Wednesday, February 15, 2012

அஞ்சறைப்பெட்டி 16/02/2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
எந்த பக்கம் திரும்பினாலும் மின்வெட்டு அதுவும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 8 மணி நேரம் இது நகர்புறத்தில் கிராமங்களில் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு இருப்பதால் விவசாய நிலங்களுக்கு சரியாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என்ற வருத்ததில் உள்ளனர் விவசாயிகள்..

சென்னைக்கு மட்டும் தினமும் 1 மணி நேரம் மின்வெட்டு என்பது கண்டிக்கத்தக்கது. சென்னையில் தினமும் 4 மணி நேரம் மின்வெட்டு தால் மற்ற இடங்களுக்கு அது கிடைக்க வாய்ப்பிருக்கிறது அப்போது எல்லா இடங்களுக்கும் ஒரே சீரான மின்வெட்டு கொண்டுவரலாம்.

மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வு நெருங்கும் வேளையில் இரவில் நிச்சயம் மின்வெட்டு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அவர்களின் எதிர்காலம் கருதியாவது இரவு நேர மின்வெட்டை குறைக்க வேண்டும்...


...............................................................................................

நில அபகரிப்பு சீசன் போல தற்போது வருமான வரி ரெய்டு சீசன்.. பல முன்னாள் மந்திரிகள் வீட்டில் தினமும் ஒரு ரெய்டு நடக்கிறது.. நாளை யாரோ????
................................................................................................

 
வங்கதேச இளைஞர்கள் நம் நாட்டின் 20000 இணையதளத்தை ஹேக்கிங் செய்துள்ளனர்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நம் எல்லைப்பாதுகாப்பு படையினர் மேல் குற்றம் சாட்டி உள்ளனர். அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் என்பது போல் நம்ம ஊர் சாப்ட்வேர் என்ஜினியர்கள் எத்தனை பேர் இருப்பாங்களோ அதுதான் அவர்கள் மக்கள் தொகையாக இருக்கும் இருந்தும் 20000 இணையதளத்தை முடக்கிவிட்டனர் கிள்ளாடிகள்...

................................................................................................

சமூக வலைதளங்களை தணிக்கை செய்ய எனக்கு உடன்பாடு இல்லை. இதனை இந்தியாவில் எந்த அரசும் தணிக்கை செய்யாது. ஆனால் நாட்டின் சட்டத்துக்கு ஒவ்வொருவரும் கீழ்படிய வேண்டும். என்று கபில் சிபில் கூறிஉள்ளார்...

நாட்டின் சட்ட திட்டத்துக்கு பொதுமக்கள் அனைவரும் கட்டுப்படுகின்றனர் ஆனால் அரசியல்வாதிகள் தான் கட்டுப்படுவதில்லை முதலில் அவர்களை கட்டுப்படுத்துங்கள் அப்புறம் சமூக இணையதளத்துக்கு வாங்க சார்...

...............................................................................................

சென்னையில் மாணவன் ஆசிரியை கொலை செய்த விவகாரம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க வேண்டி உள்ளது. ஆசிரியை கொன்ற மாணவன் நிச்சயம் தண்டணை அனுபவித்தே ஆக வேண்டும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. தாய் தந்தைக்கு பின் குரு தான் தெய்வம் என்று சொல்லித்தான் குழுந்தையை அனைவரும் வளர்க்கின்றனர் குருவையே கொலை செய்ய துணிபவனை என்ன செய்வது... காலம் கலி காலமாகிவிட்டது.

..................................................................................................



பேருந்து தினம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு மாணவர்கள் வருடம் தோறும் தொந்தரவு கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.  தினமும் செல்லும் பேருந்தில் சந்தோசம் தேவை தான் அதற்காக பொதுமக்களை பாதிக்கும் சந்தோசம் தேவைதானா? 
பேருந்து தினம் கொண்டாட முதலில் பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் அனுமதிக்க கூடாது. 100 பேர் சந்தோசத்திற்கு 1000 பேர் துக்கமிருக்க வேண்டி இருக்கு இந்த பேருந்து தினத்தால்...

..................................................................................................

அடுத்து களை கட்டப்போவது சங்கரன்கோயில் இடைத்தேர்தல் இதில் அதிமுக, திமுக, மதிமுகவிற்கு மும்முனைப்போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்கிறோம் தேமுதிக இன்னும் அவர்கள் முடிவை கூறவில்லை. ஆக எப்படி இருந்தாலும் இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் பாடுபட்டு நிச்சயம் ஆளுங்கட்சிதான் வெல்லும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை...

..................................................................................................



காதலர் தினத்தில் இந்து முண்ணனியில் போராட்டம் தேவையற்ற ஒன்று தினமும் தான் காதலர்கள் நிறைய இடங்களில் கூடுகின்றனர் அங்கு சென்று தாலியைக் கொடுத்து கட்டாயப்படுத்தி கட்டவைக்கலாம் அல்ல. அப்படி இல்லை எனில் கொடுக்கும் தாலியாவது ஒரு 10 பவுனில் கொடுத்து கட்ட சொல்லியிருந்தால் நியாயம் மஞ்சள் கயிறை மட்டும் போராட்டம் நடத்துவது கண்டனத்துக்கு உரியது..

இந்து முண்ணனிக்கு முகத்தில் கரி பூசிய பெருமை புதுச்சேரியை சேரும்... இந்து முன்னணி தலைவர் சனில் குமார் மற்றும் முருகையா தலைமையிலான 9 பேர் புதுவையில் உள்ள பாரதி பூங்காவிற்கு சென்றனர். அவர்கள் வருவதைப் பார்த்த காதல் ஜோடிகள் அங்கிருந்து ஓடிவிட்டன. ஆனால் வடிவேலு, உமாமகேஸ்வரி ஜோடி மட்டும் தைரியமாக பெஞ்சில் அமர்ந்திருந்தது.


இது தான் நேரம் என்று வந்த அந்த 9 பேர் அந்த ஜோடியிடம் காதலிக்கவா செய்கிறீர்கள், அப்படி என்றால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தாலியை நீட்டினர். உடனே வடிவேலு எந்தவித பதட்டமும் இன்றி அந்த தாலியை வாங்கி உமா கழுத்தில் கட்டினார்.

இதை இந்து முன்னணியில் எதிர்பார்க்கவில்லை. கெஞ்சுவார்கள், வேண்டுவார்கள் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வடிவேலு தாலியை வாங்க, உமா மகேஸ்வரி கழுத்தை நீட்டவே, சற்றே குழம்பிப் போயினர்.

இருப்பினும் சுதாரித்துக் கொண்ட அவர்களில் ஒருவர் ரூ.1001 மற்றும் இன்னொருவர் ரூ.501 மொய்யாகக் கொடுத்தனர். அந்த ஜோடி பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு டக் டக்கென வீறு நடை போட்டு இடத்தைக் காலி செய்தது.

அப்பாடா திருமணம் நடத்தி வைத்துவிட்டோம் என்று அந்த 9 பேர் பெருமிதம் கொண்ட வேளையில் அந்த ஜோடி பைக்கில் ஏறிக் கொண்டது. புறப்படும் முன்பு தங்களுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் அந்த பெண் தாலியைக் கழற்றி வீசிவிட்டும் சென்றார்.

.................................................................................................

ரூ 24.5 லட்சம் கோடி அளவுக்கு கறுப்புப் பணம பதுக்கி வைத்துள்ளதன் மூலம், இந்த விஷயத்தில் உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளனர் இந்தியர்கள்.
நம்ம ஊர்ல என்னடான்னா சோத்துக்கே வழி இல்லாம இருக்கறவங்க எண்ணிக்கையைப்பார்த்தால் எண்ணில் அடங்கா இருக்கு.. இங்க சம்பாரிக்கறவனுக எல்லாம் பணத்த வேற நாட்டில் பதுக்கறானுக.. இந்த பணம் எப்ப இந்தியா வந்து நாம எப்ப வல்லரசாகிறது...


.................................................................................................


குழந்தைகளுக்கு கூட ரத்த புற்று நோய் ஏற்படுகிறது. இது குறித்து அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நல மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் குழந்தை கருவில் இருக்கும்போது பெற்றோர் அதாவது தாயோ, தந்தையோ அதிக அளவில் சிகரெட் பிடிப்பதால் ரத்து புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்திய கூறு உருவாகிறது.

பொதுவாக பெண்களை விட ஆண்கள்தான் சிகரெட் புகைக்கின்றனர். மனைவிக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 15 சிகரெட்டுக்கு மேல் பிடித்தால் ரத்த புற்று நோய் தாக்கக்கூடிய ஆபத்து ஏற்படும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இனி சிகரெட் குடிக்கும் அப்பாக்கள் எல்லாம் கொஞ்சம் கவனிச்சு குடிங்க...


தகவல்



 அதிக நேரம் தூங்குவது ஆபத்து

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிக நேரம் உறங்குவதால், அவர்களுக்கு பக்கவாதம் போன்ற வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

பெண்களின் தூக்கத்திற்கும் நோய் பாதிப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து வடக்கு கரோலினா பொதுசுகாதார பல்கலைக்கழக மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வில் 7 மணி நேரத்திற்கும் அதிகமாக உறங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.

சராசரி 7 மணிநேர உறக்கம்

50 முதல் 79 வயதுவரை உடைய 93,676 வயதான பெண்மணிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது 1994 முதல் 2005 வரை நாடுமுழுவதும் 40 மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளிகள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில் 37.5 சதவிகித பெண்கள் சராசரியக 7 மணிநேரம் உறங்குவதாக தெரிவித்தனர். 26.9 சதவிகித பெண்கள் 6 மணிநேரமும், 8.3 சதவிகித பெண்கள் 5 மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குவதாக தெரிவித்தனர். மேலும் 22.7 சதவிகிதம் பேர் 8 மணிநேரம் உறங்குவதாகவும், 4.6 சதவிகிதம் பேர் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக உறங்குவதாகவும் கூறியுள்ளனர்.

பக்கவாத நோய் பாதிப்பு

இவர்கள் உறங்கும் நேர அளவைப் பொருத்து பக்கவாத நோய் பாதிப்பு கணக்கிடப்பட்டது. 7 மணிநேரம் உறங்குபவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருந்தது. 6 மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு பக்கவாதம் பாதிப்பு ஏற்படுவது 14 சதவிகிதமாக இருந்தது. அதேசமயம் 9 மணி நேரம் உறங்குபவர்களுக்கு பக்கவாதநோய் பாதிப்பு 70 சதவிகிதமாக இருந்தது தெரியவந்தது. எனவே குறைவாக உறங்குபவர்களை விட அதிக நேரம் உறங்குபவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ரத்தம் உறைந்து விடும்

50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒருநாளில் 6 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதாலோ அல்லது 9 மணி நேரம் வரை தூக்கத்தை மேற்கொள்வதாலோ மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் உறைதல் ஏற்பட்டு, பக்கவாதம், உணர்விழத்தல், பலவீனம், பேசுவதில் தெளிவில்லாத நிலை, ஒருங்கிணைப்பில்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும் தங்களின் ஆய்வின் மூலம் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே தூக்கம் கெட்டாலும் நோய் வரும், அதிக நேரம் தூங்கினாலும் ஆபத்து சராசரியாக 7 மணிநேரம் உறங்குவதே ஏற்றது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர் கிராமத்து கருவாச்சி என்ற பெயரில் எழுதி வருகிறார் கலை என்பவர். மிகவும் ரசிக்கவைக்கும் அதே சமையம் சிந்தனையுள்ள கவிதைகளாக எழுதி அனைவரையும் ரசிக்க வைக்கிறார்... அனைவரும் ரசிக்க வேண்டிய பதிவு...
தத்துவம்
எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே.. உனக்கு கொடுத்த பணியை முழு ஊக்கத்துடன் செய்.. வெற்றி உனக்கே...

அவருட‌ன் வா‌ழ்‌ந்தா‌ல் வா‌ழ்‌க்கை ந‌ன்றாக இரு‌க்கு‌ம் எ‌ன்பது காத‌ல் அ‌ல்ல, அவருட‌ன் தா‌ன் வா‌ழ்‌க்கை எ‌ன்பதுதா‌ன் காத‌ல்.

போகும் போது என்னை ரசித்து விட்டு போ !!!திரும்ப வர மாட்டேன் இப்படிக்கு காலம்..

17 comments:

  1. Good collection

    //சென்னைக்கு மட்டும் தினமும் 1 மணி நேரம் மின்வெட்டு என்பது கண்டிக்கத்தக்கது.//

    Why this Kola veri??

    ReplyDelete
  2. அருமையான தொகுப்பு..பல தகவல்களை இப்பொழுதுதான் படிக்கிறேன்..என் நன்றிகள் சகோ..

    சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

    ReplyDelete
  3. பஸ் டேக்கு மீண்டும் தடை என்று செய்தித்தாள்களில் போட்டிருக்கிறான்..இதற்கும் முன்பு போடப்பட்ட தடை நீக்கப்பட்டதா? அப்படி என்றால் என்ன மயிருக்கு நீக்கினார்கள்? இது போன்ற பஸ் டே ரவுடிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்..

    ReplyDelete
  4. //சென்னைக்கு மட்டும் தினமும் 1 மணி நேரம் மின்வெட்டு என்பது கண்டிக்கத்தக்கது. சென்னையில் தினமும் 4 மணி நேரம் மின்வெட்டு தால் மற்ற இடங்களுக்கு அது கிடைக்க வாய்ப்பிருக்கிறது அப்போது எல்லா இடங்களுக்கும் ஒரே சீரான மின்வெட்டு கொண்டுவரலாம்.
    //

    100% உண்மையான கருத்து

    ReplyDelete
  5. சிறப்பான அஞ்சரைப்பெட்டி. பல நிகழ்வுகளை அலசி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  6. பல தகவல்களை அருமையாக தொகுத்திருக்கிறீர்கள். புதுச்சேரி காதலர் தின திருமணம் பற்றிய செய்திதான் படித்தேன். அவர்கள் தாலியை வீசிவிட்டு சென்றார்கள் என்று பாலோ- அப் செய்தி... அவ்விதம் செய்தது சரியா... (இந்து முன்னணியினர் செய்தது சரியென்று சொல்லவில்லை)

    ReplyDelete
  7. //நாட்டின் சட்ட திட்டத்துக்கு பொதுமக்கள் அனைவரும் கட்டுப்படுகின்றனர் ஆனால் அரசியல்வாதிகள் தான் கட்டுப்படுவதில்லை முதலில் அவர்களை கட்டுப்படுத்துங்கள் அப்புறம் சமூக இணையதளத்துக்கு வாங்க சார்...//

    ஏன் சார் கெட்ட வார்த்தைல பேசறீங்க?

    ReplyDelete
  8. //சென்னைக்கு மட்டும் தினமும் 1 மணி நேரம் மின்வெட்டு என்பது கண்டிக்கத்தக்கது. //

    கொஞ்சம் மெல்லமா பேசுங்க...

    ReplyDelete
  9. அஞ்சறைப் பெட்டி அழகு...

    மாணவனின் செயல் மன்னிக்க முடியாதது...

    எங்க பக்கமெல்லாம் 8 மணி நேரம் என்று சொல்லி 11 மணி நேரம் மின்வெட்டுதான்.

    டிவியில விளம்பரங்களுக்கு இடையே சினிமா போடுறது மாதிரி வந்துட்டு வந்துட்டு போகுதுங்க...

    ReplyDelete
  10. இன்னாங்க சதீஷ் நாங்களெல்லாம் சென்னையில் இருப்பதனால் இந்த கடுப்பா? அப்புறம் நான் ஆவலுடன் எதிர்பார்த்த நாட்டுக்கோழிச்சாறு செய்முறை இல்லாததை இனிமையாக கண்டிக்கிறேன். அடுத்த அஞ்சறைப் பெட்டியிலாவது வெளியிடுவீர்கள் என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  11. அஞ்சரை பெட்டிய திறந்தா எப்படி காரம், குணம், மணம், நெடி, நிரம்பி இருக்குமோ அது மாதிரி. எல்லா செய்திகளுக்கும் அதிரடியா எழுதி அசத்திடீங்க. வாழ்த்துக்கள் !

    http://eniyavaikooral.blogspot.in/

    ReplyDelete
  12. In some countries, the electricity board will give money to the consumers during power cut. This ensures they are providing electricity 24 x 7 to all the consumers.

    ReplyDelete
  13. நல்ல பதிவு.
    நல்ல தகவல்கள்.
    நன்றி.

    ReplyDelete
  14. அஞ்சலைப் பெட்டி சுப்பரா இருக்கு ...
    நல்ல பெயர் ..ஒரே நேரத்தில் எல்லாமே தெரிஞ்சிக்கலாம் ...ஜாலி /...

    உங்க அஞ்சறைப் பெட்டி பெ ட்டியில் என்னை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி அண்ணா ...

    சிந்தனையுள்ள கவிதைகளாக எழுதி அனைவரையும் ரசிக்க வைக்கிறார்

    ஏற்க்கனவே ஒரு அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரமால் இருக்கும் எனக்கு இது மிகப் பெரிய அதிரிச்சி ....

    ReplyDelete
  15. தொகுத்துக் கொடுத்த விசயங்கள் அனைத்தும் தெரியாதவைகளே.. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  16. பெட்டி புல்லா நல்லா இருக்குய்யா மாப்ள!

    ReplyDelete