Wednesday, February 1, 2012

மனைவியின் அன்பை பெற...


இல்லற வாழ்வு இனிமையாக கழிய அன்பு தான் முக்கியம். மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புவர்களுக்காக இது.

பெண்களின் அன்பை பெறுவது எளிதுதான். இதோ அதற்கான வழிகள்.....

முதலில் மனைவியிடம் நிறைய நேரம் பேசுங்கள் ஆபிசில் இருந்து வந்ததும் அவளின் உடையைப் பார்த்துவிட்டு கொஞ்சம் பாராட்டுங்க. அடுத்து சாப்பிட்டாயா, காலைல இருந்து என்ன செய்தாய் என்று பேசிகிட்டே இருங்க..
உங்க அலுவலக டென்சனை எல்லாம் வீட்டின் முன் நுழையும் போது செப்பலை கழட்டு விடும் போது அந்த நினைப்புகளை கழட்டிவிட்டுறுங்க.

இன்று தான் திருமணம் ஆனது போல் ஒவ்வொரு நாளையும் நினைச்சுகுங்க. புதுமாப்பிள்ளை போல் எப்பவும் சந்தோகமாக திரியுங்கள் உங்கள் மனைவியின் முன்.

வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள் வேற வழியில்லை வீட்டு வேலைகளை நீங்க தான் நண்பர்களே செய்ய வேண்டும் .. என்னை அடிக்க வர வேண்டாம் ஒகேவா? பெண்களை மயக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதுக்கே சோர்ந்து போனா எப்படி?

பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன.அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள்.

மனைவியை சமாதானபடுத்தம் பழைய வழிமுறைகளெள்லாம் ( மல்லிகை பூ, அல்வா ) இந்த காலத்திற்கு உதவாது. புதிய புதிய முயற்சியில் ஈடுபடுங்கள் .மனைவிக்கு திடீர் ஆச்சிரியம் கொடுக்கும் முயற்சியை கைவிடாதிர்கள். வெளியில் அழைத்து சென்று அதாவது ஒரு அன்பு பரிசை அளியுங்கள் (அப்புறம் உங்களிடம் அன்பு பொங்கும்)

ஆண்கள் அழக்கூடாது என்பது சரிதான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது ரொம்ப உண்மை. அதற்க்காக எப்போதும் அழுமுஞ்சியாக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. உணர்வு பூர்வமான இடங்களில் அழுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்..

நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் மனைவியிடம் கலந்து ஆலோசியுங்கள் .அது எதைப்பற்றியது வேண்டுமானலும் இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள் அதற்கு மதிப்பு கொடுங்ககள். அவர்கள் முடிவு சரியாக இருந்தால் அதன் படி நடங்கள்..

பாசத்தில் மட்டும் அல்ல சமையலிலும் கெட்டிக்காரரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். (நண்பர்களே மனைவியிடம் சண்டைப்போட்டு சாப்பாடு கிடைக்காத நாள்களில் இது நமக்கு மிகவும் கை கொடுக்கும்.. மாதத்தில் பாதி நாள் சண்டைதானே?) அவர்களுக்கு பிடித்தமானவற்றை நீங்களே சமைக்க முயலுங்கள் சாப்பிட்டதும் உங்களை மிக பாராட்ட வேண்டும். மாதத்தில் 4 முறையாவது சமைச்சு போடுங்க ( என்னைப்போல் தினமும் சமைத்து மாட்டிக்காதீங்க)

பெண்களுக்கு பேசுவது என்றால் பிடிக்கும். எனவே எல்லாவிஷயங்களைப் பற்றி பேசுங்கள். அரசியல் , பொருளாதாரம் , ஊழல், உங்கள் லட்சியம் கனவுகள். உங்கள் நண்பர்கள் அடிக்கும் சைட்டுக்கள் எல்லாவற்றையும் பற்றி பேசுங்கள். நீங்கள் அடிக்கும் சைட்டைப்பற்றி அரை குறையாக சொல்லுங்கள் அப்புறம் உங்களுக்கு எமன் ஆகிவிடும் பார்த்து சொல்லுங்க.. மற்ற பெண்கள் அழகை மனைவியின் முன் விவரிக்காதீங்க ( அப்புறம் விவாகரத்தாகிவிடும்)

உங்கள் மனைவி உங்கள் குடும்பத்தோட மட்டும் ஒட்டி போகிவிட வேண்டுமென்று நினைக்காதிர்கள். நீங்களும் மனைவியின் குடும்பத்தாரோடு ஒத்து போங்கள்.அவர்கள் வீட்டில் உள்ளவர்களையும் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். ( முக்கியமாக மச்சினிச்சு கேட்டத வாங்கிக்கொடுத்துடுங்க )

மிக முக்கியமாக உங்கள் மனைவியின் அழகிற்கு முக்கியத்துவம் கொடுங்கள் வெளியே செல்லும் போது அவர்களுக்கான புடவை, நகைகளை நீங்களே அவர்களிடம் கொடுத்து இன்று இதை அணி இந்த புடவைக்கு இது தான் அழகு என்று கொஞ்சலை அதிகரியுங்கள்... (திரும்ப உங்களுக்கு ஏகப்பட்ட கொஞ்சல்கள் வரும்)

அவ்வப்போது டயலாக் பேசுவதை விட்டுவிடாதீர்கள் டயலாக் பேசும் போது நீதான் என் உலக அழகி.. உன்னைத்தவிர எனக்கு வேற எதுவும் அழகா தெரியலை என்று பேசுங்க ( ஒரு பொய் சொல்வதான் ஒன்னும் குறைஞ்சு போக மாட்டிங்க.. மற்றொன்று அழகான பொய்களை பெண்கள் ரொம்ப விரும்புவாங்க)....

இதை எல்லாம் மறக்காமல் செய்து பார்த்து எனக்கு சொல்லுங்க நானும் எங்க வீட்டில் முயற்சி செய்கிறேன்.. விடா முயற்சி பலனைத்தருமாம்...

10 comments:

  1. நல்லதொரு பதிவு..

    குறிப்பாக
    //பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன.அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள். //

    சரியாகச் சொல்லியிருக்கீங்க..
    பெரும்பாலானவர்கள் இதில்தான் கோட்டை விடுகிறார்கள்.

    ReplyDelete
  2. ஐ... ரொம்ப நாள் கழிச்சு முதல்ல வந்துருக்கேன்..

    ReplyDelete
  3. ரெண்டாவதாவும் வந்திருக்கேன்.. ஹிஹிஹி...

    ReplyDelete
  4. நமக்கு (எனக்கு) இது எல்லாம் சாதரணுமுங்க.. இப்படிதானே வண்டி ஓடுதுங்க

    ReplyDelete
  5. எல்லாம் சரி அண்ணே!! (என்னைப் போல் தினமும் சமைத்து மாட்டிக் காதீங்க!!) என்று சொல்லி எங்களையும் இழுத்து வுட்டுடீங்களே :-((

    ReplyDelete
  6. முக்கியமாக மனைவியை மதிப்பு குறைவாக மற்றவர் முன் நடத்தக் கூடாது (காமெடி செய்வதாக நினைத்து செய்வார்கள்). நேசிப்பு என்பது இதயத்திலிருந்து வருவதை பெண்களால் உணர முடியும். இவற்றையெல்லாம் சங்கவி சொன்னார்னு முயற்சிக்காமல் உணர்ந்து செய்ய வேண்டும். நல்ல பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  7. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. ஆண்கள் அழக்கூடாது என்பது சரிதான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது ரொம்ப உண்மை
    >.
    ரொம்ப சரிங்க சகோ.

    ReplyDelete
  9. காலையில் ஆனந்த விகடன் வாங்கியதும் மாலையில் படித்துக் கொள்ளலாம் என அசட்டையாக இருந்து விட்டேன். ஆனால் அதன் இலவச இணைப்பான என் விகடனில் ஒரு பழகிய முகம் தெரிந்தது, ஆர்வமுடன் எடுத்துப் பார்த்தால் நம்ம கேபிள் சங்கர் அண்ணன். அவரைப் பற்றியும் அவரது வலைத்தளத்தைப் பற்றியும் இரண்டு பக்கத்திற்கு கட்டுரை வந்துள்ளது. மிகுந்த சந்தோஷம். வாழ்த்துக்கள் கேபிள் அண்ணே. மற்றுமொரு மகிழ்ச்சி செய்தியாக ஒவ்வொரு வாரமும் ஒரு வலைப்பதிவைப் பற்றி போடப் போவதாகவும் அதில் அறிவிப்பு வந்துள்ளது. இனிமேல் நமது வலையுலக நண்பர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் விகடனின் அங்கீகாரம் என்பது கூடுதல் கொண்டாட்டம் தான் போங்கள். வலையுலகத்தினர் தங்களுடைய வலைப்பதிவு பற்றிய விவரங்கள் விகடனில் இடம் பெற வேண்டும் என விரும்பினால் தங்களுடைய சுய அறிமுகத்துடன் தங்களது வலைப்பதிவு பற்றிய விவரங்களை chennai@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தால் அவற்றில் சிறந்த வலைப்பதிவு, ஒவ்வொரு வாரமும் என் விகடன் சென்னை பதிப்பில் வெளியிடப்படும்.

    ReplyDelete