Tuesday, December 20, 2011

பதிவர்களின் பாசத்தில் நா தழு தழுத்த ஜாக்கி சேகர்...

 பலத்த கரவோசத்திற்கிடையே மேடைக்கு வரும் ஜாக்கி

ஈரோடு சங்கமத்தில் சமூகவலைத்தளங்களில் இயங்குபவர்களில் 15 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை பாராட்டி பரிசளித்து கவுரவித்தோம். அவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் ஒரு தனி பதிவாக இடலாம். அந்த வகையில் அந்த 15 பேரில் நமக்கு மிக அறிந்த இணையதளத்தில் பலரின் பாராட்டைப்பெற்ற தனது சொந்த எழுத்தின் மூலம் அதிக நண்பர்களைப் பெற்ற ஜாக்கி சேகரும் ஒருவர்.


 இவரைப்பற்றி வாசிக்கும் போது அரங்கில் இருந்த திரையில்

ஈரோட்டு பாசக்கார பயலுகளுக்காக வருடம் வருடம் நிச்சயம் வருவேன் என்று கடந்த வருடம் கூறியது போல் இந்த வருடம் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்ததில் மிக்க மகிழ்ச்சி.

விழாவில் அனைவரையும் பாராட்டு பெறுபவர்களைப் பற்றி வாசித்தனர் . அந்த வகையில் ஜாக்கிசேகரை பற்றி வாசித்தவை...

எழுத வந்ததை ஒரு விபத்து எனச் சொல்லும் இவர் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். வடமலை – ஜெயலட்சுமி தம்பதிக்கு முதல் மகனாய்  பிறந்தவர். பொதுஜனத் தொடர்பு இதழியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றியவர். ஆனாலும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது ஒரு நிழற்பட நிபுணராகவும் ஒளிப்பதிவாளராகவும் தான். 

இதுவரை நான்கு குறும்படங்களை இயக்கியுள்ளவர். துளிர் என்ற குறும்படத்திற்கு மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்றவர். சென்னையில் நடைபெற்ற இண்டர்நேசனல் குறும்படப் போட்டியில் இவரது மூன்று குறும்படங்கள் தேர்வு செய்து திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொலைக்காட்சியில் பேட்டி, விஜய் தொலைக்காட்சி நீயா நானாவில் பங்கேற்பு என ஊடகங்களில் தமது கருத்துகளை முன்வைத்திருப்பவர். காதல் மணம் புரிந்து சமீபத்தில் யாழினி எனும் அழகிய குழந்தைக்குத் தந்தையானவர்.
ஒரு வலைப்பதிவராக ஜனரஞ்சகமாக எழுதும் வல்லமை கொண்டவர். உலகம் முழுதும் பல நாடுகளில் தனக்கென தமிழ் வாசிப்பாளர்களைக் கொண்டவர். குறிப்பாக வலையுலகத்தில் இவரின் உலகத்திரைப்படங்கள் பார்வை, சமூக அக்கறை கொண்ட இடுகைகள் அதிகம் வாசிக்கப்படுபவை. 

ஒரு சாமானியன் போக்கில் தமிழ் வலைப்பதிவு உலகத்தில் மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஜாக்கிசேகர் (எ) தனசேகரன் அவர்கள். 
 


ஜாக்கி ஈரோடு ஸ்டாலின் குணசேகரனிடம் விருது பெற்ற போது அருகில் எங்கள்
ஈரோடு குழும தலைவர் தாமோதர் சந்துரு...

ஜாக்கி சேகர் மேடை ஏறும் போது பலத்த கைதட்டலுக்கிடையே மேடை ஏறி பரிசுகளையும், பாராட்டையும் ஆனந்தமாக பெற்றார். 

பாராட்டு பெற்றவர்களை வரிசையாக பேச அழைக்கும் போது ஒவ்வொருவரும் ஆனந்தத்திலும், மகிழ்ச்சியிலும் பேசினர். ஜாக்கி எழுந்து பேசும் போது பலத்த கைதட்டலுக்கு இடையே நிறைய பேசுவார் என்று கூர்ந்து கவனிக்கும் போது மனிதர் பதிவில் அவருக்கு பிடிச்ச நேர்மையான விசயங்களை தைரியமாக கூறுவார் அது போல் நிறைய பேசுவார் என்று எண்ணினால் மனிதர் பதிவர்களின் பாசத்தில் ஆணந்தக்கண்ணீரில் நா தழு தழுக்க பாராட்டி கவுரவித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார்.
 
வெளியே வந்து என்னிடம் பேசும் போது பாசக்கார பயலுகளால் என்னால் பேசவே முடியலடா..மிக்க மகிழ்ச்சியாக இருக்கறேன் இது பதிவருக்கான ஒரு அங்கீகாரமாக நினைக்கிறேன் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை இந்த பதிவுலகிற்கு என்றார்.
 
 மேடையில் உண்மைத்தமிழனுடன்...

பதிவில் நிறைய தைரியமான விசயங்களை அழகாக அவருக்கே உகுந்த சொற்களால் நிறைய எழுதி பல நண்பர்களை பெற்ற ஜாக்கிக்கு வாழ்த்துக்கள்... 
 
அவரைப்போல் நிறைய  எழுதி எந்த சந்தர்ப்பத்திலும் எழுதுவதை விடாமல் சமூக அக்கறை கொண்ட பல பதிவுகளை நீங்களும் எழுதுங்கள் அடுத்த விழாவில் பாராட்டப்படும் நபர் நீங்களாகவும் இருக்கலாம்...
 
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
 
ஜாக்கி நீங்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி... மீண்டும் சந்திப்போம் பங்காளி...

ஜெய் ஜாக்கி...!!!
ஜாக்கி சேகருடன் நானும் பேஸ்புக் நண்பர் அன்பழகனும்
 
(ஈரோடு சங்கமத்தில் இன்னும் நிறைய சுவாரஸ்யங்களுடன் கூடிய சம்பவங்கள் அடுத்த பதிவில் உங்களுக்காக....)

18 comments:

  1. ஜாக்கியுடன் எனது முதல் சந்திப்பு இது. அதிகம் பேசவில்லை என்றாலும் நலம் விசாரித்தோம். இச்சந்திப்புக்கு வித்திட்ட ஈரோடு குழுமத்திற்கு நன்றி....

    ReplyDelete
  2. ஜாக்கி ஈஸ் ஒர்த் ஃபார் இட்..தகுதியானவர்களை தேர்வு செய்த ஈரோடு நண்பர்களுக்கு ..அன்பும், வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  3. நெகிழ்ச்சியான தருணங்கள்..


    ஜாக்கியைப்பற்றி தற்போதுதான் நிறைய தகவல்கள் தெரிந்துக்கொண்டேன்...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. அடடா ஒரு பதிவருக்கு ஒரு பதிவு என்றால் கூட அடுத்த சங்கமம் வரை பதிவு போட போட்டோக்கள் உட்பட அனைத்தும் ரெடி போல இருக்கே.

    ReplyDelete
  5. சேகர் என நட்புடன் நான் அழைக்கும் ஜாக்கி சேகர் ஒரு நல்ல ‘மனிதன்’. அவர் பாராட்டுப் பெற்றதில் மிகமிகமிக மகிழ்கிறேன் நான்.

    ReplyDelete
  6. ஜெய் ஜாக்கி...!!!

    ReplyDelete
  7. என்னாலதான் வரமுடியலை :(

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணே...!!!

    ReplyDelete
  9. பகிர்தல் சிறப்பு.... நெகிழ்ச்சியான நிகழ்வு.

    ReplyDelete
  10. பங்காளிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சங்கவிக்கு அன்பான..வேண்டுகோள்!கலந்து கொண்ட அனைத்து பதிவர்களின் பெயர் மற்றும் வலைதளமுகவரி,ஸ்கேன் செய்து பதிவில் இடுங்கள்,இது அனைத்து பதிவர்களின் வேண்டுகோள் நன்றி!

    ReplyDelete
  12. August 30, 2008 அவர் எழுதிய "DUEL" ஆங்கில பட விமர்சனம் படித்த பின் தொடர்ந்து அவர் எழுத்துக்களுக்கு நான் ரசிகன்

    ஜாக்கிஜான், ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மட்டும் தான் ஆங்கில படங்கள்னு பார்த்து கொண்டு இருந்த எனக்கு, பிற மொழி படங்களை அறிமுக படுத்தி வைத்த திரு.ஜாக்கிசேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த‌ நன்றி...

    ReplyDelete
  13. சிறு மாற்றங்களுடன் மீண்டும் பாருங்கள்.

    கண்டுபிடியுங்கள் பிரபல பதிவர்களை

    http://www.thothavanda.blogspot.com/2011/12/blog-post_21.html

    ReplyDelete
  14. சங்கவிக்கு அன்பான..வேண்டுகோள்!கலந்து கொண்ட அனைத்து பதிவர்களின் பெயர் மற்றும் வலைதளமுகவரி,ஸ்கேன் செய்து பதிவில் இடுங்கள்,இது அனைத்து பதிவர்களின் வேண்டுகோள் நன்றி!
    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V

    ReplyDelete
  15. சங்கவிக்கு அன்பான..வேண்டுகோள்!கலந்து கொண்ட அனைத்து பதிவர்களின் பெயர் மற்றும் வலைதளமுகவரி,ஸ்கேன் செய்து பதிவில் இடுங்கள்,இது அனைத்து பதிவர்களின் வேண்டுகோள் நன்றி! மேடையில் கௌரவிக்கப்பட்டவர்களிலும் ஒரு சிலர் பரவலாக அறியப்படவில்லை. அவர்கள் குறித்தும் விவரம் கொடுக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  16. பதிவுக்கு நன்றி பங்காளி...

    ReplyDelete