Thursday, May 26, 2011

அஞ்சறைப்பெட்டி 26.05.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
முதல்வரின் முந்தைய ஆட்சிக்கும் தற்போதுக்கும் அவரின் போக்கில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது இம்மாற்றத்தில் மக்கள் அனைவரும் நிறைவான ஆட்சியை தருவார் என்று எதிர்பார்ப்பு மேல் ஓங்கி உள்ளது.

பத்திரிக்கை பேட்டியில் அவரின் அனுபவம் பளிச்சென்று தெரிகிறது. முதல்வரிடம் நாங்கள் கேட்பதெல்லாம் மின்சார பற்றாக்குறையை முந்தைய ஆட்சியாளர்கள் சரிசெய்ய முடியாது என்றார்கள் அதை சரிசெய்து முடியாததை முடித்து காட்ட வேண்டும்.

இலவசங்களுக்கு பதில் மின்சாரத்தையும், பெட்ரோல், மண்ணென்ணை, கேஸ் விலையின் வரிகளை குறைத்து விலையை கட்டுப்படுத்தாலாம்..


...............................................................................................
அனைவரும் எதிர்பார்த்த கனிமொழி கைது நடந்தாகிவிட்டது. யார் தவறு செய்தாலும் அவர்களை தட்டிக்கேட்க சட்டம் இருக்கிறது என்பதை நினைக்க சந்தோசமாக உள்ளது.
தவறு செய்தவர்கள் தண்டைணையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இன்று கனிமொழி நாளை?????


...............................................................................................

ஒரு காலத்தில் தலைவர் டெல்லிக்கு சென்றால் உடன்பிறப்புகள் மட்டுமின்றி எந்த கூட்டணியில் இருக்கிறாரோ அந்த கூட்டணியின் தலைவர்கள் முதல் கொண்டு அனைவரும் தலைவரை நிச்சயம் சந்திப்பார்கள். ஆனால் இன்று ????


........................................................................................................

அதிமுகவில் கடைநிலை தொண்டனாக இருந்து படிப்படியாக முன்னேறி எம்எல்ஏவாகி, மந்திரி ஆகியும் அப்பதவி அனுபவிக்க முடியாமல் இறந்த மரியம்பிச்சைக்கு ஆழ்ந்த இரங்கள்..

முதல்வர் முதல் அடிமட்ட தொண்டன் வரை ஒருவர் கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை இப்படி ஒரு நம்பிக்கைக்குரியவரை இழப்போம் என்று...

........................................................................................................

இந்த வருடம் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தான் படித்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்ற புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

........................................................................................................

புதிய தலைமைச் செயலகத்தை மாற்றியதற்கும் சமச்சீர் கல்வியை வேண்டாம் என்று சொன்னதும் என்னடா மறுபடியும் அம்மா மாறிட்டாங்களா என்று தோன்றியது. இரண்டையும் மாற்றியதாற்காக அவர்கள் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தது பாராட்டத்தக்கது.

........................................................................................................


“செக்ஸ்” வீரியம் மற்றும் ஆண்மைக் குறைவு போன்ற காரணங்களுக்காக “வயாகரா” மாத்திரையை சில ஆண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் “செக்ஸ்” உணர்ச்சி தூண்டப்படும் அதே வேளையில் பக்க விளைவுகள் ஏற்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, “வயாகரா” மாத்திரைகளை பயன்படுத்துபவர்களின் காது கேட்கும் திறன் படிப்படியாக குறைகிறது. பின்னர் காது முழுவதும் கேட்காமல் செவிடாகும் நிலை உருவாகிறது.

இத்தகவலை அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, வயாகரா மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

வயாகரா மாத்திரையில் காதுகள் செவிடாவது அமெரிக்காவில் மட்டுமின்றி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் கண்டறியப்பட்டு உள்ளது.

வயாகரா மாத்திரை பயன்படுத்த தொடங்கிய சிறிது நாளிலேயே செவிட்டு தன்மை ஏற்படுவது உறுதி செய்யப்படுகிறது.

நாட்டு நடப்பு
தேர்தல் முடிந்து அனைவரும் பதவி ஏற்றுவிட்டனர் முதல்வர் மந்திரிகளிடமும், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி கவர்னர் உரையை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி உள்ளார்.

 சூன் 3 ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் முதல்வருக்கு கழக தொண்டர்கள் உற்சாகமான விழாவிற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர் என்ற செய்தி அடிபடுகிறது. முதல்வர் பதவியில் இருந்தாலும் இல்லை என்றாலும் பாராட்டு விழாவிற்கு பஞ்சமில்லை...

தகவல்

ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக பிரதமர் தலைமையில் தேசிய குழுக்கள் அமைக்கப்பட்டன.

ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் வங்கதேசத்துடன் இணைந்து கூட்டாக கொண்டாடப்பட்டது. பண்டித மதன்மோகன் மாளவியாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் தேசிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி தேசிய கலைகள் மையமானது 12 முக்கிய கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் சுமார் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை இல்லாத ஒரு சாதனை அளவாகும்.

சங்கீத நாடக அகாடமியானது விருதுகளின் எண்ணிக்கையை 30-லிருந்து 40-ஆக உயர்த்தியிருப்பதுடன் விருது தொகையையும் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி உள்ளது.  

உலகின் சீரிய கலாச்சார பாரம்பரியத்தின் சிறந்த உதாரணங்களாக யுனெஸ்கோ அமைப்பு இந்தியாவின் மூன்று சிறந்த பழமையான கலைகளை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

கேரளாவின் “முடியேட்டு” பழமையான நாடகம் ராஜஸ்தானின் “கால்பெலியா” கிராமப்புற பாடல் மற்றும் நடனம் கிழக்கு இந்தியாவின் “சாவ்” கிராமப்புற நடனம் ஆகியவை மூன்று சிறந்த பண்பாட்டு பாரம்பரியங்களாகும். அருணாச்சலப் பிரதேசத்தின் டாஹங் என்ற இடத்தில் ஒரு புதிய மைய இமாலய கலை கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் யோஹன்னா யாழினி என்பவர் இவர் கோவையைச் சேர்ந்தவர். இவர் மூகம், அரசியல், சினிமா, கேட்டது, பார்த்தது, படித்தது, பிடித்தது, ரசித்தது, ருசித்தது, சொந்த அனுபவங்கள், நொந்த அனுபவங்களை தமிழ் நட்புகளுடன் பகிர்ந்திடுவதற்கான ஒரு மேடை போன்ற தலைப்புகளை நம்மிடம் பகிர்கிறார்...

http://yohannayalini.blogspot.com/

தத்துவம்
வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.

உன் இதயம் ரோஜா மலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்.

29 comments:

  1. இந்த வார தத்துவம் மிகவும் அருமை தல..!!!

    ReplyDelete
  2. இந்த வார அறிமுகப்பதிவரின் பதிவுகளும்.. மிக அருமை..!! மிகவும் சிறந்த எழுத்தாளராகும்.. திறமை அவரது பதிவுகளில் தெரிகிறது..!!! அவரை தாங்கள் பதிவுலகத்திற்கு அறிமுகப்படுத்தியிருப்பது.. குன்றிலிட்ட விளக்குப் போல் இருக்கு...!!! பகிர்வுக்கு நன்றி தல..!!

    ReplyDelete
  3. இன்றைய தகவல்களின் தொகுப்பும் அருமை தல..!! கொஞ்சம் கொஞ்சமாக... சொல்லியிருப்பது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது..!!

    ReplyDelete
  4. //முதல்வர் பதவியில் இருந்தாலும் இல்லை என்றாலும் பாராட்டு விழாவிற்கு பஞ்சமில்லை...//
    எவை மாறினாலும் இவற்றையெல்லாம் மாற்றவே முடியாது எந்த அரசு வந்தாலும்.... ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  5. உள்ளுரிலிருந்து உலகம் வரை சொல்லியிருக்கும் தகவல்களின் கோர்வை மிகவும்... பிரமாதம் தல..!! தங்களது இப்பொன்னான சேவை சிறப்புடன் தொடரட்டும் தலைவா...!! அனைத்து தகவல் பகிர்வுகளுக்கும்.. நன்றி..!!

    ReplyDelete
  6. அறிவியல் செய்தி காணோம்
    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
    முடிஞ்ச பதில் சொல்லுங்க
    http://speedsays.blogspot.com/2011/05/talk-me.html

    ReplyDelete
  7. மாப்ள என்னமா பின்னி இருக்க நடத்துய்யா!

    ReplyDelete
  8. நன்றிகள் பலகோடி.. தோழர்..

    ReplyDelete
  9. பல செய்திகள், என்னய்யா புதுசா பத்திரிக்கை ஆரம்பிக்கிற ஐடியா இருக்கோ..? சும்மா பொளந்து காட்டுறீங்க...!!!

    ReplyDelete
  10. வாங்க பிரவீன்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  11. வாங்க ஸ்பீடு மாஸ்டர்...

    அடுத்த வாரம் அருமையான, அழகான, கிளு கிளுப்பான அறிவியல் மேட்டர் ரெடி பண்ணிடுறேன்...

    ReplyDelete
  12. வாங்க விக்கி மாமு...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  13. ..MANO நாஞ்சில் மனோ said...

    பல செய்திகள், என்னய்யா புதுசா பத்திரிக்கை ஆரம்பிக்கிற ஐடியா இருக்கோ..? சும்மா பொளந்து காட்டுறீங்க...!!!..

    மக்கா பத்திரிக்கை துவங்குவதற்கா முதல் கட்ட பணிகள் துவங்கி ரொம்பநாள் ஆச்சு இன்னும் அரசு அலுவலகத்தில் ஓப்புதல் கிடைக்காததால் வெய்ட்டிங்...

    ReplyDelete
  14. பத்திரிக்கை ஆரம்பிக்க போறிங்களா! நானும் வர்றேன்! நடுப்பக்க ஃபோட்டோ கிராபரா!

    ReplyDelete
  15. பத்திரிக்கை பேரு சித்தார் சியாமளாவா? ஹி ஹி

    ReplyDelete
  16. //பத்திரிக்கை ஆரம்பிக்க போறிங்களா! நானும் வர்றேன்! நடுப்பக்க ஃபோட்டோ கிராபரா!//

    வாங்க ராஜன் இது விவசாய சம்பந்தமான பத்திரிக்கை...

    நடுப்பக்கம் நச்சுன்னு கிராமப்புற போட்டாவ பார்த்து அனுப்புங்க போட்டுருவோம்...

    ReplyDelete
  17. //பத்திரிக்கை பேரு சித்தார் சியாமளாவா? ஹி ஹி//

    வாங்க சிபி பிட்டு படத்து தலைப்பு மாதிரியே இருக்கே...

    ReplyDelete
  18. ரொம்ப நாளைக்கு பிறகு வர்றேனோ.!! ஓகே.. போய் பாத்துட்டு வாரேன்..

    ReplyDelete
  19. இன்று கனிமொழி நாளை?????//

    நீங்களா கூட இருக்கலாம்..

    ReplyDelete
  20. ஆனால் இன்று ????//

    பல்லு போன பாம்புக்கெல்லாம் பயப்புடலாமா.?

    ReplyDelete
  21. முதல்வர் பதவியில் இருந்தாலும் இல்லை என்றாலும் பாராட்டு விழாவிற்கு பஞ்சமில்லை...//

    ஓ.. அவரு பதவில இல்லனா அவரு பொறக்கலனு ஆயிடுமா.?

    ReplyDelete
  22. அறிமுக பதிவர்//

    அய்யோ.!! இவங்க அறிமுக பதிவர் இல்லீங்கோ.!! நல்லா பழக்கப்பட்டவங்க தான்.. ஆனா அவங்களுக்கு தான் என்னைய தெரியாது.. சரி என்னய அறிமுகம் பண்ணனும்னு தோணுச்சா உங்களுக்கு.?

    ReplyDelete
  23. தத்து படிச்சா பித்து புடிக்கும் போல.. ஹி ஹி.. பதிவு சூப்பரு.!!

    ReplyDelete
  24. ammbuttu arasiyal vaadai sangavi but nice...

    ReplyDelete
  25. இன்று கனிமொழி நாளை?????என்னங்க சஸ்பென்சு போட்டு மிரட்டுறீங்க?(ஐயோ,கொல்லுறாங்களே!)

    ReplyDelete
  26. தத்துவங்கள்தான் பிடிச்சிருக்கு !

    ReplyDelete
  27. புதிய தலைமைச் செயலகத்தை மாற்றியதற்கும் சமச்சீர் கல்வியை வேண்டாம் என்று சொன்னதும் என்னடா மறுபடியும் அம்மா மாறிட்டாங்களா என்று தோன்றியது. இரண்டையும் மாற்றியதாற்காக அவர்கள் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தது பாராட்டத்தக்கது.



    சரியான...விளக்கம்

    ReplyDelete