Monday, September 10, 2012

கொலுசு சத்தம் கேக்கையிலே...



கொலுசே கொலுசே
உந்தன் பாடல் கொலுசே....

கொலுசு உன் காலோடு
சென்றுவிடுகிறது அதன்
சத்தம் மட்டும் என்
காதுகளில் இன்னும் ஒலிக்கிறது

இப்படி கொலுசின் அழகை விவரிக்காத கவிஞர்களே இல்லை என்று சொல்லாம்.  கொலுசின் பேரை உபயோகித்து நிறைய திரைப்பட பாடல்கள் வெற்றி பெற்றுள்ளன. 

கொலுசு பெண்களின் பாதத்தின் அழகுக்கு அழகுட்டும் ஓர் அணிகலன் இன்று வளர்ந்த நாகரிகம் என்று எப்படி சொன்னாலும் பெண்களுக்கு கொலுசின் மேல் ஈர்ப்பு அதிகம் தான் இதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் கால் அழகை பராமரிப்பது தான்.

குழந்தைக்கு கொலுசு போடுவது குழந்தையின் உணர்வுகளை அம்மாவிற்கு உணர்த்தத்தான். தூளியில் படுத்திருக்கும் குழந்தை விழித்ததும் காலை ஆட்ட ஆட்ட கொலுசு சப்தமிட்டு குழந்தை எழுந்ததை அறிவிக்கும்.

கொலுசு நம் இந்திய தமிழ் பாரம்பரியத்தின் ஓர் அங்கம் இன்று பிறந்த குழந்தைகள் கொஞ்சம் தவழ்ந்து பழகுகையில்  கொலுசை அணிவிக்கிறோம் அந்த குழந்தை நடந்து ஒரு இரண்டுவயது வரை கொலுசை அதன் கால்களில் இருந்து நாம் கழட்டுவதில்லை. பிறந்த பிள்ளைகளுக்கும் காலில் தண்டை, கொலுசு அணிவது வழக்கமாக இருந்து வந்தது. குழந்தை தவழும்போதோ தத்தி தத்தி நடக்கும்போதோ எழும் ஓசை வீட்டில் உள்ளோர்களை உளமகிழச்செய்யும். குழந்தைக்கு பேச்சு முழுவதமாக பேசும் வரை அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது கொலுசு சத்தத்தின் மூலம் தான் அறிய முடியும்...

கொலுசை வெள்ளியில் தான் முன்பெல்லாம் அணிந்து கொண்டிருந்தனர் நகாரிகம் பணம் எல்லாம் வளரும் இக்காலத்தில் தங்கத்திலும் அதிக பெண்கள் கொலுசு அணிவதை நாம் அதிகம் பார்க்க இயலும்..


தங்கத்துக்கு அடுத்து அதன் அத்தனை பெருமைகளையும் கொண்டது வெள்ளி. வெள்ளி நகை அணிவதால் ஆயுள் விருத்தியாகும். உடலில் உள்ள சூட்டை வெளியேற்றி குளிர்ச்சியாக உடலை வைத்துக்கொள்ள உதவும், மிக முக்கியமாக சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள உதவும் என நம் பழைய மருத்துவ குறிப்பில் நிறைய குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக கொலுசு மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு என்று வகைப்படும். மயில், வண்ணத்துப்பூச்சி, அன்னம் போன்றவற்றையும் அதில் வேலைப்பாடுடன் பதிந்து செய்யப்பட்டன. முதலில் திருமண அடையாளமாய் கொலுசு அணியப்பட்டது இப்போது குழந்தைகள் முதல் அணைத்து பெண்களும் அணியும் அணிகலனானது.

விசேச காலங்களில் பெண்கள் காலுக்கு மருதாணி போட்டு அதன் மேல் கொலுசுடன் இருக்கும் கால்களில் அழகு கொள்ளை கொள்ளும். 


பேய் என்று சொல்லும் போது கொலுசு அங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பேய் வருவதற்கான அறிகுறி 'ஜல்' 'ஜல்' என்ற கொலுசு சத்தமே என கூற கேள்விப்பட்டிருக்கேன். இரவில் தனியாக இருக்கும் போது ஜல் ஜல் சத்தம் கேட்டால் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது..

பொதுவாக, உடல் ரீதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு. கலவியில், மல்லிக்கு அடுத்து கொலுசு சத்தம் அழைப்பு மணியாய் இருக்கிறது.

உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது.

சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்.

இன்று கால்களை அழகுபடுத்த நிறைய விஷயங்கள் வந்துவிட்டாலும், கொலுசுக்கு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது..

இதனால் தான் கொழுசு சத்தம் கேக்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குதுன்னு பாடினார்களோ....

17 comments:

  1. கொலுசு சத்தம் ரொம்ப இம்சை பண்ணது டீன் ஏஜ்லதான் :-)

    ReplyDelete
  2. வெள்ளி கொலுசு மணி தூங்காத கண்ணின் மணின்ற பாட்டை விட்டுட்டீங்களே சகோ. எவ்வளவுதான் நகை போட்டாலும் காலில் புது கொலுசு போட்டு அழகு பார்க்கும் சுகம் இருக்கே அடடா! புது கொலுசு போட்டா நானே என் காலை அடிக்காட் பார்த்துப்பேன்

    ReplyDelete
  3. கொலுசே கொலுசே இசை பாடு கொலுசே பழைய நினைவுகள் ஞாபகத்தில்

    ReplyDelete
  4. இப்படி
    கொலுசு பற்றி எழுதி
    இப்படி உசுப்பேத்தி விட்டிடீன்களே தலைவரே

    ReplyDelete
  5. என்ன சொன்னாலும் குழந்தைகள் காலில் உள்ள கொலுசு சத்தம் எதற்கும் ஈடாகாது.

    ReplyDelete
  6. கொலுசு பற்றிய அறியாத பல தகவல்கள்! அருமையாக விளக்கியமைக்கு நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
    http://thalirssb.blogspot.in/2012/09/8.html

    ReplyDelete
  7. கொஞ்சும் கொலுசு சத்தங்கள்..
    நல்லாயிருக்கு.

    ReplyDelete
  8. கொலுசு பற்றிய விவரங்கள் அனைத்தும் அருமை. மனதைத் தாலாட்டியது இந்தப் பதிவு. ஆனால் தங்கத்தில் கொலுசு அணிந்தால் வீட்டுக்கு ஆகாது என்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் நான்.

    ReplyDelete
  9. இப்போது வசதிபடைத்த அனைவரும் தங்கத்தில் கொலுசு அணிய ஆரம்பித்துவிட்டனர்!

    ReplyDelete
  10. நீங்க வேற ஏங்க ..தங்கம் , வெள்ளி விக்கிற விலையில இப்பிடி எல்லாம் போட்டா எப்பிடி :)

    ReplyDelete
  11. நம்ம அம்மணி வெள்ளியை கழட்டிட்டு இப்ப தங்கம் போட்டு இருக்காங்க...

    ReplyDelete
  12. //{ பால கணேஷ் } தங்கத்தில் கொலுசு அணிந்தால் வீட்டுக்கு ஆகாது என்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் நான்.//

    அபத்தம்.

    கேரளா மற்றும் வட மாநிலத்தவர்கள் தங்க கொலுசு அணிகிறார்கள்

    ReplyDelete
  13. குழந்தைகள் 'ததக்... புதக்...' என்று நடக்கும் போது, கேட்கும் கொலுசு சத்தம் - ஈடு இணை ஏது ?

    ReplyDelete
  14. கொலுசே கொலுசே இசை பாடு கொலுசே...

    அதுவும் குழந்தைகள் கொலுசு போட்டு நடக்கும்போது அழகு சொட்டும்...

    ReplyDelete
  15. மகள் சிறு வயதில் கதவைத் திறந்து வெளியில் ஓடிவிடுவாள் அதற்காகவே கொலுசு போட்டு விட்டேன்.:)

    ReplyDelete
  16. கொலுசு பற்றிய ஆய்வும் விளக்கமும் அருமை அதுவும் பெண் குழந்தைகள் நடந்தால் சங்கீதமாகும்!

    ReplyDelete
  17. மென்மையான மனம் கொண்டவர்களுக்கு மட்டுமே அதன் இசை சங்கீதமாகும்!

    ReplyDelete