Wednesday, July 3, 2013

அஞ்சறைப்பெட்டி 04.07.2013

 

  
உள்ளுரில் இருந்து உலகம் வரை........


கோவையில் பாதாள சாக்கடை என்ற பெயரில் நகரின் பல இடங்களில் சாலையை வெட்டிப்போட்டு உள்ளனர் இதனால் போக்குவரத்தும்  மிகப்பெரிய ட்ராபிக்கை சந்திக்கவேண்டி இருக்கு.. காலை மாலை என சிக்னலை தாண்டுவதற்குள் நமகுகு தாவு வாங்கிவிடுகிறது. ஞாயிறுகளில் மக்கள் அதிகமாக செல்லும் பேரூர், கோவைகொண்டாட்டம், கோவை குற்றாலம், காருண்யா போன்ற பகுதிகளுக்கு செல்ல மிக முக்கியமான தடம் செல்வபுரம் தான் கடந்த சில மாதங்களாக செல்வபுரத்தில் இருந்து பேரூர் செல்வதற்குள் வண்டியில் இருக்கும் பெட்ரோல் பாதி காணமல் சென்று விடுகிறது பாதாள சாக்கடை  பணியால். பாதாள சாக்கடை தேவையான ஒன்று தான் பொதுமக்களை பாதிக்காத படி பணிகளை சீக்கிரம் முடித்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே..

கோவையில் உள்ள பத்திரிக்கைகளில் எல்லாம் இதைப்பற்றி தான் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன துரித நடவடிக்கை எடுத்து இந்த பணியை நிறைவேற்றினால் நாமும் சந்தோசமாக பயணிக்கலாம்.


.........................................................

நெய்வேலியில் என்எல்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மின்சாரம் இல்லாமல் தென் மாநிலங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகுமாம். தென்மாநிலங்களுக்கெல்லாம் நெய்வேலியில் இருந்து தான் அதிக பட்சமின்சாரம் செல்கிறது ஆனால் தமிழ்நாட்டில் அதிக நேரம் மின்வெட்டு இது தான் நம் நிலை சமைச்சவனுக்கே சாப்பாடு இல்லை என்ற பழமொழிக்கு சரியான உதாரணமாக கூட சொல்லலாம்.

நெய்வேலியில் உள்ள பணியாளர்கள் தங்கள் கோரிக்கையுடன் அதிக பட்ச மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்பதையும் சேர்த்துக்குங்க உங்களுக்கு புண்ணியமா போகும்....


.........................................................

சமீபத்தில் ஒரு விடுதிக்கு நண்பருடன் சாப்பிட சென்றிருந்தேன் இருவரும் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது நான் காரை எடுக்க சென்றேன் வரும் போது ஒரு வயதான பிச்சைக்காரரிடம் இல்லை என்று சத்தம் போட்டு விட்டு வந்தார் பின் அந்த பிச்சைக்காரர் அவர் கையில் இருந்த 5 ரூபாயை தூக்கி எறிந்தார் நாங்கள் வண்டிய எடுத்திட்டு வந்ததும் நண்பனை விசாரித்தேன.

வயசானவர் சாப்பிடவில்லை என்றார் என்னிடம் ஒரு 5 ரூபாய் இருந்தது மற்றும் 2 நூறு ரூபாய் நோட்டுக்கள் மட்டும் இருந்ததால் சாப்பிடுகிறீர்களா என்றேன் வேண்டாம் எதாவது கொடுங்க தம்பி என்றார் நான் 5 ரூபாயை கொடுத்தேன் அதற்கு அவர் 5 பத்தாது தம்பி 10ஆக கொடு என்றார் பத்து என்னிடம் இல்லை என்றதும் அப்புறம் எதுக்கு 5 ரூபாயை கொடுத்த இந்தா நீயே வைத்துக்கொள் என்கிறார். அதுக்குள்ள நீ வந்ததால் காரில் ஏற வந்தேன் அந்த 5 ரூபாயை தூக்கி எறிகிறார் என்ன உலகமடா இது பிச்சை கூட 10 ரூபாய் போடவேண்டி இருக்கு என இருவரும் நொந்தோம்...

 .........................................................


நாம் எல்லாம் இங்கு 5க்கும் பத்துக்கும் சிங்கி அடித்து கொண்டு இருக்கிறோம் மும்பையில் ஒரு கம்பவுண்டர் 200 கோடி வைத்திருக்கிறாராம். டாக்டரே இவருகிட்ட தான் கடன் வாங்க வேண்டும் போல மன்னிக்க மாநிலமே இவரிடம் தான் கடன் வாங்க வேண்டும் போல. எப்படித்தான் சம்பாரிக்கிறானுகளோ கோடி கோடியாக. தினமும் 12 மணி நேரம் வேலை செய்தாலும் 25 ஆயிரத்தை பார்ப்பதற்குள் டவுசர் கழன்டுவிடுகிறது...

யாருடையது என்றே தெரியாமல் 2500 கோடி மதிப்புள்ள நகைகள், பணங்கள், உயர் ஆபரணங்கள் எல்லாம் ரயில் நிலையத்தில் சிக்கி இருக்கிறது என்கின்றன செய்திகள் எப்படி இது யாருடையது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

.........................................................

 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை அதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது என்கின்றனர் இன்னும் 50 அடியை எட்டிய பாட்டிடத்தான் காணம். மீண்டும் மழை என்கின்றன செய்திகள் அடுத்த வாரம் 60 அடிக்கு மேல் தாண்டும் என நம்பிவோம் வருணபகவான் நம்மை கைவிடமாட்டார்.

நீலகிரி, கேரளா பகுதியில் பெய்த மழையால் பவானிசாகர் அணை 60 அடியை எட்டி உள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் விவசாயம் அணைத்தும் பவானிசாகர் அணையை நம்பியே உள்ளது அதற்கு தகுந்தாற்போல் முதல்வரும் இந்த பகுதிக்கான பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடச்சொன்னால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த 6 மாதமாக கோபியில் இருந்து அந்தியூர் செல்லும் போதெல்லாம் வருத்தமாக இருக்கும் எப்போதும் செழுமையாக இருக்கும் இந்த வயல்கள் இப்போது ஆடு மாடு மட்டுமே மேய்க்கின்றனர் இந்த முறை ஊரிற்கு செல்லும் போது வயல் எல்லாம் சேர் அடித்து நாத்து நட காத்திருக்கும் என்பதை சொல்லும் போதே என் மனதும் அலைபாய்கிறது அந்த பசுமையை காண..

.........................................................

உத்தரகாண்ட் மாநிலத்தை உலுக்கிய பெருமழை மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை. ஆறுதல் அளிக்க வேண்டிய இந்த சமயத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை வைத்து அரசியல் செய்யும் நபர்களும், உணவு தட்டுப்பாட்டை வைத்து பணம் பார்க்கும் வியாபாரிகளும் மக்களின் துயரத்தை மேலும் அதிகமாக்குகின்றனர்.  இங்கு நிவாரணம் வேண்டி நிறைய பேர்கள் அப்பாவை காணவில்லை, மகனை காணவில்லை என்று பணத்திற்காக பல பொய்களை பேசி வாங்கி வருகின்றனராம் அங்கு பணியாற்றும் மாவட்ட ஆட்சியர் எல்லாம் இரவு பகல் பாரமல் பணியாற்றுகின்றனர் இந்திய ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டதால் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது மகிழ்ச்சியான ஒன்று...


தகவல்
 



ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரோபோக்கள் (எந்திர மனிதன்) பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது படுக்கைக்கே சென்று ஆழ்ந்து தூங்குபவர்களை எழுப்பும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை ரோபோ, அலாரம் வைக்கப்பட்ட நேரத்தில் கீழே இருந்து மேலே குதித்து படுக்கையின் ஓரத்தில் இருக்கும் டேபிளில் உட்காருகிறது. பின்னர் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்கள் காதருகில் பயங்கர சத்தத்துடன் அலாரம் அடிக்கிறது. அதற்காக இந்த ரோபோ மிகவும் விசேஷமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அது தூங்குபவரின் படுக்கைக்கு வர வசதியாக சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை 3 அடி உயரம் வரை எழும்பி தாவக்கூடியவை. தூங்குபவர் எழுந்து அதன் சுவிட்சை அணைக்கும் வரை அதாவது ஆப் செய்யும் வரை அலாரம் அடிப்பது நிற்காது. அதன் விலை ரூ.3,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தத்துவம்

 உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

 நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.

நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி; கவலை வாழ்க்கையின் எதிரி.

39 comments:

  1. இங்கும் அப்படித்தான் - பாதாள சாக்கடை என்ற பெயரில்...

    விலைவாசியும் அப்படி...! பிச்சையும் அப்படி...!!

    தகவல் + தத்துவங்கள் அருமை...

    ReplyDelete
  2. அஞ்சறைப் பெட்டிக்குள் அறுசுவை...

    ReplyDelete
    Replies
    1. அறுசுவையை ருசித்ததற்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  3. அந்த அலாரம் ஃபீசை எனக்கொண்ணு வாங்கி அனுப்புங்க தம்பி, 5 மணிக்கு எழும்பனும்னா 4 மணிக்கு வச்சு ஸ்னூஸ்ல போய் அடிச்சி தொண்டை கம்முற வரை தூங்கும் ஜாதி நான்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக இந்தியா வந்தா முத பார்சல் உங்களுக்குத்தானுங்கோ...

      Delete
    2. சகோ அலாராமாகிய உங்களுக்கு அலாரம் தேவையா என்ன?

      Delete
  4. இப்படி அலாரம் வச்சு எழும்பவதிலும் பார்க்க பேசாமல் படுத்தே இருக்கலாம் போல உள்ளதே :) :) :)

    ReplyDelete
    Replies
    1. அலாரம் அடிச்சி பின் அதை அணைத்து விட்டு தூங்குவதில்தான் எத்தனை சுகம்...

      Delete
  5. என்ன உலகமடா இது பிச்சை கூட 10 ரூபாய் போடவேண்டி இருக்கு என இருவரும் நொந்தோம்.
    >>
    இவங்கலாம் வயத்து பாட்டுக்கு பிச்சை எடுக்கலை. சாயந்தரம் பாருக்கு போய் தண்ணியடிக்க..,

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்க.. சரக்கடிக்க காசு இல்லாம பிச்சை எடுக்க புறப்பட்டு விடுகின்றனர்..

      Delete
    2. சங்கவி எப்ப எல்லாம் நீங்க 5 ரூபாய் போட்டு பிச்சைகாரன் அதை வாங்க மறுக்கிறானோ அந்த பணத்தை எல்லாம் ஒரு உண்டியலில் போட்டு சேர்த்து வையுங்கள் இந்த அமெரிக்க பிச்சைகாரன் இந்தியா வரும் போது வாங்கி கொள்கிறேன் முடிஞ்சால சகோ ராஜியிடமும் சேர்த்து வசூலியுங்கள்

      Delete
    3. நிச்சயம் இந்தியா வந்தா மறக்காம சொல்லுங்க..

      Delete
  6. 200 கோடியா பயத்திலேயே செத்துப்போயிருப்போம் நாமா இருந்தா ...
    ஆமாங்க இந்த காலத்தில் 5 ரூபாக்கு என்ன சாப்பிட முடியும். அவர்கள் கோபம் நியாயமானது. அதற்கு பிச்சையெடுக்காம உழைக்க தெரிந்திருக்கனும் இதை அங்க சொன்னா இன்னும் கோபம் வருமோ ?
    தத்துவம் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கண்ணில் பார்த்ததுமே நமக்கு ஹார்ட் அட்டக் வந்திருக்குமுங்க... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

      Delete
  7. அந்த 250 கோடியை அப்படியே உத்ரகண்ட் மாநிலத்திற்கு திருப்பி விட்டுட்டு அப்புறமா யாருடையதுன்னு கண்டு பிடிக்கலாம்ல..

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதாங்க... அவுங்களுக்காவது நல்லது நடக்கும்

      Delete
  8. Replies
    1. அத இன்னும் முழுசா யாரும் சொல்லலீங்க..

      Delete
  9. நான் கோவை ஒரு முறை தான் வந்து இருகின்றேன் சென்னைக்கு எவளவோ பரவா இல்லை \\\\\

    என்ன பன்றது இந்த காலத்துள்ள தில்லு முள்ளு பன்றவன் தான் நல்லா மஞ்ச குளிகிரங்க

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க.. அவுங்களுக்குத்தான் காலம் நமக்கில்ல...

      Delete
  10. கோவை சில வருடங்கள் நான் வசித்த இடம்.

    அப்பொழுதில்லாத-- கோவைகொண்டாட்டம், கோவை குற்றாலம், காருண்யா, செல்வபுரம்-- போன்ற பகுதிகளின் பெயர்களைப் படிக்கவே சுவையாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நம் நினைவுகளை படிக்கும் போது சந்தோசமாகத்தான் இருக்கும் ஜீவி சார்...

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  11. அஞ்சறைப் பெட்டி அருமை..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராஜி...

      Delete
  12. நல்லா எழுதி இருக்கீங்க .....

    நிறைய பேரு பிச்சை எடுத்து குடிக்கிறவர்கள் தான் ...........

    ராணுவ வீரகளுக்கு எனது மரியாதையும் வாழ்த்துக்களும் ....



    சப்பாஆஆஆஆ தூங்கும் பொது தான் நிம்மதியா இருக்கினம் மனுஷர்கள் அதையும் கேடுக்கனுமோ ./..

    என்னை எல்லாம் யாரும் தூக்கத்தில எழுப்பினா என்ன பன்ன்வேன் எண்டு எனக்கே தெரியாது .

    ReplyDelete
    Replies
    1. கடிச்சி குதறிவிடுவீர்களா கலை...

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலை...

      Delete
  13. நல்லா எழுதி இருக்கீங்க .....

    நிறைய பேரு பிச்சை எடுத்து குடிக்கிறவர்கள் தான் ...........

    ராணுவ வீரகளுக்கு எனது மரியாதையும் வாழ்த்துக்களும் ....



    சப்பாஆஆஆஆ தூங்கும் பொது தான் நிம்மதியா இருக்கினம் மனுஷர்கள் அதையும் கேடுக்கனுமோ ./..

    என்னை எல்லாம் யாரும் தூக்கத்தில எழுப்பினா என்ன பன்ன்வேன் எண்டு எனக்கே தெரியாது .

    ReplyDelete
  14. பிச்சைக்காரர்கள் கூட காஸ்ட்லி பிச்சை கேட்க ஆரம்பித்து விட்டார்கள்! தத்துவம் அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  15. அனைத்தும் நல்லா இருக்கு.

    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  16. அருமையான தகவல்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  17. மழை கிடைத்து விவசாயிகள் மனம் குளிரட்டும்.

    நல்ல தத்துவம் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  18. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வலைக்கு வருகிறேன். விட்டதைப் பிடி..படிக்கிறேன்.

    ReplyDelete
  19. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. ஐயா...

    ReplyDelete
  20. அஞ்சறைப் பெட்டியால் அளித்த அருஞ்சுவை அத்தனையும்
    நெஞ்சறையில் நுழைந்ததே நிறைத்து!

    அத்தனையும் அருமை சகோதரரே!
    ரசித்தேன். வாழ்த்துக்கள்!

    த ம.8

    ReplyDelete
  21. அஞ்சறைப் பெட்டி தகவல்கள் நன்று.....

    ReplyDelete