Tuesday, January 1, 2013

புத்தாண்டும் பிறந்தநாளும்...


2013ம் ஆண்டின் முதல் பதிவு கடந்த வருடம் அதிக பதிவு எழுதவில்லை அதற்கு முக்கிய காரணம் சோம்பேறித்தனமும் முகநூலில் அதிக நேரம் செலுத்தியதும் தான். பதிவுலகம் தான் அதிகம் இணையத்தில் உலவுவதற்கு மிக முக்கிய காரணம் நிறைய நண்பர்கள் கிடைத்ததற்கும் பதிவுலகம் தான் காரணம். பதிவுலக நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்...

புத்தாண்டு என்றாலே எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும் அதற்கு மிக முக்கிய காரணம் புத்தாண்டிற்கு அடுத்த நாள் எனது பிறந்தநாள் தான்.. பிறந்தநாள் என்றாலே படு கொண்டாட்டமாகத்தான் இருப்பேன் சிறுவயதில் இருந்து அதற்காக டிசம்பர் மாதத்திலேயே தயாராகிவிடுவேன் துணி எடுப்பதில் இருந்து கொண்டாட்டம் வரைக்கும்.

புத்தாண்டு கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் ஆட்டம் பாட்டத்துடன் இருக்கும் ஆனால் இந்த வருடம் ரொம்ப அமைதியாக ரசித்தேன் புத்தாண்டு கொண்டாட்டத்தை புத்தாண்டு அன்று இரவு காரில் ஊரை ரவுண்டடித்து வீட்டுக்கு செல்லும் போது வழியில் பட்டாசு வெடித்த நண்பர்களிடம் வாழ்த்து வீடு சென்றேன். ஒவ்வொரு ஆண்டும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடியதற்கும் அமைதியாக வேடிக்கை பார்த்ததற்கும் பல மாற்றங்கள் தமிழ்புத்தாண்டை இந்த அளவிற்கு கொண்டாடுவதில்லை என்பது தான் வருத்தமான விசயம்...

நண்பர்களுடன் கொண்டாடிய பிறந்தநாள், மனைவியுடன் கொண்டாடிய பிறந்தநாளை விட கடந்த 2 வருடமாக மகனுடன் கொண்டாடிய பிறந்தநாள் தான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.  அதுவும் இந்த வருடம் மகன் மழலை மொழியில் அப்பா Happy Birthday என்று அவள் அம்மா சொல்ல பின் அவன் சொல்லியதில் தான் எத்தனை மகிழ்ச்சி..

கடந்த வருடங்களை விட இந்த ஆண்டுதான் எனக்கு மிக முக்கிய ஆண்டு இந்த ஆண்டு நான் துவங்க இருக்கும் தொழிலில் வெற்றியடைய வேண்டும் அதற்கான முயற்சியை மிக மேம்படுத்தவேண்டும். எவ்வாறு எல்லாம் முயற்சி மேற்கொண்டால் வெற்றி என்று அதையே நோக்கியே பயணிக்க இருக்கிறேன். இந்த பயணத்தின் வெற்றி அடுத்த ஆண்டில் இறுதியில் தெரியும். இறையவன் அருளாளும் நண்பர்களின் ஆசியோடும் இந்த வருடம் இனிதாக அமைய வேண்டும் என வேண்டுகிறேன்....

எனக்கு புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் போன் மூலமாகவும்,  சாட் வழியாகவும், வலைப்பூ மற்றும் பேஸ் புக் மூலமாக வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...நன்றி...நன்றி....

16 comments:

  1. புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சதிஷ்..
    :)

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
    உங்கள் தொழில் சிறக்க மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. புத்தாண்டு வாழ்த்துகளோடு பிறந்த நாள் வாழ்த்துகளும்... அதோடு நீங்கள் நினைத்தபடி பயணமாகட்டும் நீங்கள் தொடங்கவுள்ள தொழில்...வெற்றி உங்களதாய் அமைய வாழ்த்துகள்

    ReplyDelete
  5. என் மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்
    புத்தாண்டு வாழ்த்துக்களும் நண்பரே...
    செழுமையுடன் செம்மையாக வாழ்ந்திட
    இறைவன் உங்களுக்கு அருள்புரிவார்...

    ReplyDelete
  6. பிறந்தநாள் வாழ்த்துக்களும் தொழில் சிறக்க வாழ்த்துக்களும்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. அன்பு தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  8. பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிதாக துவங்க இருக்கும் தொழிலில் பற்பல வெற்றிகளை குவித்திட வாழ்த்துகிறேன்.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  9. இரட்டை மகிழ்ச்சி தான். அந்த மகிழ்ச்சியும், தளராத உழைப்பும் இன்னும் பல வெற்றிகளை நிச்சயம் கூட்டும்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. பிறந்த நாள் வாழ்த்துக்களை கொஞ்சம் லேட்ட்ட்ட்டா சொல்லிக்குறேன் தம்பி

    ReplyDelete
  12. சங்கவி,

    சம்பளத்தேதிக்கு அருகில் பிறந்த நாள் வாய்த்தாலே இனிமையாக அமையும்(2 ஆம் தேதி பொறந்தவங்க அனுபவம்), அதுவும் புத்தாண்டுக்கு பக்கத்து நாள் அப்போ ரொம்ப இனிமையா இருக்குமே :-))

    ஆங்கில புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  13. பிறந்திருக்கும் ஆண்டு உங்கள் வாழ்வில் சகல செல்வங்களையும் அள்ளித் தரட்டும்.

    இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் சதிஷ்..

    ReplyDelete
  15. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

    ReplyDelete