உள்ளுரில் இருந்து உலகம் வரை........
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் பலி. பள்ளிக்கு படிக்க குழந்தையை அனுப்பி மாலை குழந்தை வருவாள் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று உழைத்துக்கொண்டு இருக்கும் வேலையில் தங்கள் குழந்தை மதிய உணவை சாப்பிட்டு மயக்கம் என்றால் எப்படி இருக்கும் படித்து பட்ட ம் வாங்கி நம் குடும்பத்தை முன்னேற உதவியாக இருப்பான் நம் குழந்தை என்று எண்ணிக்கொண்டு இருக்கையில் இறந்துவிட்டான் என்றால் எப்படி இருக்கும் மனநிலை அப்படித்தான் இருக்கிறது இப்போது நமக்கும்.. பள்ளிகளில் சாப்பாடு செய்யும் போது பூச்சி விழுந்தால் தவறு எனலாம். பூச்சி கொல்லி மருந்து கலந்தால் நிச்சயம் சதி தான். மருந்தை கலக்கியவனை நிச்சயம் தூக்கிலிடத்தான் வேண்டும்.
இந்த தவறு இனி நிச்சயம் வேறு எங்கும் நடக்காத வண்ணம் எல்லா அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் மிக்க மகிழ்ச்சியே...
.......................................
மின்சார
பிரச்சனை தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது தற்போது தண்ணீர் வரத்தும்
இருப்பும் ஓரளவிற்கு சீராக இருப்பதால் மின்சாரமும் சீராக இருக்கிறது.
மீண்டும் நன்கு மழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பவேண்டும் தடையில்லாம
மின்சாரம் கிடைக்கவேண்டும் என்பதை தான் விரும்புகிறோம் இந்த விருப்பம்
நடக்கும் என நம்புவோம்.
.......................................
சென்னையில் வருகிற செப்டம்பர் முதல் தேதியில் பதிவர் திருவிழா
நடைபெறுகிறது என்று இன்று தான் சென்னை நண்பர்கள் உறுதி செய்தனர் மிக
மகிழ்ச்சியான செய்தி செப்டம்பருக்கு இப்பவே எல்லோரும் டிக்கெட் புக்செய்து
கொள்ளுங்கள் மக்களே.. அனைவரும் சந்திப்போம் சென்னையில் மேலும் தகவல்கள்
தினமும் பகிர்வார்கள் நம் பதிவர்கள்...
.......................................
பால் குடிக்கும் போது மார்பை கடித்த குழந்தையை சீனப் பெண் ஒருவர் 100 முறை கத்திரியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது தாயின் மார்பை குழந்தை கடிப்பது உண்டு. ஆனால், அதை தாய் என்றுமே வலியாக கருதியதில்லை.
ஆனால், இந்த தாய்மை உணர்வை மறந்த சீனப் பெண் ஒருவர், தனது குழந்தை மார்பகத்தை கடித்த கோபத்தில் சுமார் 100 முறை அந்த குழந்தையை கத்திரியால் குத்தி சாகடிக்க முயன்றுள்ளார்.
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் சூசவு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், பால் கொடுக்கும் வேளையில் தனது மார்பினைக் கடித்த 8 மாத குழந்தையை சுமார் 100 முறை கத்திரியால் குத்தினார்.
வீட்டின் முற்றத்தில் குழந்தை ரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ட உறவினர், உயிருக்கு போராடிய குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார்.
பெரும்பாலும் முகம் முழுக்க கத்திரியால் குத்தப்பட்ட அந்தக் குழந்தைக்கு சுமார் 100 தையல்கள் போடப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சப் போல்க் பகுதியில் உள்ள ஹவர்கில் என்ற இடத்தை
சேர்ந்தவர் அரோ டிராவென் (38). 5 குழந்தைகளுக்கு தந்தையான இவர் வேலை
இல்லாமல் சுற்றி திரிந்தார்.
அதே பகுதியை சேர்ந்த பெண் லியா பெனின்காப் (20). இவர் அரோ டிராவெனை சந்தித்தார். அப்போது அவர்களுக்கு இடையே நட்பு உருவாகி அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் தங்களது ரத்தத்தை ஒருவருக்கு ஒருவர் மாற்றி குடித்து வருகின்றனர். வாரத்தில் 4 தடவை இதுபோன்று செய்வதாக ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் காத் எனப்படும் பழங்கால ஜெர்மனியர்கள் போன்று வாழ்வதாக கூறுகின்றனர். மேலும், இதுபோன்று ரத்தம் குடிப்பது எங்கள் இருவரது நட்பையும் மிகவும் நெருக்கமாக்குகிறது.
எங்களை பலசாலிகளாகவும், நல்ல உடல் நலத்துடன் கூடியவர்களாகவும் ஆக்குகிறது என்றும் தெரிவிக்கின்றனர். தங்களது உடல் பலவீனமாவது போன்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒருவரது ரத்தத்தை ஒருவர் மாறிமாறி குடிப்பதாகவும் கூறுகின்றனர்.
அதே பகுதியை சேர்ந்த பெண் லியா பெனின்காப் (20). இவர் அரோ டிராவெனை சந்தித்தார். அப்போது அவர்களுக்கு இடையே நட்பு உருவாகி அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் தங்களது ரத்தத்தை ஒருவருக்கு ஒருவர் மாற்றி குடித்து வருகின்றனர். வாரத்தில் 4 தடவை இதுபோன்று செய்வதாக ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் காத் எனப்படும் பழங்கால ஜெர்மனியர்கள் போன்று வாழ்வதாக கூறுகின்றனர். மேலும், இதுபோன்று ரத்தம் குடிப்பது எங்கள் இருவரது நட்பையும் மிகவும் நெருக்கமாக்குகிறது.
எங்களை பலசாலிகளாகவும், நல்ல உடல் நலத்துடன் கூடியவர்களாகவும் ஆக்குகிறது என்றும் தெரிவிக்கின்றனர். தங்களது உடல் பலவீனமாவது போன்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒருவரது ரத்தத்தை ஒருவர் மாறிமாறி குடிப்பதாகவும் கூறுகின்றனர்.
.......................................
ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில் விண்வெளிக்கு செல்லும் அதிநவீன ராக்கெட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து அனுப்பபடும் ராக்கெட்டுகள் விண்வெளியை அடைய அதிக நேரம் ஆகிறது. ஆனால், அது 15 நிமிடத்தில் விண்வெளியை சென்றடையும் விதத்தில் அதிநவீன ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சக்தி வாய்ந்த என்ஜினை இங்கிலாந்து தயாரித்துள்ளது. இதை சாதாரண விமானங்கள் புறப்படும் ஓடுதளத்தில் இருந்தே இயக்க முடியும்.
இந்த ராக்கெட் ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்தில் இயங்க கூடியது. மணிக்கு 19 ஆயிரம் மைல் (30,577 கி.மீ) வேகத்தில் பாய்ந்து செல்லத்தக்கது. இதில், இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட ‘சாப்ரீ’ ரக என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆளின்றி இயங்க கூடியது. மிகவும் எடை குறைந்தது. இது 15 டன் எடையை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது.
இதில் உள்ள ‘சாப்ரீ’ என்ஜின் இயங்க திரவ ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிபொருளாக பயன்படுகிறது.
தகவல்
அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ் ரெனால்ட்ஸ்(56) என்பவர் பழங்கால கார் உதிரி பாகங்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார்.
இணையதளம் மூலமாக இந்த தொழிலை செய்ய வசதியாக 'ஆன் லைன் பேங்கிங்' எனப்படும் உடனடி பணப் பறிமாற்ற நிறுவனமான 'பே பால்' நிறுவனத்தில் இவர் கணக்கு தொடங்கியுள்ளார்.
சென்ற மாதத்தின் கணக்கு இறுதி அறிக்கையை பே பால் நிறுவனம் கிரிஸ் ரெனால்டுக்கு அனுப்பி வைத்தது.
இதைக் கண்ட அவருக்கு இன்ப அதிர்ச்சியில் மூச்சே நின்று விடுவது போல் ஆகிவிட்டது. அவரது கணக்கில் கையிருப்பாக 92 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு 5 ஆயிரத்து 520 லட்சம் கோடி ரூபாய்)இருப்பதாக அந்த மாத அறிக்கை குறிப்பிட்டது.
பே பால் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கணக்கு வைத்திருக்கும் கிரிஸ் ரெனால்ட், 'இதுவரை இந்த கணக்கின் மூலம் மாதமொன்றுக்கு 100 டாலர்களுக்கு மேல் நான் வரவு - செலவு செய்தது கிடையாது.
என் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதாக அறிக்கை வந்ததும், நாம் வங்கிக்கு இவ்வளவு பணம் கட்ட வேண்டுமா? என்று பயந்து விட்டேன். பிறகுதான் என் கணக்கில் இந்த தொகை பற்றாகி இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக 'ஆன் லைன்' மூலம் என் கணக்கு விபரத்தை சரிபார்த்த போது எனது கையிருப்பு பூஜ்ஜியம் டாலராக இருந்தது' என்கிறார்.
கம்ப்யூட்டர் குளறுபடியால் இந்த தவறு நேர்ந்து விட்டதாக பே பால் நிறுவனம் அறிவித்துள்ளது.
உண்மையாகவே இவ்வளவு பெரிய தொகை உங்களுக்கு கிடைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது, 'நான் சமூக பொறுப்பு மிகுந்த குடிமகன். முதலில் அமெரிக்காவின் எல்லா கடனையும் அடைத்துவிட ஏற்பாடு செய்வேன்' என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்.
தத்துவம்
வென்றவனுக்கு மலையும் கடுகு. தோற்றவனுக்கு கடுகும் மலை.
மிக அற்பமான விஷயங்களைப் பற்றி
அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
மிக அற்பமான விஷயங்களைப் பற்றி
அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
இனி உலக செய்திகளை சுருக்கமாக படிக்க இந்த அஞ்சரை பெட்டி மட்டும் போதும் போல இருக்கே !! ம்ம்ம்...நடக்கட்டும், நடக்கட்டும் !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...
Deleteசுவையான தகவல்கள்! கத்திரியால் குழந்தையை குத்தியவள் தகவல் அதிர்ச்சி தந்தது. இரத்தம் குடிப்பவர் பற்றிய செய்தியை நேற்று நானும் படித்தேன்! அருமையான தொகுப்பு! நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்
Deleteகுழந்தை இல்லை என்று பலரும் ஏங்கி கொண்டிருக்க குழந்தையை கத்திரியால் குத்தினாரா? அடப்பாவமே நிச்சயம் பைத்தியம் பிடித்து இருக்க வேண்டும். இந்த முறையாவது பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும்.
ReplyDeleteவாங்க வாங்க சந்திப்போம்...
Deleteஎத்தனை விதமான பைத்தியங்கள்...
ReplyDeleteஎன்ன செய்ய தலைவிதி
DeleteShocking info about China Woman...God bless the child....:(
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteபேப்பரில் இந்த செய்தியை படிக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது மருந்து கலக்கியவன் மனிதனே கிடையாது அவனை அடித்தே கொல்ல வேண்டும்
ReplyDeleteஅதுவும் கல்லால் அடித்து கொல்லவேண்டும்...
Deleteஅது தாய் அல்ல பேய்...
ReplyDeleteநல்ல தத்துவங்கள் பல தகவல்களுடன்... நன்றி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteநீண்ட காலம் சலிக்காது பதிவுகள் இடும் சங்கவிக்கு என் பாராட்டுக்கள்.
ReplyDeleteவாங்க வாங்க எப்படி இருக்கீங்க... இன்னும் எழுதுவோம்...
Deleteசீனக்குழந்தை, நம்ம ஊரு சத்துணவு சாப்பாடு, ரத்தம் குடிக்கும் ஜோடின்னு அங்சறை ப்ர்ட்டி நல்லா வாசமா இருந்துச்சு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஇம்முறை அஞ்சறைப்பெட்டியில் நல்ல தகவல்கள் இருந்தபோதும்...
ReplyDeleteசத்துணவு ஊட்டப்பட்ட பிள்ளைகள், சீனக்குழந்தை, இரத்தக் காட்டேரிச் சோடி என எனக்கு அஜீ...ரணம் அதிகமாகிவிட்டது சகோ!..
அடுத்த முறை ஜீரணம் ஆக்கிடுவோம் சகோ...
Deleteஅஞ்சறைப்பெட்டி செய்தி களஞ்சியம் வாழ்த்துக்கள் மக்கா...!
ReplyDeleteஇப்பிடி அக்கவுண்டுல பணம் இருக்குன்னு தெரிஞ்சதும் ஓடிப்போயி எடுத்து வேற நாட்டுக்கு ஓடுறத விட்டுட்டு அவ்வ்வ்வ்....
நன்றி மக்கா...
Deleteரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா...
Deleteஅன்பின் சங்கவி - அஞ்சரைப் பெட்டித் தகவல்கள் அத்தனையும் அருமை - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபின் தொடர்வதற்காக
ReplyDeletesuper
ReplyDeleteஉள்ளூரில் இருந்து உலகம் வரை செய்திகள் சுவாராஸ்யமாக இருந்தது...
ReplyDelete