Wednesday, June 5, 2013

ATM மும் நான் பட்ட அவஸ்தையும்...


ATM இன்றைய மனிதனின் அத்தியாவிசயத் தேவை... ATM இல்லை என்றால் இது கூட இல்லையா என்று ஏளனம் பேசுபவர்கள் தான் இன்று அதிகம். இந்த ATM மெஷினின் நன்மைகள் என்று பார்த்தால் அனைவரும் அறிந்ததே. இதனால் பல தரப்பட்ட மக்கள் பல வகையில் பயன்பெற்று இருக்கிறார்கள் இதில் நானும் விதிவிலக்கல்ல.

முதன் முதலில் சென்னையில் இருக்கும் போது 2002ல் ஐசிஐசியை வங்கியில் கணக்கு துவங்கி முதல் ATM கார்டை அப்போது தான் பெற்றேன். அதன் பின் வேலை மாறும் இடங்கள் எல்லாம் ஒரு வங்கியில் கணக்கதை துவங்கி அதில் சம்பளம் கொடுப்பதால் கிட்டத்தட்ட நிறைய வங்கியின் ATM கார்டு மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன் படுத்தி வருகிறேன். அதில் செய்யும் பரிவர்த்தனைகள் அனைத்தும் எனக்கு அத்துப்பிடி. யாணைக்கும் அடிசறுக்கும் என்பது போல நானும் சிக்கினேன்.

எப்போதும் மே மாதம் வந்தால் பட்ஜெட் கையை கடிக்கும் சராசரி பொதுசனங்களில் நானும் ஒருவன். ஊர்த்திருவிழா, சீட்டு, சுற்றுலா என ஏகப்பட்ட செலவுகள் நண்பனிடம் கை மாத்து கொடுடா என்று வாங்கும் அளவிற்கு...

எல்லா செலவுகளும் முடிஞ்சு சம்பளம் உள்வந்ததும் நண்பனுக்கு கைமாத்து வாங்கியதை கொடுக்க ATM சென்று பணத்தை எடுத்தேன் எனது வங்கி கணக்கு கனரா வங்கியில் அருகில் அந்த ATM இல்லாததால் லஷ்மி விலாஸ் பேங்க் சென்று பணத்தை எடுக்கும் போது என் அக்கவுண்டில் கிரிடிட் ஆகிவிட்டது மெஷின் பணத்தை எண்ணுகிறது திடீரென யூபிஎஸ் புட்டுக்க பணத்தை எண்ணிய மிஷின் ஆப் ஆகி என்னை ஆப் ஆக்கியது வெளியே நண்பன் பணத்துக்காக நிற்கிறான் என்னத்தை சொல்வது என்று புரியாமல் அங்கிருந்து அந்த கிளை அலுலகத்துக்கு போனை போட்டால் ஒன்னும் பிரச்சனையில்லை உங்க வங்கிக்கு சென்று எழுதிக்கொடுங்க ஒரு பத்து பதினைந்து நாளில் உங்க பணம் உங்களுக்கு வந்து விடும் என்றனர்.

அடப்பாவிகளா பத்து பதினைந்து நாளா என்று நண்பனிடம் விளக்கம் சொல்லி வேறு ஒருவரிடம் கைமாத்து வாங்கி நண்பனுக்கு பாதியை கொடுத்தேன். ( இனி கைமாத்து கேட்டா கை குத்து தான் கிடைக்கும்) வங்கியில் சென்று கிளை மேலாளரிடம் தகவல் சொன்னதும் எழுதி கொடுங்க என்றார் எழுதி கொடுத்தேன் ஒரு வாரம் பணம் வரவில்லை போய் விசாரித்தேன் 10 நாள் ஆகும் என்றனர் 11 வது நாள் போய்கேட்டேன் 15 நாள் ஆகும் என்றனர் 15ம் நாள் போய்க்கேட்டேன் ஆகிடும் என்றனர் 22 வது நாள் போய்க்கேட்டேன் இன்னிக்குத்தான் மெயில் வந்து இருக்கு இன்று மாலை பணம் வந்து விடும் என்றனர்..

ஆக ATM ல் பணம் எடுக்கும் போது இந்த மாதிரி கூத்து நடந்தால் 22 நாள் ஆகுமா சார் என்று கேட்டேன் தனியார் வங்கியாக இருந்தால் அடுத்த நாள் 10 மணிக்கு Server Restart ஆகும் போது கிடைத்து விடுமாம்.. நமக்கு கணக்கு உள்ள வங்கியாக இருந்தாலும் இதே போல் அடுத்த நாள் கிடைத்து விடுமாம். மற்றபடி நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் போய் எப்படி பாடு பட்டு ஒரு கேள்விக்கு பதில் வாங்குகிறோமோ அதே போல் தான் வரும் ஆனா வராது என்பது போல் தான் மினிமம் 15 நாட்களுக்கு அப்புறம் தான் வருமாம்...

இனி ATM சென்று பணம் எடுக்கும் நண்பர்கள் அந்த மெஷின் UPS இல் வேலை செய்தால் கொஞ்சம் நிதானமாக யோசிச்சு எடுங்கள். முடிந்தவரை நமக்கு கணக்கு உள்ள வங்கியில் எடுக்கும் போது நமக்கு அவஸ்தைகள் மிச்சமாகும்.. 

கைமாத்து வாங்கி 20 நாள் நண்பனை போக்கு காட்டி திருப்பி கொடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது...

6 comments:

  1. யூபிஎஸ் புட்டுக்கவோதொடு அல்லாமல் அந்த சமயத்தில், சில மெசின்களில் நமது ATM உட்பட உள்ளே மாட்டிக் கொள்ளும்...

    எல்லாம் நம்ம நேரம்...!

    ReplyDelete
  2. நானும் கார்ட் மாட்டிக்கொள்ள
    மிகவும் அலைச்சலையும் அவஸ்தையும்
    அனுபவித்திருக்கிறேன்.தேய்த்து எடுக்கிற மாதிரியான
    மெசின் ஆயின் கவலையில்லை
    கார்டை உள்ளே இழுக்கிற மெசினில்தான்
    இந்த லொல்லெல்லாம என நினைக்கிறேன்

    ReplyDelete
  3. ஒருத்தர் படும் அவஸ்தைதான் அடுத்தவருக்கு பாடம். இனி நாங்க விழிப்புடன் இருப்போம் பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  4. மொக்கச்சாமிJune 5, 2013 at 11:29 AM

    @சங்கவி சார்,
    அட கஷ்டகாலமே, ATMல ரொம்ப பட்டுடீங்க போல. அதால உங்க முகம் அடையாளம் தெரியாத மாரி மாறிப்போச்சு. உங்க புரபைல் போட்டாவும் ஏடிம் முன்னாடி நீங்க எடுத்துகிட்ட போட்டாவு்ம் ரொம்ப வித்தியாசமா இருக்கு.உடம்பை பாத்துக்குங்க.

    ReplyDelete
  5. மொக்கச்சாமிJune 5, 2013 at 11:30 AM

    //சில மெசின்களில் நமது ATM உட்பட உள்ளே மாட்டிக் கொள்ளும்//

    தி. தனபால் சார், ஏதோ டபுள்மீனிங்குல பேசறாப்புல இருக்கு?

    ReplyDelete
  6. சில சமயங்களில் ஒரு மாதம் கூட ஆகிவிடுகிறது....

    ஆனாலும் பயன்படுத்தித் தான் வேண்டியிருக்கிறது! :)

    ReplyDelete