Wednesday, December 28, 2011

அஞ்சறைப்பெட்டி + ஈரோடு சங்கமம் கிசு கிசு

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
இந்த வருடத்தின் கடைசி அஞ்சறைப்பெட்டி ஒரு வருடமாக தொடர்ந்து வியாழக்கிழமைகளில் அஞ்சறைப்பெட்டி எழுதுவது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. ஆனால் முதலில் எழுதிய சுவாரஸ்யம் வர வர குறைந்து விட்டது என்பது எனக்கே நன்றாக தெரிகிறது. வரும் வருடம் நிறைய சுவாரஸ்யங்களுடன் நிச்சயம் எழுதுவேன் உங்கள் ஆதரவோடு...

கடந்த வருடத்தை அசைபோட்டால் எனக்கு 2011 ல் இழப்புகள் தான் அதிகம்.. இழப்புகளை தன்னம்பிக்கையோடு எதிர்த்து 2012யை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் எனக்கும் உங்களுக்கும்....

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்... 
 ...............................................................................................
கடந்த வாரம் 4 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு சென்றேன்.. ஊர் சுத்தலாம் என்று கோபிவரை சென்றேன் அந்தியூரில் இருந்து கோபி செல்லும் பாதை எங்கும் பச்சை பசேல் என இருபக்கங்களிலும் மனதை கொள்ளை அடித்தது.. 

வளைந்து நெழிந்து செல்லும் சாலை இருபுறமும் நெற்பயிர்கள் சாலையோரம் பனை மரங்கள் மற்றும் சாலையில் இருபுறமும் வாய்க்கால் என்று இதமான குளிரிலும் வெய்யிலிலும் சென்ற அந்த 40 நிமிட பயணம் இன்னும் மனதில் அசைபோடுகிறது...
...............................................................................................

திங்கட்கிழமை அப்பாவிற்கு கண் செக்கப்பிற்காக ஈரோடு அரசன் கண் மருத்துவமனை சென்றேன் கண்ணில் புரை உள்ளது அதை உடனடியாக அகற்றவேண்டும் என்றனர் இதற்கு முறையே 7000, 9000, 12000க்கு லென்ஸ் உள்ளது நீங்கள் இதற்கு முன் செய்த கண்ணிற்கு 9000 ரூபாய்க்கு லென்ஸ் வைத்துள்ளீர்கள் இதற்கும் அது தான் வைக்க வேண்டும் என்கின்றனர் அவருக்கு 65 வயதுக்கு மேல் ஆகிவிட்டது அவர் இலவச சிகிச்சை செய்து கொள்கின்றேன் என்று சொல்ல இலவச சிகிச்சை என்றால் அறுப்பார்கள் தையல் போடுவார்கள் அதெல்லாம் உங்களுக்கு சரிபடாது.

இலவச சிகிச்சையால் நிறைய பின்விளைவுகள் இருக்கும் என அங்கு பணிபுரியும் செவிலியர்கள் அப்பாவிடம் சொல்லி உள்ளனர். மீண்டும் நான் சென்று 9000 லென்ஸ் வைத்துக்கொள்கிறேன்.. ஏன் இலவச சிகிச்சை வேண்டாம் என்றேன் எனக்கும் அதே பதில் ஆனால் அந்த மருத்துவமனையில் தினமும் 50 பேருக்கு மேல் இலவச சிகிச்சை மேற்கொள்கின்றனர்... அப்ப அவர்களின் நிலை... பணத்திற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள் பாருங்க.... இதில் முக்கியமானது எனது தந்தைக்கு 9000 கொடுத்து கண்புரை நீக்கி 5 மாதம் தான் ஆகிரது ஆனால் அந்த கண் இப்போது ரொம்ப மங்களாகிவிட்டது... கண் மருத்துவமனைக்கு பார்த்து செல்லுங்கள்... காரணம் சொல்லியே பணம் பிடுங்கிடுவானுக...

...............................................................................................

அம்மா சசியை கழட்டி விட்டதில் மக்களிடம் மீண்டும் அம்மா நம்பிக்கைகுரியவர் ஆகிவிட்டார்... மக்களுக்கு அம்மா ஒரு நல்ல ஆட்சியை நிச்சயம் தருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றால் அது மிகையாகது... நிச்சயம் நடக்கும்... நல்லதே நினைப்போம்...

................................................................................................

தமிழ்நாட்டை தானே புயல் தாக்க அதிக வாய்ப்புள்ளதாகவும், அப்போது 105 கிலோமீட்டர் வேகத்தில் காற்றும் வீசம் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம் சென்னை மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்களாம்.. புயல் தாக்குதவற்கு முன் அனைவருக்கும் அறிவுருத்தப்பட்டு விட்டது இப்போது தெரியும் மாநகராட்சியில் எப்படி இந்த புயலை எதிர்கொண்டு மக்கள் தேவையை சரிசொய்யப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்...
................................................................................................

சமீபத்தில் பழவேற்காட்டில் நடந்த துயர சம்பவம் மிகவும் வருத்தத்திற்கு உரியது. இனி குடும்பமாக சுற்றலா சென்றால் பார்த்துதான் செல்ல வேண்டும் போல... அதுவும் இல்லாமல் அனுமதி இல்லா இடங்களில் இது போல் படகு சவாரி செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் அப்படி சென்றால் பாதுகாப்பு கவசம் அனிந்து செல்லுங்கள்.. போனால் கிடைக்காது உயிர்..
 
தகவல்
மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என இந்திய ஆராய்ச்சியாளர் சந்தீப் பிரபு கூறுயுள்ளார்.
மீன்களில் உள்ள ஒமேகா-3 என்னும் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் டெல்டா-12-ப்ரோடாக்லாண்டின் ஜே3 அல்லது டி12-பிஜிஜே3 என்ற சேர்மம் ரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியில் ரத்த புற்றுநோய் உள்ள எலிகளுக்கு 7 நாட்கள் இந்த சேர்மம் கொடுக்கப்பட்டது. பின்னர் பரிசோதித்தபோது அந்த எலிகள் அனைத்தும் குண்மடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர் மூலிகை முற்றம் என்ற பெயரில் தனது மூலிகை பயணங்களையும் அங்கு அவர் கற்ற மூலிகைகளை பதிவாக்கி வருகிறார் சுமையா பானு அவர்கள்.. 

தினமும் ஒரு மூளிகையைப்பற்றி நிறைய எழுதி வருகிறார் மிகவும் பயனுள்ள பதிவு... 

அனைவரும் நிச்சயம் அறிய வேண்டிய பதிவு...

http://www.mooligaimutram.blogspot.com/

தத்துவம்
நீ எப்படி இருந்துள்ளாய் என்பதைப் பற்றி எண்ணாதே, நீ எப்படி இருக்கு விரும்புகிறாய் என்பதையே எண்ணு, நீ நிச்சயமாக முன்னேறுவாய்.

ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.
கிசு கிசு
முதலில் என் அஞ்சறைப்பெட்டியில் இரு வாரம் கிசு கிசு எழுதினேன் நண்பர்களின் பலத்த எதிர்ப்பால் எடுத்து விட்டேன் இந்த வாரம் நண்பர் ஒருவர் நிச்சயம் இந்த கிசு கிசுவை எழுதியாக வேண்டும் என்றார்..
இது நடந்தது ஈரோடு சங்கமத்தில் என்பால் இந்த வாரம் மட்டும் அஞ்சறைப்பெட்டியில் கிசு கிசு..

ஈரோட்டில் நடந்த சங்கமத்தில் ஒரு பிரபல பதிவரிடம் நம் நண்பர் அறிமகமாகி இருக்கிறார் அவர் அப்படியா சரிங்க என்று சொல்லிட்டு அடுத்து இருக்கும் பெண் பதிவரை நோக்கி நடந்திருக்கிறார் அவர் எதுவும் பேசாததால் திரும்பி வந்து ஒரு சிலரோடு படம் எடுத்து விட்டு வேறு ஒரு பதிவரிடம் ஒரு பெண் பதிவர் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார் அவரிடம் சென்று இவங்க யார் என்று விசாரிக்கையில் அவர் சொல்லி இருக்கிறார் ஓ இவுங்க தானா என்று சொல்லி விட்டு அந்த பெண் பதிவரிடம் விடாமல் பேசி பேசி மொக்கை போட்டு இருக்கிறார். அவுங்க விட்டா போதும் புறப்பட்டுவிட்டார்கள் இதை அனைத்தையும் கவனித்த நம் நண்பர் மீண்டும் அறிமுகமாகி இருக்கிறார் அந்த பதிவர் அப்படியா என்று கேட்டு விட்டு மீண்டும் அங்கும் இங்கும் தேடி இருக்கிறார்.. நான் வழிய வழிய போய் பேசுகிறேன் இந்த ஆள் என்னடா என்றால் பெண் பதிவரிடமும் பிரபல பதிவரிடமும் தான் பேசுகிறார்... 
நீங்க அஞ்சறைப்பெட்டியில் இதைப்போடுங்க உங்களுக்கு பின்னூட்டத்தில் அவர் யார்ன்னு நான் சொல்கிறேன் என்றார்... எதிர்பார்ப்போம் அந்த பதிவர் யார் என்று...

இதை என்னிடம் சொல்லிய பதிவர் அயல் ஊர்க்காரார் அதனால் எனக்கு ஒரு டவுட் ஒரு வேளை அந்த பதிவர் ஈரோட்டுக்காரரா இருப்பாரோ... டவுட்டு... டவுட்டு...


25 comments:

  1. wish you a happy newyear 2012

    geo.fernando

    ReplyDelete
  2. wish you a happynewyear 2012.

    geo.fernando

    ReplyDelete
  3. இந்த வார அஞ்சறை பெட்டியில் கிசுகிசு தான் சுவாரஸ்யம்..புதிருக்கு விடைக்கு காத்திருப்போம்.. ம்ம்ம் நானும் தனியா தான் நின்னுக்கிட்டுஇருந்தேன்...ஹ்ஹஹஹஹ்ஹா

    ReplyDelete
  4. அய்யய்யோ கண் சிகிச்சையில் இப்படியும் அநியாயம் பண்ணுரான்களா...???

    ReplyDelete
  5. அம்மா சசியை கழட்டி விட்டது நாடகமா இருக்குமோன்னு டவுட்டா இருக்குய்யா...!!!

    ReplyDelete
  6. ஈரோடு சங்கமத்தை மிகவும் சிறப்பாக நடத்தியவர்களில் நீங்களும் ஒருவர்.
    பாராட்டுகள்.

    அந்தியூர், கோபி பக்கங்கள் எப்பவும் இயற்கையழகுடன் மிகவும் ரம்மியமாக இருக்கும்.நல்ல ஊர் உங்க ஊர்.

    நான் பார்த்தவரையில் அரவிந்த் கண் மருத்துவமனையில் பொதுவாக அதிகம் பணமும் வாங்க மாட்டார்கள் நல்ல கவனிப்பும் உண்டு, ஏழைகளுக்கும் இலவச சிகிச்சை செய்கின்றனர், விசாரிக்கவும்.

    மூலிகையை ஒரு இடத்தில் தவறாக மூளிகை என எழுதியிருக்கிறீர்கள் கவனிக்கவும்.

    அத்தனை வலைப்பதிவர்களில் ஒரு சிலர் ஜொள்ளுவிடுபவர்களாகவும் இருப்பார்கள். இதெல்லாம் சகஜம் தான். என்ன செய்ய.


    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2012ம் அதற்குப் பின்னும் வரும் வருடங்கள் இனிய மகிழ்ச்சியான வருடங்களாக வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. முதல் தடவையா படிக்கறேன்.. அஞ்சரைபெட்டியில் அறுசுவையும் இருக்கிறது.

    கண் செக் அப் செய்வதற்க்கு பெரிய hospital போவதை விட தனியா சின்ன கிளினிக் வச்சுருக்கற பக்கம் போறது பெட்டெர்..

    என் உறவுக்கார பையன் கண் செக் அப் பண்ண வாசன் போயிருக்காங்க, செக் பண்ணி கண்ணாடி போடறதுக்கே சில ஆயிரங்கள் செலவு. செலவானாலும் திரும்ப 1 மாசத்துல மறுபடியும் கண் ப்ரோப்லேம். இப்போ வேற hospital போய் சரி பண்ணுனாங்க...

    ReplyDelete
  8. கிசு கிசு பயங்கரமா இருக்கே!! யாருங்க அவரு?

    நாங்கள்ளாம் புதுசு.. பதிவுலகம்ன்னாலே பயம் காற்றிங்களே?

    ReplyDelete
  9. யாருப்பா அந்த பதிவர்?

    அப்பா கண் விசயமா அரவிந்த் கண் மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாமே.

    ReplyDelete
  10. புது வருடம் புதியதோர் மாற்றத்தை தரட்டும்..

    ReplyDelete
  11. சங்கமத்தில் கலந்து கொள்ளாதது வருத்தத்தைத் தந்தது. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அப்புறம் யார் அந்த பதிவர்.....

    ReplyDelete
  12. நண்பருக்கு வணக்கம்...
    தங்களுது பதிவுகளை இன்றுதான் தோழி இந்துமதி மூலமாக படிக்க நேர்ந்தது. தங்களது எழுத்து நடை மிகவும் நன்றாக உள்ளது. ஆனாலும் அதிக எழுத்துப் பிழைகளும் உள்ளன. திருத்திக் கொள்ளவும். அறிமுகப் பதிவராய் என்னை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றியுடன்...

    சுமையா பானு...

    ReplyDelete
  13. புத்தாண்டு வாழ்த்துக்கள்.... அறுசுவை பெட்டி அருமை...

    கிசுகிசு யாரு??????

    ReplyDelete
  14. He...he....athu nanthan enru
    nenga sollamatteengale....
    Ippadikku kuzhappi viduvor
    sangam....

    ReplyDelete
  15. புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  16. அஞ்சறைப்பெட்டி எப்பவும்போல வாசனை.தகவல் உபயோகம் !

    ReplyDelete
  17. சார், இன்னும் டீ வரலை

    ReplyDelete
  18. வாசனையா இருக்கு அஞ்சறைப்பெட்டி..

    ReplyDelete
  19. ஸார் இன்னும் காபி வரலையே..?

    ReplyDelete
  20. நிறைய ஸ்பாம் மெசேஜ் வருது என்னான்னு பாருங்க!

    ReplyDelete
  21. நிறைய ஸ்பாம் மெசேஜ் வருது என்னான்னு பாருங்க!

    ReplyDelete
  22. [url=http://buyaccutaneorderpillsonline.com/#20832]order accutane[/url] - order accutane , http://buyaccutaneorderpillsonline.com/#13429 generic accutane

    ReplyDelete
  23. [url=http://buyaccutaneorderpillsonline.com/#10528]generic accutane[/url] - accutane online without prescription , http://buyaccutaneorderpillsonline.com/#13711 accutane online

    ReplyDelete