Friday, December 30, 2011

2012ம் வருடமே நீ ! வருக !! வருக!!!

மணித்துளிகள் எண்ணப்படுகின்றன 2011 இன்னும் பல மணித்துளிகளில் நமக்கு மறந்துவிடும். இவ்வருடம் நாம் சாதித்தது என்ன? என அசைபோட நேரமில்லை....

இதுவரை எது நடந்தாலும் அதை மறந்து விட்டு 2012யை வரவேற்க நான் தயாராகிவிட்டேன். 2012ல் நான் சாதிக்கப்போவது நிறைய இருக்கிறது ஒவ்வொரு முறை நிகழும் போது அன்பு நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
 
என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........
 
 
என்றும் அன்புடன்
சங்கமேஸ் (சதீஸ், சங்கவி)
www.sangkavi.com
www.vivasayam.com

Wednesday, December 28, 2011

அஞ்சறைப்பெட்டி + ஈரோடு சங்கமம் கிசு கிசு

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
இந்த வருடத்தின் கடைசி அஞ்சறைப்பெட்டி ஒரு வருடமாக தொடர்ந்து வியாழக்கிழமைகளில் அஞ்சறைப்பெட்டி எழுதுவது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. ஆனால் முதலில் எழுதிய சுவாரஸ்யம் வர வர குறைந்து விட்டது என்பது எனக்கே நன்றாக தெரிகிறது. வரும் வருடம் நிறைய சுவாரஸ்யங்களுடன் நிச்சயம் எழுதுவேன் உங்கள் ஆதரவோடு...

கடந்த வருடத்தை அசைபோட்டால் எனக்கு 2011 ல் இழப்புகள் தான் அதிகம்.. இழப்புகளை தன்னம்பிக்கையோடு எதிர்த்து 2012யை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் எனக்கும் உங்களுக்கும்....

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்... 
 ...............................................................................................
கடந்த வாரம் 4 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு சென்றேன்.. ஊர் சுத்தலாம் என்று கோபிவரை சென்றேன் அந்தியூரில் இருந்து கோபி செல்லும் பாதை எங்கும் பச்சை பசேல் என இருபக்கங்களிலும் மனதை கொள்ளை அடித்தது.. 

வளைந்து நெழிந்து செல்லும் சாலை இருபுறமும் நெற்பயிர்கள் சாலையோரம் பனை மரங்கள் மற்றும் சாலையில் இருபுறமும் வாய்க்கால் என்று இதமான குளிரிலும் வெய்யிலிலும் சென்ற அந்த 40 நிமிட பயணம் இன்னும் மனதில் அசைபோடுகிறது...
...............................................................................................

திங்கட்கிழமை அப்பாவிற்கு கண் செக்கப்பிற்காக ஈரோடு அரசன் கண் மருத்துவமனை சென்றேன் கண்ணில் புரை உள்ளது அதை உடனடியாக அகற்றவேண்டும் என்றனர் இதற்கு முறையே 7000, 9000, 12000க்கு லென்ஸ் உள்ளது நீங்கள் இதற்கு முன் செய்த கண்ணிற்கு 9000 ரூபாய்க்கு லென்ஸ் வைத்துள்ளீர்கள் இதற்கும் அது தான் வைக்க வேண்டும் என்கின்றனர் அவருக்கு 65 வயதுக்கு மேல் ஆகிவிட்டது அவர் இலவச சிகிச்சை செய்து கொள்கின்றேன் என்று சொல்ல இலவச சிகிச்சை என்றால் அறுப்பார்கள் தையல் போடுவார்கள் அதெல்லாம் உங்களுக்கு சரிபடாது.

இலவச சிகிச்சையால் நிறைய பின்விளைவுகள் இருக்கும் என அங்கு பணிபுரியும் செவிலியர்கள் அப்பாவிடம் சொல்லி உள்ளனர். மீண்டும் நான் சென்று 9000 லென்ஸ் வைத்துக்கொள்கிறேன்.. ஏன் இலவச சிகிச்சை வேண்டாம் என்றேன் எனக்கும் அதே பதில் ஆனால் அந்த மருத்துவமனையில் தினமும் 50 பேருக்கு மேல் இலவச சிகிச்சை மேற்கொள்கின்றனர்... அப்ப அவர்களின் நிலை... பணத்திற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள் பாருங்க.... இதில் முக்கியமானது எனது தந்தைக்கு 9000 கொடுத்து கண்புரை நீக்கி 5 மாதம் தான் ஆகிரது ஆனால் அந்த கண் இப்போது ரொம்ப மங்களாகிவிட்டது... கண் மருத்துவமனைக்கு பார்த்து செல்லுங்கள்... காரணம் சொல்லியே பணம் பிடுங்கிடுவானுக...

...............................................................................................

அம்மா சசியை கழட்டி விட்டதில் மக்களிடம் மீண்டும் அம்மா நம்பிக்கைகுரியவர் ஆகிவிட்டார்... மக்களுக்கு அம்மா ஒரு நல்ல ஆட்சியை நிச்சயம் தருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றால் அது மிகையாகது... நிச்சயம் நடக்கும்... நல்லதே நினைப்போம்...

................................................................................................

தமிழ்நாட்டை தானே புயல் தாக்க அதிக வாய்ப்புள்ளதாகவும், அப்போது 105 கிலோமீட்டர் வேகத்தில் காற்றும் வீசம் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம் சென்னை மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்களாம்.. புயல் தாக்குதவற்கு முன் அனைவருக்கும் அறிவுருத்தப்பட்டு விட்டது இப்போது தெரியும் மாநகராட்சியில் எப்படி இந்த புயலை எதிர்கொண்டு மக்கள் தேவையை சரிசொய்யப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்...
................................................................................................

சமீபத்தில் பழவேற்காட்டில் நடந்த துயர சம்பவம் மிகவும் வருத்தத்திற்கு உரியது. இனி குடும்பமாக சுற்றலா சென்றால் பார்த்துதான் செல்ல வேண்டும் போல... அதுவும் இல்லாமல் அனுமதி இல்லா இடங்களில் இது போல் படகு சவாரி செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் அப்படி சென்றால் பாதுகாப்பு கவசம் அனிந்து செல்லுங்கள்.. போனால் கிடைக்காது உயிர்..
 
தகவல்
மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என இந்திய ஆராய்ச்சியாளர் சந்தீப் பிரபு கூறுயுள்ளார்.
மீன்களில் உள்ள ஒமேகா-3 என்னும் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் டெல்டா-12-ப்ரோடாக்லாண்டின் ஜே3 அல்லது டி12-பிஜிஜே3 என்ற சேர்மம் ரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியில் ரத்த புற்றுநோய் உள்ள எலிகளுக்கு 7 நாட்கள் இந்த சேர்மம் கொடுக்கப்பட்டது. பின்னர் பரிசோதித்தபோது அந்த எலிகள் அனைத்தும் குண்மடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர் மூலிகை முற்றம் என்ற பெயரில் தனது மூலிகை பயணங்களையும் அங்கு அவர் கற்ற மூலிகைகளை பதிவாக்கி வருகிறார் சுமையா பானு அவர்கள்.. 

தினமும் ஒரு மூளிகையைப்பற்றி நிறைய எழுதி வருகிறார் மிகவும் பயனுள்ள பதிவு... 

அனைவரும் நிச்சயம் அறிய வேண்டிய பதிவு...

http://www.mooligaimutram.blogspot.com/

தத்துவம்
நீ எப்படி இருந்துள்ளாய் என்பதைப் பற்றி எண்ணாதே, நீ எப்படி இருக்கு விரும்புகிறாய் என்பதையே எண்ணு, நீ நிச்சயமாக முன்னேறுவாய்.

ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.
கிசு கிசு
முதலில் என் அஞ்சறைப்பெட்டியில் இரு வாரம் கிசு கிசு எழுதினேன் நண்பர்களின் பலத்த எதிர்ப்பால் எடுத்து விட்டேன் இந்த வாரம் நண்பர் ஒருவர் நிச்சயம் இந்த கிசு கிசுவை எழுதியாக வேண்டும் என்றார்..
இது நடந்தது ஈரோடு சங்கமத்தில் என்பால் இந்த வாரம் மட்டும் அஞ்சறைப்பெட்டியில் கிசு கிசு..

ஈரோட்டில் நடந்த சங்கமத்தில் ஒரு பிரபல பதிவரிடம் நம் நண்பர் அறிமகமாகி இருக்கிறார் அவர் அப்படியா சரிங்க என்று சொல்லிட்டு அடுத்து இருக்கும் பெண் பதிவரை நோக்கி நடந்திருக்கிறார் அவர் எதுவும் பேசாததால் திரும்பி வந்து ஒரு சிலரோடு படம் எடுத்து விட்டு வேறு ஒரு பதிவரிடம் ஒரு பெண் பதிவர் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார் அவரிடம் சென்று இவங்க யார் என்று விசாரிக்கையில் அவர் சொல்லி இருக்கிறார் ஓ இவுங்க தானா என்று சொல்லி விட்டு அந்த பெண் பதிவரிடம் விடாமல் பேசி பேசி மொக்கை போட்டு இருக்கிறார். அவுங்க விட்டா போதும் புறப்பட்டுவிட்டார்கள் இதை அனைத்தையும் கவனித்த நம் நண்பர் மீண்டும் அறிமுகமாகி இருக்கிறார் அந்த பதிவர் அப்படியா என்று கேட்டு விட்டு மீண்டும் அங்கும் இங்கும் தேடி இருக்கிறார்.. நான் வழிய வழிய போய் பேசுகிறேன் இந்த ஆள் என்னடா என்றால் பெண் பதிவரிடமும் பிரபல பதிவரிடமும் தான் பேசுகிறார்... 
நீங்க அஞ்சறைப்பெட்டியில் இதைப்போடுங்க உங்களுக்கு பின்னூட்டத்தில் அவர் யார்ன்னு நான் சொல்கிறேன் என்றார்... எதிர்பார்ப்போம் அந்த பதிவர் யார் என்று...

இதை என்னிடம் சொல்லிய பதிவர் அயல் ஊர்க்காரார் அதனால் எனக்கு ஒரு டவுட் ஒரு வேளை அந்த பதிவர் ஈரோட்டுக்காரரா இருப்பாரோ... டவுட்டு... டவுட்டு...


Tuesday, December 27, 2011

ஈரோடு சங்கமத்தில் பாலிடிக்சா??? சிபிக்கு என் பதில்கள்...

2011ம் ஆண்டு ஈரோடு சங்கமம் நடந்தது ஒரு விபத்து இந்த வருடம் சங்கமம் எப்படி நடத்தப்போகிறோம் என்று நவம்பர் முதல் மாதத்தில் எங்கள் குழும மடலில் கேட்ட போது நடத்துவதைப்பற்றி அனைவரும் யோசித்தார்கள். அதற்கு முக்கிய காரணம் விழா ஏற்பாடுகள் என்றால் சும்மா இல்லை அதற்கு நிறைய உழைக்கனும் அனைவரும் அவர்கள் வேலையையும் பார்க்கனும் சங்கம வேலைகளையும் பார்க்கனும். எங்கள் குழும தலைவர் அண்ணன் தாமோதர் சந்துரு அவர்கள் இந்த வருடம் நடத்தியே தீரனும் என்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இருந்து ஒவ்வொருவரும் ஒரு வேளையை பிரித்துக் கொண்டு 10 நாளில் நடத்துவது என்று முடிவு செய்து விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யபப்பட்டது.

எங்கள் குழுமத்திற்கு என்று ஒரு வலைப்பதிவு உள்ளது அதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவர். உறுப்பினர்களை நாங்கள் யாரும் போய் வாங்க வந்து உறுப்பினராகுங்கள் என்று அழைப்பதில்லை விருப்பமுள்ளவர்கள் எங்கள் குழுமத்திற்கு மடல் அனுப்பினால் போதும் உறுப்பினராக சேர்த்துக்கொள்வோம். சேர்ந்த பின் அவர்களுக்கு குழும மடல் முகவரி கொடுத்து கருத்து கேட்போம் வருடம் ஒருவர் தலைவராக இருந்து சங்கமத்தை நடத்தி வருகிறோம்..

அதன் படி இந்த வருடம் சங்கமம் 2011 பதிவுலகில் ஒரு வரலாறு காணத நினைவாக நண்பர்களை அழைத்து சங்கமத்தை வெற்றியோடு நடத்தினோம். ஒரு விழா என்றால் அனைத்தையும் 100% சரியாக நடத்துவது என்பது இயலாத காரியம். விழா நடத்தும் நண்பர்கள் என்ன முடிவு செய்கிறோமோ அவ்வாறு தான் விழா நடத்த இயலும். குழுமத்தில் முடிவு செய்த படி 2011 சங்கமம் வெற்றிகரமாக நடந்தது. நண்பர்கள் கருத்து சொன்னால் அதை ஏற்றுக்கொண்டு அடுத்து சங்கமத்தில் அதை சரிசெய்து விடலாம். இப்படித்தான் அனைத்து விழாக்களும் நடக்கிறது இதற்கு நம் குடும்ப விழாவும் விதிவிலக்கல்ல..

இனி பாலிடிக்ஸ்...

ஈரோட்டில் நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் குழுமத்தில் வந்து சேர வேண்டும் என்பது கட்டாயமல்ல. விருப்பம் இருப்பவர்கள் வந்து சேரலாம் முடிந்தால் அவர்கள் ஒரு குழுமம் அமைத்து  நிகழ்ச்சிகளை நடத்தலாம் யாரையும் யாரும் வேண்டாம் என்று சொல்ல உரிமை இல்லை..
நண்பர் சிபி செந்தில் குமார் நடுநிலை என்ற பெயரில் ஒரு உள்குத்து பதிவிட்டு அதில் ஈரோட்டில் பல பதிவர்கள் இருக்கின்றனர் அவர்களை ஏன் நிகழ்ச்சி நடத்துவர்கள் தொலைபேசியிலோ, மெயில் ஐடியிலோ தொடர்பு கொண்டு ஒரு நான்கு நிமிடம் பேசி வில்லை என்று பதிவிட்டு இருக்கிறார்.. 

ஏங்க சிபி உங்ககிட்ட நிகழ்ச்சி நடத்துபவர்கள் எல்லாம் 4 நிமிடம் பேசியதால் தான் நீங்கள் வந்தீர்களா???

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பெயரையும், தொலை பேசி ஒவ்வொரு பதிவுவிலும் கொடுத்திருந்தோம் ஏன் நீங்கள் சொல்லும் பிரபல பதிவர்கள் எங்களையாரைவாது அழைத்திருக்கலாமே ஏன் அழைக்கவில்லை??

வெளியூரில் இருந்து பல பதிவர்கள் எங்கள் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார்கள் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த வீடு சுரேஷ் கூட தொடர்பு கொண்டு வருகிறேன் என்று கூறினார் அது மாதிரி இவர்களும் அழைத்திருக்கலாமே?? அல்லது மிஸ்டுகாலாவது கொடுத்திருக்கலாமே???
அப்புறம் சிபி குழுமத்தில் உள்ள பவளசங்கரியை எனக்குத் தெரியவில்லை பதிவு எழுதும் போது உங்களை தொடர்பு கொண்டு பேசினேன் என்று சொல்லி உள்ளீர்கள் அது உண்மைதான்... பவளசங்கரியை மட்டுமல்ல ரோகிணிசிவா, அமரபாரதி, இளா, ராஜி, திருஞானசம்பந்தம் இன்னும் எங்கள் குழுவில் உள்ள நிறைய பேரை எனக்குத் தெரியாது ஆனால் அவர்களிடம் குழும மடல் தொடர்புண்டு. 

குழுமத்தில் இருந்தால் அவர்களைத் தெரிய வேண்டும் என்று அவசியம் உண்டா சிபி...

அடுத்து மெட்ராஸ்பவன் சிவக்குமார் சில குறைகளை என்னிடம் சொன்னார் சரிங்க அடுத்த முறை சரிசெய்து விடலாம் அவசரத்தில் நடந்த நிகழ்வு என்றேன்.. இந்த நிகழ்வு எனக்கும் சிவக்குமாருக்கும் இடையே நடந்தது இதில் நீங்கள் சங்கவியிடம் சொன்னீங்க.. கதிர் தானே லீடர் என்று தனிமனிதர் தாக்குதலை நடத்தி உள்ளீர்கள் இதற்கு என் பகிரங்க கண்டங்களை பதிவு செய்கிறேன் சிபி...

இதே இடத்தில் வீடு சுரேஷ் என்னும் பதிவர் நான் சிவக்குமாரிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு தவறான தகவலை வெளியிட்டுள்ளார். சுரேஷ் நீங்க என்ன நடந்தது என்று சிவக்குமார்கிட்டடே கேட்டுக்கங்க... 

சுரேஷ்  இப்பதான் பதிவுலகிற்கு வந்து நிறைய எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்...

சிபி உங்களால் நிறைய பதிவு ஒரே நாளில் எழுதி வெளியிட முடியும் என்பது எனக்கு தெரியும் நிச்சயம் இந்த பதிவை ஹிட்ஸ்க்காக எழுதியிருக்க மாட்டீர்கள்... நிகழ்ச்சியை நடத்திய எங்களின் மனம் புண்ணாகவேண்டும் என்று உள்குத்துடன் எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்...

சிபி, ஈரோட்டில் இருக்கும் எங்களை தொலைபேசியில் அழைக்கவில்லை என்று கூறும் நண்பர்களே நீங்கள் தமிழகம் தழுவிய ஒரு பதிவர் சந்திப்பு நடத்துவீர்கள் என்றுத் அதில் தவறே இல்லாமல் நடத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் சீக்கிரம் தேதியை அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்க்றோம்..

Thursday, December 22, 2011

ஈரோடு சங்கமம் சாப்பாடு ஸ்பெஷல் ( குஷ்பு இட்லியும், முட்டை பணியாரமும்)


ஈரோடு மாவட்டம் எப்பவும் விருந்தினர்களை கவனிப்பதிலும், வரவேற்பதிலும் காலம் காலமாக பேர் பெற்றது. வரும் விருந்தினர்களுக்கு விருந்து வைத்து அசத்தி அனுப்புவதில் ஈரோட்டு மக்களுக்கு நிகர் தேடித்தான் பிடிக்கனும். ஈரோட்டை நினைத்தாலே எங்கள் விருந்தும் வரவேற்பும் என்றும் ஞாபகத்திற்கு வரும்.
 இலக்கியவாதி கோபி..

ஒவ்வொரு முறை சங்கமத்திலும் இரவு உணவு அசத்தலாகவே இருக்கும் இந்த முறை இன்னும் அசத்திடவேண்டும் என்று எங்கள் அண்ணன் தாமோதர் சந்துரு அவர்கள் உணவு ஏற்பாட்டில் தனிக்கவனம் எடுத்து அனைத்து அவர் மேற்பார்வையில் நடத்தி அசத்தி விட்டார்...

வீடு திரும்பல் மோகன்குமார்
 கேர்ஆர்பி
ஆரூர் முனா செந்தில்

நான் இந்த முறை நேரத்தில் செல்ல வேண்டும் அங்கு நமக்கு கொடுக்கும் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று எண்ணி 1 மணிக்கெல்லாம் ஈரோடு சென்று விட்டேன் இடையில் மாமாகிட்ட மாட்டி இரவு 8.30 மணிக்குத்தான் மண்டபம் சென்றேன். செல்லும் வழியில் ஜாக்கி போன் எங்கடா இருக்கற நாங்க ஊரைச்சுத்திகிட்டு இருக்கோம் சரியா வழி சொல்லு என்று சொன்னவுடன் அவருக்கு வழிகாட்டி கலெக்டர் ஆபிஸ் பக்கத்தில் வரும் வரை நின்று கொண்டு இருந்தேன் திடீரென ஹேய்ய் என்று சத்தம் காரில் பார்த்தால் மணிஜியும், ஜாக்கியும் அவர்களை அழைத்து கொண்டு மண்டபம் சென்று எல்லாரையும் பார்த்துவிட்டு சாப்பிடச் சென்றோம்...
காவேரி கணேஷ், உண்மைத்தமிழன், அன்பழகன்
 பிரபல பதிவர் நாய் நக்ஸ் நக்கீரன்
 இரவு உணவு குஷ்பு இட்லி, தோசை, ரோஸ்ட், முட்டை தோசை, ஆம்லெட், ஆபாயில், கலக்கி, ஒன்சைடு ஆம்லெட் இதற்கு தேங்காய் சட்னியும், குருமாவும் என்று அசத்தினர் அசத்தி. இரவு உணவின்போதே காலை என்ன உணவு வகை இருக்கும் என்று அனைவரையும் எதிர்பார்க்கவைத்தது..

இரவு உணவு முடிந்து இரவில் வந்தவர்களுக்கு குழுமத்தின் மூலம் தங்கும் வசதி ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டு இருந்தது. அனைவரும் தங்கி காலை நிகழ்ச்சிக்கு புறப்படும் போது என்னைப்பார்த்து கேட்டது என்னய்ய முட்டைல பூரி உண்டா என்றனர் இந்த வருடம் அந்த வேற ஸ்பெசல் என்றேன்.. 

கோகுலத்தில் சூரியன் வெங்கட், கோமாளி செல்வா
 அரவிந்தன், யுவகிருஷ்ணா

 அகநாழிகை வாசுதேவன்
காலை உணவு குஷ்பு இட்லி, வெண்பொங்கல், பூரி, தோசை, முட்டை தோசை, ஆம்லெட், கலக்கி, தேங்காய் சட்னி, சாம்பார், உருளைக்கிழங்கு மசால் என்று ஒரு ரவுண்டிற்கே வயிறில் இடம் இல்லாமல் சாப்பிட்டோம்.. விருந்தினர்களை சாப்பிட வைத்தோம்..

நிகழ்வுகள் நடக்கும் போது மதியம் சாப்பாடு ரெடியாகி இருந்தது நிகழ்ச்சி நடக்கும் போது அனைவருக்கும் பழரசம் கொடுத்து விட்டு மதிய உணவிற்காக தயாராக்கி வைத்தோம்...
மதிய உணவு சைவம், அசைவம் என்று பிரிக்கப்பட்டு உணவு பரிமாறினர். சைவத்தில் தலைவாழை இலை போட்டு வாழக்காய் பஜ்ஜி, முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் பொறியல், காளிபிளவர் சில்லி, சாப்பாடு, சாம்பார், புளிக்குழம்பு, ரசம், தயிர், பாயசம் சாப்பிட்ட முடித்தவுடன் வெற்றிலை பாக்கு..

அசைவ உணவில் விருந்து என்றால் அனைத்து இடங்களிலும் பிரியாணி போடுவார்கள் ஆனால் எங்கள் ஊர் கிடாவிருந்து போல் பிரியாணி இல்லாமல் ஆனால் மறக்க இயலாத ஒரு கிடா விருந்தாக இருந்தது அதன் உணவு வகைகள்..

ஜாக்கி சேகர்
 மணிஜி
தலைவாழை இலையில் வறுத்த மட்டன், சிக்கன் பள்ளிபாளையம், தலைகுடல்கறி, சாதம், சாதத்திற்கு மட்டன் கிரேவி குழம்பு, எழும்புக்குழம்பு, புளிரசம், தயிர், பாயசம் மற்றும் முட்டை பணியாரம்... என அமர்க்களமான விருந்து அனைவரையும் வயிரார சாப்பிடும் வகையில் கலக்கி இருந்தார் அண்ணன் தாமோதர் சந்துரு அவர்கள்..

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நான் பேசிய வார்த்தைகளில் நிச்சயம் இந்த வார்த்தை இடம் பெற்றிருக்கும் அது சாப்டாச்சா அண்ணே... இந்த பதிவை படிக்கும் போது கேக்கிறேன் சாப்ட்டீங்களா அண்ணே...

கடந்த முறை போல் இந்த முறையும் விருந்திலும், நண்பர்களை அழைத்து வந்து வெற்றி விழாவாக இந்த விழாவை சிறப்பாக நடத்திய பெருமை கதிர், ஆருரன், தாமோதர் சந்துரு, பாலாசி, பாஸ்கார்த்தி, லவ்டேல் மேடி, ஜாபர் இவர்களையேச் சாரும் நண்பர்களுக்கு மிக்க நன்றி...

எங்க குழுமத்தில் உள்ள மற்ற நண்பர்கள் என்னையும் சேர்த்து வெளியூரில் இருப்பதால் இவர்கள் உழைப்பில் எங்கள் பங்கு குறைவே...

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் வந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.. 

மீண்டும் அடுத்த முறை சந்திப்போம் இன்னொரு சந்தர்ப்பத்தில். 

அடுத்த நிகழ்வை இன்னும் சிறப்பாக செய்வோம் அதற்கும் அனைவரும் வருக...வருக...

இத்தோடு 2011 ஈரோடு சங்கமம் பதிவுகள் ஓவர்....

இனி அடுத்த  வருசந்தானுங்கோ...

Wednesday, December 21, 2011

அஞ்சறைப்பெட்டி 21.12.2011


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
 
ஈரோடு சங்கமத்தில் கிட்டத்தட்ட 230க்ம் மேற்பட்டவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இதில் பதிவர்கள்  மட்டும் கிட்டத்தட்ட 180யைத் தாண்டும். பதிவர்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அரங்கிற்கு வந்தவர்களில் என்னால் முடிந்தவரை அனைவரையும் சந்தித்து வரவேற்றேன். யாரிடமாவது பேசாமல் சென்றிருந்தால் மன்னிக்கவும்.

பதிவர் சந்திப்பில் நிறைய நண்பர்கள் பதிவழுதும் போது அவர்களிடம் நான் பேசிய விதத்தையும், கவனித்த விதத்தையும் பாராட்டி எழுதி இருந்தனர் இதில் மிக மகிழ்ச்சி ஏன் என்றால் எங்கள் குழுவினர் எனக்கு கொடுத்த ஒரே வேளை அது தான் அதை சரியாக செய்ததில் மிக்க மகிழ்ச்சி..

நிறைய நண்பர்களிடம் அதிகம் பேச இயலவில்லை அனைவரையும் வரவேற்று, சாப்பிட்டார்களா என்று கேட்டு கவனித்ததில் நிறைய மனம் விட்டு பேச இயலவில்லை அடுத்த முறை இதை எல்லாம் சரி செய்து விடுகிறேன்..

...............................................................................................
நம் பதிவர்கள் தற்போது அதிகம் எழுதுவதில்லை குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் தொடந்து எழுதுகின்றனர் முடிந்தவரை அனைவரும் எழுதினால் பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கும்... எழுதுங்கள் வரவேற்கிறோம்.

புதியவர்கள் நிறைய பேர் தயக்கத்துடன் இருக்கின்றனர் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் அனுபவமுள்ளவர்கள் தீர்த்து வைப்பார்கள் அவர்கள் சொல்லவில்லை என்றால் சொல்லாதவரைப் பற்றி ஒரு பதிவெழுதுங்கள் விரைவில் நீங்களும் பிரபல பதிவர் ஆகிவிடலாம்...
...............................................................................................

தமிழக அரசியலில் தற்போது மிக பரபரப்பான விசயம் சசிகலாவை அம்மா வெளியேற்றியது இது அனைத்து தரப்பினரையும் சந்தோசப்படுத்தி உள்ளது. முக்கியமாக அம்மா எதிர்பார்க்காத வரலாற்று வெற்றியை கொடுத்த தமிழக மக்கள் மிகவும் சந்தோசத்துக்குள்ளாகி உள்ளனர். அதுவும் முதல் 6 மாதத்தில் எடுத்த இந்த களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது..

எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்த தமிழக மக்களுக்கு அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சியை கொடுங்கள் இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்... அப்படி கொடுத்தால் நீங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்...
...............................................................................................

 
வடகொரியா அதிபராக இருந்தவர் கிம்ஜொங்-2. கம்யூனிச நாடான இங்கு இவர் ராணுவ ஆட்சி நடத்தி வந்தார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் பக்கவாத நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரெயிலில் சென்று கொண்டிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
 
அதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.  அவர் மரணம் அடைந்த செய்தி தலைநகர் பியாங்யாங்கில் இருந்து வட கொரியா டி.வி.யில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது, நமது அன்பிற்குரிய தலைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என தெரிவிக்கப்பட்டது.
 
கிம்ஜொங் மரணம் அடைந்ததை தொடர்ந்து பக்கத்து நாடான தென்கொரியாவில் ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் கூடி இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக தென்கொரியா அதிபர் லீ மியூங்-பக் தெரிவித்தார். 
 
வடகொரியாவில் ஒரு குடும்ப ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இவருக்கு முன்பு கிம்ஜொங்-2வின் தந்தை கிம் 2 சங் அதிபராக இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து கிம் ஜொங்-2 அதிபரானார். 17 ஆண்டு காலம் அதிபராக பதவி வகித்துள்ளார். இவரும் தனது தந்தை வழியில் ராணுவ ஆட்சியை நடத்தினார். இவர் மிகவும் சக்திவாய்ந்தவராக திகழ்ந்தார்.
 
யாருக்கும் புரியாத புதிராக இருந்தார். அணு ஆயுத கொள்கையின் மூலம் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சீனா, ரஷியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.
 
தனது உடல்நலம் மிகவும் குன்றியதை தொடர்ந்து கடந்த ஆண்டு (2010) தனது 3-வது மகன் கிம்ஜொங் அங் என்பவரை அடுத்த அதிபராக அறிவித்தார். எனவே, இவர் வடகொரியாவின் அடுத்த அதிபராகிறார். கிம்ஜொங் 
 
................................................................................................

முல்லைப்பெரியாறு பிரச்சனையில் ஆரம்பத்தில் இருந்த அதே போரட்ட குணத்தோடு போரடிவரும் தமிழக தலைவர்களில் மிக முக்கியமானவர் வைகோ.. நிறையப் போராட்டங்களை நடத்தி மக்கள் செல்வாக்கை பெற முயற்சிக்கிறார் அவரைப்பொறுத்தவரை மக்கள் அவர் மேல் நன்மதிப்பு வைத்துள்ளனர் அவ்வளவுதான்... ஓட்டு வாங்குவது கடினமே...
................................................................................................

3000 ஆயிரம் லாரிகள் நிறுத்தம் கேரளாவிற்கு பால், காய்கறி, முட்டை போன்ற அத்தியாவிசயமான பொருட்கள் எதுவும் செல்லவில்லை. உப்பும் கூட செல்லவில்லை இது தமிழர்கள் வேண்டும் என்று செய்யவில்லை தமிழர்களின் லாரியை அடித்து நொறுக்கியதற்காக லாரி உரிமையாளர்கள் எடுத்த முடிவு.. 

மலையாளிகள் அரசிலாக்குகின்றனர் இப்பிரச்சனையை இதனால் பாதிக்கப்படுவது மலையாளிகள் தான்...
என்னைக்கேட்டால் இங்கிருந்து செல்லும் மின்சாரத்தையும் தடுக்க வேண்டும் அப்ப தான் அடங்குவானுக...
..................................................................................................

ஜப்பானியர்கள் தங்கள் கழிப்பறையை மிகவும் புனிதமானதாக கருதுகின்றனர். ஏனெனில், அது கடவுள் வந்து செல்லும் வழியாக நம்புகின்றனர். அதற்காக மிக அதிநவீன ஆடம்பர கழிப்பறைகளை அவர்கள் விரும்புகின்றனர்.
 
மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஜப்பான் நிறுவனங்கள் மிக அழகிய வேலைப்பாடுகள் அடங்கிய அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த கழிப்பறைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
 
அந்த வகையில், தற்போது அங்கு 72 ஆயிரம் பளிங்கு கற்களால் ஆன கழிப்பறையை தயாரித்துள்ளனர். அவை ஒன்றின் விலை ரூ.50 லட்சம். இந்த கழிப்பறையை ஜப்பான் நிறுவனத்துடன் சேர்ந்து ஆஸ்திரியாவின் நகை நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
 
அதுக்காக கழிப்பறைக்கு 50 இலட்சம் என்பதொல்லாம் ரொம்ப ஓவர்...
..................................................................................................

லோக்பால் மசோதாவில் மீண்டும் ஏமாற்றம் ஹசாரே குழுவினர்ருக்கு மட்டுமல்ல அனைவருக்குந்தான்...
 
..................................................................................................
 
 
பெண்களுக்கு 30 வயதிலும், ஆண்களுக்கு 40 வயதிலும் கவர்ச்சி அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்கள் எந்த வயதில் கவர்ச்சி ஆக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
இதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனிதனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில், பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் செக்சுடன் கூடிய கவர்ச்சியாக தெரிகின்றனர்.
 
ஏனெனில், 40 வயதில் தான் ஆண்கள் அழகான கவர்ச்சியான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது. அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில்தான் கவர்ச்சிகரமான இருக்கின்றனர். அந்த வயதில்தான் கவர்ச்சியான உள்ளாடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர்.
 
ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும், விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
..................................................................................................
 
 தற்போது அரசுப் பேருந்துகளில் விளம்பரங்கள் தாங்கி வருகின்றனது இதனால் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது என்பது நல்ல விசயந்தான் ஆனால் பேருந்து செல்லும் ஊர்ப்பெயர் இருக்கும் இடத்தில் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் வயதானவர்களும், தட்டித்தடுமாறி படிப்பவர்களும் ரொம்பச் சிறமப்படுகின்றனர்... இது களைய வேண்டிய ஒன்று...


தகவல்


காதலர்களோ, தம்பதியரோ முதலில் அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் அற்புத பாஷை முத்தம். முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது.

முத்தத்தில் வித்தியாசம்

ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.

இப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுவதால் பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன. உதாரணமாக உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்’. இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.

முத்தத்தில் வேறுபாடு

பாலுறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது. பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னிப் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம்.

முத்தத்திற்கு மரியாதை

ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகப்பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.

அவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை. அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.

என்ன உங்கள் துணைக்கு ஆழமான முத்தம் கொடுக்க தயாராகிவிட்டீர்களா?
 
அறிமுக பதிவர்
 
இந்த வார அறிமுக பதிவர் நாய் நக்ஸ் நக்கீரன்இவரின் நகைச்சுவையான பேச்சைப்போலவே இவரின் பதிவும் இருக்கிறது.
 
தத்துவம்
 
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே..

பலர் வெற்றியைக் கனவு காண்கிறார்கள்.. ஆனால் சிலர் அதற்காக உழைக்கக் கிளம்பி விடுகிறார்கள்...

உழைப்பவனுக்கு எந்த வேலையும் இழிவல்ல; சோம்பல்தான் இழிவு...


Tuesday, December 20, 2011

ஈரோடு சங்கமம் புகைப்படங்கள்...

ஈரோடு சங்கமத்தில் இந்த முறை நான் அதிகமாக புகைப்படங்கள் எடுக்க வில்லை நிறைய நண்பர்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களை பதிவாக்கிவிட்டனர் இந்த பதிவில் நண்பர்களுடன் நான் இருக்கும் படங்களை பதிவாக்குகின்றேன்... நிறைய நண்பர்களுடன் புகைப்படம் எடுக்க இயலவில்லை எடுத்தவர்களுடன் இருக்கும் படங்கள் கீழே....

எங்கள் குழுமத்தைச்சார்ந்த நண்பர்கள் ஜாபர், நான், லவ்டேல்மேடி, கோமாளி செல்வா, அகல்விளக்கு ராஜா, வால்பையன் மற்றும் பவளசங்கரி...
எங்கள் தலைவர் தாமோதர் சந்துரு, நான், கதிர், ஜெயராஜ் பாண்டியன், கவேரி கணேஷ்
உண்மைத்தமிழன், சிபிசெந்தில்குமாருடன்...
அதிஷாவுடன்...
பிலாசபி பிரபாகரன், வீடு திரும்பல் மோகன்குமார், தோத்தவண்டா ஆரூர் மூனா செந்தில், கே.ஆர்.பி செந்திலுடன்...
அரவிந்தன், காவேரி கணேஷ், ஜெயராஜ் பாண்டியனுடன்...
வீடு சுரேஷ், பேரண்ட்ஸ் சம்பத், தமிழ்வாசி பிரகாஷ், தமிழ் பேராசிரியர் குணசீலனுடன்..
குறும்படஇயக்குநர் செல்வக்குமார் அவர் நண்பர்,
மூளிகை வளம் குப்புசாமி, மரவளம் வின்சென்ட்

மயில் ராவணன், கோபியுடன்..
தேனம்மைலஷ்மன் உடன்...
மணிஜி மற்றும் உண்மைத்தமிழனுடன்...
அதிமுகவும், திமுகவும்...
இணையதள சூப்பர் ஸ்டார் என் இனிய பங்காளி ஜாக்கியுடன்...


( அனைவரும் எதிர்பார்த்த சாப்பாடு ஸ்பெஷல் பதிவு அடுத்து... சாப்பிடும் புகைப்படங்களுடன்..)

பதிவர்களின் பாசத்தில் நா தழு தழுத்த ஜாக்கி சேகர்...

 பலத்த கரவோசத்திற்கிடையே மேடைக்கு வரும் ஜாக்கி

ஈரோடு சங்கமத்தில் சமூகவலைத்தளங்களில் இயங்குபவர்களில் 15 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை பாராட்டி பரிசளித்து கவுரவித்தோம். அவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் ஒரு தனி பதிவாக இடலாம். அந்த வகையில் அந்த 15 பேரில் நமக்கு மிக அறிந்த இணையதளத்தில் பலரின் பாராட்டைப்பெற்ற தனது சொந்த எழுத்தின் மூலம் அதிக நண்பர்களைப் பெற்ற ஜாக்கி சேகரும் ஒருவர்.


 இவரைப்பற்றி வாசிக்கும் போது அரங்கில் இருந்த திரையில்

ஈரோட்டு பாசக்கார பயலுகளுக்காக வருடம் வருடம் நிச்சயம் வருவேன் என்று கடந்த வருடம் கூறியது போல் இந்த வருடம் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்ததில் மிக்க மகிழ்ச்சி.

விழாவில் அனைவரையும் பாராட்டு பெறுபவர்களைப் பற்றி வாசித்தனர் . அந்த வகையில் ஜாக்கிசேகரை பற்றி வாசித்தவை...

எழுத வந்ததை ஒரு விபத்து எனச் சொல்லும் இவர் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். வடமலை – ஜெயலட்சுமி தம்பதிக்கு முதல் மகனாய்  பிறந்தவர். பொதுஜனத் தொடர்பு இதழியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றியவர். ஆனாலும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது ஒரு நிழற்பட நிபுணராகவும் ஒளிப்பதிவாளராகவும் தான். 

இதுவரை நான்கு குறும்படங்களை இயக்கியுள்ளவர். துளிர் என்ற குறும்படத்திற்கு மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்றவர். சென்னையில் நடைபெற்ற இண்டர்நேசனல் குறும்படப் போட்டியில் இவரது மூன்று குறும்படங்கள் தேர்வு செய்து திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொலைக்காட்சியில் பேட்டி, விஜய் தொலைக்காட்சி நீயா நானாவில் பங்கேற்பு என ஊடகங்களில் தமது கருத்துகளை முன்வைத்திருப்பவர். காதல் மணம் புரிந்து சமீபத்தில் யாழினி எனும் அழகிய குழந்தைக்குத் தந்தையானவர்.
ஒரு வலைப்பதிவராக ஜனரஞ்சகமாக எழுதும் வல்லமை கொண்டவர். உலகம் முழுதும் பல நாடுகளில் தனக்கென தமிழ் வாசிப்பாளர்களைக் கொண்டவர். குறிப்பாக வலையுலகத்தில் இவரின் உலகத்திரைப்படங்கள் பார்வை, சமூக அக்கறை கொண்ட இடுகைகள் அதிகம் வாசிக்கப்படுபவை. 

ஒரு சாமானியன் போக்கில் தமிழ் வலைப்பதிவு உலகத்தில் மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஜாக்கிசேகர் (எ) தனசேகரன் அவர்கள். 
 


ஜாக்கி ஈரோடு ஸ்டாலின் குணசேகரனிடம் விருது பெற்ற போது அருகில் எங்கள்
ஈரோடு குழும தலைவர் தாமோதர் சந்துரு...

ஜாக்கி சேகர் மேடை ஏறும் போது பலத்த கைதட்டலுக்கிடையே மேடை ஏறி பரிசுகளையும், பாராட்டையும் ஆனந்தமாக பெற்றார். 

பாராட்டு பெற்றவர்களை வரிசையாக பேச அழைக்கும் போது ஒவ்வொருவரும் ஆனந்தத்திலும், மகிழ்ச்சியிலும் பேசினர். ஜாக்கி எழுந்து பேசும் போது பலத்த கைதட்டலுக்கு இடையே நிறைய பேசுவார் என்று கூர்ந்து கவனிக்கும் போது மனிதர் பதிவில் அவருக்கு பிடிச்ச நேர்மையான விசயங்களை தைரியமாக கூறுவார் அது போல் நிறைய பேசுவார் என்று எண்ணினால் மனிதர் பதிவர்களின் பாசத்தில் ஆணந்தக்கண்ணீரில் நா தழு தழுக்க பாராட்டி கவுரவித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார்.
 
வெளியே வந்து என்னிடம் பேசும் போது பாசக்கார பயலுகளால் என்னால் பேசவே முடியலடா..மிக்க மகிழ்ச்சியாக இருக்கறேன் இது பதிவருக்கான ஒரு அங்கீகாரமாக நினைக்கிறேன் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை இந்த பதிவுலகிற்கு என்றார்.
 
 மேடையில் உண்மைத்தமிழனுடன்...

பதிவில் நிறைய தைரியமான விசயங்களை அழகாக அவருக்கே உகுந்த சொற்களால் நிறைய எழுதி பல நண்பர்களை பெற்ற ஜாக்கிக்கு வாழ்த்துக்கள்... 
 
அவரைப்போல் நிறைய  எழுதி எந்த சந்தர்ப்பத்திலும் எழுதுவதை விடாமல் சமூக அக்கறை கொண்ட பல பதிவுகளை நீங்களும் எழுதுங்கள் அடுத்த விழாவில் பாராட்டப்படும் நபர் நீங்களாகவும் இருக்கலாம்...
 
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
 
ஜாக்கி நீங்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி... மீண்டும் சந்திப்போம் பங்காளி...

ஜெய் ஜாக்கி...!!!
ஜாக்கி சேகருடன் நானும் பேஸ்புக் நண்பர் அன்பழகனும்
 
(ஈரோடு சங்கமத்தில் இன்னும் நிறைய சுவாரஸ்யங்களுடன் கூடிய சம்பவங்கள் அடுத்த பதிவில் உங்களுக்காக....)

Sunday, December 18, 2011

ஈரோட்டில் வரலாறு காணாத பதிவர்கள் சந்திப்பு...

 நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்

ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் நண்பர்களிடன் கூட்டத்தை எங்களின் அன்பினால் எதிர்பார்க்காத அளவு அழைத்து வருகிறோம். இந்த வருடம் வலைப்பதிவர்கள் மட்டுமல்லாமல் முகநூல், டிவிட்டர் நண்பர்களையும் அழைத்திருந்தோம் வருகை தரும் நண்பர்களை மின்அஞ்சல் செய்யுமாறு கூறி இருந்தோம்.




எங்களுக்கு வந்த மின்அஞ்சலைப் பார்த்ததும் எப்படியும் 175 பேரைத்தாண்டும் என்று நினைத்திருந்தோம் ஆனால் 230 நண்பர்கள் கலந்து கொண்டு தங்களின் அன்பினால் திக்குமுக்காடச் செய்தனர் வந்திருந்த நண்பர்கள்.


தமிழ் பதிவுலகில் இது ஒரு வரலாறு காணத கூட்டம்... இது வரை எந்த ஒரு பதிவர் சந்திப்பிலும் இவ்வளவு நண்பர்கள் கூடியதில்லை முதன் முதலாக ஈரோட்டில் சங்கமத்தில் உங்களை எல்லாம் அழைத்து சந்திக்க வைத்ததில் எங்கள் மஞ்சள் மண்ணிற்கும் எங்களுக்கும் பெருமையே..
 
வெளியூரில் இருந்து தங்களது கடுமையான வேலைப்பளுவிற்கும், பல நிகழ்ச்சிகளுக்கும் நடுவே தங்கள் சிரமத்தை பார்க்காமல் ஈரோடு வந்து சங்கமத்தில் கலந்து கொண்ட தங்களுக்கு எப்படிச் சொல்வது நன்றியை... 

பல வேலைகள் இருக்கிறது எங்களால் வர இயலவில்லை என்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த வெளியூர், மற்றும் வெளிநாடுகளில் வசித்து வரும் நண்பர்களுக்கு எப்படிச் சொல்வது நன்றியை...

நன்றி என்ற ஒரு வார்த்தையில் அடக்கவில்லை தங்களின் மேலான அன்பை...

இச்சங்கமத்தை சிறப்பித்த பதிவர்களுக்கும், முகநூல் மற்றும் டிவிட்டர் நண்பர்களுக்கு எங்களது கோடான கோடி நன்றி....
நிகழ்வுகளையும், சுவாரஸ்யங்கள் இனி வரும் பதிவுகளில்... 

தற்போது கலந்து கொண்டபதிவர்கள் பெயர்கள் என் ஞாபகத்தில் உள்ள வரை பதிகிறேன் யாராவது பெயர் விட்டு இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க சேர்த்து கொள்கிறேன்... நான் இரவில் இருந்து வரிசையாக சந்தித்தவர்களை அசைபோடுகிறேன்..


மணிஜி, ஜாக்கிசேகர், மயில் ராவணன், அகநாழிகை வாசுதேவன், அபி அப்பா, பிரபாகரன், விந்தை மனிதன் ராஜாராம், வீடு திரும்பல் மோகன் குமார், கேஆர்பி செந்தில் மற்றும் அவர் தம்பி, மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன், ஆரூர் முனா, நக்கீரன் ( இவரிடம் தொலைபேசியில் மாப்பு விக்கி, நாஞ்சில் மனோ, மான்புமிகு மாணவன் ஆகியோர் பேசிக்கொண்டு சந்தோசத்தையும், தங்கள் வர இயலாமையையும் கூறினர்) , முகநூல் நண்பர்கள் அன்பழகன், காவேரி கணேஷ், குறும்பட இயக்குநர் செல்வக்குமார் இவர்கள் நண்பர்கள் இரண்டு பேர் (சாரிங்க பேர் மறந்துட்டேன்) , கோபி இவர்களிடன் பேசிய பின் மதுரையில் இருந்து தருமி ஐயா, கார்த்திகை பாண்டியன், ஸ்ரீ, மதுரை சரவணன் இவர்களுடன் இன்னும் ஒருவர், தமிழ்வாசி பிரகாஷ் இரவு சந்தித்தவர்கள்.. காலையில்  அண்ணன் உண்மை தமிழன் , மதுரை சீனா ஐயா தம்பதியனர், கோவை கந்தசாமி, மரவளத் வின்சென்ட், முளிகை வளம் ஐயா, தேனம்மை லட்சுமணன், ஜீவ்ஸ், அரவிந்தன், லக்கி யுவகிருஷ்ணா, அதிஷா, குருவை மாதேஸ்வரன், சுரேஷ், குணசீலன், திருப்பூர் வெய்யிலான் மற்றும் சேர்தளத்தைச் சேர்ந்த நண்பர்கள், உழவன், சேலம் தேவா, கோகுலத்தில் சூர்யன் வெங்கட், கோவை மோனி, ராஜசேகர், கோமாளி செல்வா,  தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்குமார், மதுரை கோவிந்தராஜ், ஆகாய மனிதன், சம்பத்குமார், கவிஞர் தமிழரசி, மயில் விஜி, தென்காசி தமிழ்பைங்கிளி, சாதாரணமானவள், எழுத்தாளர் பாலபாரதி, பேஸ்புக் கௌரி ராமமூர்த்தி, எவரெஸ்ட் துரை, ஈரோடு JCI R Erode Metro  சேர்ந்த ஈரோடு வெங்கடேசன். கரூர் அன்பழகன், வானம்பாடிகள் பாலா ஐயா, ஷர்புதீன்,  இன்னும் நிறைய நண்பர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

இவர்களுடன் ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத்தைச் சார்ந்த தாமோதர் சந்துரு அண்ணா, கதிர், ஆருரன், ஜாபர், பாலசி, லவ்டேல் மேடி, செல்வம் அண்ணா, பாஸ் கார்த்தி, வால்பையன் அருண்ராஜ், வேலு, அகள்விளக்கு ராஜா, பவளசங்கரி, டாக்டர் ரோகிணி மற்றும் சங்கவி என்னும் நான்...

(நண்பர்களே யாராவது பெயரை விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் பதிந்து விடுகிறேன்... (இச்சந்திப்பு பதிவுலகில் ஒரு வரலாறு)

கடந்த 10 நாட்களாக நாங்க சங்கமத்துக்கு வாங்க வாங்க என்று அழைப்பிட்டு இருந்தோம்....

இனி ஈரோடு சங்கமத்தைப்பற்றி இணையமே எழுதித்தள்ளும் அத்தனை சுவாரஸ்யங்கள்...
 10 நாட்களுக்கு பதிவெழுத பதிவை தேத்தும் பதிவர்கள்


இதுவரை பதிவிட்டவர்கள் லிங்க்...

http://adrasaka.blogspot.com/2011/12/1_18.html
http://gunathamizh.blogspot.com/2011/12/blog-post_18.html
http://sadharanamanaval.blogspot.com/2011/12/2011.html
http://gokulathilsuriyan.blogspot.com/2011/12/blog-post_19.html
http://www.tamilvaasi.com/2011/12/blog-post_19.html
http://veeedu.blogspot.com/2011/12/blog-post_18.html