செய்வார்கள் )//

    உண்மைதான் சார்... எல்லோரும் பதிவர்கள் அவ்வளவே...

    ReplyDelete
  32. //{ இந்திரா } at: September 3, 2012 11:40 PM said...

    அஞ்சா சிங்கம் பதில் டாப்பூ..
    :-)
    //

    சும்மாவா அஞ்சா சிங்கமாச்சே...

    ReplyDelete
  33. என் கிட்டே கேட்கவே இல்லே :)

    ReplyDelete
  34. கலாகுமரன் said...

    அஞ்சா சிங்கம் ரொம்ப ஓபனா சொல்லிருக்கிறார்..அப்புரம் பிரபல பதிவருக்கு தூக்கம் போய் மன வியாதி வேற தொத்திக்கும் என்கிற ஒரு கருத்தை முன் வைக்கிறார்..இதை படிக்கும் போது பிரபல பதிவர் ஆகுறது எவ்வளவு கஷ்டம் என்று புரிகிறது.................................///////

    அட இந்த கொடுமை எல்லாம் நான் நேரில் பார்த்திருக்கிறேன் .......... ஆப்பாயில் போடுகிறவன் நம்மளை குறு குறு என்று பார்க்கும்போது அருகில் இருக்கும் சக பதிவர்களிடம் . அவர் என்னைத்தான் பார்க்கிறார் அநேகமாக அவர் என் வாசகனாக தான் இருக்கும் நீ வேணும்னா நைசா கிட்டபோய் கவனித்து பாரு அவர் என்னை பற்றிதான் பெசிகொண்டிருப்பார் இவர்தான் அந்த பிரபல பதிவர் என்று .நீ கிட்ட போயி கேட்டுட்டு வா என்று சொன்ன போது இவரை பார்த்து அழுவதா சிரிப்பதா அல்லது பரிதாப படுவதா என்று புரியாமல் முழித்திருக்கிறேன் ........கடைசியில் சுடுதண்ணியை மூஞ்சியில் ஊத்துவதற்கு முன்னர் பாரை விட்டு கிளம்புங்கள் என்று அந்த ஆப்பாயில் போட்டவர் தான் துரத்தி விட்டார் ........பிரபல பதிவராக இருப்பது உண்மையில் பரிதாபத்துக்கு உரியது ...........

    ReplyDelete
  35. பிரபலப்பதிவர்களை மட்டும் பேட்டிகண்ட , பிரபலப்பதிவர் சங்கவிக்கு என் கடும் கண்டனங்கள்.
    தொடர்ந்து எங்களைப்போன்றோரை புறக்கனித்தால் ஜி+ல் என் புரட்சி வெடிக்கும் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன்.

    த ம 2012 க்காக என் நன்றியை அஞ்சாசிங்கத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  36. நான் உனக்கு 5 வருசம் முன்னாலயே பிறந்திட்டேன் அதனால நான் தான் ஏரியாவுல பிரபலம்னு சொல்லறது எவ்வளவு பைத்தியகாரத்தனமோ அதே அளவு பைத்தியகாரத்தனம் தான் உனக்கு முன்னாலயே நான் ப்லாக் எழுத ஆரம்பிச்சிட்டேன் அதனால பிரபலம்னு :)

    கம்ப்யூட்டர விட்டு எந்திரிச்சு வந்தா பக்கத்து ஊட்டுக்காரனுக்கு கூட தெரியாது :)

    நான் பதிவரே இல்லே அப்புறம் எங்கே பிரபலம் எல்லாம் :)

    ReplyDelete
  37. //பட்டிகாட்டான் Jey } at: September 3, 2012 11:47 PM said...

    பிரபலப்பதிவர்களை மட்டும் பேட்டிகண்ட , பிரபலப்பதிவர் சங்கவிக்கு என் கடும் கண்டனங்கள்.
    தொடர்ந்து எங்களைப்போன்றோரை புறக்கனித்தால் ஜி+ல் என் புரட்சி வெடிக்கும் என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன்.

    த ம 2012 க்காக என் நன்றியை அஞ்சாசிங்கத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.//

    மச்சி சைக்கிள் கேப்ல என்னை பிரபல பதிவர்ன்னு சொல்லிட்டியே அப்பு...

    ஜி+ ன்னு நீங்க சொன்னதற்கு அப்புறம் தான் ஞாபகம் வருது.. இன்னும் அங்க பகிரவில்லை.. இப்ப பகிர்ந்து விடுகிறேன்...

    ReplyDelete
  38. //த ம 2012 க்காக என் நன்றியை அஞ்சாசிங்கத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.//


    அதென்ன மச்சி தம 2012... என்ன உள்குத்தோ வெளிக்குத்தோ...

    ReplyDelete
  39. //{ குறை ஒன்றும் இல்லை !!! } at: September 3, 2012 11:48 PM said...

    நான் உனக்கு 5 வருசம் முன்னாலயே பிறந்திட்டேன் அதனால நான் தான் ஏரியாவுல பிரபலம்னு சொல்லறது எவ்வளவு பைத்தியகாரத்தனமோ அதே அளவு பைத்தியகாரத்தனம் தான் உனக்கு முன்னாலயே நான் ப்லாக் எழுத ஆரம்பிச்சிட்டேன் அதனால பிரபலம்னு :)

    கம்ப்யூட்டர விட்டு எந்திரிச்சு வந்தா பக்கத்து ஊட்டுக்காரனுக்கு கூட தெரியாது :)

    நான் பதிவரே இல்லே அப்புறம் எங்கே பிரபலம் எல்லாம் :)
    //

    உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  40. //{ குறை ஒன்றும் இல்லை !!! } at: September 3, 2012 11:48 PM said...

    நான் உனக்கு 5 வருசம் முன்னாலயே பிறந்திட்டேன் அதனால நான் தான் ஏரியாவுல பிரபலம்னு சொல்லறது எவ்வளவு பைத்தியகாரத்தனமோ அதே அளவு பைத்தியகாரத்தனம் தான் உனக்கு முன்னாலயே நான் ப்லாக் எழுத ஆரம்பிச்சிட்டேன் அதனால பிரபலம்னு :)

    கம்ப்யூட்டர விட்டு எந்திரிச்சு வந்தா பக்கத்து ஊட்டுக்காரனுக்கு கூட தெரியாது :)

    நான் பதிவரே இல்லே அப்புறம் எங்கே பிரபலம் எல்லாம் :)
    //

    உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  41. அட, நம்ம போட்ர மொக்கைய ஒரு 4 பேரு படிச்சாலே பெரிய விசயம்! அதுலையும் உங்கள மாதிரி ப்ரபல பதிவர்கள் எல்லாம் எங்கல மாதிரி புது பதிவர்களுக்கு வந்து கருத்து சொன்னாலே நாங்க எல்லாம் ப்ரபலமாயிடுவோமில்ல! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிவு சுவாரஸ்யமா இருந்துச்சு சார்!

    ReplyDelete
  42. சங்கவி,

    பிராபல்யப்பதிவர் யாருன்னு கேட்காமலே தெரிஞ்சுக்க ஒரு வழி சொல்கிறேன்,

    #மற்றவங்க பதிவை படிக்கவே மாட்டாங்க,யாருக்கும் பின்னூட்டம் போட மாட்டாங்க,

    பதிவர் சந்த்திப்பிலே ஒருவர் எனக்கு 20 பதிவர்களை தான் இத்தனை பேரு பதிவு எழுதுவதே இன்று தான் தெரியும்னு சொன்னாராம்.வந்தது 200 பேரு ,வராதவங்க ஆயிரக்கணக்கில் ,அப்படின்னா அவரு எம்மாம் பிராபல்யம் பாருங்க :-))


    #அவங்கப்பதிவிலும் யாருக்கும் பதில் சொல்ல மாட்டாங்க.

    #யாராவது விடாமல் கேள்வி கேட்டால் உன் போன் நம்பர் தெரியாது ,மெயில் ஐடி தெரியாது, உன் போட்டோ இல்லை, ரேஷன் கார்டு இல்லை, ஓட்டர் ஐடி இல்லை ,எனவே நீ எல்லாம் பதிவரே இல்லைனு அடுத்தவனை சொல்லணும் :-))

    #வாரத்து ரெண்டு மூனு சினிமா பார்க்கணும் இல்லைனா விக்கில படிச்சிட்டு அதை வச்சாவது சினிமா விமர்சனம் போடணும் :-))

    #நல்ல நேரம்,காலம் ,ஞாயிற்றுக்கிழமை எல்லாம் பார்த்து பதிவுப்போடுவாங்க,அபோ தான் ஹிட்ஸ் வருமாம்.

    # எவ்ளோ அதிகமா பதிவு போடுறாங்களோ அதை வச்சு பிராபல்யம் கூடும் :-))


    # அவங்கக்கிட்டே பிராபல்யமான்னு கேட்டால் இல்லைனு சொல்லுவாங்க ,அதாவது தன்னடக்கமாம்:-))

    # மற்றப்பதிவர்களை ,எல்லாம் என் வாசகர்கள் என சொல்லணும் :-))

    இன்னும் பிராபல்ய அடையாளங்கள் நிறைய இருக்கு யோசிச்சு அப்புறமா சொல்லுறேன்.

    ---------
    //கம்ப்யூட்டர விட்டு எந்திரிச்சு வந்தா பக்கத்து ஊட்டுக்காரனுக்கு கூட தெரியாது :)//

    அதே தான் ,அக்கம் ,யாருக்கிட்டேயும் பேசவே மாட்டாங்க,ஏன் குடும்பத்தில கூட பேச மாட்டாங்க, ஆனால் பதிவுல பார்த்தீங்க உலகத்தோழர்களே ஒன்று கூடுங்கள் ரேஞ்சில வீர முழக்கம் இடுவாங்க :-))
    ------

    அஞ்சா ஸிங்கம்,

    அதை எல்லாம் நேரில் பார்த்தும் தாங்கிட்டு இருக்கீர்னா ..எதையும் தாங்கும் இதயமய்யா :-))

    -----------

    உங்களை பிராபல்யம் ஆக்கிடலாம்னு ஒரு திட்டம் :-))
    ---------

    ReplyDelete
  43. வவ்வால் said...
    அஞ்சா ஸிங்கம்,

    அதை எல்லாம் நேரில் பார்த்தும் தாங்கிட்டு இருக்கீர்னா ..எதையும் தாங்கும் இதயமய்யா :-))

    -----------

    உங்களை பிராபல்யம் ஆக்கிடலாம்னு ஒரு திட்டம் :-))
    ///////////////////////////////////////

    இந்த சதித்திட்டத்திற்கு எல்லாம் நான் உடன்பட மாட்டேன் ஊருக்குள்ள நாலு பிரபல பதிவர்களை வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்த்தை இருக்கே அய்ய.அய்ய.யோ .................

    ReplyDelete
  44. தல முக்கியமான பாயிண்ட விட்டுட்டீங்களே..!! பிராப்ள பதிவர் சாரி பிரபல பதிவர்னா ஒருத்தரை தாக்கியோ விமர்ச்சித்தோ அதிக கமெண்டுகளும் அதிக மைனஸ் ஓட்டு வாங்குறவங்களும் கூட இதுல வருவாங்கல....
    ஹி... ஹி... ஹி..... #டவுட்டு.

    ReplyDelete
  45. வவ்வால்

    முதல் கேள்விக்கு பதில் சொல்லீட்டீங்க...

    நீங்க பிரபல பதிவரா? இதற்கு உங்க பதிலை எதிர்பார்க்கிறேன்....

    ReplyDelete
  46. நீங்க எப்போ எனக்கு ஃபோன் பண்ணீங்க? எப்போ நான் அப்படி சொன்னேன்? யோவ்! இதெல்லாம் ஓவரு

    ReplyDelete
  47. //சி.பி.செந்தில்குமார் }

    நீங்க எப்போ எனக்கு ஃபோன் பண்ணீங்க? எப்போ நான் அப்படி சொன்னேன்? யோவ்! இதெல்லாம் ஓவரு
    //

    தியேட்டர்ல புது படம் பார்ப்பீங்கன்னு நினைக்கிறேன்... தொடருங்கள்...

    ReplyDelete
  48. அருமையான பேட்டி. கலக்கல்.

    ReplyDelete
  49. ஸ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே

    ReplyDelete
  50. கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகளை யாரும் பகிரவில்லையே?

    வாசிக்க ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  51. உலகமகா பிரபல பதிவரான என்கிட்ட இந்த பேட்டிய எடுக்காததால இந்த பதிவை நான் புறக்கணிக்கிறேன்.....!

    ReplyDelete
  52. //{ பன்னிக்குட்டி ராம்சாமி } at: September 4, 2012 2:13 AM said...

    உலகமகா பிரபல பதிவரான என்கிட்ட இந்த பேட்டிய எடுக்காததால இந்த பதிவை நான் புறக்கணிக்கிறேன்.....!
    //

    ஐஐஐ.... மறந்திட்டேன் அண்ணே.. அடுத்த பேட்டி உங்ககிட்டதான்...

    சரி சொல்லுங்க... அந்த இரண்டு கேள்விகளுக்கும் உங்க பதில் என்ன...

    ReplyDelete
  53. //{ முரளிகண்ணன் } at: September 4, 2012 1:56 AM said...

    கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகளை யாரும் பகிரவில்லையே?

    வாசிக்க ஆவலாக உள்ளேன்.
    //

    அது வீடியோ வடிவில் விரைவில் வர இருக்கிறதுன்னு சொன்னாங்க... பாத்த்துக்குங்க...

    ReplyDelete
  54. ஏன் மச்சி நீங்க பிரபல பதிவர்கள் கிட்ட மட்டும் தான் கேள்வி கேட்பீர்களா? நானெல்லாம் பிரபல பதிவர் இல்லையா?

    என்னைப் பார்த்தா ரெளடிப் பதிவரா மட்டும் தெரியுதா?

    ReplyDelete
  55. சங்கவி,

    நானெல்லாம் அனானி/முகமூடிப்பதிவர் பிராபல்யம் ஆகணும்னா ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி ,பாஸ்போர்ட் எல்லாம் நகல் எடுத்து சிலருக்கு காட்டி நான் அப்ரூவல் வாங்கணும் இந்த ஜென்மத்தில அப்படிலாம் வாய்ப்பு இல்லை ... அடுத்த ஜென்மத்தில பிராபல்யம் ஆகிட்டா போச்சு :-))

    ------

    ஆனால் நிறையப்பேரு வாண்டட் ஆ வந்து ஜீப்புல ஏறுராங்க அவங்களைப்புடிச்சு போடுங்க.

    ReplyDelete
  56. ஹா ஹா ஹா பதிவுகளும் பின்னூட்டங்களும் அருமை...

    ReplyDelete
  57. பாஸ்..
    எனக்கு தெரிஞ்ச ஒரே பிரபல பதிவர் இவர் தான்..இப்ப இவரு பதிவு எதுவும் போடுறது இல்லை..
    http://www.blogger.com/profile/13049239364453622829
    //இன்டர்நட் எனக்கு அறிமுகமானதில் இருந்து தினமும் ஒரு பதிவு போடுவது என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகின்றேன். எந்த பிரச்சனை எங்கு நடந்தாலும் அதைப்பற்றி குறைந்தது இருபது பதிவுகள் போட்டு ஒட்டு வாங்குகின்றேன். ஆனால் அங்கு எங்கும் போகவே மாட்டேன். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டேன். என் பனி பதிவு போட்டு ஒட்டு வாங்குவது மட்டுமே.அப்போதுதான் பிரபல பதிவர் ஆகமுடியும் என்று ஜெட்லி சேகரின் அருள்வாக்குப்படியே நடந்து வருகின்றேன். பிரபல பதிவர் ஆய்யே தீருவேன் என்று சமீபத்தில் ஐம்பது வருசங்களுக்கு முன்னர் தாத்தாவிடம் போட்ட சபதத்தால், பெயரை பிரபல பதிவர் என்று மாற்றியமைத்துகொண்டு, ஐம்பது வருடங்களாக பிரபல பதிவராக இருக்கின்றேன்.//
    Interests : ஓசி சைக்கிள், ஓசி பிரியானி, ஓசியாக கிடைக்கும் எதுவும்.
    Favorite Movies : பிட்டு படங்கள்

    ReplyDelete
  58. பிரபலமோ அல்லது நீங்க சொல்லியிருக்கிற மாதிரி பிராபலமோ, அவரு பிராப்ளம் பதிவராயில்லாம இருந்தா சரிதான்! :-)

    ReplyDelete
  59. இப்ப(2012) இருக்கிற பதிவர்கள் எல்லாப் பதிவர்களுமே "பிரபல" பதிவர்கள் என்ற கணக்கில் 2015ல் வந்துவிடுவார்கள். வேண்டுமானால் ஒரு பெட் வைத்துக்கொள்ளலாமா?

    ReplyDelete
  60. பிரபல பதிவர் என்றால் எழுதும் எல்லாரும் ஒரு வகையில் பிரபலமே.

    என்ன ஒரு சிலருக்கு எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் போட்டாலும் நம்ம பக்கமே திரும்பி பாக்க மாட்டாங்க ஒருவேளை அவங்க பிரபலம்ன்னு மனசுக்குள்ள நினைச்சிருக்கலாம்.

    எப்படியிருந்தாலும் பிராப்ள பதிவரா இல்லாத எல்லாருமே பிரபலம்தான்.

    ReplyDelete
  61. இளா,

    //இப்ப(2012) இருக்கிற பதிவர்கள் எல்லாப் பதிவர்களுமே "பிரபல" பதிவர்கள் என்ற கணக்கில் 2015ல் வந்துவிடுவார்கள். வேண்டுமானால் ஒரு பெட் வைத்துக்கொள்ளலாமா?//

    ஒரு பந்தயம்/போட்டி/ஈடுகட்டல்/சூதாட்டம் வைத்துக்கொள்ளலாமா?

    எனத்தமிழில் கேட்டிருக்கலாமே ?

    கோவியாரின் பரிந்துரையுடன் தமிழ் வளர்க்கும் பிராணிகளின் பரிந்துறைகளும்.

    இப்படிக்கு

    வாங்க தமிழ் வளர்க்கலாம் சங்கம்,
    வண்டலூர் கிளை.
    தமிழகம்,இந்தியா!

    ஹி...ஹி இனிமே தமிழை வளர்த்து ,கூடவே நாங்களும் வளர்ந்திடலாம்னு பார்க்கிறோம் :-))

    ReplyDelete
  62. சங்கவி...இப்பிடியெல்லாம் கலாய்க்கக்கூடாது பிரபல பதிவர்களை...ஹிஹிஹி !

    ReplyDelete
  63. வாரம் ஒருமுறை அவன் என் கையைப் பிடித்து இழுத்துட்டான். இவன் என்னைப் பார்த்து சிரிச்சிட்டான். அவன் என்ன பெரிய தலையா ? இவன் என்ன தறுதலையா ? பெண்களின் கூந்தலில் மணம் இருக்கா ? ஆண்களில் தலையில் பேன் இருக்கா ? தண்ணீர் குடிக்கலாம், ஆனால் அடிக்க கூடாது ! இப்படி எதாவது ஒரு தலைப்பில் பதிவு போட்டால் பிரபல பதிவர் ஆகிவிடலாம்.

    கூடவே கொஞ்சம் ம... F... S... என்ற தேன் பாயும் வார்த்தைகளை கருத்துப் பெட்டியில் போட வேண்டும் .. தாஸ்தாவோஸ்கி, ஜான் பவுல் சாட்டர் பற்றி தெரியாவிட்டாலும் பதிவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்,
    இல்லை என்றால் ஆயிரம் ஆண்டு பழமையான புக்கில் நாளை பிறக்கப் போகிற பிள்ளை ஆணா, பெண்ணா என்பதை சொல்லி இருப்பதாக சொல்லி ! சத்தியமாக நம்பித் தான் ஆகணும்னு சத்தியம் பண்ணனும் ... குறிப்பாக பெண்ணுரிமை பேச வேண்டும், ஆனால் பெண்டாட்டி போனில் சிரிச்சு சிரிச்சு பேசினாலும் சந்தேகப் பார்வை பார்க்க வேண்டும்.

    குறைந்தது ஐந்து மொழியாவது பேசத் தெரியணும் ( அப்படி மக்களை நம்ப வைக்கணும் ) , சினிமா விமர்சனம் எழுதணும், அரசியல் பதிவு மாதம் ஒருமுறையாவது போடணும், தமிழில் கள்ள வோட்டுப் போடத் தெரியணும், மாட்டிக்கிட்டா அப்பாவிகள் யார் மீதாவது பழிப் போடத் தெரியணும் ...எவன் எதைப் பற்றி எழுதினால் ஒருக் குறையாவது சுட்டிக் காட்டி ஒரு தனிப் பதிவு போடணும் ... !!!

    பிரபல பதிவர்னா சும்மாவா ! இவ்வளவும் செஞ்சா தான் பிரபல பதிவர் லிஸ்டில் நம்மை வேட்பு மனுவை தாக்கலே பண்ண முடியும். அப்புறம் பிரபல பதிவர் போட்டியின் போது நடப்பதை சங்கவி ஒரு நாள் தனிப்பதிவாகப் போடக் கடவ !


    ReplyDelete
  64. அய்யா வணக்கமுங்க...நல்லா இருக்கு பதிவு...கருத்துரைல பொங்கல் வச்சி இருக்காங்க...பிரபலம்னாலே ...பிராப்ளம் போல ஹாஹா..எஞ்சாய்யா!

    ReplyDelete
  65. தன்னடக்கம் தன்டக்கம் னு சொல்லுவாங்க அது இது தானுங்கள

    ReplyDelete
  66. நல்லா சிரித்தேன் சங்கவி. பின்னு விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர்.. ஹஹஹஹஹஹஹஹ

    முதல் சந்திப்பிலேயே என்னைக் கவர்ந்த நீங்கதான் பிரபல பதிவர்.

    ReplyDelete
  67. இக்பால் சொல்வதை வைத்தே ஒரு பிரபல பதிவு எழுதலாம் போலிருக்கு.

    ReplyDelete
  68. பிரபல பதிவர் யார்? இப்படி ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் போலிருக்கே... (பட்டிமன்றம் வைத்தாலும் முடிவு அறிவிக்க பட்டிமன்றத் தலைவர் இருக்கமாட்டார்...)

    ReplyDelete