Thursday, August 4, 2011

அஞ்சறைப்பெட்டி 04.08.2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
சமீபத்தில் இன்ஜினியரிங்க கவுன்சிலிங்கிற்கு சென்று இருந்த மாணவி ஒருவர் 194 கட் ஆப் வாங்கி உள்ளார் இவர் கோவையில் உள்ள கல்லூரிகளை தேர்ந்தெடுத்துள்ளார் இவரின் கட் ஆப் மார்க்கிற்கு பிரபல மற்றும் கேம்பஸ் இன்டர்வியூ அதிகம் நடைபெறும் கல்லூரி சிஐடி எடுங்க என்று அவந்த பெண்ணின் ஆசிரியர் போனில் கூறி உள்ளார் இவர் சிஐடி என நினைத்து சிஐஇடி என்ற தனியார் கல்லூரியை தேர்ந்தெடுத்து விட்டார் அரசு கோட்டாதான் என்றாலும் தனியார் கல்லூரி துவங்குபவர்கள் முன்னாள் உள்ள பிரபல கல்லூரியின் பெயரை ஒட்டி வருமாறு புது கல்லூரி நிறைய துவங்கி உள்ளனர் நிறைய மாணவர்கள் அது என்று நினைத்து இங்கு சேர்ந்துவிடுகின்றனர் என்று என் ஆசிரியர் நண்பர் புலம்பினார்.

அவர் புலம்பியதும் சரியே இன்று கவுன்சிலிங் செல்லும் மாணவர்களில் பல கிராமப்புற மாணவர்கள் சரியான வழிகாட்டிகள் இல்லாததால் பிரபல கல்லூரிக்கு வாய்ப்பிருந்தும் புதிய கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். இவர்களுக்கு நாம் செய்யும் உதவி நமக்கு தெரிந்தவர்கள் கவுன்சிலிங் சென்றால் நம்மால் ஆன அறிவுரைகளை சொல்லி அவர்கள் முன்னேற நாமும் ஒரு ஏணிப்படியாக இருக்கலாம்...

...............................................................................................

மீண்டும் ஆரம்பித்துவிட்டது சிங்கமுத்து வடிவேல் பிரச்சனை. கடந்த ஆட்சியில் வடிவேலு முதல்வருக்கு நெருக்கமாக இருந்ததால் சிங்கமுத்து மேல் நடவக்கை மேற்கொண்டனர் இப்போது நிலைமை தலைகீழ்...


...............................................................................................

ஊரில் நிறைய முன்னாள் அமைச்சர்கள் கைதாகிகொண்டு இருக்கும் போது போன ஆட்சியிலேயே கைதான அமைச்சர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது இரவோடு இரவாக கைது செய்துவிட்டார்கள்...

........................................................................................................

இலங்கை தமிழருக்கு மாத ஓய்வூதியமாக ரூபாய் 1000 அறிவித்த முதல்வருக்கு மிக்க நன்றி...

இந்த அருமையான திட்டத்தை அம்மா செயல்படுத்தி விட்டார் என் ஐயாவிற்கு பொறுக்கவில்லை உடனே ஒரு அறிக்கை இலங்கை தமிழர்களுக்கு என் ஆட்சியில் அதிகம் செய்துள்ளேன் என ஒரு பட்டியல் விட்டுள்ளார்..

ஒரு இலட்சம் தமிழர்கள் சாகும் போது அறிக்கை... இப்பவும் அறிக்கை...

........................................................................................................


சமையல் கியாஸ் சிலிண்டரை மானிய விலையில் வழங்குவதால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த இழப்பை தவிர்க்க, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு மானியம் இல்லாமல் சமையல் கியாஸ் வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கிறதாம்...

விலை உயராத பொருள் எதாவது இருக்குதான்னு தெரியல...

........................................................................................................

தகவல்


“மேக்அப்” மூலம் தங்களை அழகுபடுத்தி கொள்வதில் இங்கிலாந்து பெண்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.12 நாடுகளில் தயாராகும் 54 விதமான “மேக்அப்” பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதற்காகவே பெருமளவில் பணத்தை செலவிடுகின்றனர்.

சமீபத்தில் இங்கிலாந்தில் அதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2200 பெண்களிடம் “சர்வே” நடத்தப்பட்டது. அதில், அவர்கள் தங்கள் வாழ்நாளில் “மேக்அப்” செய்ய மட்டும் ரூ.70 லட்சம் செலவிடுவது தெரியவந்தது. ஆண்டு ஒன்றுக்கு மட்டும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், வாரத்துக்கு ரூ.3 ஆயிரமும் செலவு செய்கின்றனர். “மேக்அப்” சாதனங்களுக்கு மட்டும் ரூ.40 ஆயிரம் செலவிடுகின்றனர்.

தங்களின் கணவர்கள் மற்றும் காதலர்களை கவரவே இதுபோன்ற அழகு கலையில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அழகாக இல்லாவிட்டால் தங்களை அவர்கள் கைவிட்டு விடுவார்கள் என்றும் அச்சப் படுகின்றனர்.அதற்காகவே எப்போதும் தங்கள் கைப்பையில் “மேக்அப்” பொருட்களையும், சாதனங்களையும் எடுத்து செல்கின்றனர். இதனால் அங்கு பெண்களின் அழகுகலை பொருட்களின் வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கிறது.
அறிமுக பதிவர்
இந்த வார அறிமுகப்பதிவர் கார்வேந்தன். இவர் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருகிறார். இதில் விவசாயம் சார்ந்த பல அறிய வேண்டிய தகவலை அளித்துள்ளார்.

http://marutam.blogspot.com/2010/12/blog-post.html

தத்துவம்


நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

”காதலிக்கலாமா என்று சிந்திப்பவர்கள்,
சன்யாசம் வாங்கிக் கொள்ளலாமா என்று யோசிப்பவர்கள்,
தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஆராய்பவர்கள் எல்லாரும் ஒரே ரகம். நினைப்போடு சரி”

16 comments:

  1. அருமையான கூட்டு..

    ReplyDelete
  2. உப்பு ஒரப்பு எல்லாம் சரியா இருக்கு

    ReplyDelete
  3. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    வடிவேலுவின் நானும் ரவுடிதான்
    ஜெயிலுக்குப் போறேன் - வசனம் பிரபலமயிற்றே......

    ReplyDelete
  4. வடிவேலுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. அவர்தான் ஓபாமாவாச்சே.

    ReplyDelete
  5. வியாழக்கிழமைன்னா விகடன், அஞ்சறைப்பெட்டி

    ReplyDelete
  6. சுப்பர் கூட்டு :)
    //நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்//.


    தத்துவம் அருமை

    ReplyDelete
  7. அஞ்சறைப் பெட்டியில் நான் அதிகம் விரும்பிப் படிப்பது தத்துவப் பகுதி தான்.
    வழக்கம்போல நன்றாக வந்துள்ளது.

    ReplyDelete
  8. //நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்//

    ரொம்ப சரி.. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.. கிடைக்காதது கிடைக்கவே செய்யாது..

    ReplyDelete
  9. ரசிக்கும்படி இருந்தது..
    தமிழ்மணம் 7

    ReplyDelete
  10. 'மூப்பென்றும்' என மாற்றவும்

    ReplyDelete
  11. ரொம்ப நாளைக்கும் அப்புறம் வந்திருக்கேன்

    ReplyDelete
  12. மாப்ள பெட்டி ரொம்ப கனமாத்தான்யா இருக்கு...நெறைய விஷயங்களால் நன்றி !

    ReplyDelete
  13. ஓட்டு போடலாமா என்று யோசிப்பவர்கள், அந்த லிஸ்ட்ல இவங்களையும் சேத்துக்குங்க சாமி

    ReplyDelete
  14. நிறைய விஷயங்களை தாங்கி நிற்கிறது அஞ்சறைப் பெட்டி... அருமை.
    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அஞ்சறைப் பெட்டியில் அலசல்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete