Friday, July 26, 2013

இதெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா???



திண்ணை

திண்ணை இல்லா வீட்டை பார்க்கமுடியாது முன்னொரு காலத்தில் அந்த அளவிற்கு மக்களோடு ஒன்றி இருந்தது திண்ணை. வீடு கட்டினால் நிச்சயம் பெரிய திண்ணை சின்ன திண்ணை என்று நிச்சயம் வீட்டின் முன் கட்டி இருப்பர்.

திண்ணை என்பது ஒரு திண்டு போல இருக்கும். இது வீட்டின் முன் பகுதியில் அல்லது தலைவாசல் பகுதியில் திறந்த வெளியில் அமைந்திருக்கும். சுவற்றில் சாய்ந்தும், காலைத் தொங்கவிடுவதற்கும் வசதியான அமைப்பாக அமைத்திருப்பர். இதில் இருக்கும் தூண்கள் வீட்டைத்தாங்கிக்கொண்டு இருக்கும்.

திண்ணையில் உட்கார்ந்து ஊர் கதை பேசுவதும் வீட்டுக்கு வரும் உறவினர்கள் அங்கு உட்கார்ந்து ஊர்க்காரர்களோடு அளவாடுவதும், பள்ளிப்பாடங்களை சிறுவர்கள் அங்கு உட்கார்ந்து படிப்பதற்கும், வீட்டு பஞ்சாயத்து, ஊர் பஞ்சயாத்து என ஒவ்வொரு திண்ணைகளும் அந்த கால கதையை சொல்லும்..

தங்களது அனுபவங்களை பகிரும் இடமாக இருந்த திண்ணை இன்று இல்லாமலே போய் விட்டது.. திண்ணை கட்டும் இடத்தில் ஒரு 4 க்கு 4 அறை கட்டி வாடகைக்கு விடும் காலம் இந்த காலம்...

கிராமத்துத் திண்ணை நினைவுகளில்
அலைபாயும் நெஞ்சில் ஏக்கம்வடியுது;
இனித் திண்ணையோடு வீடு கிடைக்குமா?

--------------------------------------


நொங்கு வண்டி...

இந்த மாதிரி வண்டி ஓட்டி ரொம்பநாள் ஆச்சு... இப்ப நம் வீட்டில் இருக்கும் நம் குழந்தைகளுக்கு இந்த வண்டியைப்பற்றி ஒன்றுமே தெரிய வாய்ப்பில்லை ஆனால் ஒரு கால்த்தில் இது தான் எனக்கெல்லாம் காண்டசா, பிரிமியர் பத்மினி கார் போல... 4 முதல் 10 தொட்டிகளை வைத்து வண்டி செய்து அழகான கவட்டி தயாரித்து கவட்டிக்கு கலர் பேப்பர், சைக்கிள் டியூப் எல்லாம் கட்டி சேர்த்து வண்டியை ஓட்டுவது மகிழ்ச்சியான ஒன்று...

எல்லா சீசனுக்கும் இந்த வண்டி கிடையாது கோடைகாலத்தில் தான் எங்க ஏரியாவில் நொங்கு வண்டி ஓட்டுவது எல்லாம்.. நொங்கு வண்டி ரேஸ் வைத்து முதல் பரிசாக ஆற்றில் இருந்து எடுத்து வரும் அழகான கற்களை பரிசாக கொடுப்போம்...

"நொங்கு வண்டி கால ஓட்டத்தில் மறைந்தாலும் மனதை விட்டு மறையாத நிகழ்வு"
------------------------------------



பனை ஓலை காத்தாடி...

இன்று ஏறக்குறைய அழிந்த ஒரு விளையாட்டு என்றே சொல்லலாம்... பனையோலையை நன்கு காய வைத்து அதை அழகாக வடிவத்தோடு கட் செய்து மூன்று இலைகளை கொண்டு நடுவில் காத்தாடி முள் என்று அழைக்கப்படும் நீளமான முள்ளைக்கொண்டு மூன்று ஓலையின் நடுவில் குத்தி எதிர் முனையை கையில் பிடித்துக்கொண்டு கையை வேகமாக முன்னும் பின்னும் கொண்டு செல்கையில் அழகாக சுழலும் காத்தாடி.. இது அன்றைய நம் மெக்கானிசம் என்றே சொல்லாலாம் ஒவ்வொருவரும் ஒரு காத்தாடியை வைத்துக்கொண்டும் ஓடிவரும் அழகு இன்று கூட கிராமங்களில் பார்ப்பது அரிது தான்...
 
 

34 comments:

  1. இன்னும் கொஞ்சம் நிறைய எழுதி இருக்கலாமோ என்று ஏங்க தூண்டும் பதிவு ! நன்றி சதீஷ் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சுரேஷ் எழுதி இருக்கலாம்... டக்குன்னு மனதில் தோன்றியதை எழுதியால் முழுமைப்படுத்த இயலவில்லை...

      Delete
  2. இனிய நினைவுகளை மறக்க முடியுமா...என்ன...? ...ம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன்...

      Delete
  3. இந்த திண்ணை விஷயமும், நொங்கு வண்டியும் உண்மையிலேயே என்னையும் என் பால்ய பருவத்து நியாபகங்களுக்குள் இழுத்துச்சென்றது... பனைஓலை காத்தாடி நான் வெகு குறைவாகவே விளையாடியிருக்கிறேன் என்பதால் பெரிதானதொரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை... சிறுவயது நாட்களை ஞாபகப்படுத்தும் இன்னும் பல விஷயங்களையும் சேர்த்து எழுதியிருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க எழுதி இருக்கலாம்...

      Delete
  4. இந்த அனுபவங்கள் எனக்கும் உண்டு பால்ய பருவத்துக்கே சென்ற மாதிரி இருந்துச்சு. நன்றி

    ReplyDelete
  5. திண்ணை மேல் உள்ள ஆசையால் அஞ்சாவது மாடியில் இருந்தாலும் பால்கனியில் திண்ணை கட்டியிருக்கேனாக்கும்..

    ReplyDelete
  6. மூன்று விஷயங்களுமே என் வாழ்க்கையில் இடம்பிடித்தவை! நினைவுகளை கிளறிவிட்ட பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும், கருத்துக்கும் நன்றி..

      Delete
  7. திண்ணையை நானும் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன். ஸ்ரீரங்கத்தில் பாட்டி வீட்டில் வலது பக்கம் மிகப் பெரிய திண்ணை. சித்திரை உத்சவத்தின் போது வெளியூரிலிருந்து வரும் பலரும் தங்கி இளைப்பாறுவார்கள். இடது பக்கம் சின்னதாக ஒரு திண்ணை. கால ஓட்டத்தில் மறைந்தே விட்டது.
    இன்னொரு மறைந்து போன விஷயம் கூடத்தில் இருக்கும் பெரிய தூண்கள். ஊஞ்சல்!
    அடுக்கு மாடிக் குடியிருப்பில் பால்கனி கிடைத்தாலே பெரிய விஷயம்.
    இப்போது எங்கள் வீட்டு சாப்பாட்டு அறையில் சின்னதாக இருபக்கமும் மரத்தில் திண்ணை! சாப்பாட்டு மேஜை மேல் மடிக்கணணி; திண்ணையில் உட்கார்ந்து கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. உங்களோடு சேர்ந்து நாங்களும் மிஸ் செய்கிறோமுங்க...

      உங்க நினைவிகள் அருமை...

      Delete
  8. அன்பின் சங்கவி - மலரும் நினைவுகள் - அசை போட்டு ஆனந்தித்து எழுதப்பட்ட பதிவு - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. மறக்கமுடியாத நினைவலைகள்...


    பழைய நினைவுகளின் திலைத்து திரும்பினேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சௌந்தர்....

      Delete
  10. எனது சொந்த ஊரில் இன்னும் திண்னை வைத்த வீடுகள் இன்னும் உள்ளன. ஆனால் அங்கு அந்த காலம் மாதிரி ஆட்கள் உட்காருவத்தில்லை காரணம் டிவி மற்றும் கம்பியூட்டர் அங்கு இல்லாததால்

    மலரும் நினைவுகள் அருமை..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      Delete
  11. நுங்கு வண்டி, பனை ஓலை காத்தாடி வச்சு ஓடுறது எல்லாமே ஒரு கனவாக மனதில் இருக்கிறது.

    இப்போ மனுஷன் அவசர காலத்துல இருக்கான்யா, ஒருத்தரிடமும் நேரமில்லை, அதான் திண்ணையும் ஒழிஞ்சி போச்சு வேறென்னத்தை சொல்ல.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மக்கா... காலம் எல்லாம் மாறிகிட்டே இருக்கு.....

      Delete
  12. மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கருண்...

      Delete
  13. மறக்க முடியாத வாழ்க்கை அது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

      Delete
  14. அந்த காலத்தில் திண்ணை இல்லாதே வீடுகளே இல்லை எனலாம். நான் சிறுவனாக இருந்தபோது நாங்கள் வசித்த வீட்டிலும் இரண்டு புறமும் நீளமான திண்ணை இருந்தது. என்னுடைய தாத்தாவுக்கு அதுவேதான் வீடு! எந்த காலத்திலும் அதை விட்டு வீட்டுக்குள் படுத்துறங்கி நான் பார்த்ததே இல்லை. திண்ணையைச் சுற்றிலும் கூரையிலிருந்து தரை வரையிலும் சாக்கால் (gunny) ஆன திரை (screen). இரவு நேரங்களில் அதை அவிழ்த்து தொங்க விட்டு தூங்குவார். காலையில் எழுந்ததும் சுருட்டி விட்டத்தில் கட்டிவிடுவார். பல நாட்களில் இந்த வேலையை என்னைப்போன்ற பேரக்குழந்தைகள்தான் செய்வோம். இன்னொரு திண்ணையில் வார இறுதி நாட்களில் சீட்டுக் கச்சேரி, கேரம் இத்யாதி விளையாட்டுக்கள்.

    உங்களுடைய பதிவு என்னை என்னுடைய சிறுவயது காலத்திற்கு இழுத்துச் சென்றுவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. உங்க அனுபவம் அருமை... பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க...

      Delete
  15. இப்போ நினைத்தாலும் நெகிழ்ச்சியா இருக்கு.

    ReplyDelete
  16. திண்ணை வீடுகள்..... இப்ப இருக்கற வீடுகள் பார்த்து போரடிச்சு இருக்கும்போது எங்கேயாவது திண்ணை வீடு கிடைக்காதா என மனம் ஏங்க ஆரம்பிச்சு இருக்கு....

    மறக்க முடியுமா இவற்றை....

    ReplyDelete
  17. கிராமத்துவிளையாட்டுகள்மறக்கமுடியாதவை

    ReplyDelete
  18. அழகிய பகிர்வு...

    சின்ன வயது ஞாபகங்களைச் சீண்டி விட்டுவிட்டது.

    ReplyDelete
  19. இளமை நினைவுகளை அசைபோடவைத்துவிட்டீர்கள் சங்கவி.நன்றி !

    ReplyDelete
  20. நல்ல பதிவுகள்

    ReplyDelete