Monday, January 9, 2012

பொண்ணு பார்க்க போனேன்...


ரகுவிற்கு 35 வயதைக் கடந்து விட்டது ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை, குடும்பம் குடும்பம் என்று இருந்தவன் தற்போது தான் பெண் தேடிக்கொண்டு இருக்கிறான்.

அன்று காலை அவனை சந்தித்த அவன் சித்தப்பாவும் புரோக்கருமான பொன்னுசாமி செட்டிபட்டியில் பொண்ணு இருக்குது, அதுக்கு 32 வயசாகுது எனக்கு இப்பதான் இந்த ஜாதகம் கிடைத்தது, எங்க சின்ன மாமா கொடுத்தார் ரொம்ப நாள் ஆச்சாம் அவர் கைக்கு கிடைச்சாம்

ரகு உன் ஜாதகத்துடன் பொருந்தி போகின்றது இந்த பொருத்தம் பெண்ணின் பெயர் அருக்காணி அப்பா பெயர் ராக்கியாம் எப்படா பார்க்கபோகலாம், என்ன சித்தப்பு இப்படி சொல்றீங்க நாளைக்கு காலைல நானும் மாமாவும் முதலில் சென்று பொண்ணப்பார்க்கிறோம் அடுத்து கல்யாணந்தான் சரியா சித்தப்பு..

ரகு ரொம்ப சந்தோசமாக இருந்தான் எப்படியும் இந்த வரன் அமைந்து விட வேண்டும் தற்போது நாம் பார்க்கும் இந்த டாஸ்மார்க் வேலைக்கு பெண் கிடைப்பதே பெரிய விசயம் இந்த பெண் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று வேண்டாத சாமி எல்லாம் வேண்டினான்.

அடுத்த நாள் மாமவுடன் பெண் பார்க்க செட்டிபட்டிக்கு சென்ற போது உறவினர் ஒருவர் தென்பட அவரை அழைத்து எங்க, இந்த பக்கம்? என்று அவரை விசாரிக்கும் போது ராக்கி வீட்டில் இன்று சீர் (பெண் வயதுக்கு வந்த சடங்கு) அதுக்குத்தான் வந்தேன்.

நீங்க இந்த பக்கம் என்றதும் இல்ல நாங்களும் ராக்கி வீட்டுக்குத்தான் வந்தோம் என்று மாமா சமாளித்தார். பின் டேய் பெண் அப்பா பெயரை நல்லாப்பாரு? என்றதும் ராக்கின்னு போட்டு இருக்கு மாமா என்றான் ரகு..!

ரகுவிற்கு குழப்பம் என்னடா இது ரொம்ப நாளைக்கு அப்புறம் பெண் பார்க்க வந்தா அந்த வீட்டில் சீர் என்கிறார்கள் ஒரு வேளை நான் பார்க்க வந்த பெண்ணிற்கு சீர் இருக்குமோ? என்று குழம்பினான், பெண்ணின் பெயரைப் பார்த்தான் அருக்காணி என்று இருந்தது. மாமாவை அழைத்து மாமா பெண் பெயர் அருக்காணி அப்பா பெயர் ராக்கி முதலில் விசாரிக்கலாம் மாமா அதற்கு பின் அவர்கள் வீட்டுக்கு போகலாம் என்றான்!!

நெருங்கிய உறவினரான கருப்புசாமி பேருந்தில் இருந்து இறங்க வர மாமா கருப்புசாமியை அழைத்து எங்க இந்த பக்கம் சீருக்கா என்றார், ஆமாம் நம்ம ராக்கி வீட்டில் சீருக்கு வந்தேன். ஒ! அப்படியா சரி ராக்கி வீட்டில் யாருக்கு சீர்? ராக்கி பெண் அருக்காணிக்கா? என்ற கேட்க கருப்புசாமி சிரித்துக்கொண்டே விளையாடதைய்யா...

ராக்கி பேத்தி ஸ்வர்ணாவிற்கு என்றதும் ரகுவிற்கு கொஞ்சம் சந்தோசம் அப்ப அருக்காணி என்பது ராக்கியோட பொண்ணுதானே என்று ரகு கேட்டதும் ஆமாங்க தம்பி என அவர் சொன்னதும் ரகுவிற்கு மனதில் நிம்மதி.

உடனே மாமா நாங்க ராக்கி வீட்டுக்குத்தான் பொண்ணு பார்க்க வந்திருக்றோம் என்றதும் கருப்புசாமி அப்படியா ராக்கிக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் பையனுக்கு ஒரு பொண்ணு இருக்கு உடனே ரகு அருக்காணிங்கிறது யாருங்க??? அதுவா தம்பி இன்னிக்கு சீர் நடக்குதே அந்த பொண்ணோட அம்மா...

என்னது நான் பார்க்க வந்த பொண்ணுனோட பெண்ணிற்கு சீர்ரா.....??????

( சீர் என்றால் பெண் வயதுக்கு வந்தவுடன் நடக்கு சடங்கிற்கு எங்கள் வட்டார வழக்கில் சீர் என்று பெயர்)

13 comments:

  1. ஆஹா இங்கேயும் ரகுவிற்கு கல்யாணம் அமையவில்லையா...

    ReplyDelete
  2. அருமையான சிறுகதை, நல்லா இருக்கு சதீஷ்..!!!

    ReplyDelete
  3. சிறுகதை ஓகே சதீஷ். ஆனால் நல்லா இருக்கா இல்லையான்னு சொல்ற அளவுக்கு நான் இலக்கியவாதி இல்லையே.

    ReplyDelete
  4. ஆனால் சிறுகதை எழுதிய உங்கள் மனதைரியத்தை பாராட்டி ஆலயமணி படத்துல சரோஜா தே..சே பழக்க தோஷம். எல்லா ஒட்டும் போட்டாச்சி சதீஷ்.

    ReplyDelete
  5. அறுபதாம் கல்யாணத்திற்கு வராமல்

    கொஞ்சம் சீக்கிரம் பொண்ணு சீருக்கே வந்தாரே... வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. இன்னும் கொஞ்சம் நாள் கழித்து வந்திருந்தால் ஸ்வர்ணாவையே பொண்ணு பார்த்திருக்கலாம் சதீஷ் ........

    ReplyDelete
  7. வணக்கம் தோழர்..சிறுகதை வாசித்தேன் அருமை..நாம் சித்தாரில் சந்தித்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன்..என்னை உங்களுக்கு தெரிகிறதா இல்லையா எனத் தெரியவில்லை..

    நேரமிருந்தால் என் தளம் வந்து செல்லுங்கள்..

    கொக்கரக்கோ

    ReplyDelete
  8. தங்கள் தளத்தில் இணைந்து கொள்கிறேன்..

    ReplyDelete
  9. /// சங்கவி said...

    இலக்கிய புத்தகங்களை அலச இருக்கும் இலக்கியவாதி ஆனா மூனா வாழ்க வாழ்க... ///

    வாழ்த்திய சிறுகதை சிற்பி, குறுநாவல் குன்று, எழுத்து சிங்கம் அய்யா சங்கவி சதீஷ் அவர்களுக்கு அவையடக்கத்துடன் நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  10. ரகு பாவமில்லயா?சாமிகூட ஏமாத்திடிச்சே?.

    ReplyDelete
  11. அது தெரட்டி இல்லே?

    ReplyDelete
  12. அருமையான கதை...

    ReplyDelete
  13. ரகுவுக்கு செட்டிபட்டியில வச்சிட்டாங்க ஆப்பு....கதை நல்லாயிருக்கு..ரகுவுக்கு சீக்கிரம் பொண்ணு கிடைக்கனும்...

    ReplyDelete