Wednesday, June 5, 2013

அஞ்சறைப்பெட்டி 06/06/2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

ஐபிஎல் சூதாட்டம் தான் இன்றைய பட்டி தொட்டி எல்லாம் பேச்சு. வேலைக்குப் போயும் போகமலும், அலுவலகத்தில் பிட்டை போட்டு விட்டு மேட்ச் பார்த்தவர்கள் எல்லாம் பரிதாபமாக பார்க்கின்றனர். அலுவலகத்தில் எக்ஸ்ட்ரா வேலையில் இருப்பவர் எல்லாம் ஆன்லைனில் ஸ்கோர் பார்த்தவர்கள் எல்லாம் இன்று தலையில் அடித்துக்கொள்கின்றனர்...  இனியாவது புரிஞ்சுக்குங்க மக்களே நம்மை மூலதனமாக கொண்டு அவர்கள் விளையாட்டு என்ற பெயரில் கோடி கோடியாக சம்பாரிக்கின்றனர் என்பது தான் நிதர்சனம்...
  ................................................................

பெண்கள் பள்ளிக்கு பெண்களே ஆசிரியர்கள் என்று ஒரு புது சட்டம் இயற்றி உள்ளனர் இது என்னைப்பொறுத்தவரை தேவை என்றும் சொல்லலாம், தேவை இல்லை என்றும் சொல்லலாம்.. இருபாலரும் படிக்கும் பள்ளியில் நான் படிக்காததால் நிறைய கசப்பான சம்பவங்கள் வாழ்வில் நடந்துள்ளது.. இதற்கு ஆரம்பத்தில் இருந்தே இருபாலரும் படிக்கும் பள்ளியில் செக்ஸ் கல்வி முறையை மேலை நாடுகள் போல் தெளிவு படுத்தலாம் அவ்வாறு தெளிவு படுத்தும் போது இருபாலரிடமும் ஒரு முறையான அறிதல் இருக்க வாய்ப்பு அதிகம்...

..........................................................................................
 
இந்த வருடம் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மணிகளுக்கு வாழ்த்துக்கள்...

இந்த வருடமும் தனியார் பள்ளிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வந்துள்ளனர். தனியார் பள்ளியில் படித்து 489 மதிப்பெண் பெற்ற பக்கத்து வீட்டு பெண்ணிடம் கேட்கும் போது 2 வருசமா இதைத்தான் அங்கிள் படிக்கிறோம் ஒரே போர்.. எதைக்கேட்டாலும் நுனியில் உள்ளது என்கிறாள்.. பின்ன எப்படி 11 மார்க் போச்சு என்றதும் கையெழுத்து நல்ல இல்லை என்று கூட எதாவது குறைச்சிருப்பாங்க அங்கிள் நான் எதிர்பார்த்தது 495 என்கிறாள்...

இரண்டு வருடம் படித்து 489 மதிப்பெண் பெருவதை விட அரசுப்பள்ளியில் ஒரு வருடம் படித்து 465 எடுப்பவன் தான் முதல் மாணவன் என்பது என் கருத்து..

................................................................................................
 
பருவ மழை தொடங்கியது இந்த வருடம் பொத்துகிட்டு ஊத்தும் என்ற செய்திகளை எல்லாம் பார்த்து மனம் மகிழ்ந்து இருந்தேன் ஒரே நாள் தான் ஊற்றியது அது வெய்யிலில் வறண்ட மண்ணிற்கே சரியாகிவிட்டது.. தினமும் மழை பெய்யும் என்று ரெய்ன் கோட் எல்லாம் கொண்டு வருகிறேன் ஆனால் மழை பெய்த பாட்டைத்தான் காணம்... வருண பகவானே இந்த வருடம் பார்த்து கருணை காட்டப்பா... இப்பவே தண்ணி எல்லாம் ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விக்கறாங்க...

...............................................................................................
 
வெங்காயம் விலை ஏற்றத்தால் வீட்டில் குழம்பில் வெங்காயத்தை தேடவேண்டி இருக்கு.. உற்பத்தி அதிகம் இல்லாததாலும், மழை பொய்த்ததாலும் வெங்காய விலை இன்று 100 ரூபாய்க்கு விற்கின்றது. இது குறைய வாய்ப்பிருந்தாலும் விற்பவர்கள் மனது வைக்கவேண்டும்...
 
வெங்காயம் கடையில் 100க்கு விற்கிறது ஆனால் உற்பத்தியாளர்களிடம் 40 முதல் 50 ரூபாய்க்குத்தான் வாங்குகின்றனர் என்று விவசாயிகளின் குரலும் கேட்கத்தான் செய்கிறது....
...............................................................................................

பாதாள சாக்கடை என்ற பெயரில் சாலையை வெட்டி குழாய் பதிக்கின்றனர் குழாய் பதித்த பின் அதற்கு மேல் தார் சாலை போட்டால் வாகனங்கள் செல்ல எதுவாக இருக்கும்.. நம்மாளுக எப்பவும் முழுவதுமாக வெட்டி பின் அதில் மண்ணை மூடி அதில் பாதி பேர் விழுந்து கை, கால் முறிந்த பின்தான் ஒரு 6 மாதங்கள் கழித்த பின் தான் சாலையை செப்பனிடுவார்கள் போல... மக்களின் தேவையை அறிந்து விரைந்து செயல்ஆற்றினால் தான் அனைவருக்கும் பயன் என்பதை எப்போது அறிவார்களோ....
 
...............................................................................................
 

ஆணாதிக்க வாதிகளின் கரங்கள் ஓங்கியிருக்கும் சவுதி அரேபியாவில் மனைவியை கன்னத்தில் அறைந்த கணவனுக்கு 30 சவுக்கடிகளும் 10 நாள் சிறை வாசமும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் மீது அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை பின்பற்றி நடக்கும் வளைகுடா நாடுகளில் ஒன்று, சவுதி அரேபியா. இங்கு வாழும் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்லும் பெண்கள் ஆண் துணையுடன்தான் போக வேண்டும்.

பொது இடங்களில் உடல் உறுப்புகள் வெளியே தெரியாதபடி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மூடியபடி தான் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவின் கதிப் மாவட்டத்தில் உள்ள சஃப்வா நகரில் வசிக்கும் ஒரு பெண், தனது கணவர் கன்னத்தில் அறைந்து காயப்படுத்தி விட்டதாக போலீசிசல் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட கணவர், 'எனது பெற்றோரிடம் மரியாதை குறைவாக நடந்துக் கொண்டதால் அவளை கன்னத்தில் அறைந்தேன்' என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கணவனுக்கு 30 சவுக்கடிகளும் 10 நாள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்படும் இடத்தில் மனைவி பார்வையிட விரும்பினால் அதற்கு தடை விதிக்க கூடாது என்றும் நீதிபதி அனுமதி அளித்தார்.

தகவல்

 
 
சீனாவில் உள்ள சீஜியாங் என்ற இடத்தில் பொது கழிவறை குழாயில் பிறந்த குழந்தை ஒன்று சிக்கி கிடந்தது. அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. திருமணம் ஆகாத பெண் ஒருவர் இந்த குழந்தையை பெற்றெடுத்து கழிவறை குழாய்க்குள் வீசி இருந்தது தெரிய வந்தது.

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அங்கு திருமணம் ஆகாமலே குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது. கழிவறை குழாய்க்குள் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து திருமணம் ஆகாமல் குழந்தை பிறப்பதை தடுக்க சீன அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அங்குள்ள வாஹூன் பிராந்தியத்தில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்க மாகாண அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தத்துவம்

தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும் அவற்றைத் திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழிகள்.
 
"துயரத்துக்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்."
 
 எதையும்  சாதிக்க  நிதானம், அற்புதமான  ஆயுதம்.

7 comments:

  1. IPL வருங்காலங்களில் காணாமல் போகலாம்... போகட்டும்...

    பெற்றோர்களின் மதிப்பெண் மயக்கம் தெளிய வேண்டும்...

    நல்ல சீனா முடிவு + தத்துவம்...

    ReplyDelete
  2. இப்போலாம் அரசு பள்ளிகள் கூட 2 வருசம் பாடம் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க சகோ! அப்புறாம், அந்த ரோடு தோண்டுதல் பற்றி சொன்னீங்க. எங்க ஊருல மேன் ஹோல்லே திறந்துதான் கிடக்கு. 3 மாசமா:-(

    ReplyDelete
  3. அஞ்சறைப்பெட்டி கலக்கல் காக்டெயில் விருந்து....!

    ReplyDelete
  4. அஞ்சறைப் பெட்டியில் நல்ல தகவல்கள்.... தொடரட்டும்.

    ReplyDelete
  5. சிங்கபூர்ரில் 4 கிலோ சிகப்பு பல்லாரி வெங்காய மூட்டை $3.00 க்கு சில்லறை விலையில் கிடைக்கறது.இந்திய மதிப்பு சுமார் 135ரூபாய்.(பெரும்பாலும் மலேசியா வில் இருந்து தருவிக்கபடுகிறது.)

    -மதி

    ReplyDelete