Wednesday, January 30, 2013

அஞ்சறைப்பெட்டி 30.01.2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
பல முறை எனது அஞ்சறைப்பெட்டியில் எழுதி இருந்தேன் எங்கள் ஊர் சாலை (பவானி முதல் மேட்டூர் வரை) மிக மோசமான சாலை என்று யார் செய்த புண்ணியமே தெரியவில்லை 10 வருடத்திற்கு பின் இப்பத்தான் அந்த சாலையை செப்பனிடும் வேலை நடந்து கொண்டு இருக்கின்றது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இனி எங்க ஊருக்கு நல்ல படியாக பயணம் செய்யலாம் என்று... இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கூட உடல் வலி ரொம்ப பின்னி எடுக்கும் அந்த அளவிற்கு குழிகள் கொண்ட சாலை அது.

  ................................................................

அனைவரும் எதிர்பார்த்த விஸ்வரூபம் தேவை இல்லாமல் பல போராட்டங்களை நடத்தி இன்று தடை செய்யும் அளவிற்கு வந்துள்ளது. சினிமாவை சினிமாவாக பார்த்ததால் நிச்சயம் இந்த பிரச்சனைகள் இருக்காது.. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க சினிமாவுக்காக போராடுவது அபந்தம். முதலில் அடிப்படை விசயங்களுக்காக போராடாதவர்கள் தேவை இல்லாமல் சினிமாவுக்காக போராடுகின்றனர்.

..........................................................................................

கேரளத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விடாத தமிழகம் மீது சட்டரீதியான நடவடிக்கை என அம்மாநில உம்மன்சாண்டி கூறிஉள்ளார்.. ஏற்கனவே நாங்க சட்டரீதியான நடவடிக்கை எடுத்தும் எங்களுக்கு ஒரு சொட்டு கூட் தண்ணீர் கிடைக்கவில்லை இதில் நீங்களுமா..

................................................................................................

இனியும் மழை பெய்யவில்லை என்றால் இந்த வருட கோடை காலங்களில் நிச்சயம் தண்ணீருக்காக அலைய வேண்டிய நிலை வரும் வாய்ப்பு உண்டு. ஊரில் உள்ள குளங்கள், ஏரிகள் எல்லாம் வறண்டு காணப்படுகின்றன. மழையின்மையால் முதலில் பாதிக்கப்பட்டது விவசாயம் தான் இன்னும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கப்போறமோ இந்த மழையின்மையால்..

...............................................................................................

பசித்தாலும் சாப்பிடுவதில்லை.... தூக்கம் தொலைத்து நாள்தோறும் 16 மணிநேரம் ஆன் லைன் கேமில் மூழ்கியிருந்த ஆஸ்திரேலிய சிறுவன் அதற்கு அடிமையாகிவிட்டான். இக்கட்டான நிலையில் இருந்து அந்த சிறுவனை மீட்கப் போராடி வருகிறார் ஒரு தாய். உலகம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் ஆன்லைனில் இந்த கேம் ஆடுவதாக கூறப்படுகிறது. இலவச ஆன்லைன் வீடியோகேம்களில் மிகவும் பிரபலமானது ‘ரன்எஸ்கேப்'. மல்டிபிளேயர் ஆன்லைன் கேம் என்ற வரிசையில் ரன்எஸ்கேப், கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த ஜெகக்ஸ் கேம்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வடிவமைத்ததுதான் இந்த கேம். கேமில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கும். அதோடு நாமும் ஒரு கேரக்டராக இறங்கி விளையாட வேண்டும். எப்படி விளையாடுவது, விளையாட்டின் நோக்கம் என்ன, எந்த இலக்கை அடைய வேண்டும் என்றெல்லாம் கேமுக்குள் இருக்கும் ஆலோசகர்களிடமே கேட்டுக் கொள்ளலாம். இதுதான் இலக்கு என்று எதுவும் கிடையாது.எதை நோக்கி போவது, என்ன சாதிப்பது என்பது நம் விருப்பம்தான். ஆகமொத்தம், உள்ளுக்குள் ஒரு உலகமே இருக்கும்.

...............................................................................................

குழந்தைகள் மண் சாப்பிடுவார்கள். அதிகம் போனால் சாக்பீஸ் சாப்பிடுவார்கள். கர்ப்பிணிகள் சாம்பல் விபூதி சாப்பிடுவார்கள். ஆனால் அமெரிக்காவில் வளர்ந்து பெரிய ஆளாக ஆன பின்னும் பூனை முடியை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஒரு பெண்.
15 ஆண்டுகளாக பந்து பந்தாக சுருட்டி பூனை முடியை ருசித்து சாப்பிட்டு வருகிறார் 43 வயதான அந்தப் பெண். பூனை முடி இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் என்கிறார் அந்தப் பெண்.
இதற்காக தான் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் உள்ள பூனைகளைப் பிடித்து அதன் முடிகளை சேகரித்து வருகிறார். கேட்பதற்கு அருவெருப்பாக இருந்தாலும் அந்தப் பெண் பூனை முடியின் ருசிக்கு அடிமையாகிவிட்டார் என்றே கூறுகின்றனர்.

தகவல்
 
 
அண்டார்டிகா பனி பிரதேசத்தில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் முகாம் அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது படர்ந்து கிடக்கும் ஐஸ் கட்டியின் அடியில் மறைந்து கிடக்கும் ஏரிகளை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ரோஸ் கடல் பகுதியில் ஐஸ் கட்டிகளின் மீது துளை போடும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

அப்போது 1 கி.மீட்டர் ஆழத்தில் ஏரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு வில்லர்னஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த ஏரியில் அதிக அளவில் தண்ணீர் இருப்பது துளை போடும் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் தெரிய வந்தது.

கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழுவினர் ஐஸ் கட்டிக்குள் மறைந்து கிடந்த எல்ஸ்வொர்த் என்ற ஏரியை கண்டுபிடித்தனர்.

தத்துவம்

இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.

எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.

ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.

Wednesday, January 23, 2013

அஞ்சறைப்பெட்டி 24/01/2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்ததால் அணையின் உட்புத்தோற்றத்தை காண சென்றேன் அனையில் இருந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 23 கீலோ மீட்டர் தள்ளி இருந்து உள்ளே உள்ள நந்தி சிலை மற்றும் சர்ச் கோபுரங்களை சிறு படகின் துணை கொண்டு சுற்றிப்பார்த்தேன்.. 2002ம் ஆண்டுக்கு பின் இப்போது தான் நந்தி முழுவதும் தெரிகின்றது என்றனர். நிச்சயம் அணைவரும் பார்க்க வேண்டிய இடம். அந்த அளவிற்கு உள்ளது மேட்டூடாஅணையின் அமைப்பு..

  ................................................................

இந்த புத்தாண்டில் என்ன குத்தம் செய்தேன் என்று தெரியவில்லை எழுதுவதற்கு நேரமே இல்லை.. வேலைப்பளு நிறைய உள்ள காரணத்தால் எழுத வேண்டிய பல தகவல்கள் பதியமுடியவில்லை. இனி வரும் வராங்களில் ஓரளவு இந்த பிரச்சனை தீரும் என்று நினைக்கிறேன் பார்ப்போம்.

..........................................................................................

விஸ்வரூபம் ஆரம்பித்தில் இருந்தே முதலில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் டிடிஎச் க்கு 1000 கட்டி பதிவு செய்தேன்... அது புட்டுகிச்சு, தியேட்டர் என்றதும் ப்ரூக்பில்டுல தான் பார்க்கனும் என்று அதுக்கு புக் செய்தேன் அதுவும் புட்டுகிச்சு... எப்பவும் படம் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டமாட்டேன் இந்த படம் பார்க்கனும் என்று ஆர்வம் காட்டியது தப்பு போல..
விஸ்வரூபம் விஸ்வரூபம் ஆகிடுச்ச...


................................................................................................

காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர் தங்கள் அவசரத்திற்காக குழந்தையை வண்டியில் ஏற்றியதும் படு வேகத்தில் வளைவுகளில், சாலையின் பிரிவுகளில் கவனிப்பதே இல்லை கடந்த இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 5 பேர் இது போல விழுந்து எழுந்து குழந்தையின் டிபன் பாக்ஸ் எல்லாம் ரோடுகளில் சிதறி என பார்ப்பதற்கே கஷ்டமாக உள்ளது இதற்கு காரணம் பள்ளியோ, அரசோ இல்லை பெற்றோர்கள் தான்...
...............................................................................................

குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு அது போலத்தான் எனக்கும் 3 வயதாகப்போகும் குழந்தையை எந்த பள்ளியில் படிக்க வைக்கலாம் என்று விவாதிக்கும் போது பிரபல தனியார் பள்ளிகள் எல்லாம் தற்போது அப்ளிகேஷன் விற்பனை செய்கிறார்கள் போய் வாங்குங்கள் என்றது பல பள்ளிகளில் 2013 ஜீன்க்கு எங்க பள்ளியில் அட்மிஷன் முடிந்துவிட்டது என்றனர். ஒரு பள்ளியில் 1 இலட்சம் டொனேஷன் கொடுத்தால் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்கின்றனர். மற்றொரு பள்ளியில் 50 ஆயிரம் டொனேஷன் வேண்டும் என்றனர் இப்பதானே ஆரம்பித்துள்ளீர்கள் என்ன என்ன சொல்லித்தரப்போகிறார்கள் என விசாரித்தால் இனி தான் எல்லா பொருளும் வாங்க வேண்டும் என்கின்றனர். இந்த Play School. PreKG. LKG, UKG கட்டணத்தை கேட்கும் போது Engineering கட்டணத்தை விட அதிகமாக இருக்கிறது...

எந்த எந்த பள்ளியில் என்ன கேட்டாங்க என்று விரைவில் இதைப்பற்றியான தனி பதிவு இடனும்...

...............................................................................................


உலக பொருளாதார மந்தம்: ஒரே ஆண்டில் 40 லட்சம் பேர் வேலை இழப்பு

உலகம் முழுவதும் பல நாடுகளில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக உலகம் முழுவதும் வேலை இழப்புகள் அதிகமாகி வருவதாக உலக தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது 19 கோடியே 70 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
அதாவது வேலை செய்யும் திறனுள்ளவர்களில் 6 சதவீதம் பேருக்கு வேலையில்லை. கடந்த 1 ஆண்டில் மட்டும் 40 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். 24 வயதுக்கு குறைவானவர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 3 -ல் ஒரு பங்கினர் ஒரு வருடத்துக்கு மேலாக வேலையில்லாமல் இருப்பதாகவும் உலக தொழிலாளர் அமைப்பு கூறியிருக்கிறது. 

...............................................................................................

'செக்ஸ்' வீரியத்துக்காக வயாகரா மாத்திரையை ஆண்கள் பயன்படுத்தி வருகின்றனர். 'செக்ஸ்' மட்டுமின்றி உடல் பருமனையும் இந்த மாத்திரை குறைப்பதை நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

ஜெர்மனியில் உள்ள போக் பல்கலைக்கழக நிபுணர்கள் எலிகள் மூலம் இந்த ஆய்வு நடத்தினார்கள். அதில் வயாகரா மாத்திரையினால் அவற்றின் அடிவயிற்றில் படிந்திருந்த தேவையற்ற கொழுப்புகள் கரைந்தன. அதன் மூலம் உடல் பருமன் தடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மனிதர்களுக்கும் வயாகரா மாத்திரை பயன்படுத்தி உடல் பருமனை குறைக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல்

கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்

அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம், ரத்தக் கொதிப்புகுறைவதோடு, நினைவாற்றல்அதிகரிக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் உள்ள, வியன்னா பல்கலைகழக விஞ்ஞானிகள் நமது உடலில்,பிட்யூட்டரி சுரப்பியால் உருவாக்கப்படும் ஹார்மோனான, ஆக்சிடாக்சினை பரிசோதித்து வந்தனர். அதில், நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், காதலன் அல்லது காதலி, என நம்மை நேசிக்கும்அன்பானவர்களை நாம் கட்டிப்பிடித் தால், "ஆக்சிடாக்சின்' வெளிப்பட்டு, ரத்தக் கொதிப்பு குறைகிறதுஎன்பதை கண்டறிந்துள்ளனர்.மேலும், இதன் மூலம், நினைவாற்றல் மேம்படுவதும் தெரியவந்துள்ளது.ஆனால், நமக்கு முன்பின்அறிமுகம் இல்லாதவர்கள், நம்மை நேசிக்காதவர்கள் ஆகியோரை,கட்டிப்பிடிக்கும்போது, இந்த ஹார்மோன் அதிகம் சுரக்காமல், எதிர் விளைவுகள் ஏற்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, வியன்னா பல்கலைகழக நரம்பியல் விஞ்ஞானி சாண்ட் குக்லர் கூறியதாவது: பெற்றோர், குழந்தைகளைகட்டிப்பிடிக்கும்போ
தும், தம்பதியினர் கட்டிப்பிடிக்கும்போதும், ஆக்சிடாக்சின் அதிகளவு சுரப்பது தெரியவந்துள்ளது.பரஸ்பரம் நம்பிக்கையுடன் உள்ளவர்களை கட்டிப்பிடிக்கும்போது மட்டும் தான், ரத்தக்கொதிப்பு குறைவதும், நினைவாற்றல் அதிகரிப்பதும் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமும் ஒரு 10 தடவையாவது கட்டிப்பிடிங்கப்பா கட்டிப்பிடிங்க...

தத்துவம்
அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

உழைப்பு, மூன்று தீமைகளை களைகிறது. அவை, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை.

எந்த காரியத்திலும் பொறுமை, விடாமுயற்சி இவை இரண்டையும் கடைபிடி வெற்றி உனக்கே....

Tuesday, January 1, 2013

புத்தாண்டும் பிறந்தநாளும்...


2013ம் ஆண்டின் முதல் பதிவு கடந்த வருடம் அதிக பதிவு எழுதவில்லை அதற்கு முக்கிய காரணம் சோம்பேறித்தனமும் முகநூலில் அதிக நேரம் செலுத்தியதும் தான். பதிவுலகம் தான் அதிகம் இணையத்தில் உலவுவதற்கு மிக முக்கிய காரணம் நிறைய நண்பர்கள் கிடைத்ததற்கும் பதிவுலகம் தான் காரணம். பதிவுலக நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்...

புத்தாண்டு என்றாலே எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும் அதற்கு மிக முக்கிய காரணம் புத்தாண்டிற்கு அடுத்த நாள் எனது பிறந்தநாள் தான்.. பிறந்தநாள் என்றாலே படு கொண்டாட்டமாகத்தான் இருப்பேன் சிறுவயதில் இருந்து அதற்காக டிசம்பர் மாதத்திலேயே தயாராகிவிடுவேன் துணி எடுப்பதில் இருந்து கொண்டாட்டம் வரைக்கும்.

புத்தாண்டு கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் ஆட்டம் பாட்டத்துடன் இருக்கும் ஆனால் இந்த வருடம் ரொம்ப அமைதியாக ரசித்தேன் புத்தாண்டு கொண்டாட்டத்தை புத்தாண்டு அன்று இரவு காரில் ஊரை ரவுண்டடித்து வீட்டுக்கு செல்லும் போது வழியில் பட்டாசு வெடித்த நண்பர்களிடம் வாழ்த்து வீடு சென்றேன். ஒவ்வொரு ஆண்டும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடியதற்கும் அமைதியாக வேடிக்கை பார்த்ததற்கும் பல மாற்றங்கள் தமிழ்புத்தாண்டை இந்த அளவிற்கு கொண்டாடுவதில்லை என்பது தான் வருத்தமான விசயம்...

நண்பர்களுடன் கொண்டாடிய பிறந்தநாள், மனைவியுடன் கொண்டாடிய பிறந்தநாளை விட கடந்த 2 வருடமாக மகனுடன் கொண்டாடிய பிறந்தநாள் தான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.  அதுவும் இந்த வருடம் மகன் மழலை மொழியில் அப்பா Happy Birthday என்று அவள் அம்மா சொல்ல பின் அவன் சொல்லியதில் தான் எத்தனை மகிழ்ச்சி..

கடந்த வருடங்களை விட இந்த ஆண்டுதான் எனக்கு மிக முக்கிய ஆண்டு இந்த ஆண்டு நான் துவங்க இருக்கும் தொழிலில் வெற்றியடைய வேண்டும் அதற்கான முயற்சியை மிக மேம்படுத்தவேண்டும். எவ்வாறு எல்லாம் முயற்சி மேற்கொண்டால் வெற்றி என்று அதையே நோக்கியே பயணிக்க இருக்கிறேன். இந்த பயணத்தின் வெற்றி அடுத்த ஆண்டில் இறுதியில் தெரியும். இறையவன் அருளாளும் நண்பர்களின் ஆசியோடும் இந்த வருடம் இனிதாக அமைய வேண்டும் என வேண்டுகிறேன்....

எனக்கு புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் போன் மூலமாகவும்,  சாட் வழியாகவும், வலைப்பூ மற்றும் பேஸ் புக் மூலமாக வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...நன்றி...நன்றி....