Monday, May 27, 2013

குடிமகன்களின் சொர்க்கம் ஆசனூர்...

பால்ய நண்பர்களோடு வருசத்துக்கு 3 முறை ஊர் சுற்றுவது வழக்கம் கடந்த வருடத்தில் பாண்டிச்சேரியும் அதற்கு பின் தாமரைக்கரையும் சென்று வந்தாச்சு இந்த முறை எங்க போகலாம் என்று யோசித்தோம் நாம் போவது சரக்கடிச்சு சந்தோசமாக தூங்குவதற்குத்தான் அதற்கான இடத்தை தேடியபோது நிறைய நண்பர்கள் அதாவது கோவை, ஈரோடு, சேலம் பகுதியில் உள்ளவர்கள் உடனே சொன்னது ஆசனூர் தான்.




ஆசனூர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு அருகில் மேற்குதொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரமுள்ள பகுதி. கர்நாடக மாநில எல்லை அருகே அமைந்துள்ளது. எப்போதும் பசுமையாய் சில்லென்ற குளிர் காற்றுடன் அமைந்த இடம். இது 10 வருடங்களுக்கு முன் சுற்றுலாத்தளம் அல்ல ஆனால் இன்று சுற்றுலாத்தளம் ஆக்கப்பட்ட இடம்.. இந்த வனப்பகுதியில் வன விலங்குகள் சாலையோரம் நடந்து செல்வதையும், தண்ணீர் குடிக்க வருவதையும் பார்க்கலாம் இது தான் ஆசனூர் வனப்பகுதி.


அங்குள்ள ரிசாட்டுகளை நண்பர்கள் மூலம் தேடினோம் அவர்கள் சொன்னதில் நீச்சல் குளத்துடன் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்து முன்பணமும் கொடுத்தாச்சு.

காலை ஏழுமணிக்கு நண்பர்கள் எல்லாம் சத்தியில் ஒன்று கூடுவது என்று முடிவெடுத்து சென்னையில் இருந்து வந்த நண்பர்கள் ஈரோடு வந்து அங்கிருந்து சத்தி வந்தனர். சத்தியில் நாட்டுக்கோழியும், மட்டனும் வெட்ட ஆர்டர் கொடுத்துவிட்டு சாப்பிட இடம் தேடினோம்....
சத்தியமங்கலத்தில் காலை டிபன் சாப்பிடவேண்டி இருந்ததால் காலை டிபனுக்கு இட்லி குடல்கறி எங்கே கிடைக்கும் என்று விசாரித்ததில் பஸ் நிலையம் அருகில் கோபி சாலையில் அன்னலட்சுமி என்றொரு உணவகத்தை கை காட்டினர்... நாங்கள் உள்ளே போகும் போது தலைக்கறி ரெடி குடல் 5 நிமிடம் ஆகும் என்றனர் சரி என்று முதலில் இட்லி தலைக்கறி ஆர்டர் செய்தோம் அருமையான இட்லியுடன் தலைக்கறி உள்ளே சென்றதே தெரியவில்லை தேங்காய் போட்டு அருமையாக செய்திருந்தனர்.. அடுத்து குடல் குழம்பு குடலோடு இட்லியை காலக்காமலே காலி செய்தோம் 4 ப்ளேட் கடலை விலையோ மிக குறைவு ஒரு ப்ளேட் 35 தான்... சத்தியமங்கலம் பக்கம் போனீங்கன்னா நிச்சயம் சாப்பிடலாம் குடல்கறியையும், தலைக்கறியையும்...
சத்தியில் சாப்பிட்டது சரக்கு குறைவாக வாங்கியதை அப்போது தான் உணர்ந்து நண்பர்களுக்கு போனைப்போட்டு கேட்டால் அங்க கடையில்க்கு இல்லை என்றால் பக்கத்தில் கொழுஞ்சியுரில் கர்நாடக கடை இருக்கு சந்தோசமாக போங்க என்ற உடன் இரு கார்களில் 7 பேர் பயணம் துவங்கியது சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரிக்கு..
பண்ணாரி போகும் வழியிலேயே வனவிலங்குகள் நடமாடும் பகுதி அதனால் சப்தம் எழுப்பாதீர் என போர்டுகள் வனத்துறையினரால் நிறைய வைக்கப்பட்டு இருந்தது யாணைகள் செல்லும் பகுதி என்றால் யாணை நடமாட்டம் உள்ள பகுதி என்றும் எழுதி இருந்தனர். பண்ணாரி சென்றதும் மலைப்பாதை துவங்கியது இந்த மலைப்பாதியில் 27 கொண்டை ஊசி வலைவுகள் உள்ளது நல்ல பயிற்சி உடைய ஓட்டுநராக இருந்தால் தான் வாகனத்தை இயக்குவதில் சிரமம் இருக்காது.. இல்லையேல் கரணம் தப்பினால் மரணம் தான் என்ற வகையில் இருந்தது 27 கொண்டை ஊசி வலைவுகளில் 27, 20, 7 வது வளைவுகள் தான் மிக ஆபத்தானவை அங்கு மிக எச்சரிக்கையாக வண்டியை இயக்கவேண்டும்...  இந்த கொண்டை ஊசிவ வளைவில் செல்வது ஒரு சுகமான த்ரிலிங்கான அனுவம் என்று தான் நிச்சயம் சொல்லோம்...
கொண்டை ஊசி வளைவுகளில் ஏறும் போது கீழே உள்ள வலைவுகள் ஆறு போல வளைந்து செல்வதை காணக்கோடிக் கண் பத்தாது... அடுத்து காட்டு ஆற்று வெள்ளம் செல்லும் பகுதிகள் வழி நெடுக நம் முன்னோர்களான குரங்குகள் என ஆச்சர்யம் கொள்ளும் வகையில் இருந்தது.. வண்டியில் ஓட்டுநரை தவிர மற்றவர்கள் கண் எல்லாம் எதாவது வனவிலங்குகள் தெரியுமா என்று தான் தேடிக்கொண்டு இருக்கும் நிச்சயம். 27 வது வளைவில் பவானிசாகர் அணையும், பக்கத்தில் உள்ள சத்தியமங்கலம் போன்ற ஊர்களும் தெரிந்தது அழகாக.. வளைவுகளில் இருந்து மேலே செல்லும் போது திம்பம் வனப்பகுதி ஆரம்பிக்கிறது திம்பம் பெரிய ஊர் என்று நினைத்தேன் போன பின்தான் தெரிஞ்சது அங்கு இருப்பது ஒரே ஒரு டீக்கடை மட்டும் தான் என்று அடுத்த சில கிலோமீட்டர் தூரத்தில் அடைந்தோம் ஆசனூரை...
போகும் வழியிலேயே தெரிந்தது நிறைய ரிசாட்டுக்கள் மற்றும் பண்ணை வீடுகள் எல்லாவற்றிற்கும் ஆள் உண்டு சமைச்சு தர.. தரமான உணவு வேண்டுமெனில் நம்ம ஊர் சமையல்காரரை கூட்டிச்செல்வது தான் நல்லது அங்கு உள்ள நல்ல சமையல்காரர்கள் எல்லாம் முன்னாடியே புக் செய்து விடுகின்றனர்...
நீச்சல் குளத்துடன் கூடிய அறையில் தங்கி நன்றாக சாப்பிட்டுவிட்டு சாப்பிட்டுவிட்டு குளிப்பது தான் பொழுது போக்கு நண்பர்களுடன் அளவாடியே அன்றைய பொழுது இனிதானது...
காலையில் சரக்கு வேண்டும் என பக்கத்தில் உள்ள கர்நாடக எல்லை ஊருக்கு குளிஞ்சியூர் சென்றோம் அங்கு உள்ள தனியார் மதுபானக்கடையில் எல்லா வகையான மதுக்களும் நிறைய வெளிநாட்டு மதுபான வகைகள் என வித விதமாக இருந்தது... நம்ம ஊரில் கிடைக்காத சரக்கெல்லாம் அங்கு கிடைக்கிறது விலை எம்ஆர்பியை விட அதிகம் தான் ஏன் என்று கேட்டால் இது தனியார்கடை இங்கு இது தான் வாங்க விருப்பம் இருந்தால் வாங்கலாம் என்றனர். சரி என நம் தேவைக்கு வாங்கிவிட்டு பக்கத்தில் உள்ள பாருக்கு சென்றால் ஆமலெட் பேமஸ் என்றனர் அங்கு ஆம்லெட், குஸ்கா, மட்டன் எல்லாம் காரம் துக்கலாக குளிர் காற்றுக்கு ஏற்றவாறு சரக்கோடு உள்ளே செல்ல நமக்கும் குதுகலமே...
திரும்பி வரும் வேலையில் நிறைய யாணைகளைப்பார்த்தோம் இரண்டு குட்டிகளுடன் ஒரு யாணை சாப்பிட்டுக்கொண்டு இருந்ததை ஒரமாக ரசித்து பார்த்தோம் அப்போது அங்கு வந்து போட்டோ எடுத்துவிட்டு ரசிச்சு சென்ற ஒரு வண்டி வேண்டும் என்றே வாகனத்தின் சப்தம் எழுப்பி யாணையை உசுப்பிவிட்டனர் இருந்த சுதியில் அறிஇருக்காய்யா அது அழகா இருப்பதை ரசிக்கவேண்டியது தானே என பைக்காரர் கத்தது சும்மா என்று வேகமா சென்றனர் அந்த முட்டாள்கள்... விலங்குகள் இருக்கும் இடத்திற்கு நாம் செல்லும் போது அவைகளுக்கு இடையூரு செய்யாமல் ரசிப்பது தான் அழகு.. புகைப்படம் எடுக்க முயற்சிக்கலாம் ஆனால் அது விலங்குகளை இடையூரு செய்யாமல் இருக்கவேண்டும்... 
வனப்பகுதியில் நான் அதிகம் கண்ட விசயம் அங்கு வரும் அனைவரும் ப்ளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தான் இன்று அது நமக்கு சந்தோசமாக இருக்கலாம் ஆனால் அந்த இயற்கைக்கு இது கெடுதலான விசயம்.. நாங்கள் அங்கு சென்றது எங்கள் சந்தோசத்திற்குத்தான் அந்த இடங்களில் காடுகள் அழிக்கப்பட்டும், வனவிலங்குகளுக்கு நம் மக்கள் தொந்தரவு அளிக்கின்றனர் என்பதை பார்க்கும் போது வேதனையாகத்தான் உள்ளது...

16 comments:

  1. சுவையான பகிர்வு! படங்கள் அழகு சேர்த்தன! நன்றி!

    ReplyDelete
  2. சுவையான பகிர்வுதான். ஆனா குடிக்காதே மச்சி. உன் உடம்பு கெட்டுப்போயிடும். காட்டுல பாத்தியே எந்த மானாவது குடிச்சுட்டு சிங்கத்துக்கிட்ட போய் உளரி இருக்குதா?

    ReplyDelete
  3. "தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?" என்னும் பாரதியின் வரிகளை நேசிக்கும் உங்களில் ஒருவன்...

    காலையில் சரக்கு வேண்டும் என பக்கத்தில் உள்ள கர்நாடக எல்லை ஊருக்கு குளிஞ்சியூர் சென்றோம் அங்கு உள்ள தனியார் மதுபானக்கடையில் எல்லா வகையான மதுக்களும் நிறைய வெளிநாட்டு மதுபான வகைகள் என வித விதமாக இருந்தது... நம்ம ஊரில் கிடைக்காத சரக்கெல்லாம் அங்கு கிடைக்கிறது விலை எம்ஆர்பியை விட அதிகம் தான் ஏன் என்று கேட்டால் இது தனியார்கடை இங்கு இது தான் வாங்க விருப்பம் இருந்தால் வாங்கலாம் என்றனர். சரி என நம் தேவைக்கு வாங்கிவிட்டு பக்கத்தில் உள்ள பாருக்கு சென்றால் ஆமலெட் பேமஸ் என்றனர் அங்கு ஆம்லெட், குஸ்கா, மட்டன் எல்லாம் காரம் துக்கலாக குளிர் காற்றுக்கு ஏற்றவாறு சரக்கோடு உள்ளே செல்ல நமக்கும் குதுகலமே...


    ReplyDelete
  4. ஒத்தைப் பிள்ளை வேண்டாமே


    ஒத்தைப் பிள்ளை போதுமின்னு
    ஒய்யாரம் செய்யும் நண்பா
    சத்தியமா தப்பு தான்னு
    இப்போதே சொல்லி விட்டேன்

    சொத்து பத்து இல்லாட்டி
    சொந்தம் மட்டும் இருந்தாலே
    பத்துத் துயர் போக்கிடவே
    பக்கத் துணை இருப்பாரே

    மிச்சம்மீதி அன்பை எங்கே
    மீண்டும் தேடித் போவதெங்கே
    சொத்தப் புள்ளை ஒத்தையாக
    சோகமாக இருக்கு நண்பா

    உத்தரவும் போட வில்லை
    உருப்படியா சொல்ல வில்லை
    ஒத்தையாலே நெஞ்சைக் குத்தி
    ஓய்வே இல்லாமப் போச்சி

    சத்தியமா சொல்லி விட்டேன்
    ஒத்தப் புள்ள வேண்டாங்க
    மிச்ச உயிரும் போகுமுன்னே
    சொச்சம் ஒன்னும் பெத்துக்கோங்க


    ReplyDelete
  5. நல்ல பதிவு. இந்த மாதிரி சுற்றுலாதலங்கள் தமிழகத்தில் இருப்பது இது போன்ற பதிவுகளின் வாயிலாகத்தான் தெரிகிறது. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  6. //காடுகள் அழிக்கப்பட்டும், வனவிலங்குகளுக்கு நம் மக்கள் தொந்தரவு அளிக்கின்றனர் என்பதை பார்க்கும் போது வேதனையாகத்தான் உள்ளது..//

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  7. நீண்ட நாட்களின் பின்( ஒருவருடத்துக்கு மேல்) உங்கள் வலைப்பக்கம் வந்தேன்.
    படங்களுடன் பகிர்வு அருமை. குடும்ப சூழ் நிலை யால் வலைபக்க ம் வ ருவ்தில்லை. பொறுப்புக்கள் அதிகம். நேரமின்மை.

    ReplyDelete
  8. Hеllo juѕt wanted to give yοu a brief hеadѕ up and let you know a fеw of the pictureѕ aren't loading properly. I'm not
    sure why but I think its a linking issuе.
    І've tried it in two different web browsers and both show the same results.

    My homepage ... Crear facebook gratis

    ReplyDelete
  9. ஊர் பெயரே ஒரு மாதிரி இருக்கே ஹி ஹி...

    ReplyDelete
  10. என்னை கூப்பிடாம போனதுக்கு வன்மையான கண்டங்கள் ச்சே கண்டனங்ககள் ஆமா...

    ReplyDelete
  11. கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே

    நேத்துநானே சொல்லிபுட்டேன்
    நேரத்தோடு வந்து விட்டேன்
    காத்திருந்து வாசல்வரைக்
    கண்டவுடன் துள்ளி ஓடுறாயே

    ஊர்ச் சனமும் வந்திடுச்சு
    உறவுகளும் இங்கே கூடிடிச்சு
    காய்ப் பழங்கள் கனிகளும்
    கண்ணே உன்னைத் தேடுதே

    அத்தர் செண்டும் போட்டு
    அஜந்தாப் பவுடரும் பூசி
    அத்த மகளுணைக் காண
    அழகாய் வந்தேன் பாரேன்

    முன்னே அருகில் வந்து
    முறையாகச் சிரித்து விட்டு
    பின்னால் திரும்பி என்னை
    பெண்மையால் வீழ்த்த வாடி

    கூட்டத்துல நீ ஒளிஞ்சி
    நோட்டமிடும் உன் நிழலை
    பாத்துப் பிட்டேன் பேரழகி
    பக்கத்துல எப்போ வாரே

    ReplyDelete
  12. Hello, i think that i saw you visited my site so i came to
    “return the favor”.I'm trying to find things to improve my web site!I suppose its ok to use a few of your ideas!!

    Check out my site: Right Hotmail Support

    ReplyDelete
  13. //என்னை கூப்பிடாம போனதுக்கு வன்மையான கண்டங்கள் ச்சே கண்டனங்ககள் ஆமா...//

    சிரித்து சிரித்து வயிறு வலித்து விட்டது.நல்லா காமெடி வருதுங்க உங்களுக்கு!

    ReplyDelete
  14. அன்பின் சங்கவி - சுற்றுலா சென்று கண்டு மகிழ்ந்து உடனே பதிவும் விளக்கமாகப் போட்டது நன்று - பல புகைப்படங்கள் - பல தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. நன்றாக உள்ளது

    ReplyDelete