Thursday, May 30, 2013

அஞ்சறைப்பெட்டி 30/05/2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

கிரிக்கெட் விளையாட்டை பரிட்சைக்கு செல்லாமர் பார்த்த காலம் எல்லாம் உண்டு மேட்ச் பிக்ஸிங்க கேள்விப்பட்டு அசார், ஐடேஜா எல்லாம் வெளியே வந்த போது இருந்து அதில் நாட்டம் குறைந்து விட்டது.. ஐபிஎல் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது லலிச்மோடியின் தில்லாங்கடிக்கு பின் அதையும் பார்ப்பதை தவிர்த்தேன். இப்போது ஐபிஎல்லில் நடப்பதெல்லாம் பார்க்கும் போது தூக்கத்தை கெட்டு மேட்ச் பார்த்தவர்களையும், டீ க்கடையில் நேற்றைய மேட்சை பற்றி பேசுபவர்களையும், அலுலக கேண்டீனில் பெருமை பீத்துபவர்களையும், முகநூலிலும், டிவிட்ட்ர்களிலும் ஐபிஎல் பெருமை பீத்தியவர்களை நினைச்சா சிரிப்பா வருது....
இனியாவது திருந்துங்க மக்களே....
  ................................................................

மீண்டும் ஒரு தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவில் தஞ்சம்.. யாரைக்குற்றம் சொல்வது என்பது தான் புரியாத புதில் இழுத்தவர்களையா அல்லது இழுத்ததும் போய் சேர்ந்தவர்களையா என்று... முடிவாக அரசியலில் இதெல்லாம் சாதாரணம்ப்பா என்று கண்டு கொள்ளாமல் போக வேண்டியது தான்....
..........................................................................................
இந்த வருடம் தென்மேற்கு பரும மழை முன்னதாகவே வந்து விடும் என்றனர். அவர்கள் சொன்னதால் வருணபகவான் கோவிச்சுகிட்டார் போல இன்னும் காணவில்லை.. இந்த வருடம் மழை பொய்த்தால் நிச்சயம் எல்லாரும் தண்ணீருக்கு சிங்கி அடிக்கவேண்டியது தான்... விலைவாசி உயர்வில் முக்கிய இடம் தண்ணீருக்குத்தான் உண்டு. இப்பவே தண்ணீர் பாட்டில் 20 ரூபாய் என்கின்றனர் இனி அந்த விலையை தாண்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
................................................................................................

பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிப்பதற்கான சட்டம் கடந்த 18-ம் தேதி நிறைவேறியது. இதையடுத்து முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் நேற்று கோலாகலமாக நடந்தது.

இதில் நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வின்செண்ட் ஆடினும் புரூனோ பாய்லீயு ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் அந்த ஜோடி, தங்கள் திருமணத்திற்கு வந்திருந்தோர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை வரவேற்று ஒரு புறம் கொண்டாட்டமும், மற்றொரு புறம் எதிர்ப்பு போராட்டமும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.



தகவல்

அண்டத்தில் பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான உல்ப் ரயேட் 104 என்று பெயரிடப்பட்ட நட்சத்திரம் பூமியிலிருந்து 8 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

இது, 5 லட்சம் ஆண்டுகளில் எந்த நேரத்திலும் தீப்பிளம்பாக வெடித்துச் சிதறலாம் என்று அமெரிக்க விஞ்ஞானி கிரான்ட் ஹில் தெரிவித்துள்ளார். அப்படி வெடிக்கும் போது, அதிலிருந்து தீங்கு விளைவிக்கக் கூடிய காமா கதிர்கள் வெளியேறும். அதன் கதிரியக்க வேகத்தைப் பொருத்து, பூமியின் மீதான தாக்கமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலத்தில் நான்கில் ஒரு பகுதி அழிந்து விடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக பூமியை அடையும் புற ஊதாக் கதிர்களின் அளவில் 50 சதவீதம் அதிகரிக்கும். பூமியின் வெப்ப நிலையும் உயரும் என்று அவர் கூறியுள்ளார்.

தத்துவம்

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான். 

உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.

செய்வதற்கு சில, நேசிப்பதற்குச் சில, மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில, இவைகளே மகிழ்ச்சியின் தேவைகள்...


Monday, May 27, 2013

குடிமகன்களின் சொர்க்கம் ஆசனூர்...

பால்ய நண்பர்களோடு வருசத்துக்கு 3 முறை ஊர் சுற்றுவது வழக்கம் கடந்த வருடத்தில் பாண்டிச்சேரியும் அதற்கு பின் தாமரைக்கரையும் சென்று வந்தாச்சு இந்த முறை எங்க போகலாம் என்று யோசித்தோம் நாம் போவது சரக்கடிச்சு சந்தோசமாக தூங்குவதற்குத்தான் அதற்கான இடத்தை தேடியபோது நிறைய நண்பர்கள் அதாவது கோவை, ஈரோடு, சேலம் பகுதியில் உள்ளவர்கள் உடனே சொன்னது ஆசனூர் தான்.




ஆசனூர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு அருகில் மேற்குதொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரமுள்ள பகுதி. கர்நாடக மாநில எல்லை அருகே அமைந்துள்ளது. எப்போதும் பசுமையாய் சில்லென்ற குளிர் காற்றுடன் அமைந்த இடம். இது 10 வருடங்களுக்கு முன் சுற்றுலாத்தளம் அல்ல ஆனால் இன்று சுற்றுலாத்தளம் ஆக்கப்பட்ட இடம்.. இந்த வனப்பகுதியில் வன விலங்குகள் சாலையோரம் நடந்து செல்வதையும், தண்ணீர் குடிக்க வருவதையும் பார்க்கலாம் இது தான் ஆசனூர் வனப்பகுதி.


அங்குள்ள ரிசாட்டுகளை நண்பர்கள் மூலம் தேடினோம் அவர்கள் சொன்னதில் நீச்சல் குளத்துடன் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்து முன்பணமும் கொடுத்தாச்சு.

காலை ஏழுமணிக்கு நண்பர்கள் எல்லாம் சத்தியில் ஒன்று கூடுவது என்று முடிவெடுத்து சென்னையில் இருந்து வந்த நண்பர்கள் ஈரோடு வந்து அங்கிருந்து சத்தி வந்தனர். சத்தியில் நாட்டுக்கோழியும், மட்டனும் வெட்ட ஆர்டர் கொடுத்துவிட்டு சாப்பிட இடம் தேடினோம்....
சத்தியமங்கலத்தில் காலை டிபன் சாப்பிடவேண்டி இருந்ததால் காலை டிபனுக்கு இட்லி குடல்கறி எங்கே கிடைக்கும் என்று விசாரித்ததில் பஸ் நிலையம் அருகில் கோபி சாலையில் அன்னலட்சுமி என்றொரு உணவகத்தை கை காட்டினர்... நாங்கள் உள்ளே போகும் போது தலைக்கறி ரெடி குடல் 5 நிமிடம் ஆகும் என்றனர் சரி என்று முதலில் இட்லி தலைக்கறி ஆர்டர் செய்தோம் அருமையான இட்லியுடன் தலைக்கறி உள்ளே சென்றதே தெரியவில்லை தேங்காய் போட்டு அருமையாக செய்திருந்தனர்.. அடுத்து குடல் குழம்பு குடலோடு இட்லியை காலக்காமலே காலி செய்தோம் 4 ப்ளேட் கடலை விலையோ மிக குறைவு ஒரு ப்ளேட் 35 தான்... சத்தியமங்கலம் பக்கம் போனீங்கன்னா நிச்சயம் சாப்பிடலாம் குடல்கறியையும், தலைக்கறியையும்...
சத்தியில் சாப்பிட்டது சரக்கு குறைவாக வாங்கியதை அப்போது தான் உணர்ந்து நண்பர்களுக்கு போனைப்போட்டு கேட்டால் அங்க கடையில்க்கு இல்லை என்றால் பக்கத்தில் கொழுஞ்சியுரில் கர்நாடக கடை இருக்கு சந்தோசமாக போங்க என்ற உடன் இரு கார்களில் 7 பேர் பயணம் துவங்கியது சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரிக்கு..
பண்ணாரி போகும் வழியிலேயே வனவிலங்குகள் நடமாடும் பகுதி அதனால் சப்தம் எழுப்பாதீர் என போர்டுகள் வனத்துறையினரால் நிறைய வைக்கப்பட்டு இருந்தது யாணைகள் செல்லும் பகுதி என்றால் யாணை நடமாட்டம் உள்ள பகுதி என்றும் எழுதி இருந்தனர். பண்ணாரி சென்றதும் மலைப்பாதை துவங்கியது இந்த மலைப்பாதியில் 27 கொண்டை ஊசி வலைவுகள் உள்ளது நல்ல பயிற்சி உடைய ஓட்டுநராக இருந்தால் தான் வாகனத்தை இயக்குவதில் சிரமம் இருக்காது.. இல்லையேல் கரணம் தப்பினால் மரணம் தான் என்ற வகையில் இருந்தது 27 கொண்டை ஊசி வலைவுகளில் 27, 20, 7 வது வளைவுகள் தான் மிக ஆபத்தானவை அங்கு மிக எச்சரிக்கையாக வண்டியை இயக்கவேண்டும்...  இந்த கொண்டை ஊசிவ வளைவில் செல்வது ஒரு சுகமான த்ரிலிங்கான அனுவம் என்று தான் நிச்சயம் சொல்லோம்...
கொண்டை ஊசி வளைவுகளில் ஏறும் போது கீழே உள்ள வலைவுகள் ஆறு போல வளைந்து செல்வதை காணக்கோடிக் கண் பத்தாது... அடுத்து காட்டு ஆற்று வெள்ளம் செல்லும் பகுதிகள் வழி நெடுக நம் முன்னோர்களான குரங்குகள் என ஆச்சர்யம் கொள்ளும் வகையில் இருந்தது.. வண்டியில் ஓட்டுநரை தவிர மற்றவர்கள் கண் எல்லாம் எதாவது வனவிலங்குகள் தெரியுமா என்று தான் தேடிக்கொண்டு இருக்கும் நிச்சயம். 27 வது வளைவில் பவானிசாகர் அணையும், பக்கத்தில் உள்ள சத்தியமங்கலம் போன்ற ஊர்களும் தெரிந்தது அழகாக.. வளைவுகளில் இருந்து மேலே செல்லும் போது திம்பம் வனப்பகுதி ஆரம்பிக்கிறது திம்பம் பெரிய ஊர் என்று நினைத்தேன் போன பின்தான் தெரிஞ்சது அங்கு இருப்பது ஒரே ஒரு டீக்கடை மட்டும் தான் என்று அடுத்த சில கிலோமீட்டர் தூரத்தில் அடைந்தோம் ஆசனூரை...
போகும் வழியிலேயே தெரிந்தது நிறைய ரிசாட்டுக்கள் மற்றும் பண்ணை வீடுகள் எல்லாவற்றிற்கும் ஆள் உண்டு சமைச்சு தர.. தரமான உணவு வேண்டுமெனில் நம்ம ஊர் சமையல்காரரை கூட்டிச்செல்வது தான் நல்லது அங்கு உள்ள நல்ல சமையல்காரர்கள் எல்லாம் முன்னாடியே புக் செய்து விடுகின்றனர்...
நீச்சல் குளத்துடன் கூடிய அறையில் தங்கி நன்றாக சாப்பிட்டுவிட்டு சாப்பிட்டுவிட்டு குளிப்பது தான் பொழுது போக்கு நண்பர்களுடன் அளவாடியே அன்றைய பொழுது இனிதானது...
காலையில் சரக்கு வேண்டும் என பக்கத்தில் உள்ள கர்நாடக எல்லை ஊருக்கு குளிஞ்சியூர் சென்றோம் அங்கு உள்ள தனியார் மதுபானக்கடையில் எல்லா வகையான மதுக்களும் நிறைய வெளிநாட்டு மதுபான வகைகள் என வித விதமாக இருந்தது... நம்ம ஊரில் கிடைக்காத சரக்கெல்லாம் அங்கு கிடைக்கிறது விலை எம்ஆர்பியை விட அதிகம் தான் ஏன் என்று கேட்டால் இது தனியார்கடை இங்கு இது தான் வாங்க விருப்பம் இருந்தால் வாங்கலாம் என்றனர். சரி என நம் தேவைக்கு வாங்கிவிட்டு பக்கத்தில் உள்ள பாருக்கு சென்றால் ஆமலெட் பேமஸ் என்றனர் அங்கு ஆம்லெட், குஸ்கா, மட்டன் எல்லாம் காரம் துக்கலாக குளிர் காற்றுக்கு ஏற்றவாறு சரக்கோடு உள்ளே செல்ல நமக்கும் குதுகலமே...
திரும்பி வரும் வேலையில் நிறைய யாணைகளைப்பார்த்தோம் இரண்டு குட்டிகளுடன் ஒரு யாணை சாப்பிட்டுக்கொண்டு இருந்ததை ஒரமாக ரசித்து பார்த்தோம் அப்போது அங்கு வந்து போட்டோ எடுத்துவிட்டு ரசிச்சு சென்ற ஒரு வண்டி வேண்டும் என்றே வாகனத்தின் சப்தம் எழுப்பி யாணையை உசுப்பிவிட்டனர் இருந்த சுதியில் அறிஇருக்காய்யா அது அழகா இருப்பதை ரசிக்கவேண்டியது தானே என பைக்காரர் கத்தது சும்மா என்று வேகமா சென்றனர் அந்த முட்டாள்கள்... விலங்குகள் இருக்கும் இடத்திற்கு நாம் செல்லும் போது அவைகளுக்கு இடையூரு செய்யாமல் ரசிப்பது தான் அழகு.. புகைப்படம் எடுக்க முயற்சிக்கலாம் ஆனால் அது விலங்குகளை இடையூரு செய்யாமல் இருக்கவேண்டும்... 
வனப்பகுதியில் நான் அதிகம் கண்ட விசயம் அங்கு வரும் அனைவரும் ப்ளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தான் இன்று அது நமக்கு சந்தோசமாக இருக்கலாம் ஆனால் அந்த இயற்கைக்கு இது கெடுதலான விசயம்.. நாங்கள் அங்கு சென்றது எங்கள் சந்தோசத்திற்குத்தான் அந்த இடங்களில் காடுகள் அழிக்கப்பட்டும், வனவிலங்குகளுக்கு நம் மக்கள் தொந்தரவு அளிக்கின்றனர் என்பதை பார்க்கும் போது வேதனையாகத்தான் உள்ளது...

Friday, May 24, 2013

MLA வும் மக்கள் மனசும்.... (புதிய தலைமுறை)

புதிய தலைமுறை செய்திகள் இன்றும் பரவலாக அனைத்து மக்களும் தினமும் பார்க்கும் ஒரு செய்தி சேனலாக இருக்கின்றது.. செய்தின் தரங்களும் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பும் பாராட்டப்படவேண்டியது.. கோவை தீ விபத்து சமையத்தில் உடனடியாக அனைத்து மக்களை இந்த செய்தி சென்றடைந்ததற்கு மிக முக்கிய காரணம் புதிய தலைமுறை என்பது மறுக்க முடியாத உண்மை...

புதிய தலைமுறையில் கடந்த நான்கு நாட்களாக என்னை விரும்பி பார்க்க வைத்த நிகழ்ச்சி 234 தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களில் முதல் 50 பேர் யார் என்ற தொகுப்பு மிக கவர்ந்தது...

நாம் பள்ளியில் படிக்கும் போது நாம் என்ன செய்தோம் என்பதற்காக டெஸ்ட் வைத்து ரேங்க கொடுப்பர் அதுவுமில்லாமல் தற்போது எல்லாம் நிறுவனங்களில் பயிற்சி கொடுத்தால் அந்த பயிற்சி பற்றி கேள்விகள் கேட்கப்பட்டு தரவரிசை கொடுப்பது வழக்கமான ஒன்று தான்.. அது போல் சட்டமன்ற உறுப்பின்ர்களுக்கு தரவரிசை என்பது நிச்சயம் வேண்டும் அப்போது தான் அந்த உறுப்பினர்கள் தம் தொகுதி மக்கள் நம் மேல் என்ன நம்பிக்கை வைத்துள்ளனர் என்று அவர்களுக்கும் இவர்களுக்கு அடுத்த தேர்தலில் சீட் கொடுக்கலாமா வேண்டாமா என்று தலைமையும் முடிவெடுக்க பயன்படும்..

என்னைப்பொறுத்த வரை 234 தொகுதிகளில் முதல் 50 இடங்களைப்பிடித்த அனைவருமே மக்கள் மனதில் இடம் பிடித்த சட்டமன்ற உறுப்பினர்கள் தான். இதில் அதிக முறை எம்எல்ஏக்கள்களாக உள்ளவர்கள் மற்றும் புதியவர்கள்  இடம் பெற்றுள்ளனர் என்பது மகிழ்வான செய்தி..

சட்டமன்ற உறுப்பினர்கள் போல மக்களவை உறுப்பினர்களுக்கும் இதை போல மக்கள் மனதில் என்ன இருக்கின்றது என்பதை அறிய எங்களுக்கெல்லாம் ஆவா...

மக்களிடம் எப்படி கேள்வி கேட்டு எந்த மாதிரி தேர்ந்தெடுத்தார்கள் அதற்கு என்ன மதிப்பெண் கொடுத்தார்கள் என்பதை பற்றி பார்ப்போம்...

1.வாக்குறுதியை நிறைவேற்றுதல் - இதுக்கு 20 மார்க்

2.தொகுதிக்கு வருதல் -இதுக்கு 10 மார்க்

3.அணுக முடிவதில் (அதாவது அந்த MLA-வை எவ்ளோ எளிமையா அணுகலாம்) -இதுக்கு 20 மார்க்

4.இவரின் நிறை குறைகள் - இதுக்கு 10 மார்க்

5.இவரை பற்றிய மக்களின் அபிப்ராயம் -இதுக்கு 40 மார்க்

மொத்தமா 100 மார்க்

இந்த வகையில் கேள்விகளை பிரித்து மக்களிடம் கருத்தை கேட்டுள்ளனர்.. அதில் சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடு மற்றும் மதிப்பெண் கொடுத்துள்ளனர்...

இந்த நிகழ்ச்சியில் அரசியல் விமர்ச்சகர் ஞாநி அவர்களின் பார்வையில் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவனாகவும் அரசியல் பார்வையாளர்கள் அறியவேண்டியதும் நிறைய உள்ளது...

அந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் 234 சட்டமன்ற உறுப்பினர்களில் நிச்சம் நம்ம சட்டமன்ற உறுப்பினர் வருவரா என்று ஏங்கிப்பார்த்தவர்களில் நானும் ஒருவன்...

கருத்துகணிப்பு சரியோ தவறோ ஆனால் நம்ம ஊர் சட்டமன்ற உறுப்பினரில் செயல் பாட்டால் அவர் டாப் 50இல் இருக்கிறார் என்றாம் நமக்கு சந்தோசம் தானே...  

Wednesday, May 1, 2013

அஞ்சறைப்பெட்டி 02.05.2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவின் மது ஒழிப்பு காரணம் சரியான ஒன்று தான் ஆனால் இவர் நடைபயணம் செய்வதால் அரசாங்கம் டாஸ்மார்க்கை மூடவேண்டும் என்று எதிர்பார்த்தால் அது ஏமாற்றமே... அரசாங்கத்தின் பாதி வருமாணம் டாஸ்மார்க்கில் இருந்து தான் வருகிறது என்று அனைவருக்கும் தெரியும் இருந்தும் போராட்டம் நடத்துவது கட்சியின் விளம்பரத்துக்குத்தான் என்பது அனைவரும் அறியாதது இல்லை...

டாஸ்மார்க்கை மூட சொல்லி போராட்டம் நடத்துவதற்கு பதில் குடிப்பதனால் ஏற்படும் தீமைகளை நன்றாக விளக்கி ஒவ்வொரு குடிமகனையும் குடிப்பதை குறைக்க வைக்கலாம் நிச்சயம் அவர்கள் நிறுத்தமாட்டார்கள் ஆனால் குடியின் அளவை குறைக்கவைக்க முடியும்...
  ................................................................
மீண்டும் ஒரு ஜாதிப்பிரச்சனை வந்து தமிழகத்தில் பல இடங்களில் பொது சொத்துக்கள் சேதம் என்கிறது செய்தி... ஜாதி அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்பதை இன்னும் அறியாமல் இருக்கின்றனர் என்பது தான் வருந்தத்தக்க செய்தி...

..........................................................................................

நமது நட்பு நாடுகள் எல்லாம் நமக்கு துரோகங்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றன ஆனால் நாம் தான் அவர்கள் நம் நண்பர்கள் என்று தூக்கிப்பிடித்துக்கொண்டு இருக்கிறோம்... தவறுகள் ஏற்படும் போது நட்பு நாடுகளை கடுமையாக கண்டிக்க வேண்டுகிறோம்..
................................................................................................

டச்சு நாட்டில் இயங்கி வரும் லாப நோக்கமற்ற ஓர் நிறுவனம், வரும் 2023ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மக்களை நிரந்தரமாக குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

'ஒருவழிப் பயணமாக செவ்வாய் கிரகத்திற்கு செல்ல விரும்புவோர் தங்களது பெயர்களை பதிவு செய்துக் கொள்ளலாம்' என 4 தினங்களுக்கு முன்னர் அந்நிறுவனம் விளம்பரம் செய்தது.

செவ்வாய் கிரகத்தில், ஆண்டின் 6 மாத காலத்திற்கு தொடர்ந்து பூமியை தாக்கும் சாதாரண புயலை விட 6 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும், இந்த வானிலை அறிக்கையைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நான்கே நாட்களில் செவ்வாய் கிரகத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து சுமார் 20 ஆயிரம் பேர் மனு செய்துள்ளனர்.

இவர்களில் 600 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
...............................................................................................

ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த 19ம்தேதி நள்ளிரவு மாணிக்காலாந்து மாகாணத்தில் உள்ள முடாரே நகரில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி 'லிப்ட்' கேட்டார். காரினுள் இருந்த ஒரு ஆணும், 2 பெண்களும் அவரை ஏற்றிக்கொண்டனர்.

சற்றுதூரம் சென்றதும் கார் வேறு வழியாக செல்வதைக் கண்ட ராணுவ வீரர், தன்னை இறக்கிவிடும் படி கூறியபோது, காரை ஓட்டிய நபர் கத்தியைக் காட்டி மிரட்டினார்.

பெண்களில் ஒருத்தி அவரது கண்ணை துணியால் கட்டினாள். அடையாளம் தெரியாத இடத்தில் தனிமையான ஒரு வீட்டிற்கு ராணுவ வீரரை அவர்கள் கடத்திச் சென்றனர். அங்கு அவரது ஆடைகளை கழற்றி, நிர்வாணப்படுத்தி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்ட 2 பெண்களும் பலவந்தமாக அவருடன் உடலுறவில் ஈடுபட்டனர்.

2 பெண்களும் அவருடன் 4 நாட்கள் மாறி, மாறி பலமுறை கட்டாய உடலுறவில் ஈடுபட்ட பின்னர், கடந்த 23ம் தேதி மீண்டும் கண்ணைக் கட்டி காரில் அழைத்து வந்து முடாரே நகர் அருகில் உள்ள டங்கமுவாரா மலைப் பகுதியில் இறக்கி விட்டனர். மலையோரம் இருந்த பெரிய கல்லை எடுத்து அவரது இடது காலை காயப்படுத்தி விட்டு அவர்கள் காரில் தப்பிச் சென்றனர்.

ராணுவ வீரர் முடாரே நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்களையும், அவர்களுடன் இருந்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தகவல்

துவைக்காமல், இஸ்திரி போடத் தேவையில்லாமல், தொடர்ந்து 100 நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சட்டையை அமெரிக்காவின் உல் & பிரின்ஸ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உல்லன் நூல் கலந்த துணிகள் கசங்காது, வியர்வை வாடையை வெளியிடாத தன்மை கொண்டது. காட்டனைவிட ஆறு மடங்கு உழைக்கக்கூடியது என்பதால் இந்த வகைத் துணியில் நவீன காலத்திற்கு ஏற்ப ஆழ்நீலகலரில் சிறிய கட்டங்கள் கொண்ட சட்டையை வெளியிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது

இதனை அணிந்து பார்க்க, நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் தாங்கள் எப்படி உபயோகித்தாலும் சட்டைகள் புதிது போலவே இருக்கின்றன என்று கூறுகின்றார்கள். நிறுவன அதிபர் மாக் பிஷப் ஒரே சட்டையை 100 நாட்கள் அணிந்துகொண்டு தெருவில் அனைவரிடமும் அது குறித்த கருத்தினைக் கேட்பது போலவும் அவர்கள் அனைவரும் ஆதரவான கருத்தினை வெளியிடுவதுவும் போன்ற வீடியோ விளம்பரங்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எல்லோரும் விரும்பும் விதத்திலும், எப்போதும் அணியக் கூடிய வடிவத்திலும் ,சாதாரண விலைமதிப்பிலும் இந்த சட்டைகளை உருவாக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தங்களது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

தத்துவம்

பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ளவும், உழைக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்...


உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால், எதிலும் மிதமாக இரு...


கடமையை செய்யும்போது வெகுமதியை எதிர்பார்க்ககூடாது...