Tuesday, August 16, 2011

அந்தியூர் குதிரை சந்தை வரலாறும் படங்களும் 1

கடந்த வார இறுதியில் விடுமுறை கிடைக்குமா கிடைக்காதா என்று இருந்த போது சனிக்கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தது வெள்ளி இரவே ஊருக்குச் சென்று சனிக்கிழமை காலை கூட்டம் குறைவாக இருக்கும் என கோயிலுக்குச் சென்றோம்.
குருநாதசுவாமி கோயில்

இக்கோயில் ஊரை விட்டு 10கிலோ மீட்டர் தொலைவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த இடத்திற்கு பெயர் வனம். இக்கோயிலைச்சுற்றி உள்ள வனத்தில் மக்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி திருவிழாவை கொண்டாடுவார்கள். திருவிழா சமயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்குச் சென்றால் திரும்பிய பக்கம் எல்லாம் ஆடு, கோழி என விருந்து களை கட்டும். திருவிழா சமயம் மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகலும் விருந்து நடைபெறும்

குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தைகளில் இந்த வருடம் முடிந்தவரை படங்கள் அனைத்தையும் அள்ளி வந்துள்ளேன்.

குதிரை சந்தை

அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபுகுதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இப்போதைய சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதால் வீட்டு உபயோகப்பொருட்கள், சோளக்கருது, பேரிக்கா, மைசூர் பருப்பி, அல்வா ம்ற்றும் புதிதாக வந்துள்ள விவசாயப்பொருட்கள், பொழுது போக்கிற்காக பல வகையான இராட்டினங்கள் என்று களை கட்டியது அந்தியூர் சந்தை...
இக்குதிரையின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரம்

80 ஆயிரம்

காங்கேயம் காளை

 ஜமுனா பாரி ஆடுகள்

தற்போது எங்கள் பகுதியில் அதிக மக்கள் விரும்பி வளர்க்கும் ஈமு கோழி

ஜோடி 1ஒரு இலட்சத்து 50 ஆயிரம்

2 லட்சம்

சாரட் வண்டியின் விலை 60 ஆயிரம்



காங்கேயம் காளை (க்ராஸ்க்காக கொண்டு வரப்பட்டது)

4 இலட்சம்

3 இலட்சம்

4 இலட்சம்

2 லட்சத்து 50 ஆயிரம்

3 இலட்சம்

4 இலட்சம்

இசைக்கு தகுந்த படி நடனம் ஆடும் குதிரை 4 இலட்சமாம்

மீதி படங்கள் அடுத்த பதிவில்....

21 comments:

  1. வெள்ளையா இருந்தா எல்லாவற்றிலும் மதிப்பு மிக்கதாகத்தான் இருக்குமோ? இந்த வெள்ளைக்கலர் என்னமா டாமினேட் பண்ணுது?

    ReplyDelete
  2. அந்தியூர் குதிரை சந்தையைப் பற்றிய தகவல்களும் படங்களும் அருமை.

    ReplyDelete
  3. சூப்பர் போட்டோஸ் தல ..திருவிழாவை நேருல பாத்த பீலிங் :) அடுத்த செட் படங்கள் எப்போ

    ReplyDelete
  4. நானும் ஊருல செட்டில் ஆகும் போது இந்த மாதிரி காங்கேயம் காளையும் , ஆடும் வாங்கி வளர்க்க ஆசை தான் ..ஆனா அது எப்போன்னு தான் தெரியல :)

    ReplyDelete
  5. குதிரை சந்தை தகவல்களும் படங்களும் அருமை. thanks sangavi

    ReplyDelete
  6. ஒரு புதியஉலகிற்கே போய்வந்த உணர்வு.இதற்காகவே தமிழகம் வரவேண்டும்போலுள்ளது.
    பகிர்வுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு ..
    உங்கள் தளத்தை add author முறையில் எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணைய அழைக்கிறோம்.

    ReplyDelete
  8. குதிரை சந்தை பற்றிய தகவல்கள் அறிந்தேன். நிறைய புகைப்படங்கள் இணைத்தது நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  9. படங்கள் அருமை.
    நல்ல பகிர்வு,

    ReplyDelete
  10. படங்கள் அருமை.
    நல்ல பகிர்வு,

    ReplyDelete
  11. //{ கே. ஆர்.விஜயன் } said...
    வெள்ளையா இருந்தா எல்லாவற்றிலும் மதிப்பு மிக்கதாகத்தான் இருக்குமோ//

    நானும் இதைத்தான் நினைத்தேன். குதிரைகளில் கூட வெள்ளைக்கு தான் மதிப்பு அதிகம்.

    படங்கள் நன்றாக இருந்தது. எங்க ஊர் அருகிலேயே இருந்தும் சிறிய வயதில் ஒரே ஒரு முறை சென்றதோடு சரி அதன் பிறகு செல்லவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது செல்லவேண்டும்..அப்போது அங்கே குதிரை இருக்குமா என்று தெரியவில்லை :-)

    உங்களோட இன்டலி ஒட்டுப்பட்டையை கீழே மாற்றுங்கள் பலர் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. அருமையான பகிர்வு.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. Awesome photos!!
    thank you very much for shown my village culture to all over the world!!!

    ReplyDelete
  14. [url=http://viagraboutiqueone.com/#kptek]buy viagra[/url] - cheap viagra online , http://viagraboutiqueone.com/#ebokt cheap generic viagra

    ReplyDelete
  15. [url=http://buyonlineaccutanenow.com/#clgms]cheap accutane online[/url] - buy accutane online , http://buyonlineaccutanenow.com/#zzxto accutane 10 mg

    ReplyDelete
  16. Fantastic ,super design good blog splendid design buy and sell item-super design

    ReplyDelete