Thursday, January 19, 2012

அஞ்சறைப்பெட்டி 18-01-2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக முடிந்து 4 நாட்கள் தொடர் விடுமுறைக்குப்பின் நேற்று தான் அலுவலகம் வந்தேன்.. இந்த வருடம் பொங்கல் கொண்டாட்டம் என் மகனுடன் கொண்டாடியதில் இதுவரை இல்லாத ஒரு புது சந்தோசம் இம்முறை.. காணும் பொங்கல் அன்று ஊரில் நடைபெற்ற சிறுசிறு விளையாட்டுடன் இந்த பொங்கல் நிறைவு பெற்றது.

இப்பொங்கல் திருவிழாவின் நான்கு நாட்களும் நான் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி கூட பார்க்கவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி..

பொங்கலன்று காலை நண்பர்களுக்கு
அனைவருக்கும் தொலைபேசியில் அழைத்து  வாழ்த்து சொன்னதில் நண்பர்களுக்கு  மிக்க மகிழ்ச்சி அவர்களிடம் பேசியதில் எனக்கும் மகிழ்ச்சி.

நிறைய நண்பர்கள் அலைபேசி என் இல்லாததால் அழைக்க இயலவில்லை அவர்கள் மன்னிக்க..
...............................................................................................

ஐஐடி மாணவர்களின் விந்தணுக்கள் தேவை என்று சென்னையில் உள்ள தம்பதி விளம்பரம் தந்துள்ளனர்.

 இந்த விளம்பரம் இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐஐடியில் படிக்கும் புத்திசாலியான, ஆரோக்கியமான, உயரமான, அழகான மாணவர்களின் விந்தணுக்கள் தேவை.

 அதற்கு சன்மானமாக 20,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்ணும், இ-மெயில்
 முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, ஐஐஎம் போன்றவைகளில் படிக்கும் மாணவர்களின் விந்தணுக்களை பெற்று புத்திசாலித்தனமாக குழந்தைகளை

 உருவாக்குவதே இதன் நோக்கம் என்று அந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.

இந்த விளம்பரம் ஐஐடி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாணவர்கள்,  ஐஐடியில் படிப்பவர்கள் மட்டும் புத்திசாலிகள் அல்ல. இது முட்டாள்தனமான விளம்பரம் என்று கூறியுள்ளனர்.

இதற்கு பெயர் தான் காலக்கொடுமை என்பது.
...............................................................................................

இன்று 7வது நாளாக டேங்கர் லாரி வேலை நிறுத்தம் இதனால் கேஸ் சிலிண்டர் இல்லாமல் பாடு படும் இலட்சசம் பேர்களில் நானும் ஒருவன். இந்த கேஸ் சிலிண்டர் வேலை நிறுத்தத்தால் சிலிண்டர் விலை மீண்டும் உயர நிறைய வாய்ப்பிருக்கிறது.. இதை எல்லாம் மத்திய அரசாங்கம் கண்டு கொள்வது போல் தெரியவில்லை. பிரச்சனையை ஆரம்பத்திலேயே முடிக்காமல் கொஞ்ச நாட்கள் விட்டால் பொதுமக்கள் மிக அவதிக்குள்ளவார்கள் என்பதை முதலில் ஆட்சியாளர்கள் அறிய வேண்டும்..
................................................................................................
கடலூர் மாவட்டம் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது இன்னும் பல இடங்களில் மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாவிசய பொருளுக்கு மிக கஷ்டப்பட வேண்டி இருக்கிறது என நண்பர்கள் சொன்னார்கள். சீக்கிரம் அவர்கள் மீண்டு வர நாம் வேண்டுவோம்..
................................................................................................

கடந்த சிலநாட்களாக குளிர் மிக அதிகமாக உள்ளது காலை 9 மணிக்கு கூட குளிர் போனபாடில்லை. குளிரால் பூக்களும், செடி, கொடிகளும் கருகிவிடுகின்றன. இதனால் பூக்கள் மற்றும் கீரைகளின் விலை மிக அதிகமாக ஏறிக்கொண்டு இருக்கிறது. இயற்கையை யாரும் ஒன்றும் செய்ய இயலாது.. குளிரை அனுபவித்துதான் ஆகவேண்டும்.
...............................................................................................

இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு இருக்கும் சுதந்திரம் பறிபோக வாய்ப்பிருக்கிறது ஆம் இணையத்தில் உள்ள சமூகவலைத்தளங்களில் நாம் அனைவரையும் போட்டுத்தாக்கிக்கொண்டு இருந்தோம் இவர்கள் நம் தாக்குதலை என்ன செய்யலாம் என்று யோசித்து சமூகவலைத்தளங்களை முடக்குவதற்கு ஏற்பாடு ஆகிக்கொண்டு இருக்கிறது. முடக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
..................................................................................................

திருவேற்காட்டை சேர்ந்த சாந்தவேல் (வயது 39) என்ற அய்யப்ப பக்தர் சபரிமலை சென்றபோது அவர் மீது டீக்கடைக்காரர் ஒருவர் வெந்நீரை ஊற்றினார். இதில் உடல் வெந்த நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சாந்தவேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். சாந்தவேலுவின் மர்ம சாவு தொடர்பாக கேரள போலீசாரை தொடர்பு கொண்டும் சென்னை போலீசார் பேசியுள்ளனர். அப்போது அவர்கள் சாந்தவேல் கொலை செய்யப்படவில்லை என்றும் எதிர்பாராத விதமாக வெந்நீர் கொட்டியதால் அவர் இறந்துவிட்டார் என்றும் கூறியுள்ளனர்.

எதிர்பாராதவிதமாக வென்னீர் கொட்டப்பட்டதா இல்லை கோபத்தில் கொட்டப்பட்டதா என்று விவாதிப்பதிற்கு பதில் உயிர் இழந்தவன் குடும்பத்துக்கு யார் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்...
..................................................................................................

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள வரலாற்று புகழ் பெற்ற நகரமான சார்லொட்டஸ்வில்லே என்ற நகரத்தின் மேயராக இந்தியாவைச் சேர்ந்த சத்யேந்திர சிங் ஹூஜா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
 
கடந்த 1960 -ம் ஆண்டு இவர் அமெரிக்காவுக்கு குடிவந்தார்.தலைநகர் வாஷிங்டனில் இருந்து 193 கி.மீ. தென்மேற்கில் இந்த நகரம் உள்ளது. இங்கு மொத்தம் 43000 பேர் வசிக்கின்றனர்.
 
உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த சிங் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியாற்றுகிறார். அமெரிக்காவின் அதிபர்களாக இருந்த தாமஸ் ஜெபர்சன், ஜேம்ஸ் மேடிசன் மற்றும் ஜேம்ஸ் மன்றோ ஆகிய மூவரும், இந்நகரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாண்டு கால மேயர் பதவியில், நகர மேம்பாட்டிற்காக உழைக்கப் போவதாக, சிங் உறுதியளித்துள்ளார்.

தகவல்

 
அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆய்வு நடத்த கெப்லர் டெலஸ் கோப்பை நிறுவியுள்ளது. அதன் மூலம் விண்வெளியில் புதிதாக ஒரு கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
பூமியை போன்றுள்ள அந்த கிரகத்துக்கு கெப்லர் 16-பி என பெயரிட்டுள்ளனர். இது மனித உயிர்கள் வாழும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 
தற்போது டெக்சாஸ் பல்கலைக்கழக விண்வெளி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பூமியை போன்ற கெப்லர் 16-பி கிரகத்தில் 2 சூரியன்கள் உள்ளன. அவை அந்த கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கும் தண்ணீரை மிக வெப்பமாகவோ அல்லது மிகுந்த குளிராகவோ இருக்க செய்கிறது என கண்டுபிடித்துள்ளனர்.

அறிமுகபதிவர்

இந்த வார அறிமுக பதிவு சக்தி கல்விமையம் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கான பயனுள்ள பதிவு.. இவர் ஒரு பிரபல பதிவர் தற்போது கல்விக்காக ஒரு இணையத்தை தொடங்கி மாணவர்களுக்கு இலவச சேவையை துவக்கி உள்ளர்ர் இவரின் இம் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

http://www.sakthistudycentre.com/
 
தத்துவம்
 
சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

9 comments:

  1. அஞ்சறைபேட்டியில் பல்சுவை தகவல்கள் ..

    அந்த பிரபல பதிவர் பழைய பிளாக்கில் எழுதுவதில்லை....

    ReplyDelete
  2. //இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு இருக்கும் சுதந்திரம் பறிபோக வாய்ப்பிருக்கிறது //Appadiyaa ?:( :(

    ReplyDelete
  3. //எதிர்பாராதவிதமாக வென்னீர் கொட்டப்பட்டதா இல்லை கோபத்தில் கொட்டப்பட்டதா என்று விவாதிப்பதிற்கு பதில் உயிர் இழந்தவன் குடும்பத்துக்கு யார் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்...//


    correct

    ReplyDelete
  4. இன்று என்னோட வலைப்பக்கத்தில்

    'ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரிக்க என்னென்ன செய்யலாம்.. (காமெடி கலாட்டா)“

    http://chellakirukkalgal.blogspot.com/2012/01/blog-post_19.html

    ReplyDelete
  5. Nice Blog
    by http://www.facebook.com/jaykumaar

    ReplyDelete
  6. பெட்டில மசாலா தூக்கலாவே இருந்துச்சு...

    ReplyDelete
  7. நல்ல செய்தித் தொகுப்பு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. [url=http://buycialispremiumpharmacy.com/#vdeoy]buy cheap cialis[/url] - generic cialis , http://buycialispremiumpharmacy.com/#zigwd buy cialis

    ReplyDelete
  9. [url=http://buyviagrapremiumpharmacy.com/#etzno]buy cheap viagra[/url] - buy cheap viagra , http://buyviagrapremiumpharmacy.com/#kfzqn buy viagra

    ReplyDelete