Thursday, February 16, 2012

வாங்க நாட்டுக்கோழி சாப்பிடலாம்...


எனது பதிவில் நாட்டுக்கோழிச்சாறு பற்றி குறிப்பிட்டு இருந்தேன் நாட்டுக்கோழியின் மீது அலாதி பிரியம் வைத்துள்ள என் இனிய நண்பர் ஆரூர் மூனா செந்தில் அவர்கள் அதன் செய்முறை சொல்லுங்க ( எங்க வீட்ல நான் சமைக்கிற மேட்டர் தெரிஞ்சிருச்சு போல) என்றார். அவருக்கும் இங்குள்ள  நாட்டுக்கோழி பிரியர்களுக்காகவும் நாட்டுக்கோழியைப் பற்றியும் நாட்டுக் கோழிச்சாறு பற்றியும் இப்பதிவில் பதிகிறேன்..

நாட்டுக்கோழி

கிராமங்களில் அனைவரின் வீட்டிலும் 15 வருடங்களுக்கு முன்பு கோழி வளர்ப்பது வழக்கம் அப்போது கோழி என்றால் அது நாட்டுக்கோழி மட்டுமே காலப்போக்கில் பிராய்லர் கோழி வந்த பிறகு நாட்டுக்கோழியுன் தாக்கம் குறைந்தது அதற்கு காரணம் வீட்டில் கோழி வளர்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பண்ணைகளில் வளர்க்கும் கோழிகள் மக்கள் சாப்பிடுவதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக அதிகமாக பிராய்லர் கோழியின் விற்பனை அதிகரித்தது.

பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி தான் சிறந்தது என்பதால் கடந்த சிலவருடங்களாக நாட்டுக்கோழிக்கு மதிப்பு அதிகரித்தது. அது கிடைப்பது சுலபமல்ல என்பதால் ஆட்டிறைச்சிக்கு ஈடான விலையில் தற்போது நாட்டுக்கோழி விற்பனை ஆகிறது..

இந்த கோழி விற்பனையாளர்கள் நாட்டுக்கோழி நன்றாக விற்பதை அறிந்து பிராய்லர் கோழி போலவே தற்போது நாட்டுக்கோழியை பண்ணையில் வளர்த்து அதே விலைக்கு விற்கின்றனர் அதையும் மக்கள் நாட்டுக்கோழி என்று வாங்கி தற்போது ஏமாறுகின்றனர்..

தற்போது நாட்டுக்கோழி பண்ணை தொழில் கொடிகட்டி பறக்கிறது நாம் இடத்தை காண்பித்து பணம் கொடுத்தால் அவர்களே பண்ணை அமைத்து தீனி கொடுத்து வளர்க்க வைக்கின்றனர் 3 மாதத்திற்கு ஒரு முறை கோழியை பிடித்துச் செல்கிற்னர் மாதம் 10000 முதல் 25000 வரை நம் முதல் போடுவதற்கு ஏற்ற இலாபம் நிச்சயம் உண்டு. ஆனால் இது அசல் நாட்டுக்கோழி அல்ல.

அசல் நாட்டுக்கோழி இன்று கிடைப்பது மிக அரிது கிராமங்களில் தோட்டத்தில் இயற்கை சூழ்நிலையில் வளரும் கோழிகளே அசல் நாட்டுக்கோழிகள்.  எனக்கு வாரம் வாரம் எப்படியாவது எனது நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஒரு நாட்டுக்கோழி கொடுத்துவிடுவர். ஞாயிற்றுக்கிழமை காலை எங்கள் ஊரில் இருந்தால் நிச்சயம் நாட்டுக்கோழிச்சாறும் இட்லியும் தான் எனது காலை உணவு.. ( மதிய உணவு தனிக்கதை).


அடுத்து நாட்டுக்கோழியில் இன்னும் அதிக சுவை உள்ளது கோழிச்சண்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் இதை எங்கள் பகுதியில் கோச்சை என்று சொல்வோம். இந்த கோச்சைக்கறியும், குழம்பும் சாப்பிடும் போது உலகம் மறந்து இருக்கும் அவ்வளவு சுவை. இந்த கோச்சை கிடைப்பது அரிது கோழிச்சண்டை நடக்கும் இடங்களில் சென்று சண்டையில் இறந்த கோச்சையைத்தான் விற்பனை செய்வார்கள் அதுக்கு பயங்கர போட்டி இருக்கும். நான் கோச்சை பொங்கல் சமயத்தில் சாப்பிட்டேன். சண்டையில் செத்த கோச்சை அல்ல இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அடிபட்டுருச்சு அப்புறம் பேசி 3 கிலோ எடையுள்ள கோச்சை 1000 கொடுத்து சந்தோசமாக வாங்க வந்து சாறு காச்சி சாப்பிட்டோம்...

கோழியை வீட்டில் அறுத்து சுத்தம் செய்த காலம் எல்லாம் இப்ப இல்லை கடையில் வாங்கும் போது உயிருடன் உங்கள் முன் அறுத்து வெட்டி தருமாறு பார்த்து வாங்கவும்.



நாட்டுக்கோழிச்சாறு

நாட்டுக்கோழிச்சாறு அல்லது குழம்பு வைப்பது ஒவ்வொருவருக்கும் ஒரு கைப்பக்குவம் என் கைபக்குவத்தை செய்து பார்க்க முயற்சி செய்யுங்க

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி- 1 கிலோ
சிறிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 2
தேங்காய்  1/2 மூடி
கறிவேப்பிலை - 6 கொத்து
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு தேவைக்கு ஏற்ப
பட்டை, கிராம்பு, சோம்பு தேவைக்கு ஏற்ப

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.

தக்காளி தோல் உறியும் வரை வதக்க வேண்டும்.

அதிலேயே தேங்காய், மல்லித்தூள், மிளாகய்தூள், மஞ்சள் போட்டு இறக்கி ஆற வைத்து அம்மியில் அரைக்கவும் ( மிக்சியை விட அம்மி சுவை நன்றாக இருக்கும்)

ஒரு மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
   

பின்னர் இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
   

மஞ்சள், தூள், கரம் மசாலா தூள், கோழி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கோழித்துண்டுகள் கொஞ்சம் வேகும் வரை வதக்க வேண்டும.

அரைச்சமசாலா சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கறி நன்கு வேக விடவும் குழம்பு கொஞ்சம் தண்ணியாக வைக்கவும்.

கொத்தமல்லி தூவி இறக்கவும்.. இப்ப ஆவி பறக்கும் நாட்டுக்கோழிச்சாறு தயார்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி அதில் கோழிகறியை மட்டும் தனியாக எடுத்துபோட்டு வதக்கவும்.

வதக்கும் போது கொஞ்சம் கோழிச்சாறு ஒரு 5 கரண்டி ஊற்றி வதக்கி பெப்பர் போட்டு நன்கு கிளறவும்.

இப்போது நாட்டுக்கோழிவறுவல் தயார்.

சூடான இட்லியை இலையில் போட்டு நாட்டுக்கோழிச்சாறு ஊற்றி பிசைந்து சாப்பிடவும் அன்று முழுவதும் அந்த மனமே இருக்கும்.

உடனடி நாட்டுக்கோழி வறுவல்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி  ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்று வெங்காயம், தக்காளி, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

இத்துடன் கோழித்துண்டுகள்,  தேங்காய் துண்டுகள் போட்டு கிளறவும். பின் கடையில் விற்கும் சிக்கன் மசலா பாக்கெட்டை கொட்டி நன்கு வேக விடவும் இப்பொழுது உங்களுக்கு உடனடி நாட்டுக்கோழி வறுவல் ரெடி. 

இந்த முறையில் பிராய்லர் கோழியையும் செய்யலாம்..

25 comments:

  1. நான் வெஜிட்டேரியன். ஆனாலும் கோழி விஷயம் சுவைதான்!

    ReplyDelete
  2. இங்க பாருங்கப்பா ...ஆண்கள் சமையல் எபோதுமே தனி ருசிதான்..செஞ்சு குடுங்க சாப்பிடுகிறோம்.

    ReplyDelete
  3. // 3 கிலோ எடையுள்ள கோச்சை 1000
    கொடுத்து சந்தோசமாக வாங்க வந்து //

    ரொம்ப கம்மி ரேட்க்கு வாங்கி இருக்கீங்களே..
    கிலோ 300 ரூபா கணக்கு தான் வருது..
    பொதுவா கோச்சை கிலோ 1000 ரூபா
    ரேஞ்ச் வரும்..

    2 மாசம் முன்னாடி 5 கிலோ கோச்சை
    5000 ரூபா சொன்னாங்க..

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. கோச்சை நல்லா பாக்கு சைஸ்ல வெட்டி கொஞ்சம் வெங்காயம் வெதை எடுத்த வரமொளகா,கொஞ்சம் தண்ணி உப்பு மஞ்சத்தூள் போட்டு எடுத்தா சிந்தாமணி ரெடி...

    @வெங்கட் ஆயிரமெல்லாம் ரொம்ப ரொம்ப ஜாஸ்திங்க,ஏன்னா உசுரோட கட்டுக்குபோரதே 4கிலோ வர்ர கோழியே 4000ம் தாங்க....

    ReplyDelete
  6. படிக்கையிலே சாப்ட மாதிரி இருந்தது நண்பரே நன்றி

    ReplyDelete
  7. ஆஹா செமையா இருக்கே..... இப்பவே சாப்பிடனும் போல இருக்குங்கோ.....!

    ReplyDelete
  8. நாட்டுக்கோழி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் எதுவும் இருக்கா?

    ReplyDelete
  9. @பரா பண்ணை நாட்டுக்கோழி கீழ்மூக்கும் வாலும் கட்டாகி இருக்கும்,சைஸ் 1.5லிருந்து 2 கிலோ வரைக்கும் தாங்க இருக்கும்..
    90 ரூபாய்க்கு வாங்குராங்க நாட்டுக்கோழின்னு சொல்லி 340க்கு விக்குராங்க :-((((

    ReplyDelete
  10. சூப்பெரா இருக்கு ...
    எங்கிட ஊரில் கோழிகளுக்கு எல்லாம் காய்ச்சல் வந்து போச்சி ..நாங்க கோழி குழம்பு சாப்பிட்டு ரொம்ப மாசம் ஆச்சி ...
    அப்புடியே குழம்பு வைச்சி ஒரு பார்சல் அனுப்பி வைச்சிடுங்க அண்ணா ..கோடி புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு ...

    ReplyDelete
  11. செய்முறை விளக்கம் அருமைங்க .

    ReplyDelete
  12. செய்முறை அருமை.

    கிராமங்கள்ல யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா நாட்டுக்கோழிதான் மருந்து. இப்ப எப்படீன்னு தெரியலை.

    ReplyDelete
  13. மாப்ள செய்முறை விளக்கம் பாத்ததும் சாப்பிட தோணுது ஹிஹி!...நீங்க சொன்னது போல ஊர் பற்றி போட்டு இருக்கேன் பாருங்க என் பதிவில்.!

    ReplyDelete
  14. அருமையான பதிவு.
    இப்போது கோழி வளர்க்க இடம் எங்கே இருக்கிறது?
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. வணக்கம் சங்கவி, முதல் வணக்கம் நான் சொன்னதுக்காக நாட்டுக்கோழிச்சாறு செய்முறை மட்டுமல்லாமல் நாட்டுக்கோழியைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியதற்கு.

    நாட்டுக்கோழி செய்முறையை சொன்ன விதம் இருக்கே படிக்கும்போதே எச்சில் ஊறி விட்டது. நாளை எங்கள் வீட்டில் என் கையால் நாட்டுக்கோழிச்சாறு தான் (தினமும் நான் சமைக்கிறேனா என்று உண்மையை எல்லாம் கிளறக் கூடாது). செய்து முடித்து சிறு கட்டிங் விட்டு பிறகு கோழிச்சாறை ஒரு வெட்டு வெட்டிய பிறகு தங்களது பதிவில் ருசி பார்த்த பின்னூட்டமிடுகிறேன்.

    நன்றி சதீஷ்.

    ReplyDelete
  16. கோச்சை சேவல் பிரியாணி கட்டாயம் 15 நாட்களுக்கு ஒருமுறை எங்கள் வீட்டில்! செய்வது அடியேனே! ஆனால் குழம்பிற்கு விடக்கோழிதான் பெஸ்ட்!

    என் இனமய்யா நீர்!

    ReplyDelete
  17. தேங்காயை விட தேங்காய்ப்பாலை,இறக்குவதற்கு 10 நிமிடம் முன் சேர்த்தால் புதுசுவையில் இருக்கும்!

    ReplyDelete
  18. நல்ல கட்டுரை சார் ! நன்றி !

    ReplyDelete
  19. நாட்டுக்கோழி விக்கிற விலைக்கு மாசத்தில ஒருக்கா பாக்கிறதே கஷ்டமா இருக்கு..படிக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுது ...நல்ல குறிப்புத்தந்ததுக்கு நன்றி..

    ReplyDelete
  20. நாட்டுகோழி சாறுல சிறிது நல்லெண்ணை விட்டா சூப்பருங்கோ! ஆ.மூ.செந்தில் வீட்டுல இன்னிக்கு கச்சேரிதான்...

    ReplyDelete
  21. நம்ம ஊர் பதிவு போட்டாச்சுங்க....நேரம் இருக்கும் போது ஒரு எட்டு வாங்க!

    ReplyDelete
  22. நாட்டு கோழி வளர்ப்பு, கோழி குழம்பு சமையல் என வெளுத்து கட்டுகிறீர். வாழ்த்துக்கள் சங்கவி

    ReplyDelete