Wednesday, August 24, 2011

அஞ்சறைப்பெட்டி 25-08-2011

உள்ளுரில் இருந்து உலகம் வரை........


அன்னா ஹசாரே இந்தப் பேரக் கேட்டாலே காங்கிரஸ் தலைவர்களுக்கு தலை சுத்துது..

எளிமையான இம்மனிதரின் உண்ணாவிரதத்துக்கு உலகமெங்கும் வாழ்த்துக்கள் குவிகின்றன. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று அன்னா ஹசாரே தலைமையில் நடக்கின்றது என்றால் அது மிகையாகது. காங்கிரஸ் அரசுக்கு தற்போது நேரம் சரியில்லை போலும் பாராளுமன்றத்தை கூட்டினாலே எதாவது ஒரு பிரச்சனை பின்னி பெடலெடுக்குது.
...............................................................................................

அம்மாவின் 100 நாள் ஆட்சி அனைத்து தரப்பினரும் பாராட்டி தள்ளுகின்றனர். அம்மாவின் 100 நாள் ஆட்சியில் தீட்டிய திட்டங்களை செயல் படுத்த முனைவதும், மின்சார பிரச்சனையை ஓரளவு தீர்த்ததும் மிக முக்கயமானதாகும். 100 நாள் ஆட்சியில் இதுவரை எந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது சிறப்பு அம்சம்...

சமச்சீர் கல்வியில் அம்மாவுக்கு பின்னடைவு என்கிறார்கள் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது சமச்சீர்கல்விக்கு அதிமுக எதிரி அல்ல சமச்சீர் கல்விக்காக முந்தைய அரசால் கொண்டு வரப்பட்ட பாடங்கள் சரியில்லை அதை மாற்றி தருகிறோம் என்று தான் சொன்னார்கள் இதை யாரும் ஏற்கவில்லை இந்த அரைவேக்காடு பாடங்கள் இன்று சரியில்லை என்று கூறி என்ன பிரயோசனம்.


...............................................................................................
அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆரவளிக்க இளைய தளபதி டெல்லி பயணமாம்.... இளைய தளபதி நீங்க எங்க வேண்டும் என்றாலும்ட ஆதரவு கொடுங்க தப்பில்லை...

முதலில் தமிழ்நாட்டு மக்கள் உங்க திரைப்படத்துக்கு ஆதரவு தருகிறார்களா என்று பாருங்கள்....



........................................................................................................
அனைத்து கட்சி கூட்டத்தில் லோக்பால் சட்ட மசோதா விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

அனைத்து கட்சி கூட்டம் என்று சொல்லிவிட்டு காங்கிரஸ் சொல்றத எல்லாரும் கேளுங்க என்றால் எப்படிப்பா உடன்பாடு ஏற்படும்...

........................................................................................................
ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் மரியாடெல் ரொசாரியோ 85 வயதான இவர் கோடீசுவரி ஆவார். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருக்கு பல அரண்மனைகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் என பலவகைப்பட்ட சொத்துகள் உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி.  இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் மற்றும் பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் திருமணம் செய்ய முடிவு செய்தார்.  
இதை தொடர்ந்து கடந்த மாதம் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார். அப்போது தன்னை விட 24 வயது இளையவரான 61 வயது கிழவரை திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். அவரது பெயர் அல்போன்சோ டயஷ். அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர்களது திருமணம் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.   கோடீசுவரி மரியாடெல் ரொசாரியோவுக்கு இது 3-வது திருமணமாகும். ஏற்கனவே இவர் 2 ஆண்களை திருமணம் செய்துள்ளார். அவர்கள் இருவரும் மரணம் அடைந்து விட்ட நிலையில் 3-வதாக அல்போன்சோ டயசை திருமணம் செய்ய உள்ளார்.

இதுக்கு பேரும் காதல் தானா?????


........................................................................................................

சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த ஒரு விவாகரத்து வழக்கில் நீதிபதி கூறியது

 சாதாரண சண்டைகளுக்கு எல்லாம் விவாகரத்து வழங்க முடியாது. மனுவில் ஈகோ தான் அதிகமாக வெளிப்படுகிறது. அற்ப கரணங்களுக்காக தம்பதிகள் யாரும் விவாகரத்து கோரி ஐகோர்ட்டுகளை நாடக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் ஈகோ வை கைவிட்டு தூக்கி எரிந்து விட்டு, மனம் ஒத்து சேர்ந்து வாழுங்கள்.

நிச்சயமான உண்மை இன்று விவாகரத்திற்கு முக்கிய காரணமே ஈகோதான்., தம்பதிகள் மனம் விட்டு பேசினால் எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு நிச்சயம் உண்டு.

குழந்தைகள் நலன் கருதியாவது மனம் விட்டு பேசுங்கள்.


........................................................................................................

வல்வெட்டி துறையில் பிரபாகரன் வீடு சிங்கள் ராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளது. அடேய் சிங்கள இன வெறி பிடிச்சவன்களே உங்களால் பிரபாகரன் வீட்டைத்தான் இடிக்க முடியும்.. 7 கோடி தமிழ் நெஞ்சங்களில் பிரபாகரன் இருக்கிறார். 
உங்களால் என்றுமே பிரபாகரனை அழிக்க முடியாது....
........................................................................................................

 இன்று காலை திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேரு கைது இன்னும் எத்தனை பேர் உள்ள போகப்பபோறங்களோ?

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரின் மேலும் பொய் வழக்கு பொய் வழக்கு என்று கூறுகிறார் ஏன் இக்கைதை எதிர்த்து ஐகோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் செல்லவில்லை?

மடியில் கனம் இல்லையேல் பயம் எதற்கு....
........................................................................................................
 
 சித்திரை திருநாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்த அம்மாவிற்கு நன்றி.
 

தகவல்


ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா மாகாணத்தின் கடைகோடி பகுதியில் “ஸ்டெரெலி” ஏரி உள்ளது. அங்கு சுமார் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுக்கு முந்தைய புதை படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர்.   அப்போது அதில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்த நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருந்தன.
ஆனால் புதை படிவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவை. அப்போது பூமியில் உயிர் வாழ்வதற்கான ஆக்சிஜன் இல்லை. கடல் நீரால் மட்டுமே பூமி சூழப்பட்டு இருந்தது. கடும் வெப்பமாகவும் இருந்தது. உயிர் வாழக்கூடிய தட்ப வெப்ப சூழ்நிலை இல்லை.
எனவே உயிரினம் செவ்வாய் கிரகத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புதை படிவம் கண்டெடுக்கப்பட்ட பில்பாரா பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம். அவை மண்ணில் புதையுண்டு படிவங்களாக மாறியிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.


அறிமுக பதிவர்

இந்த வார அறிமுகப்பதிவர் தனலட்சுமி Make Everybody smile என்ற பெயரில் வலைப்பூ எழுதிவருகிறார்.. இவரின் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது... நீங்களும் ரசியுங்கள் இவரின் வரிகளை....

http://www.smile.charmhost.com/

 

தத்துவம்


அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் நமக்கு வேண்டும்

கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்

41 comments:

  1. பகிர்வுக்கு நன்றிங்கோ

    ReplyDelete
  2. //அன்னா ஹசாரே இந்தப் பேரக் கேட்டாலே காங்கிரஸ் தலைவர்களுக்கு தலை சுத்துது..//

    எனக்கு அண்ணா ஹஜாரேயைப் பிடிக்காட்டியும் கூட, ஒரு விஷயத்துக்காக அவரைப் பாராட்டியே தீரணும். காங்கிரசுலே இருக்கிற சிதம்பரம், கபில் சிபல், மணீஷ் திவாரி, திக்விஜய் சிங் மாதிரி தெனாவட்டு ஆசாமீங்களோட வாலைச் சுருட்டி வாயைப் பொத்தி உட்கார்த்தி வச்சிருக்கிறாரே! இது போதும் காங்கிரசுக்கு!

    :-)))))))

    ReplyDelete
  3. விவாகரத்திற்கு முக்கிய காரணமே ஈகோதான்., தம்பதிகள் மனம் விட்டு பேசினால் எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு நிச்சயம் உண்டு. //

    மிகவும் சரியான கருத்து.

    ReplyDelete
  4. சேட்டைக்காரன் : சேட்டையின் சேட்டையில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது போல. வாழ்த்துக்கள். சேட்டை நன்றாக எழுதுபவர் ஆனால்................ சில நிலைப்பாடுகள் முரண்டுகின்றன.தவறில்லை... நியாயமாக எல்லோருக்கும் தோன்றும் பட்சத்தில்.

    ReplyDelete
  5. //இதுக்கு பேரும் காதல் தானா?????//

    ஹெல்லோ பாஸ்,

    அவங்கதான் கல்யாணம் பண்ணிக்க போறங்க இல்ல. அப்புறம் என்ன “காதலா”-ன்னு கேள்வி!

    ReplyDelete
  6. //சேட்டையின் சேட்டையில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது போல. வாழ்த்துக்கள்.//

    ஒரு மாற்றமும் இல்லை. காங்கிரஸ் கட்சி ஒழியணும் என்றுதான் நான் பதிவு ஆரம்பித்ததுமுதல் எழுதி வருகிறேன். :-) ஆனால், அதற்கு அண்ணா ஹஜாரேவுக்கு ஜாக்கி வைக்க மாட்டேன்! :-)

    //சேட்டை நன்றாக எழுதுபவர் ஆனால்................ சில நிலைப்பாடுகள் முரண்டுகின்றன.தவறில்லை... நியாயமாக எல்லோருக்கும் தோன்றும் பட்சத்தில்.//

    பெரும்பாலானோருக்கு நியாயமாகத் தோன்றுகிற மாதிரியான கருத்து எதுவும் இருக்காது. 120 கோடி மக்களும் அண்ணாவைக் கொண்டாடினாலும், எனது விமர்சனங்கள் தொடரும் – தனியாக!

    நன்றி விஜயன் சார்! :-)

    ReplyDelete
  7. // சமச்சீர் கல்வியில் அம்மாவுக்கு பின்னடைவு என்கிறார்கள் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது சமச்சீர்கல்விக்கு அதிமுக எதிரி அல்ல //

    ஆமாம்! திமுக கொண்டுவந்த சமச்சீர்கல்விக்கு தான் அவர் எதிரி!

    அப்புறம்! தலைமை செயலகத்தை எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது?

    ReplyDelete
  8. // சித்திரை திருநாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்த அம்மாவிற்கு நன்றி. //

    ஏன் சங்கவி சார்?

    தை திருநாள் , சித்திரை திருநாள் எது தமிழ் புத்தாண்டாக அமைய சிறந்தது?

    இது பற்றி எங்களுக்கு தெரியாது.

    அரசியல் கலப்பில்லாமல் சொன்னால் பலரும் அறிந்து கொள்வோம்!

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. பாலாஜி சார்...

    ..ஆமாம்! திமுக கொண்டுவந்த சமச்சீர்கல்விக்கு தான் அவர் எதிரி!..

    சமச்சீர் கல்விக்கு அல்ல சமச்சீர்கல்வி பாடத்திட்டத்துக்கு தான் எதிரி...

    நீங்க ஒரு முறை அந்த புத்தகத்தை படிச்சு பாருங்க தெரியும்....

    ReplyDelete
  11. பாலாஜி சார்...

    ..ஆமாம்! திமுக கொண்டுவந்த சமச்சீர்கல்விக்கு தான் அவர் எதிரி!..

    சமச்சீர் கல்விக்கு அல்ல சமச்சீர்கல்வி பாடத்திட்டத்துக்கு தான் எதிரி...

    நீங்க ஒரு முறை அந்த புத்தகத்தை படிச்சு பாருங்க தெரியும்....

    ReplyDelete
  12. //தை திருநாள் , சித்திரை திருநாள் எது தமிழ் புத்தாண்டாக அமைய சிறந்தது?//

    எனக்கு 31 வருடம் ஆகிறது 27 வருடமாக சித்திரையில் தான் தமிழ்புத்தாண்டு கொண்டானேன்..

    கடந்த சிலவருடமாக அரசு தை மாதம் புத்தாண்டாக கொண்டாடுகிறது...

    என்னைப்பொருத்தவரை சித்திரை 1 தான் தமிழ்புத்தாண்டு...

    இவங்களால ஒரு லீவு போச்சு... இப்ப கிடைச்சிடுச்சு....

    ReplyDelete
  13. ''அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆரவளிக்க இளைய தளபதி டெல்லி பயணமாம்.... இளைய தளபதி நீங்க எங்க வேண்டும் என்றாலும்ட ஆதரவு கொடுங்க தப்பில்லை...

    முதலில் தமிழ்நாட்டு மக்கள் உங்க திரைப்படத்துக்கு ஆதரவு தருகிறார்களா என்று பாருங்கள்....'' இல்லாமலா நீங்கள் எல்லாம் அவரை பற்றி எழுதுகிறீர்கள்

    ReplyDelete
  14. //முதலில் தமிழ்நாட்டு மக்கள் உங்க திரைப்படத்துக்கு ஆதரவு தருகிறார்களா என்று பாருங்கள்....'' இல்லாமலா நீங்கள் எல்லாம் அவரை பற்றி எழுதுகிறீர்கள்//

    சமீபத்தில் அவருடைய படங்கள் எப்படி மண்ணைக்கவ்வுச்சு என தெரிஞ்சு தானே பேசறீங்க...

    ReplyDelete
  15. அறிமுக பதிவர் தனலெட்சுமிக்கு வாழ்த்துக்கள்.
    //புதை படிவம் கண்டெடுக்கப்பட்ட பில்பாரா பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம். அவை மண்ணில் புதையுண்டு படிவங்களாக மாறியிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.// எப்போதோ என்னவோ நடந்திருக்கிறது. ஆர்வமாக தெரிந்து கொள்ள நினைத்து தகவல் திரட்டினால் உலகம் அழியப்போகிறது என்று பயமுறுத்துகிறார்கள்.
    அன்னா ஹசாரே பற்றி அருந்ததிராய் சொன்னதை படித்தீர்களா?.
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  16. // இவங்களால ஒரு லீவு போச்சு... இப்ப கிடைச்சிடுச்சு.... //

    இது தான் காரணமா?

    சரி சரி!.... ஜெயலலிதா வாழ்க!

    ReplyDelete
  17. எம்மை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிங்கோ........

    ReplyDelete
  18. ஃபோன்ல என் கிட்டே பேசுன மேட்டரை வெளில யார் கிட்டேயும் சொல்லைலயே? ( பாட்ஷா ஸ்டைலில் படிக்க ) ஹி ஹி

    ReplyDelete
  19. 100 நாள் ஆட்சியில் இதுவரை ஜெயலலிதா எந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது சிறப்பு அம்சம்...

    அடடே இந்த வித்தை கருணாநிதிக்கு தெரியமபோச்சே, கருணாநிதியாவது 3 மாசத்துக்கு, ஒரு 5 மணிநேரம் பாராட்டுவிழாவில் கலந்துகொண்டு உட்கார்து இருப்பர்..

    ஆனால் அம்மாவோ , சட்டசபை என்ற பெயரில் ஒரு வருடத்துக்கு 75 நாட்கள் பாராட்டு, புகழுரை, ஜால்ரா உரை என்று கலந்துகொள்கிறார். சட்டசபை நிகழ்சிகளை
    எடிட் செய்யாமல் பார்த்தல் உண்மை தெரியும்..

    சராசரியாக சட்டசபை ஒரு நாளுக்கு 7 மணிநேரம் என்று ஒரு வருடத்துக்கு 75 நாட்கள் நடக்கிறது என்று வைத்துக்கொண்டால், மொத்தம் 525 மணிநேரம் சட்டசபை நடக்கும். அதில், 75% ஆளும்கட்சி & ஆதரவு உறுபினர்கள் பேசினால் 393 மணிநேரம் ,அதில் சுமார் 60% நேரம் அம்மாவை புகழ்வதிலும், ஜாலரா அடிபதிலும் செலவிடுவதாக வைத்துக்கொண்டால்,
    மொத்தம் 236 மணி நேரம் பாராட்டுகளை கேட்பதில் ஜெயா செலவிடுகிறார்..

    ஒரு ஆண்டில் கருணாநிதி பாராட்டு விழாவில் கலந்துகொண்ட நேரம் - 20 மணிநேரம்

    ஒரு ஆண்டில் ஜெயா சட்டசபை என்ற பெயரில் பாராட்டு உரைகளில் கலந்துகொள்ளும் நேரம் - 236 மணிநேரம்.

    கருணநிதியவது தனியார் செலவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டார், ஆனால் அம்மாவோ மக்களின் பணத்தில் நடக்கும் பாராட்டு உரைகளில் கலந்துகொள்கிறார்..

    ReplyDelete
  20. Already case is filed on the Land Crab Law in the HC

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. வணக்கங்களும், வாக்குகளும்..

    ReplyDelete
  23. இதுக்கு பேரும் காதல் தானா?????


    .... காதலும் ஒரு காரணமாக இருக்கலாம். பொதுவாக, நான் இங்கு (அமெரிக்கா) சிலரிடம் பேசியவரை, அவர்கள் சொல்லும் காரணம் "தனிமையில் இனிமை காண முடியுமா?" ரகத்தை சேர்ந்தது. எந்த வயதிலும் நல்ல துணை ( life's companion) இருப்பது தேவை என்கிறார்கள். பணமும் நல்ல உடல் நலனும் இருந்தால் மட்டும் அந்த வயதில் போதாது. நல்ல நட்பு வட்டம் அவசியம் வேண்டும். அதில் சிலர் ஒரு படி மேலாக போய், வாழ்க்கை துணியை தேடுகிறார்கள் என்று கூறினார்கள்.

    ReplyDelete
  24. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே..!! தங்களது அனைத்து தகவல்களும் சுவாரஸ்யமாக உள்ளது. அறிமுகப்பதிவரின் பதிவுகளும் அருமை. பகிர்வுக்கு நன்றி தல.

    ReplyDelete
  25. அஞ்சறைப் பெட்டி ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  26. அஞ்சறைப் பெட்டி பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  27. பதிவும் பின்னூட்டங்களும் - காரம், மணம், குணத்துடன் உள்ளன!!

    ReplyDelete
  28. // 7 கோடி தமிழ் நெஞ்சங்களில் பிரபாகரன் இருக்கிறார்//

    Who told you...have you done any survey... (In fact, you may say, I'm supporter of congress.. I'm not..)

    ReplyDelete
  29. பகிர்வுக்கு நன்றிங்கோ!

    ReplyDelete
  30. Dear sir Very Nice comments
    Thank you For sharing your Thoughts
    BY VPRAVEEN VIJYAN

    ReplyDelete
  31. [url=http://buyviagraonlinegn.com/#obonh]buy viagra online[/url] - buy generic viagra , http://buyviagraonlinegn.com/#xdlge buy viagra online

    ReplyDelete
  32. [url=http://buyaccutaneorderpillsonline.com/#17432]buy accutane online[/url] - accutane without prescription , http://buyaccutaneorderpillsonline.com/#11866 cheap accutane

    ReplyDelete
  33. [url=http://buyaccutaneorderpillsonline.com/#4213]buy accutane[/url] - accutane without prescription , http://buyaccutaneorderpillsonline.com/#20696 generic accutane

    ReplyDelete
  34. [url=http://buyaccutaneorderpillsonline.com/#20892]accutane without prescription[/url] - accutane no prescription , http://buyaccutaneorderpillsonline.com/#11230 accutane cost

    ReplyDelete
  35. [url=http://buyonlinelasixone.com/#11801]buy lasix[/url] - lasix cost , http://buyonlinelasixone.com/#3867 lasix without prescription

    ReplyDelete
  36. [url=http://buyonlinelasixone.com/#13245]lasix online without prescription[/url] - buy lasix online , http://buyonlinelasixone.com/#3813 lasix no prescription

    ReplyDelete
  37. [url=http://buyviagrapremiumpharmacy.com/#mzaqb]buy cheap viagra[/url] - buy viagra online , http://buyviagrapremiumpharmacy.com/#wgqip generic viagra

    ReplyDelete