உள்ளுரில் இருந்து உலகம் வரை........
மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்ததால் அணையின் உட்புத்தோற்றத்தை காண சென்றேன் அனையில் இருந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 23 கீலோ மீட்டர் தள்ளி இருந்து உள்ளே உள்ள நந்தி சிலை மற்றும் சர்ச் கோபுரங்களை சிறு படகின் துணை கொண்டு சுற்றிப்பார்த்தேன்.. 2002ம் ஆண்டுக்கு பின் இப்போது தான் நந்தி முழுவதும் தெரிகின்றது என்றனர். நிச்சயம் அணைவரும் பார்க்க வேண்டிய இடம். அந்த அளவிற்கு உள்ளது மேட்டூடாஅணையின் அமைப்பு..
................................................................
இந்த புத்தாண்டில் என்ன குத்தம் செய்தேன் என்று தெரியவில்லை
எழுதுவதற்கு நேரமே இல்லை.. வேலைப்பளு நிறைய உள்ள காரணத்தால் எழுத வேண்டிய
பல தகவல்கள் பதியமுடியவில்லை. இனி வரும் வராங்களில் ஓரளவு இந்த பிரச்சனை
தீரும் என்று நினைக்கிறேன் பார்ப்போம்.
............................................................ ..............................
விஸ்வரூபம் ஆரம்பித்தில் இருந்தே முதலில் பார்க்க வேண்டும் என்ற
ஆர்வத்தில் டிடிஎச் க்கு 1000 கட்டி பதிவு செய்தேன்... அது புட்டுகிச்சு,
தியேட்டர் என்றதும் ப்ரூக்பில்டுல தான் பார்க்கனும் என்று அதுக்கு புக்
செய்தேன் அதுவும் புட்டுகிச்சு... எப்பவும் படம் பார்ப்பதில் அதிக ஆர்வம்
காட்டமாட்டேன் இந்த படம் பார்க்கனும் என்று ஆர்வம் காட்டியது தப்பு போல..விஸ்வரூபம் விஸ்வரூபம் ஆகிடுச்ச...
............................................................ .............................. ......
காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர் தங்கள்
அவசரத்திற்காக குழந்தையை வண்டியில் ஏற்றியதும் படு வேகத்தில் வளைவுகளில்,
சாலையின் பிரிவுகளில் கவனிப்பதே இல்லை கடந்த இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 5
பேர் இது போல விழுந்து எழுந்து குழந்தையின் டிபன் பாக்ஸ் எல்லாம்
ரோடுகளில் சிதறி என பார்ப்பதற்கே கஷ்டமாக உள்ளது இதற்கு காரணம் பள்ளியோ,
அரசோ இல்லை பெற்றோர்கள் தான்...
........................................................... .............................. ......
குழந்தையை படிக்க வைக்க வேண்டும்
என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு அது போலத்தான் எனக்கும் 3 வயதாகப்போகும்
குழந்தையை எந்த பள்ளியில் படிக்க வைக்கலாம் என்று விவாதிக்கும் போது பிரபல
தனியார் பள்ளிகள் எல்லாம் தற்போது அப்ளிகேஷன் விற்பனை செய்கிறார்கள் போய்
வாங்குங்கள் என்றது பல பள்ளிகளில் 2013 ஜீன்க்கு எங்க பள்ளியில் அட்மிஷன்
முடிந்துவிட்டது என்றனர். ஒரு பள்ளியில் 1 இலட்சம் டொனேஷன் கொடுத்தால் இடம்
கிடைக்க வாய்ப்பு உண்டு என்கின்றனர். மற்றொரு பள்ளியில் 50 ஆயிரம் டொனேஷன்
வேண்டும் என்றனர் இப்பதானே ஆரம்பித்துள்ளீர்கள் என்ன என்ன
சொல்லித்தரப்போகிறார்கள் என விசாரித்தால் இனி தான் எல்லா பொருளும் வாங்க
வேண்டும் என்கின்றனர். இந்த Play School. PreKG. LKG, UKG கட்டணத்தை
கேட்கும் போது Engineering கட்டணத்தை விட அதிகமாக இருக்கிறது...
எந்த எந்த பள்ளியில் என்ன கேட்டாங்க என்று விரைவில் இதைப்பற்றியான தனி பதிவு இடனும்...
எந்த எந்த பள்ளியில் என்ன கேட்டாங்க என்று விரைவில் இதைப்பற்றியான தனி பதிவு இடனும்...
......................................................... .............................. ........
உலகம் முழுவதும் பல நாடுகளில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. இதன்
காரணமாக உலகம் முழுவதும் வேலை இழப்புகள் அதிகமாகி வருவதாக உலக தொழிலாளர்
அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது 19 கோடியே 70 லட்சம்
பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
அதாவது வேலை செய்யும்
திறனுள்ளவர்களில் 6 சதவீதம் பேருக்கு வேலையில்லை. கடந்த 1 ஆண்டில் மட்டும்
40 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். 24 வயதுக்கு குறைவானவர்களுக்கு வேலை
கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 3 -ல் ஒரு பங்கினர்
ஒரு வருடத்துக்கு மேலாக வேலையில்லாமல் இருப்பதாகவும் உலக தொழிலாளர் அமைப்பு
கூறியிருக்கிறது.
......................................................... .............................. ........
'செக்ஸ்' வீரியத்துக்காக வயாகரா மாத்திரையை ஆண்கள் பயன்படுத்தி வருகின்றனர். 'செக்ஸ்' மட்டுமின்றி உடல் பருமனையும் இந்த மாத்திரை குறைப்பதை நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
ஜெர்மனியில் உள்ள போக் பல்கலைக்கழக நிபுணர்கள் எலிகள் மூலம் இந்த ஆய்வு நடத்தினார்கள். அதில் வயாகரா மாத்திரையினால் அவற்றின் அடிவயிற்றில் படிந்திருந்த தேவையற்ற கொழுப்புகள் கரைந்தன. அதன் மூலம் உடல் பருமன் தடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மனிதர்களுக்கும் வயாகரா மாத்திரை பயன்படுத்தி உடல் பருமனை குறைக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல்
கட்டி பிடித்தால் அதிகரிக்கும் நினைவாற்றல்
அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம், ரத்தக் கொதிப்புகுறைவதோடு, நினைவாற்றல்அதிகரிக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் உள்ள, வியன்னா பல்கலைகழக விஞ்ஞானிகள் நமது உடலில்,பிட்யூட்டரி சுரப்பியால் உருவாக்கப்படும் ஹார்மோனான, ஆக்சிடாக்சினை பரிசோதித்து வந்தனர். அதில், நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், காதலன் அல்லது காதலி, என நம்மை நேசிக்கும்அன்பானவர்களை நாம் கட்டிப்பிடித் தால், "ஆக்சிடாக்சின்' வெளிப்பட்டு, ரத்தக் கொதிப்பு குறைகிறதுஎன்பதை கண்டறிந்துள்ளனர்.மேலும், இதன் மூலம், நினைவாற்றல் மேம்படுவதும் தெரியவந்துள்ளது.ஆனால், நமக்கு முன்பின்அறிமுகம் இல்லாதவர்கள், நம்மை நேசிக்காதவர்கள் ஆகியோரை,கட்டிப்பிடிக்கும்போது, இந்த ஹார்மோன் அதிகம் சுரக்காமல், எதிர் விளைவுகள் ஏற்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, வியன்னா பல்கலைகழக நரம்பியல் விஞ்ஞானி சாண்ட் குக்லர் கூறியதாவது: பெற்றோர், குழந்தைகளைகட்டிப்பிடிக்கும்போ
தினமும் ஒரு 10 தடவையாவது கட்டிப்பிடிங்கப்பா கட்டிப்பிடிங்க...
தத்துவம்
அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
உழைப்பு, மூன்று தீமைகளை களைகிறது. அவை, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை.
எந்த காரியத்திலும் பொறுமை, விடாமுயற்சி இவை இரண்டையும் கடைபிடி வெற்றி உனக்கே....
உழைப்பு, மூன்று தீமைகளை களைகிறது. அவை, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை.
எந்த காரியத்திலும் பொறுமை, விடாமுயற்சி இவை இரண்டையும் கடைபிடி வெற்றி உனக்கே....
உண்மைதான் பொறியியல் படிக்கும் என் மகனுக்கும் ,எல்.கே.ஜி. படிக்கும் நண்பரின் மகனுக்கும் ஒரே கட்டணம்.
ReplyDeleteகமலின் கட்டிப்பிடி வைத்தியம் இதைத்தானே சொன்னது.
இதய நோய் வாய்ப்புகள் கூட குறைகிறதாம்
அஞ்சறைப் பெட்டி அருமை...
ReplyDeleteஇன்று இன்னும் வாசம் அதிகமாய் இருக்கிறது.
கட்டிப்பிடி வைத்தியம் வட இந்தியாவில் அதிகம் உள்ளதோ.கே.ஜி. பள்ளிகள் கொள்ளை தான் அடிக்கின்றன.வயிற்றில் இருக்கும் போதே சென்னை அடையாறு சிஷ்யா பள்ளியில் குழந்தைக்கு அட்மிஷன் வாங்கி விடுகிறார்கள்.
ReplyDeleteசுவையான தகவல்கள்! நன்றி!
ReplyDeleteநந்தி நன்றாக இருக்கின்றது.
ReplyDeleteபல்சுவை தகவல்களுடன் அஞ்சறைப்பெட்டி.
இதற்கு முழுப்பொறுப்பு அரசு அதிகாரிகள் மட்டும் தான். கண்டிப்பான உத்தரவுகளும், அதனை சரியாக கடைபிடிக்கிறார்களா என்று கண்கானித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாத பள்ளிகளை கருணைகாட்டாமல் அரசு கையகப்படுத்தவேண்டும்.
ReplyDeleteநாகு
www.tngovernmentjobs.in