Wednesday, August 17, 2011

அஞ்சறைப்பெட்டி 18-08-2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........


இன்று இந்தியா மட்டுமல்ல உலகயையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அன்னா ஹசாரே. ஊழலுக்கு எதிராக போராடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இன்று இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பேசப்படும் ஒருவர் இவர்தான்.

இவரின் முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...


...............................................................................................

அன்னா ஹசாரேவை தேவை இல்லாமல் காங்கிரஸ் அரசு கைது செய்து இப்ப ஏன்டா கைது செய்தோம் என்று கையை பிசைகிறது. ஊர்ல தேவை இல்லாமல் உண்ணாவிரதம் இருப்பவர்களை எல்லாம் ஒன்றும் செய்வதில்லை ஒரு நல்ல விசயத்திற்கு உண்ணாவிரதம் இருப்பவரை ஏன் கைது செய்வானேன் செய்த பின் ஏன் பின்வாங்க வேண்டும். காங்கிரஸ் அரசு ஆப்பை தேடி சென்று கொண்டு இருக்கின்றது..


...............................................................................................

செலவே இல்லாமல் அம்மா 12 பாலங்களை திறந்து விட்டதாக ஏளனம் செய்கின்றனர் சிலர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது பாலம் கட்ட செலவு செய்வது அய்யாவுமல்ல, அம்மாவும் அல்ல அனைத்தும் நம் பொதுமக்கள் பணம். பொதுமக்கள் பணத்தில் கட்டிய பாலத்தை முதல்வராக இருப்பவர் திறக்கிறார். எதிர்கட்சி கூட ஆகமுடியாமல் இருப்பவர்கள் 5 வருடத்திற்கு வேடிக்கை பாருங்க...


இதுவே கடந்த ஆட்சியில் பாலம் திறந்திருந்தால் இதற்கு பல கூட்டமும், பல பாராட்டு விழாவும் நடந்திருக்கும்...


........................................................................................................

நில அபகரிப்பு வழக்குகள் எல்லாம் இன்னும் முடிந்தபாடில்லை தினமும் ஒரு வழக்கு முன்னாள்கள் மேல் பாய்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் எத்தனை பேர் தான் கைதாவர்களோ?

........................................................................................................

இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறித்துள்ளது. இந்த அறிவிப்பு யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ சில்லரை வியாபரிகளுக்கு மிக கொண்டாட்டம் இன்னும் இந்த ஸ்ட்ரைக் வாபஸ் பெரும் வரை இவர்கள் வைத்தது தான் விலை.


எல்லாரும் இன்னிக்கே பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்....


........................................................................................................

ஊழல் செய்தவர்களுக்கும் ஒரே இடம்., ஊழலை எதிர்ப்பவர்களுக்கும் ஒரே இடம்....


இதுதாம்ப்பா உண்மையிலேயே கொடுமையான விசயம்....


........................................................................................................

16.08.2011  அன்று மாலையில் இருந்து இன்று காலை வரை இதுவரை 10 இலட்சம் டிவிட்டுகள் அன்னா ஹாசரே வுக்கு ஆதரவாக பின்னூட்டமிட்டு அவருக்கு வரவேற்பு அளித்துள்ளனர். 

உலகில் அதிக மக்கள் கடந்த இரண்டு நாட்களாக உச்சரிக்கும் வார்த்தை அன்னா ஹாசரே...
 

தகவல்



விண்வெளியில் செயற்கை முறையில் ஓட்டல் ஒன்றை நிர்மாணிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. பூமியிலிருந்து 217 மைல்கள் உயரே அமையவிருக்கும் இந்த ஓட்டலில் ஒரு நேரத்தில் 7 பேர் தங்கும் வகையில் நான்கு அறைகள் மற்றும் பூமி கீழே சுற்றுவதை எளிதாக பார்க்கும் வகையில் அமைந்த பெரிய ஜன்னல்கள் ஆகியவை இடம் பெறும்.

ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் உதவியுடன் 2 நாட்கள் பயணம் செய்து இதனை அடையலாம். விண்வெளி சுற்றுலா செல்ல விரும்பும் பணக்காரர்கள், விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்வோர் ஆகியோருக்கு ஏற்ற வகையில் உருவாகும்.

இதில் 5 நாட்கள் தங்குவதற்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் பவுண்டுகள் வரை செலவாகும். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் அவசர காலத்தில் பூமிக்கு திரும்புவதற்கு பதிலாக தங்குமிடமாகவும் இந்த ஓட்டல் இருக்கும்.

இதனை ஆர்பிடல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் உருவாக்குகிறது. வரும் 2016-ம் ஆண்டிற்குள் இதன் பணிகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் சாகம்பரி. என் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன என்று கூறி அதற்கு தகுந்தார்போல் எழுதி வருகிறார் இவரின் தாய்மையின் தேடல் என்னும் அற்புதமான கவிதைய பாருங்கள்...

http://mahizhampoosaram.blogspot.com/2011/08/blog-post_17.html


 

தத்துவம்

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌மஇ‌ல்லா‌‌வி‌ட்டா‌லவா‌ழ்‌க்கஎ‌ன்பதசும‌க்முடியாபெ‌ரிசுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

ஊ‌சி முனை‌யி‌லதவ‌மசெ‌ய்தாலு‌மஉ‌ன்னதுதா‌ன் ‌கி‌ட்டு‌ம்.

எ‌ளியாரவ‌லியா‌ரஅடி‌த்தா‌ல், வ‌லியாரை‌ததெ‌ய்வ‌மஅடி‌க்கு‌ம். 

15 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. எல்லா பதிவிலும் இவரே ஆக்கிரமித்து இருக்கிறார்....

    தொடரட்டும்...

    ReplyDelete
  3. //வ‌லியாரை‌த் தெ‌ய்வ‌ம் அடி‌க்கு‌ம்.// அப்ப உங்க கணக்குப்படி தெய்வத்திற்கு வலியோர் எளியோர்.இங்க வலியோரா இருப்பவரை யார் அடிப்பது ?.

    ReplyDelete
  4. //காங்கிரஸ் அரசு ஆப்பை தேடி சென்று கொண்டு இருக்கின்றது..//

    காங்கிரஸ் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வதில் விற்பன்னர்கள் என்பது உலகப்பிரசித்தமான விஷயம்

    ReplyDelete
  5. மகிழம்பூச்சரத்தினை அறிமுகம் செய்ததற்கு நன்றி சார். தங்களைப் போன்ற மூத்த பதிவாளர்கள் ஆதரவு இது போன்ற பதிவுகளை ஊக்குவிக்கின்றது. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  6. indha padhivun thagaval arumai......

    ReplyDelete
  7. அஞ்சறைப்பெட்டி.... கலக்கல் பெட்டி.

    ReplyDelete
  8. தமிழ்மணம் ஏழாவது நானே.

    ReplyDelete
  9. அஞ்சறைப் பெட்டி.... அருமையான கலவை... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. ஆடம்பரம் இல்லாத இயல்பான தொகுப்பு.

    ReplyDelete
  11. உங்களால் அறிமுகம் செய்யப்பட்ட பதிவர் "மகிழம்பூச்சர" சாகம்பரிக்கு எமது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..

    ReplyDelete
  12. //ஊழல் செய்தவர்களுக்கும் ஒரே இடம்., ஊழலை எதிர்ப்பவர்களுக்கும் ஒரே இடம்....

    இதுதாம்ப்பா உண்மையிலேயே கொடுமையான விசயம்....//

    நச்சுன்னு சொன்னீங்க சங்கவி!

    ReplyDelete
  13. இன்றைய வலைச்சரத்தில் தங்களது வலைதளத்தைப் பகிர்ந்துள்ளேன்.

    நேரமிருந்தால் வருகை தரவும்.

    http://blogintamil.blogspot.com/2011/08/5.html

    ReplyDelete