Wednesday, December 14, 2011

அஞ்சறைப்பெட்டி 15.12.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

மழையினால் பாதிக்கப்பட்ட சாலையை புதிதாக போடுவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் பாதிக்கப்பட்ட இடங்களில் எப்படி மட்டும் இஸ்த்திரி போடுகின்றனர்...


மழையால் குண்டும் குழியுமாக உள்ள சாலை இனி மேடு பள்ளமாக இருக்கும்...


ஆக நமக்கு சேதாரம் ஒன்னுதான்....
...............................................................................................
தினமும் செல்லும் சாலையில் ஒரு ரேஷன் கடை உள்ளது சமீபத்தில் அலுவலகம் முடிந்து இரவு 9 மணிக்கு மேல் கடந்த 3 நாட்களாக செல்கிறேன் தினமும் அங்கு கூட்டம் இருந்தது அடுத்த நாள் காலை பார்த்தால் பெரிய கியூ நிற்கிறது. நேற்று இரவு இறங்கி பார்த்தேன் அப்பதான் தெரிந்தது தினமும் இரவில் இருந்து மண்ணெண்ணை வாங்குவதற்கு வரிசையா இரவில் இருந்து பகல் வரை கேன் வைத்து காவல் இருக்கின்றனர்..


நாடு இந்த அளவுக்கு முன்னேற்றம் ஆகி என்ன செய்வது ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு அந்த காலத்தில் இருந்து இந்தகாலம் வரை ஒரு நிலையில் தான் இருக்கிறோம்...
...............................................................................................
மீண்டும் பெட்ரோல் விலை ஏற்றம் இந்த பெட்ரோல் மூலப்பொருளான கட்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டால் உடனே பெட்ரோல் விலையை ஏற்றுகின்றனர். கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டால் மட்டும் இல்லை விலையை குறைக்க இயலாது நாங்க நஷ்டத்தில் இருக்கிறோம் என்கிறார்கள் ஆனால் இவர்களின் ஆண்டறிக்கையில் கோடிக்கணக்கில் இலாபம் காட்டப்படுகிறது...

என்ன கொடுமை சார் இது...
...............................................................................................
கேரளாக்காரனுகளுக்கு கோர்ட் ஆப்பு மேல ஆப்படிச்சாலும் அடங்க மாட்டேன் என்கிறார்கள்.. கேவலம் பெண்கள் மேல் தாக்குகிறார்கள் ஈவு இரக்கமற்ற மிருகங்கள்...

இங்க இருந்து கேரளாவுக்கு போற அத்தனை வழியையும் ஒரு வாரத்துக்கு அடைச்சிடனும், முக்கியமா ரயில் போக்குவரத்தை ரத்து செய்யனும் அப்பதான் கஞ்சியானுக கஞ்சிக்கு வழியில்லாம வழிக்கு வருவானுக...
................................................................................................
மாலை மலரில் ஒரு வாசகர் போட்ட கமெண்ட்...

நான் தமிழனா??? ஈழப் படுகொலை...!அழைத்தோம் போராட்டத்திற்கு எந்த தமிழனும் வரவில்லை...! ஏன் என்று கேட்டதற்கு அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்றான்...!

பால் விலையேற்றம்....! அழைத்தோம் போராட்டத்திற்கு எந்த தமிழனும் வரவில்லை...! ஏன் என்று கேட்டதற்கு அது தடுக்க முடியாதது என்றான்...!

எரிபொருள் விலையேற்றம் ....!அழைத்தோம் போராட்டத்திற்கு எந்த தமிழனும் வரவில்லை...! ஏன் என்று கேட்டதற்கு அது மத்திய அரசு ஆணை நம்மால் ஒன்னும் செய்ய முடியாது என்றான்...!

மீனவர் தாக்குதல்...!அழைத்தோம் போராட்டத்திற்கு எந்த தமிழனும் வரவில்லை...! ஏன் என்று கேட்டதற்கு மீனவன் ஏன் எல்லைதாண்டி போகிறான் என்றான்...!

முல்லை பெரியாறு பிரச்சனை...!அழைத்தோம் போராட்டத்திற்கு எந்த தமிழனும் வரவில்லை...! ஏன் என்று கேட்டதற்கு எனக்கு முல்லை பெரியாறு நீர் வருவதில்லை என்றான்...!

இதோ இன்று...! சபரி மலையில் ...தமிழர்கள் தாக்கப்பட்டனர்..!அழைப்போம் போராட்டத்திற்கு எந்த தமிழனும் வரமாட்டான் ...!

ஏன் என்று கேட்டால் ...யார் அவர்களை கேரள கோயிலுக்கு போகச்சொன்னது என்பான் ...!

ஆனால்.......! இந்திய -மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் .. எவனும் அழைக்க வில்லை...! வேலை வெட்டியை விட்டுவிட்டு வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்குகிறான்..! ஏன் என்று கேட்டால் ....தேசபற்று என்கிறான்...! அடேய் ..! தமிழா வாழ்க உனது தேசப் பற்று..!
................................................................................................
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொத்தவலசா கிராமத்தில் உள்ள அரசினர் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவன் சூரப்பா நாயுடு. இவனுக்கு கடந்த சில மாதங் களாக தீராத வயிற்று வலி இருந்தது. இதனால் அவன் விசாகப் பட்டினத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.
அவனை பரிசோதித்த டாக்டர்கள் குடல்வால் காரணமாக வயிறு வலி ஏற்படுவதாக கண்டறிந்தனர். இதையடுத்து அவனுக்கு டாக்டர்கள் கருணாகர்ராவ், சரத்குமார் குடல்வால் ஆபரேசன் செய்தனர். அப் போது அவனுக்கு வலது புறத்தில் இதயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதே போல் அவனுக்கு கல்லீரல், சிறுநீர்ப்பை ஆகியவையும் இடம் மாறி இருந்தன.
இதுபற்றி டாக்டர் கருணாகர்ராவ் கூறும்போது-
வழக்கமாக எல்லோருக்கும் இதயம் இடதுபுறத்தில்தான் இருக்கும். ஆனால் சூரப்பா நாயுடுவுக்கு வலது புறத்தில் இதயம் இருப்பது ஆச் சரியமாக உள்ளது. லட்சத்தில் ஒருவருக்கு இந்த மாதிரி இதயம் இடம் மாறி இருக்கும். இதயம், கல்லீரல், சிறு நீர்ப்பை போன்றவை இடம் மாறி இருந்தாலும் அவனது உடல்நிலை நன்றாகவே உள்ளது என்றார்.
..................................................................................................
லோக்பால் மசோதாவிற்காக மனிதன் உண்ணாவிரம் இருந்து பார்க்கிறார் ஒன்னும் அசரமாட்டேன் என்கிறார்கள் மத்தியில் ஆளும் கட்சியினர்...

லோக்பால் வருமா? வராதா? இனி நாடெங்கும் பட்டிமன்றம் நடத்த வேண்டியது தான்...

..................................................................................................
ஈரோட்டில் பதிவர் சங்கமம் 18.12.2011


பதிவர் சந்திப்பு வருகிற 18.12.2011 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.

இடம் : ரோட்டரி சி.டி ஹால், பழையபாளையம், ஈரோடு.


பதிவர்கள், முகநூல் நண்பர்கள், டிவிட்டர்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்....

 
தகவல்

மார்பக புற்றுநோய்க்கு இன்னும் 3 ஆண்டுகளில் புதிய மருந்து கண்டு பிடிக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். உலகில் லட்சக்கணக்கான பெண்கள் மார்பக புற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் மருந்து தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் குழு இந்த மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது அந்த பணி முடிந்து விட்டது.   அதை எலிகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதன் மூலம் அந்த ஊசி மருந்து மார்பக புற்றுநோயை மட்டுமின்றி, கணைய புற்று நோயையும் குணப்படுத்தக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அந்த மருந்தை மார்பக புற்றுநோயால் பாதித்த பெண்ணின் உடலில் செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனைக்கூட அளவில் உள்ளது. இதன் மூலம் 90 சதவீத மார்பக புற்றுநோய் குணமாகுகிறது. எனவே, முற்றிலும் நோய் குணமாகும் வகையில் மருந்து தயாரிக்கப்படுகிறது. அவை வருகிற 2013-ம் ஆண்டு இறுதியில் அதாவது 3 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தத்துவம்

மனித சமுதாயம் முன்னேற வேண்டுமானால் பழைமை என்பவைகளைக் கைவிட்டு புதுமைகளைக் கைக்கொள்ள வேண்டும்.

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.

4 comments:

  1. nalla padhivu sir...... thamizhan endru sollavey romba kashtama iruku sir.....

    ReplyDelete
  2. அஞ்சறைப் பெட்டி அருமை. நீங்கள் தந்துள்ள ஒரு பின்னூட்டம் மனதைப் பாதித்தது. ஈரோடில் நிகழும் பதிவர் சந்திப்பு இனிமையாய் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. எல்லா செய்திகளும் நல்லா இருக்கு.....

    ReplyDelete
  4. பெட்டி முழுசும் அருமையா இருக்கு...வாழ்த்துக்கள்!

    ReplyDelete